பெரியாறு அணையின் சிக்கல்களூம் தீர்வுகளும் தாகத்தில் தவிக்கும் தண்ணீர் - பிரேமா இரவிச்சந்திரன்

/idhalgal/eniya-utayam/periyar-dam-problems-and-solutions-thirsty-water-prema-ravichandran

திகாரத்தால் தீர்க்கப்படாத சிக்கல்கள் சில நேரங்களில் பெரும்பான்மையின மக்களால் உணரப்பட்டு உள் வாங்கி அவர்கள் வெகுண்டெழுந்து போராடியபோது, அவற்றிற் கான தீர்வுகள் கிட்டுவது வரலாற்றில் நடந்திருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நாள் மாலை ஐந்து முப்பது மணி அளவில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஐ.ஐ.டி. கான்பூரின் தலைவராகவும், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் பொறுப்பு வகித்த உயர்திரு மு. அனந்தகிருஷ்ணன் அவர்களது நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவில் மதிப்புமிகு மு. இராமநாதன், "பெரியாறு அணை பொறியியலும் அரசியலும்" எனும் தலைப்பில் ஆற்றிய உரையை, தளத்திற்குச் சென்று கேட்பதற்கு வாய்ப்பு அமைந்தது.

அவர் பிரிட்டனின் சார்டர்ட் பொறியாளராகவும் ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளராகவும் பட்டம் பெற்றவர். இந்தியா, ஹாங்காங், சவுதி அரேபியா முதலான நாடுகளில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களில் பணியாற்றியவர். இவரது பொறியியல் கட்டுரைகள் சர்வதேச ஆய்விதழ்களில் வெளியாகியுள்ளன. எண்பதுகளில் பெரியாறு அணை பலப்படுத்தப்பட்டபோது அதில் பணியாற்றியவர். முல்லைப் பெரியாறு அணை யின் வரலாறு, பொறியியல் சிறப்பு, இப்போதைய பிரச்சனைகள், சட்டச் சிக்கல்கள் மற்றும் சாத்தியமுள்ள தீர்வுகள் குறித்து அவர் ஆற்றிய உரையானது மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டியதாக அமைந்திருந்தது.

damm

அவர் அளித்த தீர்வுகளை அறிந்துகொள்வதற்கு முன்பு பெரியாறு அணை ஏன் கட்டப்பட்டிருக்க வேண்டும். சிக்கல்கள் எப்படி தோன்றி யிருக்க வேண்டும் என்பதை நாம் ஆராய்ந்தால், தமிழகத்தின் நெல்லை மாவட்டம் சுந்தரம் மலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் உற்பத்தியாகின்ற பெரியாறு, தன்னோடு பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறு தோனியாறு, கட்டப்பனையாறு, இடமலையாறு, முல்லையாறு ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு சுமார் 300 கிலோமீட்டர் வரை வடமேற்கு திசையில் பாய்ந்து இறுதியில் கொச்சி எர்ணாகுளம் அருகே கட-ல் கலக்கிறது.

தற்போதைய தமிழக எல்லைக்குள் 56 கிலோமீட்டர் தூரமும், கேரள எல்லைக்குள் 244 கிலோமீட்டர் தூரமும் பாய்கின்றது. அடர்ந்த வனப்பகுதிகளின் வழியாக பாய்ந்து ஓடும் பெரியாற்றின் சமவெளிப் பகுதி 23 கிலோமீட்டர் தூரம் மட்டுமேயாகும். பெரியாற்றின் நீர்பிடிப்புப் பகுதியில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்குப் பருவமழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழையும் பொழிவதால் ஆண்டின் பெரும்பகுதி காலம் பெரியாற்றில் வெள்ளம் வழிந்து குறைந்த அளவு தூரத்தில் ஓடி எர்ணாகுளம் அருகே அரபிக்கட-ல் கலந்து வீணாகிறது. அதே நேரத்தில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் வேளாண்மை உற்பத்தியானது பதினெட்டாம் நூற்றாண்டுகளில் பொய்த்துப் போன வைகையால் பாதிக்கப்பட்டது.

ஒருபுறம் ஆற்று நீர் வீணாகவும் மறுபுறம் அதன் தேவை இருப்பதையும் கருத்தில் கொண்டு அன்றைய இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் மற்றும் அமைச்சர் முத்து இருளப்பர் ஆகியோர் பெரியாற்றி-ருந்து கால்வாய் வெட்டி மேற்கு நோக்கிப் பாயும் ஆற்று நீரை தென்தமிழகம் நோக்கித் திருப்பி, வைகையோடு இணைத்து வங்காள விரிகுடாவில் கலப்பது குறித்து ஆராய 1798-ல் ஒரு குழுவை அமைத்தனர். அவர்கள் அளித்த திட்டத்தினை செயல்படுத்த போதிய நிதி இல்லாத காரணத்தால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. அதன்பிறகு ஆங்கிலேயர்கள் இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினர்.

பல ஆண்டுகள் வெவ்வேறு தலைமையில் பல்வேறு கட்ட ஆய்விற்குப் பிறகு செயல்படுத்த முயன்ற ஒவ்வொரு முயற்சியும் தோல்வியைத் தழுவி, இறுதியாக 1882-ல் பொறியாளர் பென்னி குயிக்கிடம் ஒப்படைத்த ரூபாய் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கணக்கிடப் பட்ட அணைகட்டும் திட்டமானது வெற்றியடைந் தது. முல்லையாறும் பெரியாறும் இணையும் இடத் திற்கு அருகே அணை கட்டப்படுவதாக முடிவு எடுக்கப் பட்டது. அணை கட்டப்படவிருக்கும் பகுதியி-ருந்து சுமார் 62 கிலோமீட்டர் தொலைவு வரை தமிழ்நாட்டின் எல்லைப் பகுதி அமைந்திருந்தது. அதற்குப் பிறகு அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதி தொடங்குகிறது. அன்றைய ஆங்கிலேய அரசு அணை கட்டப்படவுள்ள பகுதியை திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியாகக் கொண்டு 1886-ல் அவர்களோடு 999 ஆண்டுகளுக்கு ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டது.

அத

அதன்படி, அணை நீரால் மூழ்கும் 8000 ஏக்கர் நிலமும், பராமரிப்புக்கான 100 ஏக்கர் நிலமும், அணையில் தேங்கும் நீரும், அணையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பும், படகு மற்றும் சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்கு சொந்தமாகும். மின்சாரம் எடுப்பதற்கு அப்பொழுது அனுமதி வழங்கப்படவில்லை. புதிதாக கட்டப்படவிருந்த அணையின் நீரானது தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து காலம் காலமாக கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்திற்காக திட்டமிடப்பட்டது. ஒப்பந்தம் முடியும் தருவாயில் மீண்டும் 999 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்த கொள்வதற்கான உறுதிமொழியையும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திடமிருந்து ஆங்கிலேய அரசாங்கம் பெற்றிருந்தது.

பொதுவாக ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைகளில் தேக்கி வைக்கப்படுகின்ற உபரி நீரானது மதகுகள் வழியாக வெளியேறி பாசனத்திற்குப் பயன்படும். ஆனால் முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்தில் மேற்கு நோக்கிப் பாய்கின்ற ஆற்று நீரை அணையைக் கட்டி தேக்கி வைத்து, அதற்கு எதிர்த் திசையில் கிழக்கு நோக்கித் திருப்பி, மலையைக் குடைந்து சுரங்கம் அமைத்து அதன் வழியாக வைகை ஆற்றோடு முல்லைப் பெரியாறு நீரை இணைக்கும் வகையில் இந்த அணை எழுப்பப்பட்டிருக்கிறது. வனப்பகுதி என்பதால் கொடிய விலங்குகள் தொற்று நோய்கள் போன்றவை அடங்கிய ஆபத்துகளோடு, கட்டிடப் பணியின்போது 400-க்கும் மேற்பட்ட பணியாளர்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டது.

காட்டாற்று வெள்ளத்தில் பணியாளர்களும் அணையின் கட்டுமானங்களும் அடித்துச் செல்லப்பட்டு நம்பிக்கையைக் குலைத்திருக்கிறது. அரசிடமிருந்து நிதியைப் பெறுவதில் சிக்கல்கள் போன்ற சவால்களுக்கு மத்தியில் அனுபவங்களைப் பெற்று இரண்டாவது முறையாக முயன்று அணையைக் கட்டிமுடித்தார்.

கட்டுமானப் பணியின் பொழுது வெள்ளத்தில் அணை உடையாமல் இருக்க 185 இடங்களில் தடுப்பு அணைகளை அமைத்து,

அணையின் இடது புறம் கால்வாயை வெட்டி தண்ணீரைத் திருப்பி விட்டார். அணை முழுவதும் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு இடதுபுறம் வெட்டப்பட்ட கால்வாயில் 240 அடி நீளமுள்ள சிற்றணை (பேபி டேம்) ஒன்றையும் கட்டி முடித்தார். அணையில் தேங்கியிருக்கும் நீரானது கிழக்குத் திசையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு 60 அடி ஆழமும் 80 அடி அகலமும் கொண்ட பெரிய கால்வாய் மூலம் கடத்தப்பட்டு, பிறகு மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட சுரங்கத் தின் மூலம் தமிழ் நாட்டிற்குக் கொண்டு வரப்படுகிறது. அதன் பிறகு 78 கிலோமீட்டர் நீளமுள்ள பெரியாறானது கால்வாய் மூலம் வைகை ஆற்றுடன் இணைக்கப் படுகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டிருக்கின்ற இந்த அணையின் தொழில்நுட்பமும் உழைப்பும் தமிழர்களுடையது. அணையின் கட்டுமானப் பொருள்கள், தேவையான கருவிகள் போன்றவை மதுரையி-ருந்து கொண்டுசெல்லப்பட்டவை. கருங்கற்கள், சுண்ணாம்பு, செங்கல், கடுக்காய், இஞ்சி, கருப்பட்டி, தேக்கு மரப்பட்டை போன்ற இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த அணை நீடித்த உழைப்பைக் கொண்டது. முல்லைப் பெரியாறு அணைநீரின் பயனாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வேளாண்மையானது சுமார் 20,000 ஏக்கர் நிலப்பரப்பி-ருந்து 2 லட்சம் ஏக்கராக அதிகரித்தது.

1956-ல் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பொழுது தமிழர்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகளானது மலையாள மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு கேரள மாநிலத்தோடு இணைக்கப்பட்டன. கேரள மாநிலம் உருவாவதற்கு முன்பே சென்னை மாகாணமானது திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் மின் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை 1937-ஆம் ஆண்டு முதலே கேட்டுக்கொண்டிருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு 1954-ல் அதற்கான ஒப்புதல் கிடைத்தது. மத்தியில் நேருவும் தமிழகத்தில் காமராஜரும் பொறுப்பில் இருந்தபொழுது, ஐந்தாண்டுத் திட்டங்களின் அடிப்படையில் 1958-ஆம் ஆண்டில் 140 மெகாவாட் மின்நிலையமும் வைகை அணையும் ஏற்படுத்தப்பட்டன. இதற்கான ஒப்பந்தமானது சற்று காலதாமதமாக கலைஞரது ஆட்சியில் 1970-ல் திருத்தப்பட்ட ஒப்பந்தமாக எழுதப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகத்திற்கு மின் உற்பத்தி அனுமதி வழங்கிய கேரளாவிற்கு மீன்பிடி உரிமை, சுற்றுலாத்தல உரிமை, வனவிலங்கு சரணாலய உரிமை, குத்தகைத் தொகையில் மாற்றம் ஆகியவற்றை தமிழகம் கேரளாவிற்கு மாற்றி எழுதிக்கொடுத்தது.

1976-ல் 800 மெகாவாட் நீர் மின்உற்பத்திக்காக முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே 40 கிலோமீட்டர் தொலைவில் 555 அடி உயரமுள்ள இடுக்கி அணையை கேரளா அரசு கட்டியது. இவ்வாறான நிலையில் 1978-ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற புரளியைக் கிளப்பி, நிலநடுக்கம் ஏற்பட்டால் அணை உடைந்துவிடும் என்கிற பீதியை உண்டாக்கி பிரச்சனை ஆரம்பமானது. மத்திய அரசின் சார்பில் அன்றைய நீர்வள ஆணையத் தலைவர் அணையை ஆராய்ந்து பலமாக உள்ளதாக அறிவித்து அச்சத்தைப் போக்கினார். இருப்பினும் 1979-ல் மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை 1980 முதல் 1993 வரை மேற்கொண்டு செய்துமுடித்தது. பராமரிப்புப் பணி முடியும் வரை அணையின் நீர்மட்டம் 152 அடிக்கு பதிலாக 136 அடியாக தற்கா-கமாகக் குறைக்கப்பட்டது. ஒப்பந்தத்தின்படி, அணையின் மேற்புற கைப்பிடி சுவரின் உயரத்தைக் கூட்டுதல், 12 அடி அகலம் உள்ள அணையின் மேற் புறத்தை 21 அடியாக மாற்றும் வகையில் கான்கிரீட் தொப்பி அமைத்தல், அணையை அதன் அடித்தளப் பாறையுடன் இரும்புக் கம்பியில் நங்கூரம் அமைத்து இணைத்துக் கட்டுதல், 144 அடி அகலம் உள்ள அடித் தளத்துடன் புதிதாக 56 அடி அகலமுள்ள கான்கிரீட் சப்போர்ட் அணையை 145 அடி உயரம் வரை கட்டுதல், ஏற்கனவே இருந்த பத்து நீர்ப்போக்கி மதகுகளுடன் கூடுதலாக மூன்று மதகுகளை அமைத்தல் ஆகியவை அடங்கிய அணையை பலப்படுத்தும் பணிகளை கேரள ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு தமிழ்நாடு அரசு செய்தது. இந்த பராமரிப்புப் பணியின் பொழுது சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட நிலப்பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த மக்கள் கொத்தடிமைகளாகக் கூ-க்கு வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். பராமரிப்புப் பணிகள் முடிந்த பின்பும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு கேரள அரசு மறுத்துவந்தது. பாதிக்கப்பட்ட உழவர்கள் இந்த பிரச்சனையை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்ற பிறகு மத்திய நீர்வள ஆணையம் மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த தலைசிறந்த நிபுணர்கள் அணையைப் பார்வையிட்ட பிறகு, முதல் கட்டமாக நீர்மட்டத்தை 145 அடிக்கு உயர்த்துவதால் எந்த வித பாதிப்பும் இல்லை என்பதை உறுதிபடக் கூறினார்கள்.

1998-ல் உச்ச நீதிமன்றத்தின் வேண்டுகோளின் படி இரு மாநிலங்களின் முதல்வர்கள் சந்தித்து ஒத்திசைவு ஏற்படுத்திக் கொள்ளும்படி அறிவித்தாலும் அவ்வாறான இசைவு நடக்கவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்காமல் இருப்பது நோக்கமல்ல என்று கூறி 2009 ஆம் ஆண்டு கேரளா அரசு புதிய அணையைத் திறப்பதற்கு முடிவுசெய்தது. ஆனால் அதற்கேற்ற நிலப்பகுதியோ அமைப்போ வேறொரு இடத்தில் கண்டடையப்படவில்லை.

2010ல் நீதியரசர் ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் ஐவர் குழு நியமனம் ஏற்படுத்தப்பட்டு வல்லுநர்கள் குழுவோடு இணைந்து விசாரிக்கப்பட்டது. 2014-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த ஆணை பிறப்பித்தது.

சிற்றணையின் (பேபி டேம்) மேம்பாட்டிற்குப் பிறகு 152 அடியை உயர்த்திக் கொள்ளலாம் எனவும் ஆணையிட்டது. 2021 ஆம் ஆண்டு சிற்றணை மேம்பாட்டிற்கு அங்குள்ள மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்றபோது கேரள வனத்துறை அதற்கான அனுமதியை கொடுக்க மறுத்துவிட்டது.

இவ்வாறு தொடர்ந்து மறுத்துவருவதற்கு கேரளாவின் ஐயமும் குற்றச்சாட்டுமாக வைப்பது என்னவென்றால், "சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்ட பழைய அணை பலவீனமானதாக இருப்பதால் நீர்க்கசிவு ஏற்பட்டு நிலநடுக்கத்தைத் தாங்காமல் அணை உடைந்து, இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய மூன்று மாவட்டங்கள் மூழ்கிவிடும்" என்பதாக இருக்கிறது. இதற்கு மதிப்புமிகு மு. இராம நாதன் அவர்களது பதிலாக, "செயற்கை பொருள்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டடங்களை விட இயற்கையான கற்களையும் சுண்ணாம்பையும் பயன்படுத்திக் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் நூறு ஆண்டுகளைக் கடந்து பழுதின்றி இன்றும் நிற்கின்றன. இவை நீண்ட ஆயுட்காலங்களைக் கொண்டவை. அணையின் உறுதி என்பது அதன் பராமரிப்பைப் பொறுத்தே இருக்கின்றது. இந்தியாவில் கட்டப்பட்ட பராமரிப்பில் உள்ள பேரணைகள் இன்றும் நிலையாக நின்றுகொண்டிருக்கின்றன" என்றார்.

நமது சங்க இலக்கியத்தில் தொல்காப்பிய வரிகளான, "வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும்."

என்பதின் பொருளாக, வேகத்தோடு வருகின்ற ஆற்று நீரைத் தாங்குகின்ற கல்லாலான அணையைப்போல எதிரிகளைத் தாங்குகின்ற ஒருவனது பெருமை என்று கூறி உறுதிக்கு எடுத்துக்காட்டாக நீரின் வேகத்தைத் தாங்குகின்ற அணையானது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் அவர் தொடர்ந்து, "பெரியாறு அணை உருவாக்கப்பட்ட காலத்தில் கசிவு நீருக்கென கால்வாய் அமைக்கும் பழக்கம் இல்லை. எனவே கண்ணால் காணும்படி எல்லா அணைகளின் சுவர்களி-ருந்தும் நீர் கசிவது என்பது இயல்பாக இருந்தது. ஆனால் அது கட்டுமானப் பொருள்களை வெளியேற்றாமல் கசிவு நீரின் அளவும் கட்டுக்குள் இருக்க வேண்டும். 1935, 1961-ஆம் ஆண்டு களில் அவ்வாறான நீர்க்கசிவு கட்டுமானப் பொருள்களோடு வெளிவந்தபொழுது, அணையில் துளையிடப்பட்டு கூழேற்றம் செய்து பராமரிக்கப்பட்டது. பெரியாறு அணையை மேம்படுத்துகின்ற பணியின்போது நீர்க்கசிவிற்காக கால்வாய் அமைத்து நீரின் அளவைக் கண்காணிப்பதற்காக கருவிகளும் பொருத்தப்பட்டிருக் கிறது. வினாடிக்கு 700லிட்டர் வரை நீர்க்கசிவு இருக்கலாம் எனும் நிலையில் 40லிட்டர் அளவிலேயே தற்போது கசிவு இருக்கிறது.

நிலநடுக்கத்தால் பாதிப்படையும் நில அமைப்பைக் கொண்டு இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தியாவை நான்கு பிராந்தியங்களாகப் பிரித்திருக்கிறது. தென்னிந்தியாவின் மிகக் குறைந்த பாதிப்படைகின்ற பிராந்தியம் இரண்டில் பெங்களூர், ஹைதராபாத், திருச்சி, கோயம்புத்தூர் ஆகியவை உள்ளன. இதற்கு அடுத்ததாக பிராந்தியம் மூன்றில் மும்பை, கல்கத்தா, சென்னை மற்றும் கேரளாவின் முழு பகுதியும் வருகின்றன. ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், சிக்கிம், லடாக் ஆகியவை பிராந்தியம் நான்கில் வருகின்றன. பிராந்தியம் ஐந்தில் வடகிழக்கு மாநிலங்கள் மட்டும் வருகின்றன. எனவே ஐ.ஐ.டி. ரூர்கியைச் சேர்ந்த குழுவினர்கள் பிராந்தியம் ஐந்தை மையமாகக் கொண்டு நடத்திய ஆய்வின் வெளிப்பாடாக குறிப்பிட்ட, 'இந்த அணையானது நிலநடுக்கத்தைத் தாங்காது' என்பது, பாதிப்பு குறைவாக இருக்கின்ற நிலப்பகுதியில் அமைந்திருக்கின்ற அணையின் மீது சூட்டப்படுவது சாரமில்லாத வாதம்.

அணை உடைந்தால் கேரளாவின் மூன்று மாவட்டங்கள் நீரில் மூழ்கிவிடும் என்கிற ஐயத்திற்கு அவரது பதிலாக, தமிழகத்தில் ஓய்வு பெற்ற பொறியாளர்கள் ஏற்படுத்தி இருக்கும் அமைப்பின் மூலம் நடத்திய ஆய்வாக, "பெரியாறு அணையானது கடல் மட்டத்தி -ருந்து 2764 அடி உயரத்தில் இருக்கிறது. 136 அடிக்கு மேல் ஏற்றப்படுகின்ற உபரிநீரானது வெளியேறி 50 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இடுக்கி அணையை வந்து சேரும்போது அவ்விடம் கடல் மட்டத்தி-ருந்து 2315 அடி உயரத்தில் இருக்கிறது. அணை உடையும்பொழுது நீரானது 2764 அடி உயரத்தி-ருந்து 50 கிலோமீட்டர் தொலைவிற்கு ஓடி இடுக்கிக்கு வரும்பொழுது அதன் மட்டம் 2315 அடியாக இருக்கும். இடுக்கி அணையின் அருகே இருக்கும் நில மட்டமானது அதனைக் காட்டிலும் 300 அடி உயரமாக இருக்கிறது. வண்டிப்பெரியாறு, பாம்பனாறு, வல்லங்குன்னு என்கிற ஒவ்வொரு இடத்திலும் நிலமானது 200 அல்லது 300 அடி உயரத்திலேயே அமைந்திருக்கின்றன. எனவே பொதுவாக இந்த அணையில் உடைப்பு ஏற்பட்டால்கூட உயரத்தில் இருக்கின்ற இந்த நகரங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்பது அவர்களது ஆய்வின் முடிவாக இருக்கிறது.

சில ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே விளைநிலங்களாக இருந்த பட்சத்தில் அணை கட்டிய பிறகு இந்த அளவிற்கு பெருகி தற்பொழுது நீரில்லாத காரணத்தால் பெரும்பாலானவை மீண்டும் தரிசு நிலங்களாகக் காட்சியளிக்கின்றன. இதனை அணையின் நீரானது 152 அடிக்கு உயர்த்தப்பட்டால் மட்டுமே மீண்டும் செயல்படுத்த முடியும் என்கிற நிலையில் இனி என்ன செய்யலாம்?" என்பது அவரது கேள்வியாக இருக்கிறது.

இதற்கு திரு மு. இராமநாதன் கொடுக்கும் பதிலாக, "எவ்வளவு தான் தாமதமானாலும் நீதிமன்றத்தின் மூலமாகத்தான் தற்பொழுது 142 அடிக்கு நீரை நிறுத்த முடிந்திருக்கிறது. சூழ்நிலைகள் தமிழகத் திற்கு சாதகமாக இருக்கின்றபொழுது, முத-ல் சட்டப் பாதுகாப்பு செய்து கொள்ள வேண்டும். வெவ்வேறு கட்சிகளாகப் பிரிந்து ஒற்றுமையின்றி தன் படையை வெட்டிச் சாய்ப்பதை நிறுத்துதல் வேண்டும். தமிழக மற்றும் கேரள முதலமைச்சர்களுக்கு இடையே இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி அதனை வலுக்கச் செய்ய வேண்டும்.

அறிவாளர்கள், எழுத்தாளர்களுக்கு இடையே பரப்புரையை நிகழ்த்த வேண்டும். கேரள நண்பர்களிடம் இதைப் பற்றி பேசும் பொழுது அவர்கள் தமிழகத்திற்கான நியாயத்தை ஒப்புக்கொள்கிறார் கள். அவர்களது ஊடகங்களில் இவ்வாறு வரவில்லையே என்பது தான் அவர்களது வினாவாக இருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளர் பால் சக்காரியா அவர்கள் தமிழகத்தி-ருந்து நாம் எல்லா உணவுப் பொருள்களையும் பெற்றுக்கொண்டு நீரை விடாமல் தடுப்பது நியாயமற்றது என்ற பொருளில் கட்டுரை எழுதியிருக்கிறார். அவரை நாம் அழைத்து பலமுறை பேசவைத்து அறிவுசார்ந்த மக்களிடம் பரப்புரை செய்திருக்க வேண்டும். நமது பக்கம் நியாயம் இருப்பதைச் சொல்வதோடு மட்டும் நிறுத்தி விடாமல், அதனை அனைவரிடமும் எடுத்துச் சொல்வதற்கான பக்குவமும் நம்மிடம் இருக்கவேண்டும்.

1979-ல் 136 அடியாக குறைக்கப்பட்ட நீரானது 2014-ல் 142 அடியாக உயர்த்தப்பட்டது. இன்றையநிலை வரை 152 அடியாக உயர்த்தப் படவில்லை. இவ்வாறு பல ஆண்டுகளாக நீரானது உயர்த்தப்படாத காரணத்தினால் நீர்ப்பரப்பு குறைந்து அந்நிலங்களில் கட்டிடங் களைக் கட்டிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான நிரூபணம் இதுவரை நம்மிடம் இல்லை. தமிழக அரசின் பொதுப் பணித்துறை வருவாய்த்துறை ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் இதனை ஆய்வில் கொள்ளவேண்டும். அணையின் அதிகபட்ச கொள்ளளவான 8000 ஏக்கர் நீர்ப்பரப்பு தமிழகத்திற்குச் சொந்த மானது. இதற்கான குத்தகைத் தொகையை தமிழகம் செலுத்திக் கொண்டிருக்கிறது. எனவே அவ்வாறு கட்டடங்கள் எழுப்பப்பட்டி ருந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேக்கடி மதகி-ருந்து வெளியேற்றப் படுகின்ற நீரானது வினாடிக்கு 2200 கன அடியாகும். இது தொடர்ச்சியாக வெளியேற்றப்பட வேண்டும். அவ்வாறு முழுமையாக வெளியேற்றப்படாமல் கீழே இருக் கின்ற லோயர் கேம்பிற்கு மின்சார உற்பத்திக்குத் தேவையான அளவு நீரை மட்டுமே அனுப்புகிறார்கள். 1899-ல் மெக்கன்சி, தனது நூ-ல் எழுதிய ஆலோசனையின்படி, தேக்கடியில் மேலும் புதிய சுரங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறெல்லாம் கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே பென்னிகுயிக் அவர் களது முயற்சியின் முழுப் பலனாக இன்றளவும் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களும் விவசாயத்தில் சிறந்து விளங்க முடியும்.

"இப்பொழுது இருக்கின்ற சுரங்கமானது 2200 கன அடி தண்ணீரைத் தான் கடத்தவல்லது. ஆகவே புதிய சுரங்கங்கள் கட்டி அதிகமான நீரை வெளியேற்ற வேண்டுமெனில், இப்பொழுது இருக்கின்ற பெரியாறு அணை பாசனத் திட்டத்தை முற்றிலுமாக பரிசீலனை செய்து ஆய்வு நடத்தவேண்டும். கூடுதலாக சில இடங்களில் நீர் தேக்கங்களைக் கட்ட வேண்டி வரலாம். மெக்கன்சி அவர்கள் 1899-ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டிருந்த கூடுதல் சுரங்கங்கள் அமைக்கின்ற பணியை நாம் இன்று வரை செய்யாமல் இருக்கின்றோம்.

கேரளாவில் இதனை ஒப்புக் கொள்வார்களா என்கிற கேள்வி எழும்பொழுது, நிச்சயமாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நாம் முத-ல் நீரியல் வல்லுநர்கள், பொறியியல் வல்லுநர்கள் ஆகியோர் ஏற்றுக்கொள்ளும்படி சரியானதொரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

கேரளா அரசு அதனை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நீதிமன்றத் திற்குச் செல்வார்கள். பொறியியல் ரீதியாக சரியானதொரு திட்டத்தை உருவாக்கினால் ஒரு காலகட்டத்தில் மறுக்கமுடியாத ஒரு சூழல் உருவாகி ஒப்புக்கொண்டே ஆக வேண்டிவரும்.

வரப்பு உயர்ந்து, நீர் செழிப்பாக இருந்தால் நெற்க்கதிர்கள் விளைந்து மக்கள் உயர்ந்து மன்னன் உயர்வான் எனும் பொருளில் அமைந்த ஔவையின் பாடல் வரிகளான, "வரப்புயர நீருயரும்

நீருயர நெல்லுயரும்

நெல்லுயரக் குடியுயரும்

குடியுயரக் கோலுயரும்

கோலுயரக் கோனுயர்வான்"

என்பது நீரின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. பென்னி குயிக் தலைமையில் பல சிக்கல்களை எதிர்கொண்டு கட்டிய முல்லைப் பெரியாறு அணையை தொடர் பராமரிப்பு செய்வதற்கு வழியின்றி தமிழக விவசாயிகளின் விளைநிலமானது நீரின்றி வெடித்து தரிசாகக் காய்ந்து போவதை விவசாயிகளின் பிரச்சினையாக மட்டும் எண்ணாமல் மாநிலங்களின் எல்லையைக் கடந்து விளைச்சலை பயன்படுத்திக் கொள்ளும் மக்கள் அனைவரது பொறுப்பாக உணர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தீர்வுகளை நிறைவேற்றி பயன்பெறுவோம்.

தண்ணீரை சரியாக நாம் பயன்படுத்தவில்லை என்றால் தண்ணீரே தாகத்தில் பரிதவித்து, இயற்கை எய்தும்.

uday010923
இதையும் படியுங்கள்
Subscribe