பெரியார் - அண்ணா! திராவிட வெளிச்சத்தால் விடிந்தோம்! -முனைவர் இரா. மஞ்சுளா

/idhalgal/eniya-utayam/periyar-brother-we-are-awakened-by-dravidian-light-dr-ira-manjula

ரு நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய ஆற்றல் வாய்ந்தது அரசியல். மக்களின் அன்றாடத் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆட்சி செய்யும் அரசை மக்கள் கொண்டாடுவர். மாறாக, அவர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் சூழலில், அவர்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கும் போராடும் நிலை ஏற்பட்டால் மக்கள் எழுச்சி ஏற்பட்டு புரட்சி வெடிக்கும்.

இப்படிப்பட்ட சூழல்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திச் சரியாக வழிநடத்தத் தெரிந்தவரை அந்தச் சமூகம் தலைவராக ஏற்றுக் கொள்ளும். அப்படி வாழ்வியலிலும், அரசியலிலும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

aa

அதனால்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,

’தொண்டு செய்து பழுத்த பழம்;

தூய தாடி மார்பில் விழும்;

மண்டைச் சுரப்பை உலகு தொழும்;

மனக் குகையில் சிறுத்தை எழும்:

அவர்தாம் பெரியார்!’

-என்று, பெரியாரைத் தனது கவிதைத் தோள்களில் வைத்து உயரே தூக்கினார்.

இவருக்கு முன்னரும் சீர்திருத்தவாதிகள் இருந்தனர் என்றாலும் அவர்கள் ஆன்மிகத்திலிருந்து கொண்டு முற்போக்கு பேசினர். அதனால் அது தோற்றுப்போனது என்று பெரியார் முழுமையாக நம்பினார்.

சித்தர்களும், வள்ளலாரும் கூறிய சீர்திருத்த கருத்துக்கள் பக்தி என்ற போர்வைக்குள் அடங்கிப் போயின. முடைநாற்றம் வீசும் மூடப் பழக்க வழக்கங் களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ‘சுயமரியாதை’ என்ற போர்வாளைக் கொண்டுவந்து தருகிறார் பெரியார்.

பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட பலரும் அவரின் நெருக்கமான தொண்டர்களாயினர்.

எனினும் பெரியார் கருத்துக்கு மாறாக, ஆட்சியில் அமர்ந்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்ற பேரறிஞர் அண்ணாவையும், ஐயாவின் கரம் பிடித்து நடந்த தொண்டர் என்றே தமிழகம் குறித்து வைத்திருக்கிறது. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கையைக் களை எடுப்பது, பெண் விடுதலை போன்றவற்றை நடைமுறைப்படுத்த தீவிரமாகக் களப்பணி ஆற்றியவர்கள்.

அவர்கள் இருவரும் இதே செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதிக்கு எதிராக களமாடியவர்கள் என்ற போதும், சாதிய மாநாட்டில் இருவரும் சந்தித்துக் கொண்டது காலத்தின் விசித்திரம்.

எந்தச் சாதிய ஏற்றத் தாழ்வுக்கு எதிராகக் குரல் கொடுத்தனரோ அதே சாதிய மாநாட்டில் கலந்து கொள்ளும் நிலையில் ஒருவரையொருவர் 1934-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி, திருப்பூரில் நடந்த செங்குந்தர் மகாஜன சங்க மாநாட்டுக் கூட்டத்தில் முதன்முறையாகச் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.

ஐயாவின் கருத்தால் அண்ணா ஈர்க்கப்பட்டார் என்றால் அண்ணாவின் பேச்சில் பெரியார் மயங்கினார் என்றே சொல்லவேண்டும். இன்று திருப்பூர் ரயில் நிலையத்தில் ஒரே பீடத்தில் தோழமையுடன் நிற்கும் பெரியார் அண்ணாவின் முழு உருவ வெண்கலச

ரு நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய ஆற்றல் வாய்ந்தது அரசியல். மக்களின் அன்றாடத் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆட்சி செய்யும் அரசை மக்கள் கொண்டாடுவர். மாறாக, அவர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் சூழலில், அவர்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கும் போராடும் நிலை ஏற்பட்டால் மக்கள் எழுச்சி ஏற்பட்டு புரட்சி வெடிக்கும்.

இப்படிப்பட்ட சூழல்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திச் சரியாக வழிநடத்தத் தெரிந்தவரை அந்தச் சமூகம் தலைவராக ஏற்றுக் கொள்ளும். அப்படி வாழ்வியலிலும், அரசியலிலும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

aa

அதனால்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,

’தொண்டு செய்து பழுத்த பழம்;

தூய தாடி மார்பில் விழும்;

மண்டைச் சுரப்பை உலகு தொழும்;

மனக் குகையில் சிறுத்தை எழும்:

அவர்தாம் பெரியார்!’

-என்று, பெரியாரைத் தனது கவிதைத் தோள்களில் வைத்து உயரே தூக்கினார்.

இவருக்கு முன்னரும் சீர்திருத்தவாதிகள் இருந்தனர் என்றாலும் அவர்கள் ஆன்மிகத்திலிருந்து கொண்டு முற்போக்கு பேசினர். அதனால் அது தோற்றுப்போனது என்று பெரியார் முழுமையாக நம்பினார்.

சித்தர்களும், வள்ளலாரும் கூறிய சீர்திருத்த கருத்துக்கள் பக்தி என்ற போர்வைக்குள் அடங்கிப் போயின. முடைநாற்றம் வீசும் மூடப் பழக்க வழக்கங் களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ‘சுயமரியாதை’ என்ற போர்வாளைக் கொண்டுவந்து தருகிறார் பெரியார்.

பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட பலரும் அவரின் நெருக்கமான தொண்டர்களாயினர்.

எனினும் பெரியார் கருத்துக்கு மாறாக, ஆட்சியில் அமர்ந்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்ற பேரறிஞர் அண்ணாவையும், ஐயாவின் கரம் பிடித்து நடந்த தொண்டர் என்றே தமிழகம் குறித்து வைத்திருக்கிறது. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கையைக் களை எடுப்பது, பெண் விடுதலை போன்றவற்றை நடைமுறைப்படுத்த தீவிரமாகக் களப்பணி ஆற்றியவர்கள்.

அவர்கள் இருவரும் இதே செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதிக்கு எதிராக களமாடியவர்கள் என்ற போதும், சாதிய மாநாட்டில் இருவரும் சந்தித்துக் கொண்டது காலத்தின் விசித்திரம்.

எந்தச் சாதிய ஏற்றத் தாழ்வுக்கு எதிராகக் குரல் கொடுத்தனரோ அதே சாதிய மாநாட்டில் கலந்து கொள்ளும் நிலையில் ஒருவரையொருவர் 1934-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி, திருப்பூரில் நடந்த செங்குந்தர் மகாஜன சங்க மாநாட்டுக் கூட்டத்தில் முதன்முறையாகச் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.

ஐயாவின் கருத்தால் அண்ணா ஈர்க்கப்பட்டார் என்றால் அண்ணாவின் பேச்சில் பெரியார் மயங்கினார் என்றே சொல்லவேண்டும். இன்று திருப்பூர் ரயில் நிலையத்தில் ஒரே பீடத்தில் தோழமையுடன் நிற்கும் பெரியார் அண்ணாவின் முழு உருவ வெண்கலச் சிலைகள், அவர்கள் அங்கே முதன் முதலில் சந்தித்துக் கொண்டதன் சாட்சியாக நிற்கின்றன. சாதி கூடாது என்று எதிர்த்தவர்கள் சாதிய மாநாட்டில் கலந்து கொண்டதை எப்படிப் பார்ப்பது என்ற கேள்வி எழும்.

அன்றைய சாதிய மாநாடுகள் குறிப்பிட்ட சாதி களின் பெருமை பேசும் மாநாடுகளாக இல்லாமல் மக்களின் முன்னேற்றத்திற்கான வழிகளை ஆராயும் நோக்கத்தில் நடத்தப்பட்டன என்ற புரிதல் இருக்கும் பட்சத்தில் இந்தக் கேள்வி அர்த்தமற்றது என்பது விளங்கும்.

அதுபோல, கடவுள் கொள்கையை மறுக்கும் ஐயா பெரியார்தான் அனைத்துச் சாதியினரும் கோயிலுக்குள் செல்லத் தடை விதிக்கக்கூடாது என்றும் அனைத் துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கு முட்டுக்கட்டை போடக்கூடாது என்றும் போராடினார். இந்தப் போராட்டங்கள் சாதிய ஏற்றத் தாழ்வை மாற்றிச் சமத்துவ சமுதாயம் மலர வழிசெய்தன. இதனால் தமிழக மக்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதி அடையாளங்களை முற்றிலுமாக நீக்கிவிட்டனர்.

“சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே?”

என்று கேட்கும் நிலை மலரத் தொடங்கியது.

aa

மற்ற மாநிலத்தவர் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் சாதிய அடையாளத்தைப் போட்டுத் தங்கள் மேட்டி மையைக் காட்டுவதைப் பார்க்கும்போது தமிழகத்தில் விதைக்கப்பட்ட பெரியாரியச் சிந்தனையின் வீரியத்தை உணர்ந்து கொள்ளலாம். சமூகத்திற்குத் தன்னை முரட்டு நாத்திகராக, முரட்டுச் சீர்திருத்தவாதி யாக ஒப்படைத்துக் கொண்ட பெரியார், தன் கருத்துக்களை வன்மை யாக வெளிப்படுத்தும் வீரமிக்கவர். பெரியார் என்பவரை தனிமனிதராகப் பார்க்காமல் ஓர் இயக்கமாகப் பார்க்கும் எண்ணம் தமிழகத்தில் காலூன்ற ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.

இதுபுரியாத பலர் பெரியாரை வெறும் ‘கடவுள் மறுப்பாளர்’ என்று பிரச்சாரம் செய்து அவர் மீது களங்கம் கற்பிக்க முற்படுகின்றனர். ??ரீரங்கம் கோயில் முன்னர் உள்ள பெரியார் சிலையை அகற்றவேண்டும் என்றும் பேசுகின்றனர். பெரும்பான்மை மக்களிடையில் உள்ள கடவுள் நம்பிக்கையைப் புறக் கணிக்கச் சொல்லும் ஒருவர் எப்படி அவர்களுக்கான தலைவராக இருக்கமுடியும்? பலகாலமாகத் தொடர்ந்து வரும் சடங்குகள் மீது கல்லெறியும் ஒருவரை எப்படி வழிகாட்டியாகக் கொண்டாட முடியும்? என்பது போன்ற கேள்விகள் தமிழ் மண்ணில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன.

ஈரோட்டுப் பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் பேசக்கூடியவர் அல்லர். கடவுள் மறுப்புக் கொள்கைக்குப் பின்புலமாக அமைந் தவை சாதியம், தீண்டாமை, மூடநம்பிக்கை, பார்ப்பனீ யம், பெண்ணடிமைத்தனம் ஆகியவையே.

மூட நம்பிக்கைக்கும் சாதிய ஏற்றத் தாழ்வுக்கும் அடிப்படை சாத்திரம் என்றால் அந்தச் சாத்திரம் தேவை யில்லை என்று முழங்கினார் பெரியார். சாத்திரத்தைத் தவறாகப் பேசக்கூடாது, ஏனெனில் சாத்திரம் வேதத் திலிருந்து எழுந்ததால் அதை மறுக்க முடியாது என்று சொல்லும் போது அந்த வேதமே வேண்டாம் என்று அவர் ஒதுக்கினார். வேதம் கடவுளால் அருளப்பட்டது என்று கற்பிக்கும்போது உயிர்களிடத்தில் வேற்றுமை பாராட்டும் ஒரு சக்தி எப்படிக் கடவுளாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். அப்படி ஒரு கடவுள் இருக்கவே முடியாது என்று கடைசியாகக் கடவுளை மறுக்கத் தொடங்கினார்.

விவசாயம் செய்யும் நிலத்தில் ஒரு பகுதி மேடாகவும் மற்றொரு பகுதி பள்ளமாகவும் இருந்தால் அந்த இடத்தைச் சமமாக நிரவினால் ஒழிய உழுது பயிர் செய்ய முடியாது. அதுபோலச் சமத்துவப் பயிரை வளர்க்க, சாதிய ஏற்றத் தாழ்வைப் போக்க பல வழிகளிலும் பணியாற்றினார். சனாதனம் என்னும் படுகுழியில் சமத்துவப் பூக்களை, சமூகநீதி என்ற செடியைப் பூக்கச் செய்தார்.

கடவுளின் பெயரால் யார் தம்மை அடிமைப்படுத்தினார் களோ அவர்களையே உயர்வானவர்களாகக் கருதும் போக்கு மக்களிடையே காணப்பட்டது. கைகளிலோ அல்லது கால்களிலோ பூட்டப்பட்ட விலங்கை எளிதில் அறுத்தெறிய முடியும். ஆனால் மூளைக்குள் பூட்டப்பட்ட அடிமை விலங்கை எப்படி உடைப்பது என்று கலங்கி அதை உடைக்கும் கோடரியைக் கண்டுபிடித்து வெற்றி கண்டார் பெரியார்.

சாதி என்ற நச்சு மரத்தின் கிளைகளை வெட்டினால், அது தழைத்துக் கொண்டே இருக்கும். கடவுள் என்ற அடிமரத்தை வெட்டினால் சாதி என்ற நச்சுமரம் தானாகவே சாய்ந்து விடும் என்பதால் கடவுள் மறுப்பை எப்போதும் வற்புறுத்தினார். இந்த முற்போக்குக் கருத்துக்களால் அவருக்குத் தொண்டராக மாறிப்போனார் அண்ணா.

ஆனால், பெரியாரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த அவர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து பிரிந்தார் என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை அவர் இதயத்துக்கு நெருக்கமானவராகவே அண்ணா இருந்தார்.

அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்கும்போது பெரியாரிடம் வாழ்த்துப் பெற்றதோடு, ஐயாவிடமிருந்து பிரிந்துசென்று ஐயாவின் பிறந்தநாள் அன்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, ஐயாவின் கொள்கை வழியே ஆட்சி செய்தார். ஐயாவின் நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்த சுயமரியாதைத் திருமணம் என்ற திட்டம் அண்ணாவால் |சட்டமானது. பகுத்தறிவுப் பாதையில் செல்லும் அண்ணாவின் ஆட்சியை மக்கள் தவற விடுவார்களேயானால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது என்று ஐயா திட்டவட்டமாகக் கூறினார்.

அந்தச் செயல் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வதற்குச் சமமானது என்றும் எச்சரித்தார்.

பெண் விடுதலைக்கு அடிப்படை, பொருளாதார விடுதலை. அந்தவகையில் இந்தியாவிலேயே முதன்முதலில் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு தந்து சாதனை படைத்தது தமிழகம். அதைச் சட்டமாக இயற்றிச் சாத்தியப்படுத்திய பெருமை பெரியார் - அண்ணா வழியில் ஆட்சி செய்த முத்தமிழறிஞர் கலைஞருக்கு உண்டு. மேலும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம், பெண்கல்வி போன்ற முக்கியமான திட்டங்களையும் நடைமுறைபடுத்தினார் கலைஞர். அதன் தொடர்ச்சியாக மகளிருக்கு சாதாரண பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் சட்டம் இன்றைய திராவிட ஆட்சியில் நிறைவேறி இருக்கிறது.

பெண்களுக்கு ஆசிரியப் பணி, மருத்துவப் பணி, காவல் துறைகளில் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று பேசிய பெரியார், பால் உறுப்பும் சூல் உறுப்பும் பெண்களின் முன்னேற் றத்திற்குத் தடையாக உள்ளன என்றும் காத்திரமாகக் குறிப்பிட்டார். ஆணாதிக்க சமுதாயத்திற்கு ஏன் குழந்தை பெற்றுத் தரவேண்டும் என்ற எண்ணத்தைப் பெண்களின் மத்தியில் பரவச் செய்தார்.

பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டா?

அதுபோல ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது என்று பேசிய பெரியார், அவரைக் காட்டிலும் மிகக் குறைந்த வயதுடைய மணியம்மையாரை மணந்து கொண்டது இன்றுவரை விமர்சனத் துக்கு உள்ளாகிறது. அன்றைய சட்டப் படி பெண்ணுக்குச் சொத்துரிமை இல்லை. அதே போல தத்தெடுக்கவோ தத்துப்போகவோ உரிமை இல்லை. எனவே, தனக்குப் பின்னால் எல்லாவற்றையும் நிர்வகிக்க மணியம்மையைத் திருமணம் செய்வதைத் தவிர வேறு சட்டப்பூர்வ வழி இல்லாமல் போனது. பிறப்பின் வழியாக வேற்றுமை பாராட்டும் மதத்தை விட்டு வெளியேறுங்கள் என்று அறிவுரை சொன்ன அவர், கடைசிவரை இந்து மதத்தைவிட்டு வெளியேறாமல் இருந்தார்.

மற்றவர்களுக்கு உபதேசம் செய்பவர் தான் பின்பற்றவில்லையே என்று ஆதங்கப்படுவோருக்கு அந்த மதத்தைவிட்டு வெளியேறினால் அதைப் பற்றிய விமர்சனம் செய்யும் தகுதியை இழந்துவிடுவதால், சேற்றுக்குள் இருந்து கல்லெறியும் வேலையைத் தொடர்ச்சியாகச் செய்து வந்தார். மக்களின் பொதுப்புத்தியிலிருந்து வெறுக்கும் கருத்துக்களை தந்தை பெரியார் புகுத்தும் நேரத்தில் அண்ணா தனது எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தார். திராவிட விடுதலைக்காகப் போராட ‘கருஞ்சட்டைப் படையினர்’ மட்டுமல்லாமல் அனைவரும் கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்று பெரியார் கூறியபோது தமிழர்களின் உடை வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை.

அப்படி இருக்கும்போது கருப்பு அணிந்தால் இது மக்களுக்கும் கழகத்துக்குமான தொடர்பைத் துண்டித்துவிடும் என்றார்.

ஆனாலும் பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க கருஞ்சட்டையை ஆதரித்தும் உரையாற்றினார். விடுதலை நாளில் குடியரசு பத்திரிகையில் விடுதலை நாளுக்கான வாழ்த்தைச் சொல்லாமல் பெரியார் கண்டனம் தெரிவித்தது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. வெள்ளைக்காரன் கையில் இருந்த நாடு இப்போது கொள்ளைக்காரர்களான பிராமணர்கள் கையில் செல்கிறது. எனவே இது விடுதலை அல்ல, இதனை துக்கநாளாக அனுசரிக்க வேண்டும் என்றார். அப்போது திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த அண்ணா, இரண்டு எதிரிகளில் ஒருவர் ஒழிந்தார் என்பதால் அது இன்ப நாள் என எழுதினார்.

ஆங்கிலேயர்களுக்கு ஆதர வானவன் என்ற பழி எங்கே தன் மீது விழுந்துவிடுமோ என்று அஞ்சி இப்படி எழுதியிருந்தார் அண்ணா. இருவருக்கும் சமூக நீதியும், சமத்துவமும் இரு கண் களாக இருந்தன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்து வதில் இருவரும் வெவ்வேறு வழிகளைத் தேர்வு செய்தனர்.

தேசம், மொழி, இனம் ஆகியவை மனித உயர்வுக்காக இருக்க வேண்டும். அதுவே சுமையாக மாறி னால் அதை உடைக்கத் தயங்காதவர் பெரியார்.

அண்ணாவோ தேசம், மொழி, இனம் ஆகியவற்றை முன்வைத்து மக்களை முன்னேற்ற முடியும் என்று முழுமையாக நம்பினார். முன்னவர் இயக்க அரசியலைக் கையில் எடுத்தார். பின்னவரோ தேர்தல் அரசியல் வழி சென்றார். தேர்தல் அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வந்தபோது பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் சட்டமாயின. துரதிருஷ்டவசமாக ஐயா எச்சரித் தது போலவே தேர்தல் அரசியல் காரணமாகப் பல சமூகநீதிக் கொள்கைகளில் நிறைய சமரசம் செய்துகொள்ள தி.மு.க. தள்ளப் பட்டது. இதனால் அண்ணா பதவி ஆர்வலர், அதிகார விரும்பி என்ற முடிவுக்கு வந்துவிடமுடியாது. காரணம் அவர் பதவிக்கு வந்திருக்கா விட்டால் தமிழகம் இவ்வளவு வேகமாக சமூகநீதிப் பாதையில் நடைபோட்டு இருக்காது. அது போலவே பெரியாரின் தேர்தல் சாராத இயக்க அரசியல் இன்றளவும் பல முக்கியப் போராட்டங்களை முன்னெடுத்துச் சாதித்துக் காட்டிக்கொண்டிருக்கிறது என்பதை யும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆட்சியையும் அதிகாரத்தையும் ஆயுதமாகப் பயன்படுத்திய அணுகு முறை அண்ணாவின் அணுகுமுறை. தந்தை பெரியாரோ தேர்தல் சாராத இயக்க அரசியலைத் தீமையிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் கேடயமாக உருவாக்கினார். சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வோர் அடியை எடுத்து வைக்கத் தேவைப்படும் கைத்தடியாக அண்ணாவின் பாதை அமைந்தது என்றால் பெரியாரின் பாதை அடுத்த பல அடிகளுக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக மாறியது.

பல தத்துவவாதிகளின் தத்துவங் கள் நிறைவேறிய காலத்தில் அவர்கள் உயிரோடு இருக்கவில்லை. எடுத்துக் காட்டாக மார்க்ஸ் உருவாக்கிய சோஷியலிச கொள்கைகளை ரசிய புரட்சியின் வழியாக லெனின் கொண்டு வந்தபோது மார்க்ஸ் உயிரோடு இல்லை. ஆனால் பெரியாரி யக் கொள்கைகள் அவர் வாழும் காலத்திலேயே உயிர் பெற்று உலா வந்தன, இன்றும் உலா வருகின்றன. பெரியா ரின் கொள்கைகளுக்கு உயிரூட் டிய அண்ணாவின் செயல்பாடு களில் முக்கியமானது பகுத்தறி வுக் கருத்துகளைப் பட்டி தொட்டியெல்லாம் பரப்பியது. தன் மேடைப் பேச்சின் வழியாக ஆழ்ந்த கருத்துக்களை எளிமையாகச் சொல்லிப் புரிய வைக்கும் திறனோடு பேசினார். அதன் தொடர்ச்சியாக நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் என்ற கழகத் தொண்டர்கள், அன்பு உடன் பிறப்புகள் உருவாயினர்.

புற்றுநோயின் காரணமாக மரணத்தைத் தழுவியதால் குறுகிய காலத்தில் அண்ணா வின் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டாலும் அதன் ஒளி குறையாமல் கொண்டுசேர்த்த கலைஞரும், தற்போதைய திராவிட ஆட்சியும் பாராட்டு தற்குரியது! எது எப்படியோ பெரியாரின் திராவிட வெளிச் சத்தால்தான் நாம் விடிந்திருக்கி றோம்.

uday010922
இதையும் படியுங்கள்
Subscribe