இன்று பாட்டி எங்களுடைய புதிய வீட்டைப் பார்ப்பதற்காக வருகிறாள்.
நகரத்தின் மேற்குப் பகுதியில் எங்களுடைய வீடு இருக்கிறது. ரத்தத்தை நீரென சிந்தி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வைத்து நான் இந்த இருபது சென்ட் நிலத்தை வாங்கினேன். அதில் நீங்கள் இப்போது பார்க்கக்கூடிய இந்த வீட்டைக் கட்டுவதற்கு மீண்டும் நான் குருதியை நீரென சிந்த வேண்டியதிருந்தது.
அமரும் அறையும், சாப்பிடும் அறையும் கீழேயிருக்கும் தளத்தில்... மேலே இரண்டு படுக்கையறைகள் இருக்கின்றன. பிறகு... அதிகாலைப் பொழுதில் சூரிய உதயத்தைப் பார்ப்பதற்கும், மாலை வேளையில் சூரியன் மறைவதைப் பார்ப்பதற்கும் ஒரு சிட்டவுட்டும்... அங்கு அமர்ந்திருந்தால் கிழக்கையும் மேற்கையும் பார்க்கலாம்.
குளிரும் பனியும் விழக்கூடிய அதிகாலை வேளைகளில் நான் என்னுடைய காஷ்மீர் சால்வையைப் போர்த்தியவாறு அங்கு அமர்ந்தவாறு சூரியன் உதயமாவதைப் பார்ப்பேன். அந்த நேரத்தில்... அந்தப் பக்கத்திலிருக்கும் படுக்கையறைகளில் என் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் புலர்காலைப் பொழுதிற்கான கனவுகளைக் கண்டவாறு தூங்கிக்கொண்டிருப்பார்கள். நான் மிகவும் அதிகமாக ஆனந்தமடையும் ஒரு வேளை அது.
""பாட்டி... என் வீட்டை நீங்க பார்க்க வேணாமா? நான் என்னைக்கு காரோட வரணும்?''
கடந்த முறை குடும்பத்திற்குச் சொந்தமான கிராம வீட்டிற்குச் சென்றிருந்தபோது, நகரத்திற்கு வரும்படி நான் பாட்டியை வற்புறுத்தினேன்.
பாட்டி வெற்றிலைப் பெட்டியை முன்னால் வைத்தவாறு, வெற்றிலை போடுவதற்கான ஆயத்தத்தில் இருந்தாள்.
""பயணம் செய்ய முடியாது கிருபாகரா. வீட்டை ஒரு படம் எடுத்துக்கிட்டு வந்து தந்தா போதும்.''
""புகைப்படத்தைப் பார்த்தா போதாது பாட்டி... நீங்க வந்து வீட்டைப் பார்க்கணும்.''
""இந்த வீட்லயிருந்து வெளியேபோய் காலம் கொஞ்சம் ஆகிவிட்டது. எதுவும் செய்யமுடில. வயசு எண்பது முடிஞ்சிட்டது. இனி பார்க்கறதுக்கு என்ன இருக்கு? பார்க்க வேண்டியதையெல்லாம் இனி அங்கபோய் பார்த்தா போதும்.''
பாட்டி ஆகாயத்தை நோக்கி கண்களைப் பதித்தாள்.
""பாட்டி... நீங்க கொஞ்சமும் சிரமப்பட்ட வேண்டியிருக்காது. காரைக் கொண்டு வந்து வாசப்படியில நிறுத்துறேன். நீங்க அதில் ஏறி உட்கார்ந்தா போதும்.
வீட்டைப் பார்த்தபிறகு, மீண்டும் வாசப் படியில கொண்டுவந்து காரை நிறுத்துறேன். போதுமா?''
இறுதியில் பாட்டி சம்மதித்தாள்.
அவள் வெற்றிலையின் நரம்புகளைக் கிள்ளி எறிந்துகொண்டும், பாக்கைச் சுரண்டிக்கொண்டும் இருந்தாள்.
""மகனே... அந்த "ம

""மகனே... அந்த "மினி' உரலை இங்க எடு.''
அவள் வாசலிருந்த அரைச் சுவரின்மீது வைத்திருந்த தன் சிறிய உரலைச் சுட்டிக் காட்டினாள். நான் அதை எடுத்து அவளுக்கு முன்னால் வைத்தேன். அவள் பாக்கையும் வெற்றிலையையும் அதற்குள் போட்டு நசுக்கினாள். பாட்டிக்கு பல் இல்லை.
""பாட்டி... நீங்க எங்கிருந்து இந்த ஆங்கில வார்த்தையைக் கத்துக்கிட்டீங்க?''
""கிருபாகரா... உன்னைப்போல நான் பம்பாயையும், கல்கத்தாவையும் பார்க்கல... ஆனாலும், இந்த பாட்டிக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரியும்.''
இடித்த வெற்றிலையையும் பாக்கையும் வாய்க்குள் போட்டவாறு அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
சாப்பிட்டு முடித்தபிறகு, நான் வெளியேறத் தயாரானேன். பாட்டி தடுத்தாள்.
""இன்னிக்கு இங்க தங்கிட்டு, காலைல போனா போதும். எவ்வளவு காலம் கழிச்சு நீ இன்னிக்கு இந்த வழியில் வந்திருக்கே?''
""இன்னொரு முறை பார்க்கலாம். வீட்டுவேலை முடிஞ்சிட்டதே. வாசந்தியையும் குழந்தைகளையும் அழைச்சிட்டு ஒருநாள் நான் இங்க தங்கறதுக்கு வர்றேன்.''
பாட்டி கூறியது உண்மைதான். நகரத்திலிருந்து ஓய்வூதியம் வாங்கும் நபராக வந்தபிறகு, வீட்டுப் பணிகளில் தீவிரமாக இருந்தேன். இப்போதுதான் சற்று சரியாக மூச்சுவிட முடிந்தது.
வெளியேறியபோது, நான் மேலும் ஒருமுறை ஞாபகப்படுத்தினேன்.
""வர்ற ஞாயித்துக்கிழமை காலைலில நான் வண்டியோட வருவேன். பாட்டி... நீங்க தயாரா இருக்கணும்.''
பாட்டிக்கு ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பு தரவேண்டுமென்று நாங்கள் தீர்மானித்தோம். என் கடந்த காலத்தின் ஒரு தெளிவான நினைவு அவள். இளமைக் காலம், கிராமத்தைவிட்டுப் புறப்படும்வரை உள்ள பாரம்பரிய வீட்டின் வாழ்க்கை.... அவை அனைத் திற்கும் முக்கிய கண்ணிகளாக இருந்தவள் அவள். மடியில் அமரவைத்து அவள் கூறிய எண்ணற்ற கதைகள்தான் என் எளிய உலக அறிவியலுக்கான உறைவிடம்... என் வீட்டைப் பார்ப்பதற்காக பாட்டி வரக்கூடிய இந்த சந்தர்ப்பத்தில் நான் அவை அனைத் தையும் நினைத்துப் பார்க்கிறேன்.
முன்கூட்டியே தீர்மானித்தைப்போல ஞாயிற்றுக்கிழமை காலையில் நான் என்னுடைய நண்பன் வாசுதேவனின் வண்டியை எடுத்துக்கொண்டு, கிராமத்து வீட்டிற்குப் புறப்பட்டேன். நகரத்திலிருந்து பன்னிரண்டு நாழிகை தூரத்தில், கிழக்கு திசையில் எங்களுடைய கிராமப் பகுதி இருந்தது. சமீபகாலத்தில் அங்கு பெரிய மாற்றங்கள் வந்திருப்பதைப் பார்க்கலாம். எந்த வண்டியும் போவதற்கான வசதியைக்கொண்ட பாதைகள், மின்சாரம், பள்ளிக்கூடம், அஞ்சல் அலுவலகம்...
நான் சென்றபோது, பாட்டி தயாராக நின்றிருந்தாள். ஜரிகைபோட்ட புடவையையும், ரவிக்கையையும் அணிந்திருந்தாள். (தூரப் பயணம் செய்யும்போது மட்டுமே அவள் ரவிக்கையை அணிவாள்...) நரைத்த தலைமுடியை நல்ல முறையில் கோதி வைத்திருந்தாள். கால்களில் செருப்புகளும்...
""எப்படி இருக்கேன் கிருபாகரா?''
""அழகான பெண்ணா இருக்கீங்க.''
பாட்டி பற்கள் இல்லாத வாயைக் காட்டிச்சிரித்தாள். அவள் வெற்றிலைப் பெட்டியைக் கையில் எடுத்தாள். எங்கு செல்லும்போதும், அது அவளுடன் இருக்கும்.
பாட்டி காரின் முன்னிருக்கையில் எனக்கு அருகில் அமர்ந்தாள். நான் வண்டியைக் கிளப்பினேன்.
""இது யாரோட வண்டி?''
""ஒரு நண்பனோடது. வாசுதேவன்னு கூப்பிடுவாங்க.''
""கிருபாகரா... நீயும் ஒரு வண்டி வாங்கக் கூடாதா?''
""எனக்கு அந்த அளவுக்கு ஆசை எதுவும் இல்லை பாட்டி.''
""உங்கிட்ட எந்தவொரு மாற்றமும் இல்ல. அதே பழைய கிருபாகரனேதான்...''
பாட்டி ஒரு சிரிப்புடன் கூறினாள்.
வெயில் கடுமையாவதற்கு முன்பே நாங்கள் நகரத்தை அடைந்துவிட்டோம். வெளிவாசலில் காரை நிறுத்திவிட்டு நான் "ஹார்ன்' அடித்தேன். வாசந்தியும் குழந்தைகளும் ஓடிவந்தார்கள். அவர்கள் எங்களை எதிர்பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.
""பாட்டி... கிருபாகரனோட புதிய வீட்டுக்கு உங்களை வரவேற்கிறேன்.''
நான் கதவைத் திறந்தேன். பாட்டி கீழே இறங்கி, ஜரிகை போட்ட புடவையை மார்புப் பகுதியில் சரிசெய்தவாறு, என் புதிய வீட்டை முழுமையாக ஒருமுறை பார்த்தாள்.
""பாட்டி, உங்களுக்குப் பிடிச்சிருக்கா?''
வெளியேயிருந்து பார்க்கறப்போ நல்லா இருக்கு. உள்ளேயும் பார்த்துட்டு கருத்தைச் சொல்றேன்.
""பாட்டி, உங்களுக்கு எதைப் பத்தியும் தெளிவான கருத்து இருக்கும். அந்த கருத்துக்கு நான் ரொம்ப அதிகமான மதிப்பு கொடுக்கவும் செய்யறேன்.''
""கொஞ்சம் "க்ரிஸாந்திமம்' பூக்களும் வேணும்.''
எங்களுடைய சிறிய பூந்தோட்டத்தைப் பார்த்துவிட்டு அவள் கருத்து கூறினாள்.
தோட்டத்தில் பெரும்பாலும் கிராமத்து மலர்களே இருந்தன. செட்டிப் பூக்கள் மட்டுமல்ல... கிராமத்து வீடுகளில் வளரும் கூடராப் பூக்களைக்கூட நான் இங்கு வளர்த்திருந்தேன்.
அந்த பூக்கள் அனைத்தும் பாட்டிக்கு பழமையானவையாகத் தோன்றியிருக்க வேண்டும்.
உள்ளே நுழைந்த பாட்டி, ஒரு கண்ணாடிக்குவளையில் குளிர்ந்த "ஸ்க்வாஷ்' பருகினாள். வீடு முழுவதையும் நடந்து பார்த்தாள். அதற்குப்பிறகு மேலேயிருந்த சிட்டவுட்டில் அமர்ந்து, வெற்றிலைப் பெட்டியைக் கையிலெடுத்தாள். அப்போது நான் ரகசியமாக அவளுடைய "மினி உரல்' என்ற வார்த்தையைப் பற்றி வாசந்தியிடம் கூறினேன். அதைக் கேட்டவுடன் அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.
நகரத்தை முழுமையாகப் பார்த்தவாறு பாட்டி முழுமையாக வெற்றிலையைப் போட்டாள்.
""வீட்டுக்கு எவ்வளவு செலவானது?''
""ஒண்ணே கால்.''
""இந்த காலத்தில் அது அந்த அளவுக்கு பெரியதொகை ஒண்ணுமில்ல....''
பாட்டி சாதாரணமாகக் கூறினாள். அதைக் கேட்டதும் எனக்குள் ஒரு அழுகை எழுந்தது. இந்த ஒன்றே கால் லட்சத்திற்காக நான் ஒரு ஆயுள்காலம் முழுவதும் ரத்தத்தை நீரென செலவழித்துக் கஷ்டப்பட்ட கதை என்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?
மதியப்பொழுது ஆகும் வரையில் நாங்கள் அங்கேயே அமர்ந்து, பல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். நகரத்தின் விசேஷங்களைத் தெரிந்துகொள்வதில் அவள் சிறப்பு ஈடுபாட்டை வெளிப்படுத்தினாள்.
""கிருபாகரா... நீ அதிர்ஷ்டசாலி. உன்னால உலகத்தைப் பாக்க முடிஞ்சதே! இந்த பாட்டி எதைப் பார்த்தா? ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன்.
அங்கேயே கிடந்து நான் இறக்கவும் செய்வேன். எனக்கு ஒரேயொரு கவலைதான். கொஞ்சம் பயணம் செய்ய முடியவில்லையே!''
""பாட்டி, உங்களை நான் எங்க வேணும்னாலும் கூட்டிட்டுப் போறேன். கொஞ்சம் போகட்டும்... நாம் மதராஸ் வரை போகலாம்.''
""மதராஸைப் பார்த்து என்ன பிரயோஜனம்? பார்க்கறதா இருந்தா, துபாயைப் பார்க்கணும்.''
உண்மையைக் கூறட்டுமா? அதைக் கேட்டவுடன், இந்த கிருபாகரன் உருகிப் போனான்.
அப்போது வாசந்தி வந்து எங்களை சாப்பிடும் அறைக்கு வரும்படி அழைத்தாள். அதனால் நான் தப்பித்தேன்.
பாட்டி வாஷ்பேஸினுக்கு அருகில் சென்று முகத்தைக் கழுவிவிட்டு, மேஜைக்கு முன்னால் வந்து அமர்ந்தாள். அவளால் மேஜைக்கு முன்னால் அமர்ந்து சாப்பிட முடியுமா என்று நான் சந்தேகப்பட்டேன். என் சந்தேகம் தேவையேயில்லை. அவளிடம் எந்தவொரு பழக்கக் குறைபாடும் தெரியவில்லை.
மேஜையில் அனைத்தும் இருந்தன. வாசந்தி தன்னுடைய சமையல் திறமை முழுவதையும் காட்டியதைப்போல இருந்தது. கிராம பாணியில் உள்ள ஒரு விருந்தைத்தான் அவள் முதலில் திட்டமிட்டிருந்தாள். பாட்டிக்கு அதுதான் பிடிக்கும் என்ற எண்ணத்தில்... நான்தான் அவளை அதிலிருந்து பின்னோக்கித் திருப்பிவிட்டேன்.
""திறமைசாலி!''
சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள் வைக்கப் பட்டிருந்த மேஜையை முழுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு பாட்டி வாசந்தியைப் பாராட்டினாள்.
அவள் முதலில் தட்டில் பரிமாறியது நூடுல்ஸ்... பிறகு... சிக்கன் சில்லியை.. சோற்றையோ சாம்பாரையோ பார்த்ததாகக்கூட காட்டிக்கொள்ளவில்லை. வாசந்தி என்னைப் பார்த்து கண்களால் சிரித்தாள்.
நான் எனக்கு விருப்பமான சோற்றையும் முருங்கைக்காய் சாம்பாரையும் வயிறு நிறைய சாப்பிட்டேன். பாட்டி அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
""கிருபாகரா... உங்கிட்ட எந்தவொரு மாறுதலும் இல்லை... இல்லையா மகளே?''
அவள் வாசந்தியிடம் கேட்டாள். தொடர்ந்து ஸோயா ஸாஸ் இருந்த புட்டியை எடுத்து நூடுல்ஸின்மீது சாய்த்தாள். இவற்றையெல்லாம் பாட்டி எங்கிருந்து கற்றுக்கொண்டாள்? யார் கற்றுத் தந்தார்கள்?
சாப்பிட்டு முடிந்தபிறகு, நாங்கள் எல்லாரும் அமரக்கூடிய அறையில் இடத்தைப் பிடித்தோம். மீண்டும் ஊர் விஷயங்களைப் பேசியவாறு அமர்ந்திருந்தோம்.
""பாட்டி... உங்களுக்கு தூக்கம் வர்றதா இருந்தா மேலே போய் படுக்கலாம்.''
சிறிது நேரம் கடந்தபிறகு நான் கூறினேன். எனக்கு தூக்கம் வந்துகொண்டிருந்தது.
""மதிய வேளையில் படுத்தா எனக்கு தூக்கம் வராது. நீ ஏதாவது பாட்டை வை.''
எங்களுடைய ஸ்டீரியோ சிஸ்டத்தைப் பார்த்தவாறு பாட்டி கூறினாள். அதைக் கேட்டவுடன் கல்லூரியில் படிக்கும் என் மகளுக்கு உற்சாகம் வந்தது. அவள் கேட்டாள்:
""பாட்டி... நீங்க என்ன கேட்கணும்?''
""சுப்புலட்சுமியோட கீர்த்தனையை வை.'' நான் கூறினேன்: ""பாட்டிக்கு அதுதான் பிடிக்கக் கூடியதா இருக்கும்.""
எனக்கும் என் குடும்பத்திற்கும் மிகவும் விருப்பமான இசைத்தட்டு அது.
நான்கு வரிகளைக் கேட்டதும், பாட்டி கொட்டாவிவிட ஆரம்பித்தாள்.
""உங்கிட்ட வேற இசைத்தட்டு எதுவும் இல்லையா மகளே?''
""பாட்டி... உங்க விருப்பம் என்ன?''
""இங்கிலீஷ் வை... "அப்பா' இருந்தா அதை வை.''
அவள் "அப்பா' இசைத்தட்டினைத் தேடியெடுத்து வைத்தாள். அறையில் ஸ்டீரியோ இசை முழங்கியது.
""ஹனீ... ஹனீ... ஹவ் யூ த்ரில் மீ...""
பாட்டி தலையை ஆட்டி ரசித்தவாறு அமர்ந் திருந்தாள். இசைத்தட்டு முடியும்வரை... முடிந்ததும் அவள் கூறினாள்:
""இன்னொரு முறை வை மகளே.''
மகள் பின்பற்றினாள். அறையில் மீண்டும் "அப்பா" வின் சத்தம் உயர்ந்தது. பாடலின் இனிமையில் பாட்டி முழு உலகத்தையும் மறந்துவிட்டதைப்போல தோன்றியது. என் கண்கள் மெதுவாக மூடின.
சாயங்காலம் வெயில் குறைந்தபிறகு, பாட்டி எங்களிடம் விடைபெற்றுக்கொண்டாள். அவளை நானே கிராமத்து வீட்டில் கொண்டுபோய் விட்டேன். திரும்ப மீண்டும் தனியாக காரை ஓட்டிக்கொண்டு வரும்போது, முழு உலகமும் மாறிவிட்டதைப்போல எனக்குத் தோன்றியது. ஊரில் நடந்துகொண்டிருக்கும் பெரிய மாறுதல்களைப் பற்றி பாட்டி என்னை உணரச் செய்திருந்தாள்.