காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும் வார்த்தை களுக்கு சொந்தக்காரர் கவிஞர்.பிருந்தாசாரதி. திரைத்துறையில் இருந்து கொண்டே தீவிர இலக்கியத்திலும் தடம்பதிப்பவர். ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கூடம், பறவையின் நிழல், மீன்கள் உறங்கும் குளம், எண்ணும் எழுத்தும் போன்ற அவரது முந்தைய புத்தகங்களின் வரிசையில் தற்பொழுது "இருளும்ஒளியும்' என்ற புத்தகமும் நம் கவனம் ஈர்க்கிறது.
இந்த உலகத்தை இறைவன் படைப்பதற்கு முன்பாக வெளிச்சம் உண்டாகுக என்கிறான்.
வெளிச்சம் உண்டாகிறது. பின்புதான் இறைவன் மனிதனைப் படைக்கிறான். இதைத்தான் பைபிள், குர்ஆன் போன்ற புனித நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஆம். இறைவன் உயிர்களை வெளிச்சத்தில் படைத்தான். மனிதனோ இருட்டில் படைக்கி றான். கவிஞர்.பிருந்தாசாரதியோ வெளிச்சத்தையும் இருட்டையும் தன் கவிதைகளில் படைக்கிறார்.
வெளியே எத்தனை
விளக்குகள் எரிந்தாலும்
உன்னை பிரகாசமாக்குவது
உனக்குள் எரியும் சுடர்தான்
இந்த ஒற்றைக் கவிதை போதும். இந்த புத்தகத்தின் வீரியத்தை எடுத்துச் சொல்வதற்கு. உன்னைச் சுற்றி வெளியே ஆயிரம் விளக்கு கள் எரியலாம். ஆனால் அவை யனைத்தும் அந்த இடத்தை பிரகாசமாக்குவதற்குத்தான் பயன்படுமே தவிர உன்னை பிரகாசமாக்க பயன்படாது. மாறாக நீ
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும் வார்த்தை களுக்கு சொந்தக்காரர் கவிஞர்.பிருந்தாசாரதி. திரைத்துறையில் இருந்து கொண்டே தீவிர இலக்கியத்திலும் தடம்பதிப்பவர். ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கூடம், பறவையின் நிழல், மீன்கள் உறங்கும் குளம், எண்ணும் எழுத்தும் போன்ற அவரது முந்தைய புத்தகங்களின் வரிசையில் தற்பொழுது "இருளும்ஒளியும்' என்ற புத்தகமும் நம் கவனம் ஈர்க்கிறது.
இந்த உலகத்தை இறைவன் படைப்பதற்கு முன்பாக வெளிச்சம் உண்டாகுக என்கிறான்.
வெளிச்சம் உண்டாகிறது. பின்புதான் இறைவன் மனிதனைப் படைக்கிறான். இதைத்தான் பைபிள், குர்ஆன் போன்ற புனித நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஆம். இறைவன் உயிர்களை வெளிச்சத்தில் படைத்தான். மனிதனோ இருட்டில் படைக்கி றான். கவிஞர்.பிருந்தாசாரதியோ வெளிச்சத்தையும் இருட்டையும் தன் கவிதைகளில் படைக்கிறார்.
வெளியே எத்தனை
விளக்குகள் எரிந்தாலும்
உன்னை பிரகாசமாக்குவது
உனக்குள் எரியும் சுடர்தான்
இந்த ஒற்றைக் கவிதை போதும். இந்த புத்தகத்தின் வீரியத்தை எடுத்துச் சொல்வதற்கு. உன்னைச் சுற்றி வெளியே ஆயிரம் விளக்கு கள் எரியலாம். ஆனால் அவை யனைத்தும் அந்த இடத்தை பிரகாசமாக்குவதற்குத்தான் பயன்படுமே தவிர உன்னை பிரகாசமாக்க பயன்படாது. மாறாக நீ பிரகாசிக்க வேண்டும் என்றால், உனக்குள் சுடர் ஏரிய வேண்டும் என்ற மிகப் பெரும் தத்துவத்தை மிகச் சாதரணமாக போகிற போக்கில் எடுத்துக் கூறுகிறார்.
இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு கவிதை,
நீ விளக்கென்றால்
இன்னொரு விளக்கை
ஏற்றி வை
இன்னொரு விளக்கை ஏற்றி வைத்தால்தான் அது விளக்காக இருந்ததற்கான அடையாளம். இன்னொரு மனிதனை வாழ வைத்தால்தான் நீ மனிதனாக வாழ்ந்ததற்கான அடையாளம். ஒட்டுமொத்த வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவத்தையும் இந்த ஒற்றைக் கவிதையில் கூறி விடுகிறார்.
ஒரு டார்ச் லைட்டைப் போல வெளியே வெளிச்சமாகவும், உள்ளே இருட்டாகவும் இங்கே பல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைதான்
விளக்கை மறைத்துவிடும்
வெளிச்சங்களும் உண்டு
வெளிச்சம் தந்து மறைந்து நிற்கும்
விளக்குகளும் உண்டு
என குறிப்பிடுகிறார்.
இந்தக் கவிதைக்குள் அவரவர் அனுபவங்களுக்கு ஏற்றாற் போல் பொருளை விளங்கிக் கொள்ளலாம். அதேபோல் சுடரின் பெருமைகளை பேசிக் கொண்டே வரும் கவிஞர், ஓரிடத்தில் சுடரையும் விசாரணைக்கு உட்படுத்துகிறார். ஆம் !
தூண்டி விடும்
தூண்டுகோலை
சுடுவதென்ன நியாயம் சுடரே
என்று சுடரைப் பார்த்து கேட்கும்பொழுது, திரிகளுக்காகவும் ஏங்கும் அவரது மெல்லிய மனசு வாசகனை "அடடே'போட வைக்கிறது. ஏற்றி விட்ட ஏணியையே காலால் உதைக்கி றாயே என்று கிராமத்தில் சொல்வார்களே, அதுபோல தூண்டிவிடும் தூண்டுகோலையே சுடுகிறாயே இது என்ன நியாயம்? நீயும் மனிதர்களைபோல மாறிவிட்டாயோ என்று கேள்வி எழுப்புவதை போலவே எனக்கு தோன்றியது.
விளக்கில் படி
விளக்கைப் படி
விளக்காக வேண்டும் நீ
நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டு நாம் அன்றாடம் படிக்க வேண்டிய கவிதை மட்டுமல்ல. எதிர்காலத் தலைமுறைகளுக்கும் கற்பிக்க வேண்டிய கவிதையாகவே இது அமைந்திருக்கிறது.
வெளிச்சத்தை பல்வேறு விதமாக பதிவுசெய்திருக்கும் கவிஞர், இருளை பதிவு செய்திருக்கும் விதம் இன்னும் கூடுதல் அழகு. விழிப் புருவங்களை உயர்த்தி நாம் சிந்திக்கக்கூடிய அளவிற்கு இருளைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் கவிஞர் பதிவு செய்கிறார்.
பகல் வேஷம்
பல போடலாம்
இருட்டில்
வேஷத்தை கலைப்பதை தவிர
வேறு வழியில்லை
வெளிச்சத்தில் வேண்டுமானால்
நீ போலியான மனிதனாக வேஷம் போட்டுத் திரியலாம். ஆனால் இருட்டில் மட்டுமே, தாயின் கருவறை இருளில் இருந்ததை போல நீ அசலாக இருக்கமுடியும் என பதிவுசெய்திருக்கும் கவிஞரின் இந்தக் கவிதையை திரும்பத் திரும்ப படித்தேன். அவ்வளவு எளிதாக இந்தக் கவிதையை விட்டு என்னால் நகர முடியவில்லை.
இருளைப் பற்றிப் பேசினாலே
எதிர்மறையாகவே பேசும் படைப்புகளுக்கு மத்தியில் இருட்டை ஆராதனை செய்யும் கவிஞனாக பிருந்தாசாரதி
அவர்களைப் பார்க்கிறேன். ஆம்! தன்னிடம் நஞ்சு இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டும் தேளினை கருந்தேள் என்று திட்டுகிறோம். மாறாக நஞ்சுப் பல்லினை உள்ளே மறைத்து வைத்திருக்கும் பாம்பினை நல்லபாம்பு என்று பாராட்டுகிறோம்.
இதைத்தான் கவிஞர். பிருந்தாசாரதி, நீங்கள் நினைப் பது மாதிரி,
கற்பனை இருட்டைப் போல, அவ்வளவு பயங்கரமானது அல்ல நிஜ இருட்டு என்றும், ஒவ்வொரு அண்டமும் ஒரு கர்ப்பபை என்பதை உணர்த்துவதும்கூட இருள்தான் என்றும், பளபளவென பகட்டு காட்டுவது வேண்டுமானால் பகலாக இருக்கலாம், ஆனால் கம்மென்று இருந்துகொண்டு ஆண்டு அனுபவிப்பது எல்லாம் இருள்தான் என்றும் இருட்டை கொண்டாடித் தீர்க்கிறார்.
தத்துவச் சுடர் விடும் பல கவிதைகளை உள்ளடக்கியிருக்கும் இந்த நூலில் பல கவிதைகளை காட்சிப் படிமங்களாகவும் நம் மனத் திரையில் ஓட வைத்து விடுகிறார் கவிஞர்.பிருந்தாசாரதி
பாதி இருள் பாதி ஒளி விழ
திருவிழா பந்தலின் கீழ்
நின்றிருந்தாய்
முதன்முதலில் உன்னைப் பார்த்த போது.
அதன்பின் எந்த வெளிச்சமும்
அவ்வளவு அழகைத் தந்ததில்லை உனக்கு
பாதி இருள் வேண்டியிருக்கிறது
எல்லாமே சுடர் விட
இந்தக் கவிதையை படிக்கும் பொழுது, திரைப்படத்தில் ஒரு கதாநாயகி அறிமுக காட்சியை போல (ஹீரோயின் இன்ட்ரோ சீன்) திரும்ப திரும்ப என் மனதுக்குள் வந்து போகிறது. கவிஞர், இயக்குநராகவும் இருப்பதால் அவருக்கு அந்த உத்தி மிக அழகாக கைகூடியிருக்கிறது என நம்புகிறேன்.
இப்படி இந்தப் புத்தகம் முழுக்கமுழுக்க காட்சிப் படிமங்
களாலும், தத்துவ தரிசனங்
களாலும் நிரம்பி வழிவதே இந்தப் புத்தகத்தின் ஆகச் சிறந்த வெற்றியாக நான் கருதுகிறேன்.
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி' என்று சொல்வார்களே, அது போல இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கவிதைக்குள்ளும், அவ்வளவு செய்திகளையும், வாழ்வியல் தத்துவங்களையும் அடுக்கடுக் காக பதிவு செய்து கொண்டே போகிறார் பிருந்தாசாரதி.
இதில் உள்ள சிறந்த கவிதை களை மேற்கோள் காட்டி எழுதலாம் அல்லது பேசலாம் என்று பென்சிலால் அடிக் கோடிட்டுக் கொண்டே சென்றால், இறுதியாக இந்தப் புத்தகம் முழுக்க கோடுகளால் நிரம்பியிருப்பதை உங்களால் உணர முடியும்.
நூல் : இருளும் ஒளியும்
ஆசிரியர் : பிருந்தாசாரதி
விலை : 100 ரூ
வெளியீடு : படைப்புப் பதிப்பகம்
8 மதுரை வீரன் நகர்
கடலூர், தமிழ்நாடு.
பேச : 94893 75575