Advertisment

இலங்கைத் தமிழர் நலன் காக்கும் ஆலோசனைக் குழுவில் நமது நக்கீரன் பொறுப்பாசிரியர்

/idhalgal/eniya-utayam/our-nakkeeran-editor-chief-advisory-committee-welfare-sri-lankan-tamils

மிழக அரசு அமைத்திருக்கும் "இலங்கைத் தமிழர் நலன் காக்கும் ஆலோசனைக் குழு'வில், நமது நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின், உறுப்பி னராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் நக்கீரனின் பொறுப் புணர்வு மேலும் உயர்த் தப்பட்டிருக்கிறது. தமிழக சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த குழுவில் மூத்த பத்திரிகையாளர், என்ற வகையில் கோவி.லெனின் நியமனம் செய்யப்பட்டிருக் கிறார்.

Advertisment

திருவாரூரில் மாணவப் பருவத்திலேயே, அங்குள்ள இளைஞர்களோடு இணைந்து, ஈழத் தமிழர்களுக்கான போராட்டங்களில் உணர்வுப்பூர்வ மாகப் பங்கெடுத்தவர் கோவி.லெனின். அவரது இன, மொழி, திராவிட இயக்க உணர்வு ஆகியவற்றுக்கான பொருத்தமான பொறுப்பு தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.

Advertisment

ss

"அரிதரிது மானிடர் ஆதல் அரிது

மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது'

என்ற ஔவையார், இன்று இருந்திருந்தால், "சொந்தமாய் நாடொன்று வாய்த்தல் அரிது' என்ற

மிழக அரசு அமைத்திருக்கும் "இலங்கைத் தமிழர் நலன் காக்கும் ஆலோசனைக் குழு'வில், நமது நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின், உறுப்பி னராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் நக்கீரனின் பொறுப் புணர்வு மேலும் உயர்த் தப்பட்டிருக்கிறது. தமிழக சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த குழுவில் மூத்த பத்திரிகையாளர், என்ற வகையில் கோவி.லெனின் நியமனம் செய்யப்பட்டிருக் கிறார்.

Advertisment

திருவாரூரில் மாணவப் பருவத்திலேயே, அங்குள்ள இளைஞர்களோடு இணைந்து, ஈழத் தமிழர்களுக்கான போராட்டங்களில் உணர்வுப்பூர்வ மாகப் பங்கெடுத்தவர் கோவி.லெனின். அவரது இன, மொழி, திராவிட இயக்க உணர்வு ஆகியவற்றுக்கான பொருத்தமான பொறுப்பு தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.

Advertisment

ss

"அரிதரிது மானிடர் ஆதல் அரிது

மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது'

என்ற ஔவையார், இன்று இருந்திருந்தால், "சொந்தமாய் நாடொன்று வாய்த்தல் அரிது' என்ற வரியையும் சேர்த்தே பாடியிருப்பார். ஆம், அனைவருக்குமான இந்த பூமியில், தனக்கென ஒரு நிலம், உரிமையாகச் சொல்லிக்கொள்ள ஒரு நாடு இல்லா மல், வீடு இல்லாமல் நாடு விட்டு நாடு வாழும் நம் ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கை மிகவும் கொடிது.

சொந்த வீடு, நிலம் இல்லாத நிலையில் அவர்களுக்கு, வேலை உத்தரவாதம் கிடையாது. தஞ்சமடைந்த நாட்டில், அவர்களுக்கான எந்த சலுகைகளும் கிடைக்காது. அகதிகளை, தஞ்சமடைந்த நாட்டின் அரசாங்கம், சமூக விரோதி களைப்போல் கையாளும் கொடுமையும் உண்டு. அகதிகளாகக் கிளம்பும்போதே தங்கள் வசமுள்ள நகை, பணம் அனைத் தையுமே பயணத்துக்கான கூலியாகக் கொடுக்கும் நிலையும் அவர்களுக்கு ஏற்படுகிறது. எனவே, தஞ்சமடைந்த நாட்டில், அடுத்த வேளை உணவுக்கே என்ன செய்வதென்று தெரியாத சூழல்.

தமிழகத்தில் தஞ்சம் புகுந்த தமிழ் அகதி களின் நிலையும் ஏறத்தாழ இது போலத் தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அமைத்திருக்கும் இந்தக் குழு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்று நம்புவோம்.

இது குறித்து கோவி.லெனின் வெளியிட்டிருக்கும் நன்றிப் பதிவில்....

"தனது தந்தையும் தலைவருமான கலைஞர் சொன்ன அறிவுரைப்படி, பதவியைப் "பொறுப்பு' எனக் கருதுபவர் நமது முதல்வர். எனக்கு அவர் தந்திருப் பது, பொறுப்பல்ல, வேலை.

இதற்கு முன் பொறுப்பான வேலை களைத் தர முன் வந்திருக்கிறார். நான் ஏற்கத் தயங்கியிருக்கிறேன். மறுத்திருக்கிறேன். நிராகரித்திருக்கிறேன். "நான் எப்போதும் செய்து தருகிற வேலையை மட்டும் செய்திட்டு இருந்திடுறேன்' என்று தெரிவித்துவிடுவேன். அப்படியேதான் செய்தும் வந்தேன். அப்போது அவர் முதல்வரல்ல.

இப்போது அவர் மக்களின் பேராதர வுடன் மிகப் பெரிய பொறுப்பை சுமந் துள்ள நிலையில், எனது பழைய நிராகரிப்பு கள் புறக்கணிப்புகள் எதையும் தன் மனதில் கொள்ளாமல், என்னைத் தன் மனதில் சுமந்திருந்து, "உனக்கான இடம் இது, உனக்கேற்ற பணி இது' எனத் தீர்மானித்து, தமிழ்நாட்டில் உள்ள மறு வாழ்வு முகாம்களில் வாழும் "இலங்கைத் தமிழர் நலன் காக்கும் ஆலோசனைக் குழு' உறுப்பினராக நியமித்திருக்கிறார்.

குழுவில், மூத்த பத்திரிகையாளர் ஒருவர் இடம் பெற வேண்டும் என்கிறது விதிமுறை. என்னைவிட முதல்வருக்கு நன்கு அறிமுகமான- மூத்த-சிறந்த பத்திரிகையாளர்கள் பலர் உள்ள நிலையில், "இது நம் இன உணர்வு சார்ந்த வேலை. நீ அதைச் செய்' என்று அன்புக்கட்டளையிடுவது போல அமைந்திருக்கிறது முதல்வரின் இந்தத் தேர்வும் அறிவிப்பும்.

ss

உண்மையில், என்னதான் வேலை?

முதல்வர் அவர்கள் இந்தக் குழுவிற்கான பணியைத் தெளிவாக வரையறுத்திருக்கிறார். சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அவர் அறிவித்தபடி, தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான திட்டங்களை செயல்படுத்துவதே இந்தக் குழுவின் பணி.

முகாம்களில் வசிக்கும் 18 ஆயிரத்து 937 இலங்கைத் தமிழர் குடும்பங்களையும், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் 13 ஆயிரத்து 553 குடும்பங்களையும் பாதுகாத்து, மேம்படுத்தி, அவர்களுக்கான சட்டரீதியான உரிமைகளைப் பெற்றுத் தருவதுதான் குழுவின் செயல் திட்டம்.

1. இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் வசிப்பிடம்- குடிநீர்- சாலை- மின்வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்.

2. அவர்களுக்கான கல்வி-வேலைவாய்ப்பு- திறன் வளர்ப்பு-

அரசுத் திட்டங்கள் அடிப்படையிலான உதவிகள் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பினைப் பாலின பேதமின்றி உறுதி செய்தல்.

3. சட்டப்பூர்வ அங்கீகாரமின்றித் தாய்த் தமிழகத்தை நாடி வந்த இலங்கைத் தமிழர்களுக்கான நெருக்கடிகள், குடியுரிமைச் சிக்கல்கள், தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிப் போக விரும்புகிறவர்களுக்கான உதவிகள் உள்ளிட்ட சட்டரீதியான நீண்டகாலத் தீர்வுகளைக் கண்டறிந்து செயல்படுத்துதல்.

-இந்த மூன்று அம்சங்களையும் முதன்மையாகக் கொண்டு, அதற்கேற்ப சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் அறிவித்த திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தி, இலங்கையிலிருந்து தாய்த் தமிழ்நாட்டுக்கு வந்த தமிழர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டுவதே குழுவினர் மேற்கொள்ள வேண்டிய பணி.

இலங்கை "அகதிகள்' முகாம் என்று இருந்ததை, இலங்கைத் "தமிழர்கள் மறுவாழ்வு' முகாம் எனப் பெயர் மாற்றம் செய்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பெயரில் உருவாக்கிய மாற்றத்தை, செயலில் உருவாக்கும் வேலைக்கு என்னை(யும்) பணித்திருக்கிறார்.

என் கடன் பணி செய்து கிடப்பதே.'' என்று தெரிவித்திருக்கிறார்.

uday011121
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe