கனவுகள் என்ற பிறவிகள் - மாதவிக்குட்டி -தமிழில்: சுரா

/idhalgal/eniya-utayam/others-dreams-madhavikutty-tamil-sura

நான் இரவை விரும்புகிறேன். இரவில் தூங்குவதென்பது அதிக சவுகரியங்கள் கொண்ட ஒரு விஷயமாயிற்றே!

ஒவ்வொரு கனவும் ஒரு பிறவி. ஒரு பெண் குளத்தில் மூழ்குகிறாள். மூழ்கிக் குளித்து நீரிலிருந்து வெளியே வரும்போது அவளுடைய பெயரும் பிற நினைவுகளும் அங்கு வீசியெறியப்பட்டுவிடுகின்றன என்று நினைத்துக்கொள்ளுங்கள். நினைவுகள் நீரைக் கலங்கச் செய்கின்றன. பிறகு... அந்த கலங்கிய நீரில் மூழ்கும்போது, அந்த கலங்கிய நீரில், அந்த கலங்கிய நிலையின் ஸ்பரிசத்தில், நன்கு தெரிந்த ஏதோவொன்று இருக்கிறதென்ற விஷயம் குளித்துக்கொண்டிருப்பவளுக்குத் தோன்றலாம்.

கனவு என்ற பிறவியில் நன்கு தெரிந்த ஏதோவொன்று இருக்கிறதென்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஸ்பரிசம், உணர்ச்சியாக மாறலாம். உணர்ச்சி

நான் இரவை விரும்புகிறேன். இரவில் தூங்குவதென்பது அதிக சவுகரியங்கள் கொண்ட ஒரு விஷயமாயிற்றே!

ஒவ்வொரு கனவும் ஒரு பிறவி. ஒரு பெண் குளத்தில் மூழ்குகிறாள். மூழ்கிக் குளித்து நீரிலிருந்து வெளியே வரும்போது அவளுடைய பெயரும் பிற நினைவுகளும் அங்கு வீசியெறியப்பட்டுவிடுகின்றன என்று நினைத்துக்கொள்ளுங்கள். நினைவுகள் நீரைக் கலங்கச் செய்கின்றன. பிறகு... அந்த கலங்கிய நீரில் மூழ்கும்போது, அந்த கலங்கிய நீரில், அந்த கலங்கிய நிலையின் ஸ்பரிசத்தில், நன்கு தெரிந்த ஏதோவொன்று இருக்கிறதென்ற விஷயம் குளித்துக்கொண்டிருப்பவளுக்குத் தோன்றலாம்.

கனவு என்ற பிறவியில் நன்கு தெரிந்த ஏதோவொன்று இருக்கிறதென்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஸ்பரிசம், உணர்ச்சியாக மாறலாம். உணர்ச்சி, ஸ்பரிசமாக ஆகலாம். நன்கு தெரிந்தது எதுவென்று எனக்கு இதுவரை புரியவில்லை.

காதில் வைர தொங்கட்டான்கள் அணிந்த நீர்ப்பறவைகளை நான் காண்பதுண்டு. வயல்களின் அருகில் அவை மிடுக்காக நடந்துசெல்வதை நான் பார்த்திருக்கிறேன். கனவுப்பறவைகள்...

sst

"நாலப்பாடு இல்ல'த்தின் வடக்கு திசையிலிருக்கும் வயலின்வழியாக திருமண ஊர்வலங்கள் செல்வதைப் பார்த்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். மணப்பெண்ணின் நகைகள் வெயில் பட்டு நெருப்பு ஜுவாலைகளைப்போல பிரகாசிப்பதைப் பார்த்தவாறு நான் எவ்வளவோ முறை வாசலில் நின்றிருந்திருக்கிறேன்!

ஆசாரியின் நிலத்தின்வழியாக ரோஸ், பச்சை நிறங்களிலிருக்கும் குடைகளை வைத்துக்கொண்டு நடந்துசெல்லும் கிறிஸ்துவர்களை நான் பார்த்திருக்கிறேன். குடைகளின் ஓரங்கள் காற்றில் கிலுகிலுப்பதை நான் எவ்வளவோ முறை கேட்டிருக்கிறேன்!

என் படுக்கையில் தூங்கிய பாட்டியின் சதையும் எலும்புச்சோறும், கனவின் சதையாகவும் எலும்புச் சோறாகவும் மாறின. ஒருநாள் நான் மாமாவைக் கனவு கண்டேன். அவர் ஒரு பாலத்தின் சரியான மத்தியில் சிரித்துக்கொண்டு நின்றிருந்தார். அந்த அளவுக்கு நல்ல உடல்நிலையுடன் நான் அவரை வேறு எந்தச் சமயத்திலும் பார்த்ததே இல்லை. அவர் தாடியை சவரம் செய்யவில்லை. வெளுத்த தாடி, அவருக்கு தெய்வத்தின் வடிவத்தைக் கொடுத்தது.

""மாமா... நல்லா இருக்கீங்க. இல்லியா?''

வார்த்தைகளை உச்சரிக்காமலே அவர் தான் நலமாக இருப்பதாக எனக்குப் புரியவைத்தார். கனவின் மொழிக்கு ஓசையில்லை.

அவர் தன்னுடைய தாயைக் காதலித்தார் என்பதுதான் மாமாவின் ரகசியம்...

அதை அதிர்ஷ்டமற்ற அன்னையிடமிருந்து ஒரு வாழும் காலம் முழுவதும் மறைத்து வைத்தார். ""இப்போ அம்மாவோடதான் இருக்கீங்களா?'' நான் கேட்டேன்.

எந்தச் சமயத்திலும் இல்லை... இறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உலகம் இருக்கிறது. தான் மட்டுமே இருக்கக்கூடிய உலகம்... அதனால் தன்னைத் தானே தெரிந்துகொள்வதற்கு சூழல் கிடைக்கிறது. ஒரு கப்பிற்கு ஒரு சாஸர் என்பதைப்போல... இல்லையா?

மாமா சிரித்தார். ""நீ கொஞ்சமும் மாறவில்லை, ஆமீ...'' அவர் மனதிற்குள் கூறினார்.

தன்னைத் தானே தெரிந்துகொள்வது! அந்த தெரிந்துகொள்ளலின் இறுதிக்கட்டத்தில் என்ன நடக்கிறது?

நிலை நிற்பதுதான் சம்பவம்.

ஆனால்... அடைவது?

சுய புரிதல்...

சுய புரிதல்... அர்த்தங்கள் இதழ்களாக விரியும் பொன்தாமரை... பதினைந்து வயதில் நான் என் காலில் சூடான வெந்நீரைத் தடவி, மெல்லிய ரோமங்களைப் பிடுங்கி எடுத்தேன். மஞ்சள் தேய்த்து, தோலுக்கு பிரகாசம் உண்டாக்கினேன். நான் என்ற பொருள் வெளியே தெரியக்கூடியது என்பதையும், கிள்ளினால் வேதனை உண்டாகும் என்பதையும் நம்பினேன்.

இன்று... நான் இரவை விரும்புகிறேன். ஒவ்வொரு கனவிற்கும் ஒரு பிறவியின் ஆயுட்காலம் இருக்கிறதென்ற விஷயம் எனக்குத் தெரியும். எனினும், மண்ணுக்குக் கீழே இருக்கும் வித்தின் பொறுமையற்ற தன்மையை நான் அனுபவிக்கிறேன்.

பழக்கமற்ற சத்திரங்களில் தூக்கத்திலிருந்து எழுவதைப்போல, பரபரப்புடன், ஆர்வத்துடன், பெருமூச்சுடன், நான் என் அன்பிற்குரியர்களின் வாழ்வுகளில் தூக்கத்திலிருந்து கண் விழிக்கிறேன்.

uday010819
இதையும் படியுங்கள்
Subscribe