தமிழ்-மலையாளச் சிறுகதைகளில் ஒடுக்கப்பட்டோர் நிலை! -காவ்யா சண்முகசுந்தரம்

/idhalgal/eniya-utayam/oppressed-tamil-malayalam-short-stories

திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழும் மலையாளமும் மிக நெருங்கிய இணைமொழிகள். பண்பாட்டு நிலையில் இந்த இரு மொழிகளும் பொதுவான அடிப்படைக் கூறுகளைக் கொண்டிருப்பதோடு, ‘பச்ச மலையாளம்’ பழந்தமிழோடு நெருக்கமானது. மலையாளம் மூலத்திராவிட மொழியின் ஒரு பகுதி அல்லது தமிழின் கிளை மொழி என்றாலும் அதனுடைய இலக்கிய வளர்ச்சி பேரளவினது. மலையாளத்தில் இருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து மலையாளத்துக்கும் மொழிபெயர்க்கும் பணிகள் தொடர்வன. பதிற்றுப்பத்து புலவர்களும், இளங்கோவும், குலசேகர ஆழ்வாரும் சேரநாட்டுத் தமிழர்களே. நகுலனும் நீல.பத்மனா பனும் ஆ.மாதவனும் தமிழ் மலையாளிகளே, தமிழ்க் கண்ணகியை மலையாளப் பகவதியாக்கிப் பரவசப்பட்டனர்.

மலையாள ராமசந்திரனைத் தமிழர் தெய்வமாக்கித் திருவிழா செய்துவருகின்றனர். இன்றைய மலையாளிகள் ஆதித்தமிழர்களே.

ஒடுக்குதல் என்பது ஆணவம்; ஒதுக்குதல் என்பது அவமானம். ஒடுக்குதலும் ஒதுங்குதலும் அடிமைத்தனம். அதிகார ஆதிக்க மனநிலை கொண்ட எந்த இன, மத, சாதிக் குழுவும் தம் ஆயுதங்களாகக் கையில் எடுத்துக் கொள்கின்றன. இதனை நாம் காலங்கள்தோறும் இடங்கள்தோறும் கண்டுகொள்ள முடியும். ஒடுக்குவோர் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப வேறுபட்டாலும் ஒடுக்கப்படுவோர், பெண்களாகவும் தலித்துகளாகவும் திருநங்கைகளாகவும் திருநம்பிகளாகவும் ஓரினப் புணர்ச்சியாளர்களாகவும் விளிம்புநிலை மக்களாகவும் உள்ளனர்.

ஒடுக்குமுறைகள் பன்முகம் கொண்டதாக இருக்கும் ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள், பாலின அடிப்படையில் அரவாணிகள், சொற்பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்னும் ஆதிக்க மனநிலையில் குழந்தைகள், பிறருக்கு உரிமையாக இருக்கவேண்டும் என்னும் கட்டாயத்தின் படி அடிமைகள், சாதியம் சார்ந்து தூய்மை ஷ் தீட்டு என்னும் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் முதலானோர் என்பார் முனைவர் வெ.மதியரசன். (தமிழகத்தின் ஒடுக்கப்பட்டோர் மீதான வன்முறைகளும் இலக்கியப் பதிவுகளும், ப.26)

kaviyasanmugamஒடுக்கப்படுவோருள் விளிம்புநிலையினரும் அடங்குவர். மையம் (Centre) விளிம்பு (Margin) எனும் கோட்பாடு சமூகவியல் ஆய்வில் முக்கிய இடம்பெறுவது. மையம் எப்போதும் மையத்திலேயே இருப்பதில்லை. விளிம்பும் எப்போதும் விளிம்பிலேயே ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. மையமும் விளிம்பும் ஒன்றையொன்று நகர்த்தவும் தகர்க்கவும் முனைந்து கொண்டிருப்பதுதான் சமூக இயக்கவியல்.

பண்பாடு, நாகரிகம் எனச் சமூக ஒழுங்கினை வரையறை செய்பவர் மையத்தில் இருப்போர். மையத்தில் இருப்போரால் பொருளாதாரப் பகுப்பு பிரித்து வைக்கப்படுகிறது. பொருளாதாரத் தகுதியினின்றே சமூகப் படிநிலை தீர்மானித்துக் கொள்ளப்படுகிறது. உடல் உழைப்பினை நம்பியே வாழ்க்கை நடத்துபவர்கள் விளிம்பு நிலைக்குரியவராக்கப்பட்டுள்ளனர். வாழ்வியலைத் தாமே நகர்த்திக்கொண்டாக வேண்டும் என்ற கட்டாய பிழைப்பிற்கென ஆக்கப்பட்டவர்கள் விளிம்புநிலை மக்கள். சமூகப் படிநிலை அமைப்பில் கடைநிலையில் உள்ள மக்களை விளிம்புநிலை மக்கள் (Marginalized People) என்று கூறுகின்றனர். மையம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்கீழ் உள்ள மற்றவர்களைச் (Others) சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் ஒடுக்குகிறது; ஓரம்கட்டுகிறது; விளிம்புநிலைக்குத் தள்ளுகிறது. தன் இருப்பைப் பெரிதுபடுத்துவதோடு மற்றவற்றை இருட்டடிப்பு செய்கின்றது.

வைப்பாட்டி, வரைவின் மகளிர், பதிவிலார், பரத்தை, கணிகையர், வேசையர், காமக்கிழத்தி, விலைமகள், கொண்டிமகளிர், தேவடியார், தாசியர் என்று விளிம்பு நிலைப் பெண்கள் காலந்தோறும் குறிப்பிடப்படுவர். இன்று விளிம்புநிலை மக்களாக ஏழைகள், பொருளற்ற விதவைகள், திருநங்கைகள், பைத்தியக் காரர்கள், பிச்சைக்காரர்கள், சிறைக் கைதிகள், தலித்துகள் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர்.

பெண் என்பவள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறாள் என்பார் பிரெஞ்சு பெண்ணியவாதி சைமன்டி - பௌவாயர். இது உலகப் பெண்களுக்கெல்லாம் பொருந்தும். நம் இந்தியப் பெண்கள்,

பெண் என்பவள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறாள் என்பார் பிரெஞ்சு பெண்ணியவாதி சைமன்டி - பௌவாயர். இது உலகப் பெண்களுக்கெல்லாம் பொருந்தும். நம் இந்தியப் பெண்கள், ஆணாதிக்க சமுதாயத்தின் கருத்தாக்கத் தளத்தில் உருவாகியவர்கள். ஆண்களால் இல்லத்தில் முடக்கப்பட்டவர்கள். அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கவும் செயல்படவும் தடை செய்யப்பட்டவர்கள். சநாதன மரபுகளில் கட்டுண்டும் பிள்ளைப் பேற்றில் உடல் நலிந்தும் பிள்ளை வளர்த்தும் சமையலே கதியெனக் கிடந்தும் கணவன் இறப்புக்குப் பின் சதியில் செத்தும் கைம்மையில் சித்ரவதைப்பட்டும் நடைபிணமாய் நலிந்தனர். தாசிப் பெண்களும் உடலை விற்று, சீரழிந்து சிதைந்தனர். மனத்தால் நொந்து மீட்சிக்கு வழியின்றி. ஒட்டுமொத்த பெண் சமூகமும் கல்வியின்றி அறியாமையிருளில் மூழ்கி, ஆதிக்கப் பிடியில் ஆழச் சிக்குண்டு குருடராய், செவிடராய், ஊமையராய் முடங்கினர்.

ஒடுக்கப்பட்டோர் பற்றிய சிறுகதைகள் தமிழில் மிகுதியும் உண்டு. கீழ்வெண்மணி படுகொலைகள் பற்றி பிரபு செல்வராஜின் ‘வேகாத பிணங்கள், நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் நடந்த சமய மாற்றம் தொடர்பான மோதல் குறித்து வண்ணநிலவனின் ‘சமத்துவம் சகோதரத்துவம், தாமிரபரணி படுகொலைகள் நிகழ்வை ஒட்டி சோ.தருமனின் ‘நீர்ப்பழி’ ஆகியன சிறுகதைகளாகப் பதிவாகியுள்ளன.

தாமிரபரணி படுகொலைகள் தொடர்பாக அரசு நியமித்த மோகன் குழு, விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசிடம் பரிந்துரை செய்தது. காவலர்களின் மனித உரிமை மீறலால் 17 தொழிலாளர்கள் இறந்தது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையில் ஒருபக்கச் சார்பு நிலவியது. அது காவல்துறையினரின் செயல்பாட்டை நியாயப்படுத்தியது. இதற்கு மருத்துவர்களும் ஆதரவாக இருந்துள்ளனர். அறிக்கை அளித்த மாவட்ட ஆட்சியரும் மருத்துவர்களில் ஒருவரும் சில காலத்தில் பணி ஓய்வு பெற்றபின் உளவியல் சிக்கலுக்கு ஆட்பட்டு, ‘நிகழாதது நிகழ்வது (Hallucination) போன்ற மனநோய்க்கு உள்ளாயினர் என்று ‘நீர்ப்பழி’ சிறுகதை கனவுப் போக்கில் இயலுகின்றது.

kaviyasanmugam

ஒடுக்கப்பட்டோர் மீதான வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணிகள் பல. இந்து சமயத்தில் நிலவும் தீண்டாமையும் நிலவுடைமைச் சமூகமும், சாதிய மேலாண்மை கொண்டோரின் கட்டமைப்பும் அரசியலும், காவல்துறையினரின் நேர்மையற்ற போக்குகள், நிர்வாகம், நீதித்துறை, ஊடகம் ஆகியவற்றின் நடுநிலையின்மை போன்றவை.

ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சியர் கனகவேல், தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் மேல் நான்கு சக்கர வாகனத்தில் செல்கிறார். அப்பொழுது ஆற்றுத் தண்ணீர் பறந்து வந்து இவரது வாகனத் தையும் ஆடையையும் நனைப்பதாக உணர்கிறார். வீட்டில் தாகத்திற்குத் தண்ணீர் அருந்தும்பொழுது குவளையில் தண்ணீர் ஒட்டிக்கொண்டு வெளியே வராதது போன்ற நினைவுக்கு ஆட்படுகிறார். குளியலறையில் இருந்து வரும் தண்ணீரைக் கண்டு பாம்பு தொங்குவதுபோல் நினைந்து மிரள்கிறார்.

இறுதியாகத் தண்ணீரைக் கண்டாலே பயம் தொற்றிக் கொள்கிறது. மன அழுத்தம் அதிகமாகி மருத்துவரை நாடுகிறார். மருத்துவரும் இதே நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக ஆட்சியரிடம் தெரிவிக்கிறார். பிறகு தான் ஆட்சியருக்குப் புரிகிறது, மருத்துவரும் போலி அறிக்கை கொடுத்தவர் என்று. இருவரும் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். அதிகார மையத் தில் இருப்போருக்குத் தண்டனை கிடைப்பது அரிது. தோட்டத்தொழிலாளர்கள் 17 பேர் நீச்சல் தெரியாத காரணத்தால் இறந்தனர் என்று அறிக்கை கொடுத்த ஆட்சியர் “தாமிரவருணித் தாயின் மீது வீண்பழி சுமத்திய வர் தண்ணீர் விக்கி காலமானார் என்று ‘நீர்ப்பழி’ கதையை கற்பனை நயத்துடன் முடிக்கிறார் சோ. தருமன்.

அகதிச் சிறுவன் ஒருவன் நள்ளிரவில் ஒரு நகரத் திற்கு தொடர்வண்டி மூலம் வந்திறங்குகிறான். ஒரு பழைய சாக்குப் பையும், தொடைவரை தொங்கும் பெரிய சட்டைக்குள் மறையும் நிக்கரும், இலங்கையின் தமிழ் ஈழத்தில் எங்கோ இருக்கும் வீடு -தாய் -சிறிய தம்பியின் நினைவுகளும் மட்டுமே அவனது உடைமை கள். காலை முதல் மாலை வரை அம்மி கொத்தத் தயாராக உள்ளவன் சின்னசிவம். கடைக்காரனால் காலால் தூக்கி எறியப்பட்டு நடுச்சாலையில் வந்து விழும் சின்ன சிவம் அச்சமும் பசியும் வாழ்க்கையும் நினைவும் துரத்த கதை முழுக்க ஓடிக் கொண்டிருக்கிறான், ஜோசப் மரியனின் ‘"வாழ்க்கையைக் கொற்றுவதற்கு கல்'’ என்ற சிறுகதையில்.

தலித் அரசியலுக்குத் தலித்துகளே தலைமை தாங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு என்ன நியாயமோ அதே நியாயமே தலித் இலக்கியத்தைத் தலித்துகளே படைக்க வேண்டும் என்பதிலும் இருக்கிறது. தலித் இலக்கியம் முதலில் இன்றைக்குத் திரண்டு வரும் தலித் அரசியலுக்கான கருத்தாயுதமாகச் செயல்பட வேண்டிய வரலாற்றுச் சுமையைக் கொண்டிருக்கிறது. இன்றைய தலித் இலக்கியம் சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் உள்ள ஆதிக்கக் கருத்தாக்கங்களைச் சிதைத்து அழிக்க முயல்கிறது. அழிவு இல்லாமல் ஆக்கமில்லை. எனவே புனித உடைப்புகளை அதன் மூலம் வெளிப்படும் அதிர்ச்சிகளை உற்பத்தி செய்வதை தனது எழுத்துப் பாணியாகக் கொள்ள முயல்கிறது என்பார் பஞ்சு.

தமிழ்ச் சூழலில், தலித் சிந்தனைகள் குறித்து முறையாக ஆய்வு செய்தவர்களில் பேரா. ராஜ்கௌதமன் குறிப்பிடத்தக்கவர். ‘தலித் விடுதலை என்பது இந்திய சமூகத் தின்- ஒட்டுமொத்த மனித குலத்தின் விடுதலை. ஒடுக்கப் பட்ட தலித் மக்களின் ஏழ்மை, வறுமை, வாழ்வின் அலங்கோலங்கள், அதனாலான அவலங்கள், சோகங்கள், எண்ணக் குமுறல்கள், வாழ்க்கை நெருக்கடிகள், இவற்றுக்கு நடுவில் முகிழ்க்கும் அன்பு, நம்பிக்கை, சாதியத்தின் செயல்பாடு, தலித்துகள் மீதான சாதிய மேலாதிக்கம், தலித் மக்களின் ஆவேசம், ஒடுக்குமுறைக்கு எதிரான திரட்சி, விழிப்புணர்வு, சமுதாய விடுதலைக்கான அறைகூவல், தலித் விடுதலைக்கான அறிவிப்பு ஆகியனவற்றைத் தலித் சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன.

விழி.பா.இதயவேந்தனின் ‘நந்தனார் தெரு’ (1991) குறிப்பிடத்தக்கது. மின்விளக்கு வசதி, கழிவறை, சாலை என்ற வசதியில்லாத நெருக்கடியான சூழலில் நந்தனார் தெரு மக்கள், அதிகாரிகளிடமும் அரசியல் வாதிகளிடமும் எவ்வளவு கெஞ்சியும் எதுவும் நடக்க வில்லை. ஒருநாள் நகராட்சி ஆணையரின் அலுவலக வாசற்படியருகே மலம் கழிக்கப்பட்டிருந்தது. தலித் அழகியல் என்பது முறைமீறல்களே என்பதை இக்கதை கூறும்.

சிவகாமியின் ‘நாளும் தொடரும்,’ அபிமானியின் ‘நோக்காடு,’ பாமாவின் ‘கிசும்புக்காரன்,’ உஞ்சை ராகனின் ‘எகிறு,’ அழகியபெரியவனின் ‘தீட்டு,’ ‘குறி,’ ‘தரைகாடு,’ விழி.பா.இதயவேந்தனின் ‘மலரினும் மெல்லிது,’ ‘குரல்,’ ‘இனி அவன்,’ ‘பரிவு,’ ‘ராசாத்தி காத்திருந் தாள்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இருபதாம் நூற்றாண்டுக்குப்பின் பெண்கள் மறுமலர்ச்சி பெற்றனர். படித்தனர், பணியாற்றினர், உரிமைக்குப் போராடி, விடுதலைப் பறவைகளாய் விண்ணில் வலம் வருகின்றனர். தமிழிலும் பெண்கள் கதைகளை எழுத முன்வந்தனர்.

kaviyasanmugam

கிருபை சத்தியநாதன், வை.மு.கோதைநாயகி, மூவலூர் ராமாமிர்தம், கிரிஜாதேவி, குமுதினி, குகப்ரியை, வசுமதி ராமசாமி, அநுத்தம்மா, சூடாமணி, கோமகள், கே.ஜெயலட்சுமி, எஸ் ரங்கநாயகி போன் றோர் மரபார்ந்த மற்றும் மாறுபட்ட பெண்களைப் பற்றி எழுதினர். ராஜம் கிருஷ்ணன், ஜோதிர்லதா கிரிஜா போன்றோர் பெண் களைத் தன்மானம் கொண்ட வர்களாக, சமூகக் கடமை களில் பங்கேற்பவர்களாக, தொழில் முனைபவர்களாக, சமூக சேவகிகளாக, பெண் சிந்தனையாளர்களாக, போராளிகளாக விளங்கு வதை எழுதினர்.

பெண் எழுத்து, பெண் எழுதும் எழுத்தாகவும், பெண் தன்னைப் பெண்ணாக உணர்ந்துகொள்வதுடன் பெண்ணாக அறிந்துகொண்டு, தம் பிரச்சனைகளைத் தம் சூழலில் எடுத்துரைப்பன. ராஜம் கிருஷ்ணனின் ‘தனிமை, சூடாமணியின் ‘குப்பம்மாவின் பெண்கள், ஜோதிர் லதா கிரிஜாவின் ‘அம்மாவின் அந்தரங்கம், அம்பையின் ‘கறுப்புக் குதிரைச் சதுக்கம், காவேரியின் ‘மரியா, திலகவதியின் ‘வதம், எம்.ஏ.சுசீலாவின் ‘விட்டு விடுதலையாகி,’ ஆண்டாள் பிரியதர்ஷினியின் ‘சரஸ்வதி தாரை வார்த்த முப்பத்து மூன்று வருஷங் கள், அமரந்தாவின் ‘பாலகட்டு, அநாமிகாவின் ‘இயக்கம், அ.வெண்ணிலாவின் ‘பட்டாம்பூச்சிகளைத் தொலைத்த ஒரு பொழுதில், வைகைச் செல்வியின் ‘மனிதர்கள்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.

சமூக மரபு பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும் சக ஆண் அதிகாரியின் அடக்குமுறைக்கு எதிராகவும் பிடிக்காத பெயருக்கும், சந்தேகக் கண்கொண்டு கணவனுக்கும், அடுத்தடுத்து பெண்குழந்தைகளைக் கொல்லும் தாய்க்கும் எதிராகவும் போராடும் பெண்களைப் பற்றிய கதைகள்.

திருமணச் சடங்கில்லாமல் தோழமை உணர்வுடன் வாழ விரும்பும் பெண், கணவனின் அடக்குமுறைக்கு எதிராக லெஸ்பியன் உறவில் திளைக்கும் பெண், கணவனின் அடாவடிக்கு எதிராக தாலிவிற்றுப் பிழைக்கும் பெண், ஆணாதிக்க குடும்பக் காதலனுக்கு எதிராக அவனையே புறந்தள்ளும் பெண், அம்மாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் பெண் எனப் பல்வேறு விடுதலைப் பெண்களின் கதைகள் இவற்றில் அடங்கியுள்ளன.

இன்றைய தமிழ் எழுத்தாளர்களைப் போலவே மலையாள எழுத்தாளர்களும் மிகச் சுலபமாகத் தம் முந்தையர்களைக் கடந்து போகிறார்கள். திரும்பிப் பார்க்காமலேயே எம்.டி.வாசுதேவன் நாயர் போன் றோர், எஸ்.கே. பொற்றேகாட் மற்றும் பஷீர் முதலான முந்தையோர்களை ஆராதித்தாலும் இவர்களைப் பின்பற்றவில்லை என்ற தெளிவில்தான் மலையாள இலக்கியம் புதிய புதிய இலக்கியப் போக்குகளைப் படைத்துக் கொண்டது. கமலாதாஸ் என்னும் முக்கிய ஆளுமை, இளைய தலைமுறையின் தென் அமெரிக்க இலக்கியத்தின்பாலான மோகம் குறித்துத் திருப்தி தெரிவிக்கவில்லை. பஷீர் இளைய தலைமுறையினரைக் குளிர்ந்த வார்த்தைகளால் வரவேற்கவில்லை. தகழியே தன் சந்ததிகளை ஆரவாரமாக வரவேற்றார். இந்தச் சூழ்நிலையில்தான் மலையாள இலக்கியத்தை முன் நகர்த்திய மிகவும் வித்தியாசமான பார்வை கோபங்களும் நவீன எழுத்துப் போக்கும் அடங்க மறுக்கும் சுபாவங்களும் கொண்ட புதிய இளம் எழுத்தாளர்களும் உருவாகி வருகின்றார்கள்.

ஆர். உண்ணியின் ‘ஆனந்த மார்க்கம்’ கதையில் இருக்காது, இருக்கலாகாது, இருக்கக்கூடாது என்று ஆண்களால் கற்பித்து மறைக்கப்பட்ட பெண்களுக்கான வெளியைத் திறந்து காட்டுகிற கதை. ஆண்கள் அஸ்தமனம் ஆனபிறகே, பெண்களின் சிறகுகள் விரிகின்றன. அவர்கள் கண்களுக்கு அவர்கள் மறந்து போன வானம் தெரிகிறது. அடையாளம் தெரிகிறது. அதோடு சேர்ந்து தங்கள் அடையாளமும் புலப்படத் தொடங்குகிறது. மாதவிலக்கம் நின்றபிறகு மனு விலக்கம் செய்யப்பட்ட பெண்கள், தங்கள் இதய மென்னும் ரகசியக் கிடங்கைத் திறந்தால் என்னவெல்லாம் வெளிவரும் என்கிற யதார்த்தத்தில் வெளிப்படும் கதை இது என்பார் பிரபஞ்சன் (தென்னிந்திய சிறுகதைகள், கே.வி.ஷைலஜா, ப.8)

திருட்டுத் தொழில் மக்களால் வெறுக்கக்கூடியதாக இருந்தாலும் திருடுவதற்கான காரணங்களை அறியும்போது சிலர் இதனைச் செய்வது சரியாகப் படலாம். திருட்டு விஷயங்களைப் புதுமைப்பித்தனைப் போலவே (சங்குத்தேவனின் தர்மம், தனி ஒருவனுக்கு) பஷீரும் திருடர்களுக்காக இரக்கப் படுகிறார்.

எட்டுக்காலி மம்மது கோழி திருடுதல், தேங்காய் திருடுதல் என்பவற்றைச் செய்கிறான். இறுதியில் யானையைத் திருடப்போகும் போது இருட்டில் மாற்றித் திருடியதால் நடுக்கமும் பயமும் ஏமாற்றமும் அடை வதை அங்கதத்தோடு காட்டுகிறது. இன்னொரு கதையில் பிக்பாக்கெட் அடித்தவனை வெறுக்கவோ விரும்பவோ நம்மால் முடியவில்லை. ஆனால் இக்கட்டான நேரத்தில் அவனே காப்பாற்றவும் செய்கிறான். திருடன் எல்லோருடைய பர்சையும் திருப்பியும் தரவில்லை, திருட்டுத் தொழிலை விடவும் இல்லை. எனினும் கதாநாயகன் அவனுக்கு ‘தயை’ என்று பெயரிடுகிறான். அவனோ ‘கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும்’ என்கிறான். திருடனும் கடவுளை நம்புவது நல்ல அங்கதம் என்பார் முனைவர் ச.இராசேந்திரன் (புதுமைப்பித்தன் வைக்கம் முகமது பஷீர் - ஓர் ஒப்பாய்வு, ப.72)

மலையாளப் பெண்ணிய எழுத்தாளர்கள் தம் பெண்ணிய எழுத்துக்களில் அசாத்திய தன்மையை நிலைநிறுத்துபவர் கிரேஸி. ‘"இப்போது பனிக்காலம்' எனும் தொகுப்பு குறிப்பிடத்தக்கது. இவரது வேட்கை பெண்ணிய எழுத்துக்களின் எல்லையை விரிவடையச் செய்திருக்கிறது. கிரேஸி தனக்குள்ளேயே இருந்து கொண்டு தன்னைப் பார்த்துக் கொள்ளுதல், தனக்கு வெளியே நின்று தன்னையும் தனக்கு அண்மையில் உள்ள சுற்றுவட்டத்தையும் பார்த்தல், உள்ளும் புறமு மாக நின்று ஒரு போராளியாக நின்று உலகை வலம்வர முயலுதல் ஆகிய மூன்று மனப்படிமங்கள் உண்டாகின்றன.

ஒரு பெண் தன் அம்மா, வேலைக்காரி, தோழி சியாமளா ஆகிய அனைவரையும் விட்டுவிட்டுத் தன்வீட்டு மாடி அறையிலுள்ள தன் நூலகப் புத்தகங்களோடு வாழத் தொடங்குகிறாள். எதிர்வீட்டில் குடியிருக்க வந்த தம்பதியரைக் கண்டு மனம் மகிழ்ந்து அந்தப் பக்கத்து ஜன்னலத் திறந்து வைத்தவள், அந்த வீட்டு கணவன் வேலைக் காரியோடு விளையாடுவதனை அறிந்து அக்கதவை மூடிவிடுகிறாள். புத்தக அடுக்கிலிருந்து வெளியே வரும் தோழர்களோடு மகிழ்ந்திருப்பாள். தாயின் மரணத்துக்கும் கூடக் கலங்கவில்லை. தன் தடித்த புத்தகத்திற்குள் ஒளிந்து கொள்கிறாள். இதுவே ‘எனக் கென்று ஓரிடம்’ கதை.

வைக்கம் முகமது பக்ஷீ ரின் ‘உலகப் புகழ்பெற்ற மூக்கு,’ 16 சிறுகதைகளின் தொகுப்பு. சூழ்நிலைகள் ஒரு பெண்ணை எவ்வாறு விபச்சார வாழ்க்கைக்குள் தள்ளுகின்றன என்பதனை ‘மூடர்களின் சொர்க்கம்’ எனும் கதையில் வெளிப்படுத்துகிறார்.

22 மலையாளச் சிறுகதையின் தொகுப்பு ‘யௌவனத் தின் கடல்.’ இதில் ஆள் துணையற்ற பெண்ணின் தனிமை அச்சம், அகதிச் சிறுவனின் அவல வாழ்க்கை, முதுமையின் எதிர்பார்ப்புகள் போன்றவற்றை இக்கதைகள் விளக்கும்.

மலையாள இலக்கிய மரபு 14-ஆம் நூற்றாண்டில் தான் தொடங்கி எழுத்தச்சனின் இராமாயணம் தான் முதல் மலையாள இலக்கியமாக உள்ளது. இதன் சமகால இலக்கிய மரபு 20ஆம் நூற்றாண் டின் தொடக்கத்தில்தான் சக்தி பெற்றது. நாராயண குருவின் ஆன்மீக இயக்கமும், அய்யங்காளியின் எழுச்சியும் இலக்கியத்தையும் பாதித்தது. வடகேரளம், கோழிக்கோடு சாமூதிரிகளின் ஆட்சியிலும், மத்திய கேரளம் சேரமன்னர்களின் கொச்சி அரச குடும்பத்தார் ஆட்சியிலும் தென்பகுதி வேணாட்டு கொல்லம் மற்றும் திருவிதாங்கூர் ஆட்சியிலும் குறுநில மன்னர்களின் ஆட்சியிலும் எனப் பிரிந்து கிடந்த கேரளத்தைக் கிழக்கிந்திய கம்பெனி எளிதாகக் கைப்பற்றியது. ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்டம் கேரளத்தில் வலுவாக இல்லை. மாப்பிள்ளைக் கலகம் மதக்கலவரமாக நசுக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் மனோரமா, மாத்ருபூமி, வித்யாபோதினி எனும் மலையாள இதழ்கள் சிறுகதை வளர்ச்சிக்கு உதவின. பஷீர் போன்றவர்கள் சுதந்திரப் படைப்பாளிகள். பஷீரின் மதிலுகள் முதலான 100-க்கு மேற்பட்ட கதைகளை எழுதினார். காந்திய அரசியலால் கவரப்பட்டாலும் மதமூட நம்பிக்கைகளை எதிர்த்தார்.

பஷீர் ‘பிரேமா பஜனம்’ கதையில் பரத்தமையை இரக்கத்தோடு பதிவு செய்துள்ளார். இது பழமையான தொழில் என்றும் பரிவுகொள்கிறார்.

1930-47 காலகட்டத்து சோஷலிஸ யதார்த்த வாதம், மார்க்ஸீயப் பார்வை இவைகளினால் கேசவதேவ், தகழி, பொன் குன்னம் வர்க்கி முதலானவர்கள் மாப்பசானும் கார்க்கியும் செக்காவும் ஏற்படுத்திய பாதிப்பில் எழுதி வந்தனர். 1930-50 காலகட்டம் மலையாள கதை, நாவல், இலக்கியத்தின் செழிப்பான காலகட்டம் எனலாம். காரூர், உறுபு, நாகவள்ளி, லலிதாம்பிகா அந்தர்ஜனம் முதலானவர்கள் இந்தக் கால கட்டத்தில் தோன்றியவர்கள். நாற்பதுகளின் சமூக பிரச்னைகள்தான் இவர்களுக்குக் கதை விஷயமாக இருந்தது. பின்னர் வாழ்வின் எதார்த்தங்கள் எழுத்தாளனின் பிரக்ஞை வெளியில் பூடகமாய் எடுத்தாளப்பட்டன. காப்கா போன்றோர் பாதிப்பால் சர்ரியலிஸ்டிக்கோ, இருத்தல் கொள்கையோ கொண்ட கதை உறுபும், பஷீரும், எம்.டி.வாசுதேவன் நாயரும், கோவிலனும் தொடங்கி வைக்க, இன்று ஒ.வி.விஜயன், ஆனந்த், முகுந்தன், டி.பத்மநாபன், மாதவிக்குட்டி, எம்.சுகுமாரன் போன்றோர் எழுதினர் என்பார் நீலபத்மநாபன்.

இன்றைய நிர்வாகத்திற்காகவும் மொழிசார்ந்த கலை இலக்கியப் பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் தனித்தனியாக மாநிலங்களாக தமிழ்நாடும் கேரளமும் பிரிந்து கிடந்தாலும் சிறுகதை இலக்கியப் பரப்பில் உலகச் சிறுகதைகளின் தரத்திலும் வளமையிலும் நிகர்த்தவை. ஒடுக்குதலுக்கு எதிராக பெண், தலித், விளிம்பு நிலை மனிதர்களைப் பாதுகாக்கும் மனித நேயக் கதைகளாக விளங்குபவை.

uday011118
இதையும் படியுங்கள்
Subscribe