ஆன்மிக உலகை அதிரவைத்த ஆவுடையக்காள்! - முனைவர் ஆதிராமுல்லை

/idhalgal/eniya-utayam/one-who-shook-spiritual-world-dr-adiramulla

ன்னையும் தானறவன் கண்டுபடர்ந்த லீலைகள் செய்யும்

அவன்மேல் மோகமதாகினேன் அடியே பெண்ணே

ஆசையானேன் வெங்கடேச சுவாமிமேல் ஆசை ஆனேனே”

என்று காதலால் கசிந்து உருகியதும்

“ஜாதி வர்ணாசிரமம் போச்சே

வேத சாஸ்திரம் வெறும் பேச்சே”

“பொறுக்கி எடுத்த ஞானம் போகுமோ

கறிக்குப் பாதிபோன சுரைக்காய் விரைக்காகுமோ”

என்றெல்லாம் பகுத்தறிவு பேசியதும் ஓரு பெண் குரல். முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஓர் விதவைப் பெண் குரல். இக்குரலை ஆழ்ந்து செவிமடுத்தால் சித்தர்களின், ஆண்டாளின், பெரியாரின், பாரதிதாசனின் குரல்களாக ஒலிப்பதைப் பார்க்கலாம்.

திருநெல்வே- மாவட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை அடுத்து இருந்த செங்கோட்டை என்னும் கிராமத்துக்குத் திருவிசை நல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் என்னும் மகான் வருகின்றார். வீதிகள் தோறும் தோரணங்கள்; வீடுகள் தோறும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகப் பூரண கும்பத்துடன் அவரை வரவேற்கக் காத்திருக்கின்றனர். ஒரு வீடு மட்டும் கோலம் கும்பம் என்று எதுவும் இன்றி பாழடைந்து கிடக்கின்றது. உள்ளிருந்து ஒரு விசும்பல் ஒலியும் கேட்கிறது. மகான் அங்கே சற்று நிற்கின்றார். உள்ளே இருந்து “என்னை விடுங்கள் நான் போகத்தான் வேண்டும்” என்று அலறியபடி ஓர் பதினாறு வயதான பருவப் பெண் ஓடி வருகிறார்.

avadai

வந்தவர் மகானின் காலில் விழுந்து வணங்குகின்றார். மகான் அவர் தலையை வருடி “குழந்தாய் வருந்தாதே ஆண்டவன் இருக்கிறார்” என்கின்றார். அண்டை அயல் வீட்டாரின் முகம் மாறுபடுகின்றன. மகான் அவர்களது பார்வையில் மட்டமானவராகத் தெரிகின் றார். அவர்கள் மகானைத் தரிசனம் செய்வதை விட்டு வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்கின்றனர். அந்த மகானுக்கு மரியாதை அவ்வளவே ஆனது. காரணம் காலில் விழுந்து வணங்கியவள் ஓர் விதவைப் பெண்.

இந்த நூற்றாண்டுக்கு முந்தைய காலம் பெண்களைப் பொறுத்தவரை மிகவும் கொடுமையான காலம். அஃறிணை உயிர்களைப் போல பெண்களை நினைத்த காலம் அது. இப்போதும் அந்தப் பார்வை முற்றிலும் மாறிவிட்டது என்று கூற முடியாது. ஆனால் அப்போதைக்கு இப்போது சற்று மாறியுள்ளது என்று சொல்லலாம். அக்காலத்தில் பெண்களை ஒரு ஜடப் பொருளாகவே மதித்துள்ளனர். பெண்களின் மன உணர்வுகளுக்குக் கிஞ்சித்தும் மதிப்பு கொடுத்ததில்லை. குறிப்பாக இளமை மணமும் கைம்பெண் கொடுமையும் வேரும் விழுதுமாக அழுத்தமாகக் காலூன்றி இருந்தன என்பதை ஒருவராலும் மறுக்க முடியாது.

“மாலையிட்ட மணவாளன் இறந்து விட்டால்

மங்கைநல்லாள் என்ன செய்வாள்? அவளை நீங்கள்

ஆலையிட்ட கரும்பாக்கி உலக இன்பம்

அணுவளவும் அடையாமல் சாகச் செய்தீர்!”

என்று புரட்சிக் கவிஞர் கைம்பெண்களுக்காக இரங்கியக் காலம் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகள். அப்போது வரை கைம்பெண் கொடுமை முழுமையாக இருந்தது என்றே கூறலாம். ம

ன்னையும் தானறவன் கண்டுபடர்ந்த லீலைகள் செய்யும்

அவன்மேல் மோகமதாகினேன் அடியே பெண்ணே

ஆசையானேன் வெங்கடேச சுவாமிமேல் ஆசை ஆனேனே”

என்று காதலால் கசிந்து உருகியதும்

“ஜாதி வர்ணாசிரமம் போச்சே

வேத சாஸ்திரம் வெறும் பேச்சே”

“பொறுக்கி எடுத்த ஞானம் போகுமோ

கறிக்குப் பாதிபோன சுரைக்காய் விரைக்காகுமோ”

என்றெல்லாம் பகுத்தறிவு பேசியதும் ஓரு பெண் குரல். முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஓர் விதவைப் பெண் குரல். இக்குரலை ஆழ்ந்து செவிமடுத்தால் சித்தர்களின், ஆண்டாளின், பெரியாரின், பாரதிதாசனின் குரல்களாக ஒலிப்பதைப் பார்க்கலாம்.

திருநெல்வே- மாவட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை அடுத்து இருந்த செங்கோட்டை என்னும் கிராமத்துக்குத் திருவிசை நல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் என்னும் மகான் வருகின்றார். வீதிகள் தோறும் தோரணங்கள்; வீடுகள் தோறும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகப் பூரண கும்பத்துடன் அவரை வரவேற்கக் காத்திருக்கின்றனர். ஒரு வீடு மட்டும் கோலம் கும்பம் என்று எதுவும் இன்றி பாழடைந்து கிடக்கின்றது. உள்ளிருந்து ஒரு விசும்பல் ஒலியும் கேட்கிறது. மகான் அங்கே சற்று நிற்கின்றார். உள்ளே இருந்து “என்னை விடுங்கள் நான் போகத்தான் வேண்டும்” என்று அலறியபடி ஓர் பதினாறு வயதான பருவப் பெண் ஓடி வருகிறார்.

avadai

வந்தவர் மகானின் காலில் விழுந்து வணங்குகின்றார். மகான் அவர் தலையை வருடி “குழந்தாய் வருந்தாதே ஆண்டவன் இருக்கிறார்” என்கின்றார். அண்டை அயல் வீட்டாரின் முகம் மாறுபடுகின்றன. மகான் அவர்களது பார்வையில் மட்டமானவராகத் தெரிகின் றார். அவர்கள் மகானைத் தரிசனம் செய்வதை விட்டு வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்கின்றனர். அந்த மகானுக்கு மரியாதை அவ்வளவே ஆனது. காரணம் காலில் விழுந்து வணங்கியவள் ஓர் விதவைப் பெண்.

இந்த நூற்றாண்டுக்கு முந்தைய காலம் பெண்களைப் பொறுத்தவரை மிகவும் கொடுமையான காலம். அஃறிணை உயிர்களைப் போல பெண்களை நினைத்த காலம் அது. இப்போதும் அந்தப் பார்வை முற்றிலும் மாறிவிட்டது என்று கூற முடியாது. ஆனால் அப்போதைக்கு இப்போது சற்று மாறியுள்ளது என்று சொல்லலாம். அக்காலத்தில் பெண்களை ஒரு ஜடப் பொருளாகவே மதித்துள்ளனர். பெண்களின் மன உணர்வுகளுக்குக் கிஞ்சித்தும் மதிப்பு கொடுத்ததில்லை. குறிப்பாக இளமை மணமும் கைம்பெண் கொடுமையும் வேரும் விழுதுமாக அழுத்தமாகக் காலூன்றி இருந்தன என்பதை ஒருவராலும் மறுக்க முடியாது.

“மாலையிட்ட மணவாளன் இறந்து விட்டால்

மங்கைநல்லாள் என்ன செய்வாள்? அவளை நீங்கள்

ஆலையிட்ட கரும்பாக்கி உலக இன்பம்

அணுவளவும் அடையாமல் சாகச் செய்தீர்!”

என்று புரட்சிக் கவிஞர் கைம்பெண்களுக்காக இரங்கியக் காலம் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகள். அப்போது வரை கைம்பெண் கொடுமை முழுமையாக இருந்தது என்றே கூறலாம். முப்பதுகளில் இப்படி என்றால் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்?

சமுகம் மட்டுமல்ல சமுகத்திற்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய சூழலில் தாம் பெற்ற பெண்ணுக்குப் பெற்றோர்களே கொடுமை இழைக்கும் எதிரிகளாக இருந்துள்ளனர். இளமை மணம், வயது பொருத்தப்பாடின்றி இளம்பெண்ணை முதியவருக்கு மணம் செய்தல், கணவன் வீட்டுக்குச் செல்லும் முன்பே கணவன் இறந்து விட்டால் அவளை விதவையாக்கி வெறுப்பு உமிழ்ந்து உடலுக்கும் உணர்வுக்கும் உணவு கொடுக்காது சத்தற்று நடைப்பிணமாக வாழ வைத்தல் என்று பல கொடுமைகள்.

அப்படி இளமை மணம் செய்து கணவன் வீட்டுக்குச் செல்லும் முன்பே விதவையாகிப் பல கொடுமைகளை அனுபவித்து, தன் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளிக்காத அக்காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி, ஏக போகமாக எல்லோரிடமும் ஏச்சையும் பேச்சையும் அனுபவித்து, முடிவில் பலர் போற்றும் படியாகத் தன்னை நிலைநிறுத்தியவள் செங்கோட்டை ஆவுடையக்காள் திருநெல்வேலி மாவட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை அடுத்து இருந்த செங்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர் ஆவுடை அக்காள். இளமைத்திருமணம், பதினாறாவது வயதில் கணவனை இழந்தாள். கைம்பெண் ஆனாள். கணவனை இழந்தவளுக்கு அழகு எதற்கு? ஆடை ஆபரணம் எதற்கு? கல்வி எதற்கு? கலை எதற்கு? என்று அத்தனையிலும் ஆர்வமாய் இருந்த அப்பெண்ணைப் பருவத்திற்கு வந்தவுடன் அக்கால வழக்கப்படி மொட்டை அடித்து மூலையில் அடைத்தனர். உடைந்து அழுதாள்.

அழுதே கிடந்தாள் அந்த நாள் வரும் வரை. ஆம் அந்த ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் அவர் களைச் அவள் சந்திக்கும் வரை.

ஒரு விதவை மகானைப் பார்ப்பதாவது? வணங்குவதாவது என்று ஊரும் உறவும் தூற்ற அப்பெண் ஒருவரும் அறியாமல் வீட்டை விட்டு ஓடி வந்து ஆற்றங் கரையோரம் அமர்ந்திருந்த ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாளிடம் சேர்ந்தாள். ஞான தீக்கை பெற்றாள்.

ஊரும் உறவும் என்னென்னவோ பேசின. நாட்டாமை வசனம் போல அன்னம் நீர் புழங்கக் கூடாது என்று சொல்லி அவளைச் சாதியை விட்டுத் தள்ளி வைத்தது.

ஆத்ம ஞானம் பெற்ற அவர் எதையும் பொருட்படுத்தாமல் எண்ணற்ற பக்திப் பாடல்களையும் யோகப் பாடல்களையும் ஞானப் பாடல்களையும் வேதாந்த சமரசப் பாடல்களை யும் எழுதிக் குவித்தார். எழுதியதோடா? பலருக்கும் ஞானம் வழங்கும் ஞானாசிரியளாக விளங்கினாள்.

அக்காலத்து இளம் விதவைகள் அக்காளின் பாடல்களைப் பாடியே தம்மை ஆற்றுப் படுத்திக்கொண்டனர் என்பர். தம் ஞான குருவான ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாளின் மரணத்தின் போது பிலாக்கணமாக அவர் எழுதிய பாடல் அத்வைத பரமான அனுபவ ரத்ன மாலை முதலாக பண்டிதக் கவி, அத்வைத மெய்ஞான ஆண்டி, வேதாந்த அம்மானை, வேதாந்த ஆச்சே போச்சே, வேதாந்த சார பிரத்தியோத்திரக் கும்மி, மெய் பொய் விளக்கம், சூடாலை கதை, சூடாலைக் கும்மி, வேதாந்தக் கும்மி, கோலாட்டப் பாட்டு, வேதாந்த ஞானரசக் கப்பல், குரு, கிளிக்கண்ணி, குயில் கண்ணி, பராபரக்கண்ணி, பிரம்மம் ஏகம், ஸ்ரீ தஷிணாமூர்த்தி படலம் அத்வைத ஏலேலோ, வேதாந்த பள்ளு, வேதாந்த நொண்டிச் சிந்து, ஞானக்குறவஞ்சி நாடகம், வாலாம்பிகை பந்து, ஸ்ரீ வித்தை சோபனம், அனுபோக ரத்னமாலை, வேதாந்த வண்டு, பிரம்ம ஸ்வரூபம், அத்வைத தாலாட்டு, தொட்டில் பாட்டு ஊஞ்சல், என்று எண்ணற்றப் பாடல்களை எழுதினார். அக்காள் கீதைக்கு விளக்கம் எழுதியுள்ளார். அக்காளின் பாட்டுத்திறத்திற்குச் சான்று ஒன்று. இறைக் காதலைப் பாடிய அக்காளின் சிங்கார ரஸம் இதோ.

“அடுத்தநாயகன் வந்துஎன்னை பிடித்தநாள் முதலாய் மானம்

கெடுத்த கலவியிலே மனம் பிடித்தமாகுதடி

படுத்தவுடனிது கடுத்துக்கொண்டு உடுத்த துகில் தன்னை

விடுத்து அடுத்தவேளையி லானந்தாமிருதம் குடித்து

ஆசையானேன் வெங்கடேச சுவாமிமேல் ஆசை ஆனேனே”

அகமுருகுதடி பெண்ணே, மோகம் பெருகுதடி, ஒருவகை

யாக வருகுதடி தேகஸாக்ஷியானவன் ஸரஸம்

அனேகமாமதை என்ன சொல்வேனடி போகபோக்ய ஸாதன

சித்கனபோதமாகிய ரதிவிலாஸன்மேல் (ஆசை)

இப்படி இறைக் காதலை மட்டுமா எழுதிக் குவித்தார் அக்காள்? புரட்சிகரமான எத்தனையோ கருத்துகள் அவர் பாடல்களில் காணப்படுகின்றன. எச்சில் பற்றிய அக்காளின் பார்வை.

“எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள்

எச்சில் இல்லாத இடமில்லை- பராபரமே

சில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச்சில் தேனல்லவோ

என்றைக்கும் உண்ணும் தாய் முலை எச்சிலன்றோ- பராபரமே

மச்சமெச்சில் நீரில் வந்து மூழ்கும் மறையோர்கள் எச்சில்

பச்சைக் கிளி கோதும் பழம் எச்சில் அன்றோ- பராபரமே

தேரை எச்சில் தேங்காய் சிறு பூனை எச்சில்

தேசமெல்லாமே எச்சிலென்றறிவேன் - பராபரமே

எச்சிலுன் வாயும் உடலும் ஏகமாயிருக்கையிலே

பாதம் எச்சிலென்று அலம்ப சுத்தமாச்சோ- பராபரமே

இப்பாடலுக்கு ஒரு செவி வழிச் செய்தியும் காணப்படுகிறது. ஆற்றில் ஒரு மாங்குச்சி மிதந்து வருகிறது. அதை எடுத்து வாயில் வைத்துக் கொள்கின்றார் அக்காள். அதைப் பார்த்த தோழிகள் சீ பல் தேய்த்து வீசிய எச்சில் குச்சியை எடுத்து வாயில் வைக்கிறாயே என்று கேலி பேசுகின்றனர். அப்போது அக்காள் எச்சில் பற்றிப் பாடிய பாடலாக இப்பாடலைச் சொல்வார்கள்.

இப்பாடலைப் பற்றி மற்றொரு செவி வழிக் கதையும் உ;ண்டு தம் ஞான குருவாகிய ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆற்றில் பல் தேய்த்து கொண்டிருக்கும் போது அக்காள் சென்றதாகவும் அவர் வீசிய எச்சில் மாங்குச்சியை எடுத்து அக்காள் வாயில் வைத்ததாகவும் அதனைக் கண்ட பாகவதர் ஒருவர் இப்படி ஒருவர் உமிழ்ந்த எச்சிலை எடுத்துண்பது அழகோ? இது என்ன விபரீதம் என்று கேட்டதாகவும் அப்போது அக்காள் பாடிய பாடல் இது என்றும் கூறுவர்.

அதுமட்டுமல்ல, அப்பெண்ணின் கருத்தில் உதித்த புரட்சிப் பாடல்கள் பல. எங்கெங்கும் இப்போது பேசு பொருளாய் இருக்கும் மகளிரின் மாத விலக்கு பற்றி பேசிய முதல் பெண் அக்காள். தீட்டு என்று மகளிரை விலக்கி வைத்த அந்த மூன்று நாட்களின் அவலத்தைப் பற்றி முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பேசியுள்ளார் அக்காள்.

“தீட்டென்று சொல்லிசிலதூரம் போய்நிற்கும் மாயைஆட்டி வைக்கும் சூத்திரத்தை அறியார் -பராபரமே

தீட்டு திரண்டுருண்டு சிலைபோல பெண்ணாகி வீட்டில் இருக்க தீட்டோடிப் போச்சோ - பராபரமே

என்று கேட்கும் அக்காள் பெண்ணே தீட்டின் மொத்த உருவம். அவர்களை மூன்று நாட்கள் மட்டும் தீட்டு என்று தள்ளி வைப்பது எப்படி? என்று கேள்வி கேட்பதுடன் உயிர்கள் எல்லாம் பெண் இனத்தின் தீட்டில் உருவாவது. ஆண், பெண், மற்றும் உயிர்கள் எல்லாம் திரண்டு வந்த தீட்டின் மொத்த உருவமே என்று திட்டமாக நெற்றிப் பொட்டில் அரைவது போலச் சொல்கிறார்.

குழந்தை பிறந்து பத்து நாட்கள் தீட்டுக் காப்பதும் பின்பு புன்யாவசனம் என்று ஒன்றைச் செய்து குளிப்பாட்டி வீட்டுக்கு அழைப்பதும் சுகாதாரம் சுத்தம் சார்ந்த அறிவியல் தான். அதையும் சடங் காக்கி விட்ட செயலைக் கண்டிக்கும் அக்காள்,

காமத் தீட்டுரைந்து கைக்குழந்தையாய் இருந்து

ஆமையைப் போலே முழுக சுத்தி ஆச்சோ - பராபரமே”

என்று கேட்பது சிந்திக்க வைப்பதோடு கூடுதலாக வியக்கவும் வைக்கிறது. இத்தனைப் புரட்சியான கருத்தை ஒரு பெண் பாடியுள்ளாள். சித்தர்களின் தத்துவங்கள் பொது வெளிக்குக் கிட்டியதைப் போல இவரின் இக்கருத்துகள் மக்களுக்கு கிட்டாமல் போனது எப்படி என்று.

சுக்லத்தால் தீட்டுரைந்து தொண்ணூற் றாறுமாகி

எக்குலமும் ஸத்குலமாச்சே - பராபரமே

என்று கூறி, பெண்ணைத் தீட்டு என்றால் சக்தி சிவமும் தீட்டுதான். சக்தி சிவம் தீட்டு என்றால்

சாஸ்திரம் கோத்திரம் குலம் சாதி எல்லாம் தீட்டுதான். இருட்டில் இருக்கும் மூடர்களே புரிந்து கொள்ளுங்கள் என்கின்றார்

சாஸ்திரமாய் கோத்திரமாய் ஜாதி வருணாசிரமமாய்

சத்பாத்திரமும் தீட்டல்லவோ அறியாள் - பராபரமே

சக்திசிவமே சராசரமாய் நிற்கையிலே எதுவும்

கர்மமூடருக் கிருட்டாச்சே - பராபரமே

.என்று அக்காலத்தில் சிந்திக்கவும் முடியாத ஒரு சிந்தனையைச் சிந்தித்ததோடன்றி பதிவும் செய்தவர் அக்காள். தீட்டு பற்றிய அக்காளின் கருத்து இக்காலத்தவர் கண்டிப்பாகப் படித்து உணர வேண்டியது.

அக்காள் காரைக்கால் அம்மையாரைப் போல தல யாத்திரை செய்தார். காரைக்கால் அம்மையார் கைலாய மலையில் ஏறியது போல அக்காள் குற்றால மலையில் ஏறினார். காரைக்காலம்மையார் கைகளால் ஏற அக்காள் கால்களால் ஏறினார். காரைக்காலம்மையார் அங்கிருந்து திரு ஆலங்காடு வந்து இறையடியில் ஐக்கியமானார் என்பர்.

அக்காள் பொதிய மலையிலிருந்து இறங்கவே இல்லை. இது அவர் வாழ்க்கை வரலாறு.

தமிழகத்தில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு அடுப்பங்கரையும் பத்துப் பாத்திரங்களும் கதி என்று இருக்க வேண்டிய காலத்துப் பெண் அதிலும் ஒரு விதவைப் பெண் காலத்தை எதிர்த்து கரையேறி வந்தாள் அவள். அவள் வந்தாள் என்பதில் என்ன பெருமை இருக்கிறது. அவள் தம் ஞானப் பாடல்களால் ஆண்கள் பலரையும் பின்பற்றும் படி செய்தாள் என்பதல்லவோ பெருமை.

“தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு

தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே

அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலா வே - யெங்கள்

ஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே”

என்று பாடிய வள்ளலாரின் கண்ணி மற்றும் சிந்து வகையில் அமைந்த பாடல்கள் அக்காளின் பாடல்களின் சாயலை அடியொற்றி உள்ளன என்பதை நன்கு உணர முடியும்.

மகாகவி பாரதி இவரது பாணியில் பல ஞானப் பாடல்களை எழுதியுள்ளார். பாரதியாருக்கு இவரது கவிதைகளின் மீது ஈர்ப்பு இருந்திருக்கிறது என்று பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் சகோதரி மகள். கோமதி ராஜாங்கம் கூறுவதை உறுதி படுத்து கிறது பாரதியாரின் பல பாடல்கள். பகவான் ரமண மகரிஷியின் முன்னிலையில் ஆவுடையக்காளின் பாடல்களைப் பாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. இவரது பாடல்களைப் பெண்கள் திருமணச் சடங்குகளிலும் மகிழ்ச்சியான பிற தருணங்களிலும் பாடும் மரபு இப்போது நெல்லை மாவட்டத்து பெண்களிடம் இருந்து வருகிறது.

நித்யானந்தகிரி சுவாமிகள் தொகுத்துள்ள ‘செங்கோட்டை ஸ்ரீ ஆவுடையக்காள் பாடல் திரட்டு’ என்னும் அக்காளின் பாடல்களின் தொகுப்பு நூலில் அணிந்துரை எழுதிய ஸ்ரீஹரி (கிருஷ்ணப்ரேமி அண்ணா) “முக்யம், பெண்கள் கூட உபநிஷத்துப் படிக் காமலேயே ஞானம் பெற இது சுலபமான வழி” என்று எழுதுகின்றார். பெண்கள் கூட என்னும் இவ்விறு சொற்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி உள்ளது. இன்னும் ஒரு முக்கியக் குறிப்பும் இச்சொற்களில் இருந்து நமக்குக் கிடைக்கிறது. பெண்கள் கூட என்று எழுதுவதால், ஆண்கள் ஞானம் பெற வேண்டிய கருத்துகள் அமைந்த ஞானப்பாடல்களைத் தந்துள்ளவர் ஆவுடையக்காள் என்று கிருஷ்ணப் பிரேமி சொல்லாமல் சொல்வதும் விளங்குகிறது. ஆவுடையக்காளின் பெரும்பான்மை பாடல்களில் ‘ அடா அடா’ என்று ஆணை முன்னிறுத்தி முடித்துள்ள மையும் இக்கருத்துக்குத் துணை செய்வதாக உள்ளது.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைக்கு உள்ள சமுதாயச் சூழலில் ஆண்களும் பின்பற்றும் வகையில் புரட்சிகரமான கருத்துக்களைக் கொடுத்து ஞான உலகின் உச்சியை அடைந்துள்ளார் ஒரு விதவைப் பெண். இந்த இருபத்தியோராம் நூற்றாண் டின் பேசு பொருள்களாக உள்ள சாதி, சமயம், ஆண் பெண் பேதம், தீட்டு இவை பற்றி எல்லாம் அன்றே பேசிய புரட்சிப்பெண் ஆவுடையக்காள், காலத்தை எதிர்த்துப் போராடி தமக்கென ஒரு தனிப்பாதையை, வகுத்துக் கொண்டு தம் பெயரை நிலை நிறுத்திய முதல் கைம்பெண் ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழுமானால் அஞ்ஞான ஜனங் களுக்கு யாராலே விமோசனமாம்?” என்று கேள்வி கேட்கும் செங்கோட்டை ஆவுடையக்காள்.

uday011121
இதையும் படியுங்கள்
Subscribe