ரு குளம். அதில் ஸ்படிகத்தின் பிரகாசத்தைக்கொண்ட நீலநிற நீர். சலனமே இல்லாத இளம் நீலநிற நீர். ஒரே பார்வையில் நீர் என்று தோன்றாது. செதுக்கி மினுமினுப் பாக்கப்பட்ட நீலக்கற்கள் பதிக்கப்பட்டிருப்பதைப்போல தோன்றும். பார்வையில்... கல்லின் அளவுக்குள் இருக்கும் நீர்... நீரைச்சுற்றி பளிங்கால் உண்டாக்கப்பட்ட படிகள்...

வெண்மையான பளிங்குப் படிகள்... படிகளுக்கு மத்தியில் நிறைந்து நிற்கும் இளம்நீல நீர்.

ராதாகிருஷ்ணன் குளத்திற்கருகில் கண்களை அகலத்திறந்து வைத்துக்கொண்டு நின்றிருந்தான். இப்படிப்பட்ட அழகான ஒரு குளத்தை அவன் இதுவரை பார்த்ததேயில்லை. ராதாகிருஷ்ணனின் வீட்டின் கிழக்குப் பகுதியில் ஒரு குளம் இருக்கிறது. அதில் நீர் பாசிபிடித்துக் கிடக்கும். குளத்திற்கு மத்தியில் சிறிய வாழைகள் நன்கு வளர்ந்து நின்றிருக்கும். இடிந்த படிகளில் சோப்பும் காரமும் எண்ணெய்யும் ஒன்றுசேர்ந்திருக்கும். ராதாகிருஷ்ணன் கடந்த இருபத்தைந்து வருடங்களாக குளித்த குளம்... அதிலிருந்து எந்த அளவுக்கு வேறுபட்டுக் காட்சியளிக்கிறது தான் இப்போது பார்க்கும் குளம்...

குளத்திலிருந்து சற்று விலகி ராதாகிருஷ்ணன் நின்றிருந்தான். பளிங்குப் படிகளில் கால்வைத்து நிற்பதற்கு அவனுக்கு ஒரு பயம். ராதாகிருஷ்ணன் தன்னுடைய கால்களைப் பார்த்தான். விரல்களுக்கு மத்தியில் குதிரைச் சாணமும் மண்ணும் கலந்து ஒட்டியிருந்தன. தன்னுடைய இந்த அசிங்கமான கால்கள் அந்த பளிங்குப் படிகளைத் தொடுவதே பாவமென்று அவன் நினைத்தான். எனினும், அவனுக்கும் அந்த குளத்தினருகிலிருந்து விலகி நிற்பதற்கு தோன்றவில்லை. அந்த வெண்மையான படிகளில் சற்று அமர்வதற்கும், அந்த நீல நீரில் சற்று மூழ்குவதற்கும் அவனுக்கு என்னவொரு ஆசை!

Advertisment

ராதாகிருஷ்ணன் தன்னுடைய விருப்பத்துடன் போராடியவாறு நின்றுகொண்டிருந்தான். இறுதியில் அவன் தோல்வியடையவும் செய்தான்.

ராதாகிருஷ்ணன் நான்கு திசைகளிலும் பார்த்தான். கண்கள் எட்டக்கூடிய தூரம்வரைக்கும் யாரையும் பார்க்கமுடியவில்லை. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் தன்னுடைய வலது காலை மிகவும் உயரத்திலிருந்த படியின்மீது வைத்தான். வெடித்துக் கீறிக்காணப்பட்ட அவனுடைய முரட்டுத்தனமான பாதங்கள்... வெண்மையான பளிங்கு கொண்டு உண்டாக் கப்பட்ட படிகள்... பளிங்கின் குளிர்ச்சியும் அழகும் ராதா கிருஷ்ணனின் சரீரத்திற்குள் பரவியது. அவனுடைய குருதியில் பளிங்கின் அழகு... அவனுடைய எலும்புகளில் பளிங்கின் பிரகாசம்...

ராதாகிருஷ்ணன் மீண்டுமொருமுறை நான்கு பக்கங்களிலும் பார்த்தான். இந்த குளத்திற்கருகில் நிற்பதற்கு யாராவது வந்து தன்னைத் திட்டுவார்களோ? அந்த பளிங்குப் படியின்மீது தன்னுடைய அழுக்குப் படிந்த காலை வைத்ததற்கு யாராவது வந்து தன்னுடைய கழுத்தைப்பிடித்து அடிப்பார்களோ? கன்னத்தில் அடிப்பார்களோ? -இப்படியெல்லாம் நினைத்தான் அவன்.

Advertisment

மேலும் ஒருமுறை ராதாகிருஷ்ணன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டான். பிறகு மெதுவாகப் படிகளில் இறங்கினான். ஏழு படிகள். இறுதிப்படியின் ஓரம்வரை நீர் இருந்தது. வெண்மையான படிகளில் நீல நீரின் பிரதிபலிப்புகள்... படிகளின் வெண்மையும் நீரின் நீலநிறமும் ஒன்றோடொன்று கலந்து காணப்பட்டன. அந்தப் படிகளில் ஒன்றின்மீது உணர்ச்சிவசப்பட்டு நின்றுகொண்டிருக்கும் வழிப்போக்கன்...

ராதாகிருஷ்ணன் பின்னால் திரும்பிப் பார்த்தான். இல்லை... யாருமே இல்லை. பின்னால் மேல்நோக்கி ஏறிச்செல்லும் ஏழு படிகள் மட்டுமே இருந்தன. படிகளில் நீண்டுகிடக்கும் அவனுடைய நிழல்... முன்னால் கல்லில் செதுக்கி உண்டாக்கியதைப்போல அசையாமல் நின்றுகொண்டிருந்து நீர். அதைத் தொடவேண்டுமென்று அவன் ஆசைப்பட்டான். அதை உள்ளங்கையில் அள்ளவேண்டும்... பிறகு வெப்பம் நிறைந்த தன் தொண்டையில் சிறிது சிறிதாக இறக்கவேண்டும். ராதாகிருஷ்ணன் மெதுவாக நீரை நோக்கி குனிந்தான். அவன் சற்று அதிர்ச்சியடைந்துவிட்டான். முன்னோக்கித் தள்ளியவாறு நின்றுகொண்டிருக்கும் ஒரு கருங்கல் சிலையைப்போல அவன் அசைவே இல்லாமல் நின்றிருந்தான். நீலநிற நீரின் கண்ணாடியில் அவனுடைய பிரதிபலிப்பு... காட்டைப்போல வளர்ந்து கிடக்கும் தலைமுடி... ஆண் ஆட்டிற்கு இருப்பதைப்போன்ற தாடி உரோமங்கள்... குழிக்குள் விழுந்துகிடக்கும் கண்கள். கூர்மையான கன்னத்து எலும்புகள்... பிறகு... அழுக்கடைந்து நாற்றமெடுத்த வேட்டியும் சட்டையும்....

பயணத்தின் விளைவு இது. இலக்கு இல்லாத... அர்த்தமே இல்லாத பயணம்... தான் எப்போது அந்தப் பயணத்தை ஆரம்பித்தோம்? நாள், தேதி எதுவுமே ஞாபத்தில் இல்லை. கவலையும் ஏமாற்றமும் விஷ ஜுரத்ûஜ்தப்போல தன்னை பாதித்த ஒரு நிமிடம்... அப்போது ஊரையும் வீட்டையும்விட்டு வெளியேறிவிட்டான்.

ராதாகிருஷ்ணன் நிமிர்ந்து நின்றான். அவன் படிகள் ஒவ்வொன்றாக ஏறி, குனிந்த தலையுடன் திரும்பி நடந்தான்.

தேவர்களுக்காக உண்டாக்கப்பட்டதுதானே இந்தக் குளம்? தான் மனிதன்தானே? தனக்கு இந்தக் குளம் அனுமதிக்கப்பட்டிருக்கிறதா? மிகவும் மேலே இருந்த படியின்மீது நின்றுகொண்டு ராதாகிருஷ்ணன் சற்று திரும்பிப் பார்த்தான். அவனுடைய நெஞ்சிலிருந்து வெப்பம் நிறைந்த மூச்சுகள் வெளியே வந்து கொண்டிருந்தன. குனிந்த தலையுடன் ராதாகிருஷ்ணன் தான் வந்த வழியிலேயே திரும்பி நடக்க ஆரம்பித்தான். பின்னால் விலகிச்செல்லும் பளிங்குப்படிகள்... வெண்மையான படிகளுக்கு மத்தியில் நீல நீர்... குளத்திற்கு மேலே வெளியே பளிங்கின் வெண்மையும் நீரின் நீல நிறமும்...

இரு பக்கங்களிலும் சவுக்கு மரங்கள்... மெலிந்த கிளைகளில் ஊசியின் கூர்மையையும் அழகையும் கொண்டிருக்கும் இலைகள்... சவுக்கு மரங்களுக்கு மத்தியில் ஒற்றையடிப்பாதையின் வழியாக ராதாகிருஷ்ணன் நடந்தான். பாதையில் இங்குமங்குமாக வெளுத்த தும்பைகள்... இரு பக்கங்களிலும் காற்றிலாடும் கிளைகள்... கொப்புகளில் நாரைப்போன்ற மெல்லிய இலைகள்... இலைகளின் சிறகுகளில் நெருப்பின் நிறத்தைக்கொண்ட வண்ணத்துப் பூச்சிகள்... நடக் கும்போது ராதாகிருஷ்ணனுக்குள், பின்னால் தாண்டி வந்த விலக்கப்பட்ட குளத்தைப்பற்றிய கவலை அதிகரித்துக்கொண்டு வந்தது. நினைத்துப் பார்க்க முடியாத சிம்மாசனங்களையும், கனவில் மட்டுமே வரக்கூடிய தேவ பூமிகளையும் பற்றிய கவலை நிறைந்த சிந்தனைகள் அவனுக்குள் குமிழ்களைப்போல எழுந்து வந்தன.

நரைதத சவுக்கு மரங்களுக்கு மத்தியில் கல் தூண்கள்... ஏராளமான கல் தூண்கள்... கீழேயிருந்து மேல் வரை செதுக்கி உண்டாக்கிய கல் வேலை... கண்களுக்கு முன்னால் வலைபோல பின்னிக்கிடக்கும் இலைகள்... இலைகளுக்கு மத்தியில் சிதறிக்கிடக்கும் கற்தூண்கள்... தூண்களுக்கு மத்தியில் தலைகுனிந்து நடக்கும் ராதாகிருஷ்ணன்...

ஒற்றையடிப்பாதை செங்கற்களால் கட்டப்பட்டிருந்த ஒரு கோவிலுக்கு முன்னால் போய் முடிந்தது. ராதாகிருஷ்ணன் கோவிலுக்கு முன்னால் நின்றான். சிவப்புநிறப் படிகளும், இந்த சிவப்புநிறக் கோவிலும் எந்தெந்த கடவுளுடையதோ, தேவதையுடையதோ தெரியவில்லை. உள்ளே செல்ல வேண்டுமென்ற விருப்பம் அவனுக்கு உண்டானது. ஆனால் தயங்கினான்.

குளத்திற்கருகில் உண்டான அனுபவம் மீண்டும் உண்டாகுமோ? சாதாரண மனிதனான தனக்கு இந்த கோவிலுக்குள் நுழைவதற்கு அனுமதி உண்டா? வாசலில் நின்றவாறு ராதாகிருஷ்ணன் கோவிலைப் பார்த்தான். சிவப்புநிறச் சுவர்கள்... சுவரில் வரிசையாகக் காட்சியளித்த கல் விளக்குகள்... விளக்குகளில் எண்ணெய் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. திரிபோட்டும் வைக்கப் பட்டிருந்தது.

செங்கற்களால் உண்டாக்கப்பட்ட தனிமையில் இருக்கும் கோவில்... சிவப்புநிறச் சுவர்களில் எண்ணெய் ஊற்றப்பட்டு, திரிபோட்டு வைக்கப்பட்டிருக்கும் கல் விளக்குகள்... கோவிலுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் ராதாகிருஷ்ணன்... அவ்வாறு நின்றுகொண்டிருக்கும்போது, அவனுக்கு அந்த விளக்கு களை ஒவ்வொன்றாக எரியவைக்க வேண்டுமென்ற அளவற்ற ஆர்வம் உண்டானது. ஆனால், அதற்கான தைரியம் அவனுக்கு வரவில்லை. யாராவது வந்து தன்னை உதைத்துவிட்டால் என்ன செய்வதென்று அவன் நினைத்தான். அந்த ஆசையை அடக்கியவாறு ராதாகிருஷ்ணன் வேறொரு ஒற்றையடிப்பாதையின் வழியாக நடந்தான்.

எங்கோவிருந்து ஒரு இசை உயர்ந்தது. எந்த பகுதியிலிருந்து என்பதை ராதாகிருஷ்ணனால் புரிந்துகொள்ள முடியவில்லை. எல்லா திசைகளிலிருந்தும் ஒன்றாகச் சேர்ந்து வருவதைப்போல.. திசைகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இசை... சவுக்கு மரங்களின் கூர்மையான இலைகள் இசையை எழுப்பிக்கொண்டிருந்தன. தூண்களின் உச்சியிலிருந்து இசைவந்து கொண்டிருந்தது. கோவிலின் செங்கற்களாலான சுவர்களிலிருந்து இசை கசிந்து விழுந்துகொண்டிருந்தது.

இது ஒரு தேவபூமி ஆயிற்றே! இங்குள்ள அனைத்துமே இசை மயமாகத்தானே இருக்கும்! ஒற்றையடிப்பாதை யின் வழியாக ராதாகிருஷ்ணன் என்ற வழிப்போக்கன் நடந்தான். இவ்வாறு சிறிது தூரம் நடந்து சென்றபிறகு, அவன் மூங்கிலால் உண்டாக்கப்பட்ட ஒரு வீட்டைப் பார்த்தான். உடனடியாக அங்கிருந்துதான் இசை வருகிறது என்பதை ராதாகிருஷ்ணன் புரிந்துகொண்டான். பிறகு அவன் காலை முன்னோக்கி வைக்கவில்லை. அந்த மூங்கில் குடிலுக்குள் யாரோ இருக்கிறார்கள். அது ஒரு பெண்ணாக இருக்கும் என்று, என்ன காரணத்தாலோ ராதாகிருஷ்ணன் நினைத்தான். முன்பு கண்ட குளத்தின் உரிமையாளர்... அத்தூண்களின் சிற்பி... செங்கல் கோவிலின் தேவதை... மூங்கில் குடிலிலிருந்து தொடர்ந்து இசை வந்துகொண்டேயிருந்தது. அதற்குப் பிறகு ராதாகிருஷ்ணன் முன்னோக்கி நடக்கவில்லை. பின்னோக்கியும். அவன் நின்ற இடத்திலேயே அதே நிலையில் நின்றுகொண்டிருந்தான். முன்னோக்கி நடப்பதற்கு பயம்... பின்னோக்கி நடப்பதற்கு ஆர்வம் அனுமதிக்கவில்லை.

dd

மூங்கில் முகுடிக்கு வெளியே ஏராளமான செடிகளும் கொடிகளும் மலர்களும்... குடிலின் மூங்கிலால் உண்டாக்கப்பட்டிருந்த சுவர்களில் படர்ந்து கிடந்த சங்குபுஷ்பக் கொடிகள்... கொடிகள்... கொடிகளில் சங்குபுஷ்பங்கள். அது ஒரு வீடல்ல... ஆசிரமம் என்று கூறலாம். கண்வாஸ்ரமம்... அப்படியென்றால்... அதில் சகுந்தலை இருக்கவேண்டுமே!

ராதாகிருஷ்ணன் மீண்டும் ஒருமுறை தைரியத்தை வரவழைத்தான். அவன் மெதுவாக மூங்கில் குடிலை நோக்கி நடந்தான். மூங்கிலால் செய்யப்பட்ட கதவு. உள்ளேயிருந்து இப்போதும் இசை வெளியே வந்துகொண்டிருந்தது. ராதாகிருஷ்ணனுக்கு தெரிந்து கொள்ள வேண்டியது ஒரே ஒரு விஷயம்தான். உள்ளே இருப்பது ஆணா, பெண்ணா? அவன் தன்னுடைய நடுங்கிக்கொண்டிருந்த கையை மூங்கில் கதவின்மீது வைத்தான். முற்றிய மூங்கில்... அது ஓசை உண்டாக்கியது. இசையை உண்டாக்கும் மூங்கில்... அந்த மூங்கிலால் உண்டாக்கப்பட்ட கதவு...

""ஏய்... நீங்கள் யார்?''

இசை நின்றது. மேலேயிருந்து வந்து கொண்டிருந்த இசை நின்றுவிட்டது. ஒரு இளம்பெண் வெளியே வந்தாள். தொப்புளுக்குக் கீழே தாழ்த்தி அணிந்திருந்த அழகான வெள்ளைப் புடவை... வெள்ளை ரவிக்கை... அவிழ்த்து விடப்பட்டிருந்த கூந்தலிலிருந்து ஷாம்புவின் நறுமணம் வந்து கொண்டிருந்தது. மருதாணி தேய்க்கப் பட்டிருந்த கால் நகங்கள்... நிர்வாணப் பாதங்கள்...

""நான்...''

""பயணியா?''

""ஆமாம்.''

ராதாகிருஷ்ணன் திக்கித் திக்கி இவ்வளவையும் கூறினான். மூங்கில் குடிலில் அமர்ந்து பியானோ இசைப் பது ஒரு இளம்பெண்ணாகத்தான் இருக்குமென்று முன்பே அவன் நினைத்திருந்தானே! தான் நினைத்தது சரியாக இருந்ததைப் பார்த்தவுடன் அவன் மனதிற்குள் சந்தோஷப்பட்டான். அத்துடன் செயலற்று நின்று கொண்டும் இருந்தான். என்ன செய்ய வேண்டுமென்று அவனுக்குத் தெரியவில்லை.

""பயணியே... உள்ளே நுழைந்து வரலாம்.''

ஒரு புன்சிரிப்புடன் அவள் கூறினாள். நடுங்கிக் கொண்டிருந்த சரீரத்துடன் மூங்கில் குடிலுக்குள் காலடி எடுத்து வைத்த ராதாகிருஷ்ணன் உள்ளே சென்ற பிறகும், அவனுக்கு பதைபதைப்பு விலகவில்லை.

அவளுடைய அவிழ்த்துவிடப்பட்ட கூந்தலில், அதிலிருந்து வந்து கொண்டிருந்த ஷாம்புவின் வாசனையினை, அவளுடைய பளிங்கு நிறத்தைக் கொண்டிருந்த வயிற்றில், அங்கு காக்கைப்பூவைப்போல மலர்ந்து காணப்படும் தொப்புளில், அவளுடைய அழகான புடவையில், அந்த புடவையின் வெண்மையில், அவளுடைய பனியின் நிறத்தைக் கொண்டிருந்த நெற்றியில், அந்த நெற்றியிலிருந்த கறுத்த திலகத்தில்... அவன் திகைப்படைந்து பார்த்தவாறு நின்றிருந்தான்.

""பயணியே! என் பெயர் ராதா... அதோ... அங்கு தெரிவதுதான் என் வீடு.''

ராதா சுட்டிக்காட்டிய இடத்தில் ராதாகிருஷ்ணன் கண்களை ஓட்டினான். சவுக்கு மரங்களையும் கல் தூண்களையும் தாண்டி... செங்கற்களாலான கோவிலை யும் தாண்டி... ஓடு வேய்ந்த ஒரு மாளிகை... அந்த மாளிகைக்கு முன்னால் ஒரு பெரிய வெளிக்கதவு. அந்த வெளிக்கதவிலும் பூங்கொடிகள் படர்ந்து கிடந்தன. மலர்களின் உலகம்... மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வீடுகள்...

""பயணியே! நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?''

""சற்று வடக்கிலிருந்து... வடகரையிலிருந்து...''

""பெயரைக் கூறவில்லையே?''

""ராதாகிருஷ்ணன்... மாளிகையில் ராதாகிருஷ்ணன்.''

""நல்ல பெயர்.''

அவள் புன்னகைத்தாள். பளிங்கின் நிறத் தையும் அழகையும் கொண்டிருந்த புன்னகை. அவிழ்த்துவிடப்பட்டிருந்த கறுத்த கூந்தலும், நெற்றியிலிருந்த கறுத்த பொட்டும் ராதாவின் வெளுத்த புன்னகைக்கு அழகு சேர்த்தன.

""என் தந்தை இங்கிருக்கும் கலெக்டர். பாஸ்கரன் நாயர் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?''

""ஆமாம்.''

நான்கு திசைகளிலும் சற்று கண்களை ஓட்டியவாறு ராதாகிருஷ்ணன் கூறினான். மூங்கிலான சுவர்கள்... சுவருக்கு அருகில் ஒரு பெரிய பியானோ... தரையில் சிவப்பு நிற விரிப்பு... ஏதோ கொடிகளால் உண்டாக்கப்பட்ட நாற்காலிகள். மூங்கில் சுவரில் வண்ணங்கள் பற்றியெரிந்து கொண்டிருந்த ஒரு அருமையான ஓவியம்!

""இது என் பர்ணசாலை.''

ராதா விளக்கிக் கூறினாள்.

""ஓய்வு நேரங்களில் நான் இங்குதான் இருப்பேன். பிறகு... எனக்கு மூன்று தோழிகள் இருக்கிறார்கள். ரதியும், ரமணியும், ரமாவும்... அவர்கள் குளிப்பதற்காகச் சென்றிருக்கிறார்கள்... பயணியே... நீங்கள் என் குளத்தைப் பார்த்தீர்களா?''

""ஆமாம்.''

ராதாகிருஷ்ணன் சற்று பெருமூச்சு விட்டான். வெண்மையான படிகளைக் கொண்டிருந்த நீல நீர்நிலையைப் பற்றிய நினைவுகள் அவனுக்குள் மலர்ந்தன.

""பயணியே! நீங்கள் ஏன் இவ்வாறு நின்றுகொண்டிருக்கீறீர்கள்? அமருங்கள்.''

கொடியால் உண்டாக்கப்பட்ட நாற்காலியை ராதா அவனுக்கு அருகில் நகர்த்திப் போட்டாள். வெள்ளைநிறப் புடவைக்கு வெளியே வெண்ணிற கை தெரிந்துகொண்டிருந்தது. ராதா... ராதாகிருஷ்ணன்... தன் பெயருக்கும் அவளுடைய பெயருக்குமிடையே இருக்கும் உறவு அவனை உணர்ச்சிவசப்படச் செய்தது. அவன் ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டான். இந்த உறவைப் பற்றி அவளிடம்கூற வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. ஆனால், ராதாகிருஷ்ணனின் பதைபதைப்பு இன்னும் குறையவில்லை. ராதா ஒரு உண்மைதான் என்பதை நம்புவதற்குக்கூட அவனால் முடியவில்லை. ஒன்று... தான் ஒரு கனவில் மூழ்கியிருக்கவேண்டும். இல்லாவிட்டால் ராதா ஒரு மோகினியாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால்... தான் ஒரு கடவுளின் உலகத்தில் இருக்க வேண்டும்.

""ஏய் பயணியே! நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா?'' ராதாகிருஷ்ணன் திடுக்கிட்டு எழுந்தான்.

""நீங்கள் எப்போது இந்த நாட்டிற்கு வந்தீர்கள்?''

ராதாகிருஷ்ணன் அதைக் கூறினான். தான் பார்த்த கோவிலையும் குளத்தையும் பற்றியெல்லாம் அவன் பேசினான். இப்போது அவனுக்கு பழைய பதைபதைப்பு இல்லை.

""நீங்கள் எங்கு படிக்கிறீர்கள்?''

""விக்டோரியா கல்லூரியில்... பயணியே... நீங்கள்?''

""நான் எம்.ஏ.வில் தேர்ச்சியடைந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. இப்போதும் வேலை தேடி அலைந்துகொண்டிருக்கிறேன். நான் ஒரு வீழ்ச்சி யடைந்த குடும்பத்திலிருந்து வந்திருப்பவன். திருமணமாகாத மூன்று அக்காக்கள்... ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருக்கும் அப்பா... இது போதாதென்று புண்ணின்மீது பரு என்பதைப்போல அம்மாவுக்கு வாதம்...''

ராதாகிருஷ்ணன் திடீரென்று நிறுத்தினான். இந்தக் கதையையெல்லாம் எதற்கு ராதாவிடம் கூறவேண்டும்? அவளுடைய நாட்டில் தொழிலற்ற நிலையும் வறுமையும் நோயும் இல்லை. இது கடவுளின் உலகமாயிற்றே?

கூர்மையான சவுக்கு மரங்களுக்கு மேலே நீலவானம் வானத்தில் வெண்மையான சூரியன்... கல்தூண்களுக்கு மத்தியில் அவர்கள் நடந்தார்கள். இதற்குள் ராதாகிருஷ்ணனின் பதைபதைப்பு முழுமையாக விலகிச்சென்றுவிட்டது. ராதா அருகில் இருப்பது அவனை சந்தோஷப்படச் செய்தது. இடையே ஒரு சிந்தனை மட்டும் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. இந்த நாமும் இந்த இளம்பெண்ணும் ஓர் உண்மைதானா? இல்லாவிட்டால்... வெறும் கனவா? இந்த விஷயத்தைக் கூறியபோது ராதா குலுங்கிக்குலுங்கி சிரித்தாள்.

""வலிக்கிறதா?''

அவனுடைய கையைக் கிள்ளியவாறு அவள் கேட்டாள். ராதாகிருஷ்ணனுக்கு சிறிய அளவில் வலித்தது. அதனால் அவன் கூறினான்:

""வலிக்கிறது.''

""அப்படியென்றால் நீங்கள் கனவு காணவில்லை பயணியே!''

மீண்டும் சிரித்துக்கொண்டிருக்கும் ராதா... கல்தூண்களுக்கும் நரைத்த சவுக்குமரங்களுக்கும் மத்தியில் அவளுடைய குலுங்கல் சிரிப்பு.

அவர்கள் நடந்து... நடந்து செங்கற்களாலான கோவிலுக்குமுன் வந்து சேர்ந்தார்கள். எண்ணெய் ஊற்றப்பட்டு, திரி போட்டு வைக்கப்பட்டிருந்த கல் விளக்குகள். ராதாகிருஷ்ணன் கோவிலுக்குள் நுழைந்து அந்த விளக்குகள் ஒவ்வொன்றையும் ஏற்றிவைத்தான். ராதாவும் உதவினாள். செங்கல் சுவர்களில் வரிசையாக எரிந்துகொண்டிருந்த கல்விளக்குகள்... ஒரு கோவில்... அங்கு வெள்ளைநிறப் புடவையணிந்து, கூந்தலை அவிழ்த்துவிட்டு நின்றுகொண்டிருக்கும் ஒரு இளம்பெண்... அவளைச் சுற்றி சிவப்புநிறச் சுவர்கள்... சுவர்களில் பிரகாசமாக எரிந்துகொண்டிருக்கும் கல் விளக்குகள்...

நரைத்த சவுக்கு மரங்களுக்கு மத்தியில் தீபங்கள் எரிந்துகொண்டிருக்கும் செங்கற்களாலான கோவில்...

தீபங்களுக்கு மத்தியில் சிறிதுநேரம் அவர்கள் நின்றார்கள். தொடர்ந்து அவர்கள் குளத்தைநோக்கி நடந்தார்கள். ராதாகிருஷ்ணன் தன்னுடைய காலடிச் சுவடுகளை அடையாளம் தெரிந்துகொண்டான். ஒற்றையடிப் பாதையிலிருந்த தன்னுடைய காலடிச் சுவடுகளை... குளத்தின் மிகவும் உயரத்திலிருந்த படிகளில் அவிழ்த்துப் போடப்பட்ட புடவைகளும், ரவிக்கைகளும், பிறவும்...

""என் தோழிகள் இன்னும் குளித்து முடிக்கவில்லை.''

மேலே ஜொலித்துக்கொண்டிருந்த சூரியன்... பளிங்குப்படிகளில் சூரியனின் பிரதிபலிப்பு... வெயில் உருகிக்கொண்டிருக்கும் பளிங்குப் படிகள்... நீல நீரில் கரைந்து போகும் வெயில்...

""தோழிகளே! பயணி...''

ராதா தன் தோழிகளுக்கு ராதாகிருஷ்ணனை அறிமுகப்படுத்தி வைத்தாள். ரதியும், ரமணியும், ரமாவும் ராதா அளவுக்கு அழகிகளாக இருந்தார்கள். முழு நிர்வாணமாக மூன்று அழகிகள்... நீந்திக்கொண்டிருக்கும் நீர்க்கன்னிகள்... நீல நீரில் சிதறிக் கிடக்கும் கறுத்த தலைமுடி... நீருக்கு அடியில் அசைந்து கொண்டிருக்கும் வெளுத்த சரீரங்கள். ராதாவும் ராதாகிருஷ்ணனும் மிகவும் உயரத்திலிருந்த படியில் அமர்ந்தார்கள். அவனுடைய நெஞ்சு தாளம் தவறித் துடித்துக்கொண்டிருந்தது. அவன் இதுவரை ஒரு இளம்பெண்ணின் நிர்வாணக்கோலத்தைப் பார்த்ததில்லை. இப்போது... இதோ... அவனுக்கு முன்னால்...

நீல நீர்நிலையில் முழு நிர்வாணக்கோலத்தில் மூன்று இளம்பெண்கள்...

""தோழிகளே! குளியலை முடிக்கலாமே?''

ராதாவின் தோழிகள் ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவராக நீருக்குள்ளிருந்து வெளியே வந்து பளிங்குப் படிகளில் அமர்ந்தார்கள். வெண்மையான படிகளில் நீரில் நனைந்த நிர்வாண அழகிகள். வெளுத்த தோள்களிலும் மார்புகளிலும் நனைந்த கறுத்த கூந்தல்... மலர்களைப் போன்ற மார்பகங்களில் நீல நீரின் நீல முத்துக்கள்...

""தோழி, நீ குளிக்கவில்லையா?''

ரதி கேட்டாள். ராதா கூறினாள்:

""இன்று பௌர்ணமி இரவு... ஞாபகத்தில் இல்லையா?''

ராதா திரும்பி, ராதாகிருஷ்ணனின் முகத்தைப் பார்த்தவாறு தொடர்ந்து கூறினாள்:

""நிலவு தோன்றிக்கொண்டிருக்கும் இரவு வேளைகளில் நான் இந்த குளத்தில் இரவு முழுவதும் நீந்திக் குளிப்பேன். இந்த படிகளில்தான் அப்போது தூங்குவேன்.''

இளம் சிவப்புநிறப் புடவையை அணிந்திருந்த ரமா, பச்சைநிறப் புடவையை அணிந்திருந்த ரமணி, கறுப்புநிறப் புடவையை அணிந்திருந்த ரதி... நுனிப்பகுதி கட்டப்பட்டிருந்த நனைந்த கூந்தலில் மலர்கள்... பிரம்பு மேஜையின்மீது வைக்கப்பட்டிருந்த பளிங்குப் பாத்திரங்களைப் பார்த்தவாறு ராதாகிருஷ்ணன் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவனால் எதையும் சாப்பிட முடியவில்லை. அளவற்ற சந்தோஷத்தால் அவனால் மூச்சுவிட முடியவில்லை.

""பயணியே... சாப்பிடுங்கள்... சாப்பிடுங்கள்...''

ராதா கூறிக்கொண்டேயிருந்தாள். ராதாவின் தோழிகள் பரிமாறினார்கள்.

மாலை வேளை. செங்கற்களாலான கோவிலின் சிவப்புநிறச் சுவர்களில் சிவந்த வெளிச்சம்... நரைத்த சவுக்கு மரங்களின் கூர்மையான இலைகளிலிருந்து சிவப்புநிற வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. கல்தூண்களிலிருந்து கசிந்து வந்துகொண்டிருந்த சிவப்பு... குளத்தின் வெண்மையான படிகளில் கரைந்து சேரும் சிவப்பு...

""பயணியே... இரவு வரப்போகிறது.''

ராதாவின், மடியில் தலையை சாய்த்துத் தூங்கிக்கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் கண்களைத் திறந்தான்.

""பயணியே... நிலவு உதித்துக் கொண்டிருக்கிறது.''

""ராதா நீ குளிப்பதற்குச் செல்ல வேண்டும்.''

ரதியும் ரமாவும் ரமணியும் கூறினார்கள். வெளுத்த இருட்டு... இருட்டில் நரைத்த சவுக்கு மரங்கள்... மங்கலான இருட்டில் செங்கற்களாலான கோவில்... நிலவு உதித்துக்கொண்டிருந்தது. ராதாவின் தோழிகள் விடைபெற்றுப் பிரிந்து சென்றார்கள்.

""பயணியே... நாம் குளிப்பதற்குச் செல்ல வேண்டாமா?''

ராதாகிருஷ்ணனின் அடர்த்தியான தலைமுடியில் அசைந்துகொண்டிருக்கும் நிலவின் நிறத்தைக் கொண்டிருந்த கை விரல்கள்...

இருட்டில் ஒரு கனவைப்போல தோன்றிய வெண்மையான படிகள்... பளிங்குப் படிகள் காட்சியளிக்கும் நிலவு வெளிச்சம்... நீல நீரில் நிலவின் பிரதிபலிப்பு... ராதாகிருஷ்ணன் தலைக்கு போதை உண்டானது. அவனுக்கு தான் மது அருந்தி யிருப்பதைப்போல தோன்றியது. மிகவும் உயரத்திலிருந்த படியில் அவன் போய் அமர்ந்தான். அவனுக்கு அருகில் நின்றுகொண்டிருக்கும் ராதா... அவள் வெள்ளைநிறப் புடவையை அவிழ்த்தாள். பளிங்குப் படியில் கிடக்கும் அழகான வெள்ளைப் புடவை... புடவையை அவிழ்த்தபோது, அவளுடைய கால்களில் அணிந்திருந்த கொலுசுகளை அவன் பார்த்தான். ஓசை உண்டாக்காத கொலுசுகள்... பாவாடையை அவிழ்த்தபோது, இடுப்பில் அணிந்திருந்த அரைஞாணை அவன் பார்த்தான். பளிங்கின் நிறத்தைக் கொண்டிருந்த இடுப்பில் சுற்றப்பட்டிருந்த தங்கத்தால் செய்யப்பட்ட அகலமான அரைஞாண்.

""பயணியே... வாருங்கள்...''

ராதா அழைத்தாள்.

ஏதோ ஒரு நாடு... அங்கு பௌர்ணமி நிலவு... வெண்மை யான கற்களால் கட்டப்பட்ட ஒரு குளம்... அதில் கொலுசுகளும் அரைஞாணும் மட்டுமே அணிந்திருந்த ராதா... அவளுடைய கைகளில் தான்...