மிழ் இலக்கிய உலகில் தனித்தடம் பதித்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். பல்வேறு கவிதை வடிவங் களைத் தமிழில் இறக்குமதி செய்த பெருமையும் அவருக்கே உண்டு.மதுரை மண்ணில் பிறந்து வைகை ஆற்று நீரை அருந்தி வளர்ந்திருந்தாலும் அவரை அடையாளப்படுத்தியது பாலாற்றங்கரைதான்.

இன்றைய திருப்பத் தூர் மாவட்டத்திலும், அன் றைய வேலூர் மாவட்டத்தில் இருந்த வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக, தமிழ்த்துறைத் தலைவராக இருபது ஆண்டுகள் பணி யாற்றியவர்.தமிழ் இலக் கிய உலகிற்கும், தமிழ் வாசகர் களுக்கும் ஹைக்கூ கவிதை களை பரப்பியவர்.தனது கவிதைகளுக்காக பல விருது களை வாங்கிய பெருமையும் கொண்டவர்.அதில் சாகித்ய அகடாமி விருதும் அடக்கம்.

ss

அவர் இருக்கும் போதே, கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இருக்கும் கவிஞர்களைத் தேர்வுசெய்து, அவர்களில் ஒருவருக்கு கவிக்கோ விருது வழங்கி பாராட்டி வந்தார். அந்த வகையில் முதல் கவிக்கோ விருதை முத்தமிழறிஞர் கலைஞர் பெற்றார் என்பது குறிப் பிடத்தக்கது. வானம் பொழிவதை மறந்தாலும் சிறந்த கவிஞர்களை தேர்வு செய்து விருது வழங்குவதை அவர் மறந்த தில்லை. 2017 ஜூன் 2-ஆம் தேதி கவிக்கோ மறைந்த பின்னரும், அவர் தொடங்கி வைத்த அறக்கட்டளை கவிக்கோ விருதை ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.

Advertisment

அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக் கான விருதினை கவிக்கோ அறக்கட்டளை கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு வழங் கியது.இதற்கான விழா கடந்த 6-ஆம் தேதி வேலூர் சோலை அரங்கில் நடந்தது.

அதில் கவிக்கோ விருதுப் பட்டயத் துடன், அதற்கான 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை யும் ஜெயந்தாவுக்கு வழங்கி கவுரவித்தார் தமிழியக்க நிறுவனத் தலைவரான வி.ஐ.டி விஸ்வநாதன்.

இந்த விழாவில் கவிக்கோவின் சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பான ஆலாபனை யின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூலும் வெளி யிடப்பட்டது.இந்த நூலை மொழிபெயர்த்த வர் ஆ.மா.செகதீசன். கவிக்கோ விருது பெற்ற பின் ஏற்புரை நிகழ்த்திய கவிஞர் நெல்லை ஜெயந்தா, வேலூரில் வெயிலா யிற்றே, வெய்யில் நகரில் விழா நடக்கிறதே என்றார் கள். அதனால்தான் சோலையில் நடக்கிறது என்றேன்.

Advertisment

கவிக்கோவுக்கும் எனக்குமான அந்த உறவினை நினைத்துப் பார்க்கிறேன். ஈரோட்டில் ஒரு கவியரங்கம். நான் கவிக்கோவை இரண்டா வது முறையாக சந்திக்கி றேன். முதல்முறை அவர் தலைமையிலான அரங்கத் தில் கவிதை வாசித்துள் ளேன். ஆனால் அவர் என்னை மறந்துவிட்டார், என் கவிதை நினைவில் வைக்கும் அளவுக்கு சிறப்பாக அமையவில்லை என்பது அதன் பொருள்.

ஈரோடு புத்தக கண்காட்சியிலேயே கவியரங்கம். அப்போது கவிக்கோ, முதலில் இந்த தம்பி பாராட்டும் என என்னைச் சொன்னார். சிறப்பாக பாடுபவர்களைத் தான் கடைசியாக கவி பாடச்சொல்வார்கள். எனக்கு கவிக்கோ அறிமுகம் இல்லை. அதனால் என்னை முதலாவதாகவும் பழனிபாரதியை கடைசியாக வைத்து வரிசைப்படுத்தினார். மேடையில் முதலாவதாக என்னை கவிபாட அழைத்தார். ஆகஸ்ட் மாதம் நடந்த கவியரங்கம் என்பதால் இரவினிலே வாங்கினோம் என தலைப்பு தந்திருந்தார்கள்.

nn

’ஆயுதம் ஏந்தாமல் அஹிம்சையில் கிடைத்ததாலோ என்னவோ சுதந்திரத்தை அவரவர் பாணியில் அவரவர் பார்க்கி றார்கள். சுதந்திரத்தை பற்றி அரசு ஊழியர்கள் கருத்து என்ன தெரியுமா? முதல் தேதியில் கிடைத்திருந்தால் முழுதாய் கிடைத்திருக்கும். 15ஆம் தேதி கிடைத்ததால்தான் பாதியாய் கிடைத்திருக்கிறது. சுதந்திரத்தை பற்றி மருத்துவர் ஒருவரின் கருத்து என்ன தெரியுமா?

எட்டாம் மாதத்தில் பிறந்ததால் சுதந்திரம் எடை குறைவாய் இருக்கிறது, எதற்கும் சில எக்ஸ்ரேக்கள் எடுத்துப் பார்க்கலாம். எண் கணித ஜோதிடர் சொன்னார், சுதந்திரம் வாங்கிய ஆகஸ்ட் மாதத்தின் பெயரில் கஸ்ட் என்று வருவதால் தான் கஸ்டமாக இருக்கிறது, சுதந்திரம் வாங்கிய மாதத்தின் பெயரை ஆகஸ்த் என்று மாற்றிவிட்டால் அது சரியாகிவிடும். கவர்ச்சி நடிகை ஒருவர் கருத்துச்சொன்னார், 47-ல் வாங்கியதற்கு பதில் 27-ல் வாங்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் இளமையாக இருந்திருக்கும். இருந்தாலும் பரவாயில்லை இரவிலாவது வாங்கினார்களே.

யார் இவர்களுக்கு எடுத்துச்சொல்வது சுதந்திர நாளில் கொடிகளைக் குத்துவதற்கு தரப்படுவது குண்டூசிகள் அல்ல. அவை தேசத்திற்காக தெரிந்த தியாகிகளின் உடல், தடவிப்பாருங்கள் தனியாக தலை மட்டும் தெரியும்.

இப்பொழுதெல்லாம் கொடியேற்ற வரும் தலைவர்கள் எல்லாம்கூட ஒரு ஆள் வைக்கிறார்கள் கொடிக்கயிறு இழுக்கப்படுவதற்கு. சொல்லுங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள் இந்த சுதந்திரக்கொடி இழுப்பதற்கு சிறையில் ஒருவர் செக்கையே இழுத்தார் என்று.

சுதந்திரநாளில் கம்பத்தில் ஏறிவரும் கொடிக் கயிற்றில் எடுத்துவரும் பூக்களில் உச்சிக்குப் போனதும் உதிர்த்துவிடும் கொடி. தேசத்திற்காக மாண்ட வீரர்களின் மனைவியரின் கூந்தல் நிறையில்லாமல் வருவதால் இன்றாவது பொருள் தெரிந்துகொள்வோம் இந்தியர்களே. நமது தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறப்பது பிரிக்கப்பட்ட கயிறுகளால் அல்ல பறிக்கப் பட்ட உயிர்களால்’ எனச் சொல்லி கவிதையை நிறைவு செய்தேன்.

கவியரங்கம் முடிந்து எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தோம், அப்போது கவிக்கோ சொன்னார், ஜெயந்தா, இன்றைய கவியரங்கத்தில் கோல் அடித்து விட்டீர்கள் என்று. இது என்னுடைய வார்த்தையல்ல 25 வருடங்களுக்கு முன்பு கண்ணதாசன் என்னைப் பார்த்து சொன்ன வார்த்தை என்று சொன்னார்.

அதன்பின் கவிக்கோ கலந்துகொண்ட கவியரங்கத்தில் முதலில் என் பெயர் இருக்கும்.

இதேபோல் டெல்லியில் ஒரு கவியரங்கம்.

குறித்த சில கவிஞர்கள் வரவில்லை. எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது, நான் தங்கிய அறைக்கு கவிக்கோ வந்து பார்த்தவர், என்ன செய்வது என்றார்.நான் கண்டிப்பாக கவிபாட வருவேன் என்றேன். தமிழ்ச்சங்கத்தில் உள்ள பக்கத்து அறையில் ஊசி, மருந்து எடுத்துக்கொண்டு மேடையேறினேன்.

தட்டினால் திறக்குமா என தலைப்பு… டெல்லி தமிழ்ச் சங்கத்தில் கீழ் அரங்கம், மேல் அரங்கம் என இருக்கும், கீழ் அரங்கம் மக்களால் நிரம்பியிருந்து, மேல் அரங்கம் காலியாக இருந்தது.

அரங்கம்கூட அமைச்சரை போல் இருக்கிறது மேல்மாடி காலியாக என்று பாடினேன்.உடனே கவிக்கோ கேட்டார், மத்திய அமைச்சரைப் போலவா? மாநில அமைச்சரை போலவா?

எதிரே அமைச்சரின் உதவியாளர்கள் எல்லாம் உட்கார்ந்துகொண்டு இருந்தார்கள். நான் சொன்னேன் எதேனும் பிரச்சனை வந்தால் டெல்லி வந்து தீர்த்துக் கொள்ளலாம், டெல்லியிலேயே பிரச்சனை வந்துவிட்டால் என்ன செய்வது, இத்தோடு விட்டுவிடலாம் என்று சொன்னேன். அதெல்லாம் என் நினைவுக்கு வருகிறது. இன்று எனக்கு கிடைக்கும் விருதுகளை எல்லாம் எனக்கு அன்றே தந்தவர் கவிக்கோ மூத்தவர்கள்தான், கவியரங்கில் எப்படி கவி பாடவேண்டும் என எங்களுக்கு கற்றுத்தருகிறார்கள்.

அவர்களின் கற்பித்தல் தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. முரண்களை எப்படி கவிதையாக்க வேண்டும் என்பதை கவிக்கோதான் கற்றுத்தந்தார். வார்த் தைகளை எப்படி வளைப்பது என்பதை அப்துல்காதர் தான் கற்றுத் தந்தார்.

எனக்கு கவிக்கோ அறக்கட்டளை தந்துள்ள ஒரு லட்ச ரூபாய் பரிசை நான் ஒருபோதும் என் சொந்தச் செலவுக்கு பயன்படுத்தப்போவதில்லை. நான் ஓய்வு பெற்றவுடன் நெல்லை ஜெயந்தா அறக்கட்டளை தொடங்கநினைத்துள்ளேன், இந்த தொகையை வைத்தே தொடங்கப்போகிறேன். என் ஓய்வூதியத் தொகையில் இருந்து 10 லட்ச ரூபாயை அந்த அறக்கட்டளையில் சேர்த்து அடுத்த ஆண்டு முதல் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என உறுதிகூறுகிறேன் என்றார் உற்சாகமாக.