வழியில் சந்தித்த அறிமுகமற்ற மனிதர் கேட்டார்: "உங்களுடைய பெயர் என்ன?''
"போதவிரதன்...''
"என்ன காரணத்தால..?''
அந்தக் கேள்வி போதவிரதனைக் கோபம்கொள்ள வைத்தது. பதில் கூறாமல் அவர் நடந்த
வழியில் சந்தித்த அறிமுகமற்ற மனிதர் கேட்டார்: "உங்களுடைய பெயர் என்ன?''
"போதவிரதன்...''
"என்ன காரணத்தால..?''
அந்தக் கேள்வி போதவிரதனைக் கோபம்கொள்ள வைத்தது. பதில் கூறாமல் அவர் நடந்தார். சிறிது தூரம் நடந்தபிறகு, அவருக்கு என்னவோபோல இருந்தது. திரும்பி நடந்து அவர் அறிமுகமற்ற மனிதரைப் பிடித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ss_45.jpg)
"எனக்குத் தெரியாது.'' போதவிரதன் கூறினார்.
"பரவாயில்ல..''
-அறிமுகமற்ற மனிதர் கூறினார்.
"எதனாலுன்னு தெரியாத இந்த பேரு எனக்கு சுமையா தோணுது.''
அறிமுகமற்ற மனிதர் சிரித்தார்:
"அதுக்கு நான் என்ன செய்றது?''
"நீங்களன இந்த பேரை எடுத்துக்கங்க.''
"நான் மீண்டும் வர்றேன்.''
அறிமுகமற்ற மனிதர் கூறினார்: "அப்போ அதை எடுத்துக்கறேன்.''
"அது எப்போ?''
"இன்னும் கொஞ்சம் சுமை கனக்கட்டும்.''
போதவிரதனுக்குச் சந்தேகம் உண்டானது. அவர் கேட்டார்: "அப்போ அது உங்களுக்கும் சுமையா இருக்காதா?''
ஒரு புன்சிரிப்புடன் அறிமுகமற்ற மனிதர் கூறினார்:
"எனக்கு அது பழகிவிட்ட விஷயம். நான்... சஹஸ்ரநாமன்...''
ப்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us