ழியில் சந்தித்த அறிமுகமற்ற மனிதர் கேட்டார்: "உங்களுடைய பெயர் என்ன?''

"போதவிரதன்...''

"என்ன காரணத்தால..?''

அந்தக் கேள்வி போதவிரதனைக் கோபம்கொள்ள வைத்தது. பதில் கூறாமல் அவர் நடந்தார். சிறிது தூரம் நடந்தபிறகு, அவருக்கு என்னவோபோல இருந்தது. திரும்பி நடந்து அவர் அறிமுகமற்ற மனிதரைப் பிடித்தார்.

Advertisment

ss

"எனக்குத் தெரியாது.'' போதவிரதன் கூறினார்.

Advertisment

"பரவாயில்ல..''

-அறிமுகமற்ற மனிதர் கூறினார்.

"எதனாலுன்னு தெரியாத இந்த பேரு எனக்கு சுமையா தோணுது.''

அறிமுகமற்ற மனிதர் சிரித்தார்:

"அதுக்கு நான் என்ன செய்றது?''

"நீங்களன இந்த பேரை எடுத்துக்கங்க.''

"நான் மீண்டும் வர்றேன்.''

அறிமுகமற்ற மனிதர் கூறினார்: "அப்போ அதை எடுத்துக்கறேன்.''

"அது எப்போ?''

"இன்னும் கொஞ்சம் சுமை கனக்கட்டும்.''

போதவிரதனுக்குச் சந்தேகம் உண்டானது. அவர் கேட்டார்: "அப்போ அது உங்களுக்கும் சுமையா இருக்காதா?''

ஒரு புன்சிரிப்புடன் அறிமுகமற்ற மனிதர் கூறினார்:

"எனக்கு அது பழகிவிட்ட விஷயம். நான்... சஹஸ்ரநாமன்...''

ப்