கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.’
-என்பது வள்ளுவர் வாக்கு. இதன் பொருள், நடுநிலையோடு நடந்துகொள்ளாதவர்கள், தாம் கெட்டழியப் போகிறோம் என்பதை உணரவேண்டும் என்பதாகும்.
கெட்டழியப் போகிறவர்கள்தான் நீதிக்கு எதிராக இருப்பார்கள் என்கிற இந்த சத்திய வாக்கு, சாத்தான்குள சம்பவத்திற்கு மிகவும் பொருத்தமானதாகும்.
காவல்துறைச் சத்தான்கள் சிலரால் சாத்தான்குளமே கண்ணீர்க்குளமாக மாறியிருக்கிறது. அங்கே அரங்கேற்றப்பட்ட மிககொடூரமான இரட்டைப் படுகொலைக்கு நீதி கேட்டு, நக்கீரன் எடுத்த முயற்சிகள், இப்போது நம்பிக்கை வெளிச்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, தாமாக முன்வந்து அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய உயர்நீதி மன்ற மதுரைக் கிளை. எனவே உயர் நீதிமன்றத் தையும், அதன் உத்தரவைப் பின்பற்றி விசாரணையிலும் கைது நடவடிக்கையிலும் இறங்கிய சி.பி.சி.ஐ.டி பிரிவினரையும் நாம் முதலில் நம்பிக்கையோடு பாராட்டத்தான் வேண்டும்.
ஊரடங்கு நேரத்தில் கடையைக் கூடுதலாக 10 நிமிடம் திறந்து வைத்தார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்து, சாத்தான் குளத்தைச் சேர்ந்த வர்த்தகர்களான ஜெயராஜையும், திருமணமாகாத அவர் மகன் பென்னிக்சையும் காவல்நிலையத்தில் வைத்து விடிய விடிய கொடூரமாகச் சித்திரவதை செய்து, கதறித்துடித்த அவர்களை ரத்தக் களறியாக்கிய கொடூர காக்கிகள், உயிருக்குப் போராடிய அவர்களை, அந்த நிலையிலேயே கோயில்பட்டி கிளைச் சிறையில் அடைத்து, அவர்களை ஒருவர் பின் ஒருவராகச் சாகடித்த சம்பவம் தமிழகத்தைத் தாண்டியும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இப்படியும் கூட மனிதர்களா என்று அந்த கெடுகெட்ட காக்கிகளை நோக்கி நாடே காறித் துப்பிக்கொண்டிருக்கிறது.
19-ந் தேதி இரவு காக்கிச் சாத்தான்களின் கையில் சிக்கிய அந்த இருவரும், அன்று விடிவதற்குள்ளேயே கொடூரத் தாக்குதல்களால் அரை உயிராக்கப்பட்டுவிட்டார்கள். அந்தக் கிளைச் சிறையில் இதே கொடூரர்களால் தாக்கப்பட்ட சக கைதியான ராஜாசிங் என்பவர், பென்னிக்சால் உட்காரவோ படுக்கவோ முடியவில்லை. இரவு முழுக்க அவர் வலியோடு நின்றுகொண்டே இருந்தார் என்று தாக்குதலின் வலியைச் சொல்லியிருக்கிறார். இப்படி மூன்று நாளாய் எவ்வித சிகிச்சையும் இல்லாமல் உயிருக்குப் போராடிய அவர்களில், பென்னிக்ஸ் 22-ந் தேதி இரவு மரணமடைய, மறுநாள் காலை அவர் அப்பா ஜெயராஜும் உயிரை இழந்தார். இந்த இரட்டைக் கொலைகள்
அரங்கேறிய உடனேயே இந்த விவகாரத்தில் களமிறங்கிய நக்கீரன், கொடூரத்தின் உண்மை நிலையை விசாரித்து உடனுக்குடன் பகிரங்கப்படுத்தி, பொதுமக்களுக்கு நம்பிக்கையையும், குற்றவாளிகளுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியது.
*
அதே நேரம், காவல்துறையும் அரசும், உண்மையை முழுதாக மூடி மறைப்பதிலேயே குறியாக இருந்தன. சாத்தான்குளக் காக்கிகளோ, ’சம்மந்தப்பட்டவியாபாரிகளை விசாரித்தபோது அவர்கள், தங்களை அவதூறாகப் பேசியபடியே தரையில் உருண்டு புரண்டார்கள் என்றும், அதனால் அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டதாகவும் எஃப்.ஐ.ஆரைப் பதிவுசெய்தனர். உலகிலேயே இப்படியொரு ’புத்திசாலித்தனமாக’ எஃப்.ஐ.ஆரை. எங்குமே பார்க்கமுடியாது.
நம் நக

நம் நக்கீரன் டீம். சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, அங்கு நடந்ததை முழுமையாக அறிந்துகொண்டு, ஜெயராஜையும், பென்னிக்சையும், காவல்நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும், எஸ்.ஐ.களான ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், மற்றும் நிலைய காக்கிகளும், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் டீமைச் சேர்ந்த விடலை பையன்களும் சேர்ந்துகொண்டு, கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாம ரத்தம் சொட்டச் சொட்ட, விடிய விடிய தாக்கினார் கள் என்பதை கள நிலவரத்தோடு வெளிப்படுத்தியது.
சாத்தான்குளப் பொதுமக்களும் வியாபாரிகளும் கொலையுண்டவர்களின் குடும்பத்தினரும் போராட்டக்களத்தில் இறங்கிய நிலையிலும், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த அருண் பாலகோபாலன், ’’ஜெயராஜ் நெஞ்சுவலியாலும், அவர் மகன் பென்னிக்ஸ் காய்ச்சலாலும் உயிரிழந்தார்கள்’’ என்று கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், புழுகு மூட்டையை அவிழ்த்துவிட்டார். அது போதாதென்று காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடியும், தன்னிலை மறந்து அவசரகதியில் “அவர்கள் இருவரும் உடல்நிலை சரியில்லாத நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு மரணமடைந்தார்கள்’’என்று அறிவித்தார். விசாரணை நடந்துவரும் நிலையில் அதன் போக்கைத் திசை திருப்பும் வகையிலேயே அவரது அறிவிப்பு உள்நோக்கமுடைதாக இருந்தது.
நக்கீரனோ கொல்லப்பட்ட ஜெயராஜின் மகளும் பென்னிக்ஸின் சகோதரியுமான பெர்சியின் வாக்குமூலத்தையும், ஜெயராஜின் மனைவி செல்வராணியின் வாக்குமூலத்தையும் காணொளி வாயிலாகவும் வெளியிட்டது. அதில் பெர்சி, தன் அப்பாவும் சகோதரரும் லத்தியால் தாக்கப்பட்டும் பின் பகுதியில் லத்தி செருகப்பட்டும் கொடுமை யாக கொல்லப்பட்டார்கள் என்று கதறியதோடு, தன் சகோதரனின் நெஞ்சுப்பகுதி முடியையும் அவர்கள் கையால் பிய்த்துப் பிடுங்கி சித்திரவதை செய்திருக்கிறார்கள் என்றும் அழுதார். ஜெயராஜின் மனைவி செல்வராணியோ, தக்கப்பட்டவர்களின் ரத்தப் பெருக்கை மறைக்க, ஐந்தாறு கைலிகளை தங்களிடமே போலீஸ் வாங்கியது என்பதைச் சொல்லி அழுது அரற்றினார். இதையெல்லாம் கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.
*
இதயத்தை உறையவைக்கும் இந்த இரட்டைப் படுகொலையைக் கண்ட, உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, சாத்தான்குள விவகாரத்தைத் தாமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தியும் பிரகாஷும், டி.ஜி.பி.யும், தூத்துக்குடி எஸ்.பி.யும் காணொளியில் ஆஜராஜவேண்டும் என்று கறார் உத்தரவைப் பிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து ஆஜரான அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், டி.ஜி.பி. முதல்வருடன் ஆலோசனைக் கூட்டத்தில் இருப்பதால் ஆஜராக முடியவில்லை என்றும் அவருக்கு பதில். தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் ஆஜராவார் என்றும் சொல்ல, ஐ.ஜி.யோ, துறை ரீதியிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று சால்சாப்பு சொன்னார்.
*
இதற்கிடையே, நக்கீரன் புலனாய் வுப் பார்வையோடு உண்மைத் தகவல்களைத் தேடியது. ரத்தக் காயத்தோடு குற்றுயிராக இருந்த ஜெயராஜையும் பென்னிக்சையும் அங்குள்ள அரசு மருத்துவமனைக் குக் கொண்டு சென்றபோது, அவர் களின் காயத்தைப் பார்த்த பிறகும், சிகிச்சை கூடக் கொடுக்காமல், போலீஸ் விரும்பியபடி, அவர்களை சிறையில் அடைக்கலாம் என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறார் அங்கிருந்த அரசு மருத்துவரான வினிலா.
அடுத்து அவர்களை அந்தப் படுபாதக டீம் சத்தான்குளம் மாஜிஸ்திரேட் சரவணன் முன் ஆஜர் படுத்தி ரிமாண்டுக்கு அனுப்பக் கேட்டபோது, அவர் ஜெயராஜும் பென்னிக்சும் இருந்த நிலையைக் கூட கவனிக்காமல், அவர்களை ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டிருக்கி றார். இதில் ஒரு நீதிமன்ற உத்தரவும் மீறப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். கவர்னர் மாளிகை தொடுத்த வழக்கின் பேரில் என்னை போலீஸ் கைது செய்த போது, எக்மோர் நீதிமன்றம் விடுதலை செய்தது. அதை எதிர்த்து அரசுத் தரப்பு உயர் நீதிமன்றத் துக்குப் போனது. அப்போது நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் ஒரு அதிரடித் தீர்ப்பைக் கொடுத்தார். அதாவது 7 ஆண்டுக்கும் குறைவான தண்டனை பெறக்கூடிய வழக்குகளில், குற்றச்சாட்டப்பட்ட எவரையும் கைது செய்யக் கூடாது என்பதுதான் அந்தத் தீர்ப்பு. இது தமிழகம் முழுக்க இருக்கும் காவல் நிலையங்களுக்கு எல்லாம் அனுப்பப்பட்டது. அந்த உத்தரவையும் கூட அந்த மாஜிஸ்திரேட் கவனிக்கவில்லை.
அதேபோல், கோயில்பட்டி சிறையில் அந்த ஜெயராஜையும் பென்னிக்சையும் அடைக்கும் போது, அவர்களைப் பரிசோதித்த சிறை மருத்துவர், இருவரின் புட்டப் பகுதியிலும் கடுமையான காயங்களும் ரத்தக்கசிவும் இருந்ததாகப் பதிவு செய்திருந்தார். இதையறிந்த நக்கீரன், இந்த மருத்துவக் குறிப்பு அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதை இதழில் பதிவு செய்ததோடு காணொளி மூலமும் அம்பலப்படுத்தியது. அப்போது, நக்கீரன், அந்த ரிப்போர்ட்டின் முக்கிய பகுதியை அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தது.
மற்ற ஊடகங்கள் அந்த அறிக்கையைத் தாங்களே கண்டுபிடித்ததாகக் காட்ட முயன்றன. எனினும், அது நக்கீரன் வெளியிட்ட ஆவணம் என்பதை அந்த அடிக்கோடுகளே அம்பலப்படுத்தின.
இதோடு நிறுத்தாமல், பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு மருத்துவமனையில், இருவரின் உடலையும் உடற்கூராய்வு செய்வதற்கு முன் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தலைமையிலான குழு, ஆராய்ந்ததையும் நக்கீரன் கூர்ந்து கவனித்தது. அப்போதும், கொல்லப்பட்ட இருவரின் உடலிலும் இருந்த கொடூரமான காயங்களை அந்தக் குழு குறித்துக் கொண்டதையும், அப்போது அவர்களின் புட்டப் பகுதியில் தோலே இல்லாததோடு , தசைகள் கிழிந்திருந்ததையும், ஜெயராஜின் ஆண்குறிப் பகுதி பூட்ஸ் காலால் நசுக்கப்பட்டு இருந்ததையும் அப்போது அங்கிருந்த ஒருவரின் வாக்குமூலத்தின் மூலமே நக்கீரன் வெளியிட்டது.
பிணக் கூராய்வுக்கான குழுவில், தடயவியல் பேராசிரியர், உதவி பேராசிரியர் ஆகியோரோடு, இணைப் பேராசியர் ஒருவரும் இருக்கவேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியிருந்தும், இணைப் பேராசிரியருக்கு பதிலாக தடயவியல் மாணவர் ஒருவரை நியமித்திருந்தனர். இந்தக் குழறுபடியையும் நம் நக்கீரன் வெளிப் படுத்தியது. பின்னர் பிணக் கூராய்வை நடத்திய இந்தக் குழு கொடுத்த அறிக்கையில், பெரிதாக மறைக்கமுடியாமல் அவர்கள் இருவரின் உடலில் இருந்த காயங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதையும், ஆசன வாயில் பல இடங்களில் சதை கிழிந்திருந்ததையும் அதீத ரத்தக் கசிவால் ஏற்பட்ட அதிர்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்ததோடு, கடுமையான உடல் மற்றும் மன சித்திரவதைகள் மூலம் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதிலே மருத்துவர் குழு குறிப்பிட்டிருந்தது.
இதில் காட்டப்பட்டிருந்த காயங்கள் கூட குறைவுதான். எனெனில், துல்லியமாகத் தடயங்களைக் காட்டும் ’டிஜிட்டல் அட்டாப்சி’ முறையில் பிணக் கூராய்வை நடத்தாமல் , சதாரண பழைய முறையிலேயே பிரேதப் பரிசோதனையை நடத்தியிருக்கிறார்கள். என்றாலும் அதிலேயே சித்திரவதைக் காயங்கள் நிறைய தெரிந்திருக்கின்றன. இதையும் நக்கீரன் அம்பலப்படுத்தியது. இப்படி அனைத்து ஆதாரங்களையும் அவ்வப் போது நக்கீரன் வெளியிட்டிருக்கும் நிலையில்தான் மஜிஸ்திரேட் பாரதிதாசன் மிரட்டப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.
*
சாத்தான்குள சம்பவத்தில் உண்மைகளை மறைக்க நடக்கும் தீவிர முயற்சிகளைப் புரிந்துகொண்ட உயர் நீதிமன்றம், கோயில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசனை விசாரிக்கச் சொன்னது. அவர் 28-ந் தேதி மதியம் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்குச் சென்றபோது, அங்கே இருந்த கூடுதல் எஸ்.பி.குமாரும், டி.எஸ்.பி பிரதாபனும், நீதிமன்ற நடுவருக்கு ஒரு வணக்கம் கூடச் சொல்லாததோடு, அவரை மிரட்டும் வகையிலேயே நடந்துகொண்டனர். அதையும் மீறி அவர் அங்கிருந்த பதிவேடுகளை ஆராய்ந்ததோடு, கேமராப் பதிவுகள் அழிக்கப்பட்டதையும் கண்டு பிடித்து, காட்சிப் பதிவை மீட்கும் முயற்சிக்காக அவற்றை கைப்பற்றி இருக்கிறார். மேலும் அங்குள்ள காவலர் மகாராஜன் என்பவரை அவர் விசாரித்தபோது, விசாரணைக்கு ஒத்துழைக்காத அந்தக் காவலர், நீதிமன்ற நடுவரையே ‘உன்னால் எங்களை ஒன்னும் புடுங்கமுடியாது’ என்று ஒருமையில் மிரட்டினார். அங்கிருந்த காவலர்கள் ஒத்துழைக்க மறுத்த நிலையில், பெண் தலைமைக் காவலரான ரேவதி மட்டும், மிகுந்த பயத்தோடு நீதிமன்ற நடுவரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.
அவரையும் அங்கிருந்தவர்கள் மிரட்ட முயல்வதைக் கண்ட நடுவர், கதவை பூட்டி அவருக்கு தைரியமூட்டி பேசவைத்த போது, ’அன்று இரவு முழுதும் அப்பாவையும் மகனையும் கடுமையாக அடித்தார்கள், எனக்கு கஷ்டமாக இருந்தது, நான் தண்ணீர் கொடுத்தபோது அதை இன்ஸ்பெக்டர் தட்டிவிட்டுவிட்டார். அவர்கள் அடித்தபோது ஏற்பட்ட ரத்தக்கறை டேபிளிலும், லத்தியிலும் இருக்கும்’ என்று, அரங்கேற்றப்பட்ட கொடூரத்தை மனசாட்சியோடு உணர்த்தினார். இதைத் தொடர்ந்து, ஏ.எஸ்.பி.யும் டி.எஸ்.பி.யும் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதையும், தான் காவலர் மகாராஜனால் மிரட்டப்பட்டதையும் நீதிமன்ற நடுவர், உயர் நீதிமன்றத்திடம் ரிப்போர்ட் செய்தார். இதையெல்லாம் இஞ்ச் பை இஞ்சாக வெளியிட்ட நக்கீரன். நடுவரின் அந்த அறிக்கையில் இருந்த அதிர்ச்சித் தகவல்களையும் காணொளி மூலம் வெளியிட்டது.
இந்த நிலையிலும் இந்த இரட்டைக் கொலையை மறைக்க முயன்ற ஏ.எஸ்.பி.குமாரை, நீலகிரி அமலாக்கப் பிரிவுக்கும், டி.எஸ்.பி.பிரதாபனை புதுக்கோட்டை நில அபகரிப்புக் குற்றப் பிரிவுக்கும் மாற்றி, அவர்களின் பணியைத் தொடரவைத்திருக்கிறது கொஞ்சமும் அசராத எடப்பாடி அரசு.
இந்த இரட்டைக் கொலையை மறைக்கும் முயற்சியில் மாவட்ட அளவிலிருக்கும் காவல்துறை அதிகாரிகள் தொடங்கி மாநில முதல்வர் வரை அனைவரும் ஒரே கோணத்தில் செயல்படுவதைக் கண்டு நீதிமன்றமே திகைத்துப் போயிருக்கிறது. இந்த நிலையில்தான் வேறு வழியில்லாமல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக அறிவித்தார் எடப்பாடி. இதுவும் கால நீட்டிப்பிற்கான ஒரு தந்திர முயற்சிதான் என்பதைப் புரிந்துகொண்ட நீதிமன்றம், சி.பி.ஐ. இந்த வழக்கை கையில் எடுக்கும் வரை, தடையங்களை யாரும் அழிக்காமல் இருக்க, சத்தான்குளம் காவல் நிலையத்தை மாவட்ட வருவாய்த்துறை கையில் எடுக்கவேண்டும் என்றும் சி.பி.ஐ.டி பிரிவு, உடனடியாக இதில் முதல்கட்ட விசாரணையை நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
*
இதன் அடிப்படையிலேயே சி.பி.சி.ஐ.டி. பிரிவின் ஐ.ஜி. சங்கர் தலைமையிலான குழு வேகமாகக் களமிறங்கியது. அதே வேகத்தில் சம்மந்தப்பட்ட காக்கி கொடூரர்கள் மீது கொலை வழக்கைப் பதிவுசெய்தது. அதே நேரம் தென்மண்டல ஐ.ஜி.யாக முருகன் நியமிக்கப்பட, அவரும் அதிரடியாகக் களமிறங்கிய நிலையில், கொலைகார காக்கிகளைக் கைது செய்யும் படலம் அரங்கேறியது. 1-ந் தேதி இரவுக்குள் கொலைகார காக்கிகளான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.கள். ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் முதல்கட்டமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நடவடிக்கைகள், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை பரவலாக ஏற்படுத்திருக்கிறது. நக்கீரன் கையில் எடுத்த இந்த முயற்சிகள், மக்கள் மத்தியில் ஆறுதலையும் நம்பிக்கையையும் எற்படுத்தியிருக்கிறது. சத்தான்குள இரட்டைப் படுகொலையில் தொடர்புடைய மிச்ச காக்கிகளையும், பிரண்ட் ஆஃப் போலீஸ் டீமை சேர்ந்த கொடூரர்களையும் கைது செய்வதோடு, இந்த படுபாதகத்தை மறைக்க முயன்ற காவல்துறை அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். அந்த வகையில் முதல்வர் எடப்பாடியும், குறைந்தபட்சம் தன் வசம் உள்ள காவல்துறையின் பொறுப்பில் இருந்தாவது உடனடியாக விலகவேண்டும்.
-நம்பிக்கையோடு,
நக்கீரன்கோபால்
_____________
பாராட்டுக்குரிய பெண் காவலர் ரேவதி
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த கொடூர சித்திரவதைகள் பற்றிய அத்தனை உண்மைகளையும் கொஞ்சம் கூட மறைக்காமல் நீதிமன்ற நடுவர் பாரதிதாசனிடம் சாட்சியமாகத் தந்து, ஒட்டுமொத்த தமிழக மக்களின் பாராட்டுதல்களையும் தன் பக்கம் குவித்துக்கொண்டிருக்கிறார், அங்கே பணியாற்றிய தலைமைக் காவலரான ரேவதி. அவரது வாக்குமூலம், இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்ப முடியாதபடி வலுவாக அமைந்திருக்கிறது. விடிய விடிய ஜெயராஜும் பென்னிக்சும் ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கப்பட்டதையும், அவர்களின் ரத்தம் லத்திக் கம்புகளிலும், மேஜையிலும் படிந்திருப்பதையும் தெரிவித்து, தடய ஆதாரத்துக்கும் அவர் உதவியிருக் கிறார்.
அச்சத்திற்கு மத்தியிலும் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மனிதாபிமான அடிப்படை யில் உண்மையை உரத்துச் சொன்ன, ரேவதிக்கு உரிய பாதுகாப்பைத் தரவேண்டும் என்று உத்தர விட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், அவரைத் தொலைபேசி யில் தொடர்பு கொண்டும் வாழ்த்தியிருக்கிறார்கள். தைரிய மாக நீதியைக் காப்பாற்றும் நோக்குடன், பாரதிகண்ட புதுமைப்பெண்ணாக செயல்பட்ட தலைமைக்காவலர் ரேவதிக்கு, நமது மனமுவந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.