எட்டாவது சுரம் என்கிற பெயரில் நாகூர் அனிபாவின் (1925 - 2025) நூற்றாண்டு விழாவை கன்னியா குமரியில் கொண்டாடினர் அவரது ரசிகர்கள். இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகூர் அனிபாவின் இசை, வாழ்வு, அரசியல் குறித்து திருவண்ணாமலை தமிழ்ச் சங்க செயலாளரும், நாகூர் அனிபா குறித்து சூரியபிறை என்கிற பெயரில் நூல் வெளியிட்டுள்ள விளிம்பு பதிப்பக உரிமையாளருமான எழுத்தாளர் காதர்ஷா பகிர்ந்துகொண்ட கருத்துக்கள்:
திராவிடத்தின் முழக்கக் குரலாக, தமிழர்களின் இதயமெல்லாம் நுழைந்த குரல் அனிபாவினுடையது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நீங்கா இடம்பெற்று இந்த மண்ணைவிட்டு மறைந்திருந்தாலும் நூறு ஆண்டுகளைத் தொட்டிருக்கும் இவரின் நூற்றாண்டு புகழை கொண்டாடப்பட வேண்டியிருக்கிறது.. அவர்தாம் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா ’அல்லாவை நாம் தொழுதால்’என்று பாடும் இஸ்லாமிய பாடகர் என்பது நாகூர் அனிபாவின் அடையாளமாக இருந்தாலும்,‘அண்ணா அழைக்கிறார் என்று திராவிட முன்னேற்றக் கழக மேடைகளில் இவரது இசைவீச்சு எழுச்சியான உணர்வை உருவாக்கிடும். அது தொண்டர்களுக்கு உத்வேகமாகவும் நாடி நரம்புகளை புடைக்கும் உந்து சக்தியாக்கிடும் அருமருந்தே. பள்ளிப் பருவத்தில் பாடத் தொடங்கிய அந்த குரல் மெல்ல மெல்ல உருத்திரண்டு தமிழ்நாட்டின் அடையாளக் குரலாகி பரிணமித்தது.
இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணத்தில் 1925 டிசம்பர் 25ல் முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ஹனிபா.
இவரது தாயார் வெளிப்பட்டிணத்தைச் சேர்ந்தவர். பாட்டனார் (அம்மாவின் அப்பா) முத்து ராவுத்தர் இராமநாதபுரம் அரண்மனையில் ஆயுதக் கிடங்கு பாதுகாவலர் - பராமரிப்பாளராகப் பணியாற்றினார். இஸ்மாயில் முஹம்மது ஹனிபா என்பது அவரது இயற்பெயர்.
தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் அவரது பெயரோடு நாகூரும் சேர்ந்துகொண்டது. ஹனிபாவின் தந்தையார் இஸ்மாயில் முஹம்மது வெளிநாட்டு சம்பாத்தியத்தில் வாங்கி வந்த கிராமபோன் இசைத்தட்டில் கேட்ட பாடல்கள் குறிப்பாக தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா, பி.யு.சின்னப்பா, முகமது ரஃபி உள்ளிட்ட திரைப்பாடகர்களின் பாடல்களை கேட்டுக் கேட்டு நாகூர் அனிபா தன்னை பாடகராக வடிவமைத்துக் கொண்டார். திருமண நிகழ்வுகளிலும் இதர மங்கள நிகழ்வுகளிலும் குழுவினருடன் சேர்ந்து இஸ்லாமிய பாடல்கள் பாடிக்கொண்டிருந்த நாகூர் அனிபாவுக்கு பொது நிகழ்வில் தனிக் குரலில் பாடும் வாய்ப்பு கிடைத்தது 1946 ஆம் வருடம் அன்றைய ராமநாத புரம் மாவட்டம் அபிராமத்தில். தமிழ்நாட்டின் பிரபல கை- தயாரிப்பு நிறுவனமான சங்கு மார்க் இல்ல திருமண நிகழ்வில் பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைக்க நாகூர் அனிபா தனிப்பாடலாக பாட ஆரம்பித்தார்..
இஸ்லாமிய இசை மேடைகளிலும் திராவிடர் கழக தி.மு.க. மேடையிலும் தொடர்ச்சியாக அனிபாவின் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டே இருந்தது. தன்னுடைய குரல் வழியாக 60 ஆண்டுக்கு மேலாக தமிழ் சமூகத்தை தன்பக்கம் வைத்திருந்தார். எல்லா எல்லைகளையும் கடந்து மக்கள் அவர்பால் ஈர்ப்புக் கொள்ள அவரின் குரல் அவருக்கு துணை இருந்தது.
அரசியல் ரீதியாக அவரையும் அவர் சார்ந்த கட்சியையும் கடுமையாக எதிர்ப

அரசியல் ரீதியாக அவரையும் அவர் சார்ந்த கட்சியையும் கடுமையாக எதிர்ப்பவர்கள் கூட கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே என்று பெருங்குரலெடுத்து பாடும் குரல்வளத்தில் தங்களை ஒப்புக் கொடுத்தார்கள்.
நாகூர் ஹனிபாவின் வருகை தமிழ் இசை உலகிலும் இஸ்லாமிய இசை உலகிலும் பேரலையாய் உருவெடுத்து, இசை உலகை தன் பக்கம் சுருட்டிக்கொண்டது நாகூர் அனிபாவின் குரல். அதிலிருந்து கம்பீரம், வசீகரம் எல்லாம் சேர்ந்து இந்த மாயத்தை நிகழ்த்தின. தன்னுடைய இசைப்பயணத்தின் திசைவழி எதுவெனும் தீர்க்கம் நாகூர் அனிபாவிடம் இருந்தது. தன் குரல்வழி வெளிப்படும் பாடல் கேட்டுக்கொண்டி ருக்கும் கடைசி மனிதர்க்கும் சென்று சேர வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். எளிய மெட்டு, எளிய இசை, எளிமை யான சொற்கள் என ஒவ்வொரு எளியதன் மீதும் அவர் கவனம் செலுத்தினார்.
நாகூர் அனிபா மறைந்தபோது அவரது உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு வெளியில் வந்த கலைஞர் ஊடகக்காரர் களிடம் இப்படி கூறினார், இசைமுரசு என்று ஒருவரைத்தான் சொல்ல முடியும். அவர்தான் நம்மை விட்டு இன்று பிரிந்த என்னுடைய ஆருயிர் நண்பன் இசைமுரசு நாகூர் அனிபா.
மொழி அரசியலையும் பண்பாட்டையும் கலைகளையும் வேறுபடுத்திப் பார்க்கும் இந்த தமிழ் மனம் ஹனிபாவிடம் இருந்தது. தமிழின் மீதான பெருங்காதல் காரணமாக இந்தி எதிர்ப்பு அரசியல் போராட்டத்தில் பள்ளிப் பருவத்திலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் நாகூர் அனிபா. செந்தமிழை மேய வந்த இந்தி என்ற எருமை மாடு என்று பாட்டால் திட்டிய நாகூர் அனிபா, கலை என்னும் வடிவத் திற்கு வரும்போது அந்த எல்லைகளை கடந்து பயணித்தார். தமிழ்நாட்டிலிருந்து தியாகராஜ பாகவதரும் ஹிந்தியில் இருந்து முகமது ரபீ ஆகியோரை தான் பாடும் முறைக்கான மானசீக குருக்களாக ஏற்றுக்கொண்டார்.
எளிய மெட்டு, எளிய சொற்கள் கொண்ட பாடல் எளிமையான இசைக் கோர்ப்பு இதையே ஹனிபா பாடல்களின் சூத்திரமாக இருந்தன. தன்னுடைய குரலை அவர் பெரும்பலமாக எண்ணினார். ஒரு இசை நிகழ்வு நடக்கிறது என்றால் கடைசி வரிசையில் அமர்ந்து கேட்கும் காதுகளுக்கும் தான் என்ன பாடுகிறேன் என்பது தெளிவாக கேட்கவேண்டும் என்று விரும்பினார். கர்நாடக இசை அறியாதவர் என்றாலும் அவரின் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் அபாரமானது. கேட்கும் பாடலை உள்வாங்கிக் கொண்டு பிசகில்லாமல் திருப்பி வெளிப்படுத்தும் ஆற்றல் அவரிடம் இருந்தது. இந்தித் திரை இசையில் மாபெரும் கலைஞரான நௌஷாத் மீது நாகூர் அனிபாவுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. பத்து வயதில் நாகூர் அனிபாவை நௌஷாத்தின் பாடல்கள் ஈர்த்திருந்தன.
தனது 30ஆவது வயதில் சென்னை வர்த்தகர் பி.அப்துல் ரஹீம் என்பவர் மகள் ரோஷன் பேகம் என்பவரை 26-11-1953ஆம் நாள் சென்னையில் மணந்தார். இவர்களுக்கு இரு ஆண் மற்றும் நான்கு பெண் குழந்தைகள். சென்னையில் கோட்டூர்புரத்தில் வாழ்ந்து வந்தார். தன்னுடைய புதல்வர்களுள் ஒருவருக்கு அவரின் நினைவாக நௌஷாத் என்று பெயரிட்டார்.
நாகூர் அனிபாவுக்கு பாடல்கள் எழுதியதில் நாகூர் சலீம் முக்கியமானவர். அந்த நாளிலே மக்கா நகரம், அன்பு மார்க்கம் தந்த எங்கள், திருமறையின் அருள் மொழியில், தினம் ஒரு நியாயமா மாறலாமா என்பன போன்ற பாடல்கள் நாகூர் சலீம் அவர்களால் எழுதப்பட்டன. நாகூர் அனிபாவின் புகழ் உச்சிக்கான பாடல் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடலை எழுதியவர் கிளியனூர் அப்துல் சலாம். மக்கத்து மலரே மாணிக்கச் சுடரே, இருளில் நிலவாக பிறந்தார், இறைவா உன்னை தேடி நின்றேன் போன்ற பாடல்களும் இவர் எழுதியது. இவர்களோடு, மதிதாசன், தா காசிம், வீரை அப்துல் ரகுமான், நாகூர் சாதிக், அபிவை தாஜுதீன், திருவை அப்துல் ரகுமான், தேங்கை சர்புதீன், கவிஞர் இ .பத்ருதீன், கவிஞர் ஹிலால் முஸ்தபா, கா அப்துல் கபூர் ஆகியோர் இவருக்கு பிரசித்தமான பாடல்களை எழுதிக்கொடுத்தவர்கள்.
தன் சிறு பருவத்தில் இரவு வேளைகளில் வீட்டின் பின்னால் அமர்ந்துகொண்டு உரக்க பாடிக்கொண்டிருந்த அனிபா என்னும் சிறுவனின் குரலில் இருக்கும் ஆற்றலை அறிந்து தன்னிடத்தில் வரவழைத்து கொஞ்சம் கொஞ்சமாக அனிபாவை பட்டை தீட்டியவர் புலவர் ஆப்தீன். தனக்கு கிடைத்துக்கொண்டிருந்த வாய்ப்பினை இன்னொருவருக்கு ஒரு கலைஞன் விட்டுக் கொடுப்பது அத்தனை எளிதான ஒன்று அல்ல. ஆனால் அந்த மனம் எஸ்.எம்.ஏ. காதரிடம் இருந்தது. செல்வமும் செல்வாக்கும் கொண்ட குடும்பப் பின்னணி கொண்டவர் காதர். நாகூர் தர்காவின் ஆஸ்தான இசைக்கலைஞராகவும் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவராகும் திகழ்ந்தவர் எஸ்.எம்.ஏ.காதர். இவர் தான் நாகூர் அனிபாவின் குரல் முதன்முதலில் இசைத்தட்டில் வருவதற்கு காரணமாக இருந்தார்.
நாகூர் அனிபா பாடிய மேடைகளில் இஸ்லாமிய மேடைகள் ஏராளம் பாடுவதற்கு அவர் அழைப்பார்கள். அங்கு சென்று பாடுவார். பாடிமுடிந்ததும் அது நிறைவு பெற்று விடும். ஆனால் அரசியல் மேடையில் அப்படி யல்ல பாடிமுடித்ததும் அங்கிருந்து விடை பெற்றுக் கொள்ளும் கலைஞராக மட்டும் நாகூர் அனிபா இருக்கவில்லை. அதற்கு மாறாக அவர் ஒரு கட்சிக் காரனாக இருந்தார். தி.மு.க. ஆரம்பிக்கப்பட்ட போது கட்சிக் கிளையை தன்னுடைய நாகூரில் உருவாக்கினார், கட்சி அறிவித்த போராட்டங் களில் முன்னணியில் நின்றார், சிறை சென்றார், கட்சி மேடைகளில் சமயப் பாடல்கள் பாடி நாம் அறிந்ததில்லை. ஆனால் இஸ்லாமிய மேடை களில் கட்சிப் பாடல்கள் பாடினார். சில பல இடங்களில் அதற்கான எதிர்வினை வந்தபோது அதனையும் ஏற்றுக்கொண்டார்.
250க்கு மேற்பட்ட இஸ்லாமியப் பாடல் களும், திரை இசையில் கணிசமான பாடல்களும் பாடியுள்ளார். திரைப்பாடல்கள் வாய்ப்புகள் வந்தபோதும் தவிர்த்தார். பெரும்பாலும் இசை ஞானி இளையராஜாவின் இசையில் பாடினார்.
இளையராஜாவாக அறியப்படுவதற்கு முன் நாகூர் அனிபா தன்னுடைய பாடல் ஒன்றுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு இளையராஜாவுக்கு கொடுத்தார்.
1969இல் அண்ணா மறைகிறார். அண்ணா வுக்கு அடுத்து யார் என்னும் கேள்வி கலைஞருக் கும் நாவலருக்கும் இடையே எழுகிறது. அதில் கலைஞரின் பின்னால் அமைச்சர்களும் கட்சியும் திரளுகிறது. அடுத் தடுத்த அரசியல் நிகழ்வுகள் வேகமெடுக்கிறது.
1971 பொதுத் தேர்தலில் மொத்தமல்ல 234 தொகுதி களில் 184 தொகுதிகளை தி.மு.க. பிடிக்க கலைஞர் முதல் வராகிறார். 1972 எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து வெளியேறிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்குகிறார்.
1974 இல் மாநில சுயாட்சி கோரிக்கை முன்னுக்கு வருகிறது... இதே 1974 அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை நாடு முழுவதும் பிரகடனப்படுத்தினார்.
அவசரநிலையை எதிர்த்து களமாடிய மாநில கட்சிகளில் தி.மு.க. முன்னணி பாத்திரமடைகிறது. அவசர நிலையை எதிர்த்து போராட்டத்தில் தி.மு.க.வினர் சிறைவாசிகள் ஆனார்கள். அங்கு சித்திரவதைக்கும் ஆளானார்கள். இந்த பெரும் சம்பவங்கள் நடந்தபோது எந்த நிலையிலும் கலைஞரையும் தி.மு.க.வையும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காதவராக அவருடனே நாகூர் அனிபா இருந்தார்.
அண்ணாவின் காலத்தில் தி.மு.க.விலிருந்து ஈ.வி.கே. சம்பத் வெளியேறியபோது வளர்த்த கடா மார்பில் பாய்ந்த தடா என்று பாடினார். கலைஞர் காலத்தில் எம்ஜிஆர் கட்சியில் இருந்து பிரிந்தபோதும், வை.கோபால்சாமி பிரிந்தபோதும் அதே பாடலை பாடினார்.
நீதிக் கட்சியில் இருந்தார், அது திராவிட கழகமாக பெயர் மாற்றம் பெற்றபோது தொடர்ந்தார், திராவிட கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா அவர்கள் ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகம் கண்டபோது அவரை தொடர்ந்தார். தி.மு.க.வில் அறிவகம் திறந்தபோதும் அன்பகம் திறக்கப்பட்டபோதும் அண்ணா அறிவாலயம் கண்டபோதும் இருந்தார். எல்லா தொடக்கங்களிலும் போதும் தி.மு.க.வின் எல்லா திறப்புகளின்போதும் நாகூர் அனிபா குரல் ஒலித்தது.
தி.மு.க. சார்பில் தேர்தலிலும் நின்று இருக்கிறார்.
1957 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களம் இறக்கப்பட்ட நாகூர் அனிபா அந்த தேர்தலில் தோல்வியை தழுவினார். பின்னாளில் ஒரு முறை வேலூர் தொகுதியிலும் போட்டியிட்டார். வெற்றிபெற வில்லை. தமிழ்நாட்டில் மேல்சபை இருந்தபோது கலைஞர் ஒருமுறை நாகூர் அனிபாவை மேல்சபை உறுப்பினராக நியமித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற மேல்சபைக்கு உறுப்பினராக தான் தேர்வு செய்யப்பட்டபோது பெரியாரை சந்தித்து வாழ்த்து பெற்றார் நாகூர் அனிபா. பெரியாரி டம் வாழ்த்து பெற்று விடைபெற்று வெளியில் வந்து விட்டார் அனிபா. பெரியார் மீண்டும் அனிபாவை அழைத்து வரச் சொல்கிறார். பெரியார் தன்னுடைய மணி பர்சை உதறி உதறி அந்த காலத்து வெள்ளி நாணயம் ஒரு ரூபாய் எடுத்து அவருக்கு கொடுக்கிறார்.
பலபேர் பெரியாரிடம் இந்த நாணயம் ஒன்று தங்களுக்கு கிடைக்காதா என்று ஏங்கிய காலம் அது. காயிதே மில்லத் இறந்தபோது அவரின் உடல் பொதுமக்கள் மரியாதைக்காக சென்னை புது கல்லூரியில் வைக்கப் பட்டிருந்தபோது மரியாதை செய்ய அங்கு சிறுநீர் டின்னுடன் பெரியார் வர, அவரை வேனில் இருந்து இறக்கி கி.வீரமணியும் அவரும் அழைத்துச்சென்றிருக் கிறார்கள்.
2007ல் வக்பு வாரியத் தலைவராக நியமனம் செய்து பணியாற்றச்செய்தார் கலைஞர். தன்னுடைய வளர்ச்சி, வருமானம் வழியாக வந்த பொருளீட்டலில் அவர் கட்டிய இரண்டு வீடுகளுக்கும் அண்ணா இல்லம், கலைஞர் இல்லம் என்று பெயரிட்டார்.
1940ல் அண்ணாவுடன் ஆரம்பித்த நாகூர் அனிபா வின் நட்பும் நெருக்கமும் ஆழங்கால் பட்டதாக இருந்தது. பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அண்ணா வருகை தந்த போது, பட்டுக்கோட்டை அழகிரி தான் நாகூர் அனிபாவை அண்ணாவிடம் முதல்முதலாக அறிமுகம் செய்கிறார். கூட்டத்தில் அண்ணாவும் பட்டுக் கோட்டை அழகிரியும் சிறப்பு பேச்சாளர்கள்.
அவர்கள் பேசத்தொடங்கும் முன்பு நாகூர் அனிபா பாடத் தொடங்குகிறார். கூட்டத்திலிருந்து நாகூர் அனிபா நெற்றியை குறிவைத்து முட்டை ஒன்று வீசப் படுகிறது, முகம் எங்கும் முட்டை வழிந்தோடுகிறது ஆனால் அனிபா தன் பாடலை இடைநிறுத்தவில்லை. பாடலைத் தொடர்கிறார். மேடையில் இருந்த அண்ணா எழுந்துவந்து தன்னுடைய தோளில் அணிந்திருந்த துண்டைக் கொண்டு அனிபாவின் முகத்தை துடைத்து விடுகிறார். இந்த நிகழ்வை நினைவுகூரும் நாகூர் அனிபா, அண்ணாவின் செயலை தாய்ப்பாசத்துடன் இணைத்துப் பார்க்கிறார். என் தாயின் அன்பை அண்ணாவிடம் கண்டேன் என்கிறார்..
கலைஞர் நாகூர் அனிபா இடையான உறவு ஆழமும் அடர்த்தியும் கொண்டது. கிட்டத்தட்ட இருவ ரும் சமகாலத்துக்காரர்கள். இருவரும் அரசியல் பழகத் தொடங்கிய இடம் திருவாரூர்தான். இருவரும் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட இடமும் திருவாருரே. இருவரும் அப்போது இருபது வயதைக்கூட கடந்திருக்க வில்லை. பள்ளி விடுமுறை நாட்களில் நாகூர் அனிபா அருகில் இருக்கும் திருவாரூரில் இருந்த உறவுக்காரர் இல்லத்தில் சிலகாலம் சென்று தங்கிவாழ்ந்தார். திருவாரூர் வாழ்க்கை அவரின் அரசியல் பயணத்தின் பயிற்சிக்களமாக ஆகியது. அங்கு இயக்கத்தை கட்டும் பணியில் நண்பர்களோடு சேர்ந்து செயல்பட்டார். திருவாரூர் வாழ்க்கையில்தான் கலைஞரின் அறிமுகம் ஏற்பட்டது. அந்த அறிமுகம் கடைசி வரை அதே நெருக்கத்திலிருந்தது. பொதுவெளியில் எல்லோரையும்போல் கலைஞர் என்று சிறப்பித்து அழைத்தாலும் மு.க என்று அழைப்பது அவருக்கு நெருக்கமாகவும் விருப்பமாகவும் இருந்தது..
பதின்ம வயதில் நாகூர் அனிபா எப்படி விடுமுறை காலங்களில் நாகூரில் இருந்து திருவாரூர் நோக்கி பயணப்பட்டாரோ, அதேபோல் அதே பதின்ம வயதில் கலைஞரும் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருக்குவளை இலிருந்து நாகூர் நோக்கி பயணித்திருக்கிறார். நாகூர் இளைய வர்களின் கலை இலக்கிய ஆசானாக இருந்த புலவர் ஆப்தின், கவிஞன் குடிசை என்று ஒன்று நாகூரில் அமைத்திருந்தார். புத்தகங்களாலும் பாடல்களாலும் நிரம்பிய அந்த குடிசை அப்போது இளையோரின் சந்திப்பு மையமாக இருந்தது. அவர்கள் கூடிப் பேசினார் கள் பாடினார்கள் கவிதை எழுதினார்கள் புத்தகம் வாசித்தார்கள் இந்த கவிஞன் குடிசை நோக்கி கலைஞரின் கால்களை நாகூர் நோக்கி நகர வைத்தது. கலைஞருக்கும் நாகூர் அனிபாவுக்கும் இடையில் ஆழமான புரிதல் இருந்தது. எந்த நிலையிலும் அதில் ஒரு சிறு கீறல் விழுவதற்கும் நாகூர் அனிபா அனுமதிக்கவில்லை. பகரமாக மிக அதிக தொகை பேசப்பட்ட பிறகும் கலைஞர்தான் என்னுடைய தலைவர் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரே இறைவன் அல்லா.. ஒரே தலைவர் கலைஞர்.. ஒரே கட்சி தி.மு.க.
இது நாகூர் அனிபாவின் நிலைப்பாடாக இருந்தது.
ஆதிக்கத்தின் செவிப்பறை கிழிக்கும் குரலோசை.
கணீரென்ற ஏழுகட்டையில் ஒலிக்கும் இவரின் பாடல்கள் உணர்வெழுச்சியை உருவாக்கின.. இந்த சிம்மக் குரலோனின் ஓசை நாடி நரம்பெல்லாம் ஊடுருவும் அனுபவத்தை எப்படியான வார்த்தைகளால் அடக்கிவிட முடியும். தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் இசை மழை பொழிந்த மேதமையை வாழும் போது ரசித்துக் கொண்டாடினோம். வாழ்ந்த பிறகும் அவரின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு ஆவண மாக்கிக் கொண்டாடுவதே அந்த இசை மேதமைக்கு நாம் செய்யும் நன்றி.