எவரைப் பார்த்தாலும் புன்னகைப்பது, கைகூப்பியபடியே குளிரக் குளிர குனிந்து வணங்குவது, இனிக்க இனிக்கப் பேசுவது என்பது ஈஷா மைய நிறுவனரான ஜக்கி வாசுதேவுக்கு கைவந்த கலை.
ஆனால் அவரது வணக்கமும் புன்னகையும் எப்படிப்பட்டது? ஜக்கி போன்றவர்களை நம்பலாமா? என்று வள்ளுவப் பெருந்தகையிடம் கேட்டால்...
’தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.’
என்ற குறளைச் சொல்லி, இப்படிப்பட்ட டேஞ்சரஸ் ஆசாமிகளை நம்பாதீர்கள் என்று எச்சரிக்கிறார்.
இதன் பொருள் என்னவென்றால், இப்படிப்பட்ட மோசமான ஆட்கள் நம்மை வணங்கினால்கூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருக்கலாம், அவர்கள் வடிக்கும் நீலிக் கண்ணீரிலும் ஆபத்து ஒளிந்திருக்கலாம் என்பதாகும்.
வள்ளுவர் சொன்னதுபோல், ஜக்கியின் டேஞ்சரசான கோரமுகம் அடிக்கடி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
அவரது ஈஷா மையம் என்பது, ஆசிரமமா? இல்லை கிரிமினல்களின் கூடாரமா? என்கிற சந்தேகத்தை, அவை அதிகரித்தபடியே இருக்கின்றன. அதில் ஒரு க்ரைம் சிக்கல்தான், சுபஸ்ரீயின் மர்ம மரணம்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த சுபஸ்ரீ, ஒரு பனியன் கம்பெனி ஊழியர். அவரது கணவரான பழனிகுமார் மற்றொரு பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணிபுரிகிறார். இந்தத் தம்பதிகளுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. மகிழ்ச்சியோடும் குதூகலத்தோடும் நகர்ந்துவந்த இவர்களது வாழ்கை ஒரேநாளில் நிலைகுலைந்துவிட்டது.
இவர்கள் இருவரும் ஈஷா மையத்தின் தீவிர பக்தர்கள். அப்படிப்பட்ட வர்களுக்கு அந்த ஜக்கி ஆசிரமம் மூலமாகவே விபரீதம் நடந்திருப்பதுதான் பெரும் கொடுமை.
"சைலன்ஸ்' என்ற பெயரில், ஜக்கியின் ஈஷா மையம் நடத்திய ’ஒருவார தியானப் பயிற்சிக்கு, கடந்த 11 ஆம் தேதி காலை சென்ற சுபஸ்ரீ என்ற 34 வயதுப் பெண், 18 -ஆம் தேதி, அந்தப் பயிற்சியை முடித்து வீடு திரும்பி இருக்கவேண்டும்.
அவரை அழைத்துச்செல்ல அன்று காலை 7 மணிக்கே ஆசிரமத்திற்குச் சென்று காத்திருந்தார் அவர் கணவர் பழனிவேலு. பிற்பகல் 11 மணிவரை சுபஸ்ரீ வெளியே வரவில்லை. தொடர்ந்து பதட்டத் தோடு அவர் விசாரித்தபோது, காலை 6 மணிக்கே, பயிற்சி வகுப்பு முடித்து மற்றவர்களோடு சுபஸ்ரீ சென்றுவிட்டார் என்று ஆசிரமத் தரப்பு சொல்லியது. இதைத் தொடர்ந்து சுபஸ்ரீயை அவரது குடும்பமே பரிதவிப்போடு தேடியது. காவல்துறையில் புகாரளித்த நிலையில்... ஆசிரமப் பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் அலசப்பட்டன.
அப்போது, தன் லக்கேஜ், செல்போன் ஆகியவற்றைக்கூட எடுத்துக் கொள்ளாமல், தியான உடையையையும் மாற்றாமல், தப்பித்தோம் பிழைத்தோம் என்று சுபஸ்ரீ

அப்போது, தன் லக்கேஜ், செல்போன் ஆகியவற்றைக்கூட எடுத்துக் கொள்ளாமல், தியான உடையையையும் மாற்றாமல், தப்பித்தோம் பிழைத்தோம் என்று சுபஸ்ரீ ஆசிரமத்தில் இருந்து வெளியேறி ஓடிவந்த காட்சிகள் சிக்கின. அவர் யாருக்கு பயந்து ஆசிரமத்தில் இருந்து தப்பித்து, வெளியே ஓடிவந்தார் என்று தெரியவில்லை. அவரை யார் துரத்தினார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு, அவர் ஓடிவந்ததில் இருந்தே... ஆசிரமத்தில் அவருக்கு ஏதோ பெரிய ஆபத்து இருந்தது என்பது மட்டும் புரிகிறது.
அவர் குடும்பம் விசாரித்தபோது, ஆசிரமத்தில் இருந்து மிரட்சியோடு ஓடிவந்த சுபஸ்ரீ, எதிர்ப்பட்ட வழிப்போக்கர் ஒருவரிடம், செல்போனை வாங்கி, தன் கணவரைத் தொடர்புகொள்ள முனைந்ததும், அதற்கு முன் ஆசிரமம் அருகே ஒரு காரில் ஏறியதும், அதிலிருந்து பாதியிலேயே பதட்டமாக அவர் இறங்கியதும் தெரியவந்திருக்கிறது.
அதன்பிறகு சுபஸ்ரீ என்ன ஆனார் என்று தெரியாத நிலையில், கடந்த ஞாயிற் றுக்கிழமை செம்மேடு பகுதியிலுள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்டிருக்கிறார்கள். விரட்டிய நபர்களிடம் இருந்து தப்பிக்க அவராகக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரைத் துரத்தி வந்த நபர்கள், அவரைக் கொன்றார்களா? என்பதும் அவிழ்க் கப்படாத ரகசியமாக இருக்கிறது.
*
சுபஸ்ரீயின் குடும்பமே கதறித் துடிக்க, இந்த விவகாரம் பெரும் பதட்டத்தையும் பயத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. சுபஸ்ரீ மரணத்துக்கு நீதி வேண்டும் என்றும், ஜக்கி ஆசிரமத்தை மூடி சீல் வைக்கவேண்டும் என்றும், குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும் என்றும் மக்கள் குரலெழுப்பியபடியே கோவை தொடங்கி பல இடங்களிலும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஆனால் காவல்துறை மௌனம் சாதிக்கிறது.
இந்த நிலையில் காவல்துறை என்ன செய்திருக்கவேண்டும்?
அதிரடியாக ஆசிரமத்தில் புகுந்து விசாரணையை நடத்தி இருக்கவேண்டாமா? அவருக்கு தியானப் பயிற்சி அளித்தது யார்? அவருடன் பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் யார் யார்? என்று கண்டுபிடித்து அவர்களிடம் விசாரித்திருக்க வேண்டாமா? அங்கிருக்கும் தடயங்கள் எதையும் எவரும் கலைத்துவிடாத படி, பாதுகாப்பைப் போட்டிருக்க வேண்டாமா? சம்பந்தப்பட்ட ஆசிரம ஆட்களிடமும் அதன் நிறுவனரான ஜக்கியிடமும் அதிரடி விசாரணையை நடத்தி யிருக்கவேண்டாமா?
இது எதையுமே செய்யாத போலீஸ், சுபஸ்ரீயின் சடலத்தை உடனடியாக கோவை ஜி.ஹெ.ச்சுக் குக் கொண்டுபோனது. அதே வேகத்தில் போஸ்ட்மார்ட்டத்தை விரைவாக முடிக்கும்படி விரைவு படுத்தியது. அடுத்து, உடலை சொந்த ஊருக்குக்கூட எடுத்துச்செல்லக்கூடாது என்ற நிர்பந்தத் தோடு, அன்றே... கோவை நஞ்சுண்டாபுரம் மின் மயானத்திலேயே... சுபஸ்ரீயின் உடலை எரித்துச் சாம்பலாக்கிவிட்டுதான் போலீஸ் டீம் நகர்ந்திருக்கிறது.
சுபஸ்ரீயின் உடலை சாம்பலாக்கிவிட்டால், அவர் மரணத்தில் உள்ள எல்லா உண்மைகளும் பஸ்பமாகிவிடுமா?
அந்த சட்டவிரோத கிரிமினல் ஆசிரத்திற்கு, அங்குள்ள காவல்துறை, தொடர்ந்து பாதுகாப்புச் சேவை செய்துவருகிறது. காரணம், அதிகார மையங்களை எல்லாம் ஆன்மீகத்தின் பேரால் வசப்படுத்தி வைத்திருக்கிறார் ஜக்கி.
*
யார் இந்த ஜக்கி?
கர்நாடக மாநில மைசூரைச் சேர்ந்த ஜகதீஷ் என்ற நபர், அங்கிருந்து பிழைப்பு தேடி 1989-ல் கோவையில் காலெடுத்து வைத்தார். அவர் ஆரம்பத்தில் வேறு சில தொழில்களைச் செய்துவந்ததாக அவரை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அங்கே ஜகதீஷ், ஜக்கி என்ற பெயரில் சாமியார் அவதாரம் எடுக்கிறார். தியானம் சொல்லிக்கொடுத்து முதலில் வயிற்றை நிறைக்கிறார். தன் சித்துவேலைகளைக் காட்டி கூட்டம் சேர்க்கிறார். அமோகமாக கல்லா கட்ட ஆரம்பிக்கிறார்.
பஞ்சமாபாதகங்கள் அனைத்தையும் அங்கே அமர்ந்துகொண்டு அரங்கேற்றுகிறார்.
84-ல் விஜி என்பவரை ஒரு உணவு விருந்தில் சந்தித்து நட்பாகி, காதல் கொண்டு, பின்னர் திருமணமும் செய்துகொள்கிறார். 90-ல் ராதே என்ற பெண் குழந்தை அவர்களுக்குப் பிறக்கிறது. இந்த சூழலில், 96 வாக்கில் தன் மனைவி விஜியையே மகா சமாதி என்ற பெயரில் தற்கொலைக்கு அனுப்பியவர்தான் ஜக்கி என்கிறார்கள் ஜக்கியின் பழைய நண்பர்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளியங்கிரி அடிவாரத்தில், வனத்துறைக்குச் சொந்தமான ஏறத்தாழ 400 ஏக்கர் இடத்தை வளைக்கிறார். பெரிதாக எந்த அனுமதியும் இல்லாமல் கட்டடங்களை எழுப்புகிறார். இதில் யானைகளின் பாதைகளையும் அவர் கபளீகரம் செய்கிறார். எதிர்த்தவர்களை எல்லாம் அடியாட்களையும் போலீசையும் வைத்து மிரட்டுகிறார்.
இவரது அத்தனை அத்துமீறல்களையும் நமது நக்கீரன் தொடர்ந்து அம்பலபடுத்தி வந்திருக்கிறது.
அவரது ஆக்கிரமிப்புகளை உரிய ஆதாரத்தோடு அம்பலப் படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நக்கீரன், அவரால் கட்டாயப் படுத்தி ஆசிரமத்தில், சிஷ்யர்கள் என்ற பெயரில் சேர்க்கப்படும் ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் இளம்பெண்களும், மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டு, சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படுவதையும் உரிய ஆதாரப் பேட்டிகளுடன் வெளிச்சம் போட்டுக்காட்டியது.
தன் ஒரே மகள் ராதேவுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் நடத்திவைத்த ஜக்கி, தன் பக்தர்கள் வீட்டு இளம்பெண்களை மட்டும், மொட்டை போட்டு சாமியாராக ஆசிரமத்தில் இருக்கவைத்தார்.
அவரிடம் சிக்கிய இளம்பெண்கள், அவர் உணவில் கலந்துகொடுத்த பொருட்களால் பெற்றோர்கள் அழைத்தும், அவர்களை புறக் கணிப்பவர்களாக மாறினர்.
அந்த வகையில்... வேளாண்மை பல்லிகலைக்கழலிக முன்னாள் பேராலிசிலிரிலியராலின முனைவர் காமராஜ், ஜக்கியின் பிடியில் சிக்கிய தன் மகள்களான கீதாவையும் லதாவையும் மீட்டுத்தரவேண்டும் என்றும், எம்.டெக்., பி.டெக் முடித்து பெரிய நிறுலிவனங்களில் வேலை பார்த்த இவர்களை, மூளைச்லிசலிலவை செய்து, மொட்லிடைலியலிடித்து ஜக்கி, சாமிலியாலிராக்கிவிட்டார் என்றும் அவர்களை அடிமையாக்கிவிட்டார் என்றும் கண்ணீர் வடித்தனர். அதை மக்கள் முன் நக்கீரன்தான் அழுத்தமாக பகிரங்கப்படுத்தியது.
அதோடு, ஈஷா பள்லிளிலிகளில் படிக்கும் குழந்லிதைலிகலிளுக்கு நைட்ரஸ் ஆக்சைட் கொடுப்லிபதால், பெற்லிறோரை பார்க்கும்போது அவர்கள் சிரிப்பதாகவும், இது தொடர்ந்தால், அந்தக் குழந்லிதைகள் கோமா நிலைக்குத் தள்லிளப்லிபலிடுலிவார்கள் என்றும் முனைவர் காமராஜ், அப்போதே குற்றம்சாட்டினார்.
இதேபோல், ஈஷா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தன் மகன் அரிகரனை மீட்டுக்கொடுக்குமாறு தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் கதறித் துடித்தார். அதுபோலவே, ஈஷா சமஸ்கிருத பள்ளியில் படிக்கும் குழந்தைகளை தோப்புக்கரணம் போடச் செய்வது, கழிவறையை சுத்தம் செய்யச் சொல்வது, மாட்டுச் சாணத்தை அள்ளச் செய்வது என்று கொடுமைப்படுத்துவதாக, மதுரை போலீஸ் ஏட்டான மகேந்திரன் எழுப்பிய புகாரையும் நக்கீரன் எதிரொலித்தது.
இந்தக் கொடுமைகளின் தொடர்ச்சியாக கடந்த ஜூலை மாதம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த கொள்ளு ரமணா என்ற இளைஞர், மன அமைதிக்காக ஈஷாவில் தியானப் பயிற்சியில் சேர்ந்தார். சேர்ந்த கொஞ்ச நாளிலேயே அங்கே நடந்த அதிர்ச்சிச் சம்பவங்களால் தற்கொலை செய்துகொண்டு அவர் குடும்பத்தாரை கதறவைத்தார்.
இப்படி, குற்றங்களின் கூடாரங்களாக- மர்மம் நிறைந்த க்ரைம் குகையாக- பகிரூட்டும் பாதாளபுரியாக ஈஷா திகழ்கிறது.
இதுபற்றியெல்லாம் கேட்டால், ‘கோபம் கூடவே கூடாது’ என்று மற்றவர்களுக்குப் போதிக் கும் ஜக்கி, கோபம் கொள்வார். உதாரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம், பி.பி.சி. சேனல் பேட்டி எடுத்த நேரத்தில், முறையாக அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டியதாக உங்கள் மீது புகார் இருக்கிறதே என்று நிருபர் கேட்டார். உடனே அவர் மீது கடும் கோபம்கொண்ட ஜக்கி, யார் இப்படி சொன்னார் கள்? உங்கள் பக்கத்து வீட்டில் பாதி மூளையோடு இருப்பவர்கள் சொன்னார்களா? என்றெல்லாம் நிருபரை வசை பாடிவிட்டு, தன்னுடன் வந்த ஆசிரம ஆட்களைப் பார்த்தார். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட அவர்கள், பாய்ந்துசென்று, ஓடிக்கொண்டிருந்த 3 கேமராக்களையும் அதிரடியாக ஆஃப் செய்து அந்தப் பேட்டியையே நிறுத்திவிட்டார்கள். இதுதான் ஜக்கியின் குணம்.
விபரீத சம்பவங்கள் ஈஷாவில் தொடர்ந்தும்கூட, அதன் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதற்குக் காரணம்,..
2017 பிப்ரவரி 24-ல் ஈஷா மையத்தின் மஹா சிவராத்திரி விழாவில் பிரதமரான மோடியே கலந்துகொண்டு, சுற்றுச்சூழலுக்கு விரோதமாக வெள்ளியங்கிரி மலையில் கட்டப்பட்ட, 122 அடி உயர ஆதியோகி’ என்னும் சிவனின் சிலையை, மன உறுத்தல் இல்லாமல் திறந்து வைத்ததோடு, ஜக்கியுடன் கைகோத்துக் கொண்டு பறைகொட்டி நடனமும் ஆடினார். அவருக்கு மோடி, அதே ஆண்டு "பத்ம விபூஷண்' விருதை அள்ளிக் கொடுத்து அணைத்துக்கொண்டார். இதனால் ஜக்கியின் ஆட்டம் அதிகமாகிவிட்டது.
உலகின் பல நாடுகளிலும் கிளைகள் என்ற பெயரில் பக்திக் கடை திறந்திருக்கிறார் ஜக்கி. இந்தியத் தத்துவக் கோட்பாட்டில் மையல்கொண்ட வெளிநாட்டவர்கள்தான் அவரது பெரும் இலக்கு.
அவர்கள் அள்ளிக்கொடுக்கும் நிதியும், மதிமயங்கி அவர்கள் எழுதிக்கொடுக்கும் சொத்துபத்துக்களும் ஈஷாவில் பல்கிப் பெருகியபடியே இருக்கிறது. போதாக்குறைக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசே ஜக்கியின் கைகளில் தாயக்கட்டையாக உருள்கிறது. கடந்த எடப்பாடி ஆட்சிக் காலத்தில் கொங்கு அமைச்சர்கள், ஈஷாவுக்கு ஏவலாளி களைப் போலவே செயல்பட்டார்கள். இப்படி எல்லா வகையிலும் கெத்துக்காட்டி வருகிற ஜக்கிக்கு, சாதாரண எலும்புத் துண்டுக்கே ஆடுகிறவர்கள், மண்டியிட்டுத் தொழுது அடிபணிய மாட்டார்களா?
அதனால்தான் தட்டிக்கேட்க ஆளில்லாத தனிக்காட்டு ஆசாமியாக க்ரைம் ராஜ்ஜியத்தை மிக தைரியமாக நடத்திவருகிறார் ஜக்கி. அன்பை வளர்க்க வேண்டிய ஆன்மீகத்தை வைத்து அவர், எதிர் காரியங்களை நடத்துகிறார்.
புத்தரும், விவேகானந்தரும், ரமணரும், வடலூர் வள்ளலாரும், மானுட அன்பே ஆன்மீகம் என்று வாழ்ந்து காட்டினார்கள். அவர்கள் அனைவரும் எளிமையைத்தான் அணிந்து கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் அவர்கள் நடந்தே சென்று அறவுரை நிகழ்த்தினார் கள். சொத்து பத்தைச் சேர்க்காமல் இதயங்களைச் சேர்த்தார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த நாட்டில், இப்படியொரு கார்ப்பரேட் சாமியார் ஆன்மீக வியாபாரம் செய்கிறார். தன்னைச் சுற்றி இளம்பெண்கள் புடைசூழ கவர்ச்சிகரமாக வலம்வருகிறார். இல்லாத ஒளிவட்டத்தை தன் விளம்பரங்களால் அதிகமாக்கிக் காட்டி, அதன் முதுகுப்பக்கம் க்ரைம்களை அரங்கேற்றிவருகிறார்.
இப்படிப்பட்ட டேஞ்சரஸ் சாமியார் ஜக்கி மீது, உடனடியாக விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து, அவரது சட்டவிரோத செயல்களுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இல்லை என்றால், இன்னும் பல சுபஸ்ரீக்களின் கண்ணீர்க் கதைகளை நாம் தொடர்ந்து சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆதங்கத்தோடு,
நக்கீரன்கோபால்