திருக்குறள் மீது அளவு கடந்த வியப்பு எனக்கு உண்டு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களின் நுண் உணர்வுகளை ஆய்ந்துணர்ந்தவராக வள்ளுவர் திகழ்கிறார். எனவே வள்ளுவர் படைத்த 1,330 குறளுக்கும், தினம் ஒன்றாக ஓவியம் வரையத் தொடங்கினேன்.

எனக்கு எந்த வேலைகள் இருந்தாலும், எந்த நிகழ்ச்சிகள் குறுக்கிட்டாலும், உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டாலும், ஒரு நாள்கூட இடைவெளி ஏற்படாத அளவிற்கு, தினசரி திருக்குறள் ஓவியங்களை வரைந்தேன். என் பார்வையில் நான் வரைந்த இந்த ஓவியங்களை நான் காட்சிக்கு வைத்தபோது, அவை பெரும் வரவேற்பைப் பெற்றன.

மாபெரும் தமிழ் ஆளுமையான திருவள்ளுவர் இன்பத்துப்பால் என்னும் காமத்துப்பாலிலும் தன் அசாத்திய அறிவு நுட்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுகுறித்த எண்ணங்களையும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

art

*

தமிழ்ச் சமூகத்திற்கும் காதல்/காம உணர்வுகளுக்கும் சங்க காலந்தொட்டே நெருங்கிய தொடர்பு இருந்துவருகிறது. சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் இறைவழிபாடு மற்றும் அரசர்களின் வீரதீர பராக்கிரமங்களையே தமது பிரதான உட்கருக்களாகக் கொள்ளக்கூடியவை.

Advertisment

சங்க கால தமிழ் இலக்கியங்கள் மட்டுமல்ல, ஹோமர் ஏலியட் போன்ற ஐரோப்பிய கவிஞர்களும்கூட இதற்கு விதிவிலக்கல்ல.

காதல் என்று வரும் பொழுது அது எப்பொழுதுமே மேல் வர்க்க மனிதர்களின் வாழ்வியல்களையே அடிப்படை யாகக் கொண்டிருக்கும். காமம் என்பது இவர்களுக்கு சாமானியர்களின் சுயலிகட்டுப்பாடற்ற தன்மை. காமம் என்று வரும்பொழுதெல்லாம் காமத்தின் முறையற்ற தன்மையை விமர்சனப் பூர்வமாகக் கருதி அத்தகைய காமவெளிப்பாட்டின் மீது கட்டுப்பாடுகளை விதித்து அதற்குக் கடிவாளம் கட்டவே இந்த இலக்கியங்கள் முயன்றுள்ளன.

தத்துவம் குறித்த இயல்கள் என குறிப்பாக எதுவும் தமிழில் உதித்திடாத காலகட்டத்தில், கவிதை நடையில் இயற்றப்பட்ட இந்த இலக்கியங்கள் ஒருபுறம் கதைகளாகவும் மறுபுறம் வாழ்வியல் குறித்த அறநெறி போதனைகளாகவும் தோற்றம் தந்தாகவேண்டிய கட்டாயம் இருந்துவந்துள்ளது. அவை பாலியல் உணர்வுகளை அவமானமிக்கவையாகவும், அந்த அவமானமிக்க பாலியல் உணர்வின் அசாதாரண பின்விளைவுகளைக் குறிக்க அதில் சுயகட்டுப்பாடுகளின்றி ஊறிப் போனதாய் சாமானிய மனிதர்களை - அதாவது பிறப்பின் அடிப்படையில் பின்தங்கியவர்களாகக் கருதப்படுபவர்கள் - சித்தரிப்பதையே இவை மீண்டும் மீண்டும் செய்ய முயல்வதை நாம் காணலாம்.

Advertisment

மகாபாரதத்தில் திரௌபதிக்கும் இடும்பிக்கும் இடையிலான வேறுபட்ட இயல்புகளைக் கவனியுங்கள் (இருவருமே பீமனின் மனைவிகள்தான் என்பதால் இந்த ஒப்பீடு). இராமாயனத் தில் சூர்ப்பனகை யின் உணர்ச்சி வெளிப் பாடுகளில் பாலியல் உணர்வுகள் பெரும்பங்கு வகிப்பதைக் காணலாம்.

அதற்கான பின் விளைவாக இலட்சுமனன் அவளது மூக்கை யறுத்து பழிதீர்ப்பார். அவ்வளவு ஏன், ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான ‘சிலப்பதிகாரத்தில்’ மாதவி கதாபாத்திரத்தின் சித்தரிப்பு மற்றும் அது கோவலன் கண்ணகி வாழ்கையில் நிகழ்த்தும் பாதிப்புகள் ஆகியவற்றைக் கணக்கிலெடுத்துக் கொள்ளும்பொழுது, பாலியல் வெளிப்பாடுகளில் ஈடுபடும் கதாபாத்திரங்கள் தமிழ் இலக்கியம் என்று மட்டுமல்ல இந்திய இலக்கியங்களுக்கு மத்தியிலும் எந்தவகையில் சித்தரிக்கப்படுகின்றன என்பது கண்கூடு.

பாலியல் உணர்வுகள் சார்ந்த இந்தக் கழிவிரக்கம் பண்டைய பிறநாட்டு இலக்கியங்களிலும் காணக் கூடியதுதான்.

முக்கியமாக கிரேக்க இலக்கியங்கள் பலவற்றை இதற்குச் சான்றாக நம்மால் வழங்க இயலும்.

வள்ளுவரை பொறுத்தவரையில் காமம் என்பது:

“மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார்.”

விளக்கம்: காமம்,

மலரைவிட மென்மை யானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் எத்தனை பேர்? காமம் என்றவுடன் இச்சை, மோகம் என்றெல்லாம் எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. காமம் உடல் சார்ந்த தேடல் அல்ல. காமம் என்றால் ஒருவிதமான மையல். ஒருவரின்பால் ஊற்றெடுக்கும் அதீத விருப்பம். கிட்டத்தட்ட அதிலும் ஒருவித அன்பு பொதிந்திருப்பதாக வள்ளுவர் கூறுகிறார்.

ss

அந்த அதீத அன்பைக் கடத்தும் கருவியே இந்த உடல்.

காமத்துப்பால் நமக்கு திரும்ப திரும்பச் சொல்லும் விடயமும் இதுதான்.

எந்த வகையில் வள்ளுவர் தனித்து நிற்கிறார் என்றால், பாலியல் உணர்வுகள் மற்றும் உடற்சுகத்தை மையப்படுத்தும் அவரது குறள்கள் எவையும், ஒரு குறிப்பிட்ட மக்கட் குழுவிற்கு மட்டும் பொருந்தும் வகையில் அவர் இயற்றவில்லை. வெண்பாவின் சட்டகத்திற்குப் பொருந்தும் வகையில் அவர் இயற்றிய இக்குறள்கள் அனைத் தும் மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும்படியாகவே இருப்பனவேயன்றி, எந்தவொரு இடத்திலும் அவை குறிப்பிட்ட மனிதக் குழுவால் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இருக்காது.

உடல் நெருக்கத்தின் அழகியலையும் உணர்ச்சி மேலிட லின் ஒளிவுமறைவில்லாத வர்ணனையையும் குறிக்கும் குறள்கள் பல ‘காமத்துப்பாலில்’ இடம்பெற்றுள்ளன.

அவற்றுள் எனக்குப் பிடித்த சிலவற்றை இங்கு வழங்குகிறேன்:

“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.”

விளக்கம்: இவரிடம் கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன.

“வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு.”

விளக்கம்: காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழையமுடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.

“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்.”

விளக்கம்: இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.

“கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்க தில்.”

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.

மேலே வழங்கப்பட்டிருக்கும் குறள் 1137 மேலும் சுவாரஸியம் மிகுந்தது. அந்தக் குறளில் மடலேறுதல் என்ற சொல் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தமட்டில் மடலேறுதல் என்ற சொல் அதீத காதல் மற்றும் அதன் நிறைவேறாத் தன்மையின் நிமித்தம் ஆண்கள் துன்புற்று சன்னியாஸம் மேற்கொள்வதைக் குறிக்கும்.

ss

அச்சொல் பெரும்பாலும் பெண் பாலினத்தோரின் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் வள்ளுவர் பெண் ணொருத்தியின் உணர்ச்சியை குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்தியதானது, காதல் என்று வந்த பிறகு அக்காதலின் வீரியத்தை ஆண்பாலும் பெண்பாலும் வெவ்வேறு விதங்களில் உணர வேண்டிய அவசியமில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது.

இவ்வகையான உணர்ச்சி சார் சமத்துவம் திருக்குறளின் மேல் நான் கொள்ளும் ஈர்ப்புக் கான பல காரணங்களுள் ஒன்று.

அதுமட்டுமல்லாமல் காமத்தின் பித்துநிலைகள் என்று சிலவற்றை அவர் வகைப்படுத்துகிறார்.

அவை:

தகையணங்குறுத்தல்

குறிப்பறிதல்

புணர்ச்சிமகிழ்தல்

நலம்புனைந்துரைத்தல்

காதற்சிறப்புரைத்தல்

நாணுத்துறவுரைத்தல்

அலரறிவுறுத்தல்

பிரிவாற்றாமை

படர்மெலிந்திரங்கல்

கண்விதுப்பழிதல்

பசப்புறுபருவரல்

தனிப்படர்மிகுதி

நினைந்தவர்புலம்பல்

கனவுநிலையுரைத்தல்

பொழுதுகண்டிரங்கல்

உறுப்புநலனழிதல்

நெஞ்சொடுகிளத்தல்

நிறையழிதல்

அவர்வயின்விதும்பல்

குறிப்பறிவுறுத்தல்

புணர்ச்சிவிதும்பல்

நெஞ்சொடுபுலத்தல்

புலவி

புலவி நுணுக்கம்

ஊடலுவகை

இவையனைத்தையும் பல்வேறு குறள்களில் வள்ளுவர் விளக்குவதை நாம் காணலாம்.

இக்குறள்கள் காம ஈர்ப்பை முன்நிலைப் படுத்துகின்றன என்றால், காதல் உணர்வை வெளிப்படுத்தும் குறள்களுக்கும் காமத்துப்பாலில் பஞ்சமேயில்லை. தனக்குப் பிடித்தமான சகமனிதரை முதல் முறை கண்டதிலிருந்து அவரோடு உறவில் விழுந்து, அந்த உறவில் பிணக்கேற்பட்டு இருவரும் பிரிந்து, தனியே இருவரும் அவ்வுறவு உண்டு செய்த காயத்திலிருந்து மீள்வது வரை, ஒட்டுமொத்த காதல் உறவொன்றின் துவக்கம் முதல் முடிவு வரையிலான அனைத்து நிலைகளையும் கவரும் வண்ணம் வள்ளுவர் தனது குறள்களை இயற்றியுள்ளார்.

ss

உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.

காதல் உதித்துவிட்டது, ஆனால் அதை இன்னும் ஒருவர் மற்றொருவரிடம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இந்த ஒரு விடயத்திற்கு பொருந்தக்கூடிய குறள்கள் இவை:

“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.”

விளக்கம்: எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்.

“கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது.”

விளக்கம்: கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது.

“ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.”

விளக்கம்: காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்.

இவ்வாறு காதலில் ஒவ்வொரு குறிப்பிட்ட உணர்வுக்கும் பொருந்தும் படியாக ஒன்றுக்கு மேற்பட்ட குறள் களை திருக்குறளில் நம்மால் காண இயலும்.

திருக்குறள்களை ஓவியமாக மாற்றும் பணியை கிட்டத்தட்ட கடந்த மூன்றரை ஆண்டுகளாக விடாமல் செய்து முடித்துள்ளேன். இருப்பினும் எனது தனிப்பட்ட பார்வையில், மூன்று பால்களைக் காட்டிலும், காமத்துப்பாலை ஓவியமாக மாற்றுவதுதான் எனக்கு பெரும் சுவாரஸியத்தை வழங்கியது.

உருவக முறையிலும் (ம்ங்ற்ஹல்ட்ர்ழ்ண்ள்ம்), மீயதார்த்த முறையிலும் (ள்ன்ழ்ழ்ங்ஹப்ண்ள்ம்) எனது ஓவியங்கள் விளங்குவதைக் காணலாம்.

காமத்துப்பாலின் குறள் களை நான் முதல் முறை படித்த பொழுது என்னதான் அவை எனக்கு அருவமான (ஹக்ஷள்ற்ழ்ஹஸ்ரீற்) உணர்ச்சிகளை வழங்கியிருந்தாலும், அக்குறள்களை படித்து அவற்றைப் புரிந்துகொண்ட மறுநொடியிலேயே, அவற்றுக்கான ஓவியம் எத்தகையதாக இருக்கவேண்டுமென்பது என் கண் முன்னே வந்துவிடும். மேற் குறிப்பிட்டிருக்கும் இரண்டுவிதமான ஓவிய முறைகளில் எது எந்தக் குறளுக்குப் பொருத்தமானது என்று குழப்பமின்றி தெரிந்துவிடும்.

அதனூடே எனது ஓவியங்களில் இதுகாறும் ஓவியத் துறையோ அல்லது சமூகத்தின் அங்கமாக இருக்கும் வேறேதேனுமொரு துறையோ வகுத்து வைத்திருக்கும் குறியீடுகளை என் ஓவியங்களை பார்க்கும் பார்வை யாளர்கள் சுலபமாக அர்த்தப்படுத்திக் கொள்ள நான் பயன்படுத்துவுதுண்டு. ஒரு புறம் குறள்கள் என்னுள் அருவமான சில உணர்ச்சிகளை எழுப்புகின்றன, அவற்றை மீயதார்த்த ஓவியங்களாக (உடல் உறுப்புகளின் உதவியோடு உணர்வுகளைக் காண்பிக்க முயல்வது எனது மீயதார்த்த முறை) மாற்றுவதே சரியென்றும் தோன்றுகிறது; மறுபுறம், அந்த ஓவியங்கள் முழுமுற்றும் அர்த்தம் புரியாமல் போய் விடக்கூடாது என்பதற்காக - இந்தப் பத்தியில் - மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் பயன்படுத்துகிறேன்.

மேலோட்டமாக பார்க்கையில் இரசனை மிக்கதாகவும், அதையே கூர்ந்து நோக்குகையில் ஆழமான அர்த்தங்கள் தென்படும் வகையிலும் இருப்பதுதான் திருக்குறள்களின் இயல்பும்கூட, அல்லவா!

இந்த ஓவியங்களில் இயற்கைச் சூழல்களின் பயன்பாட்டையும் ஒருவரால் அதிகம் காண இயலும். பூக்கள் பறவைகள் மற்றும் இன்னபிற வண்ணமயமான இயற்கை அம்சங்களை நான் நேரில் காணும்பொழுது அது எனக்குள் உண்டுசெய்யும் உவகையை என் ஓவியங்களுக்குள்ளும் கொண்டுவர முயல்கிறேன். இவை பெரும்பாலும் புத்துணர்ச்சி, மகிழ்ச்சி, புத்துயிர்ப்பு போன்ற மானுட நம்பிக்கையை குறிக்கும் அர்த்தங்களை பார்வையாளருக்குக் கடத்த எனக்கு உதவுகின்றது.

அதே சமயம் மானுட வாழ்க்கையின் இருளைக குறிக்க வரண்ட நிலப்பகுதி, இயற்கை வளங்களின் ஆரோக்கியமற்ற தன்மை, வெளிறிய வண்ணங்கள் (ல்ஹப்ங் ஸ்ரீர்ப்ர்ன்ழ்ள்) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறேன். வண்ணங்களுக்குப் பின்னாலி ருக்கும் உளவியலையும் அவ்வப்பொழுது எனது ஓவியங்களில் காணலாம்.

தனிப்பட்ட ரீதியில் திருக்குறள் எனக்கு பெரும் அர்த்தம் மிகுந்ததாகத் தெரிகிறது. அதில் உள்ள குறள்கள் கொண்டிருக்கும் சமகாலப் பொருத்தப்பாடு இதுவரையிலும் கூட என்னை பிரமிக்கவே செய்துள்ளது. காமம் குறித்தும் காதல் குறித்தும் திருக்குறளில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் அம்சங்களை சமகாலத்தில் ஒருவர் ஓவியமாகவோ, திரைப்படமாகவோ மாற்றுவாராயின் அதுவும்கூட தணிக்கைத்துறையின் நெருக்கடிகளையே சந்திக்க நேரிடும் என்பதொரு நகைமுரண். திருக்குறள் என்று வரும் பொழுது காமத்துப்பாலை மட்டும் ஒரு சமூகமே இருட்டடிப்பு செய்வதைத்தான் நாம் இன்று கண்டுகொண்டிருக்கிறோம்.

2000க்குப் பிந்தைய தலைமுறை சற்று வினோதமானது. சமகால இளைஞர்கள் தத்தமது இளம் வயதில் எதிர்கொள்ளும் உறவுசார் சூழலியல் நெருக்கடிகள் (ள்ண்ற்ன்ஹற்ண்ர்ய்ள்ட்ண்ல்ள்), மிகைப் புனைதல்கள் (க்ங்ப்ன்ள்ண்ர்ய்ள்), பாலியல் உறவுக்கு மட்டுமேயான நட்பு (ச்ழ்ண்ங்ய்க்ள் ஜ்ண்ற்ட் க்ஷங்ய்ங்ச்ண்ற்ள்) என தன்னிலை சார்ந்து மட்டுமே உறவுகளைக் கையாண்டு, உணர்வு ரீதியாக இயங்குவதையும் உணர்திறனுடன் (ள்ங்ய்ள்ண்ற்ண்ஸ்ண்ற்ஹ்) இருப்பதையும் குறையாய் பார்க்கத் துவங்கிவிட்டனர். இவர்களிடம் வள்ளுவர் கூறும் காதலின் நுணுக்கங்களை அவர் சொன்னதுபோலவே கொண்டுசேர்ப்பது பெரிய சவால்தான்.

இளந்தலைமுறை திருக்குறளை விட்டு தூரம் சென்றுவிட்டதாக நான் கூறவில்லை. உறவொன்றில் கிடைக்கக்கூடிய உணர்ச்சிகளின் முழுமைகளை இவர்களால் அடைய இயலாமல், மனித உறவின் நுனிப்புற்களை மட்டுமே மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

திருக்குறளின் மீது தனிப்பட்ட ரீதியில் எனக்கிருக்கும் அறிவுசார் ஈர்ப்பும், எனது சமகால வாழ்க்கையில் நான் பார்க்கும் மனிதர்களையும், எதிர்கொள்ளும் உணர்ச்சிகளையும் கையாள எனக்கது உதவும் விதங்களுமே திருக்குறளை ஓவியங்களாக மாற்ற என்னை உந்தியது.

வாழ்க்கைத் தத்துவங்கள் என்று வருகையில் திருக்குறளின் முக்கியத்துவத்தை யாரும் புறந்தள்ளப் போவதில்லை. அதே போல, இன்றைய காதல் உறவுகளில் மிக எளிதாகத் தென்பட்டுவிடும் உணர்ச்சிசார் வெற்றிடத்தைப் போக்க காமத்துப்பால் நிச்சயம் உதவும் என்பது என் தீர்க்கமான எண்ணம்; அதனாலேயே இதர இரண்டு பால்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை காமத்துப்பாலிற்கும் வழங்க வேண்டியது இன்றியமையாதது.

குறிப்பாக இன்றைய பதின் பருவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் அது ஆற்றும் உதவி அளப்பரியதாக இருக்கும்.

என் ஓவியங்களும் புரிதலும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு சிறுபகுதிக்கேனும் காமத்துப்பாலை கொண்டு சேர்த்திருக்குமானால், என் பணியை நான் நிறைவாய் செய்துமுடித்திருக்கிறேன் என்று அர்த்தம். தற்பொழுது என் அடுத்த ஓவியப்பாதைக்கு என்னை தயார் செய்து கொண்டிருக்கிறேன்.

எழுத்து வடிவம்: பிரதீப் பாலு