என் பாட்டு வண்டிப் பயணம்! - சந்திப்பு: முனைவர் அ பழமொழி பாலன்

/idhalgal/eniya-utayam/my-song-car-journey-meeting-dr-pramozhi-balan

ப்ப நேரம் நல்லா இருந்தது. நேரம் நல்லா இல்லனா 100 படம் வந்தாலுமே ஒரு பாட்டுகூட வராம போயிடும். நேரம் நல்லா இருந்ததால் கோரஸ் பாடப் போயி, முழுசா ஒரு பாட்டுக்கான வாய்ப்பு கெடைக்குது பாத்தீங்களா!

விவேகா சார் அந்த சங்கிலி புங்கிலி கதவ தொற அப்படிங்கற பாட்டை எழுதுறாரு.

நம்ம கோரச பல்லவி ஆக்கிட்டு, சரணம் பூரா அவர் எழுதுறாரு. அவர் எழுதின அந்த பாட்ட கேட்டுட்டு லாரன்ஸ் சார் பயங்கர ஹேப்பி ஆயிட்டாரு. காஞ்சனா படத்துல அந்த பாட்டு மெகா ஹிட்.

இப்ப எங்கபோனாலும், எந்த டி.வி. போனாலும், எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் வேல்முருகன் பாடுனா, அந்த படம் ஹிட்டு, பாட்டு ஹிட்டு அப்படிங்குற மாதிரி ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ராசியான பாடகர் அப்படின்னு என்னை முடிவு பண்ணிட்டாங்க.

காஞ்சனாவில, காயே கலுப்பங்கா கஞ்சி ஊத்தி நெல்லிக்கா

ஊயே புளியங்கா உப்புக் கச்ச நெல்லிக்கா

தாவணிதான் தாரிக்கா கன்னம்தான் பேரிக்கா

வாயோரம் கோவக்கா வார்த்தைதான் பாவக்கா

சூடு வர கத்தரிக்கா... மூடு வர முருங்கக்கா

சங்கிலி முங்கிலி கதவத் தொற

நான் போட்டேன் வெங்கலப்புலி

-அப்படினு அந்த பாட்டு வரும். அது பெரிய ஹிட். அதுக்கப்புறம் கார்த்தி சாருக்கு ஒரு படம். அந்தப் படம் பேரு சகுனி. இப்ப நான் ஆடுகளம் பாடினேன் இல்லையா "ஒத்த சொல்லால அதை வச்சு ஜி.வி. பிரகாஷ் என்னைக் கூப்பிட்டாரு.

vv

அங்க போன உடனே, சாருக்கு பாடுற ரெகுலர் சிங்கர் வெளியில இருக்காங்க. அதனால ஒரு டிராக் மட்டும் பாடுங்க அப்படின்னு சொல்லி எனக்கு அந்த ட்ராக் தராங்க. அதை எழுதினது, நம்ம கவிஞர் அண்ணாமலை. அவர்தான் “ஏன் உச்சி மண்டையில சுர்ருங்குது” பாட்டு எழுதினார். அவர் நிறைய பாட்டு எழுதி இருக்காரு. அவர் பாடலை நான் முதன்முதலில் கார்த்தி சாருக்குப் பாடுறேன். அது ட்ராக்தான். அத வச்சு ஷூட் பண்றதுக்காக நான் பாடுறேன்.

இப்ப எனக்கு வாய்ப்பு நிறைய வர ஆரம்பிச்சுருச்சு. எப்படின்னா, மதுர குலுங்க, ஆடுங்கடா மச்சான், ஒத்த சொல்லால, ஆம்பளைக் கும் பொம்பளைக்கும்,

ப்ப நேரம் நல்லா இருந்தது. நேரம் நல்லா இல்லனா 100 படம் வந்தாலுமே ஒரு பாட்டுகூட வராம போயிடும். நேரம் நல்லா இருந்ததால் கோரஸ் பாடப் போயி, முழுசா ஒரு பாட்டுக்கான வாய்ப்பு கெடைக்குது பாத்தீங்களா!

விவேகா சார் அந்த சங்கிலி புங்கிலி கதவ தொற அப்படிங்கற பாட்டை எழுதுறாரு.

நம்ம கோரச பல்லவி ஆக்கிட்டு, சரணம் பூரா அவர் எழுதுறாரு. அவர் எழுதின அந்த பாட்ட கேட்டுட்டு லாரன்ஸ் சார் பயங்கர ஹேப்பி ஆயிட்டாரு. காஞ்சனா படத்துல அந்த பாட்டு மெகா ஹிட்.

இப்ப எங்கபோனாலும், எந்த டி.வி. போனாலும், எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் வேல்முருகன் பாடுனா, அந்த படம் ஹிட்டு, பாட்டு ஹிட்டு அப்படிங்குற மாதிரி ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ராசியான பாடகர் அப்படின்னு என்னை முடிவு பண்ணிட்டாங்க.

காஞ்சனாவில, காயே கலுப்பங்கா கஞ்சி ஊத்தி நெல்லிக்கா

ஊயே புளியங்கா உப்புக் கச்ச நெல்லிக்கா

தாவணிதான் தாரிக்கா கன்னம்தான் பேரிக்கா

வாயோரம் கோவக்கா வார்த்தைதான் பாவக்கா

சூடு வர கத்தரிக்கா... மூடு வர முருங்கக்கா

சங்கிலி முங்கிலி கதவத் தொற

நான் போட்டேன் வெங்கலப்புலி

-அப்படினு அந்த பாட்டு வரும். அது பெரிய ஹிட். அதுக்கப்புறம் கார்த்தி சாருக்கு ஒரு படம். அந்தப் படம் பேரு சகுனி. இப்ப நான் ஆடுகளம் பாடினேன் இல்லையா "ஒத்த சொல்லால அதை வச்சு ஜி.வி. பிரகாஷ் என்னைக் கூப்பிட்டாரு.

vv

அங்க போன உடனே, சாருக்கு பாடுற ரெகுலர் சிங்கர் வெளியில இருக்காங்க. அதனால ஒரு டிராக் மட்டும் பாடுங்க அப்படின்னு சொல்லி எனக்கு அந்த ட்ராக் தராங்க. அதை எழுதினது, நம்ம கவிஞர் அண்ணாமலை. அவர்தான் “ஏன் உச்சி மண்டையில சுர்ருங்குது” பாட்டு எழுதினார். அவர் நிறைய பாட்டு எழுதி இருக்காரு. அவர் பாடலை நான் முதன்முதலில் கார்த்தி சாருக்குப் பாடுறேன். அது ட்ராக்தான். அத வச்சு ஷூட் பண்றதுக்காக நான் பாடுறேன்.

இப்ப எனக்கு வாய்ப்பு நிறைய வர ஆரம்பிச்சுருச்சு. எப்படின்னா, மதுர குலுங்க, ஆடுங்கடா மச்சான், ஒத்த சொல்லால, ஆம்பளைக் கும் பொம்பளைக்கும், சங்கிலி புங்கிலி கதவ தொற இதெல்லாம் வந்ததுனால கச்சேரிக்கு, புரோகிராமுக்கு எல்லாம் கூப்பிட ஆரம்பிச் சிட்டாங்க.

ஈரோடு கொங்கு காலேஜ்ல பாடிட்டு இருக்கேன். அப்ப என்னை ப்ரோக்ராம் கூப்பிட்டுப் போனவரு ஜெகதீஷ். அவர்கிட்ட சொல்றேன் அண்ணா உடனே இப்ப வரச் சொல்றாங்கன்னு. அப்ப அவர் சொல்றாரு ஜீ.வி. என்னோட பிரண்ட்தாப்பா. நான் ஜீ.வி.கிட்ட பேசுறேன் அப்படிங்கிறாரு.

அந்த ஜெகதீஷ் சார் யாருன்னா இளைய தளபதியியோட மேனேஜர். இப்ப நான் பாடப்போற பாட்டு எப்படி உருவாச்சுன்னா, நேரா பார்லேயே போயி உட்கார்ந்து அங்கு நடந்ததை வச்சு அந்த பாட்டு எழுதியிருக்காரு கவிஞர். அண்ணாமலை.

"நான் உனக்காக பார் பாரா போய் உக்காந்து பாட்டு எழுதினேம்பா" அப்படின்னாரு. சரி நம்ம ட்ராக்தானே பாடுறோம் இதுல என்ன இருக்கு அப்படின்னு சொல்லிட்டு விட்டுட்டேன். கடைசியில் ஷூட் எல்லாம் முடிச்சிட்டு வந்து பார்த்தா, அந்த ஒரிஜினல் வாய்ஸ்காரர் வந்து பாடுறாரு பொருந்தலை. நம்ம பாடுனது அப்படியே செட் ஆயிடுச்சு. அதனால அப்படியே என் வாய்சையே வச்சுட்டாங்க. அந்த பாட்டும் வெளியில் வந்துருச்சு.

அடுத்ததா ஹாரிஸ் ஜெயராஜ் சார்கிட்ட இருந்து போன் வருது. நான் போறேன். அங்க போனா "பாஸ் என்கிற பாஸ்கரன்” அப்புறம் "எஸ்.எம்.எஸ். படம் பண்ணுன டைரக்டர் ராஜேஷ், அண்ணன் நா.முத்துக்குமார் அங்க உட்கார்ந்திருக்காங்க. ஒரு சாங் எனக்குக் கொடுக்கு றாங்க.

உதயநிதி ஸ்டாலின் சாருக்கு மொத மொதல்ல நான் பாடுற சாங் அதுதான். இப்ப பல்லவி பாடிட் டேன். ஒரு பல்லவி மட்டும் பாடிட்டு வெளிய வர்றப்போ என்ன சொல்றாங்க, எப்பா இது, ஹீரோ பாலைவனத்துல, ஹீரோயினோட ஆடுற சிச்சுவேஷன். குரல் இவருக்கு தனியா ராவா இருக்கு. எப்படி இந்த டூயட் அவருக்கு செட் ஆகும்ன்னு தெரியல. ஹீரோவுக்கு இது ஃபர்ஸ்ட் படம்.

cce

அவர் பயந்து பயந்து இந்தப் படத்துல நடிக்கிறார்.

யாருக்கும் தெரியவேண்டாம் இந்த ஒரு படம் நடிச்சிட்டு ஓரமா ஒதுங்கிடலாம் அப்படின்னு நினைச்சுக்கிட்டு நடிக்கிறாரு. அப்படிப்பட்ட ஒரு ஹீரோவுக்கு ஒரு மெலடி சிங்கர கொடுத்து பாட வைக்கணும். ஹன்சிகா மோத்வானிதான் ஹூரோயின். ஹாரிஸ் ஜெயராஜ் சார் மியூசிக். அந்த பாட்டு என்னன்னா, அழகே அழகே அழகின் அழகே நீயடி உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!

ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!!

நான் பாடுறேன். இது ராவா இருக்கு வேணாம் அப்படின்னுட்டாங்க. அப்ப, ஹாரிஸ் ஜெயராஜ் சார் பெரிய பீக்கில் இருக்கிறார். என்னடா இது மொத மொத ஹாரிஸ் ஜெயராஜ் சார் கூப்ட்டு பாட முடியாம போச்சே, அப்படின்னு ஒரே மன உளைச்சலா இருக்கு. சரின்னு சொல்லிட்டு வந்துட்டேன். திரும்ப ஒரு வாரம் கழிச்சு திரும்பவும் அங்கிருந்து ஒரு போன் வருது. எங்க இருக்கீங்க ஸ்டுடியோக்கு வாங்க அப்படின்னு கூப்பிட்டாங்க. ஒரு மீன் சாங் ஒன்னு இருக்கு. இந்த சாங் உங்க வாய்ஸ்ல பாடுங்க அப்படின்னு சொல்லிக் கொடுத்து கம்போஸ் பண்ணி ஸ்டுடியோ உள்ள அழைச்சிட்டு போய் பாடவைக்கிறாங்க. அந்த பாட்டுக்கு -ரிக்ஸ் நா. முத்துக்குமார் அண்ணன். அந்த பாட்டு

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு

அது மூடி தொறக்கும்போதே உன்ன கவுக்கும் குவாட்டரு

கடல போல காதல் ஒரு சால்ட் வாட்ட?ரு

அது கொஞ்சம் கரிக்கும்போதே நீ தூக்கி போட்டுடு...

இதுதான் அந்த பாட்டு, பாடியாச்சு. படம், பாட்டு எல்லாம் மரண ஹிட். அண்ணன் உதயநிதி கூப்பிட்டு நல்லா பாராட்டுறாரு வாழ்த்துறாரு. மக்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பா இருக்கு. நிறைய வீட்ல இந்த பாட்டு வந்துச்சுன்னா குழந்தைங்க இந்த பாட்ட பார்த்துக்கிட்டே சாப்பிடுது, அப்படின்னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க. பெண்களைத் தாக்கிப் பாடின பாட்டு, பெண்களுக்கு அது புடிச்ச பாட்டா ஆயிடுச்சு. தியேட்டர்ல போய் பாக்குறேன். அந்த சாங் வரும்போது அந்த ஸ்கிரீன் மேல துப்பட்டாவ அப்படியே பறக்கவிடுறாங்க. இன்ஸ்டாகிராம், பேஸ்புக்ல இன்னும் ஹிட் ஆயிட்டு இருக்கு.

தலைவருடைய ரெண்டு பேரன்கள்ல அருள்நிதி சாருக்கும், வம்சம் படத்துல முதல் பாட்டு நான்தான் பாடுனேன். அது வாலி சார் எழுதின பாட்டு. மன்னாதி மன்னர் அப்படிங்ற பாட்டு அது. இசை தாஜ்மீர். டைரக்டர் பாண்டியராஜ். இவருக்கு வேணாம் மச்சான் வேணாம் அப்படிங்ற பாட்டு. ரெண்டு பேர் படத்திலும் முதல் பாட்டு நான்தான் பாடுறேன். அப்படி ஒரு கொடுப்பினை.

கொம்பன் படத்துக்கு பாடறதுக்காக ஜி.வி. சாரோட மேனேஜர் போன் பண்றாங்க. போன் பண்ணும்போது என்ன சொல்றாருன்னா, நீங்க வேண்டாம் உங்கள மாதிரி கிராமிய பாட்டு பாடுறவங்க யாராவது இருந்தா அவங்கள கூட்டிட்டு வாங்க. இல்லைன்னா அவங்களுடைய நம்பர் குடுங்கன்னு சொல்றாரு. என்னடா இது நம்ம பாடுறதும் கிராமிய பாட்டுதான். நீங்க வேண்டாம் ஆனா உங்கள மாதிரி வேற யாராவது கிராமப் பாடல் பாடுறவங்கள கேக்குறாங்க, அப்படின்னு ஒன்னும் புரியல. அப்ப அவங்க எல்லாரையும் வச்சு பாடவைக்கிறாங்க. ட்ரை பண்றாங்க. நம்ம ஆக்டர் சூரியாவுடைய தம்பி, கார்த்திக் சார் என்ன பண்றாரு, வேல்முருகன் குரலைப் போடுங்க அத கேட்டுப் பாப்போம் அப்படிங்றாரு. ஏன்னா ஏற்கனவே சகுனி படத்துல "குவாட்டர் சொல்லுடா மாப்பிள அப்படிங்கற பாட்டு கொடுத்திருக்கோம். அந்த பாட்டு அவருக்கு ஒத்துப்போச்சு. அப்ப எல்லாரும் அவரை ட்ராக் பாடவே வைக்கலையே அப்படின்னு சொல்றாங்க. எதுக்கும் அவரை பாட வைங்க அப்படின்னு சொல்றாரு. எனக்கு அழைப்பு வருது. முதல் நாள் போன் பண்ணி,

அடுத்த நாள் காலை 7 மணிக்கு வரச் சொல்றாங்க. காலைல நான் 7 மணிக்கு ரெடி ஆகி குளிச்சிட்டுப் போறேன். காலையில அப்படிங்றதனால அந்த வாய்ஸ் ஒரு மாதிரி கரகரப்பா நல்லா இருக்கும். அப்பதான் அந்த தொகையறா ரெடி பண்றாங்க.

அடி கருப்பு நெறத்தழகி

அடி கருப்பு நெறத்தழகி ஒதட்டு செவப்பழகி

சில்லறையா செதறிட்டேன் டீ

உன் சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன் டீ

இததான் எனக்கு அனுப்புனாங்க. இதை நான் பாடிட்டேன். இதை கேட்டுட்டு கார்த்திக் சார் இத வச்சு ஷூட் பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்லிட்டாரு. டைரக்டர் முத்தையா சாருக்கும் இது ரொம்ப பிடிச்சுப்போச்சு. அப்புறம்தான் ஃபுல் சாங் எடுத்து ரெக்கார்ட் பண்றாங்க. கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் படங்களுக்கு மேல பல்வேறு மொழிகளுக்கு, பல்வேறு சூழலுக்கு திரையில பாடி இருந்தாலும் சில பாடல்கள் மக்கள் மத்தியில மிகப்பெரிய வரலாறா, பரிசுகளைப் பெற்று, பாராட்டுகளை பெற்ற பாடல்களாக இருக்கிறது.

சுப்பிரமணியபுரம், ஆடுகளம், நாடோடிகள், காஞ்சனா, கழுகு, ஒரு கல் ஒரு கண்ணாடி, சண்டாளி இப்படி பல்வேறு படங்களில் பாடியிருக்கேன். ஒருநாள் ஜி.வி. சார் ஷூட்டிங்ல இருக்காரு. நான் இசையமைப்பாளர் ரகுநந்தன் சாரோட அவர பாக்க போறேன். ரகுநந்தன் சார் ஜி.வி. சாருடைய நெருங்கிய நண்பர். ஜி.வி. சாருடைய நிறைய படங்களுக்கு ரகுநந்தன் சார் சவுண்ட் இன்ஜினியரா வேலை பார்த்திருக்கிறார். அப்ப நான் ஜீ.வி. சார்கிட்ட, சார் நீங்க இசையமைச்ச பாடல்களுக்கு நான் பாடியிருக்கேன். நீங்க தயாரித்த படங்களுக்கும் நான் பாடியிருக்கேன். ஆனா நீங்க நடிச்ச படத்துக்கு நான் இன்னும் பாடவே இல்ல அப்படின்னு சொல்றேன். அப்போ அவர் சொல்றாரு, அதுக்கு என்ன இந்த படத்துல பாடிட்டா போகுது அப்படின்னு சொல்றாரு.

அப்பதான் ”செம” அப்படிங்கற படத்துக்கு இசையமைச்சுக்கிட்டிருக்கார். நான் சொன்னத ஞாபகம் வச்சு என்ன பாடுறதுக்காக கூப்பிடுறாரு. முதல்ல பல்லவி பாடச் சொல்றாரு.

சண்டாளி - உன்

அசத்துற அழகுல லேசாகி - என்

அந்திபகல் அத்தனையும் லூஸாகி - பய

கெடக்குறேன் தரையில பீஸ் ஆகி

அப்படிங்கிற பாட்டு நான் பாடுறேன். இப்ப அந்த பாட்டு பாடின உடனே ஒரு செய்தி ஒன்னு வருது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா ஆஸ்பத்திரியில ரொம்ப சீரியசா இருக்காங்க அப்படின்னு. அதனால ஸ்டுடியோவுல எல்லாரும் இப்ப நாம் ஒர்க் பண்ணவேண்டாம். நெக்ஸ்ட் பாத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்க. அப்புறம் திரும்பக் கூப்பிட்டு பாட வைக்குறாங்க. அதுக்கப்புறம் எடுத்த பாட்டுதான் அந்த பாட்டு. மெலோடியும் பாடமுடியும் அப்படிங்கறதுக்கு அந்த பாட்டு எனக்கு ஊக்கமா இருந்துச்சு.

-அடுத்த இதழில் நிறைவடையும்

uday011124
இதையும் படியுங்கள்
Subscribe