தமிழ் இலக்கிய உலகில் விவசாயம் சார்ந்த படைப்புகழை முன்வைத்து, செம்மண் இலக்கியம் என்ற வகைமையினை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் என்பது, எழுத்தாங்ர் சூர்யகாந்தனைப் பற்றிய விமர்சகர்களின் கருத்தாகும்.
கொங்குச் சீமையின் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை, கடந்த ஐம்பதாண்டுகளாக அழுத்தமாக தனது படைப்புகளின் மூலமாக பதிவுசெய்த மிக முக்கியமான படைப்பாங்ர் .
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், இசைப்பாடல்கள் என இவரின் எழுதுகோல், ஓய்வில்லாமல் சிருஷ்டித்த வண்ணமே உள்ங்து . அண்மையில் தமிழ்நாடு அரசு, இலக்கியமாமணி விருது வழங்கி கெளரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது,
கோவையை அடுத்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ங் கிராமமான ராம செட்டிப்பாளையத்தில் வசித்து வரும் படைப்பிலக்கியவாதியான சூர்யகாந்தன், நமது இனிய உதயம் இதழுக்கு அளித்த பேட்டி இது:
உங்களது எழுத்தின் துவக்கம் எந்த ஆண்டு நிகழ்ந்தது? அதை வெளியிட்ட இதழ் எது?
1973-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் மனிதன் எனும் இலக்கிய இதழ், எனது முதல் படைப்பான கவிதையை கனல் மணக்கும் பூக்கள் எனும் தலைப்பில் வெளியிட்டது.
அதற்கும் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எழுத தொடங்கியிருந்தேன். அதுசமயம் கோவையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டமும் துப்பாக்கிச் சூட்டின் உயிரிழப்புகளும் என்னை பாதித்திருந்தன. அதனால் மனிதன் இதழ் வெளியிட்ட கவிதையின் கருப்பொருள், அதையே மையமாகக் கொண்டிருந்தது.
சிறுகதை துறைக்கு எப்போது வந்தீர்கள்?
1974-ஆம் ஆண்டு, தாமரை இதழ் என்னை சிறுகதைக் கலைஞனாக அறிமுகப் படுத்தியது. கவிஞர் கே .சி. என். அருணாசலம் வேண்டுகோளுக்கிணங்க, நான் தாமரையில் தொடர்ந்து எழுதினேன். இலக்கிய ச்சிற்றிதழ்களில்தான் சிறந்த படைப்பாளர்கள் பலருமே எழுதி வந்துள்ளனர்.
நீங்களும் அப்படியே. எந்தெந்த இதழ்களில் எழுதினீர்கள்?
மனிதன், தாமரை, செம்மலர், நீலக்குயில், சிவந்த சிந்தனை, தீபம், வானம்பாடி, வேள்வி, விவேக சித்தன், மகாநதி, சகாப்தம், புதிய பொன்னி போன்றவற்றை குறிப்பிடலாம்.
வணிக ரீதியான இதழ்களிலும் எழுதி வந்ததை நினைவுகூரலாமா?
தாராளமாகக் கூறலாம். தாய், குங்குமம், சுபமங்களா, புதிய பார்வை, அலிபாலா, கல்கி, ஆனந்தவிகடன் போன்றவற்றிலும் இலக்கியத் தரமான சிறுகதைகளை எழுதியுள்ளேன். நல்ல படைப்புகளுக்கு அவை மேடை தருவதாக அதை எண்ணிக்கொள்ளலாம்.
இலக்கியத்தின் பல்வேறு வகைகளிலும் எழுதும் ஆற்றல் கொண்டவராக உங்களை மதிப்பீடுகள் செய்துள்ளனர். இது சரிதானா?
நாம் எழுதும் கருத்துக்களின் கனத்திற்கு ஏற்றாற்போன்று வகைகளை தீர்மானிக்கிறோம். அதற்கேற்பவே வடிவத்தையும் கையாள்கிறோம். ஒரு கலைஞன் தன் கவிதைகளிலேயே அனைத் தையும் கூறிவிட முடியாது. அதுபோல்தான் சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும் நாம் விசாலமான பரப்பில் வாழ்க்கையில் கோலத்தை நிதர்சனமாக வரைந்து காட்டுவதற்கு நாவல் ஏற்றதாய் இருப்பதால் அவ்விதம் தேர்வு செய்துகொள்வது தேவையாகிறது.
கவிதைகள் சிறுகதைகளைக் கடந்து, நாவல் துறைக்கு நீங்கள் எப்போது உங்களை ஒப்புவித்தீர்கள்?
1973 முதல் 1983 வரையிலான பத்தாண்டுகள், நான் இதழ்களில் கவிதைகளாக சிறுகதைகளாகவே எழுதினேன். அவற்றில் சிலவற்றை சிவப்பு நிலா, இவர்கள் காத்திருக்கிறார்கள் கவிதைத் தொகுதி , இனி பொறுப்பதில்லை என்னும் சிறுகதை தொகுதி என மூன்று நூல்களாகத் தொகுத்து வெளியிட்டனர். 1984-ஆம் ஆண்டில் அம்மன் பூவோடு எனும் நாவல் மூலமாக நாவல் துறைக்குள் சென்றேன். தொடர்ந்து இதுவரையிலும் பதினைந்து நாவல்கள் எனும் அளவில் என் கொடுப்பினைகள் அமைந்துள்ளன. இடைப்பட்ட காலங்களில் கவிதைகளையும் சிறுகதைகளையும் கட்டுரை களையும் சொல்லோவியங்களையும் எழுதியவாறேதான் இருந்துவந்துள்ளேன்.
எந்த நாவல் மூலம் மிகுதியான கவனத்திற்கு ஆளானீர்கள்? அந்த படைப்பு, இலக்கிய உலகில் உண்டாக்கிய பாதிப்பு என்னென்ன?
மானாவாரி மனிதர்கள் என்ற நாவல்தான் அது. 1988-ஆம் ஆண்டு அதை எழுதினேன்.
அமரர் அகிலன் நினைவு நாவல் விருதையும் அந்த ஆண்டின் சிறந்த நாவலுக்கான இலக்கியச் சிந்தனை விருதையும் அந்த நாவல் ஒருசேரப் பெற்றதனால் சக படைப்பாளிகளையும் விமர்சகர்களையும் என் மீது கூடுதலான கவனத் தைக் கொள்ளும்படி செய்தது. அந்த படைப்பைப் பற்றி ஆக்கப்பூர்வமான மதிப்பீடுகளை போட்டி போட்டுக்கொண்டு பலரையும் எழுதச் செய்யும் படியும் தாக்கீது பண்ணியது.
கொங்கு மண்ணையும் உழவுப் பெருமக்களை யும் அச்சு அசலாக பதிவுசெய்து தடம் அமைந்த அந்த நாவல், அனைவரையும் இன்றளவில் கூட ஈர்த்து வருவது எவராலும் மறுக்க முடியாததே. பிற மா நில வாசகர்களையும் கூட கவர்ந்த சிறப்புக்குரியது என சொல்லலாமா?
சொல்லலாம். ஆங்கிலத்தில் ஙங்ய் ர்ச் ற்ட்ங் தங்க் ள்ர்ண்ப் என்றும் இந்தியில் மேகா ஹிலியே தரஸ் தே லோக் என்றும் மலையாளத்தில் மாரிக்காரினு காத்திருக்க மனுஷர் என்றும் அது சென்றபோது கிடைத்த வெற்றி மகிழ்ச்சியைத் தந்தது. தமிழகத்தின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களிலும் தன்னாட்சிக் கல்லூரிகள் பலவற்றிலும் பட்டப் படிப்புக்கு அது பாட நூலாக அமைந்தபோது, பெற்ற அனுபவங்கள் மறக்க முடியாதவை. அந்த நாவலைப் பின்பற்றி பலரும் எழுத தொடங்குவதற்கு முன்மாதிரியும் ஆயிற்று. தாங்கள் வாழ்ந்த பகுதியையும் அந்தந்த மக்களைப் பற்றி எழுதுவதற்கு தூண்டுதலாக அமைந்தது.
ஆராய்ச்சிப் பொருளாகவும் உங்களின் படைப்புகள் மிக அதிக அளவில் ஆகியுள்ளன அல்லவா?
ஆமாம். ங.ல்ட்ண்ப் பட்டத்திற்கு 85 பேர் ஆய்வு செய்துள்ளனர். ட.ட்க் பட்டத்திற்கு 35 பேர் ஆய்வு செய்துள்ளனர். இப்போதும் பத்துக்கும் மேற்பட்டோர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒப்பிலக்கிய துறையிலும் எனது பாதிப்புகள் குறிப்பிடும்படியாக உள்ளது. மேலைநாட்டு எழுத்தாளர்களான பெர்ல்.எஸ். பெக், தாமஸ் ஹார்டி ஆகியோர்களுடனும் மலையாள எழுத்தாளர்களான தகழி சிவசங்கரன் பிள்ளை, வத்சலா போன்றோர்களுடனும் இந்தி நாவலாசிரியர் ப்ரேம் சந்தின், கோதான் எனும் படைப்போடும் ஒப்பாய்வுகள் எனது நாவல்களை முன்வைத்து நடைபெற்றுள்ளன. என்னை மதிப்பீடு செய்து 12 நூல்களை ஆய்வாளர்கள் எழுதி வெளியிட்டுள்ளனர்.
உங்களின் நாவல்களில் முதிய பெரியவர்கள் அய்யன் எனும் முத்திரையோடு தவறாமல் படைக்கப்பட்டுள்ளனர். இந்த படிப்பினை எதனால் என்றும் எதற்காக என்றும் கூறமுடியுமா?
கிராமத்து ஆத்மாக்கள் காலங்காலமாக வாழ்ந்து வாழ்ந்துபெற்ற அனுபவங்களின் களஞ்சியங்களாக விளங்குகின்றனர். அதற்கு உதாரணங்களாகத்தான் காலப்பெட்டி அய்யன், கதர்வேட்டி அய்யன், கரப்பாளையத்து அய்யன், கிராமசாமி அய்யன் என்போரெல்லாம் இயங்கு கின்றனர். அவர்களுக்கு வயது தொன்னூறா தொள்ளாயிரமா என அறுதியிட முடியாது. அய்யன் என்பது அனைத்தையும் அறிந்தவர். மதிப்பிற்குரியவர். வணங்கத்தக்கவர் என்பதை அடையாளப்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த அய்யனின் பாதிப்பால், எனது மானாவாரி மனிதர்கள் நாவலை வாசித்து அகமகிழ்ந்த பேராசிரியர் க. அன்பழகன் அவர்களும் கலைஞர் மு கருணா நிதி அவர்களும் திருவள்ளூவரை அய்யன் வள்ளுவர் என்று அழைக்கும் பழக்கத்திற்கு ஆளானார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுகதைகளிலும் நாவல்களிலும் கொங்கு மக்களை தத்ரூபமாக படைத்து அளிக்கும் ஆற்றல் எப்படி உங்களுக்குக் கிடைத்தது? உங்களின் பெற்றோர்கள் அல்லது முன்னோர்கள் படைப்பாளர்களாக இருந்தார்களா?
எனது பெற்றோர்கள், எல்லோரையுமே தனது மக்களாகவும் சொந்த பந்தங்களாகவும் கருதி நேசித்த குணம் கொண்டவர்களாக இருந்தனர்.
அவர்கள் படைப்பாளிகள் அல்ல. பாட்டாளிகள். அந்த பெற்றோர்கள் என் மீது செலுத்திய பாசமானது, சக மக்களின் மீது நான் பரிமாறும் பாசமாக அமைந்து விட்டது. தந்தையார் குன்னத் தூர் வட்டாரத்தின் செஞ்சேரியாம்பாளையத்தில் பாரம்பரியமிக்க விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தாயார், காங்கேயத்தின் அருகில் உள்ள பெரிய இல்லியம் என்ற கிராமத்தில் பிறந்தவர்.
தீரன் சின்னமலையின் ஒரே தங்கையான பர்வதத்தின் பேத்தி வழி பிள்ளையாக அமைந்த பாக்கியம் பெற்றவர். அதனால்தானோ, எனது படைப்புகளில் தேசப்பற்றானது மண் மணக்கும் பாச மலர்களாக வாசம் பரப்புகின்றன என என்னிடம் கேட்பவர்களும் உள்ளனர்.
நமது பக்கத்து மாநில மொழிகளில் உங்களின் நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இதில் எந்த மொழிக்கு அதிக படைப்புகள் சென்றுள்ளன?
கேரளத்தின் மலையாள மொழியில் எட்டு நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதைத் தவிர, இந்தியில் இரண்டு, கன்னடம், தெலுங்கு மொழிகளில் இரண்டு, ஆங்கிலத்தில் நான்கு, மராட்டியத்தில் ஒன்று எனும் அளவில் அவை சென்றுள்ளன.
கிராமங்களை நோக்கிய இத்தகைய உங்கள் பார்வைக்கு உந்து சக்தி தந்தவர்களில் யாரை முதன்மையாகக் கருதுகிறீர்கள்?
நமது தேசத்தந்தை காந்தியடிகளைத்தான் பெருமையுடன் கருதுகிறேன். இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது என்கிற அவரது அரிய கருத்தானது, எனது நெஞ்சில் தீபத்தின் சுடராக ஒளிவீசியவாறே உள்ளது.
உங்களது படைப்புகளின் தாக்கம், இந்த சமுதாய அமைப்பில் சக படைப்பாளிகளை மட்டுமல்லாது, சமூகச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர்களையெல்லாம் அடைந்துள்ளது என்பதை அறிந்துள்ளோம். அது தொடர்பான உங்களின் கருத்துக்கள் என்ன?
மிக அண்மையில் பாரத பிரதமர் மோடி தனது சுதந்திர தின சிறப்புரையில் நீரின்றி அமையாது உலகு எனும் குறட்பாவின் பொருளை சரியாகக் கையாண்டதை எண்ணிப் பார்த்தால் மகிழ்ச்சியே உண்டாகிறது. இதே மையக் கருத்தை பலமடங்கு விரிவாக 30 ஆண்டுகளுக்கு முன்னரே மானாவாரி மனிதர்கள் நாவலில் அறுதியிட்டுள்ளேன். தமிழகத்தின் பெரும்பான்மையான பல்கலைக் கழகங்களில் இந்த பட்டிக்காட்டு பாமர மக்களின் வாழ்க்கை நிலையை பாடங்களாக்கி கொடி கட்டிய அந்த படைப்பு 15க்கும் மேற்பட்ட பதிப்புகளை கண்டதோடு ஆறு மொழிகளில் மொழிபெயர்ப்புகளாகவும், இலக்கிய வாசக கல்வி உலகை சென்றடைந்துள்ளது. நிறைய பேரை டாக்டர் பட்டங்களுக்கு ஆராய்ச்சி செய்யவும் வைத்துள்ளது.
மேற்குறித்த இந்த விஷயத்தை பிரதமர் எடுத்துச் சொன்னதால் அது மிகுந்த கவனிப்புக்கு ஆளாகிறது. இதையே கூட மதிப்பிற்குரிய அப்துல் கலாம் , நூல் வடிவில் எழுதி இருந்தால் அதற்கு நோபல் பரிசு போன்றவற்றை தந்து கௌரவித்து இருப்பார்கள். தமிழக பிரபலங்களில் எவரேனும் எழுதி இருந்தால் அதற்கு இந்தியாவின் உயரிய விருதாகிய ஞானபீடம் விருதை பெறுவதற்கு ஆவன செய்திருப்பர்.
நடைமுறையில் உள்ள நாட்டு நடப்பையே வெட்ட வெளிச்சமாக்கி உள்ளீர்கள் எனலாமா?
சரிதான். எனக்கு இதில் வருத்தம் எதுவும் கிடையாது. முன்மாதிரியாகவும் தடம் அமைத்தவனாக இருந்த நான், மிக சாதாரணமானவனாக இன்றளவிலும் பாமர மக்களின் பாட்டாளி மக்களின் கூட்டத்தில் ஒருவனாகவே நின்றுகொண்டிருக்கிறேன்.
உங்களது படைப்புகளில் அங்கம் வகிக்கும் கதாபாத்திரங்களின் தோற்றம், நெஞ்சத்துணிவு, போன்றவற்றை எக்ஸ்ரே படம் போல நுட்பமாக எப்படி எழுதுகோலால் படம்பிடிக்க முடிகிறது?
எனது பேனா பவர்ஃபுல் காமிராபோல் ஆழ்ந்து படம்பிடிக்கும் சக்தி கொண்டது என்பதை திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா போன்றவர்கள் வியந்து பேட்டி அளித்தது உண்டு.
அகமும் புறமும் அது அதி நுட்பமாக தனது பணியைச் செய்யும் என்பதை அதை இயக்குபவ னாகிய நானும் நன்கு அறிவேன். நாற்பது முழக் கிணற்றில் தைரியமாக இறங்கி பத்து ராத்தல் சம்மட்டியை தூக்கி ஆண்களுக்குச் சமமாக பாறையை உடைத்துக் காட்டிய பச்சையம்மாள் போன்ற பெண்களும், மலையின் உச்சியில் அகன்று விரிந்த முள் மரங்களில் கிளைகளை அனாசயமாக வெட்டி சுமைகளாக கட்டி ஓட்டமும் நடையுமாக அடிவாரப்பகுதியில் கொண்டுவந்து இறக்கும் ராமாத்தாள் போன்ற உழைக்கச் சலிக்காத பெண்களும் எனது கதாபாத்திரங்களாக விளங்கி உள்ளனர். ஆழ்கிணறுகளிலும் ஆகாய மேகங்களைத் தழுவும் மலைமுகடுகளிலும் வாழ்க்கை அர்த்தத்தை தேடும் அவர்களே என் எழுத்துக்கு உரம் சேர்ப்பவர்களாய் அமைந்துள்ள னர். கரும்பு போன்ற அந்த தேகங்களுக்குள்ளே, இரும்பு போன்ற இதயங்கள் இருப்பதை நான் அடையாளப்படுத்தி உள்ளேன். சீதையின் பொறுமையையும் கண்ணகியின் கோபத்தையும் கொண்ட பொன்னம்மாள் போன்ற பெண்குலப் பிரதிநிதிகளையும், சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டுவந்த ஆஞ்சநேயரின் ஆற்றலையும் கொண்ட பழனியப்பன் போன்ற ஆண்குலப் பிரதி நிதிகளையும் எனது பட்டறையில் புதிய வார்ப்புகளாக ஆக்கித் தந்துள்ளேன்.
கிராமிய பழமொழிகளும் நாட்டுப்புற பாடல்களும் உங்களுக்கு எளிதில் எவ்விதம் வசப்பட்டன?
அவை எனது பெற்றோர்கள் வாயிலாக கிடைத்த கொடுப்பினைகள் எனலாம். சொந்த பந்தங்களும் சுற்றுப்புறத்தாரும் மட்டுமின்றி கிராமங்கள் ஒவ்வொன்றுமே அந்த ஏட்டில் எழுதப் படாத இலக்கியங்களை சேமித்து வைத்துள்ள கருவூலங்களாகவே விளங்குகின்றன. எனது கைகளால் அள்ளிக் கொண்டவைகளை சிறுகதை களிலும் நாவல்களிலும் மறு விதைப்பு செய்தவனாக நான் இருந்துவந்துள்ளேன். குறிப்பாக எனது நாவல் களில் சாகாவரம் பெற்றவர்களைப் போல இயங்கும் அந்த முதியவர்கள் அனுபவக் களஞ்சியங்களாக எனக்கு வாய்த்தனர். அவர்களின் குரல்கள், அர்த்தத் தோடும் நெகிழ்வோடும் எனது ஆக்கங்களில் எதிரொலித்துக் கொண்டே உள்ளன.
உங்களின் நாவல்களில் குறிப்பாக பத்துக்கும் மேற்பட்டவற்றில் ஒரு சமூகத்தவரே அதிகமாக இடம்பெற்றுள்ளனர். இது எதனால்?
கொங்கு மண்டலத்தில் பாரம்பரியமாக விவசாயத் தொழிலையே தமது உயிர் மூச்சாக கருதி வாழ்ந்து வரும் வேளாளர் இனத்தவர் எனது நாவல்களில் பிரதான இடத்தை வகிக்கின்றனர் என்பதை ஒப்புக் கொள்கிறேன். கடும் உழைப்பிற்கு பெயர் பெற்ற அவர்களை காலத்தின் இன்றியமை யாத பதிவுகளாக என்றென்றும் அழிந்துபோகாத கல்வெட்டுகளாக எனது படைப்புகளில் நிலைபெறச் செய்யவேண்டியது முக்கியத் தேவையாக இருந்தது. தீராத வேட்கை என் மனதுக்குள் அலைபாய்ந்ததே இதற்கு காரண மாகும்.
தலைமைப் பாத்திரங் களாக அவர்களை அமைக்கும் நீங்கள், பிற இனத்தவரை அவ்விதம் படைப்பதை தவிர்த்து வருகிறீர்களா?
அப்படி இல்லை. சற்று கூடுதலாக கவனமெடுத்து நீங்கள் வாசித்தால், பாரபட்சமின்றி நடு நிலைமையுடன் நான் செயல் பட்டுள்ளதை நன்கு உணர முடியும். எதிரெதிர் கோணங்கள் கல்வாழை, விதைச் சோளம், கிழக்கு வானம் போன்ற நாவல்களில் வரும் தலைமைப் பாத்திரங்களும் துணை பாத்திரங்களும் வெவ்வேறு இனத்தவர்களே ஆவர். அக்ரஹாரங்கள் மட்டுமல்ல சேரிப்புறங்களும் புறம்போக்கு நிலங்கள் மட்டுமல்ல புகர் நகர்களும், பழைய ஊர்கள் மட்டுமல்ல, புதுப்புது குடியிருப்பு களும் எனது நாவல்களில் நிதர்சனமாக வரையப் பட்டே வந்துள்ளன. எல்லா சமூகத்தவரும் எனது நாவல்களில் அங்கம் வகிக்கின்றனர். உயர்வு தாழ்வுகள் இன்றி பேதங்கள் இன்றி அவர்களின் மத்தியில் இருந்தே, அவர்களின் பாடுகளையும் பேசி வந்துள்ளனர். வீடுகளும் கூரைச் சாணங்களும், மேடு களும் பள்ளங்களும் மதகுகளும் வாய்க்கால்களும் குளம் குட்டைகளும் என மண்ணின் மீது காணப் படும் பட்பல அமைப்புகளும் என்னுடைய பரந்து பட்ட பார்வையிலிருந்து விடுபடவில்லை.
மிகுதியான உழைப்பை இந்த மண்ணுக்கு தருகின்ற வேளாண்மைக் குடும்ப பின்னணியில் உருவான நீங்கள், உங்கள் உழைப்பை இலக்கிய உலகிற்கு எவ்வளவு நூல்களாக கொடுத்துள் ளீர்கள்?
கவிதைத் தொகுதிகளாக மூன்றும் கட்டுரைத் தொகுதிகளாக ஏழும், சிறுகதைத் தொகுதிகளாக பத்தும், நாவல்களாக பதினைந்தும் என்கிற அளவில் தந்துள்ளேன். இவற்றோடு மட்டுமின்றி இன்னும் தொகுக்கப்பட வேண்டியவை பத்து நூல்கள் வர இருக்கின்றன. மேலும் இருநூறுக்கும் நெருக்கமாக இறை இசை இன்னிசைப் பாடல்களையும் இயற்றி உள்ளேன்.
தரமான விருதுகளும் உங்கள் தகுதிக்கேற்ப வந்தடைந்துள்ளன. அவற்றில் உங்கள் மனதுக்கு நிறைவு தருவதாக எதைச் சொல்லலாம்?
எனது அனைத்து வகை படைப்புப் பணிகளையும் கருத்தில் கொண்டு, இலக்கியச் செம்மல், கொங்குச் சாதனையாளர் போன்றவைகளும், இலக்கியச் சிந்தனை, இலக்கிய வீதி, லில்- தேவசிகாமணி அறக்கட்டளை, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், தமிழ்ப்பண்பாட்டு மையம் போன்ற அமைப்புகள் தந்த விருதுகளும் வழங்கப் பட்டுள்ளன. இவைகளை யெல்லாம் கடந்து சக மனிதர் களின் வாழ்க்கையை பரிவோடும் பாசத்தோடும் மண்ணின் மணத்தோடும் எழுதி மக்கள் எழுத்தாளர் எனும் மதிப்பை அவர்களிடம் இருந்தே பெற்றிருப்பதை உயர்ந்த விருதாக எண்ணி மகிழ்ச்சிகொள்கிறேன்.
உங்களின் படைப்புகளின் சாராம்சமாக எதை உள்ளடக்குகிறீர்கள்? அவற்றின்வழியாக இந்த உலகுக்கு எதைக் கூறுகிறீர்கள்?
நல்ல அறத்தை, மனிதநேயத்தை, மனித ஆற்றலை, பண்பை, கலாச்சாரத்தையே நான் உள்ளடக்கு கிறேன். நியாயம் மிகுந்த இந்த இலக்கியத்தின் வழியாக சத்தியத்தையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத் தையும் எடுத்துரைக்கிறேன். எனது பதினெட் டாவது வயதில் துவங்கிய எழுத்துப் பணியை இந்த அறுபத்தெட்டாவது வயதிலும் தொடர்ந்து நம்பிக்கையோடு நான் செய்துகொண்டிருக்கிறேன்.
உங்களின் சமகால எழுத்தாளர்களில் நெஞ்சில் பசுமையாக இடம் பிடித்தவர்கள் என யாரையெல்லாம் குறிக்கிறீர்கள்?
கொங்கு மண்ணை முதன்முதலில் கதைக் களமாக்கிய ஆர். சண்முகசுந்தரம், எனது முன்னோடி களில் முக்கியமானவர். அதற்கடுத்து கு. சின்னப்ப பாரதி, தொடர்ந்து வந்த சு. சமுத்திரம், தனுஷ்கோடி ராமசாமி, சி.எம்.முத்து, மேலாண்மை பொன்னுச் சாமி போன்றோரும் மறக்கவியலாதவர்கள்.
உங்களின் பாராட்டுதலுக்குரிய பெண் எழுத்தாளர்கள் எனில், எவரெல்லாம் என்று கூறுங்கள்?
அவர்களில் முக்கியமானவர் ராஜம் கிருஷ்ணன்.
ஆர். சூடாமணி இவர்கள் என் வணக்கத்திற்குரியவர் கள் ஆவர். ஜோதிர்லதா கிரிஜா எனது ஜூனியர் என சொல்லத்தக்க திலகவதி, சிவகாமி ஆகியோரை யும் குறிப்பிடுவேன்.
கவிஞர்களில் உங்களின் போற்றுதலுக் குரியோர் என யாரையெல்லாம் எண்ணுகிறீர்கள்?
புவியரசு, ஈரோடு தமிழன்பன், சிற்பி, மு. மேத்தா, அப்துல் ரஹ்மான். மீரா ஆகியோரின் கவிதைகளும் இன்குலாப், தணிகைச்செல்வன், வைரமுத்து ஆகியோரின் எழுச்சிமிகு கவிதைகளும் கொஞ்சகாலமே எழுதினாலும் இலக்கிய தீபன், முத்துபொருநன் ஆகியோரின் ஆக்கங்களும் இளவேனில், கங்கை கொண்டான் போன்றவர்களின் சித்திர எழுத்துகளும் என் சிந்தனை கவர்ந்தவை ஆகும்.