அரிசோனா எனது அனுபவங்கள்! (2) - பிரேமா இரவிச்சந்திரன்

/idhalgal/eniya-utayam/my-experiences-arizona-2-prema-ravichandran

ற்றங்கரைகள் நாகரீகத்தை வளர்த் தெடுத்தன என்றால் ஆறே இல்லாத பாலை வனத்தில் நவீன நாகரிகம் எப்படி வளர்ந்திருக் கும்? பசிபிக் கடலோரம் அமைந்திருக்கும் மாகாணமான கலிஃபோர்னியா நிலப்பகுதி அங்குள்ள மலைகளால் குளிர்ந்து பெருவாரி யான மழைப் பொழிவைப் பெற்று பசுமையாகக் காட்சியளிக்கிறது. அதேசமயம் அதன் மறுபுறத் தில் வறண்ட பிரதேசமாக உள்ள சொனோரா பாலைவன நிலப் பகுதியில் அரிசோனா மாகாணம் அமைந்திருக்கிறது.

வாழ்வதற்குத் தகுதியில்லாத அவ்விடத் தில் பழங்குடிகள் வாழ்ந்ததற்கான அடையாள மாக அவர்கள் கல்லில் செதுக்கிய சிறு வடிவங்க ளாக ராட்டில் (rattle) எனப்படும் பாம்பின் சுருட்டிய உருவத்தையும், அழகிய உதயத்தின் அடையாளமாக சூரியனின் ஒளிரும் வடிவத்தை யும் செதுக்கிவைத்திருப்பதை இன்றும் காணமுடிகிறது. அவர்கள் வளமாக வாழ்ந்ததாக அடையாளங்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், மணிகள், சிறு சிறு கருவிகள், ஆகியவையும் அவர்கள் இருந்ததற்கான சாட்சிகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கொலராடோவிலுள்ள ராக்கி மலைத்தொடரில் உருவாகிய ஆறானது அதன் பாதையில் ஓடி இறுதியாக பசிபிக் பெருங்கடலில் கலக்கிறது. இதன் இயல்பான திசையை மாற்றி, மனித முயற்சியால் நீர்வழிப் பாதை அமைத்து, குறைந்த மழைப்பொழி வைக் கொண்டிருக்கும் அரிசோனா மாகாணத்தின் டெம்பி நகரில் 2கிமீ நீளமும், 1200 அடி அகலமும், 16 அடி ஆழமும் கொண்ட ஏரியை உருவாக்கி நீரைத் தேக்கி அப்பகுதியினை சோலையாக மாற்றியிருக்கிறார்கள். இதனை முதலில் கற்பனையில் வடிவமைத்தவர் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலைக் கல்லூரியின் முதல்வர் ஜேம்ஸ் எல்மோர் என்பவராக இருந்திருக்கிறார்.

ttd

1966 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் மாணவர்களுடன் இணைந்து ரியோ சாலடோ (Rio Salado Project) என்னும் திட்டத்தை உருவாக்கி ஏரியை அமைத்து அதனைச் சுற்றிலும் கவர்ச்சிகரமான பூங்காக்களும், பொழுதுபோக்கு வசதிகளும், உணவகங்களும், ஓய்வு விடுதிகளும், வணிக வளாகங்களும், தொழிற்சாலைகளும், வீடுகளும், அருங்காட்சி யகங்களும், கலாச்சார மையங்களும் அமைக்க வேண்டுமென்பதை திட்டமிட்டிருக்கிறார்.

அரிசோனாவில் சாதகமான சுற்றுப்புற சூழ்நிலை இல்லாதபோதும் போராடி வளர்கின்ற பல வகையான பாலை நிலத்தாவரங்கள் இங்குள்ள வளமான மண்ணில் வளர்ந்து இப்பகுதிய

அரிசோனாவில் சாதகமான சுற்றுப்புற சூழ்நிலை இல்லாதபோதும் போராடி வளர்கின்ற பல வகையான பாலை நிலத்தாவரங்கள் இங்குள்ள வளமான மண்ணில் வளர்ந்து இப்பகுதியின் உயிர்ப்பை நிலைநிறுத்தியிருக்கின்றன. மிகுதியான நீரை தொடர்ச்சியாகக் கிடைக்கும்படி செய்து விட்டால் கற்பனையில் கொண்டுவந்த நகரினை நனவாக்க இயலுமென்கிற நம்பிக்கையோடு, கொலராடோ ஆற்றிலிருந்து கிளை பிரிந்த உப்பு ஆற்றைக் கொண்டு டெம்பி டவுன் ஏரியை உருவாக்கி இருக்கி றார்கள்.

மனிதனின் மாபெரும் சக்திக்கு அடையாள மாக அந்நகரின் இதயமாகத் திகழும் இந்த ஏரி தனது இரத்த நாளங்களின் வழியாக முழு நகரையும் உயிர்த்துடிப்போடு வைத்து தடுக்கமுடியாத வளர்ச்சியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது. இந்த ஏரியை உருவாக்கும்பொழுது பல நகரங்களும் இணைந்து உதவியிருக்கின்றன. நாட்டின் மேயர் மட்டுமல்லாமல், காங்கிரஸைச் சேர்ந்தவர்களும், மக்களுக்கு உதவியாக இருக்கின்ற பல அமைப்புகளும், பொறியாளர் களும் அரிசோனா மாநிலப் போக்குவரத்துத் துறையும் மற்றும் பலரும் பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.

இத்திட்டத்தைச் செயல்படுத்த பல சவால்களை சந்தித்திருக்கிறார்கள். வறண்ட ஆற்றுப்படுகையாக இருந்த அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள், பாலங்கள் போன்றவை சேதமாகியிருக்கின்றன.

அவ்விடம் 1950 முதல் 1970 வரை நிலப்பரப்பாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வளர்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பு இவை யாவற்றையும் கருத்தில்கொண்டு செயல்பட்டிருக்கிறார்கள். எங்கிருந்து நீரைக் கொண்டுவந்து தொடர்ச்சியாக நிரப்புவது என்கிற கேள்வியில், உப்பு ஆற்றை திசைதிருப்ப திட்டம் கொண்டு கிட்டத்தட்ட 800 ஏக்கர் நிலப்பரப்பை மீட்டிருக்கிறார்கள். தொடர்ந்து உருவாக்கப்பட்ட இந்த ஏரி 1996-ஆம் ஆண்டில் நிறைவடைந்திருக்கிறது. ஏரியின் குறுக்கே பாதசாரிகளுக்காக அமைக்கப்பட்ட பாலத்திற்கு இணையாக, இம்மாநிலத்தில் இருக்கும் ஒரே ஒரு ரயில் பாலம் இங்குதான் கட்டப்பட்டிருக்கிறது. இவ்விடத்தில் எப்பொழுதெல்லாம் ரயில் கடக்கிறதோ அப்பொழுதெல்லாம் ஒளிரும்படி வண்ணமயமான மின்சார விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன.

இப்பகுதியில் மிகப்பெரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்துவதில் டெம்பி டவுன் ஏரிக்கு மிக முக்கியப் பங்குள்ளது. இதனைச் சுற்றி கிட்டத்தட்ட ஒரு சதுர மைல் பரப்பளவில் 40,000 பேர் பணிபுரிகிறார்கள். மக்களின் மகிழ்ச்சியான மனநிலை ஒரு சமுதாயத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வித்திடும் எனும் பொழுது, ஏரியைச் சுற்றி பாதசாரிகளுக்காகவும், சைக்கிள் ஓட்டுபவர்களுக்காகவும் இடம் ஒதுக்கியதோடு, அங்கு பல்வேறு குழுவினர்கள் சந்தித்து, தங்களது பொழுதுபோக்குகளை அனுபவித்து உரையாடல்களை நிகழ்த்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மனித ஆற்றலை அதிகப்படுத்தி இப்பகுதியை மேலும் மேம்படுத்த மக்கள் குடியேறுவதற்கு எளிதாக மலிவு விலையில் வீடுகள், கல்விக்கு நிதி, இலவசப் பேருந்துகளென பல சலுகைகள் உள்ளன. நகரின் முக்கிய சாலைகளில் ஓடுகின்ற இலவசப் பேருந்துகள், ஒருவர்கூட பயணிக்காத நேரத்திலும் ஆங்காங்கே உள்ள நிறுத்தங்களில் நின்றே செல்கின்றன.

சக்கர நாற்காலியில் அமர்ந்து பயணம் செய்யும் மக்களின் வசதிக்கேற்ப, பேருந்தின் வாயிற்கதவு மிகத் தாழ்வாக அமைந்து (ழ்ஹம்ல்), அவர்கள் உள்ளே ஏறுவதற்கு ஏற்றபடி இயங்குகிறது. பேருந்தில் ஏறுவதற்கு முதல் உரிமை கொண்டவர்கள் அவர்கள். ஆங்காங்கே உள்ள நிறுத்தங்களை அறிவிக்கின்ற துண்டுப் பிரசுரங்கள் உட்புறமுள்ள பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்குத் தேவையான இடத்தில் இறங்கவேண்டுமெனில், நமது ஊரில் பழைய முறையிலிருந்த வசதியைப் போல, கயிற்றை இழுத்தால் மணி அடிக்கிறது. ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிடுகிறார்.

ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்பொழுது அது கடைநிலை ஊழியர் வரை சென்றுசேருமாறு அமைந்துள்ளது என்பதை இதனைக் கொண்டே உணரமுடிந்தது.

கயாகிங் (ந்ஹஹ்ஹந்ண்ய்ஞ்) எனப்படும் சிறிய படகில் செல்லுதல், ரோயிங் போட் (ழ்ர்ஜ்ண்ய்ஞ் க்ஷர்ஹற்) என்கிற வரிசையாக படகுகள் செல்லுதல், பெடலிங் (ல்ங்க்ஹப்ண்ய்ஞ்) எனும் மிதிபடகில் செல்லுதல், லைட் போட்டிங் பரேடு (ப்ண்ஞ்ட்ற் க்ஷர்ஹற்ண்ய்ஞ் ல்ஹழ்ஹக்ங்) எனும் ஒளிவிளக்காலான படகுகளின் ஊர்வலம், விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், உடற்பயிற்சியென யாவையும் செயல்படுத்த வசதிகள் செய்யப்பட்டு, சுமார் இரண்டரை மில்லியன் எண்ணிக்கையில் ஆண்டுதோறும் இங்கு மக்கள் குவிகிறார்கள்.

அந்திசாய்ந்த நேரத்தில் நாங்கள் சென்றபொழுது, ஒளி விளக்குகள் பட்டுத் தெறிக்கும் ஏரி நீரின் மேற்பரப்பைக் கண்டு ரசித்தோம். ஸ்கேட்டிங் எனப்படும் சக்கரங்கள் கொண்ட காலணி அணிந்து, குழுவினரோடு சில அம்மாக்கள் செல்ல, அவர்களது பிள்ளைகளும் பின்தொடர்ந்தைக் காண, எரிநட்சத்திங்களின் பின்பகுதியில் சிதறியிருக்கும் சிறு புள்ளிகளான துகள்களைப்போல மின்னுவதாக இருந்தார்கள். ஒளிவிளக்கு அவர்களின் மீது அப்படியாக எதிரொளித்தது. மனைவி, குழந்தையென குடும்பத்தோடு வந்து துண்டுச் சீட்டுகளைக் கொடுத்து அவர்களுக்கு விருப்பமான துறைகளையோ மதங்களையோ பரிந்துரைக்கிறார்கள். கிறிஸ்தவம் முக்கிய மதமாக இருக்கிறது.

உணவுப்பண்டங்களை நெருப்பில் சுட்டு உண்ணும் அடுப்பு வசதி அங்கு பொதுவான எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதன் அருகிலேயே உணவு மேசையும் இருப்பதால் விருப்பப்படுபவர்கள் மாலை நேரத்தில் குடும்பத்தினரோடோ, நண்பர்களோடோ வந்து சமைத்து உண்கிறார்கள். நெருக்கடி இல்லாத மக்கள் தொகையில் மனிதர்கள் எழுப்பும் ஓசை இங்கு மிதமாக இருக்கிறது. அவ்வப்போது கிரீச்சிடுகின்ற பறவையினங்களும், வீட்டில் வளர்க்கும் வகை வகையான வளர்ப்புப் பிராணிகளான துருதுரு நாய்களும் அப்பகுதிக்கு அழகுசேர்க்கின்றன.

இங்கு இவர்கள் சைக்கிளை பைக் என்கிறார் கள். பேட்டரியால் இயங்குகின்ற இந்த வாகனத்தை குறைந்த தொலைவாக கல்லூரிக்குள் பயணிக்க வென பயன்படுத்துகிறார்கள். வாடகைக்கு அமர்த்திக்கொள்ளவும் இந்த வாகனம் ஆங்காங்கே நிற்கிறது. இணையத்தின் வசதியோடு க்யூ ஆர் கோடு மூலம் தொகையை செலுத்திவிட்டு, வேண்டிய இடத்திற்கு இந்த வண்டியில் செல்லலாம். சென்ற இடத்தில் அங்கேயே நிறுத்திவிட்டு நமது அடுத்த வேலையைப் பார்க்கலாம். வேறு ஒரு நபர் அதனை அவரைப் போல பயன்படுத்திக் கொள்வார்.

இந்த வசதி அந்த ஏரியிலும் இருந்தது. இவ்விடத்தை மகிழ்ச்சிக்கான பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்தாமல், அப்பகுதியைச் சுற்றியுள்ள குன்றுகளிலும் மலைகளிலும் ஏறி உடற்பயிற்சியை யும் மேற்கொள்கிறார்கள்.

சவாலான செயல்களை சாதாரண மனிதர்களும் செய்கின்றனர். இந்தியாவில் நாம் வியந்து பார்க்கின்ற பல சாகசங்களை, சர்வ சாதாரணமாக இங்குள்ள குழந்தைகள் இளமையிலேயே செய்து பழகும்படி, பொதுமக்களுக்கான பூங்காக்களில் வாய்ப்புகளை அமைத்திருக்கிறார்கள். உயரமான ஏணியில் ஏறி, அருகிலுள்ள கோலின் நுனிக்குத் தாவியபடி, அடுத்து உள்ள குகைக்குச் சாய்ந்து இடம்பெயர்வதும், உருளும் உருளையில் கைபிடிக்காமல் நடப்பதும் குழந்தைகளது அன்றாட விளையாட்டாக இருக்கின்றன. இனிமையான இசையை அவர்களே இசைப்பதற்கும் டெம்பியிலுள்ள பூங்காக்களில் இசைக்கருவிகள் பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் மனநலத்திற்கு அந்த நாடு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது. இத்தனை பயன்பாடுகளுக்குப் பிறகும் குப்பைகளை உரிய இடத்தில் சேகரித்து தூய்மையைக் காக்க பொதுமக்களும் பொறுப்போடு இருக்கிறார்கள். தங்களது வளர்ப்புப் பிராணிகள் பூங்காக்களின் புல்வெளிகளில் இயற்கை உந்துதலால் அசுத்தம் செய்துவிட்டால், அதனை அதன் உரிமையாளரே விரைந்து தூய்மைப்படுத்தி அப்புறப்படுத்துவதற்காக அருகிலேயே அவற்றிற்காக தனியான தொட்டிகளை வைத்திருக்கிறார்கள்.

பல சமூகங்களை இணைத்து பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு நிலையான வாழ்வை உறுதிப்படுத்துவதில் அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டி முன்னணியில் இருக்கிறது. பன்னாட்டு மாணவர்கள் இங்கு கல்வி பயின்று உயர்நிலையில் பணிபுரிகிறார்கள். நமது இந்திய பொறியியல் மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். பல்கலைக்கழகம் என்றால் பல ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சுவர் அமைத்து, நான்கு புறமும் பிரம்மாண்டமான வாயிற் கதவுகளைக் கொண்டு, உள்ளே பல்வேறு துறைகளுக்கென கட்டிடங்கள் இருக்கும் ஒரே ஒரு முகவரியைக் கொண்டதாக இருக்கவில்லை. ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பிரிந்தவாறு அமைந்திருக்கிறது. நன்கு பராமரிக்கப்பட்டு காணும் இடமெல்லாம் பசுமையும் செழுமையும் கொண்டு, பல வண்ணங்களில் விதவிதமாக பூத்துக் குலுங்கும் மலர்களுக்கு மத்தியில் மாணவர்கள் பயில்கிறார்கள்.

பல நூறு ஆண்டுகளைக் கடந்த மரங்கள் நெடிய நின்று கல்லூரியின் பிரம்மாண்டத்தைப் பேசுகின்றன. பொதுமக்களுக்கு அனுமதியில்லாத மாணவர்களுக்கான நூலகத்தை வெளியிலிருந்து காணமுடிந்தது. தமிழும் தெலுங்கும் மலையாளமும் பேசுகின்ற சில மாணவர்கள் அங்கு இருந்தார்கள். விருப்பமான கலைகளை குறைந்த அளவேயான தொகையில் கற்றுக்கொள்ள அங்கு வாய்ப்புகள் இருந்தன. 150 ஆண்டுகள் பழமையான அந்தக் கல்லூரியின் அடையாளமானதொரு பாதையின் இருபுறமும், காய்க்காத பனை மரங்கள் வரிசையாக நின்ற இடத்தில் நாங்களும் நின்று ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டோம். நிலவில் உயிர்களை வாழ வைக்கத் துடிக்கும் பேராற்றல் கொண்ட மனிதன், நீரின்றி அமையாத இவ்வுலகில், காய்ந்த நிலத்தை வளப்படுத்த முயன்று வென்ற பகுதி அரிசோனா மாநிலத்தின் டெம்பியாக இருக்கிறது. புவியில் வாழும் நிலவின் ஒரு பகுதியாக அரிசோனாவை எண்ண வைத்தது.

uday011124
இதையும் படியுங்கள்
Subscribe