எழுதறது ஒரு பிழைப்பா? என்று எம்.வி.வி.யின் மனைவி ஒரு நேர்காணலில் சலித்துக்கொண்டதாகச் செய்தியுண்டு. நியாயமான வாசகம்தான். லௌகிக உலகில் இயங்கும் பெண்களுக்கு இப்படிக் கேட்கத்தோன்றுவது சாதாரணமானது. எழுத்தாளன் என்பவன் வேறு உலகில் உலவுபவன். எழுத்து என் ஜீவன், எழுத்து என் தவம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார் எம்.வி. வெங்கட்ராம். புறமன வாதைகளைச் சகித்துக்கொண்டு நேர்த்தியான சித்திரங்களை வரைந்தார். வாழ்வும் சாவும் நம்முன் சுடராக எரிந்து கொண்டிருக்கிறது. வாழ்வை மிகக் குறைந்த அளவில் வாழவிரும்புவது தனி மனோநிலை. எம்.வி.வி.க்கு இது பிடித்திருந்தது.
"நித்ய கன்னி'யிலிருந்து ஒரு பெண் போராடு கிறாள் வரை இன்னும் ஏராளமான சிறுகதைகள் என எழுதிக்குவித்துக் கொண்டிருந்தார். கும்பகோணம் தோப்புத்துறை தெருவிலிருந்து எழுதிய கர்மயோகியாகக் காட்சியளித்தார்.
"ஹிந்து'வாகிய நான் ஊழை நம்புகிறவன். பல பிறவிகளில் செய்த தீவினைகளின் பலனாகத்தான் நான் எழுத்தாளனாகப் பிறந்தேன் என்று சொன்னதுகூட ஒரு தேடலினூடான அதீத ஈடுபாட்டி னால்தான். வாழ்வின் பெருந்துயர் சூழ்ந்து எதிரிகளி ன
எழுதறது ஒரு பிழைப்பா? என்று எம்.வி.வி.யின் மனைவி ஒரு நேர்காணலில் சலித்துக்கொண்டதாகச் செய்தியுண்டு. நியாயமான வாசகம்தான். லௌகிக உலகில் இயங்கும் பெண்களுக்கு இப்படிக் கேட்கத்தோன்றுவது சாதாரணமானது. எழுத்தாளன் என்பவன் வேறு உலகில் உலவுபவன். எழுத்து என் ஜீவன், எழுத்து என் தவம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார் எம்.வி. வெங்கட்ராம். புறமன வாதைகளைச் சகித்துக்கொண்டு நேர்த்தியான சித்திரங்களை வரைந்தார். வாழ்வும் சாவும் நம்முன் சுடராக எரிந்து கொண்டிருக்கிறது. வாழ்வை மிகக் குறைந்த அளவில் வாழவிரும்புவது தனி மனோநிலை. எம்.வி.வி.க்கு இது பிடித்திருந்தது.
"நித்ய கன்னி'யிலிருந்து ஒரு பெண் போராடு கிறாள் வரை இன்னும் ஏராளமான சிறுகதைகள் என எழுதிக்குவித்துக் கொண்டிருந்தார். கும்பகோணம் தோப்புத்துறை தெருவிலிருந்து எழுதிய கர்மயோகியாகக் காட்சியளித்தார்.
"ஹிந்து'வாகிய நான் ஊழை நம்புகிறவன். பல பிறவிகளில் செய்த தீவினைகளின் பலனாகத்தான் நான் எழுத்தாளனாகப் பிறந்தேன் என்று சொன்னதுகூட ஒரு தேடலினூடான அதீத ஈடுபாட்டி னால்தான். வாழ்வின் பெருந்துயர் சூழ்ந்து எதிரிகளி னால் புதையுண்டு மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந் தவன் நான் என்று சிரிப்பார். உங்கள் எதிரி யார் என்றதற்கு என் மனசு, நானும்கூட என்றார். மழுமழுவென்ற முகம், தலைமுடி நேர்த்தி, தீர்க்கமான கண்கள், வெற்றிலைச் சாறு மணக்கும் சிவந்த உதடுகள். பொன்னிறமான பொலிவான கச்சிதமான உடம்பு. ""என்னய்யா இந்த வயசிலேயே இவ்வளவு அழகாக இருக்கீங்க. சிறுவயசில் பொண்ணுங்க உங்களைச் சுத்திச் சுத்தி வந்திருப்பாங்களே'' என்று கிண்டல்செய்தால் ஒரு வெட்கப்புன்னகை. எம்.வி.விக்.கு வாய்த்த வசீகரத்தோற்றம் வேறு தமிழ் எழுத்தாளர்களுக்கும் இல்லை. பேசாமலே விழியால் நட்புபேணும் உள்ளம்.
""மௌனி''க்குத் தமிழே எழுதத் தெரியாது. வார்த்தைகளை கன்னாபின்னாவென்று கொட்டி இறைத்திருப்பதால் முயன்று கண்டுபிடித்து ஒருமாதிரி பண்ணுவேன். தக்க இடத்தில் பொருத்தி கதையாக்குவேன். மௌனி சண்டைக்கு வருவார் என்பார். ஆனாலும் மௌனி ஜெயித்தார் என்பார். மௌனியின்மேல் வெங்கட்ராமுக்குத் தனி பிரேமையே உண்டு.
நெசவு, ஜரிகை வணிகத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். ஏகப்பட்ட பணப்புழக்கம். தேர்தலில் நின்றார். கட்டப்பஞ்சாயத்து பண்ணி சரியான தீர்ப்புதருவார். துல்லியமான ஆங்கிலம். செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய இறுதியில் ஒன்றுமில்லாமல் போனது. அதே கோட்டுப் சிரிப்புதான். புறவயப்பட்டவை எவையும் எம்.வி.வி.யை அசைத்துவிடவில்லை. எம்.வி.வி. ஒரு யோகி என்று கரிச்சான் குஞ்சுவும், தி. ஜானகிராமனும் சொல்லக்கேட்டிருக்கிறேன். துயரங்களையும் வலிகளையும் கடந்து போகும் தெம்பு அவரிட மிருந்தது. தமக்குள்ளேயே விவாதித்துக் கொண்டிருந்தார். உள்ளாற்றல் என்ற ஒன்றை வெளிக்கொணரும் முயற்சியில் தனக்குத்தானே போர்புரிந்து கொண்டிருந்தார். எம்.வி.வி.யிடம் உண்மையின் எல்லாவித நறுமணச்சுவைகளும் உண்டு. அதனால் எந்த நிலையிலும் அவருக்குள் சத்தியத்தின் வீச்சு மலர்ந்துகொண்டே இருக்கும். அவர் சோகமுகத்தோடு இருந்து பார்த்ததில்லை. "நித்ய கன்னி'யில் தன் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தியிருப்பதாக சொல்வார். மகாபாரதத்தில் வரும் ஒரு பாத்திரம்தான் மாதவி. பெறுவதற்கரிய பேறுபெற்றாள் மாதவி. மகவு ஈன்றதும் இழந்த கன்னித்தன்மையைத் திரும்பவும் பெறுகிறாள். நான்கு குழந்தைகளைப் பெற்று கன்னித்தன்மையை ஒவ்வொரு முறையும் பெற்ற இடத்திலேயே பெறுவது பெரும்பேறு. கன்னிமை என்ற சொல்லே அவரைச் சங்கடத்தில் ஆழ்த்தும். அதன் மேல் தீராத வெறுப்பும் இருந்தது. அவர் அதிசயமான உலகத்தில் பிரவேசித்தார். முழுமையைவிடப் பெரிதான உலகம். வரபலத்தால் இன்பமாக வாழவேண்டிய மாதவி கானகத்திற்குத் தவம் இயற்றப் புறப்பட்டாள். இந்தப் பிரிவு இதயத்திற்கும் உணர்ச்சிகளுக்கும் பொதுவான கனவு. இது கௌரவமானது. அறிந்தவை எல்லாமே புரிந்தவையே என்ற தொனி புலப்படும். நித்ய கன்னியின் பிரதான அறிவிப்பே பெண்விடுதலை. புனிதம் என்பது ஏன் பெண்குறிகளோடு சம்பந்தப்பட்ட சொல்லாக மாற்றப்பட்டது. தர்மம் என்ற ஒருசொல், ஒழுக்கம், அறம், நீதி என்பன ஏன் வறட்டுச் சொற்களாகக் கட்டப்பட்டன என்பார்.
"வேள்வித் தீ' கள்ளக்காதல் கதை என்று ஒற்றை வரியில் சொல்லிவிடமுடியாது. பட்டுநெசவாளர் களான சௌராஷ்ட்ர சமூக வாழ்கையை துல்லிய மாகக் கூறும் சித்திரம். சாகித்ய அகாதமி விருதுபெற்ற "காதுகள்' குறித்துப் பேசும்போது, ""இது என் வாழ்க்கை'' என்பார். இதன் கதாநாயகனாகிய மாலியின் காதுகளில் திடீரெனக் கெட்ட குரல்கள் வக்கிரமாகவும் ஆபாசமாகவும் ஒலிக்கத் தொடங்கின. கோரமான உருவங்களும் சூழ்ந்தன. இது நிஜம்.
இதிலிருந்து விடுபடும் முயற்சி மிகுந்த அயர்ச்சியைத் தந்தது. மீட்க ஓர் ஆசான் தேவை என்று அவசரப் பட்டார்.
ஒவ்வொரு தனி மனிதரும் தத்துவம்தான். தரிசனம்தான். தன்னையே இழந்துவிட்டால் அடையப்போவது ஏதுமில்லை. ஒருவரது வழியைப் பின்பற்றினால் தன் சுயத்தை இழக்க நேரிடும். தன்னையே இழந்துவிட்டால் அடையப்போவது ஏதுமில்லை. "தேனீ' என்ற இதழை சில நண்பர் களோடு நடத்தியபோது சில சொத்துக்களை விற்க நேர்ந்தது. என் வியாபாரமும் பணமும் "தேனீ'யால் வீழ்த்தப்பட்டது என்பார் சிரிப்போடு. தி.ஜானகிராமன் சொல்வார். "வெங்கட்ராம்' எனக்கு முன்னால் வெகுதூரம் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
வாழ்க்கை-சிக்கலான ஆட்டம்தான் என்பதை எம்.வி.வி. ஏற்கவில்லை. ஆன்மாவைக் கடந்த காலத் திலிருந்து மீட்க வேண்டும் என்றார். தன் காதுகளில் சதா தொந்தரவு செய்துகொண்டிருந்த விகாரமான ஒலிகளை ஆராய முயன்றார். அதன் அனுபவங்களை எழுதினார். இவை ஏன் என்ற கேள்விக்கு விடை தேட முயன்றார். பெரும்பான்மையான வாக்குகளால் இலக்கியம் வாழ்வதில்லை என்பது எம்.வி.வி.யின் கம்பீர வாசகம்.