இசைஞானியின் ரகசியங்கள்1 - பொன்.குமார்

/idhalgal/eniya-utayam/musicians-secrets-1-ponkumar

சைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் வெளியே தெரியாத பல சுவையான ரகசியப் பக்கங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு கிராமத்து ராஜா என்ற தலைப்பில் அழகிய நூலாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் கவிஞர் ரவிதாசன்.

அதன் சுவையான அம்சங்களைப் பார்ப்போம்.

அன்னக்கிளி என்னும் படத்திற்கு 1976-ல் இசையமைக்கத் தொடங்கி 1400 படங்களுக்கு மேல் இசையமைத்து அரை நூற்றாண்டு காலமாக இசைப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. இளையராஜா ஓர் இசைச் சுரங்கம். இளையராஜா இசை குறித்து ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன. இளையராஜா வாழ்க்கை குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளையராஜா வாழ்க்கை என்பது ஒரு தனிப்பட்ட வாழ்க்கை அல்ல. பாவலர் வரதராஜன், இசையமைப்பாளர் கங்கை அமரன், இசைக் கலைஞர் பாஸ்கர் ஆகியோரின் வாழ்க்கையும் அடங்கியதாகும்.

dd

இசைஞானி இளையராஜா ஓர் இசையமைப்பாளர் மட்டுமல்ல... ஓர் எழுத்தாளரும் ஆவார். அவர் ஏராளமான தொகுப்புகளை எழுதியுள்ளார். அத்தொகுப்புகளில் சில 1. வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது - கவிதைகள்

2. வழித்துணை - கவிதைகள்

3. வெண்பா நன்மாலை - வெண்பாக்கள்

5. பால் நிலாப் பாதை - கட்டுரைகள்

6. உண்மைக்குத் திரை ஏது? - கவிதைகள்

7.ஆதிசங்கரரின் விவேக சூடாமணி - கவிநடையில் இளையராஜா

8. சங்கீத கனவுகள் - கட்டுரைகள்

9.யாதுமாகி நின்றாய்- வெண்பாக்கள்

10. நாத வெளியினிலே - கட்டுரைகள் கவிதைகள்

11. ஞானகங்கா - தனிப்பாடல் திரட்டு

-இத்தொகுப்புகளில் பால் நிலா பாதை மட்டும்

அவரின் நினைவுக்குறிப்புகள் ஆகும். இளையராஜாவின் தம்பி இசையமைப்பாளர் கங்கை அமரனும் பண்ணைபுரம் எக்ஸ்பிரஸ் என வாழ்க்கை வரலாற்றை பல பாகங்களாக எழுதியுள்ளார். இளையராஜா வின் வாழ்க்கை வரலாறு குறித்து முழுமையான புத்தகம் இல்லை. கவிஞர் ரவிதாசன் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை ' ஒரு கிராமத்து ராஜா ' என்னும் தொகுப்பாக்கித் தந்துள்ளார். இத்தொகுப்பு இளையராஜாவின் முதல் பகுதியான அதாவது அன்னக்கிளி என்னும் முதல் படத்திற்கு இசையமைக்கும் வரையிலா

சைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் வெளியே தெரியாத பல சுவையான ரகசியப் பக்கங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு கிராமத்து ராஜா என்ற தலைப்பில் அழகிய நூலாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் கவிஞர் ரவிதாசன்.

அதன் சுவையான அம்சங்களைப் பார்ப்போம்.

அன்னக்கிளி என்னும் படத்திற்கு 1976-ல் இசையமைக்கத் தொடங்கி 1400 படங்களுக்கு மேல் இசையமைத்து அரை நூற்றாண்டு காலமாக இசைப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. இளையராஜா ஓர் இசைச் சுரங்கம். இளையராஜா இசை குறித்து ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன. இளையராஜா வாழ்க்கை குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளையராஜா வாழ்க்கை என்பது ஒரு தனிப்பட்ட வாழ்க்கை அல்ல. பாவலர் வரதராஜன், இசையமைப்பாளர் கங்கை அமரன், இசைக் கலைஞர் பாஸ்கர் ஆகியோரின் வாழ்க்கையும் அடங்கியதாகும்.

dd

இசைஞானி இளையராஜா ஓர் இசையமைப்பாளர் மட்டுமல்ல... ஓர் எழுத்தாளரும் ஆவார். அவர் ஏராளமான தொகுப்புகளை எழுதியுள்ளார். அத்தொகுப்புகளில் சில 1. வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது - கவிதைகள்

2. வழித்துணை - கவிதைகள்

3. வெண்பா நன்மாலை - வெண்பாக்கள்

5. பால் நிலாப் பாதை - கட்டுரைகள்

6. உண்மைக்குத் திரை ஏது? - கவிதைகள்

7.ஆதிசங்கரரின் விவேக சூடாமணி - கவிநடையில் இளையராஜா

8. சங்கீத கனவுகள் - கட்டுரைகள்

9.யாதுமாகி நின்றாய்- வெண்பாக்கள்

10. நாத வெளியினிலே - கட்டுரைகள் கவிதைகள்

11. ஞானகங்கா - தனிப்பாடல் திரட்டு

-இத்தொகுப்புகளில் பால் நிலா பாதை மட்டும்

அவரின் நினைவுக்குறிப்புகள் ஆகும். இளையராஜாவின் தம்பி இசையமைப்பாளர் கங்கை அமரனும் பண்ணைபுரம் எக்ஸ்பிரஸ் என வாழ்க்கை வரலாற்றை பல பாகங்களாக எழுதியுள்ளார். இளையராஜா வின் வாழ்க்கை வரலாறு குறித்து முழுமையான புத்தகம் இல்லை. கவிஞர் ரவிதாசன் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை ' ஒரு கிராமத்து ராஜா ' என்னும் தொகுப்பாக்கித் தந்துள்ளார். இத்தொகுப்பு இளையராஜாவின் முதல் பகுதியான அதாவது அன்னக்கிளி என்னும் முதல் படத்திற்கு இசையமைக்கும் வரையிலான வரலாற்றை எழுதியுள்ளார்.

கவிஞர் கவிதாசன் தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவருகிறார். பல வரலாறுகளை எழுதியுள்ளார். இளையராஜா குறித்த வரலாற்றை பேசும் அவரின் நாற்பத்து நான்காம் நூலாகும். இத்தொகுப்பிலும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன.

ஒரு கிராமத்து ராஜா என்னும் இத்தொகுப்பு இளையராஜா பற்றியதானாலும் பாவலர் வரதராஜன் குறித்து முக்கியமாக பேசுகிறது. முதல் அத்தியாயத்திலேயே பாவலரின் முற்போக்கு சிந்தனையை முன்வைக்கிறது. பேய் இல்லை என்பதை மெய்ப்பித்துக் காட்டி மக்களிடையே நம்பிக்கையை உண்டாக்குவதைக் குறிக்கிறது.

கம்யூனிச கருத்துக்களை ஏற்றுக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு கம்யூனிச மேடைகளில் முழங்கி கம்யூனிசத்தை வளர்க்க முற்பட்டவர். பாடல்கள் மூலம் பிரச்சாரம் செய்தவர். ஓர் உண்மையான கம்யூனிஸ்டாக கட்சிக்கு உழைத்தவர். கட்சிக்காக 25 ஏக்கர் நிலத்தில் 22 ஏக்கர் நிலத்தை விற்று செலவு செய்தவர். மேடைகளில் பாடுவதற்காக கட்சி தரும் சன்மானத்தையும் கட்சி நிதிக்காக தரும் அளவிற்குக் கட்சி மீது ஈடுபாடு கொண்டவர். பாவலர் வரதராஜன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தபோது கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டுகொள்ளவில்லை. கழட்டி விட்டுவிட்டனர்.

ddd

இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோர் உதவியால் ஜாமீனில் வெளிவருகிறார். பாவலருக்கு கலைஞர் தி.மு.க. மேடைகளில் பாட அழைப்பு விடுக்கிறார். வாய்ப்பு கொடுக்கிறார். ஆனாலும் பாவலர் மதுவினால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார். கவிஞர் ரவிதாசன் பாவலரின் சோகக் கதையையும் இவ்வரலாற்றில் சொல்லியுள்ளார். பாவலரை ஒரு கம்யூனிஸ்டாகத்தான் மக்கள் அறிவர்.

அவர் கம்யூனிஸ்ட் கட்சியினரால் கைவிடப்பட்டது, கலைஞர் கைகொடுத்தது, தி.மு.க. மேடைகளில் பாடியது ஆகியவை புதுத் தகவல்கள். கம்யூனிஸ்ட்களும் மனிதனின் செயலை பாராட்டாமல் மனிதனின் சாதியைப்பார்த்து வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். இளையராஜாவிற்கு இசைஞானி என்னும் பட்டம் வழங்கியவரும் கலைஞர்.

இளையராஜாவின் தந்தை ராமசாமியின் தாத்தாவிற்கு தாத்தா சுதந்திரத்திற்காக போரிட்ட பூலித்தேவன் படையில் இருந்தவர் என்பதும் புதுத் தகவல். கேரளாவில் உள்ள எஸ்டேட்டில் பணிபுரியும்போது கண்காணிப்பாளராக இருந்ததால் கங்காணி ராமசாமி என்றழைக்கப்பட்டார். ராமசாமி என்று வெள்ளைக்காரன் அழைப்பதில் சிரமம் இருந்ததால் டேனியல் என்றழைக்கப்பட்டார். அதனால் டேனியல் என்றும் பெயர் ஏற்பட்டது. கங்காணியும் ஒரு கலா ரசிகர். சங்கீதப் பிரியர். நாட்டுப்புறப் பாடல்களை மெட்டமைத்துப் பாடக்கூடியவர். இளையராஜாவிற்கு இசைஞானம் அவர் தந்தையிடமிருந்து வந்திருக்க வேண்டும்.

ராமசாமிக்கு சின்னத்தாய் அதாவது இளையராஜாவின் தாய் மூன்றாம் தாரம் என்றாலும் இத்தம்பதியருக்கு வரதராஜன், கமலம், பத்மாவதி, பாஸ்கர், ராசய்யா, அமர்சிங் என ஆறுபிள்ளைகள். பெண் பிள்ளைகள் தவிர ஆண்பிள்ளைகள் அனைவருமே இசைஞானம் கொண்டவர்களாக விளங்கினர். இவர்களின் இசைக்குழுவிற்கு பாவலர் பிரதர்ஸ் என்று பெயர்.

இளையராஜாவின் குடும்பம் என்பது இசைக்குடும்பம்.

அப்பா, அண்ணன் ஆகியோரிடமிருந்து தொடர்கிறது. பாவலர் வீட்டில் இல்லாதபோது தம்பிகள் மூவரும் இசைக்கச்சேரி மாதிரியை நடத்தியுள்ளனர். அதுவே இளையராஜாவிற்கு அடித்தளமாக இருந்தது.

பாவலரின் குழுவில் பாடிவந்த பெண் நிறுத்தப்பட்டதால் பெண் குரலில் மேடைகளில் பாட இளையராஜாவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது. ஒருமுறை ஆர்மோனியம் வாசிப்பவர் கச்சேரிக்கு வரவியலாது போனதால் அந்த வாய்ப்பும் இளையராஜாவிற்கு வழங்கப்பட்டது. இவ்விரண்டுக்கும் காரணமானவர் இளையராஜாவின் தாய். நேரு இறந்தபோது கண்ணதாசன் எழுதிய கவிதைக்கு இளையராஜா முதன்முதலில் மெட்டமைத்ததையும் பாராட்டி ஊக்குவித்தவரும் தாய். சினிமாவிற்குள் நுழைய மூவரையும் வானொலிப் பெட்டியை விற்று பணம் தந்து ஆசீர்வாதத்துடன் அனுப்பி வைத்ததும் தாய். இளையராஜா இசை ராஜா ஆனதில் தாயின் பங்கு முக்கியமாக உள்ளது.

dd

பாரதிராஜா ஒரு பெரிய இயக்குநரானாலும் இவரும் பண்ணைபுரம் வழியாகவே வந்துள்ளார். மலேரியா ஆய்வாளராக ஊருக்கு வந்தவர் கலை இலக்கிய தாகத்தால் நாடகத்தில் ஈடுபட்டாலும் சின்னசாமியான பாரதிராஜாவிற்கு சினிமாவில் சென்று சாதிக்கவேண்டும் என்பதே ஆசை. அதனால் அவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னை செல்கிறார்.

சின்னசாமியே இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் சென்னை செல்ல ஒரு காரணம். முதலில் அவர் அறையிலேயே தங்கியுள்ளனர். சினிமா வாய்ப்பு தங்கித் தேட பாரதிராஜா ஒரு நல்ல களம் அமைத்துத் தந்துள்ளார்.

இளையராஜாவிற்கு வாய்ப்பு எல்லாம் யாராவது வராது போனாலே கிடைத்து வருகிறது. ஒரு பெண் பாடகர் வராததால் பாடுவற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆர்மோனியம் வாசிப்பவர் வராததால் ஆர்மோனியம் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. ஓ.ஏ.கே. தேவர் நாடகத்திற்கு இசையமைப்பாளர் சுப்ரமணி தேதி கிடைக்காததால் இளையராஜாவிற்கு வாய்ப்பை வழங்கினார். இதனால் வாய்ப்புகள் தொடர்ந்தது. பாடல் எழுதுவதற்கு கங்கை அமரனுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

கமலா என்னும் பாடகி மூலம் தன்ராஜ் மாஸ்டரிடம் பியானோ, கிடார், வயலின் முறைப்படி கற்றுக்கொள்ள சேர்ந்தார். கர்நாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ந்தவராக தன்ராஜ் மாஸ்டர் இருந்தது ஒரு நல்ல வாய்ப்பாக இளையராஜாவிற்கு அமைந்தது. தன்ராஜ் மாஸ்டர் மூலமே ஜி. கே. வெங்கடேஷ் என்னும் இசையமைப்பாளரிடம் உதவியாளராகச் சேரும் வாய்ப்பு கிடைத்தது. திரையிலும் ' இசை உதவி ராஜா' என்று காட்டப்பட்டது. அறுபது படங்களுக்கு மேல் உதவி புரிந்துள்ளார்.

' ஆயிரம் நிலவே வா ' என்று அடிமைப் பெண் படத்தில் பாடியதன் மூலம் புகழ் பெற்ற எஸ். பி. பாலசுப்பிரமணியம் நடத்திவந்த இசைக் கச்சேரிகளில் பங்கேற்று வந்தார். நட்புடன் இருந்தார். எஸ். பி.பி.யுடன் பொள்ளாச்சியில் நிகழ்ச்சிக்கு சென்று திரும்பி வரும்போது கார் விபத்துக்குள்ளாகி விடுகிறது. இதுவே இளையராஜாவிற்கு ஒரு திருப்பு முனையானது.

தோழர் என். சங்ரய்யாவின் அண்ணன் மகன் கதாசிரியர் ஆர். செல்வராஜ் மூலமே இளையராஜா விற்கு அறிமுகமானார் பஞ்சு அருணாசலம். பஞ்சு அருணாசலத்திற்கு இளையராஜாவின் மெட்டமைக்கும் விதம் மிகவும் பிடித்துவிட்டது. இளையராஜாவின் இசை பஞ்சுவை ஆட்கொண்டது. இளையராஜா பாடிக் காட்டிய அன்னக்கிளி என்னும் பல்லவியை வைத்தே படம் எடுக்கத் தொடங்கினார் பஞ்சு அருணாசலம். ஆனாலும் பஞ்சுவிற்கு எதிர்ப்பு. அன்னக் கிளி வெளியானது. முதல் வாரத்தில் எதிர்பாத்த வரவேற்பில்லை. பின் அமோக வெற்றி. பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. இளையராஜா யாரென கேட்க வைத்தது. எல்லோரிடமும் வாய்ப்புகள் தேடிச் சென்ற இளையராஜா தேடிவருவோர்க்கு வாய்ப்பளிப்பவரானார்.

ff

இளையராஜாவின் இயற்பெயரான ராசய்யாவை ராஜா என்று மாற்றியவர் தன்ராஜ் மாஸ்டர். ராஜாவுடன் இளைய சேர்த்து இளையராஜாவாக ஆக்கியவர் பஞ்சு அருணாசலம். இளையராஜாவே பொருத்தமான பெயராகிவிட்டது.

ராசைய்யா இளையராஜா ஆவதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவர் உதவி இருந்தாலும் இளையராஜா அவ்வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தன் திறமையால் முன்னேறியுள்ளார் என்பதை வரலாறு காட்டுகிறது.

பண்ணைப்புரத்து ராசய்யா ராஜாவாகி இளையராஜா ஆகி இசையமைப்பாளரான வரலாற்றை அழகாக பதிவாக்கியுள்ளார் கவிஞர் ரவிதாசன். இளையராஜா குறித்து வரலாறு எழுதப்படுவதற்கான தரவுகளைத் திரட்டி சுவையாக எழுதியுள்ளார். பண்ணைப்புரத்தில் தொடங்கி பட்டணம் வந்து பாட்டுக்கு இசையமைக்கும் வரை வரலாறை எப்படி எழுதவேண்டுமோ அவ்வாறே எழுதியுள்ளார். ' ஒரு கிராமத்து ராஜா' என்னும் இத்தொகுப்பிற்கு முதலில் வைத்த பெயர் ' இளையராஜா இதிகாசம்'. இதிகாசம் என்றால் கற்பனை. ஆனால் இளையராஜா வரலாறு. நிஜம்.

இசை என்பது இளவயதிலிருந்தே இளையராஜா மனத்தில் இசைத்துக் கொண்டிருந்ததைக் கூறியுள்ளார். அதுவே அவரை வெற்றி பெறவும் செய்தது என்பதையும் வரலாறு மூலம் கூறியுள்ளார் கவிதாசன். பின்னணி இசைக் கலைஞனின் வாழ்வின் பின்னணியை முன்னணிக்குக் கொண்டுவந்து எழுத்தாக்கியுள்ளார். பண்ணைப்புரம் முதல் அன்னக்கிளி வரையிலான இளையராஜா வாழ்வின் முற்பகுதியைத் தந்த கவிஞர் கவிதாசனின் முயற்சிக்கு பாராட்டுக்கள். அன்னக்"கிளிக்குப் பிறகான இளையராஜா வின் இரண்டாம் பாக வரலாற்றை விரைவில் தர வாழ்த்துகள்.

*( நூல் வேண்டுவோர் நூலாசிரியரைத் தொடர்புகொள்ள: 8072879617)

uday010723
இதையும் படியுங்கள்
Subscribe