எளிமையின் முதல்வர் திருமதி ஸ்டாலின்! - எழுத்தாளர் இந்துமதி

/idhalgal/eniya-utayam/mrs-stalin-prime-minister-simplicity-writer-indumati

(முதல்வரின் திருமதியான துர்கா ஸ்டாலின் சிறந்த இல்லத் தரசி, நிர்வாகி,ஆன்மீக நம்பிக்கை கொண்டவர் என்ற போதிலும், கலைஞரின் மதிப்பிற்குரிய மருமகளாக அவரின் பேரன்பைப் பெற்றவர்.எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்த போதும்,எல்லோரும் வியக்கும் வகையில் தன்னை மிகவும் எளிமையாக வைத்திருப்பவர். அவருடைய எளிமை பற்றி, எழுத்துலக சீனியரும் பிரபல எழுத்தாளருமான இந்துமதியின் ஜோடனை கலக்காத பதிவு இது.)

எப்போதும் முதலமைச்சரின் மனைவி first lady என்கிற எண்ணமோ, தலைக் கனமோ சிறிதுகூட இன்றி பழகுபவர். இன்று நேற்று இல்லை. கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து வருடப் பழக்கம். கலைஞர் இருந்தபோதிலிருந்து, இவரது கணவர் துணை முதல்வராக இருந்தபோதிலிருந்து பழக்கம். எதையும் வெளிப்படையாகப் பேசியே பழக்கப்பட்ட நான் இவரது கணவரான ஸ்டாலினை முதலமைச்சராக அறிவிக்காததற்காக அவரிடம் சண்டைகூடப் போட்டிருக்கிறேன்.

ss

அப்போதிலிருந்தே துர்கா எனக்குப் பிடித்த மானவர். மிகவும் பிரியமானவர். அவருடைய எளிமை என

(முதல்வரின் திருமதியான துர்கா ஸ்டாலின் சிறந்த இல்லத் தரசி, நிர்வாகி,ஆன்மீக நம்பிக்கை கொண்டவர் என்ற போதிலும், கலைஞரின் மதிப்பிற்குரிய மருமகளாக அவரின் பேரன்பைப் பெற்றவர்.எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்த போதும்,எல்லோரும் வியக்கும் வகையில் தன்னை மிகவும் எளிமையாக வைத்திருப்பவர். அவருடைய எளிமை பற்றி, எழுத்துலக சீனியரும் பிரபல எழுத்தாளருமான இந்துமதியின் ஜோடனை கலக்காத பதிவு இது.)

எப்போதும் முதலமைச்சரின் மனைவி first lady என்கிற எண்ணமோ, தலைக் கனமோ சிறிதுகூட இன்றி பழகுபவர். இன்று நேற்று இல்லை. கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து வருடப் பழக்கம். கலைஞர் இருந்தபோதிலிருந்து, இவரது கணவர் துணை முதல்வராக இருந்தபோதிலிருந்து பழக்கம். எதையும் வெளிப்படையாகப் பேசியே பழக்கப்பட்ட நான் இவரது கணவரான ஸ்டாலினை முதலமைச்சராக அறிவிக்காததற்காக அவரிடம் சண்டைகூடப் போட்டிருக்கிறேன்.

ss

அப்போதிலிருந்தே துர்கா எனக்குப் பிடித்த மானவர். மிகவும் பிரியமானவர். அவருடைய எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். வெளிப்படையான பேச்சு பிடிக்கும். எல்லாவற்றிற்கும் மேலான பக்தி பிடிக்கும். தன் மனதிற்கு சரி என்று பட்டதை செய்யக்கூடியவர்.

"மாமா எனக்குக் கடவுள் பக்தி உண்டு. அதனால் வீட்டில் சிறிய பூஜை அறை வைத்துக்கொள்கிறேன் "என்று கலைஞரிடமே மனம்விட்டுப் பேசியவர். தனக்கு நியாயம் என்று பட்டதை தைரியமாக செய்யக்கூடியவர். (முதல்வரும் பெண்களுக்கான மரியாதையும், உரிமையும் மறுக்கக்கூடியவர் இல்லை. மனைவியே ஆனாலும் மாற்றுக் கருத்து கொண்டிருந்தால் அதை மதிப்பவர் .)

அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் முதல் பெண்மணி, முதலமைச்சரின் மனைவி, எளிமைக்கும் அன்புக்கும் ஒரு சிறிய உதாரணமே இன்று (23.10.2023) நடந்த நிகழ்ச்சி.

இன்று சரஸ்வதி பூஜை. எனக்கு மிகவும் பிடித்த மான பூஜை. அவளது கருணை, அவள் போட்ட பிச்சை இந்த எழுத்து என்று நினைப்பவள் நான். ஆகவே வேறு எந்த பண்டிகையும் கொண்டாடாத நான் இதை மட்டும் கொண்டாடுவேன். ஆத்மார்த்த மாக கலைமகளுக்கு நன்றி சொல்லுவேன்.

போன சரஸ்வதி பூஜைக்கு துர்கா அவர்களும் ஜெயந்தியும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். இன்று காலை போனில் பேசிய போது வருகிறேன் என்று துர்கா சொல்லியிருந்தார்கள்.

இன்று அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சரஸ்வதியை அலங்கரித்து பூஜை முடித்து, வெளியில் சென்றுவிட்டு களைத்துப் போய் ஆறு மணியளவில் வீடு திரும்பிய நான் இரவு உணவு தயார் செய்வதில் முனைந்தேன். இன்றிரவு வாட்ச் மேன் வரமாட்டார் என்பதால் 7மணிக்கெல்லாம் கேட்டைப் பூட்டி விட்டு வெளிவாசல் விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு, உள் கதவையும் தாழிட்டுவிட்டு வந்து விட்டேன்.

நான் என் கணவர், மருமகள் மூவரும் டைனிங் ஹாலில் அமர்ந்து பேசியபடி சாப்பிட்டு முடித்து, டைனிங் டேபிள், சமையலறையை சுத்தம் செய்து விட்டு படுக்கை அறையில் வைத்து விட்டு வந்த மொபைலை எடுத்துப் பார்த்தால்... துர்கா நாலைந்து முறை போன் செய்திருக்கிறார்கள்.

உடனே அவர்களுக்கு போன் செய்தால் "என்னங்க..நான் வீட்டுக்கு வந்திருந்தேங்க. கேட் பூட்டி இருந்திச்சு. லைட் எல்லாம் அணைச் சுருந்திச்சு. கேட்டைத் தட்டினேன். டிரைவர் வேறு பூட்டை இழுத்து சத்தப் படுத்தினார். நாலைந்து தரம் போன் பண்ணினேன். நீங்க எடுக்கல. திரும்பி வந்துட்டேங்க.." என்றார்.

எனக்கு பகீர் என்றது. மனசு வலித்தது. ( எப்படி மறந்தேன்..)

"ஸாரிங்க ரொம்ப ஸாரி. பிளீஸ் திரும்பி வாங்க...

இல்லாட்டி நான் ரொம்ப கஷ்டப் படுவேங்க." என்றேன் "சரிங்க... நான் கோபாலபுரத்தில் தான் இருக்கேன். மாமியாருக்கு உடம்பு சரியில்லை என்று வந்தேன். இதோ வரேங்க." என்று ஐந்தே நிமிடத்தில் திரும்பி வந்தார்.

மட மட வென்று கேட்டைத் திறந்து வாசல் விளக்குகளை எல்லாம் போட்டு கேட் வரை போய், கைபிடித்து அழைத்து வந்தேன்.

உள்ளே வந்தவர் பாபாவை, சரஸ்வதியை, பூஜை அறையின் சகல தெய்வங்களை யும் வணங்கினார். அவரது காலில் விழுந்து வணங்கிய என் மகன், மருமகளை ஆசீர்வதித்தார். பிறகு என் கணவரிடமும் என்னிடமும் ஆசி பெற்றார்.

ss

"எல்லாம் கிடைக்குங்க. உங்களு டையது மாதிரி நிஜமான எதிர் பார்ப்பு இல்லாத அன்பு கிடைக் காதுங்க. ? அது கிடைத்த நாங்க பாக்கிய சாலி'' என்று அவர் கூறியதைக் கேட்ட நான் சிலிர்த்துப் போனேன் ?

எப்பேர்ப்பட்ட மனுஷி! தமிழகத்தின் முதல் பெண்மணி (எஒதநப கஆஉவ).

நான் ரொம்ப சாதாரண மனுஷி.

ஆத்மார்த்தமான அன்பு தவிர வேறு

இல்லாதவள். அந்த அன்புக்காக,

அந்த அன்பை மதித்து வீடு தேடி

வந்து பூட்டிக் கிடந்த கதவைத் தட்டி,

போனில் அழைத்து, பதிலற்றுத்

திரும்பிப் போனவர்... என் வேண்டு கோளை ஏற்று திரும்பிவந்தார் என்றால்....

How great she is..!

சாதாரணமான நமக்கே கோபம் வரும். EGO தலைக்கு ஏறும்.

ஆனால் அவர்...!

அந்த எளிமை... மதிக்கும் தன்மை... அன்பைப் புரிந்து கொண்டு, அதே அன்பைத் திருப்பித் தந்து...

நீங்கள் உயர்ந்து நிற்பதன் காரணம் இதுதான். ஆண்டவன் உங்களை உயரத்தில் உட்கார வைத்தி ருப்பதன் காரணமும் இதுதான்.

எப்போதும் உங்களை எனக்குப் பிடிக்கும். இப்போது அதிகம் பிடிக்கிறது.

I LOVE YOU MORE FOR YOUR GREATNESS..

GOD BLESS YOU MY DEAR.

uday011123
இதையும் படியுங்கள்
Subscribe