முருங்கை மரத் தோப்பு - உண்ணிகிருஷ்ணன் புதூர் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/moringa-tree-grove-unnikrishnan-puthur-tamil-sura

பூத்துக் குலுங்கி நின்று கொண்டிருக்கும் முந்திரித் தோப்புகள்... புழுதி கலந்த மணல் நிறைந்த வழியோரங்களில் காய்த்து நின்றுகொண்டிருக்கும் முருங்கை மரங்கள்...

பசுமையான இலை களுடன் காற்றில் ஆடி அசைந்து கொண்டிருக்கும் புன்னைமர அழகிகள்... மணல் பரப்பில் வளர்ந்து நிற்கும் வெட்டிவேர் காடுகள்... நாட்டு மாமரங்கள்... பாசி படர்ந்த குளங்கள்... வாய்க் கால்கள்.... வாய்க்கால்களின் இரு பக்கங்களிலும் வளர்ந்திருக்கும் பூஞ்செடி கள்... வெட்டப்பட்ட மரக் கொம்புகள்...

அதுவொரு தீவாக இருந்தது. மூன்று பக்கங் களிலும் ஆறு... மேற்கில் கடல்... இடிந்து சிதிலமான திப்புசுல்தானின் பழைய கோட்டை கடலின் ஆக்கிரமிப்பில் தகர்ந்துபோயிருந்தது. சற்று தூரத்தில் சேட்டின் பங்களா. ஊர்ப் பெரியவரின் கடன் காரணமாக ஏலத்திற்கு உள்ளான எட்டு அறைகள் கொண்ட கட்டடம்...

ஆற்றின் வழியாகக் கட்டுமரங்களும் பாய்மரப் படகுகளும் தெற்கு திசையில் மிதந்துசெல்வதைப் பார்க்கலாம். மீன்களை அள்ளிக் குவிப்பதற்காக மூழ்கச்செய்யும் சீன வலைகளுக்கு மேலே தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் மீன்கொத்திகள்... ஏராளமான வெள்ளைக் கொக்குகளும் ஆற்றின் கரையிலிருக்கும் மரங்களில் தங்கியிருந்தன.

தந்தையின் பிறந்த ஊரைப் பற்றிய வர்ணனைகள் நரேந்திரனின் மனதிற்குள் பதிந்துகிடந்தன. தன் தந்தையைப் பற்றிய இனிய நினைவுகள் அவனுக்குள் நிறைந்து ததும்பின.

நேப்பாளியான நரேந்திரனின் தாய் ஒரு கவிஞராக இருந்தாள்.தந்தையை நேரடியாகக் காணக் கூடிய அதிர்ஷ்டம் அவனுக்கு வாய்க்கவில்லை. அவன் பிறந்து இருபத்து மூன்று வருடங்கள் கடந்தோடி விட்டன. இன்னும் தந்தையை நேரில் பார்க்கமுடியவில்லை.

பார்ப்பதற்கு முயற்சிக்கிறான்.

தேடல் தொடர்கிறது.

நேப்பாளியான கூர்க்கா காவலாளி நரேந்திரன் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பயணத்தை ஆரம்பித்தான். தான் பிறந்த ஊரிலிருந்து ஆரம்பித்த அந்தப் பயணத்தில் பல இடங்களையும் பார்த்தான். நகரங்களையும், கிராமங்களையும்...

sss

ஏராளமான பணக்காரர்களின் இரும்பு கேட்டுகளுக்கு முன்னால் காவல் காத்தான். நிறைய இடங்களில் பணி செய்தான். எங்கும் இதுவரை உறுதியாக நிற்கமுடியவில்லை. பல காரணங்கள் இருக்கின்றன. மனம் எப்போதும் ஏதோவொரு தேடலிலேயே மூழ்கி விடுகிறது. வட இந்தியாவிலிருந்து தென் இந்தியாவிற்கான பயணம் மறக்கமுடியாததாக இருந்தது.

கேரளத்தை அடைவதென்பது நரேந்திரனின் இலக்காக இருந்தது.

கேரளத்தில் எங்கோ ஒரு பகுதியில் கிடக்கிறது தந்தையின் பிறந்த ஊர்... ஏதோவொரு தீவு...

அந்தத் தீவிற்குச் சென்று தனக்கு பிறவியைத் தந்த மனிதனைக் கண்டுபிடிக்கவேண்டும்.

அப்போதுதான் நிம்மதி கிடைக்கும்.

எந்தக் காலத்திலும் எதிர்பார்க்கவில்லை- மணப்புரத்தின் ஒரு கிராமப் பஞ்சாயத்தில் தானொரு கூர்க்கா காவலாளியாக நியமிக்கப்படுவோம் என்பதை... விதி உண்டாக்கிய வழியாக இருக்கலாம். ஒருவேளை தன்னைப் பெற்ற அன்னையின் நல்ல மனம் காரணமாக இருக்கலாம்.

சேற்றுவாமணப்புரம்... அந்த பெயர் மட்டும் அவனுடைய மனதில் இளம் வயதிலிருந்தே ஆழமாகப் பதிந்து நின்றிருந்தது. அப்படியொரு இடம் இந்த பூமியில் இருக்கிறதா? இருக்கவேண்டும்.இல்லாவிட்டால்... அவனுடைய தாய் அந்த அளவிற்கு விளக்கி செவியில் கூறியிருக்க மாட்டாளே! அன்னை உணர்த்தியிருந்தாள்- கூறிய விஷயத்தை முழுமையாக நம்பவேண்டும் என்று...

தன் தந்தையின் பிறந்த ஊரின் பெருமைகள், அந்த கிராமப் பகுதியின் சுத்தம்... அந்த

தன் தந்தையின் பிறந்த ஊரின் பெருமைகள், அந்த கிராமப் பகுதியின் சுத்தம்... அந்த மண்ணில் இருக்கக்கூடிய அனைத்திற்கும் அவற்றிற்கென்று தனித்துவத் தன்மைகள் இருக்கும் போலிருக்கிறது.

வாழ்வில் என்றுமே பார்த்திராத ஒரு ஊரைப்பற்றி தன் அன்னை அந்த அளவிற்கு விவரமாக ஏன் கூறவேண்டும்? நரேந்திரனுக்கு எதன்மீதும் நம்பிக்கை உண்டாகவில்லை.

தன் தாய் ஏதோ கட்டுக்கதையைக் கற்பனைசெய்து கூறியிருக்க வேண்டும்.... தந்தை யாரென அறியாத மகனை நம்பச் செய்வதற்காக...

ஆனால், ஒரு விஷயத்தில் அவனுக்கு அன்னையின்மீது அதிருப்தி இல்லாமலிருந்தது. யாரோ ஒரு மனிதன்... எங்கோ... அவனுடைய தந்தையாக வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

அதற்கிருக்கும் ஒரே ஆதாரம்- தந்தையும் தாயும் சேர்ந்து ஏதோவொரு பூந்தோட்டத்தில் எடுத்த புகைப்படம். அந்த புகைப்படம் மட்டும்தான் அவனுக்கொரு தந்தை இருக்கிறான் என்ற உண்மையை வெளிப்படுத்தியது. அந்த மனிதன் உயிருடன் இருப்பானா என்ற விஷயம் சந்தேகத்திற்குரியதுதான்.

ஒருவேளை உயிருடன் இருக்கலாம். இல்லாவிட்டால்... மண்ணுக்கடியில் போயிருக்க லாம்.

இரண்டில் எது இருந்தாலும், பயன் ஒன்றுதான்!

நேப்பாளின் ஸோட்டியா ஜில்லாவைச் சேர்ந்தவளான தாய், பட்டாளக்காரனான பழனிக்காடைச் சேர்ந்த சிவசங்கரன் நாயரைச் சந்தித்தது சிறிதும் எதிர்பாராமலா? சுபேதார் கே.பி. எஸ்.நாயர் என்ற சுருக்கப் பெயரில் அறியப்பட்ட பட்டாளக்காரனும், நேப்பாளத்தில் பிறந்த... கம்பளி ஆடைகளை உருவாக்கி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த நேப்பாளி இளம்பெண்ணான உஷாகுமாரியும் ஒருவரையொருவர் எங்கு வைத்து சந்தித்தார்கள்? நேப்பாளின் காட்மாண்டுவில் உள்ள பட்டாள முகாமில் வைத்தா? இல்லாவிட்டால்... ஏதாவது புல்வெளியிலா? மலைச்சரிவிலா? கிராமத்துத் தெருவிலா?

பட்டாள முகாமிலிருந்து வெளியே வந்து பயணித்த பட்டாளக்காரனின் கையில் இந்த இளம்பெண் எப்படி சிக்கினாள்? இளம்பெண் வயதிற்கு வந்தவளாக இருந்திருக்கவேண்டும். அழகான தோற்றத்தைக் கொண்டவளாக இருந்தாலும், எதையும் அறியவோ புரியவோ தெரியாதவளாக தன் தாய் இருந்திருக்க வேண்டும்.

ஐந்து வயதிலிருந்தே தந்தையைப்பற்றிக் கேள்விப்பட ஆரம்பித்து விட்டான். தான் பிறந்த திலிருந்தே தாய் கவலையில் இருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

ஏதோவொரு சந்தோஷம் நிறைந்த இடத்தில் எடுத்த அந்த பழைய புகைப்படத்தை நரேந்திரன் அவ்வப்போது எடுத்துப் பார்ப்பான். தாய் மிகவும் சந்தோஷத்தில் திளைத்திருந்தாள் என்பதை அந்த புகைப்படத்திலிருந்து உணரமுடிந்தது. தந்தை மிடுக்கானவன் என்பதையும்...

எனினும், தந்தைக்கு பட்டாளக்காரனின் வழக்கமான மீசை இல்லை. முழுமையாக சவரம் செய்யப்பட்ட முகத்தில் ஆண்மைத்தனம் பூரணமாகத் தெரிந்தது. பூனைக் கண்கள்... புருவங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக இருந்தன. மூக்கு உருண்டு பெரிதாக இருந்தது. பெரிய மூக்கையும் நீலநிறக் கண்களையும் கொண்டிருந்த ஒரு ஆஜானுபாகுவான மனிதன்... தாய் உயரம் குறைந்தவளாக இருந்தாள்.

தந்தையும் தாயும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை நரேந்திரன் ஒரு பொக்கிஷத்தைப்போல பத்திரப்படுத்தி வைத்திருந்தான். போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துக்கொண்டு சென்றான்.

தாயிடமிருந்து தனக்குக் கிடைத்த தகரப் பெட்டியில் அதுவொரு சேமிப்பைப்போல இருந்தது.

காலம் அதிகமாகக் கடந்தோடியபிறகும், மனதிலிருந்து மறைந்து போவதற்குத் தயாரில்லாத கதாபாத்திரங்கள்... தந்தையும் தாயும் தன்னுடன் எப்போதும் இருப்பார்கள் என்று அவன் நம்பினான்.

தந்தையிடம் மெல்லிய வெறுப்பும், தாயிடம் அளவற்ற பாசமும் இருந்தன.

எங்கு வேலைதேடி அலையும்போதும், நரேந்திரன் தன் தாயின் உருவத்தை மனதில் நினைத்துக்கொண்டே இருப்பான். அவன் தன் நீண்ட பயணத்திற்கு மத்தியிலும் தாயைப்பற்றி நினைப்பதுண்டு.

ஏழையான தன் தாயுடன் பழகி ஏமாற்றிவிட்டு, ஒரு வார்த்தைகூட கூறாமல் ஒளிந்தோடிய முரட்டுத்தனமான அந்த பட்டாளக்காரனை என்றாவதொரு நாள் எங்காவது பார்க்காமல் இருக்கப் போவதில்லை என்ற நம்பிக்கை நரேந்திரனுக் குள் வளர்ந்துகொண்டிருந்தது.

தாய் கர்ப்பிணியாக இருக்கிறாள் என்ற விஷயம் தெரிந்தவுடன், பணி மாற்றம் வாங்கிக்கொண்டு எங்கோ இடம்மாறிச் சென்று விட்ட கோழை... பயந்தாங்கொள்ளி தடியன்... மிலிட்டரி ஆபீஸராம்! மலையாளி... கேரளம் சுபேதார் கே.பி.எஸ். நாயர்...

தன்னையே அறியாமல் பற்களை நெறிப்பான்.

கே.பி.எஸ். நாயரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தோல்வியைச் சந்தித்தாலும், இலக்கிலிருந்து பின்னோக்கிச் செல்வதற்கு நரேந்திரன் தயாராக இல்லை. தனக்குப் பிறவியளித்த அந்த மனிதன் ஒரு பெரிய ஆள்மாறாட்டப் பேர்வழி என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. உண்மையான மேல் முகவரி கிடைத்தால் கண்டுபிடிப்பதற்கு எளிமையாக இருக்கும்.

அவனுக்கு இப்போது சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்பதற்கான நிலை இருக்கிறது. கூர்க்கா காவலாளியாக இருந்தாலும், போராடி வாழக்கூடிய சூழல் கிடைத்திருக்கிறது. அந்த மனிதனை என்றைக்காவது சந்திக்க நேர்ந்தால், தன் தாய் அனுபவித்த துன்பங்களைப் பற்றி ஞாபகப் படுத்தவேண்டும்.

காதலனால் ஒதுக்கப்பட்ட, வீட்டில் உள்ளவர்களால் குற்றம் சாட்டப்பட்ட, ஊர் மக்களால் அவமானத்திற்கு ஆளாக்கப்பட்ட கர்ப்பிணியான ஒரு நேப்பாளி இளம்பெண்ணின்... இறுதியில் அனாதை இல்லத்தில் பிரசவிக்கப்பட்ட ஒரு ஆண் குழந்தையின் கதையை அவனுக்கு நேரில் கூறி கேட்கச்செய்ய வேண்டும்.

கேட்பதற்கு நல்ல மனம் இருந்தாலும்... இல்லாவிட்டாலும்.

இதயம் பற்றி எரிந்தது.

எழுத்தையும் வாசிப்பையும் கஷ்டப்பட்டு தெரிந்துகொண்ட பிறகு, பிறந்த கிராமத்தைவிட்டு வெளியேறினான்.

பரந்துகிடக்கும் இந்த உலகத்தின் எந்த மூலையில் அவனுக்கு அபயம் கிடைக்கும்? தன்னுடைய அனைத்து உலகமுமாக இருந்த தாயை அடக்கம் செய்த கிராமத்திலிருந்து வெளியேறி வந்தபோது, நரேந்திரனின் கண்கள் நிறைந்து வழிந்தன.

களிமண்ணால் உண்டாக்கப்பட்ட மண் குவியலில் அரச மரத்தின், பாரிஜாதத்தின் இலை களுடன் இருந்த கொம்புகளை ஒடித்து தாயை மனதில் நினைத்துக்கொண்டே ஊன்றியபோது, இறுதியாகத் தான் செய்யவேண்டிய கர்மங்களைச் செய்துவிட்டோம் என்ற திருப்தி உண்டானது. இனி வரக்கூடிய காலங்களில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதென்று அவனுக்குத் தெரியாது.

தன் பிரியத்திற்குரிய காதலன் தன்னையும், பிறக்கவிருக்கும் குழந்தையையும் பொன்னைப் போல எண்ணி காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை யுடன் இருந்தாள் அவனின் தாய்.

புனிதமானவள்...

காப்பாற்றக் கூடியவனாகவும் கணவனாகவும் நடித்து, ஒரு அப்பாவிப் பெண்ணை சதையின் தாகத்திற்கு இரையாக்கிய பட்டாளக்காரனுக்கு அவனின் தாய், ஒரு சாதாரண பயன்படும் பொருளாக மட்டுமாகவே இருந்தாள்.

அதிகபட்சம் சில மாதங்கள் மட்டுமே நீடித்துநின்ற மன உறவின் வண்ணமயமான நாட்களின் இனிமையும் நினைவும் அவனின் அன்னையின் கன்னத்தில் கண்ணீராக ஒட்டி நின்றன.

என்ன காரணத்திற்காகத் தன் தந்தை தன் தாயைவிட்டுச் சென்றான் என்ற நரேந்திரனின் கேள்விக்கு, தாயிடம் தெளிவான பதில் இல்லை. அவள் பல நேரங்களில் அமைதியாகவும் உணர்ச்சியற்றும் இருந்தாள்.

தந்தை தன்னை நிரந்தரமாக விட்டெறிந்து விட்டுப் போகவில்லை என்பதையும், ஏதோவொரு கண்ணுக்குத் தெரியாத சாபத்தால் மறந்துவிடக்கூடிய நிலை உண்டாகிவிட்டது என்பதையும் உணர்த்துவதற்கு சில நேரங்களில் முயற்சித்தாள்.

தந்தையின் வருகையை எதிர்பார்த்து நரேந்திரன் எவ்வளவோ நாட்களைத் தள்ளி நகர்த்திக்கொண்டிருந்தான். இறுதியில் அவனுக்குத் தன் தாயின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாமற் போனது.

லாரிகளிலும் ஜீப்களிலும் நெரிசலுடன் நிறைந்திருந்த பட்டாளக்காரர்களை ஏற்றிய வண்டிகள் சாலையில் பாய்ந்து செல்லும் போது, நரேந்திரன் பார்த்தவாறு நின்று கொண்டிருப்பான்.

அந்தக் கூட்டத்தில் தன் தந்தையும் இருக்கலாம் என மனதில் நினைத்திருக்கலாம். ஒருநாள் தன்னையும் தன் அன்னையையும் சொந்த ஊருக்குக் கொண்டுபோகாமல் இருக்கமாட்டான். அவன் நிம்மதி அடைந்தான்.

தந்தையின் தோற்றம் இப்போது மாறியிருக்குமோ? தன் தந்தையின் நிறம் வெளுப்பு கலந்த சிவப்பென்று அவனின் தாய் கூறியிருக்கிறாள்.

கருகருப்பான சுருண்ட முடி... பிரகாசமான பூனைக் கண்கள்...

கடுகுச் செடியின் மஞ்சள்நிறப் பூக்களும், குடக பாலையின் வெளுத்த பூங்குலைகளும் மலைக் காற்றில் நறுமணத்தைப் பரவச் செய்துகொண்டிருந்தன.

நேப்பாளின் புனித நதியான கண்டகி நதியில் ஸ்படிகக் கற்கள் பலவும் காலநிலைக்கேற்ப சாளக்கிராமங்களாக மாறித் தோன்றின.

கருங்கற்கள் நதியின் நீரோட்டத்தில் கரைந்து தாதுக்களாக மாறின. காலம் உதிர்த்து விட்ட இலைகள் மண்ணை அபய இடமாக ஆக்கின.

பிர்ச் மரத்தின் இலைகளைப் பொறுக்கியெடுத்து கட்டுகளாகக் கட்டி தலையில் வைத்து சுமந்து, பத்ரிநாத்திற்கும் கேதார்நாத்திற்கும் வரக்கூடிய பக்தர்களிடம் விற்றுக் காசாக்கி, நோயாளியாகவும் கவலையில் மூழ்கியவளாகவும் இருந்த தன்னைப் பெற்ற தாயைக் காப்பாற்றுவதற்காக பாடுபட்ட நாட்கள்... பனியையும் மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாத... மலைச்சரிவின் வழியாக நடந்த தனிமைப் பயணம்...

நரேந்திரனின் கண்கள் ஈரமாயின.

தன் தந்தையென்று கூறப்படும் மனிதன், சிறிதுகூட மனசாட்சி என்பதே இல்லாமலிருந்த ஒருவன் என்ற புரிதல், காலம் செல்லச் செல்ல நரேந்திரனிடம் வைராக்கியத்தையும் வெறுப்பையும் உண்டாக்கின.

கண்டுபிடிக்கும்வரை தேடிக்கொண்டே இருப்பான். தீர்மானத்தில் உறுதியாக இருந்தான். நீண்ட பயணத்திற்கிடையே ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் தெய்வங்களில் பலவும் கண்களைமூடித் தூங்கிக்கொண்டிருக்கின்றன என்பதாக உணர்ந்தான்.

ஆத்மார்த்தமான பிரார்த்தனைக்கு முன்னால் அமைதியாக இருக்கக்கூடிய தெய்வங்களை நம்பி என்ன பயன்? தெய்வம் என்பது உண்மையின் மறுவடிவம் என்றல்லவா அவனுடைய தாய் இளம்வயதில் சொல்லித் தந்திருக்கிறாள்? உண்மை எங்கே ஒளிந்திருக்கிறது? நீதி என்றால் என்ன? தர்மம்...?

ஒருநாள் அவன் புத்த கயாவிற்குச் சென்றான்.

புத்தரின் சந்நிதானத்தில் தியானத்தில் மூழ்கி அமர்ந்திருந்தான். தத்துவங்களை இசை வடிவில் பாடக்கூடிய பஜனைகளில் பங்கெடுத்தான்.

புத்தரின் ஆலயத்திற்கு வருபவர்களுக்கு புரோகிதர், நெறிமுறைப்படி வைக்கப்பட்டிருக்கும் அட்டவணைப் புத்தகத்தின் பக்கங்களிலிருந்து தேடி எடுத்துக்கொடுக்கும் போதி மரத்தின் காய்ந்த இலைகளில் ஒன்று நரேந்திரனுக்கும் கிடைத்தது.

லாமாவிடமிருந்து பக்திப்பெருக்குடன் அவன் அதை வாங்கி கண்களில் ஒற்றினான். பிரதான புரோகிதர் பாடலைப் பாடினார். பொருள் கூறினார்:

"தேடிக்கொண்டிருப்பதைக் கண்டடையாமல் இருக்கமாட்டாய்.தேடிக்கொண்டே இரு. தேடலில் தான் கவனமாக இருக்கவேண்டும்.முயற்சியைக் கைவிட்டுவிடக் கூடாது''.

புத்தத் துறவியின் வார்த்தைகள் நரேந்திரனுக்கு தெய்வத்தின் வார்த்தைகளாகவே தோன்றின.

கூர்மையான கண்களை அகலத் திறந்து வைத்தவாறு தலை மழிக்கப்பட்ட துறவியின் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

புத்தத் துறவியின் உதடுகள் மந்திரங்களை முணுமுணுத்தன.

விளக்கிக் கூறுவதைப்போல... "தேடினாலே கண்டுபிடிக்க முடியும். கண்டடையும் தருணத்தில் ஆனந்த உணர்வு உண்டாகிறது. இதுதான் மோட்சம்.''

முழுவதும் புரியவில்லை.

எனினும், சில வார்த்தைகளில் உண்மையின் அடையாளங்கள் இருப்பதை உணரமுடிந்தது.

"உண்மைகள் பிரிந்து கிடக்கின்றன, மகனே! முழுமையாக எதுவுமே இல்லை. முழுமையை அடைவதுதான் உண்மை என்பது.போதிசத்வன் உண்மையைக் கண்டடைந்தவன். தேடிச் சென்றபோதுதான் உண்மையைக் கண்டடைய முடிந்தது. குழந்தையே.....! உன்னாலும் உண்மையைக் கண்டடைய முடியும். புத்தர் பெருமான் ஏதாவது வழியைக் காட்டாமல் இருக்கமாட்டார்.''

நரேந்திரனின் தகித்துக்கொண்டிருந்த மனதின் உள்ளறையில் சிறிது நேரம் ஆறுதலான குளிர்காற்று வீசியதோ?

மினி வளைகுடா என்று கருதப்படும் மணப்புரம் பகுதியில் புதிதாக உருவான ஒரு சிறிய கிராமத்தில் சிறிதும் எதிர்பாராமலே நரேந்திரன் போய்சேர்ந்தான். ஒரு கூர்க்கா காவலாளி தேவை என்ற அறிவிப்பைத் தொடர்ந்துதான் வேலைக்கு மனு போட்டான்.ஊரில் இரவு வேளைகளில் திருடுகள் நடக்கின்றன. சமூக துரோகிகள் பட்டப்பகல் வேளைகளில்கூட பெண்களை அவமானப்படுத்த முயல்கின்றனர்.

அதன் காரணமாக கிராமத்தின் பாதுகாப்பிற்காக வந்திருக்கும் புதிய காவலாளிதான் நரேந்திரன். பல வீடுகளிலும் நரேந்திரன் நுழைந்து வெளியே வந்தான். இரவுப் பணி...

தெருக்களில் பெரிய டார்ச் விளக்குடன் உலா வந்தான். என்ன காரணத்தாலோ, கிராமத்து மக்கள் அவனை மிகவும் விரும்பினார் கள். பணிவான குணம்... ஆத்மார்த்தமாக செய்யும் பணி... திறமைசாலி... நேர்மையானவன்...

அவனைப் புகழ்வதற்கு கிராமத்து மக்கள் மறக்கவில்லை.

பஞ்சாயத்தின் வார்டு எண் 9-ல் இருக்கும் 255-ஆம் எண் வீட்டை நரேந்திரன் குறிப்பாக கவனிக்க நேர்ந்தது. அங்கிருந்த இல்லத் தலைவருடன் ஏதோ முந்தைய உறவு இருப்பதைப்போல... யாருமே தராத மாதவரி கிடைக்கக்கூடிய ஒரேயொரு வீடு...

வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருந்த காலிங் பெல்லில் பலமாக விரலை அழுத்தினான்.

எப்போதுமில்லாத வகையில் தொடர்ந்து பெல் அடிக்கும் சத்தத்தைக் கேட்டதும், வீட்டிலிருந்த பெண் கதவைத் திறந்தாள். கூர்க்கா காவலாளி நரேந்திரன்... மாத வரிக்காக முன்கூட்டியே வந்திருக்கலாம்.

சொந்த ஊருக்குப் போக நினைத்திருக்கலாம். வெளியே வந்தது...இல்லத்தின் அரசன்.

அந்த மனிதனையே இதுநாள்வரை பார்க்காததைப்போல நரேந்திரன் உற்றுப் பார்த்தான். ஆளை அடையாளம் தெரிந்து கொண்டான். என்ன கூறுவதென தெரியாமல் திகைத்து நின்றான். சற்று இளைப்பாறினான்.

வயதான அந்த ஓய்வுபெற்ற சுபேதார் ஸாஹிப்பைப் பணிவுடன் சலாம் செய்தவாறு, அவன் வெளியேறினான்.

வியர்வையில் குளித்த நரேந்திரன் நீண்டு கிடந்த மணல் பாதையில் ஏறினான். மீண்டும் பிடிவாதமாக நடந்தான்- பேருந்து நிறுத்தத்தை அடைவதற்காக...

நேரம் தாண்டிவிட்டிருந்தது. இருள் மூடிய சாயங்காலம், முருங்கைமரத் தோப்புகளையும், புன்னைமரக் கூட்டங்களையும் தன்னிடமிருந்து விலக்குகின்றன என்ற புரிதல், அவனை நிலைகுலையச் செய்தது.

uday011124
இதையும் படியுங்கள்
Subscribe