ஒரு நடிகையின் புகைப்படத்தைக் கையிலெடுத்து, மாதவன் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவள் எந்த அளவுக்கு அழகாக சிரிக்கிறாள்!
அவனுடைய பார்வை அந்த புகைப்படத்திலிருந்து ஏதோவொன்றை தாகமெடுத்ததைப்போல உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருக்கிறது. போதுமென்றே தோன்ற வில்லை. போதுமென்று தோன்றவும் தோன்றாது. அந்தப் புகைப்படம் ஆனந்த அனுபவத்தைத் தரும் வற்றாத ஊற்று என்று தோன்றும். அவள் அவனை ஓரக்கண்களால் பார்த்தவாறு, அந்த அழகான புன்னகையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள். அவ்வாறு பார்த்து... பார்த்துக்கொண்டிருந்தவாறு அவன் அவளை முத்தமிட்டான். மேஜையின்மீது தாள்களுக்கு மத்தியில் பாதி மறைந்த நிலையில் இன்னொரு புகைப்படம் கிடந்தது. அரை நிர்வாணக் கோலத்தில் ஒரு பெண்... அவன் வேறொருத்தியை முத்தமிட்டதற்காக அவள் கோபப்படுவதைப்போல தோன்றியது. உடனடியாக நடிகையின் புகைப்படத்தை மாதவன் கீழே வைத்தான். அதை எடுத்தான்.
அவளுடைய அழகான மார்பகங்களின் வளர்ச்சி நிற்கவில்லை. மார்பகங்களுக்கு இன்னும் கனம் உண்டாகியிருக்கிறது. ஆவேசத்துடன் அவன் அவளைப் பார்த்தான். அடுத்த நிமிடம் தன்னையே அறியாமல் அந்தப் புகைப்படத்தை அவன் அழுத்தி துடைத்தான். அதுவொரு புகைப் படம் மட்டுமே... அவள் அணிந்திருந்த சிறிதளவு ஆடைகள்கூட மறையாமல் இருந்தன. அவளுடைய முகம் நாணமும், அழகும் கொண்டதாகவும் இல்லை.v அந்த முட்டாள்தனத்தில் அவனுடைய வெறி ஆறிக் குளிர்ந்து போய்விட்டது. மேஜையின்மீது கிடந்த நிர்வாணப் படங்களை ஒவ்வொன்றாக அவன் எடுத்துப் பார்த்தான். அனைத்தும் நேற்று பார்த்தவைபோலவே இருந்தன. முழுமையான திருப்தியளிக்கக்கூடிய கவர்ச்சியான விஷயங் களாக படங்கள் இருந்தன. அந்தப் படங்களின் உரிமையாளர்கள் எங்கு உள்ளவர்களாக இருக்கும்? இந்தப் பெண்கள் அல்லாமல், அறிமுக உலகில் எவ்வளவு பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மாதவன் நினைத்துப் பார்த்தான். லட்சுமி அக்கா, பகவதி சின்னம்மா... இப்படிப் போகின்றன அவர்களின் பெயர்கள். பதினொன்றுக்குக் கீழே ஒருத்தி இல்லை. பத்மாவதி- அவள் பெண்ணாக இருந்தாலும் தங்கை.
யாரோ அறைக்கு வெளியே வந்திருப்பதைப்போல தோன்றியது. அவன் அந்தப் படங்கள் அனைத் தையும் அள்ளியெடுத்து, பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்தான். அதில் இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன. அவைதவிர, பெண்கள் அணியக்கூடிய ஒரு மார்புக் கச்சையும், ஒரு கைக்குட்டையும் இருந்தன. அவை எங்கிருந்து வந்தனவோ? அந்த மார்புக் கச்சையை எடுத்து அவன் முத்தமிட்டான். ஏதாவது பெண்கள் நனைத்து உலரப் போட்டிருந்ததைத் திருடியிருக்கவேண்டும். நல்ல பையனின் பெட்டியை யாரும் பார்க்கவில்லை.
மாதவன் வேட்டியை மாற்றி, தலையைச் சீவினான்.
பவுடர்கள் அனைத்தையும் போட்டான். பரவா யில்லை... அழகன்தான்! கண்ணாடிக்கு முன்னால் சென்று பார்த்துத் திருப்தியடைந்தான். அந்த சந்தோஷத்தை எப்படியும் அனுபவிக்கவேண்டுமென்று முடிவுசெய்தான். ஒரு காதலியைத் தேடிப்பிடிக்க வேண்டும். ஒரு அறிமுகமானவளையாவது தயார் செய்யவேண்டும். அவன் வெளியேறி நடந்தான்.
தந்தையின் நண்பரான ஒரு வயதான் மனிதர் எதிரில் வந்துகொண்டிருந்தார். அவர் அன்புடன் கேட்டார்:
""மகனே, எங்க போறே?''
பணிவுடன் மாதவன் கூறினான்:
""கொஞ்சம் நடக்கறதுக்காகப் போறேன். நீங்க எங்க போறீங்க?''
""நானும் அதுக்குதான்.''
கிழவர் கடந்து சென்றார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற விஷயம் மாதவனுக்குத் தெரியும். தடித்துக் கொழுத்த இளம்பெண்கள்! அவன் அவர்களுடைய உருவங்களை நினைத்துப் பார்த்தான்.
அருகிலிருந்த ஒரு வீட்டிலிருந்து ஒரு நண்பன் கேட்டான்: ""எங்க? நடக்கறதுக்கா?''
மரியாதை உள்ளவனின் சிரிப்புடன் மாதவன் கூறினான்:
""ஆமா.''
அந்த நண்பன் சமீபத்தில்தான் திருமணம் செய்துகொண்டிருந்தான். அழகான மனைவி!
அவள் ஒரு குடும்பப் பெண். அவர்களுடைய படுக்கை எப்படி இருக்குமென்பதை மாதவன் நினைத்துப் பார்த்தான். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மலர்ந்து நிற்கும் ஒரு காட்சி- அவள் அப்படி... அப்படியே வளர்ந்துகொண்டிருப்பாள். அது அவளுக்கான தேவை. சில விஷயங்கள் அவளுக்கு வேண்டும். ஒரு முத்தத்தில்... அவர்கள் எரிந்துகொண்டிருக்கும் விளக்கை அணைப்பார்களா?
சற்று முன்னால் ஒரு இளம்பெண் குலுங்கிக் குலுங்கி நடந்து போய்க்கொண்டிருந்தாள்.
அவளுடைய கால்கள் வேகமாக இயங்கின.
அவளிடம் போய்ச் சேரவேண்டும். அவளுடன் அறிமுகமாக வேண்டும். பேசவேண்டும். ஒருவேளை, அவளுடைய இதயம் ஒரு ஆணின் உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கலாம்.
அவளுக்கும் தேவை இருக்கலாம். அவளுக்கு அருகில் சென்றதும், அவனுடைய தலை எதிர்திசையை நோக்கித் திரும்பிவிட்டது. நொடிப் பொழுதில் அவன் அவளைக் கடந்து சென்றுவிட்டான்.
அந்த சந்தோஷம் விதிக்கப் படாமல் இருக்கலாம். பெண்களுக்கென்று ஒரு மிகப்பெரிய சொத்து இருக்கிறது. அதைப்பற்றி அவளுக்குப் பெருமைதான். தன்னை ஆண்கள் பார்க்க வேண்டுமென்று அவள் விரும்புவாள். அது அவளுடைய உரிமை. அவளுடைய அனைத்து உறுப்புகளும் ஆணை நோக்கிப் பாய்ந்துசெல்வது, அந்த உரிமை அங்கீகரிக்கப்படுகிறதா என்பதை தெரிந்துகொள் வதற்குதான். ஒருவன் ஆசை யாகப் பார்க்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது, அவளுடைய முகத்தில் தோன்றுவது சந்தோஷத்தை வெளிப்படுத்தக்கூடிய மலர்ச்சிதான். அவன் அவளைக் கடந்துசென்று, பார்க்கவில்லை.
அவளைப் புறக்கணித்து விட்டான். அவள் நீட்டியதை மறுத்துவிட்டான். அவள் அணிந்திருந்த புடவையின் சத்தம் பின்னால் கேட்டுக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்ப்பதற்கு பயமாக இருந்தது. மிகவும் முயற்சிசெய்து அவன் சற்றுப் பார்த்தான்.
அவள் புடவையின் தலைப்பை சரியாகப் போட்டிருக்கவில்லை. அவள் தன்னை ஒரு குழந்தை யாக நினைப்பதைப்போல தோன்றியது.
இப்படியே எவ்வளவு நாட்கள் வாழ்ந்து கொண்டி ருப்பது? எப்படியாவது ஒரு காதலியைச் சம்பாதித்தே ஆகவேண்டும். எப்போதும் உடன் இருக்கக்கூடிய காதலி!
தூக்கம் வராமல் காத்திருப் பவள்! ஆசையால் அவளுடைய நரம்புகள் நொறுங்கிவிடும்.
அவன் சிந்தித்துப் பார்த்தான். காதலியிடம் நாணம் இருக்குமா? அவள் தடைகள் விதிப்பாளா? கையைத் தட்டிவிடுவாளா? அவளை அவன் கிச்சுக்கிச்சு மூட்டி வெறிபிடிக்கச் செய்வான்.
ரவியின் வீட்டிற்குச் செல்லவேண்டுமென்று அவன் முடிவு செய்தான். மாதவனின் நெருங்கிய நண்பன் ரவி. அந்தச் சமயத்தில் ரவி அங்கிருக்க மாட்டான் என்ற விஷயம் மாதவனுக்குத் தெரியும்.
அவனைத் தேடிச்செல்ல வேண்டும். ரவி இருக்கிறானா என்று கேட்கவேண்டும். அப்போது வெளியே வருவது ஜானுவாக இல்லாமல் போனால்...?
அப்படி இருக்காது. அவள்தான் வருவாள். "சின்ன அண்ணன் வெளியே போயிருக்காரு' என்று கூறுவாள். பிறகு? அங்கு பேச்சு நின்றுவிடக்கூடாது அல்லவா? சுவாரசியமான விஷயங்களைப்பற்றி பேசவேண்டும்.
அவ்வாறு சிரித்துக்கொண்டும் விளையாடிக் கொண்டும் நின்றுகொண்டிருக்கும்போது, ஒரு பார்வை... அவள் அவனுக்கு நேரெதிரில் இருப்பாள். அதைத் தொடர்ந்து அவள் காதலியாகி விட்டாள்- மாதவன் பலவற்றையும் கற்பனை செய்தான்.
ஆனால், ரவி வீட்டின் வாசற்படியை அடைந்த போது, அங்கு நுழைவதற்கோ, பார்ப்பதற்கோகூட மாதவனுக்கு தைரியம் வரவில்லை. உள்ளேயிருந்து யாராவது அழைத்தால்...?அவன் நொடிப்பொழுதில் நடந்து, அந்த இடத்தைக் கடந்துசென்றான்.
மாதவன் பல ஒற்றையடிப் பாதையிலும் நுழைந்து நடந்தான். பல பெண்களையும் பார்த்தான். காலம் கடந்த கிழவிகள்! அவர்கள் காலத்தை எப்படி யெல்லாம் கடந்து வந்திருப்பார்கள் அழகிகளாக இருந்திருப்பார்களோ? இப்போதும் ரசிக்கவைப்பதற்கு இயலுமோ? சிறுமிகள்! அவர்கள் வளர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். அந்த மிகப்பெரிய சொத்து அவர்களிடமும் இருக்கிறது. இந்த மூலைகள் அனைத்திலும் பணம் இருந்தால், அந்த அனுபவங்கள் சாத்தியமாகும் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால், எப்படி என்பதுதான் புரியவில்லை.
சாயங்காலமானதும், மாதவன் கவலையுடன் வீட்டிற்குள் நுழைந்தான். அறையில் விளக்கை எரியவைத்தான். அன்று பார்த்த அனைத்து பெண்களையும் ஒவ்வொருவராக அவன் நினைத்துப் பார்த்தான். நாசம்! எதற்காக நினைக்கவேண்டும்? பெட்டிக்குள் இருக்கும் நிர்வாணப் படங்களுடன் அவன் வாழ்ந்துவிடலாம்.
மாதவன் அறைக்குள் அமைதியற்ற மனதுடன் நடந்தான். குளித்து முடித்து, ஈரத்துணியை அணிந்தவாறு பத்மாவதி செல்வதை திறந்துகிடந்த சாளரத்தின் வழியாக அவன் பார்த்தான். அவளும் ஒரு பெண்!
அவளுடைய உருவம் அவனுடைய மனதில் ஆழமாகப் பதிந்ததைப்போல தோன்றியது. அது மறையவில்லை. அப்படி ஒருத்தி நடந்துசெல்வதை அவன் முன்பு பார்த்ததே இல்லையா என்ன? நாசம்!
நேரம் மேலும் சற்று கடந்துசென்றது. அந்த அமைதியற்ற தன்மை மிகவும் ஆழமாக அதிகரித்துக்கொண்டிருந்தது. அவளை மறப்பதற்கு அவன் முயற்சித்தான். முடியவில்லை. என்னவொரு கஷ்டமான விஷயம் அது!
""அண்ணா! இந்த கணக்கைக் கொஞ்சம் சொல்லித் தாங்க.''
திறந்து கிடந்த கதவின் வழியாக பத்மாவதி உள்ளே நுழைந்து வந்தாள். அவன் அவளை சற்று கூர்ந்துபார்த்தான். அந்தப் பார்வையில் ஒரு பெண்ணான அவள் சற்று நெளிவதைப்போல தோன்றியது. அவளுடைய இதயத்திலும் ஒரு மாற்றம் உண்டாகிவிட்டதோ? அவள் புன்னகைக் கிறாளோ?v ""போ!''
மாதவன் மிகவும் உரத்த குரலில் கத்தினான்.
அதன் எதிரொலியில் அவன் நடுங்கிவிட்டான்.
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். மாதவனின் கைகள் முன்னோக்கி நீண்டன. அதை அவன் உணரவில்லை.
""நீ போறியா?'' அவன் கேட்டான்.
அவள் ஓடினாள்.
சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த கண்ணாடியில் சொந்த முகமும், ஆன்மாவும் தெரிந்ததை மாதவன் பார்த்தான். அது எந்த அளவுக்கு அவலட்சணமாக இருக்கிறது! மிருகம்! இவன்தான் ஒழுக்கசீலன்!