Advertisment

அசுர அவதாரம்! இரா.த.சக்திவேல்

/idhalgal/eniya-utayam/monster-incarnation-sakthivel

ணிகப் படங்களிலிருந்து விலகி, கலைப்படங்களுக்கு நெருக்கமான இடைநிலைப் படங்களைத் தருவதில் பேர் பெற்றவர் இயக்குநர் வெற்றிமாறன். அவரது ஆடுகளம், விசாரணை போன்ற படங்கள் தமிழ்த் திரையுலகைத் தாண்டி சர்வதேச அளவிலும் கவனிக்கப்பட்டன. v அவரது கைவண்ணத்தில், எழுத்தாளர் பூமணியின் "வெக்கை' நாவலின் பின்புலத்தில் வெளிவந்த "அசுரன்' படம் பெரும் பாராட்டுகளைக் குவித்துவருகிறது. அப்படம் குறித்த பார்வை இதோ.

Advertisment

அடக்கி ஆளும் வர்க்கத்தால், அடக்கப்படும் எளிய வர்க்கத்தின் மனப்புழுக்கம் தன்னையே சுடும் "வெக்கை'யாகும்போது அந்த வெக்கை, மனித உரிமைக்கான வேட்கையாக மாறும்போது உண்டாகும் இயல்பியல் மாற்றம்தான் "அசுரன்' கதை.

zz

பழிக்குப் பழி வாங்கும் பழைய ஃபார்முலா பலசாலியை காட்சிப்படுத்திய விதம் "அசுரன்' ஆக்கியிருக்கிறது. சிவசாமி தன் வருங்கால மனைவி மாரியம்மாளுக்காக வாங்கிக் கொடுத்த செருப்பால், உண்டாகும் "கௌர

ணிகப் படங்களிலிருந்து விலகி, கலைப்படங்களுக்கு நெருக்கமான இடைநிலைப் படங்களைத் தருவதில் பேர் பெற்றவர் இயக்குநர் வெற்றிமாறன். அவரது ஆடுகளம், விசாரணை போன்ற படங்கள் தமிழ்த் திரையுலகைத் தாண்டி சர்வதேச அளவிலும் கவனிக்கப்பட்டன. v அவரது கைவண்ணத்தில், எழுத்தாளர் பூமணியின் "வெக்கை' நாவலின் பின்புலத்தில் வெளிவந்த "அசுரன்' படம் பெரும் பாராட்டுகளைக் குவித்துவருகிறது. அப்படம் குறித்த பார்வை இதோ.

Advertisment

அடக்கி ஆளும் வர்க்கத்தால், அடக்கப்படும் எளிய வர்க்கத்தின் மனப்புழுக்கம் தன்னையே சுடும் "வெக்கை'யாகும்போது அந்த வெக்கை, மனித உரிமைக்கான வேட்கையாக மாறும்போது உண்டாகும் இயல்பியல் மாற்றம்தான் "அசுரன்' கதை.

zz

பழிக்குப் பழி வாங்கும் பழைய ஃபார்முலா பலசாலியை காட்சிப்படுத்திய விதம் "அசுரன்' ஆக்கியிருக்கிறது. சிவசாமி தன் வருங்கால மனைவி மாரியம்மாளுக்காக வாங்கிக் கொடுத்த செருப்பால், உண்டாகும் "கௌரவப் பிரச்சினைக்கு சிவசாமியின் குடும்பமே பலியாகிறது. பழிக்குப் பழி வாங்கிய சிவசாமி, வேறு ஊருக்கு இடம்பெயர்கிறான். மனைவி பச்சையம்மாள், இரண்டு மகன்கள் என புதிய வாழ்க்கை வாழ்கிறான்.

Advertisment

இங்கும் வடக்கூரான் நரசிம்மனால் துயரங்களுக்கு ஆளானபோதும் பீறிடும் மானரோஷத்தை குடிப்பழக்கத்தால் மயக்க நிலையிலேயே வைத்திருக்கிறான். ஆதிக்க வெறிக்கு மூத்த மகனை இழக்கிறான். ஆதிக்க வெறிக்கு பதிலடி கொடுத்த இளைய மகனின் உயிருக்கும் ஆபத்து வரும்போது... சிவசாமியினுள் மதுவால் மயங்கிக் கிடந்த "அசுரன்' விழித்துக்கொள்கிறான்.

இதுதான் படம். ஆனால் அது நிகழ்த்தும் பாடம், சமூகத்தின் மனநிலையில் ஏற்பட வேண்டிய மாற்றத்தைச் சொல்கிறது.

வர்ணபேதத்தை ஒழிக்க வர்க்க பேதம் களையப்பட வேண்டும் என பெரியாரிஸமும், கம்யூனிஸமும் காலம் காலமாக வலியுறுத்துகிறது. கல்வி என்கிற அறிவாயுதமே வர்ண பேதத்தை ஒழிக்கும் வலிமை கொண்டது என்கிற "காமராஜிஸம்' முன்மொழியப்படுகிறது, சிவசாமி விடுக்கும் சேதியில்.

நாசிக்குள் இருந்து நழுவிய நறுக்கு மீசையோடு பழைய நினைவுக் காட்ல்ழ்களில் சில இடங்களில் மட்டுமே "இதோ... தனுஷ்' என நினைக்க வைக்கிறாரே தவிர... படம் முழுக்க சிவசாமியாகவே உருமாறியிருக்கிறார் தனுஷ்.

"இவன் புத்திய நினைச்சு மெச்சுறதா? பயப்படுறதா?' என மகனின் வீரத்தை மெச்ச முடியாம மனைவியிடம் சொல்லும் காட்சிகளில் "பிரச்சினையில் சிக்காம வாழ்ந்தா போதும்' என்கிற அப்பாவி அப்பாவை அப்படியே பிரதிபலிக்கிறார் தனுஷ். கௌரவத்திற்காக கொலை நடப்பது வேறு. தன் மகனின் உயிரைக் காப்பாற்ற தனது கௌரவத்தையே கொலை செய்யும் (காலில் விழும் காட்சி) காட்சியில் மிளிர் கிறார் தனுஷ்.

சின்ன மகன் சிதம்பரத்தைக் காப்பாற்ற விஸ்வரூபம் எடுக்கும் காட்சியில்...

அசுரத்தனம் காட்டியிருக்கிறார் தனுஷ்.

தட்டிக் கேட்கும் திராணியிருந்தும் குடும்ப நலன் கருதி அடக்கிக்கொள்ளும் அயர்ச்சி, நடையில் தளர்ச்சி, அடங்க மறுக்கும் ஆவேசம்... என தன் உடல் மொழியை வேறு வடிவத்தில் வெளிப் படுத்தியிருக்கிறார் தனுஷ்.

பச்சையம்மாவாக மஞ்சுவாரியார், நரசிம்மனாக நரேன், சிதம்பரமாக கென், மாரியம்மாவாக அம்மு அபிராமி, முருகேசனாக பசுபதி உட்பட ஒவ்வொரு வரும் தங்களின் உணர்ந்து செய்த நடிப்பால் அசுரன் சிவசாமிக்கு பலம் சேர்த்திருக் கிறார்கள்.

பார்வையாளனின் கண்களில் கேமராவை பொருத்திவிட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.

ஜீ.வி.பிரகாஷின் இசையமைப்பு காட்சியின் தன்மையை மேலும் அழுத்தமாக் கியிருக்கிறது.

வசனகர்த்தா சுகா. படம் முழுக்க திருநெல்வேலி மக்களின் பேச்சுவழக்கை இம்மி பிசகாமல் எல்லா நடிகர் நடிகைகளையும் பேசவைத்து படம் பார்ப்பவர்களை, கதையின் களத்திற்கே அழைத்துச் சென்றிருக்கிறார், சபாஷ்.

"நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள். எங்களுக்கு எவனும் பாடுபடவில்லை' என்ற கூக்குரலுக்கு நடுவில் எந்த வாய்ச் சவடாலும் இல்லாமல் கனகச்சிதமா இதோ இவர்கள்தான் பஞ்சமர்கள்... இவர்களின் கால்களுக்கு செருப்பு போட்டு அழகு பார்த்ததோடு மட்டுமல்லாமல் சமநீதியோடு கம்பீர நடை பயணிக்கச் செய்து அவர்களுக்காக பாடுபடும் அனைவரையும் நெஞ்சை நிமிரச் செய்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு ராயல் சல்யூட்.

""நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்கிருவானுவ... ரூவா இருந்தா புடுங்கிக்கிருவானுவ... படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாதுப்பா சிதம்பரம். நீ அதிகாரத்துக்குப் போ... போய் அவங்க நமக்குப் பண்ணுனதை நீ யாருக்கும் பண்ணாத...''ன்னு மகன் சிதம்பரத்தைப் பார்த்து சிவசாமி (தனுஷ்) சொல்லிவிட்டு நீதிமன்றத்துக்குள் செல்லும்போது நம்மையெல்லாம் பார்த்து ஒரு புன்முறுவலுடன் நுழைவதற்கு... எல்லோரும் எழுந்து நின்று போடலாம் ஒரு சபாஷ்.

அசுரனை வதம் செய்ய அவதாரம் எடுக்கும் சாமியல்ல...

அசுரனாகவே அவதாரம் எடுத்த (சிவ)சாமியின் கதை இது.

uday011119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe