முகம்மது - பின் - துக்ளக் சுல்தான் என்னும் பட்டப்பெயரோடு கி.பி. 1325ஆம் ஆண்டினில் டில்லிப் பேரரசில் முடிசூடிய இளவரசர் பக்ருதீன் ஜுனா பரிதாபத்திற்குரிய சரித்திர புருஷர்களுள் ஒருவராவார். பொதுவாக, முகம்மது - பின் - துக்ளக் தமது வாழ்நாளிலேயே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதைப் போலவே தற்கால வரலாற்று ஆசிரியர்களாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறார். இதன் விளைவாகத் துக்ளக்கின் அரசாட்சி ஒருபுறம் வியப்பில் தொடர்ந்தும் வியப்பில் முடிந்தும் இருந்தது எனலாம். எனவே, இடைக்கால வரலாற்று ஆசிரியரோ அல்லது தற்கால வரலாற்று ஆசிரியரோ துக்ளக்கின் பண்புநலன் குறித்து அப்பட்டமாக வெளிப்படும் முரண்பாடுகளை இதுநாள்வரை வெற்றிகரமாக நீக்கவில்லை என்பதோடு துக்ளக்கின் ஆட்சித்திறன் குறித்துச் சரியாக விளக்கவில்லை என்றும் சொல்லலாம்.

துக்ளக்கின் காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர் ஒரு தீவிர அதிசயம் என்றால் தற்கால வரலாற்று அறிஞர்களுக்குத் துக்ளக் உண்மையில் விசித்திரமானவராக இருப்பதோடு வரலாற்றில் அவரது இடத்தை யும் இருப்பையும் முடிவு செய்வது என்பது வரலாற்று அறிஞர்களுக்கு கடினமிக்கப் பணியாகவே இருக்கும். முகம்மது - பின் - துக்ளக் மெத்த படித்த மேதையா? அல்லது பித்துக்குளியா? கற்பனைவாதியா? அல்லது தீர்க்கதரிசியா? இரத்தவெறி பிடித்த கொடுங்கோல் மன்னனா? அல்லது வாரி வழங்கும் வேந்தனா? சமயவாதியா? அல்லது ஈமான் கொண்ட மூமினா?

""முகம்மது - பின் - துக்ளக் ஆழங்கால்பட்ட அறிஞர் என்று ஜியாவுதீன் பர்னி, கூறுவதோடு அரிஸ்டாட்டில், ஆசப் ஆகிய மிகப்பெரும் ஞானிகளைப் போன்று வியப்பூட்டும் அறிவுத்திறன் கொண்டவர் எனவும் கூறுகின்றார்.

இரத்தவெறி பிடித்த கொடுங்கோலன், மனநோய்ப் பிடித்த மன்னன் என்றெல்லாம் துக்ளக்கிற்கு எதிரான குற்றங்குறைகளைத் தற்கால எழுத்தாளர்கள் முன்வைக்கின்றார்கள். இத்தகைய எழுத்தாளர்கள் முன்வைக்கும் செய்திகள் அடிப்படையற்றவை ஆதாரமற்றவை ஆகும். இவை அனைத்தையும் விடத் துக்ளக்கின் ஆட்சித் திறனைத் தெளிவாகவும் மனநிறைவளிக்கும் வகையிலும் விளக்குகின்ற தற்கால வரலாற்று ஆசிரியர்கள் ஒருவரும் இல்லை. முகம்மது - பின் - துக்ளக்கின் அனைத்துச் செயல்பாடுகளுள், டில்லிப் பட்டணத்தைத் தௌலதாபாத் (உஹன்ப்ஹற்ஹக்ஷஹக்) நகருக்கு மாற்றுதல் என்னும் இடப்பெயர்வு மாற்றமே மிகப்பெருமளவில் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுவிட்டது.

Advertisment

கற்றுணர்ந்த பிற முகலாய மன்னர்கள் தத்தமது சுயசரிதங்களை எழுதியதைப் போலவே முகம்மது - பின் - துக்ளக்கும் தமது சுயசரிதை எழுதும் பணியைச் செய்து முடித்தார். பயன்மிகுந்த இந்தச் சுயசரிதை துக்ளக்கின் வாழ்க்கையைப் பற்றி இருந்த மர்ம முடிச்சுகளையும் அதுவரையில் அவரது பெயரைச் சுற்றிப் படர்ந்திருந்த தப்பெண்ணம் என்ற பனிப்படலத்தையும் நீக்கக்கூடிய வகையில் எழுதப்பட்டிருந்தது. ஆயினும், துக்ளக்கின் சுயசரிதை புத்தகம் விபத்தினாலோ அல்லது வஞ்சக எண்ணத்தாலோ அழிந்து விட்டது அல்லது அழிக்கப்பட்டுவிட்டது.

இருப்பினும் இந்நூலின் சில பக்கங்கள் தபக திநாசிரி என்னும் அழகிய நூலின் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டு இலண்டன் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது

*

Advertisment

புதுக்கல்லூரி வரலாற்றுத்துறையின் முன்னாள் தலைவர். 1954 ஆம் ஆண்டினில் இவர் எழுதி வெளி யிட்ட ""த கிஃப்ட் ஆஃப் சுல்தான் - முகமது பின் துக்ளக் என்ற ஆங்கிலக் கட்டுரையில் இருந்து.....இனி...

ஹஸரத் அமீர் குஸ்ரு இயற்றிய துக்ளக் நாமா, யஹ்யா - பின் - அகமத் சர்பிந்தியின் தாரிக்கே முபாரக்ஷாஹி, மூர் நாட்டுப் பயணி இபுன் பதூதா இயற்றிய ஸபர் நாமா , ஹைனுல் முல்க் முல்தானியின் முன்ஷ தே மஹ்ரு ஆகிய நூல்கள் முகம்மது - பின் -

துக்ளக்கின் ஆட்சித்திறன் குறித்த செய்திகளை அறிந்துகொள்ள உதவி செய்யும் ஏனைய தோற்று வாயாக அமைந்துள்ளன.

dd

ஆனால் தென்னிந்தியா மீதான முகம்மது - பின் - துக்ளக் சுல்தானின் ஆட்சிக் கொள்கையைப் பற்றிய முழுமையான சித்திரத்தைப் பெறுவதற்குக் கட்டாயம் ஒருவர் ஜியாவுதீன் பர்னியின் நூலைக் கவனமாகவும் இபுன் பதூதாவின் நூலை விழிப்புணர்வுடனும் படிக்க வேண்டும். இதனைப் போன்று அறிவுப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் புரிந்து கொள்ளக்கூடிய மெய்ஞ்ஞானிகளின் உரையாடல்கள் என்கிற ""மேஜைப் பேச்சுகள் துக்ளக்கின் ஆட்சிக்கொள்கை பற்றிய முழுமையான சித்திரத்தை அறிந்து கொள்ள நல்லதொரு செய்திகளை நமக்களிக்கும். துக்ளக்கின் சுயசரிதை நூல் கிடைக்கப்பெறாத நிலையில், ஹஸரத் ஜியாவுதீன் பர்னியின் தாரிக் பெரோஷாஹி நூலே நமக்கு உற்ற துணையாகும். இந்நூல் துக்ளக்கின் சுயசரிதை நூலுக்கடுத்துத் துக்ளக் பற்றிய செய்திகளடங்கிய அதிகாரப்பூர்வமான நூலாகத் திகழ்கிறது. வரலாற்று ஆசிரியர்களுக்குப் பதினேழு ஆண்டுகள் மூன்று மாதங்களடங்கிய நதீம், போதுமானது. ஆனால் ஆராய்ச்சி மனப் பான்மையுடன் ஆய்ந்தால் இபுன் பதூதா வழங்கும் செய்திகளும் மாலிக் இஸாமி வழங்கும் செய்திகளும் நமக்குக் கூடுதல் பயனளிக்கும். எனினும், முகம்மது - பின் - துக்ளக்கின் ஆட்சிக் கொள்கையிலிருந்தும் கோட்பாட்டிலிருந்தும் ஜியாவுதீன் பர்னி வேறுபாடுகிறார் என்பது ஒரு பெரும் உண்மையாகும். ஒரு கட்டத்தில் இராஜ்ஜிய பரிபாலனத்தைப் பிறரிடம் ஒப்படைத்து விட்டு முடிதுறந்து வனவேட்டைக்குப் போகுமாறும் துக்ளக்கிடம் ஜியாவுதீன் பர்னி ஆலோசனை வழங்கியுள்ளார். இச்செயல்பாடு துக்ளக்கிற்கு எதிராகச் சத்தியத்தை நசுக்கும் முயற்சி என்றோ துக்ளக் ஆட்சிக்கு எதிரான செயல்பாடு என்றோ நூலாசிரியர் ஜியாவுதீன் பர்னியைக் குறைகூறுவது தவறானதாகும். நூலாசிரியர் ஜியாவுதீன் பர்னி தமது வள்ளலாகிய துக்ளக் மன்னரை எந்த வரிசையில் வகைதொகைப்படுத்திச் சேர்ப்பது என்பதில் உதவி ஒத்தாசை இல்லாதவராகக் காணப்படுகிறார். இதனை தாரிக்கே பெரோஸ் ஷாஹி என்ற நூலிலிருந்து தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. இதுவே, முகம்மது - பின் - துக்ளக்கை உயிரினத்தில் விந்தையானவர், முரண்பாடுகளின் மூட்டையானவர் என்று எண்ணுவதற்கான காரணமாகும். ஜியாவுதீன் பர்னி சரிபாதி மெய்ஞ்ஞானியாகத் திகழ்ந்ததால் மன்னர் முகம்மது - பின் - துக்ளக் சூபிக்களிடம் மனம் நோக நடப்பதைவிடவும் கட்டளையிடுவதைவிடவும் சூபி மெய்ஞ்ஞானிகளிடம் கருணையோடும் பணிவோடும் நடந்துகொள்வதை விழைந்தார் என்பதனையே அது நினைவூட்டுகிறது. தலைநகரை டில்லிப் பட்டணத்திலிருந்து மாற்றுதல் என்னும் சோக நாடகத்தின் முதன்மைப் பாத்திரமான தௌலதாபாத் (உஹன்ப்ஹற்ஹக்ஷஹக்) நகரில் குடியேறுமாறு சூபி மெய்ஞ்ஞானிகள் வற்புறுத்தப் பட்டார்கள். மறுத்தவர்கள் கட்டாயப்படுத்தப் பட்டார்கள் மற்றும் தண்டனை பெற்றார்கள்.

முகம்மது - பின் - துக்ளக் சூபி மெய்ஞ்ஞானிகள் மீது கடுங்கோபம் கொண்டிருந்தார். ஜியாவுதீன் பர்னி சரிபாதி மெய்ஞ்ஞானியாகவும் திகழ்ந்ததால் துக்ளக்கின் இத்தகைய நடவடிக்கையால் சூபி மெய்ஞ்ஞானிகள் மீது ஜியாவுதீன் பர்னி இரக்கம் கொண்டிருந்தார். இந்நேரத்தில் சூபி மெய்ஞ்ஞானிகள் மீதான விருப்பார்வமும் சுல்தானின் நடவடிக்கை மீதான கோபமும் கொண்டிருந்த ஜியாவுதீன் பர்னி தௌலதாபாத் நகர உருவாக்கத்தின் பின்னணியில் இருந்த கொள்கைகள் குறித்து அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை. முற்ற முழுக்க இடைக்காலத்தைச் சேர்ந்த பாரசீக எழுத்தாளர்களைப் போலவே ஜியாவுதீன் பர்னியும் நடந்து முடிந்த இந்தச் சம்பவத்தை அலங்கார மொழியாகவும் மிகை நவிற்சியுமாகவுமே விவரித்துள்ளார்.

*

இபுன் பதூதா கி.பி. 1333ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தார். முகம்மது - பின் - துக்ளக் தமது தலைநகரை டில்லியிலிருந்து தௌலதாபாத் நகருக்கு மாற்றுவது எனும் இடப்பெயர்வின் போது இபுன் பதூதா இந்தியா வில் இல்லை. எனவே, துக்ளக் மன்னனால் பாதிக்கப் பட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஷேக் ருக்னுதீன் முல்தானி கூறிய செவிவழிக் கதையையே ஜியாவுதீன் பர்னி பதிவு செய்துள்ளார். கவிஞரும் வரலாற்று ஆய்வாளருமான இஸாமி என்பவர் பாமினி சுல்தான்கள் என்னும் புரட்சியாளர்கள் அளித்த நிதியுதவியோடு முகம்மது - பின் - துக்ளக்கைப் பற்றி நூலொன்றை இயற்றினார். இத்துடன் டில்லியிலிருந்து தௌலதாபாத் நகருக்கு இடம்பெயர்ந்து சென்ற மாலிக் இஸாமின் பாட்டனார் அங்கே பெருந்துயருற்று இயற்கை எய்தினார்.

எனவே, மாலிக் இஸாமின் அரசியல் ரீதியான தனிப்பட்ட மனக்குறைதான் முகம்மது - பின் - துக்ளக்கை எதிர்க்க வைத்தது.

கரா என்னும் பகுதியின் ஆளுநராகத் திகழ்ந்த மன்னர் அலாவுதீன், தேவகிரிப் பகுதியில் வெகுதொலைவில் சென்று கொள்ளையடித்தார். இப்படிக் கொள்ளையடிக்கப்பட்ட பெருஞ்செல்வத் துடன் கராவுக்குத் திரும்பினார். தென்னிந்தியாவைத் தமது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவரும் சிந்தனையை அவர் விரும்பவில்லை. இவரது இறையாண்மைக்குக் கிடைத்த அங்கிகாரமும் ஆண்டு தோறும் தமக்கு வழங்கப்பட்ட வருவாயும் அவருக்கு மனநிறைவைத் தந்தன. அலாவுதீனின் மகனாகிய குத்புதீன் முபாரக் ஷா, தென்னிந்திய ஆட்சி அதிகாரம் குறித்த கொள்கைகளைத் திருத்தியமைத்ததோடு தேவகிரி பகுதியைத் தமது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தார்; அதனை நிர்வகிக்க முஸ்லிம் அலுவலர்களையும் பணிநியமனம் செய்தார்.

முகம்மது - பின் - துக்ளக் முடிசூடிய போது தென்னிந்திய அரசியல் சூழ்நிலை அவ்வளவு மனநிறைவாக இல்லை. இந்து மன்னர்களின் ஆட்சி அதிகாரம் வலிமையாக இருந்ததோடு டில்லி சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சி அதிகாரத்தைத் தூக்கி யெறியவும் இந்து அரசர்கள் மனம் கொண்டிருந்தார் கள். தேவகிரி பகுதிகளைத் தவிர முகலாய மன்னர் களின் ஆட்சி அதிகாரம் வேறெங்கும் வலிமையாக இல்லை. இதற்கான முக்கியக் காரணம் ''நாட்டைக் கைப்பற்றிப் பாதுகாக்கும் அளவுக்கு முஸ்லிம் ராணுவம் இல்லை. எனவே, தேவகிரி பகுதி மட்டுமே முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்தது’’ என்று பேராசிரியர் வெங்கடராமநயா அவர்கள் கூறுகின்றார்.

மேலும் முகலாய மன்னர்களை எதிர்க்க வேண்டும் என்று இந்து மன்னர்கள் எண்ணம் கொண்டு இருந்தார்கள். ''அலாவுதீன் கில்ஜி தொடங்கி டில்லி சுல்தான்கள் தென்னிந்தியாவின் தேவகிரி பகுதியை இஸ்லாமிய மார்க்கத்தின் மையப்பகுதியாக மாற்றியமைக்கக் கடுமையாக முயன்றனர்'' என்றும் பேராசிரியர் வெங்கடராமநயா முடிவு செய்கின்றார்.

ஆயினும், டில்லி சுல்தான்களின் இந்த எண்ணம் ஈடேறாமல் போயிற்று முகம்மது - பின் - துக்ளக் இதை நிறைவேற்றினார்.

வட இந்திய முகலாய மன்னர்களின் கொள்கைக் கோட்பாடுகள் என்னும் நுகத்தடியிலிருந்து சுதந்திரமான தென்னிந்தியாவையே தென்னக இந்து மன்னர்கள் விரும்பி இருந்தார்கள். அமிரேஷதாவின் (ஆம்ண்ழ் - 1 - நஹக்ஹட்) சுயநலமிக்க நிர்வாகத்தினர் தங்களுக்குள் கிடைத்த முதல் வாய்ப்பில் ஆட்சி அதிகாரத் தைக் கைப்பற்ற விரும்பியதோடு தங்களைச் சுதந்திரமானவர்கள் என்றும் அறிவித்துக்கொள்ள விரும்பினார்கள். இந்த வகையில், டில்லி சுல்தானியர்களுக்குத் தென்னிந்தியாவில் இருவகை ஆபத்துகள் இருந்தன.

மால்வா, குஜராத், இராஜபுத்தானா ஆகிய இடங்களில் முஸ்லிம் மக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்தார்கள். விந்திய மலையின் மறுபக்கத்தில் வீரர்களாகவோ நிர்வாக அலுவலர்களாகவோ இல்லாத முஸ்லிம் மக்கள் சிலர் வாழ்ந்து வந்தார்கள். தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்து மன்னர்களின் கூட்டெழுச்சி டில்லி சுல்தான்களின் ஆட்சி அதிகாரத்தை விந்திய மலைப்பகுதியிலிருந்து எந்த நேரத்திலாவது விரட்டியடிக்க இருந்தது. குஜராத், மால்வா, இராஜபுத்தனா பகுதிகள் சுல்தான்களின் முழுக்கட்டுப்பாட்டில் இல்லை. இந்த இருப்பிடங்கள் சுல்தான் அலாவுதீனின் மிகப் பிற்பட்ட காலத்தில்தான் தோற்கடிக்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கை டில்லி அரசை ஆபத்திலிருந்து பாதுகாக்கவும் இடர்ப்பாடுகளிலிருந்து பாதுகாக்கவுமான மிகச்சிறந்த முக்கியத்துவமிக்க தந்திர உபாயமாகத் திகழ்ந்தது எனலாம்.

இந்தியாவின் பூகோளப் பண்பிற்கேற்ப இஸ்லாம் மார்க்கம் இந்தியாவில் வெற்றிபெறும் என்பதனை முகம்மது - பின் - துக்ளக் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தார். இஸ்லாமியப் பண்பாட்டுத் தீபம் வடதேசத்தில் சுடர்விட்டு ஒளிர்வதற்கான காரணம் வடஇந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அறிஞர்கள், மத்திய ஆசியாவிலிருந்து வந்து சேர்ந்த ஆன்மிக ஞானம், சமாதானம், அகிம்சை போன்றவையும் மார்க்கக் கோட்பாடுகள் குறித்து செஸ்தியா, சுஹர்வர்தியா பகுதிகளைச் சேர்ந்த சூஃபி மெய்ஞ்ஞானியர்கள் ராணுவ ஒழுங்குடன் பரப்புரை செய்த சமயக்கொள்கைகளும் ஆகும். முகலாய மன்னர் கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துவதற்கு ஏற்ற பொக்கிஷமாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் திகழ்ந்தார்கள். இவர்களிடையேதான் இஸ்லாமிய மார்க்கத்தின் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பரப்ப இயலும் எனக் கருதினர். வட இந்தியாவைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களால்தான் முகலாயப் பேரரசும் அதன் பகுதிகளும் பாதுகாக்கப்பட்டன. இஸ்லாமியப் பண்பாடு வடஇந்தியாவில் பரவியதைப் போலத் தென்னிந்தியாவில் தௌலதாபாத் நகரை இஸ்லாமியப் பண்பாட்டு மையமாக உருவாக்க முகம்மது - பின் - துக்ளக் விழைந்தார். இஸ்லாமியப் பண்பாட்டின் ஒளிரேகை எட்டுத் திசைகளில் சென்று சேர்ந்ததும் இதன் விளைவாகப் பூகோளப் பண்புடன் முஸ்லிம் மக்கள் தொகை பெருகியது. அப்படி இல்லையென்றால், இந்து மன்னர் களின் எதிர்ப்புணர்ச்சி என்னும் முதன் முதலில் வீசிய இளங்காற்று டில்லி சாம்ராஜ்ஜியம் உட்பட அனைத் தையும் துடைத்தெறிந்திருக்கும்.

dd

தென்னிந்தியாவில் மண்ணின் மைந்தர்களை முஸ்லிம்களாக உருவாக்குவதே முகம்மது - பின் - துக்ளக்கின் இலட்சியப் பணி ஆகும். இதற்கென அசாதாரணமான ஒழுக்க வலிமைமிக்க மனிதர்களும் முழுமையான அமைதி வெளிப்பாடுமிக்க மனிதர்களும் தேவைப்பட்டனர். இத்தகைய செயல்பாட்டை நிறைவேற்ற சூஃபி மெய்ஞ்ஞானிகளால் மட்டும் முடியுமே தவிர போர் வீரர்களால் அல்ல. ஒரு நாள் சூஃபி மெய்ஞ்ஞானிகளின் முன்னிலையில் முகம்மது - பின் - துக்ளக் உரையாற்றினார். அவ்வுரை யில், புனிதப்போர் நிகழ்த்துவதற்காக சூஃபி மெய்ஞ்ஞானிகளைத் தென்னிந்தியாவுக்குப் போகுமாறு கேட்டுக் கொண்டார். ஜிகாத் எனும் இந்தப் பதத்தின் பொருள் இறைநேசச் செல்வர்கள் பரப்புரை செய்த இஸ்லாமிய மார்க்கத்தின் அமைதி என்று அவசியம் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, தென்னிந்தியப் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்துக்களுக்கு எதிரான யுத்தம் என்னும் பொருளிலன்று. தென்னிந்தியப் பகுதி ஏற்கெனவே மார்க்கக் கருத்துகளால் மெல்ல மெல்ல அசைந்து கொண்டிருந்ததே அன்றி யுத்த விளைவால் அன்று. முகம்மது - பின் - துக்ளக் அவர்கள் சூஃபி மெய்ஞ்ஞானிகள் நடத்திய போரையே புனிதப்போர் என்று கூறுகின்றாரே தவிர வேறெதையும் இல்லை என்பதே இதன் பொருள்.

காஸி கமாலுத்தீன் நிகழ்த்திய உரையாடலில் இருந்தும் ஹஸரத் ஷேக் பக்ருத்தீன் நிகழ்த்திய உரையாடலில் இருந்தும் இதனை மேலும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஹஸரத் ஷேக் பக்ருத்தீன் அவர்கள் தௌலதாபாத் நகரத்திற்குப் பயணம் போவதற்கு மாறாக ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டார். முகம்மது - பின் - துக்ளக்கின் ஆணைகளைப் பெறுவதற்கு உலகில் உள்ள சூஃபி மெய்ஞ்ஞானிகளையும், மவுல்விகளையும், முப்தீப்களையும், காஸிம்களையும் தௌலதாபாத் நகருக்கு வரவழைத்து அந்நகருக்கு உலகப்புகழ் ஏற்படுத்த விரும்பியிருந்தார். எனவே காஸி அவர்கள் ஷேக் பக்ருதீன் அவர்களைத் தௌலதாபாத் நகருக்குப் போகுமாறு அறிவுறுத்தினார்.

தௌலதாபாத் நகர உருவாக்கத் திட்டம் சூஃபி மெய்ஞ்ஞானிகளின் மனவிருப்பத்தையும் கூட்டுறவினையும் சார்ந்திருந்தது. உண்மைத் துறவிகளும் போலித் துறவிகளும் இருந்து காலமது. முகம்மது - பின் - துக்ளக்கின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள போலித் துறவிகள் ஆயத்தமாக இருந்தார்கள். அதே நேரம் துறவிகள் துறவுத்தன்மையுடனும் பக்கீர்கள் மெய்ஞ்ஞான நறுமணத்துடனும் இருக்க விரும்பிய முகம்மது - பின் - துக்ளக் மேற்சொன்ன துறவிகளையும் பக்கீர்களையும் தௌலதாபாத் நகர உருவாக்க நிகழ்ச்சிகளுக்கு வரவழைத்துப் பரிசுப் பொருட்களை வழங்கியதோடு அந்நகருக்குச் சென்று தனது நோக்கத்தை நிறைவேற்றவும் வேண்டினார். ஆயினும், சூஃபி மெய்ஞ்ஞானிகளும் பக்கீர்களும் துக்ளக்கின் வேண்டுகோளை ஏற்க மறுத்தனர். காரணம், அரசுப் பணிகளில் தலையிடுவதும் அதில் ஆர்வம் காட்டுவதும் பாவகாரியம் என்றும் லௌகிக விஷயம் என்றும் கருதினர். இதனால் முகம்மது - பின் - துக்ளக்கின் ஆணைகளை ஏற்க மறுத்தனர். ஆனால் ஆன்மிகத் தலைவர்களின் பீர்) ஆணைகளுக்கு உரிய விடையளித்து ஏற்றுக்கொண்டனர். முகம்மது - பின் - துக்ளக் இஸ்லாமியச் சட்ட ஞானிகளிடையே பணிவை வேண்டினார். எளிய பணிகளை நிறைவேற்ற வேண்டி அந்த இஸ்லாமியச் சட்ட ஞானிகளைப் பணிநியமனம் செய்தார். இது மட்டும் அல்லாமல் பணிநியமனம் பெற்ற இஸ்லாமியச் சட்ட ஞானிகளுக்குச் சமயச் சார்பற்ற கொள்கைகளையும் அரசாங்க சேவையையும் ஆன்மிகத் தலைவர்களின் கட்டளையைவிடவும் அரசாணையே உயர்ந்தது என்ற உணர்வையும் வலியுறுத்தினார். டில்லியிலும் தோப் எனும் பகுதியிலும் இடம்பெற்றிருந்த எண்ணற்ற சூஃபி மெய்ஞ்ஞானிகள் தென்னிந்தியப் பகுதியின் உட்பகுதியிலும் மலைப்பிரதேசமான காஷ்மீரப் பகுதியிலும் பணியாற்றப் பெருமளவில் தேவைப்பட்டனர். இந்நிலையில், அவர்களுக்குத் தேவையான போக்குவரத்தும் முக்கியத்துவம் பெற்றன. தமது நோக்கம் நிறைவேற உதவ மறுப்பவர்களையும் உரிய நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களையும் தண்டிக்கும் இரத்தவெறி பிடித்த கொடுங்கோல் மன்னராக இல்லாமல் மனஇணக்கமிக்க மன்னராகவே முகம்மது - பின் - துக்ளக் திகழ்ந்தார். இந்தியாவில் இஸ்லாமியப் பேரரசின் நிலைபேற்றுக்காகவும் டில்லி சுல்தானின் பாதுகாப்புக் கருதியும் முகம்மது - பின் - துக்ளக்கின் தலைநகர் மாற்றம் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி இஸ்லாமிய இறைநேசச் செல்வர்கள் விருப்பமில்லாமல் தென்னிந்தியப் பகுதிக்குத் தொண்டாற்றச் சென்றனர். இறைநேசச் செல்வர்கள், நன்னடத்தை எனப் படும் நறுமணத்தாலும் மார்க்கத்தின் கொள்கைகளைக் கோட்பாடுகளை அமைதி வழியில் பரப்புரை செய்தமையாலும் மண்ணின் மைந்தர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவத் தொடங்கினார்கள். இதனால் தென்னிந்தியப் பகுதியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார் கள். இதே நேரம் வடஇந்தியாவில் இருந்து தென்னிந்தியாவை நோக்கி முஸ்லிம் மக்களின் இடப்பெயர்ச்சித் தொடர்ந்து கொண்டே இருந்தது. இவ்வாறு குடியேறிய முஸ்லிம் மக்கள் தங்களின் இருப்பிடங்களை இறைநேசச் செல்வர்களின் நல்லடக்கத் தலங்களைச் சுற்றி அமைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். இதனால் தென்னிந்தியப்பகுதி முஸ்லிம் மக்களின் பாதுகாப்பான குடியேற்றப் பகுதியாகவும் இஸ்லாமியப் பண்பாடு பரவிய பகுதியாகவும் இருந்தது. இந்தப் புதிய மக்கட்தொகையினர் பாமினி பேரரசு உண்டாகவும் தென்னிந்திய முஸ்லிம் அரசுகள் (ஷியா அரசுகள் - மொழி பெயர்ப்பாளர்) உருவாகவும் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். தௌலதாபாத் நகர உருவாக்கத் திட்டத்தினால் புதுப்புது நல்லடக்கத் தலங்கள் உருவானதைத் தவிர வேறொன்றும் உண்டாகவில்லை என ஜியாவுதீன் பர்னி வேதனைப் பட்டார்.

இந்த அடக்கத்தலங்களோடு நின்றுவிடாமல் அவற்றைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள இறைநேசச் செல்வர்களுடைய சீடர்களின் இல்லங்களையும் வேறு நோக்கத்திற்காக மாற்றப்பட்ட இல்லங்களை யும் ஒருவர் பார்க்க வேண்டும். இறைநேசச் செல்வர் களுக்காக எழுப்பப்பட்டுள்ள ஒவ்வோர் நினைவில்ல மும் முஸ்லிம்களின் பண்பாட்டு மையமாகவும் அப்பண்பாட்டின் ஊற்றாகவும் அமைந்துள்ளன. இது மட்டும் தான் டில்லி சுல்தானின் மனவிருப்பமும் ஆகும். இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவிய மண்ணின் மைந்தர்களான வெகுஜன முஸ்லிம்களால்தான் தென்னிந்தியாவில் முஸ்லிம் பேரரசு நிரந்தரமாக நிலைப்பெற்றது எனலாம். ""தென்னிந்தியக் குடியேற்றக் கொள்கைக்கு ஒத்துழைக்குமாறு இறைநேசச் செல்வர்கள் மறைவுக்குப் பின்னும் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்’’ என்று பேராசிரியர் முகம்மது ஹபீப் (ஙன்ட்ஹம்ம்ஹக் ஐஹக்ஷண்க்ஷ) அவர்கள் முடிவு செய்வது சரியானது தான். இந்த வகையில், முகம்மது - பின் - துக்ளக் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றார்.

துக்ளக்கின் இந்தக் குடியேற்றக் கொள்கையைச் செயல்படுத்தாமல் போயிருந்தால் பாமினி பேரரசு, தென்னிந்திய சுல்தான்கள் என்ற பெயரையே வரலாறு பதிவு செய்யாமல் போயிருக்கும். தென்னிந்தியப் பகுதியானது முஸ்லிம் கள் வாழ்கின்ற நிலப்பகுதியாக எஞ்சியிருக்கும் அல்லது அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பால் அப் பகுதி பாதிப்புக்குள்ளாகி இருந்திருக் குமே தவிர இஸ்லாமியப் பண் பாட்டை அனுபவித்து இன்புற முடியாமல் போயிருக்கும்.

இது தென்னிந்தியாவுக்கு முகம்மது - பின் - துக்ளக் வழங்கிய பரிசு இல்லையா? தென்னிந்தியாவில் நிலையான முஸ்லிம் பேரரசு ஏற்படப் பாதுகாப்பான அடிக்கல்லை நாட்ட துக்ளக் போட்ட துல்லியமான கணக்கல்லவா? இப்படி இருக்க துக்ளக்கின் நகரமைப்புத் திட்டத்தைத் தவறாக மடைமாற்றம் செய்யப்பட்ட சக்தி விரயத்தின் கல்லறையென்று கருதுவது எவ்வளவு பேதைமை ?

தற்கால வரலாற்று ஆசிரியர்களுக்குத் துக்ளக்கின் குடியேற்றக் கொள்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு உண்மையில் எந்த உதவியும் இல்லாமல் போயிற்று. இத்துடன் துக்ளக்கின் ஆட்சித் திட்டங்கள் அனைத்தையும் திரித்து விளக்கினர். முகம்மது - பின் - துக்ளக் தமது தலைநகரை டில்லியில் இருந்து தௌலதாபாத் நகருக்கு மாற்றியமைத்ததன் காரணம், தௌலதாபாத் இந்தியாவின் மையப் பகுதியில் அமைந்திருந்ததும் டில்லியின் மீதான மங்கோலியர்கள் படையெடுப்புக் குறித்து அவருக்கிருந்த அச்சமும்தான் காரணம் என்று ஜியாவுதீன் பர்னி கூறுவது சாரமற்ற கருத்து என்பதோடு அது ஒரு புனைந்துரையுமாகும். நூலாசிரியர் ஜியாவுதீன் பர்னி அவர்கள் தாரிக் - ஐ - பிரோஸ் ஷாஹி என்னும் தமது நூலில் வரிசைப்படுத்தி வழங்கியுள்ள இருபத்திரண்டு மாகாணங்களுள் வெறும் பன்னிரண்டு மாகாணங்களே உள்ளூர் மயமாக்கப்பட்ட தௌலதாபாத் நகர உருவாக்கத்தில் முற்றுப்பெறாமல் இருந்தன என்பதனை மெய்ப்பித்துள்ளார். ஆயினும், பஞ்சாப், லக்னாட்டி, சோனார்கன ஆகிய இடங்களுக்கருகே டில்லிப் பட்டணம் மையப் பகுதியாக அமைந்திருக்கவில்லை. வெற்றிச் சிறப்புடைய படைத்தளபதியாகவும் செயல்திட்டங்களை அறிவியல் பூர்வமாக அணுகி நிறைவேற்றுவதில் கைதேர்ந்தவராகவும் திகழ்ந்த முகம்மது - பின் - துக்ளக் சர்ச்சைக்குரிய பஞ்சாப் பகுதியைக் கருத்தில் கொள்ளாமல் தௌலதாபாத் நகருக்கு வந்திருக்கமாட்டார்.

இதனைப் போன்று மங்கோலியர் படையெடுப்புக் குறித்த அச்சவுணர்வு துக்ளக் மன்னருக்கு இருந்தது என ஜியாவுதீன் பர்னி முன்வைக்கும் இரண்டாம் வாதமும் ஒரு கட்டுக்கதைதான்.

காரணம், திபல்பூர் நகரின் ஆளுநராகத் திகழ்ந்த துக்ளக்கின் தந்தை காஸி மாலிக் என்பவர் மங்கோலியர்களை எழவே முடியாத வகையில் போரில் தோற்கடித்தார். எனவே, டில்லிப் பட்டணத்தை அவர்கள் நீண்டகாலம் நினைத்துப் பார்க்கவில்லை எனலாம். அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பில் இருந்து எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காகக் குறிப்பிடும்படியான எந்த நடவடிக்கை யையும் முகம்மது - பின் - துக்ளக் சேர்த்துக் கொள்ளவில்லை. அதாவது மங்கோலியரிடமிருந்து எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பது இதன் பொருளாகும். அப்போதைய மங்கோலியர்களின் வரலாறு என்பது குழுவினர்க்கிடையேயான சண்டைச் சச்சரவு கொண்டதாகவும் பலவீனமாகவும் இருந்தது. முகம்மது - பின் - துக்ளக்கிடம் இருந்த மனங்கவரும் பண்பு என்பது அவரது தாராள மனப்பான்மை என்று இபுன் பதூதா கூறுகின்றார். சாதாரண ஓர் ஏழை எளிய மனிதன் துக்ளக்கின் வாசலுக்குச் சென்றால் செல்வந்தனாகத் திரும்புவான். மங்கோலிய இனத்தைச் சேர்ந்த தர்மாஷிரின் என்பவரும் துக்ளக்கிடம் சென்று நிதி உதவி கேட்டார். பாரபட்சம் பார்க்காமல் அனைவர்க்கும் உதவவேண்டும் என்னும் துக்ளக்கின் பொதுவிதியின்படி தர்மாஷிரின் என்பவர்க்கும் நிதியுதவி செய்தார்.

முகம்மது - பின் - துக்ளக் குராஸான் பகுதியை வெல்லும் எண்ணத்தோடு தர்மாஷிரின் என்பவரோடு கூட்டணி வைத்தார். ஆயினும், சில வரலாற்று ஆசிரியர்கள் முகம்மது - பின் - துக்ளக் மங்கோலிய ஊடுருவல்காரர்களிடம் பணம் கொடுத்து அமைதியை நிலைநாட்டினார் என்று தவறாகச் சித்தரித்துள்ளனர். பொதுவாக மங்கோலியர்களின் நிலையையும் குறிப்பாகத் தர்மாஷிரின் அவர்களின் இந்திய வருகை குறித்தும் அத்தகைய வரலாற்று ஆசிரியர்கள் கண்களை மூடிக்கொள்கின்றனர்.

சுக்தாய் இனத்தலைவரான தர்மாஷிரின் என்பவரோடு முகம்மது - பின் - துக்ளக் பேரன்புடன் நடந்து கொண்டதாக இபுன் பதூதா கூறுகின்றார். மங்கோலியர்கள் துக்ளக்கின் எதிரிகள் அல்லர்.

அதேநேரம் துக்ளக்கிடம் நட்புப் பாராட்டிய அவர்கள் துக்ளக் மறையும் வரையில் அவரது படையிலும் பணியாற்றியுள்ளனர். எனவே, முகம்மது - பின் - துக்ளக் மங்கோலியப் படைகளிடம் பணம் கொடுத்து அமைதியை வாங்கவில்லை. முகம்மது - பின் - துக்ளக் மிகவும் பலவீனமாக இருந்த மங்கோலியர்க்குப் பணம் கொடுத்து அமைதியை நிலைநாட்டினார் என்பதும் குராஸான் பகுதியை மங்கோலியரின் தயவால் வெல்லத் திட்டமிட்டார் என்பதும் எப்படிச் சாத்தியமாகும்? மங்கோலியர்கள் துக்ளக்கின் பகைவர்கள் என்றால், இந்தியா மீது படையெடுத்ததைப் போலவும் பாழ்படுத்தியதைப் போலவும் குராஸான் மீது படையெடுக்க ஏன் திட்டமிட்டார்? தர்மாஷிரின் படையெடுப்பைக் குறித்து ஜியாவுதீன் பர்னி தமது தாரிக் - ஐ - பெரோஸ் என்னும் நூலில் குறிப்பிடவில்லை. துக்ளக்ளோடு தர்மாஷிரின் கொண்டிருந்த நட்புணர்வைக் குறித்து இபுன் பதூதா குறிப்பிட்டுள்ளார். முகம்மது - பின் - துக்ளக் மங்கோலியரிடம் அச்சம் கொண்டார் என்பதும் துனிவும் வலிமையுமிக்க ஈரானிய அரசர்களும் டிரான்ஸானியா அரசர்களும் டில்லிப் பட்டணத்தைப் பாழ்நிலமாக்கியதாலும் எகிப்திய மன்னர்களின் பொறாமை பொச்சரிப்பாலும் முகம்மது - பின் - துக்ளக் தமது தலைநகரை டில்லிப் பட்டணத்திலிருந்து தௌலதாபாத் நகருக்கு மாற்றியமைத்தார் என்றும் முன்னுக்குப்பின் முரணாகக் கூறுகின்றார். முகம்மது - பின் - துக்ளக் மங்கோலியர்களிடம் எவ்வித அச்சமும் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் வலிமை குறைந்தவர்களாக இருந்ததோடு சுல்தானிடம் கருணையை எதிர்பார்த்தவர்களாகவும் இருந்தார்கள்.

முகம்மது - பின் - துக்ளக் டில்லிப் பட்டணத்திலிருந்து தௌலதாபாத் நகருக்குத் தலைநகரை மாற்றியது அரசுக்கு எதிரானவர்களைத் தண்டிப்ப தற்காக என்று இபுன் பதூதா கூறுவது தவறானதாகும். காரணம் இடம்பெயர்ந்தவர்களுக்கு எல்லாவிதமான நிவாரணங்களும் அரசு செலவில் வழங்கப்பட்டன என்பதுதான். சாஜன் ராய் என்னும் நூலாசிரியர் தமது குலாஸத்துத் தவாரிக் என்னும் நூலில், “பாக்தாத் நகரிலிருந்து வருகை தந்த அறிஞர்களை முகம்மது - பின் - துக்ளக் தௌலதாபாத் நகருக்கு ஆற்றுப்படுத்தினார். மேற்சொன்ன அறிஞர்களின் போக்குவரத்துச் செலவுக்காகவும் உணவுக்காகவும் அரசு நிதியிலிருந்து பெருந்தொகை ஒன்று வழங்கப்பட்டது’’ என்று கூறுகின்றார். தௌலதாபாத் நகர அமைப்பை விளக்கவந்த டவ் என்பவர், ''அறிஞர்கள் குடியேறி வாழ்ந்த தௌலதாபாத் நகரம், சொர்க்கத்தின் வாசல் கதவைத் தட்டுபவர்களுக்கு ஒரு பட்டறைக் கல்லாக இருந்தது என்றும் சொர்க்கத்தில் இடம்பெற்றுள்ள ஏழு பெரும் கதவுகளைப் போன்று தௌலதாபாத் நகரின் கதவுகள் இருந்தன’’ என்றும் விளக்குகின்றார். இந்த விளக்கம் மிகை நவிற்சியாக உள்ளது எனலாம். இபுன் பதூதாவின் கற்பிதப்படி முகம்மது - பின் - துக்ளக் யாரையும் பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படவில்லை என்பதனைக் காட்டுகிறது.

வெகுஜன மக்கள் பெருந்திரளாக டில்லிப் பட்டணத்திலிருந்து இடம் பெயர்ந்தார்களா? அதுவரையில் தலைநகராக இருந்த டில்லிப் பட்டணம் அழிந்து போயிற்றா? தலைநகரான டில்லிப் பட்டணம் பாழடைந்து அழிந்து போயிற்று என ஜியாவுதீன் பர்னியும் இடன் பதூதாவும் கூறுவது மிகை நவிற்சியாகவும் காரண காரியம் அற்றதுமாகும். இது இடைக்காலத்தைச் சேர்ந்த பாரசீக எழுத்தாளர்களிடையே காணப்படும் பொதுவான கருத்துப் புலப்பாட்டுத் தன்மையாகும். “சுல்தான் செய்த இன்னொரு காரியம் தேவகிரி (உங்ர்ஞ்ண்ழ்) என்ற பெயரை தவுலதாபாத் என்று மாற்றியது. இந்த இடமாற்றத்தால் தலைநகருக்கு அழிவும் மேல்தட்டு மக்களுக்கு வீழ்ச்சியும் ஏற்பட்டது என்று ஜியாவுதீன் பர்வி எழுதுகிறார்.

முகம்மது - பின் - துக்ளக்கின் காலத்தைச் சேர்ந்த ஜியாவுதீன் பர்னியின் எழுத்தில் நாம் புரிந்து கொள்வது துக்ளக்கின் காலத்தில் பெருந்திரளான வெகுஜன மக்களின் இடப்பெயர்ச்சி ஏற்படவில்லை என்பதுதான். சீர்மிகு மக்கள், மருத்துவர்கள், சமயச் சான்றோர்கள் ஆகியோர் மட்டுமே தௌலதாபாத் நகருக்குக் குடியேறுமாறு வற்புறுத்தப்பட்டார்கள். இக்கருத்தை மத்தலபு - உத் - தாலிபீன் (ஙன்ற்ன்க்ஷ - ன்ற் - பஹப்ண்க்ஷங்ங்ய்) என்னும் நூலின் ஆசிரியர் சித்திரிக்கின்றார். மேலும் அவர் தம்முடைய நூலில் பஸர்கான் - கி - டில்லி எனப்படும் உயர்குடி மக்களையே தௌலதாபாத் நகருக்குக் குடியேறக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்றும் கூறுகின்றார். சியாருல் அவுலியா என்பவர் தௌலாதாபாத் நகரை இஸ்லாமியப் பண்பாட்டின் மையமாக உருவாக்குவதே முகம்மது - பின் - துக்ளக்கின் நோக்கமாக இருந்தது என்கிறார்.

தலைநகர் தௌலதாபாத்தை ""இஸ்லாமிய மார்க்கத்தின் பெருநகரம் "" என்று மஸாலிக் - உல் - அப்சர் குறிப்பிடுகின்றார். “முகம்மதியர் ஆட்சிக்காலத்தில் இந்திய முகம்மதியர்களின் கற்கும் மேம்பாடு "" எனும் நூலை இயற்றிய நரேந்திரநாத் லா அவர்கள், பேரரசர் முகம்மது - பின் - துக்ளக்கின் தலைநகர் மாற்றம் என்னும் ஏறுமாறான திடீர் நடவடிக்கையால் வெகுஜன மக்கள் பெரும் அவதிக்குள்ளானது மட்டுமல்லாமல் டில்லி என்கிற பெரும் இலக்கிய நகரையும் அழிவில் தள்ளினார் என்றும் குறிப்பிடுகிறார். பைருஸ் (எண்ழ்ன்க்ஷ்) மன்னரின் அரசவையில் இடம்பெற்றிருந்த வரலாற்று ஆசிரியரான ஜியாவுதீன் பர்னி, பேரிழப்புடன் பெரும் வீழ்ச்சியுமுற்ற டில்லிப் பட்டணம் இலக்கியத் தரத்திலும் தன் உயர்நிலையை இழந்தது என்று கூறுகிறார்.

டில்லியின் வீழ்ச்சி என்று அங்கிருந்த அறிஞர்களின் இடப்பெயரை வைத்தே அவர் சொல்கிறார். சாதாரண குடிமக்களின் இடப்பெயர்ச்சியை அவர் கருத்தில் கொள்ளவில்லை எனலாம்.

டில்லிப் பட்டணத்தின் வீழ்ச்சியைக் குறித்துப் பேசும்போது சாதாரண எளிய மக்களைப் பற்றி ஜியாவுதீன் பர்னி கவனம் கொள்ளவில்லை.

இபுன் பதூதா கூறும் இரண்டு அறிக்கைகளாவன. ஒன்று, இபுன் பதூதா டில்லிப் பட்டணத்திற்குள் நுழைந்தபோது அவர் கண்ட காட்சி அனுபவத்தை உள்ளவாறு விளக்கியிருப்பது.

இன்னொன்று, ஷேக் ருக்னுதீன் மூல்தானியிடம் பெற்ற செவிவழிச் செய்தியின் அடிப்படையில் டில்லிப் பட்டணத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறியது என்பனவாகும். முதலில் கூறிய அறிக்கையிலிருந்து இரண்டாவது கூறிய செய்தி முற்றிலும் வேறுபடுகிறது. தற்கால விவரங்கள் உறுதிப்படுத்தும் வரையில் இபுன் பதூதாவின் செவிவழிச் செய்திகள் ஏற்கப்படமாட்டாது. அதே நேரம் அவரது மூலச்சான்றுகள் நம்பகத்தன்மை யுடையனவாகும்.

""பின்னர் நாங்கள் மசுதாபாத் நகரிலிருந்து கடைசியாக டில்லிப் பட்டணம் சென்றடைந்தோம். டில்லிப் பட்டணம் பேரரசர் முகம்மது - பின் - துக்ளக்கின் தலைநகரமாகும். டில்லிப் பட்டணம் வனப்பும் வலிமையும் கூடிய உன்னத நகரமாகும். இந்நகரின் சுவர்கள் உலகின் வேறெந்தப் பகுதிகளிலும் காணப்படாத வகையில் அமைந்திருந்தன. இந்துஸ்தானாகிய டில்லிப்பட்டணம் முஸ்லிம் நகரங்களைவிடச் சிறந்திருந்தது’’ எனக் கூறும் இபுன் பதூதாவின் முதல் தகவலின்படி டில்லிப்பட்டணம் என்பது வனப்பும் வலிமையுமிக்க நகரமட்டும் அன்று.

இந்துஸ்தான் நகரங்களுள் மட்டுமல்லாமல் இஸ்லாமிஸ்தான் நகரங்களுள் சிறந்ததோர் நகரமாகவும் திகழ்ந்தது என்பது தான்.

தலைநகர் மாற்றம் குறித்தும் துக்ளக்கின் அணுகுமுறையையும் விளக்க வந்த இபுன் பதூதா அவர்கள் துக்ளக் மீது அதிருப்தியுற்ற மெய்ஞ்ஞானியான ஷேக் ருக்னுதீன் முல்தானியியும் கொண்ட நட்புறவுச் செல்வாக்கு பதூதாவின் எண்ணங் களில் விஷத்தை விதைத்தது.

இந்நிலையில், தனது முதல் அறிக்கையை மறந்துவிட்ட இபுன் பதூதா, "" முதன் முதலில் டில்லிப் பட்டணம் சென்றேன். அப்போது அந்நகரம் முழுக்க முழுக்க பாலைவனமாக இருந்தது. அந்நகரில் வெகுசில மக்களே வாழ்ந்தனர். வேறு வகையில் சொல்வதென்றால் அந் நகரம் வெற்றிடமாக இருந்தது. உலகின் மிகப்பெரும் அந்நகரில் சில குடியிருப்புகளே இருந்தன.'' இபுன் பதூதாவின் நடுநிலையான அவதானிப்புடன்கூடிய இரண்டாவது கருத்துகளும் முதலில் சொன்ன கருத்துருவத்தோடு முரண்பட்டுள்ளன. இபுன் பதூதா முதலில் சொன்ன கருத்து சார்புள்ளனவாகும்.

தாரிக்கே முபாரக்ஷாஹி என்ற நூலின் ஆசிரியர் அவர்களும் ""டில்லிப் பட்டணம் இப்போதும் தலைநகராகத் திகழ்கிறது'' என்கிறார். முந்தக்பத் - உத் - தவாரிக் என்னும் நூலை இயற்றிய அப்துல் காதிர் பதௌனி ''ஆண்டின் இறுதிப் பகுதியில் தலைநகரம் டில்லிப் பட்டணத்திலிருந்து தௌலதாபாத் நகருக்கு மாற்றப்பட்டதற்கு நானே சாட்சி. அச்சமயத்தில் டில்லியில் மாலிக் பஹதுர் குர்ஷாப் என்னும் தளபதியின் தலைமையில் கிளர்ச்சி நடைபெற்றது. அமைச்சர் அஹமத் அயாஸ் அவர்கள் தாமதமின்றி உடனே அந்தக் கலகக்காரர்களை ஒடுக்கினார். இச்சம்பவத்தின் அமைச்சர் வசீர் அவர்களும் ஏனைய படைவீரர்களும் டில்லிப் பட்டணத்தில்தான் இருந்தார்கள். பார்க்கப் போனால் தலைநகரை டில்லிப் பட்டணத்தின் இருந்து தௌலதாபாத் நகருக்கு மாற்றுவது என்பது ஒரு கருத்தாகவே இருந்தது. அரசாங்கம் டில்லிப் பட்டணத்திலிருந்து தௌலதாபாத் நகருக்கு மாற்றப்படவில்லை. டில்லிப் பட்டணத்திலிருந்து தௌலதாபாத் நகருக்கு மாற்றுவதன் மூலம் கலக்காரர்களை ஒடுக்குவதற்குப் படைவீரர்களைத் தெரிவு செய்தமைக்கு டில்லிப் பட்டணம் அழிந்திருந்தால் இது எப்படி சாத்தியமாகி இருக்கும்? ஆகவே, டில்லிப் பட்டணம் அழியவோ முற்றுகையிடப் பெறவோ இல்லை என்பதையே இது காட்டுகிறது.

கி.பி. 1327 - 28ஆம் ஆண்டைச் சேர்ந்த டில்லிப் பட்டணத்தில் இருந்த கல்வெட்டில் முகம்மது - பின் - துக்ளக்கின் ஆட்சிக்காலத்திடையே அக்ரோடகன் என்னும் பகுதியில் இந்து சமயத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது குடும்பத்துடன் வளத்துடன் அமைதி யாக வாழ்ந்து வந்துள்ளதைக் கூறுகிறது. அந்தக் காலக்கட்டத்தில் டில்லிப் பட்டணம் ஒருபோதும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. மேட்டுக்குடியினரும் தேர்ந் தெடுக்கப்பட்ட சிலருமே தௌலதாபாத் நகருக்குப் போகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்று பர்னியும் கூறுகிறார்.

முகம்மது - பின் - துக்ளக் தமக்குப் பிடித்த மான தௌலதாபாத் நகரில் சிறிது காலம் குடியேறி வாழ்ந்ததோடு தம்மையே உதாரணமாக முன்வைத்து இறைநேசச் செல்வர்களையும் உயர்குடி மக்களையும் டில்லிப் பட்டணத்திலிருந்து தௌலதாபாத் நகருக்கு நிரந்தரமாகக் குடியேறி வாழ ஊக்குவித்ததோடு (காற்றும் நீரும் இயற்கையான தன்மையால் வந்தது) தௌலதாபாத் நகரை ''குப்பத்துல் இஸ்லாமாக"" உருவாக்க முனைந்தார்.

தௌலதாபாத் நகரைத் தலைநகராக மாற்றும் திட்டம் பெரும் வெற்றிபெற்றது. இவ்வகையில் தென்னிந்தியப் பகுதி முஸ்லிம்களின் இல்லமாக உண்டானதோடு டில்லிப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னும் முஸ்லிம் ஆட்சியின்கீழ்த் தென்னிந்தியா நீடித்திருந்தது. இவ்வகையில், தென்னிந்தியப் பகுதியின் இஸ்லாமியப் பண்பாட்டுத் தந்தையான தொலைநோக்குச் சிந்தனை கொண்ட முகம்மது - பின் - துக்ளக் மன்னருக்குத் தென்னிந்திய முஸ்லிம் கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள் அல்லவா?