வஞ்ச நெஞ்சம் பஞ்சமில்லாமல் பெற்றவர் மோடி

/idhalgal/eniya-utayam/modi-has-no-shortage-deceitful-heart

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.'

-என்பார் வள்ளுவர்.

நியாயவான்களைப்போல் தேனொழுகப் பேசி உலகை ஏமாற்றும் வஞ்சகர்களைப் பார்த்து, மற்றவர்கள் சிரிப்பதைவிட, அவர்களது உடலில் கலந்திருக்கும் நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்ச பூதங்களுமே தமக்குள் கைகொட்டிச் சிரிக்கும் என்பது இதன் பொருள்.

இந்தக் குறளும் அதன் பொருளும் இந்தியாவை ஆளும் மோடி கும்பலுக்கு மிகப் பொருந்துவதாக அமைந்திருக்கிறது. வள்ளுவர் சுட்டிக்காட்டும் வஞ்ச நெஞ்சத்தைப் பஞ்சமில்லாமல் பெற்றவர்கள் அவர்கள்.

நடந்துமுடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை வழங்கிவிட்டதால், தமிழ்நாட்டு மக்கள்மீது கோபத்தில் இருக்கும் மோடி அரசு, இந்த ஆண்டிற்கான தங்கள் இடைக்கால பட்ஜெட்டில், தங்கள் கோபத்தை வஞ்சமாக வெளிப்படுத்தியிருக்கி றார்கள்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை எப்படியாவது வேரூன்றச் செய்துவிட வேண்டும் என்பதுதான் மோடியின் ஆசை. அதற்காகத்தான் தமிழ் மக்கள்மீது அக்கறை உள்ளவர்போல் மோடி கொஞ்ச காலமாகவே நடித்துவந்தார்.

அதைத் தொடர்ந்து உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று முழக்கமிட்டார். பண்பட்ட தொன்மையான இனம் தமிழினம் என்று புகழ்ந்தார். திருக்குறள்தான் உலகின் பொதுமறை என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடினார். போகிற இடங்களில் எல்லாம் திருக்குறளை இந்தியில் எழுதிவைத்துக்கொண்டு படித்து, தன்னை திருக்குறளின் பக்தர் போலவே மோடி காட்டிக்கொண்டார்.

ss

அதுமட்டுமா?

தேர்தலுக்கு முன் தமிழகத்துக்கு ஏழெட்டு தடவை படையெடுத்து வந்த மோடி. தமிழ்நாட்டு மக்களிடம் "நாமெல்லாம் ஒரே குடும்பம்' என்று தேனொழுகப் பேச

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.'

-என்பார் வள்ளுவர்.

நியாயவான்களைப்போல் தேனொழுகப் பேசி உலகை ஏமாற்றும் வஞ்சகர்களைப் பார்த்து, மற்றவர்கள் சிரிப்பதைவிட, அவர்களது உடலில் கலந்திருக்கும் நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்ச பூதங்களுமே தமக்குள் கைகொட்டிச் சிரிக்கும் என்பது இதன் பொருள்.

இந்தக் குறளும் அதன் பொருளும் இந்தியாவை ஆளும் மோடி கும்பலுக்கு மிகப் பொருந்துவதாக அமைந்திருக்கிறது. வள்ளுவர் சுட்டிக்காட்டும் வஞ்ச நெஞ்சத்தைப் பஞ்சமில்லாமல் பெற்றவர்கள் அவர்கள்.

நடந்துமுடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை வழங்கிவிட்டதால், தமிழ்நாட்டு மக்கள்மீது கோபத்தில் இருக்கும் மோடி அரசு, இந்த ஆண்டிற்கான தங்கள் இடைக்கால பட்ஜெட்டில், தங்கள் கோபத்தை வஞ்சமாக வெளிப்படுத்தியிருக்கி றார்கள்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை எப்படியாவது வேரூன்றச் செய்துவிட வேண்டும் என்பதுதான் மோடியின் ஆசை. அதற்காகத்தான் தமிழ் மக்கள்மீது அக்கறை உள்ளவர்போல் மோடி கொஞ்ச காலமாகவே நடித்துவந்தார்.

அதைத் தொடர்ந்து உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று முழக்கமிட்டார். பண்பட்ட தொன்மையான இனம் தமிழினம் என்று புகழ்ந்தார். திருக்குறள்தான் உலகின் பொதுமறை என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடினார். போகிற இடங்களில் எல்லாம் திருக்குறளை இந்தியில் எழுதிவைத்துக்கொண்டு படித்து, தன்னை திருக்குறளின் பக்தர் போலவே மோடி காட்டிக்கொண்டார்.

ss

அதுமட்டுமா?

தேர்தலுக்கு முன் தமிழகத்துக்கு ஏழெட்டு தடவை படையெடுத்து வந்த மோடி. தமிழ்நாட்டு மக்களிடம் "நாமெல்லாம் ஒரே குடும்பம்' என்று தேனொழுகப் பேசி நாடகம் ஆடினார். இன்னொரு நாள் விவேகானந்தர் பாறைக்கு வந்து தியானம் மேற்கொண்டு தமிழ்நாட்டு மக்களை நெகிழவைக்க முயன்றார்.

அப்படி இருந்தும் மோடியின் நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் நம்பவில்லை. மதவெறி கொண்ட மோடி கும்பலுக்கு வாக்களிக்க மறுத்து, இது திராவிட பூமி என்று நிரூபித்துவிட்டார்கள். இதனால், தமிழ்நாட்டு மக்களைப் பழிவாங்க, பட்ஜெட்டில் எந்தவித சிறப்புத் திட்டத்தையும், நிதித் தொகுப்பையும் அறிவிக்காமல் வெறுப்பை உமிழ்ந்திருக்கிறது மோடி அரசு.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 23-ஆம் தேதி பாரபட்ச பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது, தமிழ்நாட்டின்மீது மோடி அரசுக்கு இவ்வளவு வஞ்சம் ஏன்? என்ற வருத்த உணர்ச்சி தோன்றியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்த பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு என்று ஒரு திட்டமும் இல்லை. எந்த நிதி ஒதுக்கீடும் இல்லை. சொல்லப்போனால், தமிழ்நாடு என்ற சொல்லே அதில் இல்லை. அதுமட்டுமா? ஒவ்வொரு பட்ஜெட் உரையிலும் திருக்குறளை எடுத்துக்காட்டும் நிர்மலா சீதாராமனுக்கு, இந்த முறை ஒரு திருக்குறள்கூட நினைவுக்கு வரவில்லை. அதனால் பட்ஜெட் உரையில் திருக்குறள் இடம்பெறவே இல்லை.

தமிழ்நாட்டுக்கு எந்த சிறப்புத் திட்டத்தையும் அறிவிக்காத மோடி அரசு, தமிழ்நாட்டின் எந்த நிதிக் கோரிக்கையையும் ஏற்கவில்லை. தமிழ்நாட்டுக்கு படுமோசமான துரோகத்தை இழைத்திருக்கிறது மோடி அரசு.

குறிப்பாக-

= தமிழகம் மிகப் பெரிய இரண்டு இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டது. இதற்கான இழப்பீடுகளுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வரை தேவை என்று தமிழக அரசு கேட்டது. ஆனால் இதைக் கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு இதுவரை வெறும் 276 கோடி ரூபாய் தான் கொடுத்திருக்கிறது. மேற்கொண்டு தருவது பற்றி பட்ஜெட்டில் எதுவும் இல்லை.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முடங்கியே இருக்கிறது. அதனால் கடந்த மூன்று ஆண்டு களாக விடுவிக்கப்படாமல் இருக்கும் மெட்ரோ ரயில் திட்டத் துக்கான நிதியை விடுவிக்கவேண்டும் என்று தமிழக அரசு கேட்டும், பட்ஜெட்டில் கைவிரித்திருக்கிறது மோடி அரசு.

=இதேபோல். கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை விரைந்து வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதுகுறித்தும் பட்ஜெட்டில் எதுவும் சொல்லப்படவில்லை. அதேபோல் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலைத்திட்டத்துக்கான ஒப்புதலை நிதியுடன் வழங்கவேண்டும் என்று தமிழக அரசு வைத்த கோரிக்கையையும் இந்த பட்ஜெட்டில் கவனிக்கவே இல்லை மோடி அரசு.

= மாநிலப் பட்டியலில் உள்ள முத்திரைத்தாளின் கட்டணத்தைக் குறைக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதேசமயம், இதனால் மாநில அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கு எந்தவொரு அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

ss

= இப்படி பல வகையிலும் தமிழகத்தை இந்த பட்ஜெட்டில் புறக்கணித்த மோடி, தனது அரசாங்கத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டி ருக்கும் நிதிஷ்குமாரின் பீகார் மாநிலத்துக்கும், சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர மாநிலத்துக்கும் இந்திய மக்களின் நிதியை தாராள பிரபுவாய் வாரி இறைத்திருக்கிறார்.

= அவர்களுக்கு வாரிக்கொடுக்கவில்லை என்றால் தான் அமர்ந்திருக்கும் பதவி நாற்காலியின் கால்களை அவர்கள், உடைத்து எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள் என்ற பயத்தில், அவர்களுக்கான வள்ளலாய் மாறியிருக்கிறார் மோடி.

இந்திய மக்களின் வரிப்பணத்தை அந்த இரண்டு மாநிலத்திற்கும் மோடி அரசு எப்படி அள்ளிக் கொடுத்திருக்கிறது தெரியுமா?

===

= நிதிஷ்குமாரின் பீகாருக்கு விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருக்கிறார்கள்.

= அந்த மாநிலத்தில் சாலைகள், மேம்பாலம் அமைக்க 26 ஆயிரம் கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

= அதேபோல் பீகார் மாநில, நீர்ப் பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு திட்டங்களுக்கு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

= மேலும், பீகார் மாநிலத்தில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்க ரூ.11 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

= இது போதாதென்று, பீகாரில் உள்ள புராதனமான கோயில்களை மேம்படுத்த திட்டம் உருவாக்குவார்களாம். அதில் அங்குள்ள புத்தகயா கோயில்கள் மேம்படுத்தப்படுமாம்.

இதேபோல்-

= சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.

= ஆந்திரப் பிரதேசத்தில் மின்சாரம், சாலை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்கிற சர்க் கரை அறிவிப்பை வெளியிட்டிருக்கி றார்கள்.

= ஆந்திரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்கிற ஆறுதல் அறிவிப்பையும் தந்திருக்கிறார்கள்.

= அதேபோல் ஆந்திரத்தில் சாலை மேம்பாடு, நீர் திட்டங்களுக்கு உபரி நிதி அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

= இவை தவிர, ஆந்திர தலைநகர் அமராவதியை உருவாக்க ரூ.15,000 கோடி ரூபாய் கூடுதல் நிதியாக ஒதுக்கப்படும் என்கிற பிரகடனம் வேறு!

இந்த பட்ஜெட் மூலம் மோடி அரசு என்ன சொல்ல வருகிறது?

எங்களை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விரும்பும் மாநிலங்களுக்கு மட்டும்தான் நிதி கொடுப்போம். எங்களுக்கு வாக்களிக்காத மாநில மக்களுக்கு எதையும் தரமாட்டோம் என்று மறைமுகமாகச் சொல்லியிருக்கிறது.

இதுதான் சமத்துவமா? இதுதான் ஒருமைப் பாட்டின் லட்சணமா? இதுதான் குடியரசு நாட்டிற் கான அடையாளமா?

தி.மு.க. ஆளும் தமிழகத்தைப் புறக்கணித்தது போலவே, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீட்டில் வஞ்சத்தைக் காட்டி இருக்கிறது மோடி அரசு. அனைத்து மாநிலங்களிலும் கையேந்தி நிதி வசூலிக்கும் ஒன்றிய அரசு, தங்களுக்கு விருப்பப்பட்ட மாநிலங்களுக்கு மட்டும்தான் நிதி தருவோம் என்பது எவ்வளவு பெரிய மோசடி! இது எப்படி அனைவருக்குமான அரசாக இருக்க முடியும்?

ஒன்றிய அரசின் இந்த பாரபட்சமான பட்ஜெட் டைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி யிருக்கிறார்கள்.

மோடி அரசின் இந்த ஓரவஞ்சனையைக் கண்டித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினும், ஏனைய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், கடந்த 27-ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்தி ருக்கிறார்கள்.

அதிகாரத் தில் உட்காரு கிறவர்கள் நாட்டின் கஜானாவை தங்க ளுக்குப் பிடித்தவர்களுக்கு மட்டும் பங்கு போட்டுக் கொடுப்பதுபோல, இந்த பட்ஜெட் அமைந்திருப்பது, நாட்டிற்கே தலை குனிவாகும். மோடி அரசின் இந்த பட்ஜெட் பார பட்சத்தை அறிந்து, உலக நாடுகளே சிரிக்கின்றன.

தமிழகத்தை அப்பட்டமாக புறக்கணித்த பிரதமர் மோடியும், தமிழ்நாட்டை மறந்துவிட்டு, பட்ஜெட் படித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இனி எந்த முகத்தோடு தமிழ்நாட்டுக்கு வருவார்கள்?

ஒரே நாடு ஒரே தேர்தல் எல்லாம் மாய் மாலம்... வாய் ஜாலம்... அவ்வளவுதான்...!

ஆதங்கத்தோடு,

நக்கீரன்கோபால்

uday010824
இதையும் படியுங்கள்
Subscribe