வெப்பம் தாங்கமுடியாத அளவுக்கு இருந்தது. மதிய உணவிற்குப்பிறகு வழக்கமாக இருக்கக்கூடிய தூக்கத்தில் விழுவதற்கு எவ்வளவு முயற்சிசெய்தும் முடியவில்லை. என் இந்தச் சிறிய காங்க்ரீட்டாலான வீட்டிற்குள் நான்- எழுத்து வடிவத்தில் கூறுவதாக இருந்தால் சிரமப்பட்டு உருகிக்கொண்டிருந்தேன்.

நான் படுத்திருக்கும் இந்த அறைக்கு இரண்டு சாளரங்கள் இருக்கின்றன என்பதென்னவோ உண்மைதான். அவை இரண்டையும் திறந்துவிட்டால், அறைக்குள் சிறிய அளவில் குளிர்ந்த காற்று நுழைந்து வரும் என்பதும் சரிதான். ஆனால், எப்படித் திறப்பது?

திறந்தால், வெளியே காத்து நின்றிருக்கும் ஒன்பது நாய்க்குட்டிகளும் அந்த நிமிடத்திலேயே சாளரத்தின் கம்பிகள்வழியாக உள்ளே வந்துவிடும். நுழைந்து வந்துவிட்டால், பிறகு... அவை செய்யக்கூடிய செயல்கள்... தொலைக்காட்சிப் பெட்டியின், மியூசிக் சிஸ்டத்தின் கேபிள்களைக் கடித்து இழுக்கும். பத்திரிகை களையும் புத்தகங் களையும் கடித்துக் கிழிக்கும். டீப்பாய் கவரின் ஓரத்தைக் கடித்துப் பிடித்து எல்லாரும் போட்டி போட்டிக்கொண்டு ஊஞ்சலாடு வார்கள்... செயலற்ற நிலையில் பார்த்துக்கொண்டு நிற்க மட்டுமே என்னால் முடியும். அடித்து விரட்டக்கூடாதா என்று கேட்டால்...

அது இயலாது.

Advertisment

அவர்கள் என் ப்ளாக்கியின் குட்டிகள் அல்லவா?

அதனால் நான் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டேன்.

அப்போது வெளியேயிருந்து யாரோ என்னை அழைப்பதைப்போல தோன்றியது. சிரமப்பட்டு எழுந்து சென்று சாளரங்களைத் திறந்தபோது...

Advertisment

அங்கு வாச−ல் சிரித்தவாறு வக்கீல்!

அவர் கூறினார்:

""நான் எவ்வளவு நேரமா கூப்பிடறேன்! இந்த நடு உச்சிப்பொழுதுல வீட்டை அடைச்சிக்கிட்டு என்ன செய்றீங்க?''

எனக்கு சிரமமாக இருந்தது.

நான் கூறினேன்:

""இதோ... இப்போ கதவைத் திறக்கிறேன்.''

அவ்வாறு கூறிவிட்டு நான் வேகமாக நடுக்கூடத்திற்கு வந்து கதவைத் திறந்தபோது முத−ல் உள்ளே நுழைந்து வந்தது வக்கீல் அல்ல- நாய்க் குட்டிகள்.

அவர் என்னை கேள்வி கேட்பதைப்போல பார்த்துக் கூறினார்:

""ஏன் இதெல்லாம் இப்படி..?''

வக்கீலுக்கு நாய்க்குட்டிகளின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

மன்னிப்பு கேட்கும் குர−ல் நான் கூறினேன்:

""வக்கீல்... இதுங்ககிட்ட நான் தோத்துட்டேன். நீங்க கேட்டீங்கள்ல... இந்த நடு உச்சிப்பொழுதுல நான் இப்படி எதுக்கு வீட்டை அடைச்சுப் பூட்டி வச்சிருக்கேன்னு?

இதோ... இவங்கதான் காரணம். உங்களுக்குத் தெரியுமில்−யா? நானும் மனைவியும் மாமிசம் எதுவும் சாப்பிடுறதில்ல. இருந்தாலும், இவங்களுக்கு தினமும் மீன் வாங்கித் தர்றேன். உயர்ந்த பச்சரிசி சேர்த்துல மருமக்க வளைகுடாவி−ருந்து அனுப்பித் தரும் பால் பொடியைச் சேர்த்துக் குழைச்சுத் தர்றோம். இருந்தாலும், எனக்குக் கிடைக்கறது...''

அப்போது வக்கீல் கையை உயர்த்தி என்னை விலக்கினார். பிறகு... கூறினார்:

sss

""இல்ல... இது சரியில்ல...''

என்னால் எதுவும் கூறமுடியவில்லை.

வக்கீலும் எதுவும் கூறாமல் சிறிதுநேரம் அமர்ந்திருந்தார். பிறகு திடீரென்று எழுந்து நின்றார். அவர் கையை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி வைத்தார். அவருடைய முகத்தைப் பார்த்தபோது, என்ன காரணத் தாலோ எனக்கு பயம் உண்டானது. அந்த முக பாவத் துடன் அவரை எந்த சமயத்திலும் பார்த்ததில்லை.

ஒன்பது நாய்க்குட்டிகளும் வக்கீலி−ன் முகத்தைப் பார்த்து திகைத்துநின்றிருந்தன.

வக்கீல் கடுமையான குரலி−ல் அவற்றிடம் கூறினார்:

""எல்லாரும் வெளியே போங்க. இனிமே வீட்டுக்குள்ள நுழைஞ்சு தொந்தரவு கொடுக்கக்கூடாது. உங்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு உணவு தர்றார்ல?

உங்கமேல அன்பு வச்சிருக்கார்ல? அது போதும். வெளியே... வாசலுக்கோ மாமரத்திற்குக் கீழேயோ போய் விளையாடுங்க...ம்...''

தொடர்ந்து அங்கு கண்ட காட்சியை என்னால் நம்பவே முடியவில்லை. நாய்க்குட்டிகள் ஒவ்வொன்றாக பணிவான சிறிய பள்ளிக்கூட குழந்தைகளைப்போல வெளியே சென்றன.

திகைத்து நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்து வக்கீல் புன்னகைத்தார். தொடர்ந்து மெதுவாக அந்த புதிய கடுமையான தோற்றத்தி−ருந்து பழைய இயல்பான தோற்றத்திற்குத் திரும்பிவரவும் செய்தார்.

எனக்கு எதுவுமே புரியவிலில்லை. அப்போது நான் இதையும் நினைத்தேன். பொதுவாக தலசேரியி−ருந்து புறப்படும்போது, வக்கீல் என்னை அழைத்துக் கூறுவார்: ""நான் வரட்டுமா? அங்க நிறைய வேலையெதுவும் இல்லையே?''

ஆனால், இன்று அது நடக்கவில்லை.

இப்படி திடீரென்று வருவதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

ஆனால், நான் அது எதையும் கேட்கவில்லை. எனினும் என் உள் மனதை வாசித்துவிட்டதைப்போல கூறினார்:

""இன்னிக்குக் காலைதான் எனக்கு விஷயமே தெரியும். அப்படின்னா, நீதிமன்றமும் வழக்கும் அங்கேயே இருக்கட்டும்னு நினைச்சு இங்கே புறப்பட்டுட்டேன். ஃபோன் செய்றதுக்காக காத்திருக்கல. சரி... சொல்லுங்க, என்ன நடந்தது?''

நான் பதைபதைப்புடன் கேட்டேன்:

""இதை யார் சொன்னாங்க?''

வக்கீலுக்கு என்னுடைய கேள்வி பிடிக்கவில்லை.

எரிச்சலை மறைத்து வைக்காமலேயே அவர் சொன்னார்:

""யார் வேணும்னாலும் இருக்கட்டும். என் கேள்விக்கு பதில் சொல்லுங்க. என்ன நடந்தது?''

அப்போது நான் கூறினேன்:

""அந்த அளவுக்கு பெரிய அளவில் எதுவும் நடக்கல. ஒரு சிறிய அட்டாக்... சில நாட்கள் மருத்துவமனையில கிடந்தேன். யார்கிட்டயும் தெரிவிக்கல. அதனாலதான்...

இப்போ பிரச்சினை எதுவுமில்ல. எல்லாம் இயல்பு நிலைக்கு வந்தாச்சு. சரி... கேட்கிறேன்- யார் சொன்னது?''

வக்கீல் எழுந்து நின்று என்னையே உற்றுப்பார்த்தார். அப்போது நான் பார்த்தது- நீண்டகாலமாக எனக்கு நன்கு தெரிந்த, இலக்கியத்திலும் இசையிலும் மிகுந்த ஆர்வமுள்ள, நீதிமன்றங்களில் எப்போதும் வேலைப்பளு வுடன் இருக்கக்கூடிய என் நண்பரான வக்கீல் ரமேஷனை அல்ல..

எனக்கு பயம் உண்டானது.

வக்கீல் கூறினார்:

""இப்போ நான் போறேன். ஞாயிற்றுக்கிழமை நான் வசதிப்படி வருவேன். கவனமா இருக்கணும்...''

திகைத்துப்போய் நின்றிருந்த என் முதுகிலும் முகத்திலும் அன்புடன் தடவிவிட்டு, வக்கீல் வெளியேறினார்.

அப்போது மனைவி வந்து கேட்டாள்:

""யாரோட பேசிக்கிட்டிருந்தீங்க?''

நான் கூறினேன்:

""தலசேரியி−ருந்து வக்கீல் ரமேஷன் வந்திருந்தாரு.''

மனைவி அதிர்ச்சியடைந்தாள்.

""வக்கீல் ரமேஷனா? இங்க யாருமே இல்லையே! நான் படுக்கையறையி−ருந்து பார்த்தப்போ, உங்களோட நீங்களே பேசிக்கிட்டிருந்ததை இல்லையா பார்த்தேன். உங்களோடதான் பேசிக்கிட்டிருந்தீங்க. ஆனா இப்போ சொல்றீங்க... என்ன ஆச்சு?''

நான் அவளையே வெறித்துப் பார்த்தேன்.

""உனக்குதான் நடந்திருக்கு- எனக்கில்ல- நான் வக்கீல் ரமேஷனோடதான் பேசிக்கிட்டிருந்தேன். என் உடல்நல பாதிப்பைப் பத்தி கேள்விப்பட்டதும், அவர் உடனடியா நீதிமன்றத்திலி−ருந்து...''

என்னை முழுமை செய்ய அனுமதிக்காமல், மனைவி மேஜையின்மீதிருந்த என் அலைபேசியை எடுத்து கையில் தந்துவிட்டுக் கூறினாள்:

""வக்கீலைக் கொஞ்சம் கூப்பிடுங்க.''

நான் தயங்கி நின்றபோது, அவள் கடுமையான குரலி−ல்

கூறினாள்:

""கூப்பிடுங்க... நீங்க கூப்பிடலைன்னா நான் கூப்பிடுவேன்.''

எனக்கு அப்போது வேறுவழியே இல்லாம−ருந்தது. நான் பயத்துடன் தயங்கித் தயங்கி அழைத்தேன்.

எதிர்முனையில் வக்கீ−ன் நன்கு பழக்கமான குரல்...

மனைவி அப்போது பேசும்படி எனக்கு சைகை காட்டினாள்.

நான் கேட்டேன்.:

""வக்கீல்... இப்போ நீங்க எங்க இருக்கீங்க?''

வக்கீல் கூறினார்:

""காலைலயிருந்து இங்கதான் இருக்கேன். இன்னைக்கு நிறைய வேலைப்பளு இருக்கக்கூடிய நாள். இங்கிருந்து அசையமுடியல... சரி... ஏன் அழைச்சீங்க?''

பயத்தின் காரணமாக நான் எதுவுமே கூறாமல், அலைபேசியைக் கீழே வைத்தேன்.

மனைவி என்னவோ கேட்டுக்கொண்டிருந்தாள்.

ஆனால், நான் எதையும் கேட்கவில்லை.