புரட்சி என்பது ஒரு குறுகிய காலத்தில் வல்லமையில் அல்லது ஓர் நிறுவன கட்டமைப்பில் ஓர் அடிப்படை மாற்றமாகும். புரட்டிப் போடுதலே புரட்சி. மேலைக் கீழாவோ கீழை மேலாகவோ, வலதை இடதாகவோ இடதை வலதாகவோ புரட்டிப் போடுவதே புரட்சி. இது கலாச்சாரம், பொருளாதாரம், சமூக அரசியல் நிறுவனம் ஆகியவற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. உலக வரலாற்றில் முறைகள், காலம், கருத்தியல் தூண்டல் ஆகியவற்றினால் பல்வேறு பரந்த புரட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சமீப காலத்தில் அதிகம் வன்புணர்வு செய்யப்பட்ட வார்த்தைகளில் புரட்சியும் ஒன்று. புரட்சி என்ற சொல்லின் ஆழமான பொருளைப் புரிந்து கொள்ளாமலே, எதற்கெடுத்தாலும் புரட்சி என்ற சொல் இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது; அடைமொழி யாகச் சூட்டிக் கொள்ளப்படுகிறது. ஒரு சொல் எங்கு, எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் அந்தச் சொல்லின் வலிமை அடங்கி இருக்கிறது. புரட்சி என்ற சொல் ஆழமான அடர்த்தியான பொருளைக் கொண்டது. வரலாற்றில் அது பயன்படுத்தப்பட்டிருக்கும் இடங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே அந்தச் சொல்லின் அதிர்வு புரியும். ஆனால் சமகாலத் தலைமுறையின் பங்களிப்பு ஓர் உயிர்ப்பான சொல்லின் பொருளைக் கொன்றது அல்லது அதன் பொருளை மாற்றியது. நிச்சயம் இதை மகிழ்ச்சிகரமான ஒன்றாக வரலாறு பதிவு செய்யாது என்று விகடன். காம் பதிவு செய்கிறது.
எம்.ஜி.ஆருக்குப் ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டம் ஆலோசித்துக் கொடுக்கப்பட்டதன்று. உலகப்பன் குறிப்பிடுவது போன்று,“திருவாரூர் மு.கருணாநிதிக்குக் கலைஞர் பட்டம், கே.ஆர். ராமசாமிக்கு ‘நடிப்பிசைப்புலவர்’ பட்டம், எஸ்.எஸ். இராஜேந்திரனுக்கு ‘இலட்சிய நடிகர்’ பட்டம். அதுபோல் எம்.ஜிஆருக்கு ஒரு பட்டம் போடுவோம் என்ற எண்ணம்தான் இது. அந்த நேரத்தில் தோன்றியதுதான் ‘புரட்சி’ பட்டம். அதுவும் கலைஞர் மூலம் கொடுத்து விட்டார்.
இதனால் ஒரு சொட்டு ரத்தம்கூட சிதறவைக்க முடியவில்லை என்பது சரித்திரத்தின் சத்தியம். அதுதான் இக்கட்டுரை எழுத தேவை ஆயிற்று. மற்றபடி இது கூத்தாடிகளின் கேலிக்கூத்துதான். இக்கூத்துதான் புரட்சி கலைஞர், புரட்சி தமிழன், புரட்சி தளபதி எனத் தொடரும்.
எம்.ஜி.ஆரும் அந்தப் பட்டத்தை அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டுவிட்டார். என்றாலும் அவரது பாதை புரட்சிப் பாதையன்று.
அவர் தன் வழிகாட்டியாக அண்ணாவைத்தான் குறிப்பிடுகிறாரே ஒழிய பெரியாரையன்று. பெரியார் பகுத்தறிவு, சீர்திருத்தம், புரட்சி (போராட்டம்) என்று தன் வழியை வகுத்துக் கொண்டார். அறிஞர் அண்ணாவோ கழகத்தை தோற்றுவிக்கும்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதனைத் தாரக மந்திரமாக்கினார்.
எம்.ஜி.ஆரும் கட்டுப் பாட்டுடன் கடமை காத்தார். கடவுள் மறுப்பை விட்டுவிட்டு ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார். எம்.ஜி.ஆரும் சாதி வேறுபாடு அற்ற சமுதாயத்தை உருவாக்குவதும் மதச் சண்டைகள் அற்ற சமயத்தை பின்பற்றுவதும் தனது கடமையாகக் கொண்டார்.
"எதையும் தாங்கும் இதயம்', "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்' என்பதன் மூலம் பிராமண எதிர்ப்பும் தமிழியப் போராட்டங்களும் கூர்மழுங்கின. எம்.ஜி.ஆரும் அண்ணாவிடம் பாடம் கற்றுக் கொண்டார்.
பெண்கள் கண்ணிய மாக இருக்க வேண்டும்;
ஆண்கள் கட்டுப்பாட் டோடு இருக்க வேண்டும்.
வீட்டையும் நாட்டையும் காப்பதும் இஷ்ட தெய்வத்தை வணங்குவதும் ஒவ்வொரு மனிதனின் கடமையாக இருக்க வேண்டும். பகுத்தறிவும் பக்தியும் முரண்கள் அல்ல என்ற முடிவுக்கும் வந்தார்.
எம்.ஜி.ஆர் படங் க

எம்.ஜி.ஆர் படங் களில் பெண்கள் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள். ஆணாதிக்கத்தை இவரது படங்கள் விமர்சிப்பதில்லை. மாறாக படத்தின் முடிவுகள் பெண்களுக்கான உரிமை சார்ந்த கேள்விகளை ஆணாதிக்கச் சமூகத்தின் மதிப்பீடுகளை உறுதிப்படுத்தியே இருக்கின்றன. ஆணின் இச்சைக்குரிய, ஆணின் கவலைக்குரிய, கீழ்ப்படிய மறுக்கிற பெண்ணை அல்லது அடங்காப்பிடாரி என்று அழைக்கப்படும் கதா பாத்திரத்தை நாயகன் கீழ்ப்படிய வைப்பார். ஒருவனுக்கு ஒருத்தி, கற்பு மற்றும் பிற ஆணாதிக்க அமைப்புகளோடு தொடர்புடைய அடையாளங்கள் அனைத்தும் பெண்ணின் முக்கிய நற்குணங்களாக நியாயப்படுத்தப்படும். அடங்க மறுக்கும் பெண்களைக் கட்டுப்படுத்தி, சொன்னபடி நடக்கிற மனைவியாக ஆக்கிக் கொள்வதன் மூலம் ஆண்கள் தங்களின் கவுரவம்/வீரியம் ஆகியவற்றை நிலைநாட்டிக் கொள்ளவேண்டும் எனக் கருதுகிறார்கள்.
எம்.ஜி.ஆரும் வீரிய மிகுந்த ஆணாக, அடங்க மறுக்கும் பெண்ணை அடக்கும் வேடங்களில் நடித்தார். "கணவன்' (1968) கதை எம்.ஜி.ஆருடையது. சுதந்திரமான பெண்ணான, தலைக்கனம் பிடித்த ஆண்களைத் தண்டிக்கும் பெண்ணான ஜெயலலிதா சொத்துக்காக கைதி எம்.ஜி.ஆரை மணந்து அவனது சாவுக்காகக் காத்திருக்கிறாள். ஆனால் அவன் விடுதலையாகி வந்து ‘குடும்பம் ஒரு ஆலயம்’ என்கிறான். வில்லனாக மேலாளர் மிரட்ட, கணவனுக்கு அடங்கிவிடுகிறாள். நான் உங்கள் காலடியிலேயே கிடப்பேன் என்று பணிகிறாள். "குமரிக்கோட்டம்' (1971), "விவசாயி' (1967) படங்களிலும் ஒரே கதைதான்.
"ஒளிவிளக்கு' (1968 படம் இந்திப் படமான "பூல் அவுர் பத்தர்' இன் மறுபடைப்பு. நாயகன் விதவைப் பெண்ணை மணப்பதான பட முடிவை எம்.ஜி.ஆர் தலையிட்டு விதவையை மணக்காமல் வேறு ஒரு பெண்ணை மணப்பதாக மாற்றி விடுகிறார். விதவை பாலியல் தூய்மையை இழந்தவள் என்ற கலாச்சார விழுமியத்தைக் காப்பாற்ற, பெரியார் சொல்லும் விதவை மணத்தை விட்டு விடுகிறார்.
எம்.ஜி.ஆர். நாடகங் களிலும் புராண இதிகாச பாத்திரங்களில் நடித்து வந்தார். இவரது முதல் வேடமே பரதன்தான். அண்ணன் ராமனுக்குப் பதிலாக அவனது செருப்பை வைத்து அண்ணாவின் ஆட்சியை நடத்தும் பாத்திரம். "தசாவதாரம்' நாடகத்தில் சக்கரபாணி ராமர், எம்.ஜி.ஆர். லட்சுமணன். "லவகுசா' நாடகத்தில் எம்.ஜி.ஆர் லவனாக நடித்தார்.
"மருதநாட்டு இளவரசி' படத்தில் நடிக்கும்போது (1949இல்) ஒப்பந்த பத்திரத்தின் மேல் ‘முருகன் துணை’ என்று காணப்பட்டது. (எஸ்.விஜயன்). ""அப்போதெல்லாம் எம்.ஜி.ஆருக்குக் கடவுள்பக்தி உண்டு. படப் பிடிப்பு இல்லாத சமயங்களில் நான் அடிக்கடி சாமுண்டீசுவரி கோவிலுக்குச் செல்வேன் எம்.ஜி.ஆரும் பலமுறை என்னோடு வந்திருக்கிறார்.
சாமி கும்பிட்டிருக்கிறார்'' என்றார் முத்துசாமி, படத் தயாரிப்பாளர் (எம்.ஜி.ஆர் கதை, ப.39). "மோகினி' (1947) படத்தில் எம்.ஜி.ஆரும் வி.என். ஜானகியும் நடித்தனர். திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரம் வலுப்பெற்றிருந்த காலத்தில் வெளிவந்த இப்படத்தின் மாயக்குதிரை யைப் பகுத்தறிவுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்று கருதி மரத்தால் செய்து யந்திரங்களைப் புகுத்தி உருவாக்கிய குதிரையாகச் செய்து காமிரா நுணுக்கத்தால் பறக்கவிட்டு வித்தை காட்டியிருந்தார்கள். கதைவசனம் ஏ.எஸ்.சாமி.
அப்போது இவர் காங்கிரசுக்காரர். காங்கிரசுக்கும் புரட்சிக்கும் என்ன தொடர்பு? "மந்திரிகுமாரி'யில் திராவிட இயக்கத்தின் பிராமண எதிர்ப்புக்கு வளமான களமாக ஒரு இராஜகுரு பாத்திரத்தைக் கலைஞர் உருவாக்கினார். மார்பில் பூணூலுடன் ராஜகுரு சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றி தனது மைந்தனை அரியணை ஏற்றத் திட்டமிடுகிறார். எம்.ஜி.ஆர்., இளவரசியின் காதலனாக, தளபதியாக நடித்தார்.
"ராஜகுமாரி'யில் எம்.ஜி.ஆர். நடித்ததால், மு.கருணாநிதி திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராதலால் இவரும் அக்கழகத்தைச் சார்ந்தவரோ என்ற ஐயம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஓர் ரசிகர் 1949 டிசம்பர் மாத குண்டூசியில் “எம்.ஜி.ராமச்சந்திரன் திராவிடக் கழகத்தவரா?’’ என்றகேள்விக்கு, “அப்படி எங்காவது அவரிடம் சொல்லிவைக்கப் போகிறீர்கள், அந்தத் தீவிரக் காங்கிரஸ்வாதி உம்முடன் சண்டைக்கு வந்துவிடப் போகிறார்’’ என்பதுதான் பதில்.
“தி.மு.க.வின் கொள்கையில் எம்.ஜி.ஆருக்கு எந்தக்காலத்திலும் பூரண ஐக்கியம் இருந்ததாக எனக்குப் படவேயில்லை. அவர் உள்மனம் அவரை ஓர் ஆஸ்திகவாதியாகத்தான் நிலைக்கச் செய்திருந்தது. மதுரையில் தனக்கு வழங்கப்பட்ட வெள்ளிவாளை அவர் மூகாம்பிகை அம்மனுக்கு அளித்துவிட்டார் என்பார் முக்தா வி.சீனிவாசன்.(தமிழ்த் திரைப்பட வரலாறு, ப.111).
தசாவதார நடனத்தை வேண்டாம் என்று மறுத்ததுடன், "மதுரைவீரன்' படத்தில் இறுதிக் காட்சியில் வீரன் தெய்வமாகி விண்ணுலகம் செல்லும் காட்சியில் நடிக்கவும் தயங்கினார். காரணம் இது இயக்கக் கொள்கைக்கு முரணானது. என்றாலும் காட்சி எடுக்கும்போது, ""எனக்கு ஒன்றும் ஆட்சேபணையில்லை. ஆனால் அதில் நான் நடித்தால் கெட்டபெயர் வந்து விடும். நீங்கள் டூப் போட்டு எடுத்துவிடுங்கள்'' என்றார்.
தேவரின் "தனிப்பிறவி'யில் தயக்கத் தோடு முருகனாக நடித்ததோடு, மருதமலைத் திருப்பணிக்குத் தயங்காமல் உதவினார். ""தேவரண்ணன் வணங்கும் தெய்வத்தின் கோயிலிலே திருவிளக்கு ஏற்றும் வாய்ப்பினைப் பெற்றமைக்காகப் பெருமைப்படுகிறேன்'' என்று பேசினார். (சாண்டோ சின்னப்பாதேவர், ப.109).
உண்மையில் எம்.ஜி.ஆர். ஒரு முருக பக்தரே. ஜுபிடர் படங்களில் நடிக்கும் காலத்திலேயே தேவரோடு வெளிப்படையாகவே கோயிலுக்குப் போய்வந்தார். கட்சிக்காகவே புரட்சி வேஷம். கதர் ஆடை, துளசிமாலை, நெற்றியில் சந்தனம், குங்குமம், திருநீறு என்று பக்திப் பழமாகவே இருந்த எம்.ஜி.ஆர். ‘பராசக்தி’ புயலால் பாதிக்கப்பட்டு தி.மு.க.வில் கரை ஒதுங்கினார். கவிஞர் வாலியின் நெற்றியில் பூசப்பட்ட விபூதியை கே.ஆர்.ராமசாமி விரும்பவில்லை என்பதற்காக அதை அழிக்கச் சொன்ன எம்.ஜி.ஆர். தேவரிடம் திருநீறு பெற்றுக் கொண்டிருக்கிறார்.
தி.மு.க.வின் போராட்டங்கள் எதிலும் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க.வும் அவருக்கு விதிவிலக்கு அளித்தது. 1938-இல் நேருவுக்குக் கருப்புக் கொடி போராட்டம் நடந்த போது எம்.ஜி.ஆர். இதில் கலந்து கொள்ளவில்லை. எனினும் கைது செய்யப்பட்டார் தூங்கிக்கொண்டிருந்தவரை இன்ஸ்பெக்டர் எழுப்பி -
குளிக்கவிட்டு. இவர் வாழ்வில் நடந்த ஒரே கைது படலமும் இதுதான். காங்கிரசின் மிரட்டல் இது. வெளியே விட மன்னிப்பு கடிதமும் கேட்டது. இது பற்றி எம்.ஜி. சக்கரபாணிக்கும் எம்.ஜி.ஆர். மனைவி சதானந்தவதிக்கும் ஒரு விவாதம். அண்ணனோ மன்னிப்பு கடிதம் கொடுத்து வெளியே வரவேண்டும் என வாதித்தார். இவர் மனைவியோ, "மன்னிப்புக் கடிதம் கொடுத்து மானத்தை அழிச்சிடாதிங்க' என்றார். புரட்சி நடிகரை விரைவில் விடுதலை செய்தது அரசு.
1965 ஜனவரி 26இல் இந்தி இந்தியாவின் ஒரே ஆட்சி மொழி என அறிவிப்பு வந்தது. தி.மு.க. இதை எதிர்த்துப் போராடியது. தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
எஸ்.எஸ்.ஆர். தன் வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றினர், ஜனவரி 25இல். புட்சி நடிகரோ கார்வாரில் "ஆயிரத்தில் ஒருவன்' படப்பிடிப்பில் “அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’’ என்று பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார். கருமமே கண் அவருக்கு. இரண்டாம்கட்டத் தலைவர்கள் இதனை எதிர்த்தனர்.
பாரதிதாசன் புரட்சிக்கவிஞர். இவரோ புரட்சி நடிகர். கவிஞருக்குச் சிவாஜி கணேசன் மீதுதான் மதிப்பு, மரியாதை, ஈர்ப்பு ஈடுபாடு இருந்தது. ஆனால் இவர்தான் அவரது பாடல்களைத் தன் படங்களில் அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டார்.
"சந்திரோதயம்' (1966) படத்தில் புதியதோர் உலகம் செய்வோம்’’ என்ற பாடல்; "கலங்கரை விளக்கம்' (1967) படத்தில் “சங்கே முழங்கு’’ பாடல். "நான் ஏன் பிறந்தேன்' (1972) படத்தில் “சித்திரச் சோலைகளே’’ பாடல். அவ்வளவுதான்.
“தன் காரிஸ்மாவை வளர்ப்ப தற்குத் தன் படங்களைச் சரியானபடி திட்டமிட்டார். பாமர மக்கள், பெண்கள், தொழிலாளிகள், விவசாய மக்கள், கீழ் மத்திய தரத்தினர் ஆகியவர்களையே தனது டார்கெட் ஆடியன்ஸ் ஆக்கிக் கொண்டார். அவர்களுக்குப் பிடித்தமான வசனம், பாடல், காதல், சண்டை ஆகியவற்றைப் படங்களில் இணைத்து அவர்களை மகிழ்வித்தார். அவர்கள் இவரைத் தங்களது மானஸீக ‘வாத்தியாராக’ மேற்கொண்டு விட்டனர்’’ என்பார் முக்தா வி.சினிவாசன் (ப.114).
இவரைத் தமிழ்வாணன் அவர்கள் தான் நன்றாகப் புரிந்து கொண்டு ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை அளித்தார். இவரும் மக்கள் நாயகனா கவே வளர்ந்தார். படத்தலைப்புகள், கதைகள், கருத்துகள், பாடல்கள் அனைத்திலும் அவர் சரியாக கவனம் செலுத்தி வந்தார். தி.மு.க.வும் அவரைப் ‘பொன் முட்டையிடும் வாத்து என்ற கருத்தில் "எங்கள் தங்கம்' என்றே போற்றினர். இவரும் சினிமா சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். அத்துடன் மக்கள் மனத்தில் இதயக்கனியாக இடம் பெற்றார்; இதய வீணையாக மட்டுமல்லாமல் இதய நாதமாகவும் இருந்தார். புரட்சி நடிகராக போர்ப்பறை கொட்டுவது அவரது நோக்கமாகவும் இல்லை.
எம்.ஜி.ஆர். அரசியல் கட்சி தொடங்கியதுமே புரட்சிநடிகர் என்பதை விலக்கிவிட்டு புரட்சித் தலைவர் ஆக்கினர். இவரும் அரசியல் வாழ்விலும் ஆட்சியிலும் தன்னைப் புரட்சித் தலைவராக நிரூபிக்க விரும்பவில்லை.
அதைவிடத் தன்னை மக்களின் தலைவராக நிலைநாட்டவே விரும்பினார். அதில் வெற்றியும் பெற்றார்.
இரண்டிலும் தன்னுடைய பலமும் பக்க பலமும் என்ன என்பதை உணர்ந்திருந்ததுதான் வெற்றிக்குக் காரணம். சினிமாவில் அவர் புகழ்பெற்றிருந்த 20 ஆண்டுகளில் திரைப்படத்தின் போக்கு பலவிதங்களில் மாறினாலும், தனது ரசிகர்கள் எதை விரும்புவார்கள் என்பதைத் துல்லியமாக உணர்ந்து அதற்கேற்ற படங்களைக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அதுபோல, அரசியலில் தன்னை ஆதரிப்பவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கான தேவைகளையும் திட்டங்களையும் நிறைவேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டவர். சினிமா, அரசியல் இரண்டிலும் தனது போட்டியாளர்களின் போக்குகளை உற்று நோக்கி தன் பயணத்தில் கவனம் செலுத்தியதும் எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம் (எம்.ஜி.ஆர் அகம் - புறம்) என்று கணித்துள் ளனர்.
பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தம், உலகத் தமிழ் மாநாடு, தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதி, பாரதிதாசன் பெயர்களில் பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்களில் தமிழில் கையெழுத்து, இலங்கைத் தமிழர் நலம், காவேரி நடுவர் மன்ற கோரிக்கை, தெலுங்கு கங்கைத் திட்டம் என்று தமிழர் வளர்ச்சிக்கு ஆழமாகக் கால்கோள் செய்தார். சத்துணவுத் திட்டம், சைக்கிளில் டபுள்ஸ் செல்ல அனுமதித்தது, நியாய விலைக் கடையில் குறைந்த விலையில் அரிசி, பாமாயில், சர்க்கரை தந்தது, கிராம நிர்வாக அலுவலர் எனும் பரம்பரை பதவிகளை ஒழித்தது, இலவச வேட்டி சேலை, புயல் வெள்ளக் காலங்களில் உடனடி நிவாரணம் என இவர் மக்களுக்காக நடைமுறைப்படுத்திய திட்டங்கள் ஏராளம்.
மக்கள் இவரது ஆட்சியில் நடந்த அடக்குமுறைகளைப் பற்றியோ, மதுக்கடைகளைப் (டாஸ்மாக்) பற்றியோ, ஊழல்களைப் பற்றியோ, சுயநிதிக் கல்வித் தந்தைகளாகக் கட்சிக்காரர்களைப் படைத்தது பற்றியோ, பெரியாரின் சமூக நீதியைக் குலைத்தது பற்றியோ, நக்சலைட்டுகளை மனித உரிமைக்கு எதிராக நசுக்கியது பற்றியோ, கச்சத்தீவை சொன்னபடி மீட்காதது பற்றியோ, உள்ளாட்சி அமைப்பை உடைத்தது பற்றியோ, அடாவடி வரிவசூல் பற்றியோ, மேலவை கலைப்பு போன்ற எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இவை எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் நடந்ததாக நம்பினர். இவர் பேரைச் சொல்லி யார் யாரோ சம்பாதித்துக் கொண்டார்கள் என்றே எண்ணிக் கொண்டனர். எம்.ஜி.ஆர். சுடப்பட்டு மீண்டதும் அமெரிக்க சிகிச்சைக்குப்பின் மீண்டதும் இவரைத் தனிப்பிறவியாகவும் தெய்வப் பிறவியாகவும் கருத வைத்தது மக்களின் இதயக்கனி, இதய தெய்வம் ஆனார்.
எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகச் சிலைதிறப்பு விழாவில் வெற்றிடத்தை நிரப்ப வந்துள்ளதாகச் சொல்லும் சிவாஜிராவ் என்ற ரஜினிகாந்தும் “எம்.ஜி.ஆர். போல "நல்லாட்சியை வழங்குவேன்' என்று பிரகடனம் செய்கிறார். அவரே குறிப்பிடுவது போன்று ""மின்வசதி இல்லாத வீடுகளுக்கு மின்சாரம் கொடுத்தார். மின்விளக்கு இலவசமாகக் கொடுத்தார். கிராமங்களுக்குச் சாலை வசதி, பேருந்து வசதி செய்து தந்தார். ஒன்றே முக்கால் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கினார். பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. ரேஷன் கடை ஊழியர்களுக்குச் சம்பளத்தை உயர்த்தினார். அதனால் தான் 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். சத்தியமாக யாரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. அவர் ஒரு யுக புருஷர். பொன்மனச் செம்மல். மக்கள் திலகம். நூறு அல்ல, ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவரைப் போல யாரும் வரமுடியாது.
அவரே மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு. அவர் தந்த நல்லாட்சி ஏழை மக்களுக்கான ஆட்சி, சாமானிய மக்களுக்கான ஆட்சி, மத்தியஸ்த குடும்பத்தாருக்கான ஆட்சி. அவ் வாட்சியை என்னாலும் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு'' என்பார் ரஜினிகாந்த்.
சமீபத்திய வி.ஐ.டி. பல்கலைக்கழக "மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்' நூல் வெளியீட்டு விழா வேந்தர் ஜி.விசுவநாதன் தனது நூலைப் பற்றி பேசும்போது எம்.ஜி.ஆரைப் பொன்மனச் செம்மல்’ என்று போற்றுகிறார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ‘வாழ வைத்த தெய்வம்’ என்று பூஜிக்கிறார்.
அனைத்துத் தரப்பு மக்களாலும் பாராட்டப்படும் ஆளுமைதான் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். திரை உலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி போராட்டம் செய்யவோ புரட்சி செய்யவோ விரும்பிய புரட்சித் தலைவராக - நடிகராக தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அதற்கான தேவையும் அவருக்கு இல்லை.
அவரது நோக்கம் எல்லாம், மக்களைக் கவரும் மக்கள் திலகமாகவும் மக்களுக்கு நன்மை செய்யும் மக்கள் தலைவராகவும் இருக்க வேண்டும் என்பதுதான். பெரியார் வழியைவிட அண்ணாவின் வழி அன்பு வழி. அத்துடன் நன்றி மறவாமை, நண்பர்க்கு உதவுதல், வள்ளல் தன்மை, வறுமையை வென்ற வல்லமை ஆகியவை அவரை மக்களாலும் மற்றவர்களாலும் மதிக்க வைத்தது. மக்கள் அவரை மக்கள் தலைவராகவும் இதய தெய்வமாகவுமே ஏற்றுக் கொண்டனர். ப்