கருணையிலா ஆட்சியாôளர்கள்!

/idhalgal/eniya-utayam/merciful-rulers

"துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்

அளியின்மை வாழும் உயிர்க்கு'

என்பது வள்ளுவனின் தமிழ்மறை. இதன் பொருள் ‘மழை பெய்யாமல் போனால் துன்பமடையும் உலகத்தைப்போல், கருணையற்றற ஆட்சியரால் மக்கள் துன்பப்படுவார்கள் என்பதாகும். இப்போது மக்களுக்கு மீண்டும் துன்பகாலம் ஆரம்பித்துவிட்டது.

மீண்டும் அதே மோடி. அதே பிரச்சினைகள்.

அதே இருட்டில் இந்தியா.

water

வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்து நடத்தப்பட்ட சூதாட்டத்தில், நம் தேசம் மீண்டும் அதல பாதாளத்தில் உருண்டுகிடக்கிறது. மின்னணு எந்திரங்களின்மீதான சந்தேகங்களை எழுப்பிய எதிர்க்கட்சிகளால் எதையும் செய்யமுடியவில்லை. அதனால்தான் மோடியிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். உண்மையில் தேர்தல் ஆணையமே மோடியிடமும் இந்துத்துவா சக்திகளிடமும் பயந்து நடுங்குகிறது.

மோடியின் தேர்தல் பிரச்சார விதிமீறல்களைப் பற்றி இந்தியத் தேர்தல் அதிகாரிகளில் ஒருவரான அசோக் லாவசாவே குறிப்பெழுதினார். அந்தக் குறிப்பை தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோரா ஏற்காததால், "நான் இனிமேல் தேர்தல் ஆணையக் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டேன்' என்று அசோக் லாவசா அறிவித்தார். அவர் அப்படி என்ன குறிப்பெழுதினார்? என்று புனேயைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் ஆணையத்திடம் அண்மையில் கேள்வி எழுப்பினார்.

அதற்குத் தேர்தல் ஆணையமோ, அதை வெளியிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அதனால் அதுபற்றிச் சொல்ல இயலாது’ என்று பகிரங்கமாகவே தன் அச்சத்தைத் தெரிவித்திருக்கிறது. இப்படிப்பட்ட தேர்தல் ஆணையத்தை நம்பி இந்தியா தன் தலையெழுத்தைத் தீர்மானிப்பது என்பது எவ்வளவு பெரிய வேடிக்கை? கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் பெற்ற காயங்களும் வடுக்களும் இன்னும் ஆறவில்லை. நிலைமை கொஞ்சமும் மாறவில்லை. அதற் குள் மோடியின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பித்து விட்டது.

கடந்த ஆட்சிக் காலத் தில் பா.ஜ.க. கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பொது மக்

"துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்

அளியின்மை வாழும் உயிர்க்கு'

என்பது வள்ளுவனின் தமிழ்மறை. இதன் பொருள் ‘மழை பெய்யாமல் போனால் துன்பமடையும் உலகத்தைப்போல், கருணையற்றற ஆட்சியரால் மக்கள் துன்பப்படுவார்கள் என்பதாகும். இப்போது மக்களுக்கு மீண்டும் துன்பகாலம் ஆரம்பித்துவிட்டது.

மீண்டும் அதே மோடி. அதே பிரச்சினைகள்.

அதே இருட்டில் இந்தியா.

water

வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்து நடத்தப்பட்ட சூதாட்டத்தில், நம் தேசம் மீண்டும் அதல பாதாளத்தில் உருண்டுகிடக்கிறது. மின்னணு எந்திரங்களின்மீதான சந்தேகங்களை எழுப்பிய எதிர்க்கட்சிகளால் எதையும் செய்யமுடியவில்லை. அதனால்தான் மோடியிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். உண்மையில் தேர்தல் ஆணையமே மோடியிடமும் இந்துத்துவா சக்திகளிடமும் பயந்து நடுங்குகிறது.

மோடியின் தேர்தல் பிரச்சார விதிமீறல்களைப் பற்றி இந்தியத் தேர்தல் அதிகாரிகளில் ஒருவரான அசோக் லாவசாவே குறிப்பெழுதினார். அந்தக் குறிப்பை தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோரா ஏற்காததால், "நான் இனிமேல் தேர்தல் ஆணையக் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டேன்' என்று அசோக் லாவசா அறிவித்தார். அவர் அப்படி என்ன குறிப்பெழுதினார்? என்று புனேயைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் ஆணையத்திடம் அண்மையில் கேள்வி எழுப்பினார்.

அதற்குத் தேர்தல் ஆணையமோ, அதை வெளியிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அதனால் அதுபற்றிச் சொல்ல இயலாது’ என்று பகிரங்கமாகவே தன் அச்சத்தைத் தெரிவித்திருக்கிறது. இப்படிப்பட்ட தேர்தல் ஆணையத்தை நம்பி இந்தியா தன் தலையெழுத்தைத் தீர்மானிப்பது என்பது எவ்வளவு பெரிய வேடிக்கை? கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் பெற்ற காயங்களும் வடுக்களும் இன்னும் ஆறவில்லை. நிலைமை கொஞ்சமும் மாறவில்லை. அதற் குள் மோடியின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பித்து விட்டது.

கடந்த ஆட்சிக் காலத் தில் பா.ஜ.க. கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பொது மக்களின் பொருளாதாரப் புழக்கத்தை சீரழித்தது. அதிலிருந்து இன்னும் யாராலும் மீளமுடியவில்லை. வாட் தொடங்கி ஜி.எஸ்.டி வரையிலான விதவித வரிகள், மக்களைச் சாறு பிழிந்து சக்கையாய்த் துப்பிக்கொண்டிருக்கின்றன.

தேசமே இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கி மூச்சுத் திணறுகிறது. வளர்ச்சிக்கான அறிகுறி எதிலும் தெரியவில்லை. இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு சரிந்தும், இறக்குமதி மதிப்பு கூடியும் இருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

அதேசமயம் மல்லையா போன்ற பெரும் முதலாளிகளின் வாராக் கடன்களின் அளவு பல மடங்கு கூடியுள்ளது. மக்களை வரிகளால் கசக்கிப் பிழியும் பா.ஜ.க. ஆட்சி, கார்ப்பரேட் கம்பனிகளுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் ஏராளமான வரிச் சலுகைகளை அள்ளிக்கொடுக்கிறது.

இந்த லட்சணத்தில், இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் உருக்குலைந்து, விவசாயிகளின் வாழ்க் கையை வைக்கோல்போல் காயவைத்து விட்டது. ஆண்டுக்கு இரண்டு கோடி புதிய வேலை வாய்ப்பு களை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியோடுதான் 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தார். வந்தவர் வேலை வாய்ப்பை உருவாக்காமல், வேலை கேட்ட இளைஞர்களை பகோடா விற்கச் சொன்னார். நிலபுலன்களை விற்றும் அம்மாக்களின் தாலியை அடகுவைத்தும் படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள், வேலை தேடுவதே வேலையென்று நாடெங்கும் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தமுறையாவது மோடி அரசின் அணுகுமுறை மாறியிருக்கிறதா? மோடி மக்கள் நல ஆட்சியைத் தர முயல்கிறாரா என்று பார்த்தால்....உதட்டைப் பிதுக் கத்தான் வேண்டியிருக்கிறது. இந்தியாவை முற்றுகை யிடும் பிரச்சினைகளைக் கண்டு அலட்டிக்கொள்ளாத மோடி, நாடு முழுக்க யோகாவைப் பரப்புவதே தனது சாதனை என்று தமுக்கடித்தபடி, யோகா நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். நேருவும் இதுபோல் யோகா செய்திருக்கிறார். நாடு முழுக்க விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் மோடி விளம்பரத்திற்காக யோகா செய்வது போல் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். படத்தை பார்த்தால் ஏதோ மாடல் போஸ் கொடுப்பது போல் தெரியும்.

யோகா, தேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்துமா? விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்குமா? மக்களின் கவலையைப் போக்குமா? பசியைத் தீர்க்குமா? வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்குமா? குறைந்தபட்சம் மோடியின் சீடர்களின் மனதை யாவது பக்குவப்படுத்துமா? என்று பார்த்தால் அது எதையும் செய்யவில்லை.

மோடியும் சங்பரிவாரங்களும் பரப்பிக் கொண்டிருக்கும் யோகா எவரையும் பக்குவப் படுத்தவில்லை. யோகாவிற்கு மனதைப் பக்குவப் படுத்தும் சக்தி இருக்குமானால், இந்துத்துவாக் கும்பல் மதவெறித் தாண்டவத்தை நடத்திக் கொண்டிருக்காது. கிறிஸ்தவர்கள்மீதும் முஸ்லிம்கள்மீதும் கொலைவெறித் தாக்குதலை அது நடத்திக்கொண்டிருக்காது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டார் என்ற உடனேயே, இந்துத்துவா வெறியர்கள் தங்கள் நரவேட்டையை ஆவேசமாகத் தொடங்கி விட்டார்கள். முஸ்லிம் மக்களைப் பிடித்துக் கம்பங்களில் கட்டிவைத்து, "ஜெய் ஹனுமான்' என்று சொல்லச் சொல்லி ரத்தம் சொட்டத் தாக்குகிறார்கள். அப்படி தாக்கப்பட்ட தப்ரீஸ் அன்சாரி பேருக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகிறார். முஸ்லிம் பயணி என்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து, அவர்களை கீழே வீசுகிறார்கள். இப்படிப்பட்ட சகிக்கமுடியாத கொடுமைகள் வடக்கே நடந்துகொண்டே இருக்கிறது. யோகா, அந்த வெறியர்களை பக்குவப்படுத்தவில்லை.

dd

இதுமட்டுமா? மோடியோ... அமித்ஷாவோ, இனவெறித் தாக்குதலை நிறுத்துங்கள். இல்லையென்றால் கடுமையாகத் தண்டிப்போம் என்று பேருக்குக்கூடச் சொல்லவில்லை. ஆக மோடி, அமித்ஷாக்களையே இந்த யோகா பண்படுத்தவில்லை. அப்படி எதையுமே ஏற்படுத்தாத யோகா, தியான வெங்காயமெல்லாம் நமக்கு எதற்கு?

2002-ல் நடந்த குஜராத் கலவரத்தில் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகளுக்கு மோடி அரசு எந்தவகையில் மதவெறியர்களுக்கு உதவியது என்பதை அம்பலப்படுத்தியும், மோடியும் அமித்ஷாவும் குஜராத்தை மதவெறி மண்ணாக மாற்றியதையும் வெளிப்படையாக சொன்னவர் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட். 1990 -ல் அதாவது முப்பது வருடங்களுக்குமுன் நடந்த லாக்கப் டெத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

வடக்கேதான் இப்படியென்றால் தமிழகத்திலாவது நிலைமை சரியாக இருக்கிறதா என்றால்... இங்கே கோமாளிகளின் தர்பார் நடந்து கொண்டிருக்கிறது.

எடப்பாடி அரசின் கடந்த 2018-2019-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏறத்தாழ 215 திட்டங்களில் முழுசாக பத்து திட்டங்கள்கூட நிறைவேற்றப் படவில்லை. பெரும்பாலான திட்டங்களுக்கு அரசாணையே பிறப்பிக்கப்படவில்லை என்பது இப்போதுதான் முதல்வராக இருக்கும் எடப்பாடிக்கே தெரியவந்ததாம். மதிப்புவாய்ந்த சட்டப்பேரவையில் அறிவிக்கப்படும் திட்டங்களே வெறும் டுபாக்கூர் அறிவுப்புத் திட்டங்கள்தான் என்றால், இங்கே நடப்பது ஆட்சிதானா? என்ற சந்தேகம் எழுகிறது.

இன்று தமிழகத்தைத் தண்ணீர்ப் பஞ்சம் வாட்டிக் கொண்டிருக்கிறது. சாலைகளின் இரு பக்கமும் காலிக் குடங்களுடன் மக்கள் குடிநீருக்கு அலை மோதுகிறார் கள். தண்ணீருக்காக பல இடங்களில் மக்கள் அடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் இங்கே இருக்கும் மந்திரி களோ தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லையென்று வெட்கமில்லாமல் பேட்டிகொடுக்கி றார்கள்.

இன்று இந்த அளவிற்குத் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படக் காரணம் என்ன? நீர் மேலாண்மை என்ற ஒன்றையே எடப்பாடி அரசு மறந்துவிட்டதால்தான் இந்த நிலை. தமிழகத்திலுள்ள நீர்நிலைகளை பாதுகாக்கத் தவறினால் ஆறு, ஏரி, குளங்களில் பார்த்த தண்ணீரை "கேப்சூல்' வடிவில்தான் பார்க்க நேரிடும் என தமிழக அரசை உயர் நீதிமன்ற நீதிபதிகளே அண்மையில் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

நீர் ஆதாரங்களை பராமரிக்க வேண்டியவர்கள், தங்களின் மணல் கொள்ளைக்காக ஆறுகளை முழுதாகச் சுரண்டி, நிலத்தடி நீரை மாயமாக்கிவிட்டார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நீரை உறியும் அனுமதியை விற்று பூமிக்குக் கீழேயே பாலைவனத்தை உருவாக்கிவருகிறார்கள். மழை நீர் சேமிப்பு பற்றி இவர்கள் கவலைப்படவே இல்லை. 2015 டிசம்பரில் சென்னையை மூழ்கடித்த மழை நீர், வீணாகக் கடலில் கலந்தது. அதன்மூலம் நீர் மேலாண்மையைக் கவனியுங்கள் என்று இயற்கை எச்சரித்தது. இதையும் கண்டுகொள்ளவில்லை.

இதையெல்லாம் சுட்டிக்காட்டி வழக்கறிஞர் மேனன் என்பவர், நவீன நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்று உயர் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம். வேணுகோபால், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு... கிடைக்கும்போது தண்ணீரை சேமிக்காமல் வீணாக்கினால், தென் ஆப்பிரிக்க கேப்டவுன் நகருக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்துக்கும் ஏற்படும். தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை களைப் பாதுகாக்கத் தவறினால் ஆறு, ஏரி, குளங்களில் பார்த்த தண்ணீரை "கேப்சூல்' வடிவில்தான் பார்க்க நேரிடும் என்று தமிழக அரசைக் கடுமையாக எச்சரித்ததோடு...

மக்களின் வரிப்பணத்தை இலவசங்களுக் குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, கூடுதலாக அணைகள் கட்டுவது குறித்து இனியாவது அரசு சிந்திக்க வேண்டுமென்று தலையில் குட்டு வைத்து அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். ரேசனில் தண்ணீர் வழங்கும் நகரமான கேப்டவுனை சுட்டிக்காட்டும் அளவுக்குத் தமிழகம் மாறிக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய பேரவலம்.

இனியாவது ஆட்சியாளர்கள், நீர் மேலாண்மையில் கவனம் செலுத்துவார் களா? இல்லை, வழக்கம் போல் சுருட்டு வதிலும் பங்குபோட்டுக் கொள்வதிலும், சொந்த பஞ்சாயத்திலும் நேரத்தை செல விட்டு விட்டு, மக்களைத் தாகத்தில் தொடர்ந்து சாகடிக்கப் போகிறார்களா?

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் என்பது வள்ளுவன் வாக்கு.

தீமை வரும் முன்பே எச்சரிக்கையோடு காத்துக்கொள்ளாவிட்டால், நெருப்பின் அருகே இருக்கும் வைக்கோல் போர்போல வாழ்க்கை கருகிவிடும் என்பதுதான் இதன் மூலம் இந்த அரசுக்கு வள்ளுவன் அடிக்கும் எச்சரிக்கை மணி.

ஆதங்கத்தோடு,

நக்கீரன்கோபால்

uday010719
இதையும் படியுங்கள்
Subscribe