இரக்கமுள்ள சர்வாதிகாரி! வினிதா தேஷ்முக் தமிழில் : இரா.இளையசெல்வன்

/idhalgal/eniya-utayam/merciful-dictator

நாம் நம் இலக்கை அடைவதற்கு எதிராகவே பல முட்டுக்கட்டைகளை வைத்திருக்கிறது இந்த உலகம்.

அவற்றைக் கண்டு திகைக்காமல், அவற்றை உடைத்து வெளியேறுபவர் களே சாதிக்கிறார்கள். இப்படி சாதித்த சாதனையாளர்களுக்குச் சிறந்த உதாரண மாகத் திகழ்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கர்னல் ஏ.பாலசுப்ரமணியன்.

faf

மன்னார்குடி தாலுகாவிலுள்ள கண்டிதம்பேட்டை எனும் சிற்றூரில் ஒரு ஏழை விவசாயிக்கு மகனாகப் பிறந்தவர் பாலசுப்ரமணியன். கிராமத்திலுள்ள நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த பாலசுப்ரமணியனைத் தொடர்ந்து படிக்க அனுமதிக்கவில்லை அவரது தந்தை. இதனால் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். சேதுபாவாசத்திரத் தில் உள்ள ஒரு விடுதி அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறது.

அங்கிருந்தபடியே தனது பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார் பாலசுப்ரமணியன். ஆனால், 10 ஆம் வகுப்பில் அவரால் தேர்ச்சியடைய முடியவில்லை. அந்த தோல்வி அவரை காயப்படுத்தவில்லை. தனது வாழ்க்கைப் பயணத்தில் பல இன்னல்களை எதிர்கொண்டு அதனை முறியடித்து கல்வித்துறையில் இமயத்தின் உயரத்தைத் தொட்டிருக்கிறார் பாலசுப்ரமணியன். ராணுவத்தில் சாதாரண சிப்பாயா கச் சேர்ந்து, தன் தனித்துவமான ஆற்றலால் குடியரசுத் தலைவரின் கரங்களால் கர்னல் எனும் உயர்வை அதிரடியாக எட்டிப்பிடித்திருக்கிறார் பாலசுப்பிரமணியன். அவருக்கு முன்னும் பின்னும் இந்த சாதனையை எவரும் தொடவில்லை.

இந்திய ராணுவப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கான பிரத்தியேக மாக தொழில் நிர்வாகம் சார்ந்த ஒரு கல்வி நிறுவனத் தைத் தொடங்கிய முதல் இந்திய கல்வியாளர் இவர்தான். இதனால், கார்ப்பரேட் வாழ்க்கைக்கு வழிவகுக்கும் எம்.பி.ஏ. படிப்புகளுக்கான ஒரு புதிய பாதை, ஆயுதப் படையைச் சேர்ந்த வீரர்களின் குழந்தைகளுக்குக் கிடைத்தது.

கல்விச் சேவையில் பல விருதுகளைப் பெற்றவர் கர்னல். அதில் மலேசிய துணை பிரதமரிடமிருந்து பெற்ற வாழ்நாள் சாதனையாளர் விருது குறிப்பிடத் தகுந்ததாகும். இவரது கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளைப் படித்துச் சிறப்புத் தகுதி பெற்ற 25000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், உலகின் தலைசிறந்த பன்னாட்டு நிறுவனங்களில் தற்போது பணிபுரிந்து வருகிறார்கள்.

ddd

தனது குழந்தைப் பருவ நாட்களைப் பற்றி நம்மிடம் உற்சாகமாக விவரிக்கும் கர்னல்""மலேசியா- சிங்கப்பூர் ஆகிய நாடுகளி லுள்ள தோட்டங்களில் வேலை செய்ய ஆங்கிலே யேர்களால் அழைத்துச் செல்லப்பட்டார் என் தந்தை.

அதன்பிறகு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார். சிங்கப்பூருக்கு சுதந்திரம் கிடைத்ததும் சிங்கப்பூர் நகராட்சியில் அவர் சாதாரண வேலையில் சேர்ந்தார்.

கிராமத்தில் எட்டாம் வகுப்பை முடித்தபோது தான் அவரை

கிராமத்தில் எட்டாம் வகுப்பை முடித்தபோது தான் அவரையே நான் முதன்முதலாகப் பார்த்தேன். அப்போது அவர் என்னிடம், "நீ, படித்தது போதும்;

lll

நிலத்தையும் கால்நடைகளையும் பார்த்துக் கொள்' என்று சொன்னார். மேற்கொண்டு அவர் படிக்க அனுமதிக்கவில்லை. எனினும் எனக்குப் படிப்பின்மீது ஆசையிருந்ததால் வீட்டை விட்டு வெளியேறினேன்.

விடுதியில் சேர்ந்து படித்தேன். பத்தாம் வகுப்பில் தோற்றுப்போனேன் என்கிறார்'' இயல்பாக.

பத்தாம் வகுப்பில் தோற்றுப் போனதாலோ என்னவோ தனக்கு கல்வியில் ஆர்வம் இல்லையோ? என நினைத்த அவர், சினிமா நடிகர் ஆகவேண்டும் என்று விரும்பி சென்னைக்குக் கிளம்பினார்.

kkk

சென்னையில் பல நாட்கள் திரைப்பட ஸ்டுடியோக்களின் வாசல்களிலும், நடிகர்களின் வீட்டுப் பக்கமும் சுற்றித் திரிந்தார். தங்குவதற்கும் உறங்குவதற் கும் கூட இடம் கிடையாது. ரயில்வே நிலையங் களில் உள்ள நடைமேடைகள்தான் அவருக்குப் படுக்கை யாக மாறிப்போனது. சில நாட்கள் கோவில்களிலும் படுத்துக்கிடந்தார். கைவசமிருந்த பணமெல்லாம் தீர்ந்து போயிருந்தது. இவரைப் போலவே வீட்டை விட்டு வெளியேறிய மகாதேவன் என்பவர், ஒருநாள் பாலசுப்ரமணியனைப் பார்த்ததும் அவர் மீது இரக்கப்பட்டு அவருக்கு உணவு வாங்கித்தந்தார்.

இதன் மூலம் இருவருக்கும் நட்பு உருவாக, ஒரு கட்டத்தில் மெஜஸ்டிக் ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்று வேலை வாங்கித்தந்தார் மகாதேவன். நடிகர், நடிகைகள் பயன்படுத்தும் அறைகளை சுத்தம் செய்வதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை. அந்த அறைக்கு தமிழகத்தின் அப்போதைய ஆகப்பெரிய உச்சபட்ச நடிகராக இருந்த மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். போன்றவர்கள் வருவதுண்டு.

ஸ்டுடியோவில் வேலைபார்த்த நாட்களை நினைவுகூரும் பாலசுப்ரமணியன், ""பெரும்பாலும் தமிழர்கள் கருப்பாகவே இருந்தனர். நான் சிவப்பாகவும் அழகாகவும் இருந்தேன். ஒரு நாள் என்னைப் பார்த்த ஸ்டுடியோ சூப்பர்வைஸர், "நீ அழகாக இருக்கிறாய். உன்னைப் போன்ற ஒரு அழகான பையனைத்தான் என் ஒப்பனை அறையை சுத்தம் செய்வதற்காகத் தேடிக்கொண்டிருக்கிறேன்' என்றார்.

நானும் அவரிடம் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது எனக்கு சம்பளம் வாரத்திற்கு 10 ரூபாய்'' என்கிறார் பெருமிதமாக.

சில நாட்கள் சென்றன. வாழ்வில் எதிர்பாராத திருப்பங் களும் சம்பவங்களும் நடப்பது இயல்பு. திரைப்பட ஸ்டுடியோக் களில் பார்த்துக் கொண்டிருந்த வேலை பாலசுப்ரமணியனை சலிப்படைய வைத்தது. கிராமத்திற்கே திரும்பிச் செல்லலாமா என அவரது மனசு யோசித்தது. மனதை வெல்ல யாரால் முடியும்? கிராமத்திற்கு மீண்டும் சென்றார் பாலசுப்ரமணியன்.

அப்போது, இந்திய ராணுவத்தில் பணிபுரிய ஆட்களை தேர்வு செய்வதற்காக ராணுவத்திலிருந்து சிலர் அந்தப் பகுதிக்கு வந்திருந்தனர். அதற்கேற்ப ஆட்கள் தேர்வு நடந்துகொண்டிருந்தது. பிறகு? ""நான் ஆவலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அங்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. அப்போது படையிலிருந்த ஒருவர் என்னை அணுகி, ராணுவத்திற்கு தேவையான உடல்கட்டு உன்னிடம் இருக்கிறது என்று சொல்லி, ராணுவத்தில் சேர என்னை அழைத்தார்'' என்கிறார் கர்னல்.

ggg

ராணுவத்தில் சேர்ந்தால் நல்ல சம்பளம், உணவு, இருப்பிடம், நாட்டைச் சுற்றிப்பார்க்கும் சலுகை என ஏராளமான வசதிகள் உண்டு. எதுவும் இழப்பதற்கில்லை. ஆனால், கிடைப்பதோ ஏராளம் என்கிற எண்ணத்தோடு ராணுவத்தில் சேர்ந்தார் பாலசுப்ரமணியன். 28 வருடங்கள், 6 மாதங்கள் ராணுவத்தில் சேவை செய்தார். தனது ராணுவ சேவையில் இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தையும் சந்தித்தார் பாலசுப்ரமணியன்.

இது குறித்து பேசும் கர்னல் பாலசுப்ர மணியன், ""ராணுவத்தில் இருந்தபோது பல்வேறு நாடுகளையும், அந்நாடுகளின் கலாச்சாரங்களையும் நான் சந்தித்தேன். பல இயற்கைப் பேரழிவுகளையும் எதிர் கொண்டிருக்கிறேன். முழு ஈடுபாட்டுடன் பணிபுரிந்திருக்கிறேன். என் மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் நிறையப் பெற்றிருக்கி றேன்.

ஒரு முறை, என்னுடைய பணியை புகழ்ந்த மேலதிகாரி ஒருவரின் மனைவியிடம், "உங்கள் கணவர் அதிர்ஷ்டசாலி. அதனால் தான் அவர் அதிகாரியாக இருக்கிறார். நானோ அதிர்ஷ்டமில்லாதவன். அதனால்தான் ராணுவ வீரராகவே இருக்கிறேன்' என்றேன்.

அதற்கு அவர், "உங்கள் இருவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது. என் கணவர் 10-ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். நீங்கள் முடிக்கவில்லை. இதுதான் வித்தியாசம். இதில் அதிர்ஷ்டம் எதுவும் விளையாடவில்லை. நீங்கள் இப்போதும் படிப்பைத் தொடர முடியும். அதற்கான தகுதிகளும் வாய்ப்புகளும் நிறையவே இருக்கிறது' என்று சொல்ல, அந்த வாக்கியம் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. படிப்பைத் தொடர முடிவெடுத்து, எனக் கான விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி 10-ஆம் வகுப்பை படித்து முடித்தேன்'' என்கிறார் புன்னகையோடு.

இதனையடுத்து 3 முதுகலை பட்டப் படிப்புகளிலும் தேர்ச்சி பெற்றார். அந்த பட்டப்படிப்புகளே கல்வித் துறையின் வாசல் கதவுகளை அவருக்கு திறக்கச் செய்தன.

இதையே தனது லட்சியமாகக் கொண்டு அந்த கனவை நிறைவேற்ற எண்ணி முன்னேறினார்.

தனது கனவை குறித்து பேசியவர், ""பூனேவில் 1973-ல் தென்னக கமாண்டராக பதவியில் இருந்தபோது, எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஐ.எம்.டி.ஆர்.-ன் விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். எம்.பி.ஏ. படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு பற்றிய விளம்பரம் அது'' - என்கிற கர்னல் பாலா, மார்க்கெட்டிங் துறையைத் தேர்வு செய்து நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றார். இதன் மூலம், சிம்பியாசிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து தொழில் நிர்வாகத்தில் எம்.பி.ஏ. படித்து முடித்தார்.

இந்திய ராணுவத்தில் சுபேதார் பதவியிலிருந்து முன்கூட்டியே ஓய்வுபெறுவதை கல்விச்சேவையில் நுழையும் தனது கனவிற்கான பாய்ச்சலாக கருதினார் பாலசுப்ரமணியன். பேராசிரியர் எம்.எஸ்.பிள்ளையின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவை எடுத்த அவருக்கு பேராசிரியர் பணியை வழங்கினார் டாக்டர் மஜும்தார்.

பேராசிரியராக கர்னல் பணிபுரிந்த காலத்தில், சிம்பியோசிஸ் இண்டர்நேசனல் ஹாஸ்டலில் நடக்கும் ஒழுங்கீனங்களைக் கண்டு ஹாஸ்டலின் ரெக்டர் பதவியை ஏற்க தானாக முன் வந்தார் பாலசுப்ரமணியன். ஹாஸ்டலின் பாதுகாப்புக் கும் ஒழுக்கத்துக்கும் தானே பொறுப்பேற்ப தாகவும் கூறினார். கல்விப் பணியில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டவராக இருந்ததால் இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. கர்னலின் இந்த அர்ப்பணிப்பு உணர்வு சிம்பியோசிஸ் நிறுவனரான டாக்டர் மஜும்தாரை ஈர்த்தது.

ஒரு கட்டத்தில், ராணுவ பணியாளர்களுக்கான தனி எம்.பி.ஏ. கல்லூரி இருந்தால் மிக நன்றாக இருக்கும் என மஜும்தாரிடம் தெரிவித் தார் பாலா. அந்த யோசனை மஜும்தாருக்குப் பிடித்திருந்தது. இப்படித்தான் சிம்ஸ் நிறுவனம் திறக்கப்பட்டது. அதேசமயம், அந்நிறுவனத்தின் இயக்குநராக பாலா நியமிக்கப்பட்டது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அதற்கான பதில் மஜும்தார் எதிர் பார்த்ததையும்விடவும் கர்னலிடம் நிர்வாகத் திறன் அதிகமாகவே இருந்தது. சிறந்த மற்றும் தேவையான பாடத்திட்டங்களை உருவாக்கினார் பாலசுப்ரமணியன். ராணுவப் பணியாளர்களுக்கு நிர்வாகத் திறன்களை கற்றுத்தரும் குறுகியகால படிப்புகளையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

இதைப் பெருமையுடன் நினைவுகூரும் அவர், தங்கள் ராணுவப் படையிலிருந்த ஒருவர், ராணுவப் பணியாளர்களுக்கென தனியாகக் கல்லூரி அமைத்திருக்கிறார் என்பதை அறிந்து, என்னைப் பாராட்டி, கர்னல் எனும் பட்டத்தையும் வழங்கினர் என்கிறார். இவர்தான் சிப்பாய் என்ற அந்தஸ்தில் இருந்து கர்னல் என்ற பட்டத்தை நேரடியாகப் பெற்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை இதுநாள் வரை யாரும் முறியடிக்கவில்லை.

இதனையடுத்து, கல்வி நிறுவனம் ஒன்றைச் சொந்த மாக அவரே உருவாக்குகிறார்.

இது குறித்து பேசும் கர்னல், ""சிம்பிƒயாஸிஸ் நிறுவனத் தில் 7, 8 ஆண்டுகாலம் பணி யாற்றினேன். அதன்பிறகு என் கனவுகளை நிறைவேற்ற சொந்த வழியை உருவாக்க விரும்பினேன். முதலில் என் கிராமத்திற்குத் திரும்ப நினைத்தேன். ஆனால், என் நண்பர்களோ தனி கல்லூரி ஆரம்பிக்குமாறு வலியுறுத்தினர். எனக்கு அது பிடித்திருந்தது. திருப்பதி பாலாஜி கோவிலுக்கு சென்று, சீட்டு குலுக்கிப் பார்த்தேன். 4 சீட்டுகளில், வேண்டாம்’ என்றும், ஒரே ஒரு சீட்டில், ‘வேண்டும்’ என்றும் எழுதிப் போட்டிருந்தேன். அதனை குலுக்கி ஒரு சீட்டை நான் எடுத்துப் பார்த்தபோது, வேண்டும் என்ற சீட் வந்திருந்தது. இதனையடுத்தே எனது கல்விப் பயணம் தொடங்கியது'' என்கிறார் கர்னல்.

பூனேவில் கல்லூரி ஆரம்பித்தார் பாலா. அதில் முதலில் 100 மாணவர்கள் படித்தனர். ஆண்டுகள் போகப்போக சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்தபடி இருந்தது. அதன்பின் 3 கல்லூரிகளை ஆரம்பித்தார். மாணவர்களின் கல்விக் கட்டணத்தை வைத்தும், வங்கிகளில் கடன் பெற்றும் ஒரு புதிய வளாகத்தையே 2000-ல் உருவாக்கினார் கர்னல். 365 நாட்களும் கல்லூரி நாட்கள்தான். வார இறுதி விடுமுறை கிடையாது. ராணுவக் கட்டுப்பாடுடன் கல்லூரிகளை நடத்தினார்.

""மாணவர்களின் மாதந்திரக் கல்வி அறிக்கையைப் பெற்றோருக்கு அனுப்பி வைப்பது, தினமும் குறைந்த பட்சம் 10 மணிநேரம் கல்லூரியில் இருப்பது, கல்வி மட்டு மல்லாமல் மாணவர்கள் தங்கள் சமூக அறிவை வளர்த்துக் கொள்ளுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்குத் தருவது. அவர்களுக்கு நடைமுறை அறிவினைப் புகட்டுவது, விடுமுறையில்லாமல் இயங்குவது, பண்டிகைகளை கல்லூரியிலேயே கொண்டாடுவது போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறோம்'' என்கிறார் இரக்கமுள்ள அந்த இனிய சர்வாதிகாரி.

விடுமுறை இல்லா கல்வியை இந்தியாவில் அறிமுகப் படுத்திய முதல் நபர் கர்னல்தான்.

மாணவர்களுக்கு 10-12 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்வதற்கான வலிமையையும் வளர்ச்சியையும் கொடுக்கிறோம். இதன் பலன், இப்போது பல நிறுவனங் களில் உயர் பதவிகளில் எங்கள் மாணவர்கள்தான் உலகம் முழுவதும் இருக்கின்றனர் என்கிறார் அவர்.

மேலும், ""என் மனைவி திலகவதி என்னுடைய தாய்பூமியில் இருந்து வந்தவர். என்னுடைய அனைத்து சந்தோஷங்களிலும் துக்கங்களிலும் துணை நின்று எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். எனக்கு பரந்தாமன், பரமானந்தன் என இரு மகன்கள். இருவரும் எம்.பி.ஏ. முடித்துள்ளனர். பரந்தாமன் எங்கள் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர். பரமானந்தன், நிதி இயக்குநர். இரு மருமகள்களாகிய சிந்தூர் மற்றும் சுஷ்மா இருவரும் இல்லத்தரசிகள். என் பேரப்பிள்ளைகள் ஹர்சினி, ரிஷி, ப்ரணவ், ரோஹன், அனன்யா ஆகியோர் என்னுடைய சந்தோஷம்'' என்கிறார் பெருமிதமாக.

பாலாவின் இரு மகன்களும் தங்களது தந்தையின் சாதனைகளைக் கண்டு மிகவும் பெருமைப்படுவதுடன் வியந்து போகிறார்கள். தந்தையின் கல்விச் சேவையை தங்களது கடமையாக ஏற்று நடத்துகின்றனர். இவருடைய ஸ்ரீ பாலாஜி சொஸைட்டி எனும் கல்வி நிறுவனத்திற்கு, அண்மையில் பல்கலைக்கழக அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

""இதுதான் தனக்கு கிடைத்த நோபல் பரிசுக்கு நிகரான வாழ்நாள் பரிசு'' என்றபடி ஆனந்தத்தில் சிறகடிக்கிறார் கர்னல்!

நன்றி: கார்ப்பரேட் சிட்டிசன்

uday010919
இதையும் படியுங்கள்
Subscribe