ன் தலை என் மடியில் ஓய்வெடுத்தபோது, இரண்டு அங்குல நீளத்தில் வெட்டிவிடப்பட்டதும், மென்மைத் தன்மை கொண்டதுமான அந்த முடியில் நான் கை விரல்களை ஓட்டினேன். ஒரு காட்டு உயிரினத்தின் நெற்றியின் மேற்பகுதியைத் தடவுவதைப்போல அந்த நிமிடத்தில் எனக்குத் தோன்றியது.

ஒரு அணில் அல்லது ஒரு கீரி... நீ படுத்திருப்பதில் ஒரு அடங்கிப்போகும் குணம் வெளிப்பட்டது. உன் இருமடங்கு கனமான அந்த சரீரம் எந்தவொரு சந்தேகமும் இல்லாமல், எந்தவொரு பயத்தின் அறிகுறியே இல்லாமல் என் சரீரத்துடன் இணைந்து... அதில் ஒன்றாகக் கலந்தது. ஆனால், சில மணி நேரங்களுக்குப்பிறகு, அந்த இனிமையான ஆண் குரலைக் கேட்பதற்காக மட்டுமே நான் தொலைபேசியில் அழைக்கும்போது, உன் குரல் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தக்கூடிய கூர்மையான ஆயுதமாக மாறுகிறது. அது என் உள்ளுறுப்புகளைக் கொத்தி இழுத்து, உன் உலகத்தின் தூரத்து எல்லைகளில் என்னை நிர்வாணமாக நிற்கவைக்கிறது. நான் பார்த்த நடிகர்களிலேயே மிகவும் திறமைசாலி நீதான்.

ss3

Advertisment

ஒருநாள் நீ என் கண்களில் அழுத்தி முத்தமிட்டாய். நிமிர்ந்தபோது, உன் உதடுகளில் என் கண் மை படிந்திருப்பதை நான் பார்த்தேன். எந்த உணர்ச்சி உன்னை என்னிடம் நெருங்கச் செய்தது? என் பலமற்ற கை, கால்களை வேதனைப்படுத்தும் நேரத்தில் நான் எந்தச் சமயத்திலும் உன்னைக் குற்றம் சுமத்தியதில்லை. நீ என் சரீரத்தால் தாங்கிக்கொள்ள முடியாத சுமை. உன்னைவிட கனமான சுமை என் இசையின் சுமை. உன்னைப் பின்தொடரும் ஒரு மேகப் படலத்தைப்போல அது நின்றுகொண்டிருக்கிறது. நீ அதைப் பார்க்கவே இல்லை என்பதைப்போல காட்டிக்கொண்டு, உன் செயல்களில் ஓய்வேயின்றி மூழ்கிக் கொண்டிருக்கிறாய்.

ஆடைகள் அணிவதிலும் நீ ஒரு அக்கறை செலுத்துவதில்லை. உன் உருவ அழகைப் பற்றி நீ எந்தச் சமயத்திலும் உணர்ந்ததில்லை. அழகற்றவன் என்றும், வெறுமொரு சாதாரண மனிதன் என்றும் நீ நினைத்துக்கொண்டிருந்தாய். நான் உன்னிடம் ஆணவத்தை வளர்த்தேன். உனக்கு மதிப்பை உண்டாக்கித் தந்தது என் வழிபாடு மட்டுமே. என்னிடம் ஓடிவந்து அணைக்கும்போது, வியர்வையில் நனைந்து குளிர்ந்த தலைமுடியாலும் பின் கழுத்தாலும் அந்த சதைப்பிடிப்பான கைகளாலும் நீ என்னை உணர்ச்சிவசப்படச் செய்வாய். என் இளமைக் காலத்தில், அறுவடைக்குப்பிறகு கதிர்களை அடித்தபிறகு நிலத்தில் பணியாட்கள் அடுக்கிவைக்கும் புதிய வைக்கோலின் வாசனை உன் வியர்வைக்கு இருக்குமா? நீ தோன்றியது என் கடந்த காலத்திலா? உன் சிவந்த கண்களும் சரீர அழகும் புன்சிரிப்பும் முற்பிறவிகளிலும் எனக்கு நன்கு தெரிந்தவையோ?

ss3

Advertisment

சிறிய கால அளவில் மட்டுமே உன் அண்மையை நான் உணர்ந்திருக்கிறேன். என்றைக்காவது ஒருநாள் நிலவு வெளிச்சம் இருக்கக்கூடிய இரவுப் பொழுதை என்னுடன் கழிப்பதாக நீ வாக்களிப்பதுண்டு. ஆசை நிறைவேறாதவளாக இருந்தாலும், வேகமாகப் பாய்ந்துவரும் கடலைப்போல நான் அகங்காரத்துடன் இருக்கிறேன். உன்னை நினைத்து அகங்காரம் கொள்கிறேன்.

காதலைப் பற்றிக் கூறி புரியவைப்பதற்கு ஒரு வினோத மொழியை எங்களுக்குத் தர வேண்டுமென நான் தெய்வத்திடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். நீயும் நானும் ஒருவருக்கொருவர் மௌனத்தைப் பகிர்ந்துகொள்கிறோம். இறுதியில் நீயும் என்னை விட்டுப் போய்விடுவாயா? காதல் என்பது வெறும் ஒரு வேட்கை மட்டுமே என்பதாக உணர்ந்து, வேகமாக என் வீட்டு வாசலி-ருந்து இறுதியில் நீ திரும்பி நடப்பாயோ? தெய்வமென்ற மிகப்பெரிய தனிமை மட்டுமே எனக்கு நட்பாக எஞ்சியிருக்குமோ?