ஓர் ஊரின் வரைபடத்தில் நமக்குப் பிடித்த சில சாலைகளே இருக்கின்றன. மீதமுள்ளவை மனதளவில் மூடப்பட்டவை. சிவகங்கையின் பேருந்து நிலையத்தின் அருகிலிருக்கும் எங்கள் வீட்டிலிருந்து பிரதான சாலை களைத் தவிர்த்துவிட்டு, சலனமற்ற நீரோடை போல தெப் பக்குளத்தின் பின்சுவர் ஒட்டிச் செல்லும் சாலையின் வழியேதான் அகரத்திற்குப் போவேன்.
கல்வெட்டு லிபிகள் போன்ற முனை ஒடிந்த சிவப்பு எழுத்துக்களால் அகரம் என்று எழுதப்பட்ட கட்டிடத் தின் புவியியல் விநோதமானது. வாசற்படிகளில் ஏறி, வராந்தாவில் நுழைந்தால் நீளமான பாதை. வலப்புறம் புத்தகங்களுக்கான அறை. உள்ளிருக்கும் விசாலமான பெரிய அறை. அதைக்கடந்தால் டிரெடில் மிஷினுக் கான அறை. நேரே போனால் கதிர், தேக்குக் கன்றுகள் வளர்க்கும் கொல்லைக்குப் போகலாம். பின்புறம் கிணற்றை ஒட்டிச் செல்லும் மாடிப் படிகள் கண்கள் கூசும் வானத்திற்கு இட்டுச் செல்கின்றன.
உள்ளே நுழைந்ததும் நீள் வராந்தையின் எழுது மேஜையில் என் மதிப்பிற்குரிய மீரா குனிந்து எதையோ எழுதிக்கொண்டிருக்கிறார். சாய்த்துவைத்த குடையின் அருகில் அமர்ந்து வரதராசன் ஐயா பிழைதிருத்துகிறார்.
குழல் விளக்கு எரிந்து கொண்டேயிருக் கிறது. மேலே ஞானவேல் வரைந்த முரட்டு பாரதி அகரத்தைப் பரிபாலிக்கிறார்.
இங்கிருந்து பார்த் தால், கொல்லைக் கதவு நிமிர்த்திய செவ்வகம் போல கண்கள் கூச வெயிலில் ஒளிர் கிறது. ஹாலின் உள்ளிருக்கும் அச்சகப் பெண்கள் நிழலுருவங்கள் போல் ஒளிச் செவ்வ கத்தைக் கடந்து செல்கிறார்கள். மெட்ராஸ் டெரஸ் முறையில் வேய்ந்த உயர்ந்த கூரைத்தளமும், புராதனமான சன்னல்களும், நிலைக் கதவுகளும் கொண்ட கட்டிடத்தின் இதயத்துடிப் புபோல, நாகசாமியின் டிரெடில் மிஷின் சத்தமிடுகிறது. மிஷினில் மேலிருக்கும் வண்ணம் பூசும் தகடு நின்று நின்று மெதுவாகச் சுழன்றுகொண்டே இருக்கிறது. தொலைபேசியில் மேலாளர் நடராசனின் கனத்த குரல் ஓங்கி ஒலிக்கிறது.
பகற்பொழுது அகரம் அச்சகத்தைக் கடந்து செல்கிறது. கொல்லையில் ஒளிர்ந்த செவ்வகம் கறுத்துவிட்டது. எழுது மேசைக்கு அருகிலிருக்கும் குறுகலான இடைவெளியில் சுவர் உரசிக்கொண்டே அச்சகப் பெண்கள் தங்கள் நிழலுருவத்தை விளக்கு வெளிச்சத்தில் மீட்டுக்கொண்டு வெளியேறுகிறார்கள்.
பிழைதிருத்தும் ஐயாவின் குடை வீடு திரும்புகிறது. சிவன்கோவில் தெற்குத் தெருவில் இரவு நேரங்களில் தான் புரியாத அந்த அமைதியும் அற்புதமும் கவியும்.
மார்கழி மாதத்தின் அதிகாலைகளில் ஈரத்தலை முடித்துக் கோலமிடும் பெண்கள். தெரு விளக்கின் மஞ்சள் ஒளியில் சுதிப்பெட்டி இழையக் கடந்துபோகும் பஜனைப் பாடல்கள். கிறித்துமசு முன்தினங்களில் கிட்டார் இசையுடன் பெருகும் கூட்டிசைப் பாடல்கள். சிவன் கோவிலிலின் உச்சிகாலப் பூசையில் அதிரும் மணி ஒலிலிகள். அந்தத் தெருவின் வசீகரம் மாலையின் மஞ்சள் கிரணத்துடன் துவங்கி, காலையில் மஞ்சள் கிரணத்துடன் நிறைவடையும். பகற் பொழுதுகளில் அகரம் ஒரு தொழிற்சாலை போல இருக்கும். மாலைப் பொழுதானதும் ஒரு இலக்கிய நண்பரின் அறை யைப்போல மாறும்.
லி இந்த முன்னிரவுப் பொழுதுதான் எங்களுக் கான நேரம். எழுது மேசையை நடுவில் கொண்ட எதிரெதிர் நாற் காலிலிகளில் நானும் அன்பிற்குரிய மீராவும் இருப்போம். அல்லது அகரத்தின் கம்பி களாலான சன்னல் போன்ற வெளிக்கதவின் அருகில் அவர் நிற்பார். எதிரில் நான் நின்றிருப்பேன். உள்ளிருக்கும் கணங்களைவிட, வாசலில் அசைவற்ற தெருவின் இருள் கரைந்த மிதமான மஞ்சள் வெளிச்சத்தில் பேசிக்கொண்டிருப்பது அற்புதமாக இருக்கும். தெருவின் துவக்கத்திலிருக்கும் புராதனமான அரசமரம் பேச்சுக்கிடையிலான மௌனத்தில் சலச
ஓர் ஊரின் வரைபடத்தில் நமக்குப் பிடித்த சில சாலைகளே இருக்கின்றன. மீதமுள்ளவை மனதளவில் மூடப்பட்டவை. சிவகங்கையின் பேருந்து நிலையத்தின் அருகிலிருக்கும் எங்கள் வீட்டிலிருந்து பிரதான சாலை களைத் தவிர்த்துவிட்டு, சலனமற்ற நீரோடை போல தெப் பக்குளத்தின் பின்சுவர் ஒட்டிச் செல்லும் சாலையின் வழியேதான் அகரத்திற்குப் போவேன்.
கல்வெட்டு லிபிகள் போன்ற முனை ஒடிந்த சிவப்பு எழுத்துக்களால் அகரம் என்று எழுதப்பட்ட கட்டிடத் தின் புவியியல் விநோதமானது. வாசற்படிகளில் ஏறி, வராந்தாவில் நுழைந்தால் நீளமான பாதை. வலப்புறம் புத்தகங்களுக்கான அறை. உள்ளிருக்கும் விசாலமான பெரிய அறை. அதைக்கடந்தால் டிரெடில் மிஷினுக் கான அறை. நேரே போனால் கதிர், தேக்குக் கன்றுகள் வளர்க்கும் கொல்லைக்குப் போகலாம். பின்புறம் கிணற்றை ஒட்டிச் செல்லும் மாடிப் படிகள் கண்கள் கூசும் வானத்திற்கு இட்டுச் செல்கின்றன.
உள்ளே நுழைந்ததும் நீள் வராந்தையின் எழுது மேஜையில் என் மதிப்பிற்குரிய மீரா குனிந்து எதையோ எழுதிக்கொண்டிருக்கிறார். சாய்த்துவைத்த குடையின் அருகில் அமர்ந்து வரதராசன் ஐயா பிழைதிருத்துகிறார்.
குழல் விளக்கு எரிந்து கொண்டேயிருக் கிறது. மேலே ஞானவேல் வரைந்த முரட்டு பாரதி அகரத்தைப் பரிபாலிக்கிறார்.
இங்கிருந்து பார்த் தால், கொல்லைக் கதவு நிமிர்த்திய செவ்வகம் போல கண்கள் கூச வெயிலில் ஒளிர் கிறது. ஹாலின் உள்ளிருக்கும் அச்சகப் பெண்கள் நிழலுருவங்கள் போல் ஒளிச் செவ்வ கத்தைக் கடந்து செல்கிறார்கள். மெட்ராஸ் டெரஸ் முறையில் வேய்ந்த உயர்ந்த கூரைத்தளமும், புராதனமான சன்னல்களும், நிலைக் கதவுகளும் கொண்ட கட்டிடத்தின் இதயத்துடிப் புபோல, நாகசாமியின் டிரெடில் மிஷின் சத்தமிடுகிறது. மிஷினில் மேலிருக்கும் வண்ணம் பூசும் தகடு நின்று நின்று மெதுவாகச் சுழன்றுகொண்டே இருக்கிறது. தொலைபேசியில் மேலாளர் நடராசனின் கனத்த குரல் ஓங்கி ஒலிக்கிறது.
பகற்பொழுது அகரம் அச்சகத்தைக் கடந்து செல்கிறது. கொல்லையில் ஒளிர்ந்த செவ்வகம் கறுத்துவிட்டது. எழுது மேசைக்கு அருகிலிருக்கும் குறுகலான இடைவெளியில் சுவர் உரசிக்கொண்டே அச்சகப் பெண்கள் தங்கள் நிழலுருவத்தை விளக்கு வெளிச்சத்தில் மீட்டுக்கொண்டு வெளியேறுகிறார்கள்.
பிழைதிருத்தும் ஐயாவின் குடை வீடு திரும்புகிறது. சிவன்கோவில் தெற்குத் தெருவில் இரவு நேரங்களில் தான் புரியாத அந்த அமைதியும் அற்புதமும் கவியும்.
மார்கழி மாதத்தின் அதிகாலைகளில் ஈரத்தலை முடித்துக் கோலமிடும் பெண்கள். தெரு விளக்கின் மஞ்சள் ஒளியில் சுதிப்பெட்டி இழையக் கடந்துபோகும் பஜனைப் பாடல்கள். கிறித்துமசு முன்தினங்களில் கிட்டார் இசையுடன் பெருகும் கூட்டிசைப் பாடல்கள். சிவன் கோவிலிலின் உச்சிகாலப் பூசையில் அதிரும் மணி ஒலிலிகள். அந்தத் தெருவின் வசீகரம் மாலையின் மஞ்சள் கிரணத்துடன் துவங்கி, காலையில் மஞ்சள் கிரணத்துடன் நிறைவடையும். பகற் பொழுதுகளில் அகரம் ஒரு தொழிற்சாலை போல இருக்கும். மாலைப் பொழுதானதும் ஒரு இலக்கிய நண்பரின் அறை யைப்போல மாறும்.
லி இந்த முன்னிரவுப் பொழுதுதான் எங்களுக் கான நேரம். எழுது மேசையை நடுவில் கொண்ட எதிரெதிர் நாற் காலிலிகளில் நானும் அன்பிற்குரிய மீராவும் இருப்போம். அல்லது அகரத்தின் கம்பி களாலான சன்னல் போன்ற வெளிக்கதவின் அருகில் அவர் நிற்பார். எதிரில் நான் நின்றிருப்பேன். உள்ளிருக்கும் கணங்களைவிட, வாசலில் அசைவற்ற தெருவின் இருள் கரைந்த மிதமான மஞ்சள் வெளிச்சத்தில் பேசிக்கொண்டிருப்பது அற்புதமாக இருக்கும். தெருவின் துவக்கத்திலிருக்கும் புராதனமான அரசமரம் பேச்சுக்கிடையிலான மௌனத்தில் சலசலக்கும். ஆட்களற்ற தெருவில் இரவில் உதிரும் மஞ்சள் இலைகள் எங்களைக் கடந்து போகும். மீரா பேசிக்கொண்டிருப்பார்.
பதிப்பகத்தில், தான் உருவாக்கத் திட்டமிட்டிருக்கும் புத்தகங்கள் குறித்து, அரிதான சில ஆங்கிலப் புத்தகங் களின் வடிவமைப்பையும் நேர்த்தியையும் குறித்து, அட்டைக்காக தான் சென்னையில் வாங்கி வந்திருக்கும் ஆதிமூலத்தின் ஓவியம் குறித்து, பல்கலைக் கழகப் பாடத்திட்டத்திற்கு தான் தேர்வு செய்திருக்கிற கவிதைகள் குறித்து, திரும்பவும் துவங்க நினைக்கிற அன்னம் விடு தூது குறித்து, பணி ஓய்வுக்குப் பின் செய்ய விரும்புகிற படைப்பிலக்கிய முயற்சிகள்- குறிப்பாக தான் வெகுநாளாக எழுத விரும்பும் நாவல் குறித்து, என் பால்யகால நண்பன் என்கிற முறையில் கதிரின் எதிர்காலம் குறித்து, ஊருக்கு வெளியே இருக்கிற குறுநிலத்தில் தான் கட்ட நினைக்கிற குடில் மற்றும் அங்கு இருக்க வேண்டிய எழுத்தாளனின் தனிமை குறித்து... பேசிக் கொண்டே இருப்பார். பிறகு கதிர் மேல்தளத்திலிலிருக்கும் வீட்டிலிருந்து கீழே வருவான். இதுதான் அவரது இரவு உணவுக்கான மௌன அழைப்பு. இனி உறவினர்களுக்கான நேரம் என உணர்ந்து விடைபெறுவார். இங்ஙனம் பதிவு செய்யப்படாத ஆயிரம் அகரம் இரவுகள் நினைவில் கலைகின்றன.
ஒருமுறை புத்தக அட்டை அச்சடிப்பதற்காக அவர் வாங்கி வைத்திருந்த வழவழப்பான வெளிநாட்டு அட்டைகளை நான் ஓவியம் வரைவதற்காக கதிர் எடுத்துத் தந்தான். தைலவண்ணப் பிதுக்குகள் வாங்கி, புத்தகக் கட்டுகள் மற்றும் அச்சுக்கட்டைகளுக்கு நடுவில் கால்மடக்கி உட்கார்ந்துகொண்டு ஒரே இரவில் நானும் அவனும் ஐந்து பெரிய ஓவியங்கள் வரைந்தோம். இதை நட்சத்திர விடுதிகளுக்கு விற்பதன் மூலம் பணக்காரர் ஆவதுதான் திட்டம். குறைந்தபட்சமாக இந்த முயற்சியால் அவரிடம் நான் ஓவியனாக அறிமுகமானேன். எதிர்வருகிற புத்தகங்கள் அனைத்திற்குமான தலைப்புகள் அனைத்தையும் எழுதிக் கொடுப்பார். புத்தகத் தலைப்பில் என் எழுத்து அச்சாவதில் இருக்கும் மகிழ்ச்சிக்காக, நாள் முழுக்க முயற்சி செய்து எழுதிப் பார்ப்பேன். தூரிகை பிடித்து எழுத வராது. பிசிறுகள் இருக்கும். அச்சுக்குத் தேர்வு பெறாது. ஆனாலும் எனது ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து அட்டைகளுக்குப் பயன்படுத்தினார்.
இளைஞர்களை அவர் ஊக்கப்படுத்தும் விதமே அலா தியானது. சிவகங்கையில் எந்தக்கூட்டமென்றாலும் அவரை அணுகுவது எளிதாக இருக்கும்.
அவரது உதவியும் கணிச மானதாக இருக்கும்.
எழுத்தின் மீது தீராத ஆர்வம்கொண்ட அந்த நாட்களில் அகரம்தான் நவீன இலக்கியத்தின் ஆரம்பப் பள்ளியாக இருந்தது. எழுத்தாளர்களைச் சந்திப்பதும் புளகாங்கிதம் தரும் அனுபவமாக இருந்தது. உள் அறையில்தான் ஜெயகாந்தன் அமர்ந்திருக்கிறார். ஓர் அறையில் எஸ்.வி.ஆர். ரஷ்யப் புரட்சியின் அத்தியாயத்தைத் திருத்தி எழுதுகிறார். புத்தக மூட்டைகளின்மேல் அமர்ந்து கோணங்கி கல்குதிரையின் பிடறியைக் கோதுகிறார். அப்துல் ரகுமான் வராந்தையில் புத்தகம் வாசிக்கிறார். விஷ்ணுபுரத்தின் வரைபடம் மேசையில் படபடக்கிறது. இவர்தான் அபி. ஆப்பிரிக்கக் கவிதைகள் ஒருபுறம். பாதல்சர்க்காரின் நாடகங்கள் வந்துவிட்டன. சுஜாதா இப்போதுதான் வந்து போனார்.
கி.ரா.வின் நுணுங்கி நுணுங்கி எழுதிய அஞ்சலட்டை வந்து சேர்கிறது. டிரெடில் மிஷினில் ஓயாத சப்தம். ஆதிமூலத்தின் சிதறும் காகங்கள் அறை முழுக்கப் பறக்கின்றன. கோபல்ல கிராமத்திற்குப் போகும் ஒற்றையடிப் பாதையிலிருந்து வேட்டியின் நுனியைக் கையில் பிடித்துக்கொண்டு மீரா வருகிறார். சிவகங்கைக்கு வராத இலக்கியவாதிகளின் பெயர் அரிதாகவே இருக்கிறது. எழுதுபவர்களின் சாலைகள் அனைத்தும் சிவகங்கை நோக்கியே சென்றன.
கைகள் அழுத்தாமல் இருக்க சணலிலேயே கைப்பிடி மாதிரி செய்து, புத்தகக் கட்டையே சூட்கேசு மாதிரி சசி செய்து தரும் கட்டுகளைத் தூக்கிக்கொண்டு, நானும் மீராவும் மதுரை வீதியில் நடந்திருக்கிறோம்.
தேடித்தேடி நல்ல உணவு விடுதிகளுக்கு அழைத்துப் போவார். பின்னிரவு உணவுக்குப்பின் அய்சுகிரீம் வாங்கித் தந்து அவரும் குழந்தையைப் போல சாப்பிடுவார்.
காபி என்றால் அவருக்கு உயிர். நான் காபி குடிப்பதே இல்லை. அவருடன் இருந்த எண்ணற்ற மாலைப்பொழுது களின் தேநீர் நேரங்களில் எல்லாம் இந்த முரண்பாடு அவருக்குப் புன்னகையைத் தரும்.
அப்போது சிவகங்கையிலிருந்து சென்னைக்குத் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தின் ஒரே பேருந்துதான் இருந்தது. வசதியான சாய்வு இருக்கைகள் இருக்காது. சென்னையிலிருந்து சிவகங்கை வந்தால், நாள் முழுக்கத் தூங்கினாலும் அலுப்புத் தீராது. ஆனால் பயணங்களில் அவருக்கிருந்த ஆர்வம் அதிசயமானது.
சென்னையிலிருந்து காலையில் வருவார். ஒன்பது மணிக்கு மதுரைக்குக் கிளம்புவார். திருச்சி, பிறகு பொள்ளாச்சி, கோயம்புத்தூர், கூட்டங்கள், சந்திப்புகள், பதிப்பக வேலைகள். ஒரு சாம்பல் நிறப் பெட்டியுடன் கிளம்பிவிடுவார். உடன் சதுரம் சதுரமாக சசியின் புத்தகக் கட்டுகள். அவர் வாழ்நாளின் பெரும்பகுதி பயணங்களிலேயே கழிந்தது. மதுரையிலிருந்து சிவகங்கைக்கு வரும் கடைசி இரவுப் பேருந்துகளில் குறைந்தது வாரம் இரண்டு முறையாவது அவரைப் பார்க்கமுடியும். இத்தனை உழைப்புக்கிடையில் கேட்பவருக்கெல்லாம் முன்னுரை எழுதினார். பாரதி நூற்றாண்டு விழா நடத்தினார். நவீன இலக்கிய வாசனையற்ற செம்மண் நிலத்தில் கவிதை இரவு நடத்தினார்.
புத்தகங்கள் மீதான அவரது காதல் அளவிட முடியாதது. வீட்டில் திரும்பும் இடமெல்லாம் புத்தகங்கள். கையெழுத்துப் பிரதிகள். வடிவமைப்பு பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் ஆர்வமாகப் பேசுவார். அவ்வாறாகப் பேசிக்கொண்டிருந்த ஓர் இரவில் மதுரையிலிருக்கும் அன்னம் புத்தக மையத்தை மூடிவிடலாமென நினைப்பதைக் கூறினார்.
அப்போது "புத்தகங்களும் என்னைக் கைவிட்டன' என்கிற சுகுமாரனின் கவிதை வரிபோல் கைவிடப் பட்ட அவரது மனதின் கையறுநிலை கலங்க வைப்பதாக இருந்தது. புத்தகங்கள்மேல் இவ்வளவு அன்பு வைத்திருந்த அவர் முதன்முறையாகக் கோபப் பட்டார். பதிப்பிப்பதுதான் நம் வேலை. ஓர் அழைப்பிதழ் அடித்து எல்லாரையும் அழைத்து "விற்காத புத்தகங் களை எல்லாம் ஆரியபவன் எதிரில் (அன்னம் புத்தக மையம் அங்குதான் இருந்தது) போட்டு எரித்துவிடலாம் என நினைக்கிறேன்' என்று கோபத்துடன் சொன்னார்.
இதற்குப் பின்னால் சென்னையின் புத்தகக் கண்காட் சியின் தீ விபத்தில் மீந்த புத்தகங்கள் அனைத்தும் எரிந்து போயின. இருவேறான சம்பவங்களின் தொடர்ச்சி எனக்குப் புரியாத அதிர்ச்சியாக இருந்தது.
எனது பொறியியல் படிப்பும் அகரத்தின் புராதனச் சன்னல்கள் மற்றும் தடித்த சுண்ணாம்புச் சுவர்களைப் பெயர்த்து அதனைப் புதுப்பிக்க வேண்டிய தருணமும் கூடிவந்தபோது எங்கள் நெருக்கம் இன்னும் அதிக மானது. அச்சகம் ஓய்ந்திருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் அசுரத்தின் நீள அகலங்களை இருவரும் அளந்தோம். பெரிய ஹாலின் குறுக்கே எழுப்ப நினைக் கிற தூண்களைக் குறித்து சந்தேகங்களைக் கேட்பார். குறுக்குச் சுவர்களை எடுத்துவிட்டால் பக்கச்சுவர்களின் தாங்கும் தன்மை குறித்துக் கேள்வி கேட்பார். அகரத்தின் நீள அகலங்களைக்கொண்டு நானும் அவரும் சேர்ந்து வரைந்த கற்பனை வரைபடங்கள் அளவில்லாதவை. முதல் நாளில் சித்திரங்களுடன் கூடிய அறையைக் கட்டுவோம். மறுநாள் அதன் சுவர்களைத் தளர்த்தி நீண்ட விராந்தையாக்குவோம். அவர் ஹாலின் குறுக்கே புதிதாக இரண்டு தூண்களை எழுப்புவார். நான் மெதுவாக அதை மூலையில் நகர்த்தி வைப் பேன். "இலக்கியக் கூட்டங்களுக்கான அரங்கமாக மாற்றுங்கள்' என்று சொல்வார். தாங்கும் நிலைகளற்று நீண்ட, அந்த ஹாலின் பரப்பளவைக் கையாளுவது சிரமமானதாகவே இருந்தது. விதானம் போலிருந்த உட்கூரையின் உயரமும் இருபுறமும் இருந்த பொதுச் சுவரும் இந்த நாடகத்தின் சுவையான கதாபாத்திரங்கள். நானும் அவரும் எப்போதும் சுவர்களைத் தளர்த்தியும் தூண்களை நகர்த்தியும் ஆடிய விளையாட்டின் முடிவாக மதுரையிலிருந்து பெரிய பொறியாளர் வந்தார். நாங்கள் எழுப்பியிருந்த கான்கிரீட் தூண்களைத் தனது பென்சிலால் நகர்த்திவிட்டு வேறொரு வரைபடம் தந்தார். வெளிச்சமற்றிருந்த அறைக்கு சூரியனின் கிரணங் களை நேரடியாக வரவேற்கும் விநோதமான கண்ணாடிச் சன்னல்களையும் தனது வரைபடத்தில் அவர் குறித் திருந்தார். அகரத்தின் புவியியல் மாறத் துவங்கியது. புராதனமான சன்னல்கள் பெயர்க்கப்பட்டு, சுவரில் சாத்தி வைக்கப்பட்டன. அடிவாங்கிச் சரியும் மனிதனைப் போல சுவர்கள் தூசி பறக்க வீழ்ந்தன. ஒளிரும் செவ்வகம் தன் நிலையிலிருந்து பெயர்க்கப்பட்டது.
அகரத்தின் இதயத் துடிப்பென ஓசை எழுப்பிக் கொண்டிருந்த டிரெடில் மிஷின் விற்கப்பட்டது. v அழுக்குத் தலைப்பாகைக் கட்டிய மனிதர்கள் வந்தார்கள்.
கயிறு பிணைத்து வேறொரு இயந்திரத்தை இறக் கினார்கள். பழைய கட்டிடத்தில் அச்சக ஊழியர் களுக்குப் பதிலாய் கட்டிடத் தொழிலாளர்கள் உலவி னார்கள். மண் தெரியும் வரை தரை உடைக்கப்பட்டது. பிறகொருநாள் அழுக்குத் தலைப்பாகை மனிதர்கள் மீண்டும் வந்தார்கள். அச்சக மிஷின்கள் கட்டப்பட்டு, தனது சத்தங்களையும், அழுத்திய காகிதங்களையும் அறையில் விட்டு லாரிப் புகையில் மறைந்தன.
கட்டிடம் சிமெண்ட் வாசனையுடன் புதிதாக வளர்ந்து கொண்டிருந்தது. அகரம் அரங்கம் என்று எழுதச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். பன்னிரண்டு வருடங்கள் புத்தகத் தலைப்பு எழுதிப் பழகியதில், மூங்கில் சாரத்தில் ஏறி இரவோடு இரவாக "அகரம் அரங்கம்' என்று பிசிறில்லாமல் எழுதி முடித்தேன்.
அத்துடன் அகரம், கதிர், மீரா, நான் ஆகிய எங்களின் சதுரம் கலைந்தது. கதிர் இடம்பெயர்ந்துவிட்டான். நானும் திரைப்படம் தேடிச் சென்னைக்கு வந்துவிட் டேன். அகரம் இல்லாத அரங்கத்தில் மீரா மட்டும் தங்கி விட்டார். பிறகு வந்த நாட்கள் வேகமானவை.
ஒரு வருடத்திற்கு முன்பு சிவகங்கை போனபோது அவரைப் பார்க்கப் போனேன். அகரத்தில் இசைப்பள்ளி இருந்தது. டிரெடில் பொறியின் கனத்த ஓசைக்குப் பதிலாய் அதன் மென்படுத்தப்பட்ட சப்தமென மிருதங்கத்தின் இசையும் அதைத் தொடர்ந்த சரளி வரிசையின் கூட்டுப் பாடலும், அங்கு கவிந் திருக்கும் சோகத்தைத் தெளிவாகச் சொல்லின. குறுகலான செங்குத்தான படியேறி மேலிருக்கும் வீட்டுக்குப் போனேன். அம்மா இருந்தார்கள். மீரா அவர்களின் தந்தையைப் போன்ற உருவத்துடன் மெலிந்திருந்த அவரைப் பார்த்தேன். நோயின் தீவிரத் தன்மையும் அதன் பிரதியாக அந்த வீட்டில் நிலவும் அமைதியும் ஏதோ செய்தது. "உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. நல்லா வந்துடுவீங்க' என்று பதட்டமும் அன்பும் கலந்து என் குரல் நடுங்கியபோது, அவரது கண்கள் கலங்கின. பேசுவதற்கு ஏதுமற்றுக் கவியும் அடர்ந்த மௌனத்துடன் காலிலியான அறைகளைக் கடந்து வந்துவிட்டேன்.
மூன்று மாதத்திற்கு முன்னால் கதிர், ""அப்பாவுக்கு நல்ல படம் இல்ல, எடு'' என்று சொன்னான். எனது ஒளிப்படக் கருவிகளுடன் குறுகலான அந்தப் படிகளில் திரும்பவும் ஏறினேன். "வாங்க செழியன்' என்று சிரித்த முகத்துடன் வரவேற்ற மீரா முன்பை விடவும் பலமடங்கு தேறியிருந்தார். திரைப்படத் துறையைப் பற்றி விசாரித் தார். அம்மா, "காபி சாப்பிடுப்பா' என்று என்னிடம் சொன்னதும் மீரா சிரித்துக்கொண்டே இளநீர் சாப் பிடுங்க என்றார். ""தாயுடன்தான் படம் எடுக்க விரும் பினேன். அதுதான் வேணான்னு சொல்லிடுச்சு'' என்று அம்மாவைப் பார்த்துச் சொன்னார். பளிங்குத் தரைகள் கொண்ட யாருமற்ற நீளமான விராந்தையில் எங்கள் நிழற்பட நேரம் துவங்கியது. வீட்டின் முகப்பில் இருவரும் திரைச்சீலை விலக்கிக் கட்டம் கட்டமான கம்பிகளின் அருகில் நின்றனர். இயற்கையான ஒளிய மைப்புதான் எடுக்க விரும்பினேன். வீட்டின் பேரமை தியில் கேமராவின் உள்வாங்குதல், சட்டென உள்ளிருக்கும் இரும்புக் கதவு திறந்து மூடும் ஒலிலியுடன் துவங்குகிறது. சன்னலோரம், குனிந்த, நிமிர்ந்த, தீர்க்கமாக வெற்றுவெளியை நோக்குகிற மீரா முகங்கள், வீட்டின் அமைதியில் இடைவெளி விட்டுவிட்டு ஒலிக்கிற கேமராவின் பதிவு. இருட்டிலிருக்கும் படச் சுருளில் முகங்கள் பதிவாகிச் சுருள்கின்றன. "ரெண்டு பேருக்கும் நல்ல போட்டோ இல்ல. சேர்ந்தது மாதிரி எடுங்கப்பா' என்று அம்மா சொன்னதும் இருவரையும் சேர்த்து வைத்துப்படமெடுக்கிறேன்.
கடைசியாக இன்னொரு படம் எடுக்க விரும்பி அவருக்கும் பிடித்த மூங்கில் நாற்காலிலியில் கதவோரம் அமரச் சொன்னதும் இயல்பாக நடந்து அமர்கிறார்.
லென்சின் வழியே கலங்கிக் கலங்கி மீளும் அவரது முகம். நிழற்பட நேரம் நிறைவு பெற்றது. மறுமுறை போனபோது புகைப்படங்கள் நன்றாக வந்திருப்பதாகச் சொன்னார்.
பிறகு, தனது ஞாயிற்றுக்கிழமை நண்பரை அறிமுகம் செய்து வைத்தார். அவரது நாவல் முயற்சியைப் பற்றிக் கேட்டேன். எழுத விரல்கள் ஒத்துழைக்காதது குறித்துச் சொன்னார். சொல்லிச் சொல்லியாவது எழுதவேண்டும். "தஞ்சாவூர் போயிருந்த போது இரண்டாயிரம் பக்கங்கள் புரூப் பார்த்தேன். உடம்புக்கு ஒத்துக்கலை' என்றார். புன்னகையுடன் விடை கொடுத்தார். கீழிறங்கியதும் சப்தமற்றிருந்த இசைப்பள்ளியைப் பார்த்தேன். எழுது மேஜையற்றுக் குறுகலான விராந்தையின் பளிங்குத் தரையின் வெறுமையில், தொலைவிலிருந்து ஒளிரும் செவ்வகத்தின் ஒளி பட்டுப் பிரதிபலித்தது. நுழைவா யிலில் இருந்த அந்த முரட்டுப் பாரதியின் படமும், வாசலில் நிற்கும் மீராவின் பச்சை வண்ண இருக்கை கொண்ட சைக்கிளும் ஞாபகத்திற்கு வந்தன. இந்த நினைவுகளுடன் எனது சைக்கிளை நகர்த்தினேன். பிறகு எங்களுக்கான நாட்கள் வராமலே போயின.
கடைசியாக அங்கு விரைந்தபோது முன்வாசலில் கொட்டகை இருந்தது. சிவப்பு நிறத்திலான பிளாஸ்டிக் நாற்காலிகள் காலியாக இறைந்து கிடந்தன. ஈரம் பார்த்த தரையில் மலர்கள் சிதறிக் கிடந்தன. நிறைய மாலைகள் ஒரு நாற்காலியில் குவிந்திருந்தன. பதட்டத்துடன் வேறொரு பாதையில் விரைந்தேன். நகரின் பிரதானமான காந்தி வீதியில் என் மதிப்பிற்குரிய மீரா சென்று கொண்டிருந்தார். மரண நாளின் வெயில் புறந்தலையில் எரிக்க, தலை கவிழ்ந்து நண்பர்களும் உறவினர்களும் உடன் நடந்தனர்.
மௌன ஊர்வலம்... மீண்டும் திரும்பாத சாலைகளின வழியே அச்சுப் பிழையுடன் கூடிய புத்தகவரி போல நகர்ந்து செல்கிறது. பிறகு அவரவர் தனிமையுடன் வீடு திரும்பினோம். அழுத விழிகளின் இமைகள் போல இரவு கவிந்தது.
இப்போதெல்லாம் கடக்கும்போது பார்க்கிறேன்.
"2, சிவன் கோவில் தெற்குத் தெரு.'
நினைவுகளுடன் பூட்டப்பட்ட வீடு.
மீரா உள்ளிருந்து தனது புதினத்தின் அத்தியாயங் களை எழுதிக்கொண்டிருக்கிறார். அரச மரத்தின் பழுத்த மஞ்சள் இலைகள் சதா உதிர்ந்து கொண் டேயிருக்கின்றன.
(அகரம் பதிப்பகத்தின் காலத்தின் குரல் தொகுப்பிலிருந்து...)