பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று என்ற கணக்கில் உலகம் முழுதும் கண்டிப்பாக கொரோனா தொற்று இருக்கத்தான் செய்யும். ஆனால்... சரியான வகையில் அனைவரையும் பிடித்து பரிசோதணை செய்யாத காரணத்தால் அந்த விபரம் வெளியே தெரியாமல் இருக்கிறது.
அப்படி முழு மூச்சில் பரிசோதிக்கும் ஒரு சில பகுதிகளில்தான்... ""அய்யோ"" அதிகமான கொரோனா பாதிப்பு என்று கூறி முழு லாக்டவுனை போடுகிறார்கள்.
ஆனால்.. பரிசோதனையில் கொரோனா என்று ரிசல்ட் வரும் எல்லோருக்குமே கொரோனா'
தான் வந்ததா என்பது ஆண்ட
வனுக்குத்தான் வெளிச்சம்.
கொரோனா என்பது ஏற்கனவே 7, 8 வகைகளில் மனிதர்களிடம் உள்ளது. அதில் சீனாவில் புதிதாக வந்த வகைதான் இந்த கோவிட் -19. என்றாலும்... இந்த புதிய வைரஸ் 2019ல் தான் தோன்றியதா? அல்லது மற்ற வகை போலவே அதுவும் மனிதன் தோன்றிய கலத்திலிருந்து உள்ளதுதானா என்பதிலும் குழப்பம் உள்ளது.
அபூர்வமாக... மிகக் குறைவான வகையில் பரவிக் கொண்டு இருந்த இந்த கிருமியை அடையாளம் காண இதுவரை மருத்துவர்களிடம் தக்க ஆயுதங்கள் இல்லாமல் கூட இருந்திருக்கலாம். அல்லது சாதாரண வகை கொரோனா'வே தனது வாழ்விடத்தை பொறுத்து விஸ்வரூபம் எடுத்தும் வீரியம் அடைந்து கோவிட் 19 என்றும் பெயர் எடுத்திருக்கலாம்..!
உதாரணமாக...
இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்த அந்த காலத்தில் உள்ள வயல்'வெளி பூச்சிகளின் மீது, பசுமை புரட்சிக்குப் பிறகு சாதாரன பி.ஹெச்.பி. பவுடரை தெளித்தவுடன் அவை மாண்டு போயின. அதன் பிறகு அந்த மருந்துகளுக்கு அவை சாகவில்லை என்று புதிய மருந்துகளை விவசாயத் துறை அறிமுகம் செய்தது. பிறகு அதுவும் சரியில்லை என்று மீண்டும் மீண்டும் புதிய புதிய பவர்ஃபுல் மருந்துகளை தந்து கொண்டே இருக்கும்.
அதற்கு காரணம் கேட்டால், பூச்சிகளின் மீது நேரடியாக மருந்து படாமல் வேறு பகுதியில் பாதுகாப்பாக இருந்த பூச்சிகளுக்கு அந்த மருந்துகள் மிக குறைந்த சதவீதத்தில் சென்றடையும்போது, அந்த பூச்சியை அந்த மருந்துகள் கொல்லாது.
அதே போல.. அந்த சிறிய விசத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை அந்த பூச்சிகளின் மரபணுக்கள் பாடம் கற்றுக் கொள்கின்றன. பிறகு அந்த மருந்து 100% நேரடியாக வந்து தாக்கினாலும் அவை சாவதில்லை..!
ஏதோ ஒரு கொரோனா வைரஸ் தொடர்ந்து வாழ்வதற்கு ஏற்ற சூழல் ஏதோ ஒருவனின் உடலில் இருந்ததுடன், அவன் உட்கொள்ளும் மருந்துகளை எதிர்த்து சமாளிக்கும் திறனையும் அடைந்து அதை தனது ஜீனில் பதிவு செய்துகொண்டு கோவிட் 19 என்று புதிய பரிநாமத்தை அடைந்து அது மற்றவர்களுக்கும் பரவி இருக்கலாம்.
அதே போல... நமது குடும்ப டாக்டர்கள் கூட சாதாரண உடம்பு வலிக்கு மாத்திரை தரும்போது கூட இடையிடையே வேறு வேறு மாத்திரைகளை தருவதுண்டு. காரணம் கேட்டால்.... அந்த மாத்திரை மனித உடலுடன் பழகிவிட்டதால் அது தற்போது வேலை செய்யவில்லை. அதனால்தான் இப்போ வேறு பவர்ஃபுல் மாத்திரையை தயாரிக்கிறார்கள் என்பார்.
அதேபோன்று மனிதனை எதிர்கொள்கிற வித்தையை அந்த வைரஸ் ஒருவேளை கற்றுக்கொண்டு உருமாறி இருக்கலாம்.
ஆனாலும்... தற்போது இந்தியர்களுக்கு அடையாளம் காணப்படும் கொரோனா சீனாவின் கோவிட் 19 வகைதானா என்பதில் எனக்குப் பெரிய அளவில் சந்தேகம் இருக்கிறது.
அதாவது கொரோனா டெஸ்ட் கிட் இல்லைனா என்ன..? நீங்களா ஒரு ரிசல்ட்டை போட்டு விடுங்க என்று... ஒரு ஜூனியர் மருத்துவரிடம் சீனியர் மருத்துவர் கூறியதாகட்டும். அல்லது சீனாவில் இருந்து வாங்கப்பட்ட டெஸ்ட் கிட்டுகள் சரியான முடிவுகளை தரவில்லை என்ற உலகளாவிய குற்றச் சாட்டுகள் வந்ததாகட்டும், தென்கொரியாவில் பப்பாளி பழத்திற்கு கூட கொரோனா வந்திருப்பதாக கிடைத்த முடிவுகளாகட்டும், இதுபோன்ற பல சம்பவங்கள் என் போன்றவர்களுக்கு சந்தேகத்தை இன்னும் அதிகமாக்குகிறது.
மொத்தத்தில் சீனாவில் பெயரிடப்பட்ட கோவிட்19 கிருமியை பரிசோதிக்க சரியான உபகரணம் இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லையோ என்றும் பலத்த சந்தேகம் உள்ளது.
கொரோனா என்பது நமக்கு ஒன்னும் புது விசையம் இல்லை.! ஒருவருக்கு சளி ஜலதோஷம் வந்தாலோ.. அல்லது அதற்கான அறிகுறிகள் இருந்தாலோ அதுதான் கொரோனா... அதாவது நமக்கு எப்போதும் வந்து போகிற பழக்கப்பட்ட கொரோனா.
மனிதன் தோன்றிய காலம் முதல் மனிதனோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிற கொரோனா.
நமது சுவாசப்பாதை, நுரையீரல் போன்றவற்றை சுத்தப்படுத்ததுவதற்காக... இறைவனே மனிதர்களுக்காக படைத்து அனுப்பிய கொரோனா. அதாவது கோவிட் 19 அல்லாத எப்போதுமுள்ள மற்ற வகை கொரோனாக்கள், ஆனால்... அந்த கொரோனா என்கிற பெயர் நமக்கு இதுவரையும் யாரும் சொல்லவில்லை. கொரோனா என்று அனைத்து டாக்டர்களுக்கும் அதன் பெயர் கண்டிப்பாகத் தெரியும். ஆனால் நமக்கு புரியாது என்பதற்காக... சளி பிடித்திருக்கு, ஜலதோஷம் பிடித்திருக்கு என்று மட்டும் கூறுவார்கள். ஆதனால... எல்லாரும் இனிமேலாவது தெரிஞ்சுக்குங்க.. சளி ஜலதோஷம் வந்தால்.. அதுதான் கொரோனா நோய் என்று.!
கொரோனா பல வகை இருந்தாலும்...
ஒரு கூட்டத்தில் 3பேர் இருந்தால், அதில் ஒருவருக்கு ஏதாவது ஒரு கொரோனா கண்டிப்பாக இருந்தே தீரும். அதுபோல... ஒருவர் பலமாக தும்மினாலோ , சத்தமாக பேசினாலோ அந்த கொரோனா கிருமி அருகில் இருப்பவருக்கும் உடனே பரவத்தான் செய்யும். பரவ வேண்டும் என்பதுதான் இயற்கையின் விதியும் கூட. அதனால்தான் நமக்கெல்லாம் அடிக்கடி ஜலதோஷம் பிடித்தும் கொள்கிறது..!
கொரோனா என்ற ஒரு வைரஸ் வந்தால்தான்... மனிதனின் , சளி ஜலதோஷ பகுதிகள் சரியாக வேலை செய்ய தொடங்குகின்றன. அந்த வேலைகளின் காரணமாகத்தான் நமது சுவாசப் பாதையில் இருக்கும் அடைப்புகளும் கழிவுகளும் வெளியேறி சுத்தம் செய்யப்படுகின்றன.
அதன்மூலம்தான் நமது உடல் மீள் ஆரோக்கியம் பெருகிறது..!
அதனால் நமது வாழ்நாள் 100 வயது வரை அதிகரிக்கிறது. இல்லையேல் மனிதன் 20வயசுக்கு மேல வாழ்வதே பெரிய விசையம் என்றாகியிருக்கும்.
*
கொரோனா மூலமாக வரும் தும்மல்கள் நமது சுவாசப்பாதையின் கழிவுகளை துப்பாக்கி ரவையின் வேகத்தில் வெளிக் கொண்டு வருகிறது. அந்த தும்மலின் அதிர்வுகளால்தான் இதயத்தில் உள்ள சிறு சிறு அடைப்புகள் கூட தானாக திறந்து கொள்கிறது. உங்களுக்கு தும்மல் வந்தால்....உடனே இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் என்று நபிகளார் கூட கூறி இருக்கிறார்கள்.
தும்மல் வந்த அடுத்த வினாடியே நமது உடலில் ஒருவித புத்துணர்வு ஏற்படுவதை யாராலும் மறுக்க முடியாது.
அப்படியான தும்மல்கள் வருவதற்கு காரணம் மனிதனோடு சேர்ந்து வாழும் அந்த கொரோனா வைரசுகள்தான்.
*
அதே நேரம் அளவுக்கு மிஞ்சினால் எல்லாம் நஞ்சுதான் என்கிற மாதிரி... சளி அதிகரித்தாலும் அதனால் உயிர் பலிகள் நடக்கத்தான் செய்யும். அப்படி சளி அதிகரித்து சாவது என்பது..கோவிட்19 வருகைக்கு முன்பிருந்தே உலகில் நடந்து கொண்டிருக்கிற சாராசரியான விடையம்தான். உயிரிழப்புகளுக்கு அதிகபட்ச காரணமாக இருப்பதும் இந்த சளிதான்..! ஆனால் மனுதனாக பிறந்த அனைவரும் செத்துதான் ஆகனும், அந்த சாவுக்கும் ஒரு காரணமும் வேண்டும் என்பதால்தான், சளி நோய், புற்று நோய் போன்றவை இயற்கையால் படைக்கப்பட்டன.
ஆனால்... மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தின மாதிரி... இவனுக என்னமோ லாக்டவுன் மேல லாக்டவுன் போட்டுகிட்டு... நல்லா இருக்கிறவனையும் பட்டினி போட்டு சாகடிக்க பார்க்கிறானுக. லாக்டவுன் எப்போ முடியும்..?
தடுப்பூசி கண்டுபிடிச்ச பிறகு..!!
இந்த கொரோனாவுக்கெல்லாம் தடுப்பூசி கண்டு பிடிக்க முடியுமா???
கண்டிப்பாக முடியவே முடியாது..!
அது கோவிட் 19 வகை கொரோனாவாகவே இருந்தாலும் அதனோடு மனிதன் சேர்ந்து வாழ்வதுதான் சரியாக இருக்கும்.
ஏன் மருந்து கண்டு பிடிக்கமுடியாது என்றால்...??
இந்த கோவிட்19 கொரோனாவை விட்டுத் தள்ளுங்கள்... அதற்கு முன்பே நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மற்ற 7,8 வகையான சாதாரண கொரோனாக்களுக்கே இவர்களால் இதுவரையும் மருந்து கண்டு பிடிக்க முடியவில்லை..!
வேறு எந்த தொற்று நோயாக இருந்தாலும்.. ஒருவனுக்கு ஒரு முறை வந்து குணமாகிவிட்டால்... மறுமுறை அதே நபருக்கு திரும்பி வருவதற்கு வாய்ப்பு இல்லவே
இல்லை.
ஒரு முறை வந்தால்தான் அதற்கு பெயர் நோய்..! பல முறை திரும்பி திரும்பி வந்தால்.. அதற்கு பெயர் சேய். அதாவது நம்முடைய பிள்ளையாக்கும். ஆனால்... ஏற்கனவே ஈர்ஸ்ண்க்19 கொரோனா வந்தவங்களுக்கு மறுபடியும் ரெண்டாவது கிளான்ஸ் வருவதாகவும் கூறுகி றார்கள். அப்படினா அது நோயே கிடையாது, சேய்தான்.
ஒரு தொற்று நோய் ஒருமுறை நம்மிடமிருந்து விரட்டி அடிக்கப்பட்ட விபரங்களையும், அது மீண்டும் வந்தால் அதை எப்படி முளையிலேயே கிள்ளி எறிவது என்கிற கேடயத்தையும் நமது உடலியல் செல்கள் ஏற்கனவே பாடம் கற்றுக் கொள்வதால்... அதிகபட்சம் எந்த ஒரு நோயும் நமக்கு இரண்டாம் முறையாக வருவதேயில்லை.
ஆனால்... இருமல், சளி, ஜலதோஷம் போன்றவை மட்டும் விதிவிலக்காக உள்ளது. அந்த வியாதிகள், அல்லது தொற்றுகள் ஒரு மனிதனுக்கு வருடத்திற்கு 3முதல் 10தடவையாவது வந்துவிடும். அதை முறியடிக்கிற பாடத்தை மட்டும், ஏன் நமது செல்கள் கற்றுக் கொள்ள மறந்து போனது.???
நமது உடலை படைத்த இறைவன், (அல்லது இயற்கை,) அந்த பாடத்தை நீ கற்றுக் கொள்ள வேண்டாம் என்று நமது செல்களுக்கு கட்டளையிட்டு அந்த கட்டளையை அதன் மெமரியிலும் பதிவு செய்து வைத்து விட்டது. குறிப்பாக எந்த ஒரு மருந்தை நாம் சாப்பிட்டாலும்... அந்த மருந்தா நம்மை குணமடைய வைக்கிறது..?
அந்த நோயிக்கான மருந்தை எப்படி தயாரிப்பது என்று நமது செல்களுக்கு கற்றுக் கொடுப்பதுதான் அனைத்து மருந்துகளின் வேலையும். மருந்தே கொடுக்காவிட்டாலும் சரி, அந்த நோயை தீர்க்கிற வேலையை உடல் சற்று தாமதமாக.. தானே செய்துகொள்ளும். ஆனால்... சளி, ஜலதோஷம், தும்மல் போன்றவைக்கு மட்டும் எந்த மருந்துகளும் நமது செல்களுக்கு பாடம் நடத்த முடியாது..!
அப்படியே பாடம் எடுத்தாலும் அதை ஜீன் மெமரியில் பதிவு செய்து கொள்ளக் கூடாது என்பதே இயற்கையின் உத்தரவு.
அதற்குத்தான் ஒரு பழமொழி சொல்வார்கள்.. ஜலதோஷத்துக்கு மருந்து சாப்பிட்டா 7 நாளிலேயே குணமாகிவிடும். மருந்து சாப்பிடலைனா குணமடைய ஒரு வாரம் ஆகிவிடும் என்று..!
ஜலதோஷத்தை சற்று மிராக்கிலாக குணப்படுத்தக் கூடிய ஒரு சில ஆங்கில மருந்துகளும் இருக்கத்தான் செய்கிறது..! ஆனாலும்... ஜலதோஷத்திற்கான தீவிர மருந்தை சாப்பிடக் கூடாது என்று ஒரு சர்வதேச சட்டமும் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். ஏனென்றால்... அரை மணி நேரத்தில்...
ஜலதோஷத்தை விரட்டி அடிப்பது போன்ற ஒரு மாத்திரை நம் நாட்டில் ஏற்கனவே இருந்தது..! பெரும்பாலும் அந்த மாத்திரையை மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைப்பது இல்லை. ஒரு சில டாக்டர்கள் மட்டும் அதை எழுதி கொடுப்பது உண்டு. அதை சாப்பிட்ட நிமிடமே ஜலதோஷம் காணாமல் போய் விடும்..!
அந்த டேப்லட்டின் பெயர்தான் ஆக்டிபெட்.
ஆனால்.. கடந்த 10 , 15 வருடங்களாக அந்த மாத்திரைக்கு இந்திய அரசு தடை விதித்து விட்டது. அதற்கு பதிலாக.. அதைப் போலவே சற்று குறைந்த தரத்தில் வந்த மற்றொரு மாத்திரையின் பெயர் டெக்கட்ரான். பிறகு அதுவும் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு... டெட்ரசான், டெக்டாக் என்ற பெயர்களிலும் மாத்திரைகள் வந்தது.. பிறகு அவைகளும் தடை செய்யப்பட்டன..!
அதைத் தொடர்ந்து... சாதாரண ரெகுலர் பாராசிட்டமல் மாத்தியையாக இருந்த ஆக்ஷன்500 மாத்திரை ஜலதோஷத்திற்கான சிறப்பு மருந்துகளை சேர்த்து ஆக்ஷன் 500 ப்ளஸ் என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டதால்.. அதுவும் ஜலதோஷத்தை உடனடியாக தீர்க்கத் தொடங்கியது.!
வழக்கம் போல அந்த மாத்திரைக்கும் ஆப்பு வைக்கப்பட்டு, அரசால் தடை செய்யப்பட்டது.
இதிலிருந்து (எனக்கு) தெளிவாகிற விசயம் என்னவென்றால்.. சளி ஜலதோஷங்கள் அனைத் துமே கொரோனா வகை வியாதிகளே. அதற்கு உடனடியாக மருத்துவம் பார்ப்பது... மனித உடலுக்கு தீங்கானது!
சளியும் ஜலதோஷமும் ஏற்பட்டால்தால். சுவாசப் பாதைகள் தெளிவு பெறும். அதெல்லாம் சரிதான்... இப்ப பரவிக்கொண்டுருப்பது கொரோனா இல்லப்பா கோவிட் 19 என்று ஜர்ரு விடுகிறார்கள்..! சரி... இதற்கு மருந்து கண்டு பிடிப்பாங்களா என்ற கேள்விக்கு வருகிறேன்..
கொரோனாவுக்கு சூப்பரான ஒரு மருந்தை கண்டுபிடிப்பார்கள்..! அந்த மருந்தை கொரோனா பாதித்தவர்களுக்கு கொடுத்து பரிசோதித்து பார்த்ததில்... 100க்கு 90%பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறார்கள் என்ற அறிமுகத்தோடு வரலாம்.
உண்மையாகவே மருந்து கண்டு பிடிச்சா... இந்த பிரசன்டேஜ் கணக்கெல்லாம் சொல்லக் கூடாது..! 100% கண்டிப்பா குணம் அடைந்தே ஆகவேண்டும் அதுதான் உண்மையான மருந்தாக இருக்க முடியும். ஆனால்... எந்த நோயுமே இல்லாமல் உள்ள மணிதர்கள் கூட 6மாதத்தில் 2.5%பேர் சாகவேண்டும் என்பது இயற்கை விதியாக இருப்பதாலும், இவர்கள் கொரோனாவுக்கு எழுதியுள்ள திரைக்கதை ரொம்ப விவகாரமானது என்பதாலும்... 100% சாவை தடுக்கும் மருந்தை இவர்களால் கண்டு பிடிக்கவே முடியாது.
எனவே... கொரோனா நாடகங்கள் பல வருடங்களுக்குத் தொடரும்... தொடரும்... தொடரும் என்று நான் நம்புகிறேன்.
(தோழர் அபூபக்கர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி)