இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு
-என்பது வள்ளுவன் வாக்கு.
இதற்குக் கலைஞர் தரும் பொருள், ’மயக்கம் தெளிந்து மாசற்ற உண் மையை உணர்ந்தால், அறியாமை அகன்று, நலம் தோன்றும்’ என்பதா கும். ஆனால் இன்று அரசியல் கட்சி கள் சிலவற்றுக்கு அரசியலில் ஏற்பட்ட மயக்கம் தெளியவில்லை. ஓட்டும் நோட்டும் அவர்களை மேலும் மேலும் மயங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இது கலையாத மயக்கம். இதனால், தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் கட்சிகளின் முகமூடிகள் தானாய்க் கழன்று விழ ஆரம்பித்துவிட்டன.
நாட்டின் நலன்பற்றியும், மக்களின் நலன்பற்றியும் பேசிய நம் தலைவர் களில் சிலர் நோட்டுக்காகவும் சீட்டுக் காகவும் வெட்கமில்லாமல் சோரம் போவதை மக்கள் விக்கித்துப்போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கி றார்கள். நேற்றுவரை ஊழல்வாதி யாக, மக்களின் எதிரியாக, விவசாயி களின் விரோதியாக, தொழிலாளர் களின் பகைவராகத் தெரிந்தவர்கள், இப்போது புனிதர் களாகத் தெரிவது தேர்தல் கூட்டணி ஏற்படுத்துகிற மட்ட ரகமான மாயாஜா லம் அல்லவா?
நாட்டின் பாதுகாப்பிற்காகத் தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத் தோம் என கூச்ச மில்லாமல் சொல்கி றார் முதல்வர் எடப் பாடி. என்னவோ இதுவரை, பா.ஜ.க. வை முதுகெலும் போடு எதிர்த்து நின்று அரசியல் செய்ததுபோல் அவர் சொல்வது உச்சக்கட்ட வேடிக் கையல்லவா? ஜெ.’ மரணப்படுக்கைக் குப் போன நொடியிலேயே எடப்பாடி களின் சிண்டுகளைப் பிடித்துக் கொண்டது பா.ஜ.க. இந்தக் கட்சி சொல்கிறபடியெல்லாம் குட்டிக் கரணம் அடித்துவருகிற இந்த ’கூவத்தூர் குபேரர், நாட்டைப் பாது காப்பதாகச் சொல்லி மோடி அரசுக்கு ஆரத்தி எடுக்கிறார். உண்மை யில் நாட்டைப் பாதுகாப்பவர் களுக்கே இங்கே பாதுகாப்பு இல்லையென்பதை அண்மையில் அரங்கேறிய காஷ்மீர் கொடூரம் 44 உயிர்கள்மூலம் அம்பலப்படுத்தி யிருக்கிறது. இது எடப்பாடியின் கண்களுக்குத் தெரியவே இல்லை. கண் கட்டப்பட்ட அடிமை அரசுக்கு, பா.ஜ.க.வுக்கு பல்லவி பாடுவதைத் தவிர வேறுவழி இல்லை. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, தேசத் தைப் பாதுகாக்கும் அரசா?
எல்லாவகையிலும் தேசத்தை உருக்குலைத்துவரும் மோடியை, மறுபடியும் ஆட்சியிலே அமர வைக்க, இன்றுசில கட்சிகள் களமிறங்கி கூட்டணி வைப்பது என்பது எவ்வளவு பெரிய அரசியல் மோசடி?
எடப்பாடி அரசைத் தங்கள் எடுபிடி அரசாக வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் மோடி அரசு ஆட்டிவைத்தது என்பதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். மாநில அரசின் உரிமை களைப் பறிக்கும் மத்திய அரசின் திட்டங்களை எல்லாம், மிரட்டி மிரட்டி, ரெய்டுகளை நடத்தி நடத்தி ஏற்கவைத்த மோடியின் அராஜக ஆட்டத்தையும் அவர்கள் கண்ணெ திரே கண்டார்கள். அப்படிப்பட்ட பா.ஜ.க.வோடு கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் எடப்பாடி வகையறாக் கள் தேர்தல் உடன்பாடு கொண்டிருப் பது வேடிக்கையிலும் வேடிக்கை அல்லவா? இரண்டு வாரங்களுக்கு முன்புவரை அ.தி.மு.க. நாடாளுமன்ற துணை சபாநாயகரான அ.தி.மு.க. தம்பிதுரையே, தமிழகத்தின் உரிமை களை மோடி அரசு பறிக்கிறது என்று பகிரங்கமாக விமர்சித்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது ஜெ. பிறந்தநாள் விழா வில் பேசிய எடப்பாடி, கூட்டணிக் கும் கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று திருவாய் மலர்ந்திருக்கிறார். நாங்கள் இன்னும் உங்கள் காலடியில் கிடந்து மிதிபடத் தயார்’ என்று இந்த கூட்டணி உடன் பாட்டின்மூலம், பா.ஜ.க.விடம் சொல் லாமல் சொல்கி றார்கள் அ.திமு.க. வினர். அதுமட்டுமல்ல; இப்போது ராமேஸ் வரம் வந்த அமித்ஷா, மதுரை ஏர்போர்ட் டில் சந்தித்த துணை முதல்வர் ஓ.பி.எஸ். சிடம், ‘நாங்கள்தான் கூட்டணித் தலைமை.
நாங்கள் சொல்வ தைத்தான் நீங்கள் கேட்கவேண்டும். மோடி வரும் போதெல்லாம் நீங்கள் கூட்டம் கூட்ட வேண்டு மென்று, அவரோடு இருந்தவர்களை எல்லாம் நிற்க வைத்து, அரட்டி இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு -என்பது வள்ளுவன் வாக்கு.
இதற்குக் கலைஞர் தரும் பொருள், ’மயக்கம் தெளிந்து மாசற்ற உண் மையை உணர்ந்தால், அறியாமை அகன்று, நலம் தோன்றும்’ என்பதா கும். ஆனால் இன்று அரசியல் கட்சி கள் சிலவற்றுக்கு அரசியலில் ஏற்பட்ட மயக்கம் தெளியவில்லை. ஓட்டும் நோட்டும் அவர்களை மேலும் மேலும் மயங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இது கலையாத மயக்கம். இதனால், தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் கட்சிகளின் முகமூடிகள் தானாய்க் கழன்று விழ ஆரம்பித்துவிட்டன.
நாட்டின் நலன்பற்றியும், மக்களின் நலன்பற்றியும் பேசிய நம் தலைவர் களில் சிலர் நோட்டுக்காகவும் சீட்டுக் காகவும் வெட்கமில்லாமல் சோரம் போவதை மக்கள் விக்கித்துப்போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கி றார்கள். நேற்றுவரை ஊழல்வாதி யாக, மக்களின் எதிரியாக, விவசாயி களின் விரோதியாக, தொழிலாளர் களின் பகைவராகத் தெரிந்தவர்கள், இப்போது புனிதர் களாகத் தெரிவது தேர்தல் கூட்டணி ஏற்படுத்துகிற மட்ட ரகமான மாயாஜா லம் அல்லவா?
நாட்டின் பாதுகாப்பிற்காகத் தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத் தோம் என கூச்ச மில்லாமல் சொல்கி றார் முதல்வர் எடப் பாடி. என்னவோ இதுவரை, பா.ஜ.க. வை முதுகெலும் போடு எதிர்த்து நின்று அரசியல் செய்ததுபோல் அவர் சொல்வது உச்சக்கட்ட வேடிக் கையல்லவா? ஜெ.’ மரணப்படுக்கைக் குப் போன நொடியிலேயே எடப்பாடி களின் சிண்டுகளைப் பிடித்துக் கொண்டது பா.ஜ.க. இந்தக் கட்சி சொல்கிறபடியெல்லாம் குட்டிக் கரணம் அடித்துவருகிற இந்த ’கூவத்தூர் குபேரர், நாட்டைப் பாது காப்பதாகச் சொல்லி மோடி அரசுக்கு ஆரத்தி எடுக்கிறார். உண்மை யில் நாட்டைப் பாதுகாப்பவர் களுக்கே இங்கே பாதுகாப்பு இல்லையென்பதை அண்மையில் அரங்கேறிய காஷ்மீர் கொடூரம் 44 உயிர்கள்மூலம் அம்பலப்படுத்தி யிருக்கிறது. இது எடப்பாடியின் கண்களுக்குத் தெரியவே இல்லை. கண் கட்டப்பட்ட அடிமை அரசுக்கு, பா.ஜ.க.வுக்கு பல்லவி பாடுவதைத் தவிர வேறுவழி இல்லை. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, தேசத் தைப் பாதுகாக்கும் அரசா?
எல்லாவகையிலும் தேசத்தை உருக்குலைத்துவரும் மோடியை, மறுபடியும் ஆட்சியிலே அமர வைக்க, இன்றுசில கட்சிகள் களமிறங்கி கூட்டணி வைப்பது என்பது எவ்வளவு பெரிய அரசியல் மோசடி?
எடப்பாடி அரசைத் தங்கள் எடுபிடி அரசாக வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் மோடி அரசு ஆட்டிவைத்தது என்பதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். மாநில அரசின் உரிமை களைப் பறிக்கும் மத்திய அரசின் திட்டங்களை எல்லாம், மிரட்டி மிரட்டி, ரெய்டுகளை நடத்தி நடத்தி ஏற்கவைத்த மோடியின் அராஜக ஆட்டத்தையும் அவர்கள் கண்ணெ திரே கண்டார்கள். அப்படிப்பட்ட பா.ஜ.க.வோடு கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் எடப்பாடி வகையறாக் கள் தேர்தல் உடன்பாடு கொண்டிருப் பது வேடிக்கையிலும் வேடிக்கை அல்லவா? இரண்டு வாரங்களுக்கு முன்புவரை அ.தி.மு.க. நாடாளுமன்ற துணை சபாநாயகரான அ.தி.மு.க. தம்பிதுரையே, தமிழகத்தின் உரிமை களை மோடி அரசு பறிக்கிறது என்று பகிரங்கமாக விமர்சித்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது ஜெ. பிறந்தநாள் விழாவில் பேசிய எடப்பாடி, கூட்டணிக் கும் கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று திருவாய் மலர்ந்திருக்கிறார். நாங்கள் இன்னும் உங்கள் காலடியில் கிடந்து மிதிபடத் தயார்’ என்று இந்த கூட்டணி உடன் பாட்டின்மூலம், பா.ஜ.க.விடம் சொல் லாமல் சொல்கி றார்கள் அ.திமு.க.வினர்.
அதுமட்டுமல்ல; இப்போது ராமேஸ் வரம் வந்த அமித்ஷா, மதுரை ஏர்போர்ட் டில் சந்தித்த துணை முதல்வர் ஓ.பி.எஸ். சிடம், ‘நாங்கள்தான் கூட்டணித் தலைமை.
நாங்கள் சொல்வ தைத்தான் நீங்கள் கேட்கவேண்டும். மோடி வரும் போதெல்லாம் நீங்கள் கூட்டம் கூட்ட வேண்டு மென்று, அவரோடு இருந்தவர்களை எல்லாம் நிற்க வைத்து, அரட்டி உருட்டி மிரட்டியதை ஜீரணிக்க முடியாமல், அ.தி.மு.க. தொண்டர்கள் மனம் குமுறிக் கொண்டி ருக்கிறார்கள். எனினும் ரெய்டு பயம், மோடிக்கு சரணம் பாட வைத்திருக் கிறது எடப்பாடியை.
பா.ஜ.க.வும் அ.தி.மு.க. வும் கைகோத்திருக்கும் இந்தக் கூட்டணியில், மேலும் சேர்ந் திருக்கிற இன்னொரு சுய மரியாதைக் கட்சி எது தெரியுமா?
பா.ம.க.தான். திராவிடக் கட்சி களோடு எந்தக் காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று டாக்டர் ராமதாஸும் அன்புமணியும் மாறிமாறிச் சூளுரைத்தார்கள். உலகிலேயே மிகப்பெரிய ஊழல் ஆட்சி எடப்பாடி ஆட்சிதான் என்று ஊழல்குறித்த புகார் பட்டி யலை, ஊர்வலமாகச் சென்று கவர்னரிடம் கொடுத்த கட்சி பா.ம.க.தான் அண்மையில் மயிலை மாங்கொல்லையில் பேசிய ராமதாஸ், ""மதுக்கடைகளை மூட வேண்டுமென்று போராடும் பெண்கள்மீது தாக்குதல் நடத்து கின்றனர். இவர்கள் ஆட்சியில் 425 விவசாயிகள் தற்கொலை செய்தது பெருங்கொடுமை. இந்த ஆட்சி சாக்கடையைவிட மோசமான ஆட்சி. இங்கே எங்கும் ஊழல் எதிலும் ஊழல்'' என்றதோடு, ""அமைச்சர் சரோஜா ஆறு வருடத்தில் ஆறு கோடி சம்பாதிக்க வேண்டுமென்று இலக்கு வைத்து ஊழல் செய்கிறார்.
ஊழல் பட்டியலில் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் போன்ற அமைச்சர்களும் இருக் கிறார்கள். ஊழலை வைத்து ரேங்க் போட்டால் முதலிடத்தில் முதலமைச்சர் எடப்பாடிதான் இருப்பார்'' என்று கடுமையாக விமர்சித்தார். அவரது இந்த விமர்சனமும் மக்கள் மீதான அக்கறையும், நோட்டு அரசியலில் கரைந்து காணாமல் போய்விட்டது.
எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று எடப்பாடி அரசை கடுமையாக விமர்சித்த பா.ம.க. வுக்கு இப்போது போதிசத்துவராகத் தெரிகிறார் எடப் பாடி. ஊழல் அமைச் சர்கள் எல்லாம் டாக்டர் ராமதாஸின் அன்புத் தம்பிகளாக மாறி, தைலாபுரத்தில் மணக்க மணக்க விருந்து சாப்பிட்டி ருக்கிறார்கள். இவர்களின் கூட்டணி பற்றி செய்தியாளர்கள் அன்பு மணியிடம் கேள்வி எழுப்பியபோது, அதை எதிர்கொள்ள முடியாமல் பாதியிலேயே பிரஸ் மீட்டை முடித்துவிட்டுக் கிளம்பியிருக்கி றார். செய்தியாளர்களையே எதிர் கொள்ள முடியாதவர், களத்தில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
இவர்களின் இந்தக் ’கூட்டணி தர்மம்’ பற்றி இதற்குமேல் எப்படி நாம் விமர்சிப்பது? ஒருசில சீட்டுகளுக் காகவும் லாபத்திற்காகவும் ஒரு பொறுப்பான கட்சி பொறுப்பில்லா மல் நடந்துகொள்வதை வரலாறு ஏகடியம் செய்யாதா? இவர்களோடு மேலும் சில கட்சிகள் சேர்ந்து கரசேவை செய்து, மோடியை பிரதமர் நாற்காலியில் மீண்டும் உட்காரவைக்க வேண்டுமென்று துடிதுடிக்கின்றன. இப்படிப்பட்ட கட்சிகள், நேரடியாக மோடிக்கு உதவுகின்றன என்றால், இன்னும் சிலர் மோடி எளிதாக மீண்டும் ஆட்சி பீடத்தில் அமரவேண்டும் என்ற கரிசனத்தோடு மறைமுகமாக அவருக்கு உதவத் துடிக்கிறார்கள்.
மோடியை ஆதரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினியோ, ""என் பெயரையோ மன்றத்தையோ எந்தக் கட்சியும் பயன்படுத்தக்கூடாது. நான் யாரையும் ஆதரிக்கவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார். அதே சமயம், என் மன்றத் தினர் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடலாம்'' என்று நடுநிலை யோடு சொல்லிவிட்டார். இதன்மூலம் மோடிக்கு எதிராக வாக்களித்தாலும் எனக்குக் கவலை யில்லை என்கிற தொனி இருக்கிறது.
அதைப் பாராட்ட லாம்.
ஆனால் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி யிருக்கும் கமல், அ.தி.மு.க.வோடு சேர்த்து தி.மு.க.வையும் சாடுகி றார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நினைவூட்டி அ.தி.மு.க வை விமர்சிக்கிறார். இந்துத் துவா கூடாது என்கிறார். பா.ஜ.க. வின் ’பி ’டீம் என்று என்னைச் சொல்லாதீர்கள் என்கிறார். ஆனால், மோடி அரசுக்கு எதிரான ஓட்டுக்கள் ஒரே பக்கம் குவியவேண்டும் என்ற எண்ணத் திற்கு எதிராக, தனியே நின்று தன் ஆதரவு ஓட்டைப் பிரித்து... மோடிக்கு மறைமுக உதவிக்கரம் நீட்டுகிறார். எடப்பாடியை விமர் சிக்கும் அவர், அவருக்கு எதிரான ஓட்டுக்களை அவருக்கு எதிர்த் திசையில் குவிக்க மறுக்கிறார்.
இது எப்படி மோடிக்கும் எடப் பாடிக்கும் எதிரான அரசியல் ஆகும்?
எல்லோரும் சுயநலக்கணக் கைப் போடுகிறார்களே ஒழிய, இந்தியாவின் எதிரியையும், தமிழகத்தின் எதிரியையும் ஒன்று சேர்ந்து ஓரம்கட்டுவோம் என்ற எண்ணத்துக்கு வரமறுக்கிறார் கள். கொடுங்கோன்மையும் கோமாளித்தனமுமாக நம்மை ஆளும் மத்திய மாநில அரசுகள் துரத்தப்பட வேண்டுமானால்...
இவர்களுக்கு எதிரான ஓட்டுக் கள் எல்லாம் ஒரே பக்கம் குவிய வேண்டும்.
அதேசமயம் எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரட்டி, மோடிக் கும் எடப்பாடிக்கும் உரிய பதிலடியைத் தரவேண்டிய பெரும் பொறுப்பில் இருக்கிற தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இன்னும் முனைப்பாக, கலைஞர் கைக்கொண்ட அரசியல் சாணக்கியத் தனத்தோடு செயல்படவேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்புமாகும்.
தன்னை நம்பிவந்த கூட்டணிக் கட்சிகளிடம் இன்னும் அவர் நெருக்கம் பாராட்டவேண்டும். தங்க ளோடு பேச்சுவார்த்தை நடத்திய பா.ம.க.வை, தி.மு.க. இன்னும் பதமாக அணுகியிருக்கவேண்டும். சீட் விஷயத்தில் அவர்கள் விருப்பத்தை அனுசரித்து அவர்களைத் தங்கள் கூட்டணியில் வைத்திருக்கவேண்டும். தங்கள் பக்கம் வர நினைத்தவர்களை எதிர் கூடாரத்திற்கு அனுப்பி வைப்பது என்பது விவேகமான செயலாகப் படவில்லை. ஏனென்றால் பலமாக வும் வலிமையாகவும் மோதி வீழ்த்த வேண்டிய அழிவு சக்தி எதிரில் நிற்கிறது.
அப்படியிருக்க கவனம் கொண்டிருக்க லாம். (ஒருசில சீட்டுகளுக்காக- அது சீட்டுகளாக இருந்தால் மட்டும் தான். வெளியில் "சொல்லாத' 11-ஆவது கோரிக்கைகளை நாங்கள் வலியுறுத்த வில்லை.)
அதேபோல் கருத்து வேறுபாடுகளை மறந்து தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த்தின் இருப்பிடம் தேடிச் சென்று, அவரிடம் நலம் விசாரித்தது என்பது ஸ்டாலின் அவர் களின் பெருந் தன்மையையும் பண் பாட்டையும் காட்டுகிறது. பொது நலனுக்காக சுயமரியாதையைக்கூட விட்டுக்கொடுக்கலாம் என்பது தானே பெரியார் காட்டிய உயர் நெறி.
அதேபோல், தோழமைக் கட்சி களை நாம் இன்னும் தி.மு.க. கூட்டணி யில்தான் இருக்கிறோமா? என்று அல்லாடவிடுவது எந்தவகை யில் சரியானது? எல்லோருடனும் மனம் கலந்துபேசி, நிலைமையை விளக்கி, அவரவருக்கு உரிய சீட்டுகளை விரைந்து ஒதுக்கி னால், இந்நேரம் எல்லோரும் தேர்தல் வேலைகளைத் தொடங்கி யிருப்பார்களே. எனவே, தி.மு.க. விசால மனதோடு, இன்னும் தன் செயல் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது நடுநிலையாளர் களின் எதிர்பார்ப்பாகும். எதிரிகளை வீழ்த்துவது முக்கியம் என்றால், அதற்குத் தன் தோழமைக் கட்சிகளை தி.மு.க. அரவணைப்பது மிக மிக முக்கியம்.
நமக்கிருக்கும் கவலை, மக்களை நிலைகுலைய வைத்துவரும் நம் எல்லோருக்குமான பொது எதிரிகள் எந்தவகையிலும் மீண்டும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதுதான். ஏனெனில் இனியும் இவர்களைத் தாங்குவதற்கான சக்தி நம் மக்களுக்கு இல்லை.
-மாற்றம் நோக்கிய எதிர்பார்ப்பில்...
நக்கீரன்கோபால்