மனு ஸ்மிருதி சர்ச்சை!

/idhalgal/eniya-utayam/manu-smriti-controversy

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்’ -என்பது வள்ளுவர் வாக்கு.

இதன் பொருள், நன்மை எது? தீமை எது? என்ற தெளிவில்லாமல், தீமையை நோக்கி நகர்வதே பேதைமை என்பதாகும்.

இன்றைய பா.ஜ.க., இப்படிபட்ட பேதமையோடு மதவாத அரசிய லைக் கையில் எடுத்து, களமாட நினைப்பது, தமிழக மக்கள் மத்தியில் கவலையையும் பதட்டத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மதவாதம் என்பது இரு பக்கமும் கூர் கொண்ட அபாயகரமானக் கத்தியாகும். அது எதிராளியை மட்டு மல்லாது, அதைக் கையாள்பவர் களையும் காயப்படுத்தும் என்பதை பா.ஜ.க. நினைத்துப் பார்க்க வேண்டும் .

*

தமிழக மக்களைத் தங்கள் கொள்கையாலும் சாதனைகளாலும் ஈர்க்க முடியாத பா.ஜ.க., அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் மதவாத அரசியலைக் கையில் எடுத் திருக்கிறது. அதன் மூலம் கலவரத் தீயை மூட்டி, அதில் குளிர்காயலாம் என்று மனப்பாலும் குடித்து வருகிறது.

அதனால் இப்போது அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை வைத்து, தனது அரசியல் பரமபத ஆட்டத்தை ஆட முயல்கிறது. யார் மீது வேண்டுமானாலும் மத துவேசப் புகாரை எழுப்பலாம். அவர்களுக்கு எதிராக மத உணர்வைத் தூண்டலாம் என்று பா.ஜ.க.. தரப்பு கணக்குப் போடுகிறது. இதன் மூலம் அவர்கள் தமிழக மக்களிடையே மதக்கலவரத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள்.

அவர்கள் நினைத்தபடி எல்லாம் மக்களை ஆட்டிவைக்க, இது ஒன்றும் குஜராத்தோ, உ.பி.யோ அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது பெரியார் மண். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, திராவிட இயக்கத் தலைவர்களால் தொடர்ந்து சலவை செய்யப் பட்ட மண். எனவே அவர்கள் திராவிட இயக்கங்களுக்கு எதிராக இங்கே உருவாக்க நினைக்கும் கலவரச் சூறாவளி, விரைவில் பிசுபிசுத்துப் போகும் என்பதுதான் உண்மை.

பா.ஜ.க. மலின அரசியலை கையில் எடுக்கிறது. தங்கள் அரசியல் வளர்ச்சிக்காக அவர்கள், அப்பாவி மக்களைக் கலவரத்தில் தள்ளப் பார்க்கிறார்கள். அதன் மூலம் மக்களைப் பலிகடா ஆக்கி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். இது கயமையிலும் கயமை.

திராவிட இயக்கங்களுக்கு எதிராகத் தொடர்ந்து காய்நகர்த்தும் பா.ஜ.க., அரசின் புலனய்வு அமைப்புகளான சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு போன்றவற்றையும் அது, பகிரங்கமாகவே பிடிக்காதவர்கள் மீது ஏவி வருகிறது. ரெய்டு அஸ்த்திரத்தைக் காட்டி,

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்’ -என்பது வள்ளுவர் வாக்கு.

இதன் பொருள், நன்மை எது? தீமை எது? என்ற தெளிவில்லாமல், தீமையை நோக்கி நகர்வதே பேதைமை என்பதாகும்.

இன்றைய பா.ஜ.க., இப்படிபட்ட பேதமையோடு மதவாத அரசிய லைக் கையில் எடுத்து, களமாட நினைப்பது, தமிழக மக்கள் மத்தியில் கவலையையும் பதட்டத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மதவாதம் என்பது இரு பக்கமும் கூர் கொண்ட அபாயகரமானக் கத்தியாகும். அது எதிராளியை மட்டு மல்லாது, அதைக் கையாள்பவர் களையும் காயப்படுத்தும் என்பதை பா.ஜ.க. நினைத்துப் பார்க்க வேண்டும் .

*

தமிழக மக்களைத் தங்கள் கொள்கையாலும் சாதனைகளாலும் ஈர்க்க முடியாத பா.ஜ.க., அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் மதவாத அரசியலைக் கையில் எடுத் திருக்கிறது. அதன் மூலம் கலவரத் தீயை மூட்டி, அதில் குளிர்காயலாம் என்று மனப்பாலும் குடித்து வருகிறது.

அதனால் இப்போது அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை வைத்து, தனது அரசியல் பரமபத ஆட்டத்தை ஆட முயல்கிறது. யார் மீது வேண்டுமானாலும் மத துவேசப் புகாரை எழுப்பலாம். அவர்களுக்கு எதிராக மத உணர்வைத் தூண்டலாம் என்று பா.ஜ.க.. தரப்பு கணக்குப் போடுகிறது. இதன் மூலம் அவர்கள் தமிழக மக்களிடையே மதக்கலவரத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள்.

அவர்கள் நினைத்தபடி எல்லாம் மக்களை ஆட்டிவைக்க, இது ஒன்றும் குஜராத்தோ, உ.பி.யோ அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது பெரியார் மண். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, திராவிட இயக்கத் தலைவர்களால் தொடர்ந்து சலவை செய்யப் பட்ட மண். எனவே அவர்கள் திராவிட இயக்கங்களுக்கு எதிராக இங்கே உருவாக்க நினைக்கும் கலவரச் சூறாவளி, விரைவில் பிசுபிசுத்துப் போகும் என்பதுதான் உண்மை.

பா.ஜ.க. மலின அரசியலை கையில் எடுக்கிறது. தங்கள் அரசியல் வளர்ச்சிக்காக அவர்கள், அப்பாவி மக்களைக் கலவரத்தில் தள்ளப் பார்க்கிறார்கள். அதன் மூலம் மக்களைப் பலிகடா ஆக்கி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். இது கயமையிலும் கயமை.

திராவிட இயக்கங்களுக்கு எதிராகத் தொடர்ந்து காய்நகர்த்தும் பா.ஜ.க., அரசின் புலனய்வு அமைப்புகளான சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு போன்றவற்றையும் அது, பகிரங்கமாகவே பிடிக்காதவர்கள் மீது ஏவி வருகிறது. ரெய்டு அஸ்த்திரத்தைக் காட்டி, விரும்பியவர்களை எல்லாம் அது தங்கள் பக்கம் இழுக்க முனைகிறது. தங்களின் இப்படிப்பட்ட சூதாட்ட அரசியலுக்கு நடுவில்தான், இப்போது மதவாத ஆயுதத்தைத் திரைமறைவில் இருந்தபடி சுழற்றுகிறது. தேசத்தை ஆளுகிறவர்களே தேச மக்களைப் பதட்டத்தில் ஆழ்த்துவது என்பது எந்த நாட்டிலும் இல்லாத கொடூரமாகும்.

thiruma

*

தமிழகத்தில் எப்படியாவது தாமரையை மலர வைத்துவிட வேண்டும் என்று மனப்பால் குடிக்கிறது பா.ஜ.க. அதற்கு ஜெ; வின் மரணத்தைச் சாதகமாக்கி அ.தி.மு.க. வைத் தங்கள் ரிமோட் கண்ட்ரோலில் வைத்துக்கொண்டு அது விரும்பம் போல் ஆட்டி வைத்துக்கொண்டி ருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் சட்ட மன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்துவிடவேண்டும் என்று பா.ஜ.க.வினர் துடியாய்த் துடிக்கிறார்கள்.

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியும் அப்படி ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக அது மனசாட்சி இல்லாமல், மதவெறி அரசியலைக் கையில் எடுப்பதும், அதை வைத்து மக்களை மோத வைக்க முயல்வதும்தான் ஆபத்தானது.

வரும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதை விட, பெரியாரியத்தைத் தொடர்ந்து தூக்கிப் பிடிக்கும் தி.மு.க.

கூட்டணி, இங்கே வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில்தான் பா.ஜ.க. கவனமாக இருக்கிறது. அதற்காக தி.மு.க.வோடு தொடர்புடையவர் களையும் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளையும் அது தொடர்ந்து குறிவைக்கிறது. அவர்களின் கால்களை இடறிவிடும் முயற்சியைத் தொடர்ந்து செய்கிறது. அதற்காக அவர்கள் கையில் எடுக்கும் உத்திகள் பகிரங்கமான சகுனித்தனங்களாக இருப்பதுதான் வேடிக்கை.

தங்களுக்கு எதிரான கருத்துக்களை சொல்பவர்களை அவர்கள் எதிர்த்தால் கூட அதில் லாஜிக் இருக்கிறது என்று விட்டு விடலாம். ஆனால், எங்களுக்குப் பிடிக்காதவர்கள் எதைச் சொன்னா லும் அதைப் பிரச்சினை ஆக்குவோம் என்று அவர்கள் வரிந்துகட்டு வதைத்தான் சகிக்கமுடியவில்லை.

ஒருவன், சாலையில் கழிவுநீர் சாக்கடையைத் திறந்துவிட்டு விட்டான் என்று குற்றம் சாட்டி னால், பொதுமக்கள் நடக்கும் சாலையில் கழிவு நீரைத் திறந்துவிட்டவன் அவர் களுக்குக் குற்றவாளி இல்லையாம். அதைக் கண்டு வருந்தி, அதை மற்றவர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறவர்கள்தான் அவர்கள் பார்வையில் குற்றவாளியாம். இப்படியொரு பாலிசியைக் கையில் வைத்துக்கொண்டு, மதக்கலவர நெருப்பைப் பற்றவைக்க முனைகிறார்கள் மதவெறி தாதாக்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கவிஞர் வைரமுத்து திருப்பாவை பாடிய ஆண்டாளின் உயர்வைப் பற்றி கடந்த 2018 ஜனவரி 7-ந் தேதி, பரவசத் தமிழில் கட்டுரை ஆற்றினார்.

அந்த உரையில் ஆண்டாளின் தமிழையும் பக்தியையும் மெய்யுருக மெச்சிய அவர், ஆண்டாள் பற்றி ’அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட ஒரு நூலின் குறிப்பை போகிற போக்கில் மேற்கோள் காட்டிவிட்டு, இதைப் பக்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். இதன் பிறகும் வைரமுத்துவுக்கு எதிராக வரிந்துகட்டிய பா.ஜ.க. தரப்பு, அந்த நூலை எழுதியவரை விட்டுவிட்டு, அதை மேற்கோள் காட்டிய வைரமுத்து, ஆண்டாளை இழிவு செய்துவிட்டார் என்று கூப்பாடு போட்டுக் கும்பல் கூட்டியது.

வைரமுத்துவின் அந்தக் கட்டுரையே ஆண்டாளின் புகழைப் பாடிய கட்டுரைதான் என்பதை வசதியாக மறந்துவிட்டு, அவர் காட்டிய ஒரு மேற்கோளைக் கட்டிக்கொண்டு தொங்கினார்கள். அவருக்கு எதிராக இந்துத்துவா சக்திகளை எல்லாம் திரட்டி போராட்டங்களை நடத்தினார்கள். ஆண்டாளின் பெருமையைக் காப்பதற்காக அவர்கள் போராட்டம் நடத்தவில்லை; வைரமுத்துவைத் தாக்குவதற்காகத்தான் போராடச் சொல்கிறார்கள் என்பதைத் தமிழக மக்கள் புரிந்து கொண்டதால், அந்த போராட்டம் வலுவிழந்த புயலாய்க் காணாமல் போய்விட்டது.

அதேபோல் கடந்த ஜூலை மாதத்தில், கறுப்பர் கூட்டம் என்கிற யுடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள், கந்த சஷ்டிக் கவசத்துக்கு விளக்கவுரை சொன்னார்கள். உடனே, ’ ஐயோ.. ஆபாசம் ஆபாசம்’ என்று கூப்பாடு போட்ட பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவா சக்திகள், மூல நூலை விட்டுவிட்டு, உரை சொன்ன கறுப்பர் கூட்டத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அராஜகப் போராட்டங்களை நடத்தினார்கள். சேனல் காரர்களைக் கைது செய்ய வைத்ததோடு, அவர்களுக்கும் தி.மு.க.வுக்கும் தொடர்பு உண்டு என்றும் கொடி பிடித்தார்கள். பா.ஜ.க.வினரின் அந்த முயற்சியும், வலுவில்லாமல் பிசுபிசுத்துப் போய்விட்டது.

இந்த நிலையில்தான் இப்போது சிறுத்தைகள் திருமாவைக் குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

vairamuthu

அதற்குக் காரணம், சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருக்கும் வீரியமான கட்சி. அதனால் அதன் தலைவர் திருமாவுக்கு எதிராகக் கலவரத்தை உருவாக்கி, அதில் தி.மு.க.வையும் சிக்கவைத்து, தேர்தல் நேரத்தில் இவர்களின் இமேஜை டேமேஜ் செய்துவிடலாம் என்று, அவர்கள் டெல்லியின் துணையோடு விறுவிறுப்பாக வியூகம் வகுக்கிறார்கள். அதன்படி அடாவடியாகக் காய் நகர்த்தவும் ஆரம்பித்துவிட்டனர். திருமா அப்படி என்ன பேசிவிட்டார்?

செப்டம்பர் 27-ந் தேதி ’பெரியார்-அம்பத்கர் படிப்பு வட்டம்’ என்ற தனியார் தொலைக்காட்சிச் சேனலில் பேசிய அவர், மனுதர்மம் ஒட்டுமொத்த பெண்களையும் இழிவாகச் சித்தரிப்பதையும் அவர்களின் உரிமைகளை மறுப்பதையும் சொல்லி, அதைப் புறக்கணிக்கவேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார். பெண்கள் விடுதலை பெறவேண்டும் என்றால் மனுதர்மத்தை மறுத்தாகவேண்டும் என்று அவர் அழுத்தமாகக் குரல் கொடுத்திருக்கிறார்.

அவரது பேச்சு பெண்ணுரிமைக் குரலாகத்தான் அங்கே ஓங்கி ஒலித்திருக்கிறது.

ஆனால் பா.ஜ.க.வினரோ, அவரது பேச்சை வெட்டியும் ஒட்டியும் எடிட் செய்து, அவர் பெண்களை இழிவாகப் பேசியது போல் சித்தரித்து வைத்துக்கொண்டு, அவரைக் கைது செய்யவேண்டும் என்று ஊருக்கு ஊர் புகார்களைக் கொடுத்து வருகிறார்கள். பா.ஜ.க. கொடுத்த அழுத்தத்தால் கடந்த 23-ந் தேதி சென்னை சைபர் க்ரைம் போலீஸார் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்கைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.

மேலும், பா.ஜ.க.வின் புதிய விருந்தாளியான நடிகை குஷ்புவை விட்டு, திருமாவளவனைக் கடுமையாக விமர்சிக்க வைத்த பா.ஜ.க., குஷ்புவின் தலைமையில் திருமாவளவனுக்கு எதிரான போராட்டம் 27-ந் தேதி சிதம்பரத்தில் நடக்கும் என்றும் அறிவித்தது. குஷ்பு நாட்டையே புரட்டிப் போடும் அளவுக்குப் போராட்டத்தை நடத்தப்போகிறார் என்பது போல் பில்டப் கொடுத்து, அவரைப் சிதம்பரம் போகும் வழியில் முட்டுக்காட்டிலேயே எடப்பாடி அரசு, அவருக்கு சல்யூட் வைத்து கைது செய்திருக்கிறது. பொதுவாக போராட்டத்தில் கைது செய்பவர்களை ஏதேனும் ஒரு திருமண மண்டபத்திலோ, மைதானத் திலோதான் மாலை வரை வைத்திருப்பார்கள். ஆனால் குஷ்பு மீது பா.ஜ.க.வின் ராஜ முத்திரை இருப்பதால், அவரை கேளம்பாக்கம் ஆடம்பர ரெசார்ட் ஒன்றில் தங்கவைத்து உருகி உருகி உபசரித்திருக்கிறார்கள்.

திருமாவளவனுக்கு எதிராக, தங்கள் கட்சிக்கு நேற்று வந்த குஷ்புவைத் தங்கள் போராளியாக நிறுத்தியிருக்கிறது பா.ஜ.க. குஷ்புவின் கடந்த கால வரலாறும் திருமாவின் அரசியல் வரலாறும் ஒன்றல்ல. குஷ்பு எந்த விதத்திலும் திருமாவுக்கு நிகரானவர் இல்லை என்பதை நாடறியும்.

அதேபோல் குஷ்புவைப் பற்றியும் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் தி.மு.க.வில் இருந்ததும், எதனால் அவர் காங்கிரஸுக்குப் போனார் என்பதும் பலரும் அறிந்த ரகசியம்தான். காங்கிரஸிலும் தனக்கு எந்த வித பலனும் பதவியும் கிடைக்காததால், அங்கிருந்தபடியே அமித்ஷாவைச் சந்தித்து, பா.ஜ.க.வோடு டீலிங் பேசி, சில உத்தர வாதங்கள் பெற்ற பிறகுதான், குஷ்பு என்னும் ’போராளி’ பா.ஜ.க.வில் அடைக்கலம் ஆனார்.

deed

இந்த குஷ்பு 2005-லேயே பெண்களைப் பற்றி இழிவாகப் பேசினார் என்று தமிழகம் முழுக்க அவர் மேல் புகார்கள் கொடுக்கப்பட்டதையும், நீதிமன்றங்களுக்குப் போகும் போதெல்லாம் பெண்கள் அவர் மீது அழுகிய முட்டை களை வீசியதையும் யாரும் மறந்திருக்க முடியாது. அப்படி பெண்களின் எதிர்ப்பைச் சந்தித்த குஷ்புதான், இன்று பெண்களைத் திருமாவளவன் இழிவு செய்தார் என்று, எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி, பா.ஜ.க. பேனரில் இருந்துகொண்டு கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறார்.

திருமா கால் நூற்றாண்டு அரசியல் அனுபவம் கொண்ட இளம் தலைவர். தாழ்த்தப் பட்ட மக்களின் விடுதலைக் குரலை உரத்து முழங்கி வருவதோடு, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கான களப்போராளியாகவும் அவர் களமாடி வருகி றார். சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அவர் குரல் ஒரு கட்சிக்கான குரலாக இல்லாமல் தமிழகத்தின் குரலாக ஒலித்ததை நாடே கவனித்து வருகிறது. அரசியல் களத்தில் வலிமையானவராக திகழ்ந்தாலும், எல்லோரிடமும் எளிமையாகப் பழகும் பண்பாளராகவும் அவர் விளங்குகிறார்.

அப்படிப்பட்ட திருமாவைக் குறிவைத்து இங்கே அரங்கேற்றப்படும், சதித்திட்டங்களை தமிழக மக்கள் உறுதியாக முறியடிப்பார்கள். தி.மு.க. கூட்டணிக்கு எதிராக நேர்மையான முறையில் அரசியல் களமாடவேண்டிய பா.ஜ.க. ஆபத்தான மத அரசியலைக் கையில் எடுப்பது, ஒட்டு மொத்த தமிழக மக்களையும் பதட்டப் பரபரப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

நாம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகக் குரல் கொடுக்க முனையவில்லை. அரசியலில் இது போன்ற மலினமான, ஆபத்தான மதவாத அரசியல் புகக்கூடாது என்பதை வலியுறுத்தவே, நியாயமாக கவலையை வெளிடுகிறோம்.

பா.ஜ.க.வின் இந்த அராஜக மதவாத டெக்னிக்கை தமிழகம் அனுமதிக்காது. அனுமதிக்கவும் கூடாது.

-கவலையோடு,

நக்கீரன்கோபால்

uday011120
இதையும் படியுங்கள்
Subscribe