சனிக்கிழமை மதியத்திற்குப் பிறகு அலுவலகம் இல்லை. ஒரு பெரிய டின் புகையிலையையும், இரண்டு மூன்று பீர் புட்டிகளையும் வாங்கிக்கொண்டு நேராக வீட்டிற்குச் செல்லலாமென்று அசோகன் கருதினான். ஒரு மணி ஆனதும், அவன் மேஜையை சரிசெய்தான். கோப்புகளையும், ஃபோல்டர்களையும் அடுக்கிவைத்தான். மேஜையைப் பூட்டினான். சாவியை எடுத்துப் பைக்குள் போட்டான். புகையிலைப் பையைத் திறந்தான். பைப்பை எடுத்து, அதை நிறைத் தான். பைப்பைப் பற்றவைத்து புகையைவிட்டவாறு அவன் அலுவலகத்தின் கலை வேலைப்பாடுகள் கொண்ட படிகளில் இறங்கினான்.
படிகளுக்குக் கீழே அவனுடைய ப்யூன் நின்றிருந் தான். ப்யூனின் பெயர் கால்பகதூர்... கால்பகதூர் கூர்க்கா... கூர்க்கா இளைஞன்... இளைஞனுக்கு ஆரஞ்சின் நிறம்...
கால்பகதூர் செவியைச் சொறிந்தான். பற்களை வெளியே காட்டிச் சிரித்தான். பைப்பை வாயிலிருந்து எடுக்காமலேயே அசோகன் கேட்ôன்:
""பகதூர், என்ன வேணும்?''
பகதூர் எதுவுமே கூறாமல் நின்றவாறு சிரித்தான். தலையைச் சொறிந்தான்.
காசுக்காக இருக்கவேண்டும்.
""பணம் வேணுமா பகதூர்?''
அவன் எதுவுமே கூறாமல் நின்றவாறு தலையைச் சொறிந்தான்.
""எவ்வளவு வேணும்?''
அவன் பைக்குள் கையை நுழைத்தான். நோட்டும் சில்லரையும் தடுத்தன.v ""பணம் வேணாம்.''
பகதூர் கூறினான்.
""பிறகு... உனக்கு என்ன வேணும்? சொல்லு...''
பகதூர் தட்டுத் தடுமாறி தெளிவற்ற இந்தியில் கூறினான்:
""ஹமாரா... ஸாதி ஹோகயா.''
""திருமணம் ஆயிடிச்சா... நீ ஏன் எங்கிட்ட சொல்லல?''
அவன் அவனுடைய தோளில் கையை வைத்து, அன்புடன் கூறினான்.
கால்பகதூரின் ஆரஞ்சு முகம் சிவந்தது. கண்கள் சிறிதாயின.
""சரி பகதூர்... திங்கட்கிழமை பார்க்கலாம்.''
அவன் பைப்பை எடுத்து வாயில் வைத்தான். விடைபெறுவதாகக் கூறினான்.
""ஒரு நிமிஷம்... ஸாப்.''
கால்பகதூர் சொன்னான். தொடர்ந்து அவன் கூறினான்:
""ஸாப்... மதிய உணவு எங்க வச்சு...''
மதிய உணவா? அதைப் பற்றி நினைக்கவில்லை.
""ஸாப்... என் அறைக்கு வர்றீங்களா?''
பணிவுடன், தலையைக் குனிந்து நாயைப்போல கா
சனிக்கிழமை மதியத்திற்குப் பிறகு அலுவலகம் இல்லை. ஒரு பெரிய டின் புகையிலையையும், இரண்டு மூன்று பீர் புட்டிகளையும் வாங்கிக்கொண்டு நேராக வீட்டிற்குச் செல்லலாமென்று அசோகன் கருதினான். ஒரு மணி ஆனதும், அவன் மேஜையை சரிசெய்தான். கோப்புகளையும், ஃபோல்டர்களையும் அடுக்கிவைத்தான். மேஜையைப் பூட்டினான். சாவியை எடுத்துப் பைக்குள் போட்டான். புகையிலைப் பையைத் திறந்தான். பைப்பை எடுத்து, அதை நிறைத் தான். பைப்பைப் பற்றவைத்து புகையைவிட்டவாறு அவன் அலுவலகத்தின் கலை வேலைப்பாடுகள் கொண்ட படிகளில் இறங்கினான்.
படிகளுக்குக் கீழே அவனுடைய ப்யூன் நின்றிருந் தான். ப்யூனின் பெயர் கால்பகதூர்... கால்பகதூர் கூர்க்கா... கூர்க்கா இளைஞன்... இளைஞனுக்கு ஆரஞ்சின் நிறம்...
கால்பகதூர் செவியைச் சொறிந்தான். பற்களை வெளியே காட்டிச் சிரித்தான். பைப்பை வாயிலிருந்து எடுக்காமலேயே அசோகன் கேட்ôன்:
""பகதூர், என்ன வேணும்?''
பகதூர் எதுவுமே கூறாமல் நின்றவாறு சிரித்தான். தலையைச் சொறிந்தான்.
காசுக்காக இருக்கவேண்டும்.
""பணம் வேணுமா பகதூர்?''
அவன் எதுவுமே கூறாமல் நின்றவாறு தலையைச் சொறிந்தான்.
""எவ்வளவு வேணும்?''
அவன் பைக்குள் கையை நுழைத்தான். நோட்டும் சில்லரையும் தடுத்தன.v ""பணம் வேணாம்.''
பகதூர் கூறினான்.
""பிறகு... உனக்கு என்ன வேணும்? சொல்லு...''
பகதூர் தட்டுத் தடுமாறி தெளிவற்ற இந்தியில் கூறினான்:
""ஹமாரா... ஸாதி ஹோகயா.''
""திருமணம் ஆயிடிச்சா... நீ ஏன் எங்கிட்ட சொல்லல?''
அவன் அவனுடைய தோளில் கையை வைத்து, அன்புடன் கூறினான்.
கால்பகதூரின் ஆரஞ்சு முகம் சிவந்தது. கண்கள் சிறிதாயின.
""சரி பகதூர்... திங்கட்கிழமை பார்க்கலாம்.''
அவன் பைப்பை எடுத்து வாயில் வைத்தான். விடைபெறுவதாகக் கூறினான்.
""ஒரு நிமிஷம்... ஸாப்.''
கால்பகதூர் சொன்னான். தொடர்ந்து அவன் கூறினான்:
""ஸாப்... மதிய உணவு எங்க வச்சு...''
மதிய உணவா? அதைப் பற்றி நினைக்கவில்லை.
""ஸாப்... என் அறைக்கு வர்றீங்களா?''
பணிவுடன், தலையைக் குனிந்து நாயைப்போல கால்பகதூர் கூறினான்.
அவன் வாலை ஆட்டினான். குனிந்து அவனுடைய காலை அன்புடன் நக்கினான்.
""வர்றேன்...''
""ரொம்ப நன்றி... ஸாப். எனக்குத் தெரியும் ஸாப்... நீங்க வருவீங்கன்னு.''
அவன் நிமிர்ந்து நின்றான். அவனுக்குத் தெரியும். ஸாப்பின் நட்புணர்வு அவனுக்குத் தெரியும். அழைத்தால் வருவான் என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். ஸாப்பை அவனுக்குத் தெரியும்.
""வாங்க ஸாப்... ஆயியே ஸாப்.''
அவன் அசோகனுக்கு முன்னால் நடந்தான். அசோகன் பைப்பை இறுகப் பிடித்தவாறு, கால் சட்டையின் பைக்குள் கையை நுழைத்தவாறு நடந்தான். அலுவலகத்தின் நிழல் குறுக்காக விழுந்து கிடந்தது. நிழலின் வழியாக நடந்தார்கள். காற்றில் அலுவலகத்தின் புல்வெளியிலிருந்து வாசனை பரவிக் கொண்டிருந்தது. வாசனையை முகர்ந்துகொண்டே நடந்தார்கள். நிழல் முடிந்தது. வெயில் ஆரம்ப மானது. வெயிலைத் தாங்கியவாறு நடந்தார்கள். வெயிலை ஏற்று, வாச னையை ஏற்று நடந்தார்கள்.
வெயில் பட்டதும் கால்பகதூர் சிவந்தான். பழுத்தான்... வாசனையைப் பரவினான். கால்பகதூர் நன்கு பழுத்த ஆரஞ்சு...
அலுவலகத்திற்குப் பின்னால் தான் பணியாட்களுக்கும் காவலாளி களுக்கும் உள்ள அறைகள் இருக் கின்றன. குறுகலான படிகளில் ஏற ஆரம்பித்தார்கள்.
""மெதுவா ஏறுங்க ஸாப்...''
பகதூர் கூறினான். படிகளில் ஏறியபோது, அவன் மேலும்கீழும் மூச்சுவிட்டான். எங்கே கீழே விழுந்து விடுவானோ என்று கூற கால்பகதூர் பயந்தான். இரண்டு தளங்களைத் தாண்டி, மூன்றாவது தளத்தை அடைந் தார்கள். கால்பகதூர் அறை முன்னா லேயே இருந்தது. அவனுக்கு நிம்மதி யாக இருந்தது. தப்பித்தோம் என்று நினைத்தான்.
கதவைத் தட்டினான். கதவு திறந்தது.
சிவப்பு நிற ரவிக்கையையும், வெண்மை நிறத்தில் தடிமனாக இருந்த ஒரு கையையும் பார்த்தான்.
""உட்காருங்க... ஸாப்.''
அறையில் ஒரு பழைய பிரம்பு நாற்காலி இருந்தது. பகதூர் அதை தூசிதட்டி, சுத்தமாக வைத்திருந்தான். அவனுடைய மெலிந்த, உரோமம் வளர்ந்திருக்கும் நெஞ்சுப் பகுதி அசைந்தது. உயரவும் செய்தது.
""குடிக்க என்ன வேணும் ஸாப்?''
""ஏதாவது... பகதூர்.''
பகதூர் உள்ளே சென்றான்.
அசோகன் கண்களை மூடியவாறு சாய்ந்து உட்கார்ந் தான்.
அறையில் பவுடர், பூக்கள் ஆகியவற்றின் வாசனை நிறைந்திருந்தது. "பல வகையான பெண்களை நான் பார்த்திருக்கிறேன்.' மேலும்கீழும் மூச்சு வருவதற்கு மத்தியில் அவன் நினைத்தான்: "ஆனால் ஒரு இமய மலைப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை இது வரை பார்த்ததில்லை.'
பகதூர் ஓடிவந்தான். கையில் தேய்த்துப் பளபளப் பாக்கிய பீங்கான் குவளை... பீங்கான் குவளையில் ததும்பிக் கொண்டிருந்த லஸ்ஸி. குளிர்ச்சியான குவளையை அவன் கையில் வாங்கினான். குவளையிலிருந்து பன்னீரின் வாசனை எழுந்தது. அவன் ஒரு மடக்கு பருகினான். பன்னீர், தயிர், சர்க்கரை ஆகிய வற்றின் ருசி...
""குளிர்ச்சியா இருக்கா?''
""இருக்கு.''
""இனிப்பு போதுமா ஸாப்?''
""போதும் பகதூர்.''
லஸ்ஸியைப் பருகினான். குவளையை மேஜை யின்மீது வைப்பதற்கு பகதூர் சம்மதிக்கவில்லை.
அதற்கு முன்பே கையை நீட்டி வாங்கினான்.
அவன் பைப்பை எடுத்தான். புகையிலையை நிறைத் தான். நெருப்புப் பெட்டியை எடுத்தான்.
""நான் பத்த வச்சுத் தர்றேன் ஸாப்.''
""வேணாம் பகதூர்.''
பகதூர் ஒப்புக்கொள்ளவில்லை. நெருப்புப் பெட்டியை வாங்கிப் பற்றவைத்தான். பைப்பிற்கு நெருப்பு வைத்துக்கொடுத்தான். அவன் புகையை உள்நோக்கி இழுத்தான். அப்போது கண்கள் வெறித்தன. கன்னம் ஒட்டியது.
""காத்தாடி இல்லை ஸாப். வெப்பமா இருக்கா?''
""வெப்பம் எதுவுமில்லை... பகதூர்.''
நெருப்பில் பழகியது, வெயிலில் வாடுமா? ஆனால், பகதூர் ஒப்புக்கொள்ளவில்லை. அறையின் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த விசிறியை அவன் எடுத்தான். வெட்டிவேர் விசிறி. அவன் கையை நீட்டினான். அவன் கொடுக்கவில்லை. அவன் அவனுக்கருகில் நின்றவாறு வீசிக்கொண்டிருந்தான். வெட்டிவேரின் வாசனை... குளிர்ச்சி... கண்கள் மூடுகின்றனவோ?
""படுக்கணுமா ஸாப்?''
""வேணாம்.''
""பசிக்குதா...''
""இல்லை... பகதூர்.''
""இப்போ தயாராகிடும்.''
சமையலறைக்குள்ளிருந்து கோதுமை, மாமிசம், தக்காளி ஆகியவற்றின் வாசனை வந்தது.
""நீ மாமிசம் சாப்பிடுவியா?''
""சாப்பிடுவேன் ஸாப். கூர்க்காக்கள் ஆட்டுக்கறி சாப்பிடுவோம்.''
""நீ முழுமையான கூர்க்காவா பகதூர்?''
""போத்தியா.''
""உன் மனைவிக்கு இந்தி தெரியுமா?''
""கொஞ்சம் தெரியும் ஸாப்.''
சமையலறைக்குள்ளிருந்து வனஸ்பதியின் வாசனை கிளம்பி வந்தது. பகதூர் வீசிக்கொண்டேயிருந்தான். இடது கை வலிக்கும்போது, வலது கையால் வீசி னான். வலது கை தளரும்போது இடது கையால் வீசினான். இரு கைகளும் தளரும்போது, இரு கைகளையும் கொண்டு வீசினான். வெட்டிவேரின் வாசனை அறையில் பரவியது. பரவித் ததும்பியது.
""தயாராயிடுச்சா மோத்தீ?''
பகதூர் சமையலறையை நோக்கி அழைத்தான். இனிய குரலில் மோத்தி பதில் கூறினாள். பதில் போத் தியா மொழியில் இருந்தது.... கேள்வி இந்தி மொழியில் இருந்தாலும்! என்ன கூறினாள் என்பது புரியவில்லை.
""இன்னும் அஞ்சு நிமிஷம்... ஸாப்.''
சமையலறைக்குள்ளிருந்து முள்ளங்கி, எலுமிச்சம் பழம் ஆகியவற்றின் வாசனை வந்தது.
மோத்தி கதவுக்கு அப்பால் வந்து நின்று, என்னவோ கூறினாள். பகதூர் விசிறியை மேஜையின்மீது வைத்தான். சமையலறைக்குள் சென்றான். திரும்பி வந்து மேஜையைச் சுத்தம் செய்தான். ஒரு மஞ்சள்நிற பிளாஸ்டிக் விரிப்பை விரித்தான். அதன்மீது பீங்கான் பாத்திரங்களை வைத்தான்.
""கையைக் கழுவுங்க ஸாப்.''
அவன் குளியலறைக்குச் சென்றான். தொட்டியில் நீர் நிறைத்து வைக்கப்பட்டிருந்தது. பாத்திரத்தை நீருக்குள் மூழ்கச் செய்து, கையையும் கால்களையும் கழுவினான். வாயிலிருந்து புகையிலையின் வாசனை வந்தது.
""உட்காருங்க ஸாப்.''
பகதூர் நாற்காலியை மேஜைக்கு அருகில் நகர்த்திப் போட்டான். குனிந்து, தூசி இல்லையென்றாலும் தூசியைத் தட்டினான்.
""நீ உட்காரலையா பகதூர்?''
""இல்லை... ஸாப்.''
பணிவுடன் கூறினான். வாலை ஆட்டினான். காலை நக்குவதற்காக குனிந்தான்.
அவன் பீங்கான் பாத்திரத்தில் சப்பாத்தியைப் பரிமாறினான். நெய் வழிந்து கொண்டிருந்தது. புதிய கோதுமை மாவால் செய்யப்பட்ட முதல் தர சப்பாத்தி... முதல் தரமான மாமிசத்திலிருந்து மசாலாவின் வாசனை சுழற்றியடித்தது. முள்ளங்கியும் வெள்ளரியும் தக்காளியும் அறுத்து வைக்கப்பட்டு, மேலே எலுமிச்சம் பழ நீர் பிழியப்பட்ட முதல் தரமான சாலட்...
""பெரிய அளவுல உணவுப் பொருள் இல்லை ஸாப்.''
""இது போதும் பகதூர்.''
சப்பாத்தியை சாப்பிட்டான். மாமிசத்தை சாப் பிட்டான். சாலட்டை சாப்பிட்டான்.
""பகதூர்... தண்ணி...''
பகதூர் உள்ளே ஓடினான். ஒரு புட்டியுடன் வெளியே வந்தான். பீங்கான் குவளையில் திரவத்தை ஊற்றினான். முதல் தரமான பீர்... குவளையை எடுத்து திரவத்தை வேகமாகப் பருகினான்.
மாமிசம், சாலட் ஆகியவற்றின்மீது பீர் சென்று விழுந்தது. தளர்ந்தான். தூக்கம் வந்தது. வயிறு வீங்கியது.
""சாப்பிடுங்க... ஸாப். மாமிசம் முழுவதும் அப்படியே இருக்கே.''
""போதும் என் பகதூர்... போதும்... என்னால் முடியாது.''
எழுந்து குளியலறைக்குள் சென்று முகத்தைக் கழுவினான். மீண்டும் நாற்காலியில் வந்து அமர்ந்தான்.
பகதூர் சமையலறைக்குள் சென்றான். வேறொரு பீங்கான் பாத்திரத்துடன் திரும்பி வந்தான். தட்டில் இனிப்புப் பலகாரங்கள்... பர்ஃபி இருந்தது... ரஸகுலா இருந்தது. குல்ஃபி இருந்தது... வேறொரு தட்டும் வந்தது.
பழம் இருந்தது. ஆரஞ்சு இருந்தது... ஆப்பிள் இருந்தது...
""சாப்பிடுங்க ஸாப். உங்களுக்காகத்தான் இவையெல்லாமே. சாப்பிடுங்க ஸாப்.''
பகதூர் வாலை ஆட்டினான். விசிறியை எடுத்து வீசினான்.
பர்ஃபியையும் குல்ஃபியையும் சாப்பிட்டான்.
பழத்தையும் ஆப்பிளையும் சாப்பிட்டான்.
""படுக்குறீங்களா ஸாப்?''
""ம்...''
""வாங்க... ஸாப்.''
கண்களை முழுமையாகத் திறக்க முடியவில்லை. பாதி அடைக்கப்பட்ட கண்களுடன் பகதூருடன் சேர்ந்து நடந்தான். பகதூர் தன்னுடைய படுக்கைய றைக்கு அழைத்துச் சென்றான்.
""உள்ளே போங்க ஸாப்.''
உள்ளே சென்றான். பகதூரின் படுக்கை... படுக்கையில் சிவப்புநிற ரவிக்கையையும், வெண்ணிறப் புடவையையும் அணிந்திருந்த மோத்தி...
அவன் உள்ளே சென்றதும், பகதூர் மெதுவாகக் கதவைப் பின்னாலிருந்தவாறு அடைத்தான்.