Advertisment

மணக்க மணக்க.. இலக்கியங்கள் கொண்டாடும் பொங்கல்! - பாரதிசந்திரன்

/idhalgal/eniya-utayam/manaka-manaka-literature-celebrates-pongal-bharatichandran

ழுச்சியும், வீரமும், மகிழ்ச்சியும் தன்னகத்தே கொண்டு, வாழ்வியல் சாதனைகள் செய்த இனமாகத் தமிழினம் திகழ்கின்றது. செம்மாந்த வாழ்க்கை வாழ்ந்து உலகினுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டியவர்கள் தமிழர்கள். அறிவியலை வாழ்வியலோடு இரண்டறக் கலந்து, அந்நாகரீகத்தால், உலகில் சிறப்புப் பெற்ற இனமாக தமிழர்கள் திகழ்கிறார்கள்.

ஒவ்வொரு நிகழ்வுகளிலும், ஆழமான பொருளோடு, நிதர்சனமான ரசனையோடு வாழ்ந்து ரசித்தவன் தமிழன். உணவுப் பழக்கவழக்கம், உறவு முறைகள், அன்றாடப் பழக்கவழக்கம், கலைகள், கல்வி, கலாச்சார முறைகள் ஆகிய எல்லா வற்றிலும் அர்த்தங்கள் ஆயிரத்தினை வைத்து யோசித்து, யோசித்து முறைப் படுத்தியவர்கள்தாம் தமிழர்கள். இவர்கள் ‘காலங்களை’ மையம் கொண்ட உலக நடப்பு களின் அறிவியலைக் கண்டுணர்ந்து, அதற்குத்தக, தமது தொழில், விவசாயம், பண்டிகைகள், போன்றவற்றை உருவாக்கி இருக்கின்றார்கள்.

‘காலம்’ எனும்பொழுது, சூரியனின் ஒளி மற்றும் சூரியனின் சுழலும் பாதை போன்ற வற்றின் தன்மையை அடிப்படையாகக் கணக்கில் கொண்டு வரையறுத்தனர். அவ்வகை யில், தைமாதத்தின் முதல் நாளைத் தமிழர் திருநாளாம் ‘பொங்கல் திருநாள்’ என்று அறிவுபடத் திட்டமிட்டுக் கொண்டாடினார்கள். இத்திருநாளுக்குத் தொடர்புடைய வகையில், உழவர்களைப் பெருமைப்படுத்தினார்கள். உழவுக்கு உழைத்த காளை களையும் கொண்டாடினார்கள்.

தமிழர்களின் உன்னதத் திருவிழாவான ‘பொங்கல் திருநாள்’ குறித்து நமது இலக்கியங்கள் பதிவுசெய்து வைத்திருப்பதை, பெருமளவு இனம் காணமுடிகின்றது.

Advertisment

ss

சங்ககாலத் தமிழர்கள் எப்படிப் பொங்கல் திருநாளைக் கொண்டாடினர் என்பதைப் பல்வேறு இலக்கியங்கள் கூறுகின்றன. புறநானூற்றில் 168-ஆவது பாடலில், கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் அவர் வாழ்ந்த காலத்து மக்கள் ‘புதுப்பொங்கல்’ செய்து பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தை, மிக அழகாகத் தமது பாடலில் எடுத்துக் கூறுகின்றார். அப்பாடலானது,

“உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினைv முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,

மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,

மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி

வான்கேழ் இரும்புடை கழாஅது,

வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச்,

சாந்த விறகின் உவித்த புன்கம்,

கூதளங் கவினிய குளவி முன்றில்,

செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்”

புதிதாகக் கறந்த நுரை ததும்பும் தீம்பாலிலே,

புத்தரிசியைப் இட்டு, சந்தனக் கட்டைகளை வைத்து விறகெரித்துப் பொங்கல் செய்தனர்.

அவ்வாறு செய்த பொங்கலைப் பலரோடு முற்றத் தில் அமர்ந்து பெரிய வாழை இலை போட்டு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தை இப்பாடல் தெளிவாகக் காட்சிப்படுத்துகின்றது. பொங்கலை’- புன்கம் எனப் பழங்காலத் தமிழ்ச் சொல் நெல்லோடு வேயப்பட்ட தாளைக் கொண்டு கட்டப்பட்ட கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித் தனியாகப் ‘பொங்கல் கொண்டாடும் பெருவிழாவின்போது காணப் படும். ஆராவாரமும் மகிழ்ச்சியும் கொண்ட இடம் போல் மிகப் பொலிவுடன் காட்சி தந்தன என்று புறநானூற்று பாடலில் ‘குறுங்கோழியூர் கிழார் கூறுகின்றார். அப்பாடலானது,

“வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த வாய்

கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்ட களம்

போல் வேறு வேறு பொலிவு தோன்ற”

என்பதாகும். பெண்கள் தைமாத தொடக்கத் தில் நோன்பு இருந்தனர். என்பதை நம் சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன. பொங்கல் திருநாளில் வைகை ஆற்றில் நீராடித் தமக்குச் சிறந்த கணவர் கிடைக்க வேண்டும் என விரதமிருந்தனர். எனவே, மங்கலமான தொடக்கமாகத் ‘தை மாதத்தை’ மக்கள் வரவேற்றுக் கொண்டாடி இருக்கின்றனர். எனவே தான் முன்னேர் வாக்காக, “தைப் பிறந்தால் வழி பிறக்கும்” என்ற வாக்கு. நம் பயன்பாட்டில் இன்றும் இருந்துவருகிறது. திருமணமாகாத பெண்கள் விரதமிருந்து தை நீராடி இருக்கும் பழக்கத்தை ‘பரிபாடல் எனும் இலக்கியத்தில் 11-ஆம் பாடலான ‘வையைப்’ பாடல் விளக்குகிறது.

“தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ

தாயருகா நின்று தவத் தைநீராடல்

நீயரைத்தி வையை நதி”

என்பது பரிபாடல் வரியாகும்.

“தைத் திருநாளுக்கு மகளிர் கூட்டமாக நீராடி வருவதாக” ஐங்குறுநூறு பாடல் 84 கூறுகின்றது.

இதேபோல், “தையில் நீராடி தவம் தலைப் படுவாயோ என்று கலித்தொகைப் பாடலும் தைமாதத்தில் நடக்கும் திருவிழாக்களை எடுத்து இயம்புகின்றன.

சிலப்பதிகாரத்தில் பொங்கல்:

அறுவடை முடிந்ததும், கடவுளுக்கு அதாவது காவல் பூதத்திற்குப் பொங்கல் செய்து எப்படி எல்லாம் வழிபட்டார்கள் நம் தமிழர்கள் என்பதைச் சிலப்பதிகாரம்’ எனும் நூல், மிகத் தெளிவாகக் கூறுகின்றது. அதாவது,

“புழுங்லும் நோலையும் விழுக்குடை மடையும்

பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து”

என்று படையலிட்ட பொருள்களை விளக்கு கிறது. அதில், பொங்கலும் ஒன்றாகும். ‘புழுங்கல்’ என்ற சொல்லும் பொங்கலைக் குறித்த சொல்லா கவே முன்பு கூறப்பட்டது.

சீவக சிந்தாமணியில் பொங்கல்:

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக் கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்”

எனும் சீவக சிந்தாமணி வரிகளால், புதிதாக எடுக்கப்பெற்ற கலத்தில் அதாவது பானையில், பால் ஊற்றி, அரிசி போட்டுப் பெண்கள் பொங்கல் வைத்தனர் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தி யுள்ளார் திருத்தக்கதேவர்.

பக்தி இலக்கியம் வெளிப்படுத்தும் பொங்கல்:

சமயக் குரவர் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் பூம்பாவை எனும் நங்கையை உயிர்ப்பித்து எழ வைத்த திருப்பதிகமாக அமைந்துள்ள திருமுறை யில், “தைப் பொங்கல் திருநாளைக் காணாமல் போவாயோ பூம்பாவாய்” எனப் பாடுகின்றார். காலந் தோறும் தமிழர்கள் இத்திருநாளை எவ்வளவு மகிழ்ச்சியோடு ஒற்றுமையாக இருந்து கொண்டாடி இருக்கின்றனர் என்பதை இதன் மூலம் உணர முடிகின்றது.

“நெய் பூசும் ஒண்புழுங்கல் நேரிழையார் கொண்டாடும்

தைப் பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்”

இலங்கைவாழ் தமிழரும், சிங்களவரும், உழவர்களை மதித்துத் தைமாதத்தில் விழா கொண்டாடி மகிழ்ந்தனர். விழா முடிவில் அனைவரும் தானியங்கள் பெற்று மகிழ்ச்சியோடு வீடு திரும்பினர் எனும் செய்தியை ‘சரசோதி மாலை’ எனும் 13-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் கூறும். இந்நூல் இலங்கையில் ‘போசராச பண்டிதர்’ என்பவரால், சிங்கள மன்னன் ஆசைக்கு இணங்க எழுதப்பட்டது. இலங்கைத் தமிழர் வாழ்விலும் தைத் திருநாள் பெரு விமர்சையாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது.

காலங்காலமாகக் கொண்டாடி வரும் பொங்கல் விழா நமது பெருமையை, கலாச்சாரத்தை, பண்பாட்டை உலகுக்கு எடுத்துக் கூறிக்கொண்டே இருக்கிறது. ‘அறுவடைத் திருநாள்’ என இவ்விழாவை உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி மற்றும் பின்பனி என ஒரு ஆண்டை ஆறு பருவமாகக் கணித்த தமிழன், இளவேனில் பருவத் துவக்கத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கண்டான். சீனர்கள், ஜப்பானியர்கள் எனப் பலகோடி மக்கள், இவ்வுலகில், இளவேனில் காலத் துவக்கத்தையே தங்கள் புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது இங்கு எண்ணத்தக்கதாக அமைகிறது.

அதனையே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறும் பொழுது,

“தைம்மதி பிறக்கும் நாள், தமிழர் தங்கள்

செம்மை வாழ்வின் சிறப்பு நாள், வீடெல்லாம்

பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்

ஏலமும் புது நெருப்பேறி அரிசையைப்

பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்

எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்

தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும்நாள்”

என்று பொங்கல் திருநாளை வர்ணிக்கின்றார்.

பொங்கல் தினத்தில் வீட்டின் உள்ளேயும், வெளியேயும் கூட்டித் துப்புரவாக்கிச் சாணத்தால் மெழுகி, கோலம் போட்டு, மலர் மாலை மாவிலைத் தோரணம் கட்டி, வீட்டை அழகுபடுத்தி இருப்பர். ஏழைகள், உறவினர்களை இழந்தவர்கள் போன்றவர்களுக்குப் பொங்கல், வடை, முறுக்கு, அரியதரம், பயிற்றம் பணியாரம், கனிகள் என்பவற்றையெலாம் வழங்கி அவர்களின் பசியைப் போக்கி, உள்ளத்தை மகிழவைக்கும் மாண்பு இன்றளவும் விவசாயிகளிடம் காணப்படுகின்றது.

உழவுத் தொழிலுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிலையில், தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் “மாட்டுப் பொங்கல்” திருநாளாகத் தமிழகம் முழுவதும் மிக விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இவ்விழா மிகப் பழமையான சிந்துவெளி நாகரீக காலத்திலேயே இருந்திருக்கின்றது என்பதை அறியமுடிகின்றது. நம் மூதாதையர்கள் கி.பி 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘ஏறு தழுவுதல்’ நிகழ்வை நடத்தியிருக் கின்றனர் என்பதை உணர முடிகின்றது என்பார் தொல் பொருள் ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன்.

சங்ககால கட்டத்தில் ஏறுதழுவுதல்:

பண்டைய கால முல்லை நிலத்தில், ‘ஏறு தழுவுதல்’ எனும் ‘ஜல்லிக்கட்டு’ நடைபெற்று வந்தது.

ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலை யில் காளையை அடக்கி இருக்கின்றனர். இவ்வாறு காளையை அடக்கியவர்களையே ஆயர்குலப் பெண்கள் மணமுடித்துக் கொண்டனர். காளைகளை அடக்காதவர்களை இப்பிறப்பில் மட்டுமல்ல, மறுபிறப்பிலும் மணமுடித்துக் கொள்ள ஆயர்குல பெண்கள் நினைக்கக் கூட மாட்டார்கள் என்பதை ‘கலித் தொகை’ பாடல் விளக்குகிறது.

“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்

புல்லாளே ஆயமகள்.

அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத

நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரியலி உயிர் துறந்து

நைவாரா ஆயமகள் தோள்”.

என்று ஆய்மகளின் தன்மை இப்பாடலில் விளக்கப்படுகிறது. காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் தங்களை வேறுபடுத்திக் காட்ட வேறு வேறு பூக்களை அணிந்து வந்தனர் என்பதை,

“மெல்லிணாக் கொன்றையும், மென்மலர்க் காயாவூம்

புல்லிலை வெட்சியும், பிடவும், தளவூம்

குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்

கல்லவூம், கடத்தவூம் - கமழ் கண்ணி மலைந்தனர்”

என விளக்குகிறது இப்பாடல் ஏறுதழுவல் என்பது தமிழரின் வீர விளை யாட்டாகும். வீர பரம்பரையாக வாழ்ந்த இனமாக நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது “மாட்டுப் பொங்கல்’ திருநாள்.

அறிவைத் தந்த திருவள்ளுவனை இக்காலத்தில் நினைத்து வாழ்த்துகிறோம். அவர் கூறியபடி வாழ எத்தனிக்கின்றோம். இயற்கையை வணங்குகிறோம். சூரிய கடவுளுக்கு, காவல் தெய்வங்களை வணங்குகி றோம். புதிதாக உருவான பயிர்களை மகிழ்வுடன் பொங்கல் செய்து தானமிட்டு மகிழ்வுடன் அனைவரும் குரவைக்கூத்து கொண்டாடி மகிழ்கிறோம். வீரத்தை வெளிக்காட்டும் மாட்டை அடக்கி மாமன் மகளை மணந்து இல்வாழ்க்கையின் பயனை அடை கிறோம். இதுபோன்ற வாழ்வை உலகில் வேறெந்த இனமும் வாழவில்லை எனுமாறு நம்மினம் கொண்டாடித் திளைக்கும் விழாவாக பொங்கல் திருவிழா அமைந்திருக்கிறது.

இத்தகு சிறப்பினைப் பெற்ற நமது விழாவினைத் தவிர்த்துவிட்டு இன்று இளையதலைமுறையினர் திரை யரங்கை நோக்கிப் படையெடுத்து, நடிகரை கோடீஸ் வரர்களாக மாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். பல நூறுகோடி ரூபாய் அளவிற்குக் குடித்து மல்லாந்து கிடந்து இனத்தின் பெருமையைச் சீரழிக்கின்றனர் என்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. தம்மினத்தின் பழம்பெருமை அறியாது நவநாகரீகத்தில் திளைக்கின்றனர். இதிலிருந்து மாறித் தமிழினம், தமிழரின் பண்பாட்டை எப்போது மீட்டெடுக்கும்? அந்தநாள் தமிழரின் பொன்னாள் ஆகும்.

uday010125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe