வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
-என்பது வள்ளுவரின் அர்த்தமுள்ள குறளாகும்.
தூண்டில் முள்ளில் இருக்கும் இரையைக் கடிக்கும் மீன், தனக்கு லாபம் கிடைத்ததாக நினைக் கும். அந்த இரையை கடித்து விழுங்கிய பிறகுதான் அது தனக்கே ஆபத்தாகிவிட்டதை உணரும். சூதாட் டத்தின் மூலம் அடையும் லாபமும் இப்படித்தான் ஆபத்தையே தரும் என்பதே இந்தக் குறளின் பொருள்.
இந்தக் குறள்,அதிகாரத்தின் மூலம் அரசிய லையே சூதாட்டக் களமாகப் பயன்படுத்தி வரும் பிரதமர் மோடிக்கு மிகவும் பொருத்தமானதாகும்.
எதிர்க்கட்சிகளின் ஆட்சிகளைக் கவிழ்ப்பது, கூட்டணிகளை உடைப்பது, பண பேர-குதிரை பேர விளையாட்டுக்களை நடத்தி பல மாநிலங்களிலும் சூதாட்டத்தின் மூலம் அரசியல் அடாவடிகளை நடத்திய மோடி, இப்போது தட்டுத் தடுமாறி மூன்றாவது முறையாக இழுபறியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார் தனிப்பெரும்பான்மை என்கிற கிரீடம் பறிபோன நிலையில், அவர் தனது கூட்டணிக் கட்சிகளின் பலத்தில் ஊஞ்சலாடி வருகிறார்.
இப்போது மோடி ஆட்சியின் துவாரபாலகர் களாக ஐக்கிய ஜனதா தள நிதிஷ்குமாரும், தெலுங்கு தேச சந்திரபாபு நாயுடுவும் அமர்ந்து கொண்டு, அவரை இப்போது தங்கள் விருப்பப்படி ஆட்டி வைக்கிறார்கள். அவர்கள் எந்த அளவுக்கு மோடியைக் கையில் எடுத்துக்கொண்டு விளையாடு கிறார்கள் என்பது அண்மையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பாரபட்ச பட்ஜெட்டிலேயே அம்பல மானது.
இந்த நிலையில் வ

இந்த நிலையில் விரைவில் மகாராஷ்டிர மாநிலத் துக்கு சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. இந்தத் தேர்தலில் மோடி நடத்திய சூதாட்டங்களுக்கு ஏற்ப, மிகமோசமான அறுவடை மகசூலே அவருக்குக் கிடைக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
என்ன காரணம்?
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சி அங்கே ஏக செல்வாக்கோடு கோலோச்சி வந்தது. பால் தாக்கரேவின் மறைவிற்குப் பிறகு, அக்கட்சியை அவரது மகனான உத்தவ்தாக்கரே தலைமை ஏற்று நடத்திவந்தார். அவரே அம் மாநில முதல்வராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் மோடியின் சூதாட்டக் கைகள் அங்கே நீளத் தொடங்கின. சிவசேனாவில் இருந்த ஏக்நாத் ஷிண்டேவை அவை திரைமறைவில் இயக்கின. இதைத் தொடர்ந்து சிவசேனா கட்சி 2022 ஜூனில் உடைந்தது. ஒரு பிரிவுக்கு உத்தவ் தாக்கரேவும், மற்றொரு பிரிவுக்கு ஏக்நாத் ஷிண்டே வும் தலைமை தாங்கினர். ஷிண்டே பிரிவு தனியாக பிரிந்ததை அடுத்து, முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு முன்பாகவே பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.
இதைதொடர்ந்து அங்கே சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவுக்கு வந்தது.
இதேபோல் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக் குள்ளும் மோடியின் சூதாட்டக் கரங்கள் மாய வித்தைகளை நிகழ்த்த ஆரம்பித்தன.இதைத் தொடர்ந்து அஜித் பவார், தேசியவாத காங்கிரஸை உடைத்துக் கொண்டு பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தார்.
பா.ஜ.க.வின் ஆதரவோடு சிவசேனா ஏக்நாத் ஷிண்டே, அங்கே ஆட்சியைப் பிடித்தார்.அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி யிலிருந்து பிரிந்த அஜித் பவார் தரப்பும் இணைந்தது. அங்கே ஏக்நாத் ஷிண்டே தலைமையில்தான் கூட்டணி ஆட்சி என்றாலும், ஷிண்டே வின் குடுமி, மோடியின் பா.ஜ.க. கையில்தான் சிக்கியிருக்கிறது. பா.ஜ.க. வின் கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது.
பலமாக இருந்த கட்சிகளை எல்லாம் பிரித்து, அங்கே தன் அதி காரத்தை நிலைநாட்டியிருக்கிறது மோடி தரப்பு. அதிகாரம் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்பதையே மோடி இதன் மூலம் காட்டினார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், வரப்போகும் சட்ட மன்றத் தேர்தலிலும் மராட்டிய மக்களை வசப்படுத்த நினைத்த மோடி, அங்கே இரண்டு முக்கிய திட்டங்களைக் கொண்டு வந்தார்.
ஒன்று- மராட்டிய மக்களின் கதாநாயகரான சத்ரபதி சிவாஜிக்கு பிரம்மாண்ட நிலையை நிறுவுவது.
இரண்டு, மும்பையில் இந்தியாவிலேயே மிக நீளமான கடற்பாலமான சேதுபாலத்தை அமைப்பது.
இவற்றைச் செய்தால் மகாராஷ்டிர மக்கள் தங்கள் கட்சிக்கே வாக்குகளை வாரி வழங்குவார்கள் என்று அவர் மனக்கணக்குப் போட்டார். இதைத் தொடர்ந்து, 3,600 கோடி ரூபாய் செலவில் மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துர்க் மாவட்டத்திலுள்ள ராஜ்கோட் பகுதியில் 35 அடி உயரத்தில் நெடிதுயர்ந்த சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கப்பட்டது. இதைக் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி பிரதமர் மோடி, கோலாகல விழா நடத்தித் திறந்துவைத்தார்.கடற்படை மூலம் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேபோல், ரூ 17 ஆயிரத்து 843 கோடி செலவில் அரபிக்கடலில் 22 கிமீ தூரத்திற்கு சேது பாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் மும்பையின் சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பையின் புறநகரான சிர்லேவில் முடிவடையும் வண்ணம் அமைக்கப்பட்டது. இதையும் கடந்த ஜனவரி 12 -ஆம் தேதி, பிரம்மாண்டமான விழாவை நடத்தி மோடி திறந்துவைத்தார்.
இவை எல்லாம் மோடிக்கு பெரும் லாபத்தைத் தருகிறதா? நீங்களே பாருங்கள்.
மகாராஷ்டிர மாநிலத்தைக் குறிவைத்து இவ்வளவையும் மோடி செய்தபோதும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி, அங்குள்ள 48 இடங்களில் 17 ஐ மட்டுமே பிடித்தது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்ட ணியோ 30 இடங்களை மொத்தமாக அள்ளியது. இதிலேயே பலமாக மரண அடிவிழுந்தது மோடியின் திமிருக்கு.
அடுத்து- மகாராஷ்டிராவுக்கு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலை யில், மோடியால் திறந்து வைக்கப் பட்ட சேது பாலம், திறந்த 6 -ஆவது மாதத்திலேயே, அதாவது கடந்த ஜூன் மாதத்தி லேயே டார் டாராய் வீறல்விட் டுப் பல்லிளித்தது. இதைக்கண்டு மராட்டிய மக்கள் காறித் துப்பினார்கள்.
இந்த நிலையில், மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை யும் கடந்த ஆகஸ்டு 26 ஆம் தேதி, திடீரென உடைந்து விழுந்து துண்டு துண்டா கத் தெறித்தது. இதைப் பார்த்த மராட்டிய மக்கள், கோபத்தின் கொதிநிலைக் குப் போயிருக்கிறார்கள்.
திறந்து 8 மாதத்திலேயே சிவாஜி சிலை விழுந்து, மோடி தரப்பின் ஊழல் கைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக் கிறது.
இதிலே கொடுமை என்ன வென்றால்- மும்பை யைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் அந்த சிவாஜி சிலையை ஆய்வு செய்துவிட்டு. துருப்பிடித்த நட்டு போல்டுகள் மூலம் இந்த சிலை இணைக்கப்பட் டுள்ளது. அதனால் அது எந்த நேரத்திலும் உடைந்து விழலாம். ஆபத்து என்று, சிலையை நிர்மாணித்த கடற்படைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
கடந்த 23 ஆம் தேதி அவர் கடிதம் எழுதிய நிலையில், அடுத்த மூன்றே நாளில் சிலை விழுந்து விட்டது. பொறியாளரின் எச்சரிக்கையை உடனடி யாக கவனித்துப் பழுதுநீக்கும் திறன் கூட மோடி தரப்புக்கு இல்லை. அதன் விளைவு, மகாராஷ்டிர மக்களை வசியப்படுத்தியதற்காக உருவாக்கப்பட்ட சிவாஜி சிலை, உடைந்து உருக்குலைந்து போய் விட்டது.
மகாராஷ்டிரத்தைப் பொறுத்தவரை நாடாளு மன்றத் தேர்தலில் மக்களால் வைக்கப்பட்ட ஆப்பு- வீறல் விட்ட சேது பாலம்- உடைந்து நொறுங்கிய சத்ரபதி சிவாஜி சிலை என, மோடிக்கு எதிர்மறையான மகசூலையே தந்திருக்கிறது.
கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கு ஏற்ப, பிறரைக் கெடுத்து மேலோங்க வேண்டுமென்று நினைக்கும் மோடி தரப்பு, அது கையிலெடுத்த சூதாட்டங்கள் அத்தனையும், அவர்களின் தலையிலேயே இடியை இறக்கிக்கொண்டு இருக்கிறது.
இவை தொடக்கம்தான். இனி ஒட்டுமொத்த இந்தியாவும் மோடிக்கு எதிரான மரண அடி களைத் தொடர்ந்து கொடுக்கப் போகிறது.
காத்திருப்போம்.
நக்கீரன்கோபால்