கா.ந.கல்யாணசுந்தரம் ஹைக்கூவின் அழகிய பயணம்!

/idhalgal/eniya-utayam/lovely-trip-haiku

ஹைக்கூவை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதி. அவர் அக்டோபர் 18, 1916-ல் வெளியான சுதேசமித்திரன் நாளிதழில் 'ஜப்பானியக் கவிதை' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைதான் தமிழில் ஹைக்கூ கவிதைகள் குறித்த விழிப்புணர்வையும் அறிமுகத்தையும் முதன்முதலில் ஏற்படுத்தியது. அப்படி பாரதியாரால் இங்கே அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட ஹைக்கூ இயக்கம், இங்கே காலவெளிகளைக் கடந்து தனது அழகிய பயணத்தை நடத்திக்கொண்டே இருக்கிறது.

அண்மையில் தமிழ் ஹைக்கூ, தமது நூற்றாண்டை 2016 ஆம் ஆண்டு கொண்டாடி மகிழ்ந்தது. இதைத் தொடர்ந்து ஹைக்கூவில் வெளிச்சம் அடர்த்தியாகப் பரவியபடியே இருக்கிறது.

இந்த நிலையில், ஹைக்கூ தொடர்பான தகவல்கள் சிலவற்றை நாம் இங்கே பார்ப்போம். ஜப்பானிய கவிதை வரலாற்றில் எடோ காலத்தில்தான் (கி.பி.1603 முதல் 1863 வரை ) சீனம் மற்றும் ஜப்பானிய மொழிக் கலவையாக ஹைக்கூ கவிதைகள் தோன்றின. அவை மூன்றே மூன்று அடிகள் கொண்ட 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்திருந்தன.

புத்த மதத்தின் சென் (ழங்ய்) தத்துவத்தைப் பரப்புவதற்கு ஒரு நல்ல ஊடகமாக ஹைக்கூ கவிதையானது பயன்படுத்தப்பட்டது. ஜப்பானிய ஹைக்கூ ஜாம்பவான்களான மோரிடேகே (1473-1549), மற்றும் சோகன் (1465-1553) ஆகியோர் ஹைக்கூ கவிதையின் முன்னோடி கள் என்றழைக்கப் படுகிறார்கள். ஜப்பானிய ஹைக்கூ முன்னோடிகளை அடுத்து மட்சுவோ பாஸோ (1465-1553), யோசா பூசன் (1716-1784), இசுசா (1763-1827), சிகி (1867-1902) ஆகிய நம் சமயக் குரவர்களைப் போன்ற ஹைக்கூ நால்வர்கள் தோன்றிப் புகழ் ஈட்டினர்.

சங்ககாலம் முதல் பக்தி இலக்கியம் தொடங்கி தற்கால இலக்கிய வரலாறு வரை நாம் கூர்ந்து நோக்கினால் மண் சார்ந்த மரபு நெறிகளோடு கவிதைகள் தமது பயணிப்பை மேற்கொண்டுவருகின்றன. தனிமனித மற்றும் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டே எழுத்துலகம் தமது முத்திரையைப் பதித்துவருகிறது.

ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கு (ட்ர்ந்ந்ன்) என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஐகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ஹைக்கூ என்றால் அணுத்தூசி போன்ற சிறிய கவ

ஹைக்கூவை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதி. அவர் அக்டோபர் 18, 1916-ல் வெளியான சுதேசமித்திரன் நாளிதழில் 'ஜப்பானியக் கவிதை' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைதான் தமிழில் ஹைக்கூ கவிதைகள் குறித்த விழிப்புணர்வையும் அறிமுகத்தையும் முதன்முதலில் ஏற்படுத்தியது. அப்படி பாரதியாரால் இங்கே அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட ஹைக்கூ இயக்கம், இங்கே காலவெளிகளைக் கடந்து தனது அழகிய பயணத்தை நடத்திக்கொண்டே இருக்கிறது.

அண்மையில் தமிழ் ஹைக்கூ, தமது நூற்றாண்டை 2016 ஆம் ஆண்டு கொண்டாடி மகிழ்ந்தது. இதைத் தொடர்ந்து ஹைக்கூவில் வெளிச்சம் அடர்த்தியாகப் பரவியபடியே இருக்கிறது.

இந்த நிலையில், ஹைக்கூ தொடர்பான தகவல்கள் சிலவற்றை நாம் இங்கே பார்ப்போம். ஜப்பானிய கவிதை வரலாற்றில் எடோ காலத்தில்தான் (கி.பி.1603 முதல் 1863 வரை ) சீனம் மற்றும் ஜப்பானிய மொழிக் கலவையாக ஹைக்கூ கவிதைகள் தோன்றின. அவை மூன்றே மூன்று அடிகள் கொண்ட 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்திருந்தன.

புத்த மதத்தின் சென் (ழங்ய்) தத்துவத்தைப் பரப்புவதற்கு ஒரு நல்ல ஊடகமாக ஹைக்கூ கவிதையானது பயன்படுத்தப்பட்டது. ஜப்பானிய ஹைக்கூ ஜாம்பவான்களான மோரிடேகே (1473-1549), மற்றும் சோகன் (1465-1553) ஆகியோர் ஹைக்கூ கவிதையின் முன்னோடி கள் என்றழைக்கப் படுகிறார்கள். ஜப்பானிய ஹைக்கூ முன்னோடிகளை அடுத்து மட்சுவோ பாஸோ (1465-1553), யோசா பூசன் (1716-1784), இசுசா (1763-1827), சிகி (1867-1902) ஆகிய நம் சமயக் குரவர்களைப் போன்ற ஹைக்கூ நால்வர்கள் தோன்றிப் புகழ் ஈட்டினர்.

சங்ககாலம் முதல் பக்தி இலக்கியம் தொடங்கி தற்கால இலக்கிய வரலாறு வரை நாம் கூர்ந்து நோக்கினால் மண் சார்ந்த மரபு நெறிகளோடு கவிதைகள் தமது பயணிப்பை மேற்கொண்டுவருகின்றன. தனிமனித மற்றும் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டே எழுத்துலகம் தமது முத்திரையைப் பதித்துவருகிறது.

ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கு (ட்ர்ந்ந்ன்) என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஐகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ஹைக்கூ என்றால் அணுத்தூசி போன்ற சிறிய கவிதை என்று பொருள். இக்கவிதையின் பெயரை ஹொக்கு என்று பாரதியார் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். தமிழில் ஹைக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்பட்டதையும் நாம் அறிவோம்.

‘ஹை’ என்பதற்கு ஜப்பானிய அடிச் சொல்லுக்கு அணுத்தூசி, கரு, முழுமையான கரு என்ற பொருள் உண்டு. ‘கூ’என்பது சொற்றொடர்,

வெளிப்பாடு, வாக்கியம், பகுதி, ஒரு வரி, ஓர் அடி, ஒரு செய்யுள், ஒரு கவிதை என்றும் பொருள் தருகிறது ஜப்பானிய அகராதி. (நிர்மலா சுரேஷ், ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல், ப.15.)

தமிழ் ஹைக்கூ கவிதைகள் இயற்றும் கவிஞர்கள் அவர்கள் வாழுமிடத்து தாம் காணும் இயற்கை காட்சிகள், வாழ்வியல் கூறுகள், அவலங்கள், மனிதநேயம் மற்றும் உயிர் இரக்கச் சிந்தனைகள் கொண்டே தமது படைப்பினில் காட்சிகளாகப் புகுத்திப் படிப் போரின் சிந்தனைக்கே இடமளித்து மக்களின் மனதில் இடம்பிடித்துள் ளனர்.

ஈரோடு தமிழன்பன் அவர்கள் ‘ஹைக்கூ முழுமையானதாகவோ, தெளிவான கருத்துத் தெறிப்பு டனோ இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாசகன் தனது கைவசம் கொஞ்சம் வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஹைய்குவைப் படிக்க வேண்டும். அவை தேவைப் படலாம். அவன், தனது அனுபவங் களையும், அனுமானங்களையும், கற்பனைகளையும் எடுத்துக் கொண்டு சென்றால், தானும் படைப் பாளியோடு ஒரு பங்குதாரராகிப் பயனை இதயக்களத்தில் வரவு வைக்கலாம் என எடுத்தியம்பியுள்ளார்.

ஹைக்கூவில், நாம் காட்டும் காட்சி அல்லது நிகழ்ச்சி இயற்கை யைப் பற்றி, மனிதனைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி ஓர் அரிய உண்மையை உணர்த்துவதாக, வாசகன் உள்ளத்தில் ஒளியேற்று வதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஹைக்கூ எழுத வேண்டிய அவசியமில்லை என்கி றார் கவிக்கோ அப்துல்ரகுமாம் (சோதிமிகு நவகவிதை- ப.44.).

தமிழில் 80களில் ஹைக்கூக் கவிதைத் தொகுப்புகள் வெளியிடப்பட்டன. தமிழில் ஜப்பானிய இலக்கண வகைமையில் ஓவியக் கவிஞர் அமுதபாரதியின் ’புள்ளிப் பூக்கள்’தான் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஹைக்கூ நூலாகும். பின்பு அறிவுமதியின் ’புல்லின் நுனியில் பனித்துளி’, ஈரோடு தமிழன்பனின் ’சூரியப் பிறைகள்’, கழனியூரனின் ’நிரந்தர மின்னல்கள்’ ஆகியன வெளியாகி ஹைக்கூ வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தன. இதைத்தொடர்ந்து மித்ரா, மு.முருகேஷ் தொடங்கி சென்னிமலை தண்டபாணி உள்ளிட்டோர் கொண்ட கவிஞர்களின் பெரும்படை இன்றுவரை ஹைக்கூவை ஏந்தி கம்பீரமாக நடையிட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய மொழிகளில் தமிழில்தான் அதிகமான ஹைக்கூ நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ் ஹைக்+6.

+கூ கவிதைகள் ஆரம்ப காலம் முதல் 5/7/5 என்ற அசைகளோடு மூன்று வரிகளால் எழுதப்படாத நிலைமை இருந்து வருகிறது. அதற்கு காரணம் தாம் சொல்ல வரும் கருத்துக்கு ஏற்ப வார்த்தைகளை தேர்ந்தெடுக்கும் போது இலக்கண வரம்புக்குள் கட்டமைப்பு செய்வது என்பது , ஹைக்கூவிற்கு நெருக்கடியைத் தந்தது. அது தன் உண்மைத்தன்மையை இழக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் அசைகளுக்கு ஏற்ப வார்த்தைகளை மாற்றி அமைக்கும்போது ஹைக்கூவின் வடிவமைப்பு கவிஞர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப அமைவதில்லை என்பதே பெரும்பாலோரின் கருத்தானது. இருப்பினும் பாரம்பரிய ஹைக்கூ இலக்கணத்தோடு எழுதப்படும் தமிழ் ஹைக்கூ கவிதைகளும் வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியனவாகத் திகழ்கின்றன.

தமிழ் மொழியில் ஹைக்கூ கவிதைகள் வளர்ச்சி குறித்த பலரது ஆய்வுக் கட்டுரைகள் புத்தகமாகவும், சிற்றிதழ்கள், நாளேடுகள், மாத இதழ்கள் , மின்னிதழ்கள் மற்றும் முகநூலிலும் எழுதப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே முன்னணியில் பல ஆண்டுகளாக இருக்கும் கவிஞர்களது ஹைக்கூ கவிதைகளையே பலரும் திரும்பத் திரும்ப உதாரணக் கவிதைகளாக காட்டுவதும், தற்கால கவிஞர்களின் ஹைக்கூ மற்றும் சென்றியூ கவிதைகளைக் கருத்தில் கொள்ளாததும் சற்று வருத்தத்தையே அளிக்கிறது. எனவே இக்கட்டுரையில் முழுக்க முழுக்க தற்கால ஹைக்கூ கவிஞர்களது கவிதைகளையே இங்கே குறிப்பிடுவதில் மகிழ்கிறேன்.

இன்னும் ஒரு சிலர் தாங்கள் மட்டும்தான் ஹைக்கூவின் மாஸ்டர்கள் என்று காட்டிக்கொள்ளப் பெரும் பிரயத்தனம் செய்துவருகின்றனர். தங்களுக்குத் தாங்களே விளம்பரப் பதாகைகளை வைத்துக்கொண்டு வலம் வருகிறார்கள். இவர்களின் இலக்கிய அரசியலுக்கு அப்பாவிகள் சிலரும் உண்மை அறியாது உடன்பட்டுவருகின்றனர். அப்படிப்பட்டவர்களைக் காலமே தன் தராசில் வைத்து எடைபோட்டுக் கொள்ளட்டும்.

நாம் எவ்வித குறுகிய நோக்கமும் இல்லாமல் நம்வழியில், தமிழ் ஹைக்கூ கவிதைகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய பயண அழகை ரசிப்போம்.

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்கள் தலைமையில், நக்கீரன் இனியஉதயம் இணையாசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களது முன்னிலையிலும் நடத்திய இரண்டு மகா ஹைக்கூ கவியரங்கக் கவிதைகளை இனிய உதயம் இதழ் வெளியிட்டது. இதனால் பங்குபெற்ற இன்றைய தலைமுறைக் கவிஞர்கள் அகம் மகிழ்ந்தனர் என்பது உண்மை.

தமிழகத்தில் கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். மண் சார்ந்த மரபு, மனிதநேயம் மற்றும் வாழ்வியல் விழுமியங்களை மூன்று வரிகளில் முத்தாய்ப்பாய்ப் படைக்கின்ற தமிழ் ஹைக்கூ கவிஞர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் இக்கட்டுரை அமையும் என்பது திண்ணம்.

hh

இயற்கையுடன் இயைந்த வாழ்வில் தமிழ் மண் பாரம்பரியமாய் வாழ்வியல் தடயங்களைக் கொண்டுள்ளது என்பது நிதர்சன உண்மை. தென்னங்கீற்று , மிளகுக் கொடி , மலைச்சரிவு மூலிகைகள், பச்சைப் பசேல் என இருக்கும் புல்வெளிகள், இரவுநேர மின்மினிப் பூச்சிகளின் வரவு, அடர்ந்த காடு ,அழகிய அந்தி வானம், மாலை நேரத்து மஞ்சள் வெயில் என எங்குபார்த்தாலும் தமிழகத்து மண் மீது இயற்கையின் தோற்றங்கள்…. இந்தச் சிறப்பினை படம் பிஜ்டிக்கும் ஹைக்கூ கவிதைகளை இங்கே காண்போம் .

*

நிலவை மறைத்துக் கொண்டிருக்கும்

மேகத்தைத் துடைத்தபடியே

தென்னங்கீற்று

-அஜித்குமார் (எ) ச.ப.சண்முகம்

*

பட்டமரம்

காய்த்துக் குலுங்குகிறது

மிளகுக் கொடி

-சாரதா க.சந்தோஷ்

*

மலையில் இருக்கிறேன்

கூடவே வருகிறது

மூலிகை வாசம்

-மதுரா

*

பனிக்கிரீடம்

சுமை தாளாது

தரை தொடும் புல்நுனி

-இளையபாரதி கந்தகப் பூக்கள்

*

இருள் முழுமையடைகிறது

மின்மினி பூச்சிகள்

மின்னாத சமயம்.

-வே. புகழேந்தி

*

அத்திப் பறவை

சுமந்து செல்கிறது

அழகிய வானத்தை

- வதிலை பிரபா

*

தொடரியில் பயணம்

ஒரு கவிதையோடு கடக்கிறது

அடர்ந்த காடு

-ஜி. அன்பழகன்

*

வானத்தில் யார்

குருதி சிந்துவது

சிவப்பாய் அந்தி

-அனுராஜ்

*

மாலை நேரம்

வீதிக்குள் மெல்ல நுழைகிறது

மஞ்சள் வெயில்

-கா.ந.கல்யாணசுந்தரம்

காணும் காட்சி நமக்குப் பல செய்திகளைச் சொல்கிறது. இப்படி படிமத்துடன் எழுதப்பட்டுள்ள ஹைக்கூக்களை காண்போம்…படிம உத்திகளில் கவிஞன் தான் காணும் காட்சிக்குள் வேறொரு கருத்தினை உட்புகுத்திக் கூறுவதாகும். படிப்போரின் எண்ணங்களில் பல்வேறு காட்சிகள் விரியும் தன்மை கொண்ட வரிகளாக அமையும். ஹைக்கூக்களில் படிமங்களைக் கையாள்வது ஜென் துறவிகளின் கைவந்தக் கலையாக இருந்து வந்தது. தமிழ் ஹைக்கூ கவிதைகளில் கவிஞர்கள் நம் நிலத்துக்கு ஏற்ப முப்பரிமானத் தோற்றத்திலும் எழுதி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய ஹைக்கூ கவிதைகளை இங்கே காண்போம்

*

வானின் செய்தியை

கடலுக்கு எடுத்துச் செல்கிறது

நதி சுமக்கும் இறகு

-ஆரூர் தமிழ்நாடன்

*

கல்லறைப் பெட்டியில்

படிந்து எழுகிறது

தச்சனின் நிழல்

-சாரதா கே. சந்தோஷ்

*

உதிரும் வேப்பம் பூக்களிடம்

பேச்சுக் கொடுக்கிறேன்.

சுவையான சம்பவம்.

-காவனூர் சீனிவாசன்

*

ஏதோ சிக்கல்.

குருவியழைத்தும் பயனேது?

விழி திறவா புத்தர்.

-நா.விச்வநாதன்

*

திரும்பும் படகில்

எண்ணிக்கொண்டு வருகிறேன்

விண்மீன்களை.

-முனைவர் ம.ரமேஷ்

*

அஞ்சல் பெட்டியில்

முகவரியில்லாமல் கிடக்கிறது

ஒரு பூமரத்தின் இலை.

-அருணாச்சல சிவா

*

மரக்கிளையில்

கட்டிய ஊஞ்சல்

ஆடுகிறது தனிமை

-துரை நந்தகுமார்

*

காய்த்து ஓய்ந்த மரத்தில்

இன்னும் இருக்கிறது

யாரோ வீசிய தடி..

-ரசி குணா

*

பறவை தரையிறங்க

சற்றுத் தள்ளி அமர்கின்றன

சருகுகள்.

- ச.ப. சண்முகம்

*

பழைய நூலகம்

காலியான இடத்தில்

அதே அமைதி.

-தஷன் .

சமுதாய அவலங்கள் நிறைந்த உலகில் அவற்றின் தன்மையை இன்றைய தமிழ் ஹைக்கூ கவிதைகள் எப்படி பறைசாற்றுகின்றன என்பதைப் பாருங்கள்..

(தொடர்வோம்)

uday010620
இதையும் படியுங்கள்
Subscribe