காலையிலிருந்து அதிகமான அலைச்சல்... பல இடங்களுக்கும் சென்று, பலரையும் பார்த்தேன். ஆனால், காரியங்களெதுவும் நினைத்ததைப்போல நடக்கவில்லை. நான் யாரையும் குற்றம் சுமத்தவில்லை.v எல்லாருக்கும் அவரவார்களுடைய பிரச்சினைகள் இருக்குமல்லவா? எனக்கு இவையெதுவும் தெரியாமலில்லை. எனக்கு சற்று வயதும், அதற்கென்று கிடைத்திருக்கும் அனுபவங்களும் இருக்குமே!
எனினும்...
பழைய ஒரு நண்பரின் மகன் விஷயமாக காலையில் வீட்டிலிருந்து வெளியேறினேன். நண்பார் எங்களுடைய அமைப்பிற்காக ஏராளமான தியாகங்களைச் செய்த மனிதார்... அவையெல்லாம் அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயங்கள்...
எனினும்...
நான் என்ன கூறுவது? மனதில் பெரிய சுமையைச் சுமந்தவாறு உச்சிப்பொழுது வெயிலில் நடந்தேன். கையிலிருந்த பிளாஸ்டிக் பை முழுவதும் பொருட்கள் இருந்தன. அரிசி, பருப்பு, காய்கறிகள்... இப்படி சமையலறைக்குத் தேவைப்படும் பலவும்...
இந்த பையில் பொருட்களை நிறைத்துக்கொண்டு நடக்கும்போதுதான் நான் முற்றிலும் நானாக இருக்கிறேன். அவ்வாறு சமீபகாலமாகத் தோன்றுகிறது.
இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால்... இந்த பை என் சரீரத்தின்... ஆன்மாவின் ஒரு பகுதியாகிவிட்டது என்றும் கூறலாம். அந்த அளவிற்குப் பிரிக்கமுடியாத ஒரு...
வேட்டியை மடித்துக்கட்டி, பையையும் தூக்கிக்கொண்டு ஒவ்வொன்றையும் சிந்தித்தவாறு மெதுவாக நடந்துகொண்டிருக்கும்போது, பல வருடங்களாக பழக்கமானவார்கள் கேட்பார்கள்:
'இதை நிறுத்திக்கொள்ளக் கூடாதா? இதையெல்லாம் தூக்கிக்கொண்டு இந்த வயதில்... இல்லாவிட்டால்...
எங்கிருந்தாவது ஒரு பையனைக் கொண்டுவந்து இருக்கச் செய்து...'
நான் அப்போதெல்லாம் புன்னகைக்க மட்டும் செய்வேன். என் சிரமங்கள் எனக்குத்தானே தெரியும்? ஆனால்,மிகவும் கடுமையான விமார்சனங் கள் எப்போதும் வீட்டுக்காரியிடமிருந்துதான் வரும்.
வீட்டுக்காரி எப்போதும் கூறுவாள்:
'இந்த பழைய பிளாஸ்டிக் பையை நீங்க விட்டெறியக் கூடாதா? என்னை எத்தனை முறை இதை தைக்க வச்சிருக்கீங்க! இதோட நிறம் முழுவதுமே போயிருச்சுல்ல?இதன் கைப்பிடியிலிருந்த நார்களெல்லாம் பிரிஞ்சு போயிருச்சுல்ல..?
அதுக்குப்பிறகும் நீங்க இதை வச்சிக்கிட்டு..'
மனைவி கூறுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால்,என்ன காரணத்தாலோ இந்த பையை விட்டெறிவதற்கு எனக்கு மனம் வரவில்லை. நீண்டகாலம் என்னுடன் இது சோர்ந்தே இருக்கிறதே!
எப்படியாவது தைத்து சரி செய்தாலும்... இனி ஒருநாள்கூட பயன்படுத்தமுடியாத நிலை வந்தால்.. அப்படியும் வரலாம் அல்லவா? ஆனால், அப்போதும் எப்படி நான் இந்த பையை... இல்லை... என்னால் அது முடியுமென்று தோன்றவில்லை. ஆனால்,இது எதையும் எந்தச் சமயத்திலும் மனைவியிடம் கூறியதில்லை.
எதிர்ப்புகளையெல்லாம் கேட்டுவிட்டு, ஒரு முட்டாளைப்போல மெதுவாக சிரிக்கமட்டும் செய்வேன்.
அப்படிப்பட்ட இந்த பிரியத்திற்குரிய பையைத் தூக்கிக்கொண்டு காய்கறி மார்க்கெட்டின் வெளிவாசலைக் கடந்து சாலையின் வழியாக சில அடிகள் நடந்ததும், அங்கிருந்த அந்த பழைய பூவரசு மரத்தின் நிழலில் நான் யாரைப் பார்த்தேன்?
என் பழைய நண்பன் ராமச்சந்திரன்!
ராமச்சந்திரன் ஆளே முற்றிலும் மாறியிருந்தான். முன்பு இருந்ததைப்போல. காய்ந்துபோன ராமச்சந்திரனாக இல்லை. தடித்து சதைப்பிடிப்புடன்... நல்ல பேண்ட், சட்டையுடன்... எனினும், ராமச்சந்திரனை அடையாளம் தெரிந்துகொள்வதற்கு எனக்கு எந்தவொரு சிரமமும் இல்லை. பார்த்தவுடனே ராமச்சந்திரனுக்கும் என்னைத் தெரிந்துவிட்டது.
ராமச்சந்திரன் ஆச்சரியத்துடனும் சந்தோஷத்துடனும் கூறினான்: "இல்ல...இது யார்? என் அண்ணனா? அண்ணா... நான் உங்களைப் பார்க்கணும் பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறப்போ அண்ணா... நீங்க..."
அதைக் கேட்டபோது, எனக்கு சந்தோஷம் உண்டானது. நான் அருகில் சென்று, ராமச்சந்திரனின் கையைப் பிடித்துக்கொண்டு கூறினேன்:
"அப்படின்னா... என்னைக் கொஞ்சமும் மறக் கல... இல்லியா?"
ராமச்சந்திரன் வருத்தம் கலந்த குரலில் கூறினான்: "அது எப்படி அண்ணா? எதுவுமே இல்லைன்னாலும்...
பிள்ளைகளுக்கு எப்படி கணக்கு கத்துத் தர்றதுன்னு முன்ன எனக்கு சொல்லிக் கொடுத்ததே அண்ணா... நீங்கதானே? அந்த அண்ணனை நான்..."
நான் மனம் நிறைய சிரித்தேன்.
ராமச்சந்திரனும் நானும் முன்பு ஒரே பள்ளிக்கூடத்தில் பணியாற்றினோம். இருவரும் கணக்கு ஆசிரியார்கள். வயது விஷயத்தில் என்னைவிட. மிகவும் இளையவனாக இருந்தாலும், நாங்கள் நண்பார்களாக இருந்தோம். சில நேரங்களில் பணிசம்பந்தமாக நான் ராமச்சந்திரனுக்கு அறிவுரைகள் கூறியிருக்கிறேன். மாணவார்களுக்குக் கற்பிப்பதைவிட, ராமச்சந்திரனுக்கு அமைப்பின் பின்னால் செல்வதில்தான் விருப்பம் அதிகம். பிறகு... கவிதை, நாடகம் ஆகியவையும் இருந்தன.
எனக்கு அவை எதுவுமே புரியவில்லை. எனினும்,என் நண்பனின் புகைப்படம் அவனுடைய கவிதை, நாடகம் ஆகியவற்றுடன் சோர்ந்து பிரசுரமாகி வருவதைப் பார்ப்பதென்பது சந்தோஷத்தைத் தரக்கூடிய விஷயமாக இருந்தது. எனினும், அப்போதெல்லாம் சிறிய ஒரு கவலையும் எனக்கு உண்டானது.
நான்தான் கூறினேனே... ராமச்சந்திரன் கணக்கு ஆசிரியராக இருந்தான் என்று. கணக்கில் ராமச்சந்திரனுக்கு மிகப்பெரிய திறமையில்லை என்றெல்லாம் நான் கூறமாட்டேன். ஆனால், ராமச்சந்திரன் கற்றுத் தந்த பிள்ளைகள் தொடார்ந்து கணக்கில் தோற்பது ஆரம்பித்தபோது, ஒருநாள் நான் அவனிடம் கூறினேன்:
"ராமச்சந்திரா...இது நடக்கக்கூடாதே! கற்றுத்தரும் விஷயத்தில் மேலும் கொஞ்சம்..."
அப்போது ராமச்சந்தின் கூறினான்:
"அண்ணா...என்ன செய்யணும்னு நீங்க சொல்றீங்க? இந்த பிள்ளைகளின் தலை முழுவதும் களிமண்தான் இருக்கு. நான் இல்ல... சாட்சாத் பிரம்மாவே முயற்சி செய்தாலும் இவங்களை..."
பிள்ளைகளுக்கு கணக்கு கற்றுத் தருவதைவிட முக்கியமானது... கெட்டுப்போன சமூக நிலைமையை மாற்றுவது... அதற்காகத்தான் தான் கவிதை, நாடகம் ஆகியவற்றை எழுதுவதாகவும் ராமச்சந்திரன் கூறினான்.
ராமச்சந்திரன் இடையில் திருச்சூருக்கும் திருவனந்தபுரத்திற்கும் சென்றான். இறுதியில் நிரந்தரமாக திருவனந்தபுரத்திற்கு மாறிச் சென்றான்.
அங்கு என்ன வேலையென்று எனக்குத் தெளிவாகத் தெரியாமலிருந்தது. அகாடமியிலோ குழந்தைகள் இலக்கிய அமைப்பிலோ ஏதோ பணியென்று கேள்விப்பட்டேன்.
ராமச்சந்திரன் ஒரு மாருதி ஸென் காரில் உரசியவாறு நின்றுகொண்டிருந்தான். காரின் நிறம், ஒளிர்ந்துகொண்டிருக்கும் 'மெரூன்.' அதன் அழகை ரசித்தவாறு, பளபளவென பிரகாசித்துக் கொண்டிருந்த அதனை விரல்களால் தடவியவாறு நான் நின்றுகொண்டிருந்தபோது, ராமச்சந்திரன் பெருமையுடன் கூறினான்:
"இன்னும் பதிவு செய்யலை. மாருதி 800லிஐவிட ஒரு லட்சம் அதிகமா கொடுத்தேன். ஆனா... அதனா லென்ன?நல்ல... முதல்தரமான 'பிக் அப்'..."
நான் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டு நின்றிருந்தபோது, ராமச்சந்திரன் மீண்டும் கூறினான்:
"இந்தக் காலத்தில ஒரு கார் இல்லாம எதுவுமே நடக்காது. எங்க போகணும்... யாரைப் பார்க்கணும்..? அண்ணா...
சொல்லுங்க."
ஆனால் நான் அப்போது முன்பு ராமச்சந்திரன் எழுதிய கவிதைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.
அவற்றை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும்...
நான் கூறினேன்: "ராமச்சந்திரா...உன் கவிதை, நாடகம்...
எதையுமே இப்போ பார்க்கமுடியலையே?"
அப்போது ராமச்சந்திரன் ஒரு அதிர்ச்சியுடன் கூறினான்:
"அண்ணா.. நான் என்னோட அனைத்து வியாபாரங்களையும் நிறுத்தி வச்சிருக்கேன். அதனால தான்..."
நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்: "நிறுத்தி வச்சிருக்கிறதாக சொல்றியா? அது ஏன்? அரசாங்க அளவுல ஏதாவது பிரச்சினையா... வேற ஏதாவதா..?"
ராமச்சந்திரன் உடனடியாகக் கூறினான்:
"அது எதுவுமே இல்ல... இப்போ ஒரு வீடுகட்டுற வேலையில தீவிரமா ஈடுபட்டிருக்கேன்.
அதனாலதான்..."
ராமச்சந்திரனுக்கு திருவனந்தபுரத்தில் இரண்டு வீடுகள் இருக்கின்றன என்பது நான் கேள்விப்பட்ட செய்தி.
அப்படியென்றால் இது... என் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக ராமச்சந்திரன் கூறினான்:
திருவனந்தபுரத்தில இருக்கறது என் ரெண்டு பெண் பிள்ளைகளுக்கும்... இது மகனுக்கு...
அவனுக்கும் என்னோட கடமை இருக்குதே!"
ராமச்சந்திரனின் மகன்மீதான பாசத்தை நினைத்து எனக்கு சந்தோஷமே உண்டானது. எனினும், நான் கேட்டேன்:
"ராமச்சந்திரா... வீடு கட்டுற என்பதற்காக கவிதை எழுதுறதை ஏன் நிறுத்தினே? ஒருவகையில பார்த்தா அனைத்துமே ஒட்டுமொத்த வியாபாரம் தானே?"
ராமச்சந்திரன் ஏதோ நினைத்ததைப்போல கூறினான்:
"அண்ணா....நீங்க சொன்னதில ஒரு உண்மை இருக்கு. ஆனா..."
நான் கேட்டேன்: "என்ன...ஆனா..?"
ராமச்சந்திரன் அப்போது கவலையுடன் கூறினான்:
"'கவிதை, நாடகம் இதையெல்லாம் எழுதினா எனக்கு காசு கிடைக்கும். ஆனா இந்த வீடுகட்டுற விஷயத்தில..? காசு போகல்ல செய்யுது? கிடைக்கலையே! ஒருவகையில நஷ்ட வியாபாரமால்ல இருக்கு!"
கணக்கு கூட்டுவதில் ராமச்சந்திரனுக்கு இருக்கக்கூடிய திறமை என்னை ஆச்சரியப்பட வைத்தது. பிள்ளைகளுக்கு சரியாக கணக்குப் பாடத்தைக் கற்றுத் தரவில்லை என்பதற்காக இந்த ராமச்சந்திரன்மீதா முன்பு நான் குற்றம் சுமத்தினேன் என்பதை நினைத்துக் கவலைப்படவும் செய்தேன்.
நான் இவ்வாறு கவலைப்பட்டுக்கொண்டு நின்றிருக்க, ராமச்சந்திரன் வேதனையுடன் கூறினான்.
"என்ன ஒரு விலை! பொருள்களுக்கு பத்தி எரியிற விலையில்லியா?
மார்பில், கிரானைட், பெயின்ட், எலெக்ட்ரிக் கல், சானிட்டரி இணைப்புங்க... இது ஏன்? நாம எரிக்கிற விறகுக்குக் கூட... எனக்குப் புரியவே மாட்டேங்குது. பிறகு இந்த... கொடுக்கவேண்டிய கூலியை எடுத்துக்கிட்டா... இனி...
கேட்ட கூலியைக் கொடுக்குறோம்னு வச்சுக்கங்க. கிடைச்ச காசுக்கு அர்ப்பணிப்போட வேலை செய்றாங்களா?
அதுவுமில்ல."
தொடார்ந்து அவன் கூறினான்: "எனக்குத் தெரியல... நம்மைப்போல சாதாரணமானவங்க எப்படி இங்க வாழ்றதுன்னு..."
வாழ்க்கையில் உள்ள சிரமங்களைப் பற்றி ராமச்சந்திரன் இவ்வாறு ஆவேசத்துடன் கூறிக்கொண்டிருந்தபோது, ராமச்சந்திரனின் ஓட்டுநார் ஒரு பெரிய கூடை நிறைய சிவந்த மாதுளம் பழங்களுடன் வந்தான்.
ராமச்சந்திரனுக்கு பணிச்சுமை இருந்தது. எனினும், கார் புறப்படுவதற்கு முன்பு கூறினான்:
"கொஞ்சம் மாதுளம் பழங்கள்... மனைவிக்கு ரொம்ப..."
உச்சிப் பொழுதாக இருந்ததால், சாலையில் பெரிய கூட்டமில்லை. மேலும் சற்று காத்து நின்றால் எனக்கு பேருந்து கிடைக்கும். ஆனால்,நான் நடந்தேன்.
என் மனதில் அப்போது என் பழைய நண்பரின் மகன் விஷயம்தான் இருந்தது. செய்யாத குற்றத்திற்கு மகன் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறான்.
மனைவியோ நிரந்தர நோயாளி... பிள்ளை களைப் பள்ளிக்கூடத்தில் சோர்க்க வேண்டும். வாழ்க்கையின் இந்த சுமையெல்லாம் சோர்ந்து...
ஏதாவது செய்ய இயலுமா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நான் ஏறி இறங்காத படிகள் இல்லை.
நானோ..முற்றிலும் சக்தியற்றவன். எதுவுமே புரியவில்லை.
இனி.. இனி என்ன செய்வது?