விஜயகாந்த்தை இழந்ததன் மூலம் தமிழ்த் திரையுலகம் ஒரு பெரிய வெற்றிடத்தை அடைந்திருக்கிறது. கூடவே, அரசியல் உலகிலும் அவரால் நிறைவேறக் காத்திருந்த ஒரு பெரும் எதிர்பார்ப்பு, அப்படியே உறைந்துபோய் நிற்கிறது.

திரைப்பட நடிகர்கள் குறித்து இரண்டுவிதமான பார்வைகள் உண்டு. ரசிகர்கள் கோணம். பல ஆண்டுகள் திரைத்துறையில் பணிபுரிவோர் கோணம். விஜயகாந்த் இரண்டு நிலையிலும் நல்லவர். அவர் புகழ் பெற்ற நடிகர் மட்டும் அல்ல. நல்ல மனுஷன்!

நாராயணன் விஜயராஜ் அழகர் சாமி. நடிகர் விஜயகாந்தின் இயற் பெயர். மதுரை மாவட்டம் திரு மங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அழகர் சாமி என்ற ரைஸ் மில் உரிமை யாளருக்கு மகனாகப் பிறந்தவர்.

சென்னை வந்தபிறகு, சினிமாவுக் காக தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார்.

Advertisment

rr

சினிமா வாய்ப்பு இவருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்க வில்லை. பல கட்டப் போராட் டங்களுக்கு பிறகுதான் கிடைத் தது. இவரது முதல் படம், 1979-ஆம் ஆண்டு எம்.ஏ.காஜா வின் இயக்கத்தில் வெளியான 'இனிக்கும் இளமை'! விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத் திய திரைப்படம் 'சட்டம் ஒரு இருட்டறை'. இத்திரைப்ப டம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு வெற்றிபெற்றது.

அதன் பிறகு விஜயகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறினார்.

'புலன் விசாரணை', 'சேதுபதி ஐபிஎஸ்', 'சத்ரியன்', 'கேப்டன் பிரபாகரன்', 'வானத்தைப் போல', 'தவசி', 'ரமணா' என 150 திரைப்படங் களுக்கும் மேல் நடித்துள்ளார்.

தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்தவர் நடிகர் விஜயகாந்த். உலக சினிமாவில் இதை வேறு யாரும் செய்திருக்கமாட்டார்கள். அதிகமான புதிய தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்!

"சொல்வதெல்லாம் உண்மை திரைப் படம் மூலம் என்னை தயாரிப்பாளராக அறிமுகப் படுத்தியது அவர்தான். இந்த காட்சி எதற்கு, வசனம் எதற்கு, கதையை இப்படி மாற்றலாமா என்றெல் லாம் அவர் பேசமாட்டார். கதையை ஒத்துக் கொண்டு, சம்பளம் வாங்கிவிட்டால் எதையும் பேசாமல் விரைவாக நடித்துக் கொடுத்துவிடுவார். மிகச்சிறந்த மனிதர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல தொழில்முறைக் கலைஞர் விஜயகாந்த்!” என்று கூறுகிறார் தயாரிப்பாளர் டி. சிவா.

பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு அதிகம் வாய்ப்பளித்தவர்?.

பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுடனான

இவரது கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. 1986-ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள்’ எனும் திரைப் படத்தில், அப்போதைய நடிகர்கள் பலரும் நடிக்கத் தயங்கிய டி.எஸ்.பி தீனதயாளன் என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் திரையில் தோன்றி னார் நடிகர் விஜயகாந்த். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது!

தனது இமேஜ் பற்றிக் கவலைப்படாமல், சற்று வயதான வேடத்தில் இந்த படத்தில் அவர் நடித்திருப்பார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தது!

தொடர்ந்து திரைப்பட கல்லூரியிலிருந்து வந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி உழவன் மகன், செந்தூரப் பூவே, காவியத் தலைவன் போன்ற திரைப்படங்களைக் கொடுத்தார்.

1984-ஆம் ஆண்டு, விஜய காந்தின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஆண்டு. அந்த ஒரே ஆண்டில் மட்டும் விஜயகாந்த நடித்த 18 திரைப் படங்கள் வெளி யாகின. அவற் றில் பலவும் வெற்றிப் படங் கள்! மிகச்சில நடிகர் களுக்குதான் இந்தச் சாதனை உள்ளது.

கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என்ற தலைமுறை உருவான போது, அதற்கு இணையாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜயகாந்த்.

அரசியல் கட்சியைத் தொடங்கி குறைந்த காலத்திலே தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்த சாதனை, அவருக்கு உரியது. எனினும் இடையில் எதிர்பாராமல் வந்த நோய்த்தாக்கம், அவர் அரசியலையும் மக்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேறமுடியாத புள்ளியில் நிறுத்தி விட்டது.

எனினும் அவரது கொடைகுணம் அனைத் தையும் மீறி அவரது புகழை உச்சரித்துக் கொண்டே இருக்கிறது.

‘’மனுஷனுக்கு எது எவ்ளோ கிடைச்சாலும் பத்தாது சார்! இன்னும் இன்னும் வேணும்னே மனசு கேக்கும். திருப்தியே வராது. ஆனா அவனை உக்காரவெச்சு ஒருநாள் சோறு போட்டு அழகு பாருங்க. அவன் பசிக்குத் தேவைக்குச் சாப்பிட்டான்னா அடுத்து ஒரு கரண்டி சோறு எக்ஸ்ட்ரா பரிமாறினாலும் தடுத்து மறிச்சு, போதும் வேணாம்னு டக்குனு எந்திரிச்சிருவான். அவ்ளோதான் சார் வாழ்க்கை! அதுக்குத்தான் இம்புட்டுப் பாடு. ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டானு பாட்டாவே எழுதிவெச்சுட்டாங்கள்ல சார்!” -இது பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடன் வெளியான நேர்காணல் ஒன்றில் விஜயகாந்த் இயல்பாகச் சொல்லியது! உண்மைதானே! இவ்வளவுதான் வாழ்க்கை! இவ்வளவேதான் உலகம்! போய் வாருங்கள் வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத நல்ல மனிதரே!

அவர் மறைந்த தகவல் காதில்விழுந்த நொடியில் என் காதில் தானாய் ஒலித்த பாடல்.... அவர் திரைப்படத்தில் இடம் பெற்ற ’அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே...தான்.

அது அவரை பலவிதங்களிலும் நினைவூட்டுகிறது.

போய் வாருங்கள் மக்கள் கலைஞரே. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். பல காலம் கடந்தும் காலம் உங்கள் பெயரைச் சொல்லும்!