எமக்கான மனிதநேயத்தைத் தேடுகிறேன்... -தமிழில் : எஸ்.கயல்

/idhalgal/eniya-utayam/looking-humanity-us-tamil-skayal

னித அனுபவத்தின் சிக்க லான தன்மைகளைப் பல்வேறு பின்னணியைச் சார்ந்த கதா பாத்திரங்களின் வழியே கையாள்கிற இலக்கியச் சமூகம்தான் மற்றவர்களின் சூழலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பரிவோடு நடப்பதை அன்பான ஒரு குறிக்கோளாகவே தன்னகத்தே வைத்திருக்கிறது.

உலகெங்கிலும் உள்ள வாசகர் கள் மனிதநேயத்துக்க்கு ஆதர வான படைப்புகளைக் கொண்டாடி வருகின்றனர்.

அத்துடன் பலதரப்பட்ட எழுத்தாளர்களை வாசிப்பதே ஒரு தார்மீக ஒழுக்கமாகக் கருதப்பட்டு வருகிறது. ஆயினும், காசாவில் நடந்துவரும் இனப்படுகொலையை அமெரிக்கர்கள் பார்த்தபோது மன அமைதியைக் குலைக்கக்கூடிய ஒரு முரண்பாடு தெளிவாக வெளிப் பட்டதை நான் கண்டேன்.

மற்றவர்களின் சூழல் பற்றிய புரிதலால் விளையும் பரிவு, புனைகதைகளின் எல்லைகளுக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டு, நிஜ உலகில் வேரூன்றத் தவறி கவன ஈர்ப்புச் செயல்பாடுகளாகமட்டுமே ஏன் இருக்கின்றன?

பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறி நியூயார்க்கின் புரூக்ளின் நகரில் குடியேறிய என் பெற்றோரால் நான் வளர்க்கப்பட்டேன். இடப் பெயர்வு, ஒடுக்குமுறை, அதிகாரமற்ற சூழ-ல் பிறந்த என்னுடைய அடை யாளமே அந்தச் சூழ-ன்மீது கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான்.

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிகழ்வுக்குப் பிந்தைய அமெரிக் காவில் ஒரு பாலஸ்தீனிய-

அமெரிக்க இளம் பெண்ணாக வளர்ந்த நான் பெருமளவு தனிமைப் படுத்தப்பட்டேன். என்னுடைய பாரம்பரியம் சர்ச்சைகளால் நிரம்பி யிருந்ததை நான் முத-லேயே அறிந்து கொண்டேன். பாலஸ்தீனம் என்ற ஒன்று இல்லை என்ற கூற்றில் தொடங்கி, அதன் நீட்சியாக நானொரு பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்படலாம். அதனால் நானே இல்லை என்று சொல்லும் அளவுக்கு "பாலஸ்தீனம்" என்ற ஒற்றைச் சொல்லை உச்சரிப்பது மோசமான எதிர்விளைவுகளைத் தூண்டப் போதுமானதாக இருந்தது.

அரேபியாவுக்கும் இஸ்ரேலுக் கும் இடையேயான யுத்தமான நக்பாவில் தங்கள் உடைமைகளை முற்றிலும் இழந்ததையும், தாம் அடைந்த பல துன்பங்களைப் பற்றியும் என் தாத்தாவும் பாட்டியும் சொன்ன கதைகள், 1948 ஆம் ஆண்டில் பாலஸ்தீனியர்கள் தம் தாய்நாட்டி-ருந்து அதிர்ச்சி கரமாகவும் கொடூரமாகவும் வெளி யேற்றப்பட்ட கதைகள் ஆகிய வற்றின் மூலம் நான் அதை உணர முயற்சித்தேன்.

பாலஸ்தீனிய வரலாற்றி

பாலஸ்தீனிய வரலாற்றின் கனமும், நக்பாவின் அதிர்ச்சியும் தொலை தூர நினைவுகள் அல்ல. அவை எம் வீடுகளிலும் சமூகத்திலும் ஊடுருவி, சக்தியற்ற உணர்வை உருவாக்கி, எம் உறவுகளின் துணிவைச் சிதைத்துவிட்டது. ஆண்களைப் பெண்களுக்கு எதிராக, பெற்றோர் களை குழந்தைகளுக்கு எதிராக, பாரம்பரியத்தைச் சுதந்திரத்திற்கு எதிராகக் கொண்டுவந்து நிறுத்தி விட்டது.

இஸ்ரேலாலும் மற்ற மேற்கத்திய நாடுகளாலும் பாலஸ்தீனியர்கள் மீது சுமத்தப் பட்ட ஒடுக்குமுறை, அவர் களுடைய சொந்த சமூகத்தில் உள்ள ஒடுக்குமுறை என ஒடுக்குமுறையின் எடை இரண்டு மடங்காக இருந்தது.

வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஒரு ஒடுக்குமுறை வலுக் குறைவாகத் தெரிந்தாலும் அது மற்ற ஒடுக்குமுறைக்குச் சமமான வ-மைகொண்டது.

dd

பாலஸ்தீனியர்கள் தங்களுக்குள்ளாகவே நிகழ்த்திய போராட்டங்கள், இடம் பெயர்வுகள், உயிர் வாழ்வதற்காகப் பட்ட பாடு, நாடு கடத்தப்படுதல் எனத் தொடர்ச்சி யாக நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் எங்கள் அனைவருடைய குடும்பங்களிலும் வடுக்களைப் பதித்தது.

நான் பெரியவளாக வளர்ந்தபோது நூல்களே எனக்குப் புக-டம் தந்தன. பாலஸ்தீனியப் பெண் என்பதால் நானொரு அரூப உருவில் இருப்பதாக உணர வைத்த அந்தத் தனிமையான காலங்களில் நூல்களே எனக்குத் துணையாக இருந்தன. பாலஸ்தீனிய அனுபவத்தைச் சித்தரிக்கும் சில இலக்கியப் படைப்புகள் அங்கு இருந்தபோதிலும், நான் உணர்ந்த சக்தியற்ற தன்மையையும் தனிமையையும் பிரதிப-க்கும் கறுப்பின எழுத்தாளர்களால்தான் நான் ஈர்க்கப்பட்டேன்.

என் தனிமைக்கும் மற்றவர்களிடமிருந்து பிரிந்துகிடப்பதற்குமான காரணத்தின் வேர்களை அத்தகைய நூல்களின் பக்கங்களுக்குள் என்னால் காண முடிந்தது. அத்துடன் ஒடுக்குமுறைச் சக்திகளுக்கும் என் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு என்பதை என்னால் முதன்முறையாக அடையாளம் காணமுடிந்தது. என்னுடைய சிறிய உலகத்துக்கும் அதற்கப்பால் இருந்த பரந்துபட்ட வேறொரு உலகத்துக்கும் பாலமாகச் செயல்பட்ட அந்த நூல்கள், தொடர் அதிர்ச்சிகளால் பாதிக்கப்பட்டிருந்த என் குடும்ப எல்லைகளைக் கடந்து வாழ்க்கையைப் பற்றிய எனது புரிதலை விரிவுபடுத்தின.

டோனி மோரிசன், மாயா ஏஞ்சலோ மற்றும் ஆட்ரே லார்ட் போன்ற கறுப்பின எழுத்தாளர்களின் படைப்புகளில் நான் ஆறுதல் கண்டேன்.

தங்களுடைய துணிச்சலான கதைகளில் அவர் கள் விவரித்த உணர்ச்சிகளும் போராட்டங்களும், அனுபவங்களும் விடுதலை இயக்கங்களின் அரசிய லோடு என்னை இணைத்தன. என்னுடைய பின்னணியும் அவர்கள் எழுதிய கதைகளில் காணப்பட்ட பெண் களின் பின்னணியும் முற்றிலும் வெவ்வேறானவை. ஆனால் உலகளா விய அக் கதை களின் ஒரு பகுதியாக இப்போது நான் என்னை அடையாளம் காண முடிந்ததைக் கண்டு எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் "வேறொருவர்" ஆகப் பார்க்கப்படும் ஓர் உலகில், அவர்களுடைய நூல்களின் வாசிப்பு தனியளாகவும், அந்நியமானவளாகவும் அதற்குப் பிறகு என்னை உணரவிடவில்லை. பொதுவான போராட்டங்களைப் பற்றிய நுண்ணறிவை அவை எனக்கு அளித்ததுடன் என்னுடைய நோக்கங்களுக்குத் தொடர்புடைய மற்ற சில விஷயங்களையும் முன்னெடுக்க என்னைத் தூண்டின.

என் நேசத்திற்குரிய இந்த எழுத்தாளர்களின் குரல்கள் பாலஸ்தீனிய- அமெரிக்க அனுபவத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுவதற்கான துணிச்சலை எனக்கு அளித்தன. இலக்கியப் புத்தக அலமாரியில் பாலஸ்தீனியர்களுக்கான ஓர் இடத்தை உருவாக்கவும், சொல்லப்படாமலும் புறக்கணிக்கப்படவும் போகக்கூடிய கதைகளைப் பகிரவும் நான் விரும்பினேன்.

குரலற்ற ஒரு சமூகத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கி யது, கதைகளுக்கு இருக்கும் பேராற்ற-ன் மூலமாக பாலஸ்தீனியர்களுக்கான அனுதாபத்தை வளர்த்தது என டோனி மோரிசனும் மாயா ஏஞ்சலோவும் எனக் குள் நிகழ்த்திய மாற்றத்தை நானும் மற்ற வாசகர் களுக்குக் கடத்துவதே என் நோக்கம்.

பல வாசகர்களுக்கு, என் நாவல்கள் அதைத்தான் செய்திருக்கின்றன.

தொடர் துயர் நிகழ்வுகளால் பாலஸ்தீனியப் புலம்பெயர் சமூகத்தின் பல தலைமுறைகள் அனுபவிக் கும் மன உளைச்சலை ஆராயும் எனது நூல்களைப் பலவிதப் பின்னணிகளைச் சார்ந்தோரும் கொண்டாடு வதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் அறிய வாய்ப்பற்ற ஒரு உலகத்திற்கு அவர்களை அறிமுகப் படுத்திய எனது கதைகள் அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை ஊட்டுகின்றன என்பதை அவர்கள் சொல்லக் கேட்டு நான் மிகவும் நெகிழ்ந்துபோனேன். இந்தக் கதைகளைப் பகிர்ந்ததற்காக எனக்கு நன்றி தெரிவித்து அவர்கள் வெளிப்படுத்திய கருத்துகளில் பாலஸ்தீனிய மக்களுக்காக அவர்கள் மனதில் தோன்றிய பரிவு தெளிவாகத் தெரிந்தது.

ஆனாலும் பாலஸ்தீனத்துக்கான என்னுடைய அசைக்கமுடியாத ஆதரவைப் பற்றி இப்போது அறிய வந்ததும் வாசகர்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த னர். சமீபத்திய வாரத்தில் தங்கள் குறுந்தகவல்கள்மூலம் அவர்கள் என்னைக் கடுமையாகத் தாக்கிவருகின்றனர். என் நூல்களை விளம்பரப்படுத்தியவர்கள் இப்போது கண்டனம் தெரிவிக்கவேண்டும் அல்லது தங்கள் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் சில வாசகர்கள் ஆக்ரோஷமாகக் கோரிக்கை வைத்தனர்.

இன்னும் சிலர் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இருப்பதற்காக என்னைப் பயங்கரவாதி என்று அழைத்தனர்; சமீபத்தில் வெளிவந்த என் 'ஈவில் ஐ' நாவல் தனக்கு மிகப் பிடித்திருந்ததாக முன்பு கூறியிருந்த ஒரு வாசகி அதைக் குப்பைத் தொட்டியில் வீசும் காணொளியைப் பதிவிட்டிருந்தார்.

பாலஸ்தீன் பற்றிய என் நாவல்களை நோக்கி அவர்களை முத-ல் ஈர்த்தது எது? எங்கள் கதை களைப் படிப்பதன் மூலம் அவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள்? என்கிற முக்கியமான கேள்விகளைக் கேட்க இந்த எதிர்வினைகள் என்னைத் தூண்டுகின்றன.

எனது நாவல்கள், இஸ்ரே-ய ஆக்கிரமிப்பால் பாலஸ்தீன மக்கள் நெடுங்காலமாக அனுபவித்து வரும் பெருந்துயரத்தை, ஆக்கிரமிப்பாலும் நாடு கடத்தப்படுதலாலும் தலைமுறை தலைமுறையாக அவர்கள் அனுபவிக்கிற வேதனையை நேரடியாகப் பேசுபவை. வாசகர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லையா என்ன? மற்றவர்களின் சூழல் புரிந்து அவர்களுக்காகக் கருணைகொள்பவர்களாகப் புரிந்துகொள்ளப்பட்ட இந்த வாசகர்கள், பாலஸ்தீனத்தின் செழுமையான கலாச்சாரத்தின்பால் ஈர்க்கப்பட்டார்களே தவிர, தங்கள் முன்முடிவுகளை மறுபரிசீலனை செய்யவே விரும்பவில்லையா? அல்லது அவர்கள் என் நாவல்களில் மறைபொருளாகச் சொல்லப்பட்ட கருத்துகளைச் சரியான புரிதலுடன் அணுகத் தவறி, எமது போராட்டங்களைப் பார்த்தும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் அவற்றை வெறும் பொழுதுபோக்காகமட்டுமே அணுகினார்களா?

பாலஸ்தீனத்திற்கான என்னுடைய ஆதரவைப் பற்றி அறிந்ததும் நிறைய வாசகர்கள் அடைந்த அதிர்ச்சி, வாசிக்கும் சமூகத்தினிடையே கவன ஈர்ப்புச் செயல்களில் ஈடுபடும் நிலைப்பாடு பரவி யிருக்கிற கவலைமிகு யதார்த்தத்தை நமக்கு அம்பலப் படுத்துகிறது. எனது கற்பனைக் கதாபாத்திரங்கள் மீது வாசகர்கள் உணர்ந்த பச்சாதாபத்திற்கும், பாலஸ்தீனத்தில் துயரத்தை அனுபவிக்கும் நிஜ மனிதர்களுக்கான அவர்களுடைய உணர்வுகளுக்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது.

எந்தச் செல்வாக்கும் அற்ற ஒரு எழுத்தாளரின் படைப்பைக்கூடத் தாம் வாசிக்கிறோம் என்பதற்காகத் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொண்ட எத்தனை வாசகர்கள், பரிவுணர்வுடன் இருப்பதாகத் தம்மை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டுமட்டுமே இருந்தார்கள் என்பதையும், அந்த எழுத்தாளருக் குத் தம்முடைய மக்கள் மீதிருந்த மனிதாபிமான உணர்வை அவர்கள் அதுவரையிலும்கூட அங்கீகரித்திருக்கவில்லை என்பதையும் அறிந்தபோது நான் மனமுடைந்துபோனேன். உண்மையான புரிதலோடான பரிவு பாரபட்சமற்றது. அது நியாயமற்ற சார்புநிலையின் பாரம் இல்லாதது.

அவ்வாறில்லாமல் வெற்றுப் பாசாங்கு, சார்பு நிலையையே ஆழமாக நிலைநிறுத்தும். புரிதலையும் பரிவையும் வெளிப்படுத்தும் அதேவேளையில் ஒருவர் தம் சார்புகளை மறைத்துக்கொள்ளும் இரட்டைவாதம், நமது சமூகத்தின் சிக்கலான தன்மையையே பிரதிப-க்கிறது. இது நமக்கு இன்னும் நிறைய வேலைகள் உள்ளன என்பதை நினைவூட்டுகிறது.

காஸாவில் நிலவும் நெருக்கடி இந்தப் பிரச்சினை அவசரமாக அணுகப்பட வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகிறது. இலக்கியத்தில் பாலஸ்தீனியப் பிரதிநிதித்துவம் இல்லாதது பாலஸ்தீனியக் குரல்களை மௌனமாக்குவதோடு, கறுப்பின மக்கள், பெண்கள், தற்பா-ன ஈர்ப்பாளர்கள், எந்தச் செல்வாக்கும் இல்லாத மற்ற குழுக்களின் கதையாடல்களை நிராகரிக்கும் நீண்ட வரலாற்றுக்கு வழிவகுக்கிறது. அரசியல் விழிப்புணர்வின் சக்திவாய்ந்த கருவியாக இலக்கியம் இருக்கமுடியும். என்னுடைய நூல்கள் பல வாசகர்களுக்கு பாலஸ்தீனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் நான் பெருமைப்படுகிறேன்.

ஆனால் விழிப்புணர்வுமட்டும் போதாது. புனைகதையின் பக்கங்களில் எமக்கான மனிதநேயத்தை உங்களால் அடையாளம் காணமுடிந்தால், மற்றவர்களின் சூழலைப் புரிந்துகொண்டு அவர்களுக்காகப் பரிவோடு இருக்கும் மனப்போக்கை அந்த நூல்களின் அட்டைகளுக்குக் கீழ் நழுவவிட்டு விடாதீர்கள். எங்களுடைய நூல்களை மூடிவைத்த பிறகு அத்தகைய நோக்கங்களுக்காகச் செயல்படுங்கள். நம் கவனத்தைக் கோருகின்ற நெருக்கடிகள் நிஜ வாழ்விலும் நிறைய இருக்கின்றன.

uday011223
இதையும் படியுங்கள்
Subscribe