நல்லாட்சி நாயகர் வாழ்க!

/idhalgal/eniya-utayam/long-live-hero-good-governance

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி.

-என்கிறார் வள்ளுவர்.

உயிர்களைக் காக்கும் மழையைப்போல், நம் மக்களைக் காப்பாற்றவும் உயர்த்தவும் ஒரு நல்லாட்சி தேவை என்பதை இதன் மூலம் அவர் அறிவுறுத்து கிறார்.

வள்ளுவப் பேராசானின் இந்த வாய்மொழிக்கு ஏற்ப, தமிழ்நாட்டு மக்களுக்கு, உலகத் தமிழினமே பாராட்டக்கூடிய ஒரு நல்லாட்சியை, அன்புச் சகோதரர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்துகொண்டிருக்கிறார்.

எதற்காக நல்லாட்சியை மழையோடு ஒப்பிடுகிறார் வள்ளுவர்?

மழை, சாதி மதம் பார்ப்பதில்லை. ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லை. தெரிந்தவர் தெரியாதவர் என்றெல்லாம் அது பார்ப்பதில்லை. அது நஞ்சை நிலத்தையும் நனைக்கும். புஞ்சை நிலத்தையும் ஒரே மாதிரி நனைக்கும். எல்லாத் தரப்புக்கும் நடுநிலையோடு மழை இருக்கும்.

அதேபோலத்தான், நம் தளபதியின் ஆட்சி.... அனைவருக்கும் அருள் பாலிக்கும் நல்லரசாகத் திகழ்கிறது. வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்காமல் எல்லோருக்கும் அது இயன்றதை வழங்கிவருகிறது. அனைவரையும் அன்போடு அரவணைக்கிறது. மாற்றுக் கட்சியினரும் அதில் பயனடைகிறார்கள். அரசு விருதுகள், பரிசுகள்கூட கட்சி வேறுபாடு கடந்து அனைவருக்கும் செல்கிறது.

ஐயா நல்லகண்ணு, சங்கரய்யா போன்ற முற்போக்குத் தலைவர்களையும் தேடித் தேடி, கட்சிப் பாகுபாடு பார்க்காமல் இந்த அரசு கொண்டாடுகிறது. அறிஞர்களை அரவணைக்கிறது. நல்ல திட்டங்களை யார் சொன்னாலும் அதைக் கேட்கிறது. மக்கள் கோரிக்கைகளை இடையறாது நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறது.

இது மக்கள் ஆட்சி... மக்களுக்கான ஆட்சி... சொல்லப்போனால் உங்கள் ஆட்சி... என்றபடியே முதல்வர் ஸ்டாலின் அன்போடு அறிவிக்கிறார். மக்களுக்கான திட்டங்களைத் தீட்டியபடியே இருக்கிறார்.

ஆட்சித் தேரில் சுயமரியாதையை உட்காரவைத்து, சமத்துவப் பாதையில், வடம்பிடித்து இழுத்துச் செல்கிறார் தளபதி.

வீடு தேடிக் கல்வி வருகிறது.

மக்களைத் தேடி மருத்துவம் வருகிறது.

ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் ஆட்சியின் சாதனைகள் ஏதாவது ஒருவகையில் கருணையோடு நுழைகிறது. இப்படி, தளபதி ஸ்டாலின் அவர்கள், நல்லாட்சி நாயக னா

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி.

-என்கிறார் வள்ளுவர்.

உயிர்களைக் காக்கும் மழையைப்போல், நம் மக்களைக் காப்பாற்றவும் உயர்த்தவும் ஒரு நல்லாட்சி தேவை என்பதை இதன் மூலம் அவர் அறிவுறுத்து கிறார்.

வள்ளுவப் பேராசானின் இந்த வாய்மொழிக்கு ஏற்ப, தமிழ்நாட்டு மக்களுக்கு, உலகத் தமிழினமே பாராட்டக்கூடிய ஒரு நல்லாட்சியை, அன்புச் சகோதரர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்துகொண்டிருக்கிறார்.

எதற்காக நல்லாட்சியை மழையோடு ஒப்பிடுகிறார் வள்ளுவர்?

மழை, சாதி மதம் பார்ப்பதில்லை. ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லை. தெரிந்தவர் தெரியாதவர் என்றெல்லாம் அது பார்ப்பதில்லை. அது நஞ்சை நிலத்தையும் நனைக்கும். புஞ்சை நிலத்தையும் ஒரே மாதிரி நனைக்கும். எல்லாத் தரப்புக்கும் நடுநிலையோடு மழை இருக்கும்.

அதேபோலத்தான், நம் தளபதியின் ஆட்சி.... அனைவருக்கும் அருள் பாலிக்கும் நல்லரசாகத் திகழ்கிறது. வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்காமல் எல்லோருக்கும் அது இயன்றதை வழங்கிவருகிறது. அனைவரையும் அன்போடு அரவணைக்கிறது. மாற்றுக் கட்சியினரும் அதில் பயனடைகிறார்கள். அரசு விருதுகள், பரிசுகள்கூட கட்சி வேறுபாடு கடந்து அனைவருக்கும் செல்கிறது.

ஐயா நல்லகண்ணு, சங்கரய்யா போன்ற முற்போக்குத் தலைவர்களையும் தேடித் தேடி, கட்சிப் பாகுபாடு பார்க்காமல் இந்த அரசு கொண்டாடுகிறது. அறிஞர்களை அரவணைக்கிறது. நல்ல திட்டங்களை யார் சொன்னாலும் அதைக் கேட்கிறது. மக்கள் கோரிக்கைகளை இடையறாது நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறது.

இது மக்கள் ஆட்சி... மக்களுக்கான ஆட்சி... சொல்லப்போனால் உங்கள் ஆட்சி... என்றபடியே முதல்வர் ஸ்டாலின் அன்போடு அறிவிக்கிறார். மக்களுக்கான திட்டங்களைத் தீட்டியபடியே இருக்கிறார்.

ஆட்சித் தேரில் சுயமரியாதையை உட்காரவைத்து, சமத்துவப் பாதையில், வடம்பிடித்து இழுத்துச் செல்கிறார் தளபதி.

வீடு தேடிக் கல்வி வருகிறது.

மக்களைத் தேடி மருத்துவம் வருகிறது.

ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் ஆட்சியின் சாதனைகள் ஏதாவது ஒருவகையில் கருணையோடு நுழைகிறது. இப்படி, தளபதி ஸ்டாலின் அவர்கள், நல்லாட்சி நாயக னாகத் திகழ்வதால், அவர் பிறந்தநாளான மார்ச் ஒன்றை மட்டுமல்ல: அவர் பிறந்த மார்ச் மாதத்தையே தி.மு.க.வினர் கொண்டாடுகிறார்கள். அவர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களும் மகிழ்வோடு முதல்வர் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் கள். மனதார, வாயார அவரை வாழ்த்துகிறார்கள்.

நிழலின் மதிப்பு வெயிலில் தெரியும் என்பதுபோல், கடந்தகால இருண்ட ஆட்சியால், இன்றைய ஆட்சியின் மதிப்பு அனைவருக்கும் புலப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எப்படிப்பட்ட நேரத்தில், ஆட்சி பீடம் ஏறினார் என்பதையும் நாம் நினைவுபடுத்திப் பார்க்கவேண்டும். அது மிக மிக மோசமான கொரோனா காலம்.

தமிழ் முழக்கம் கேட்கவேண்டிய தெருக்களில் இருமல் சத்தம் மட்டுமே அப்போது கேட்டது. எங்கு பார்த்தாலும் தெருக்களும் வீடுகளும் கொரோனா முத்திரை குத்தி அடைக்கப்பட்டன. ஆம்புலன்சுகள் விடாமல் அலறிக்கொண்டே ஓடின. தெருவுக்குத் தெரு மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருந்தது.

ஒட்டுமொத்தத்தில், தேரை இழுத்துத் தெருவில் விடுவதுபோல், தமிழ்நாட்டையே இழுத்துக்கொண்டு போய் மயான வாசலில் நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள்.

மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லை. போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லை. மருத்துவர்களும் செவிலியர்களும் போதவில்லை. இதனால் அன்று தமிழ்நாடே பீதியில் உறைந்திருந்தது. அடுத்த நொடி என்ன நடக்குமோ? என்ற அளவுக்கு திகில் சூழ்ந்திருந்த நேரத்தில்தான், தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியின் லகானைப் பிடித்தார் மு.க.ஸ்டாலின்.

s

அவ்வளவுதான். அதன்பிறகு காட்சிகள் எல்லாம் மாறியது.

உறக்கம் மறந்து, ஓய்வை மறந்து, உணவை மறந்து களமிறங்கினார் முதல்வர். அமைச்சர்களான மா.சு. சேகர்பாபு போன்ற அவரது தளபதிகளும் இரவு பகலாகக் களமாடினார்கள்.

அதற்கு முன் பதவியில் இருந்தவர்கள் எல்லாம், கொரோனா என்ற சொல்லைக் கண்டாலே தலைதெறிக்க ஓடினார்கள்.

ஆனால் நாம் முதல்வர் தளபதியோ, கொரோனா வார்டுகளில் நுழைந்து, நிலவரத்தை அறிந்தார். அதை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அதன் விளைவாக ஓரிரு வாரத்தில், தமிழகத்தின் ஒட்டுமொத்த இருளும் விலகியது. பீதியும் அச்சமும் காணாமல்போனது. ஆக்சிஜன் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கியது. மருத்துவமனைகள் வெறிச்சோடத் தொடங்கின. கொஞ்ச நாட்களிலேயே கொரோனா, தலைதெறிக்க ஓடிவிட்டது.

தளபதி ஆட்சியின் பெருமைகளைச் சொல்ல, இந்த ஒரு சாதனையே போதுமானது.

முதல்வர் யார் என்பதை உணர்த்த, அவரது இந்த ஒரு சாதனையே போதும்.

இதன்பின்னும் புதுப்புது திட்டங்களும் சட்டங்களும் மக்களுக்காக பிறந்து கொண்டே இருக்கின்றன. தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களிடம் வாங்கிய கோரிக்கை மனுக்களை எல்லாம் புயல் வேகத்தில் நிறைவேற்றிய ஒரே அரசாக ஸ்டாலின் அரசு திகழத் தொடங்கியது.

ஆட்சியின் ஒவ்வொரு அசைவிலும் கலைஞரின் முத்திரை ஒளிர்கிறது. பெரியார், அண்ணா, கலைஞரின் முக்கூட்டு வடிவமாகவே இப்போது திகழ்கிறார் தளபதி ஸ்டாலின்.

கலைஞரின் மகன் என்பது அவருக்குக் கிடைத்த மகத்தான அடையாளம் என்று பலரும் நினைக்கலாம். அது அது எவ்வளவு பெரிய ஆபத்தான அடையாளம் என்பது, மிசா காலத்தில் வெளிப்பட்டது. திருமணமான புதிதில், புதுமாப்பிள்ளையான ஸ்டாலினைத் தேடி, கோபாலபுரம் வீட்டிற்கு போலீஸ் சென்றது. அங்கே இருந்த கலைஞர், வீட்டில் ஸ்டாலின் இல்லை. வந்ததும் நானே காவல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கிறேன் என்றார்.

சொன்ன மாதிரியே, வீடு திரும்பிய தளபதியை காவல் நிலையத்துக்கு அனுப்பிவைத்தார் கலைஞர்.

கலைஞரின் மகன் என்பதற்காகவே அவரை சிறையில் அடைத்துக் கடுமையான சித்திரவதைகளைச் செய்தார்கள். அவர் மீது விழுந்த அடிகளை இடையில் புகுந்து வாங்கிய செயல்மறவர் சிட்டிபாபு, இறந்துபோனார். அப்படி என்றால் நம் தளபதி பெற்ற சித்திரவதைகள் எப்படிப்பட்டவை?

இதுபோல் ஏராளமான சோதனைகளை அவர் கடக்கவேண்டி இருந்தது. தன் மீது விழுந்த காயங்களை எல்லாம் படிக்கட்டுகளாக ஆக்கிக்கொண்டு, எழுந்து மேலே ஏறிவந்தவர்தான் தளபதி ஸ்டாலின்.

கலைஞரைப் போல், இவரால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியுமா? என்று சிலர் முனகினர். காரணம், கலைஞர் முதல்வராக இருந்தபோதுகூட இவ்வளவு மோசமான எதிரிகள் ராஜ்பவனிலும் இருந்தது இல்லை. டெல்லியிலும் இருந்தது இல்லை. ஆனால், அவர்களை எல்லாம் 16 அடி பாய்ந்து, வாயடைக்க வைத்திருக்கிறார் தளபதி.

உழைப்பு என்றால் கலைஞர் என்ற சொல்லுக்கு, இன்னொரு உதாரணமாக தளபதி இருக்கிறார். இனி அகராதி தயாரிப்பவர்கள், உழைப்பின் பொருள் ஸ்டாலின் என்று எழுதுவார்கள். அந்த அளவிற்கு அது அயராத உழைப்பு. எதிரிகளையும் அயரவைக்கிற உழைப்பு.

அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பாக அவர் எழுகிறார்.

நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். பகல் முழுக்க தலைமைச் செயலகம், அறிவாலயம் என பரபரப்பான பணிகள். பல்வேறு நிகழ்ச்சிகள். விழாக்கள், திருமணங்கள். இரவுகளில் பொதுக் கூட்டம், இப்படி அடுக்கடுக்காக தன்னை நோக்கி வரும் அத்தனை நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு, நள்ளிரவுக்கு மேல்தான் அவர் படுக்கச் செல்கிறார். அவர் சரியாகத் தூங்குகிறாரா? சரியாகச் சாப்பிடுகிறாரா? சரியாக ஓய்வெடுக்கிறாரா? என்கிற கேள்விகளுக்கு அவர் குடும்பத்தினருக்கே பதில் தெரியாது. தொடர்ந்து அணிவகுக்கும் நிகழ்ச்சிகளுக்கு நடுவே, இப்போது திடீர் திடீர் என ஆய்வுப் பணிகளிலும் இறங்கி, அரசு எந்திரத்தை 24 மணி நேரமும் உயிர்ப்போடு வைத்திருக்கிறார்.

அதிகாலை நேரத்தில் அவர் நடைப்பயிற்சி செல்லும் நேரத்திலும், எதிர்வரும் மக்கள், அவரிடம் பேசுகிறார்கள்.

அவரோடு செல்பி எடுத்துக்கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்களின் முகத்தையும் அகத்தையும் மலரவைக்கிறார் நம் தளபதி. அதுபோல், அவர் போகிற வழியில் எவரேனும் மனுவோடு காத்திருந்தால் உடனே காரை நிறுத்தி அதை வாங்குகிறார். மாற்றுத் திறனாளிகள் தென்பட்டால், அவர் காருக்கே இரக்கம் வந்து அவர்கள் அருகே அது நின்றுவிடுகிறது. அவர் பயணிக்கும் வாகனம்கூட, ஏழை எளியோரிடம் இரக்கம் காட்டுகிறது என்றால், அது எவ்வளவு பெரிய அதிசயம்.

கேட்டால் அவருக்கு வயது 70 என்கிறார்கள். எழுபது என்பதற்கும் எழுவது என்ற பொருளைத் தந்து ஆச்சரியம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் தளபதி.

ஒரு அரசாங்கத்தை எப்படி நடத்துவது? எப்படி சுயமரியாதையோடு ஆட்சி நடத்துவது என்பதற்கு இந்த ஆட்சி ஒரு வரலாற்று உதாரணம். மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல. வடக்கே இருக்கும் எதிரிகளையும் சனாதன சங்கிகளையும் சமாளிக்க வேண்டியவராகத் தளபதி இருக்கிறார்.

எனினும், தளபதி முதல்வர் மூலம், தமிழ்நாடு ஒரு புதிய சரித்திரத்தை எழுதிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவிற்கு ஒரு முன்மாதிரி முதல்வராக இருக்கிறார்.

தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைக்கமாட்டோம் என்று டெல்லியிடம் மார்தட்டுகிற ஒரே முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.

* நீட் தேர்வை ஏற்கமாட்டோம் என்றும், சனாதனத்தைப் போதிக்கும் புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்றும் ஒன்றிய அரசிடம் நெஞ்சுநிமிர்த்தும் துணிச்சல் மிக்க முதல்வராகவும் இவர் இருக்கிறார்.

* பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை கவர்னரிடம் இருந்து மீட்டு, மாநில உரிமையை நிலைநாட்டிய விடுதலை உணர்ச்சி மிக்க முதல்வராகவும் தளபதி ஸ்டாலின் ஒருவரே இருக்கிறார்.

* தமிழ்நாடு என்ற பெயரை ஏற்கமாட்டேன் என்று அடம்பிடித்து, சட்டமன்ற உரையையே மாற்றி வாசித்த கவர்னர் ரவியை, அதே இடத்தில் கண்டித்துத் தீர்மானம் போட்ட, சுயமரியாதைமிக்க முதல்வராகவும் அவர் ஒருவரே அதிரவைத்தார்.

இன்று தமிழகம் மட்டுமல்லலி இந்திய அரசியலே இவரைத்தான் எதிர்பார்க்கிறது. இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதியைக் கொண்ட தலைவராக ஸ்டாலின் சுடரத் தொடங்கிவிட்டார்.

எனவே, சாதனையின் சிகரமாகத் திகழ்கிற நம் முதல்வர் ஸ்டாலினை இதயப்பூர்வமாக தமிழ் மக்கள் பாராட்டி வாழ்த்துகிறார்கள்.

அனைத்து வகையிலும் குடிமக்களின் நலனைக் கருதி, மாநிலத்தின் மேன்மையை உணர்ந்து, ஒரு மாமன்னனைப்போல் மக்கள் மனதையும் தளபதி ஆள்கிறார். அதனால்தான் மக்கள் அனைவரும் அவர் புகழ்பாடி வாழ்த்துகிறார்கள்.

இதையும் உணர்ந்து முதல்வர் தளபதியைப் பற்றியும் ஒரு குறளை எழுதியிருக்கிறார் வள்ளுவர்.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.’

-இப்படி வள்ளுவரால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல்வர், நல்லாட்சி நாயகர், அன்புத்தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் என்றென்றும் மகிழ்வுடன் வாழ்க! வாழ்க! என உங்கள் அனைவரோடும் சேர்ந்து வாழ்த்துகிறேன்.

-உற்சாகத்தோடு,

நக்கீரன்கோபால்

uday010324
இதையும் படியுங்கள்
Subscribe