கும்பலின் தனிமை!

/idhalgal/eniya-utayam/loneliness-gang-abdul-razak

ந்தியப் பண்பாட்டில் இழையோடி நிற்கிற இந்தியாவின் மிகப் பெரிய இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். மகாபாரதத்தை அடிப்படையாக வைத்துப் பல இலக்கியப் படைப்புகள் வெளிவந்துள்ளன. பல சிறந்த நாடகங்களுக்கும் புதினங்களுக்கும் தூண்டுதலாக மகாபாரதம் இருந்துள்ளது.

ஞானபீட பரிசு பெற்ற வி.எஸ். காண்டேகரின் (குஜராத்தி) "யயாதி', மலையாளத்தில் பி.கே. பாலகிருஷ்ணனின் "இனி நான் தூங்கட்டும்', வி.டி. நந்தகுமாரின் "எனது கர்ணன்', ரேவதியின் "சூர்ய காயத்ரி' ஆகிய புதினங்கள் இந்த வகையைச் சார்ந்தவையாக அமைகின்றன.

பி.கே. பாலகிருஷ்ணனின் புதினம் திரௌபதியை மையமாக வைத்துப் படைக்கப் பட்டது. நந்தகுமார் கர்ணனையும், ரேவதி குந்தியையும் முதன்மைப் பாத்திரங்களாக வைத்துப் படைத்தார்கள். ஆனால், எம்.டி. வாசுதேவன் நாயரோ பாண்டவர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் வீமனை மையமாக வைத்து "இரண்டாம் இடம்' எனும் புதினத்தைப் படைத்துள்ளார்.

vasudevanayarவியாசர் எழுதிய மகாபாரதத்தின் அமைப்பில் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்த்தாமல், வியாசர் தொடாமல் விட்டுவிட்ட சில இடங்களில் சிறிது சுதந்திரம் எடுத்து எம்.டி. இந்தப் புதினத்தைப் படைத்துள்ளார். பின்னால் வருபவர்களுக்காக வியாசர் விட்டுச் சென்ற மௌன இடைவெளிகளில் எம்.டி. தனது கற்பனையைப் பயன்படுத்தியுள்ளார். அந்தக் கற்பனைகளின் மூலம் பொருள் பொதிந்த மௌனங்களை எம்.டி. படைப்பாக மாற்றியுள்ளார். அதில் கதகளிக்காரர்களும் புராண கதாகாலட்சேபக்காரர்களும் வீமனுக்கு அளித்திருந்த புராண பாத்திரத் தன்மையை மாற்றி மனித குணங்களைக் காண முயல்கிறார்.

மகாபாரத வீமன் மனிதன்தான். அவனுக்குப் பருமனான உடம்பு மட்டுமல்ல. அதற்குள்ளே ஒரு மனதும் உண்டு. மனிதனைப் போன்றே பலங்களும் பலவீனங்களும் உள்ள ஒரு ஆதி உருவம்தான் வீமன். ஆனா

ந்தியப் பண்பாட்டில் இழையோடி நிற்கிற இந்தியாவின் மிகப் பெரிய இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். மகாபாரதத்தை அடிப்படையாக வைத்துப் பல இலக்கியப் படைப்புகள் வெளிவந்துள்ளன. பல சிறந்த நாடகங்களுக்கும் புதினங்களுக்கும் தூண்டுதலாக மகாபாரதம் இருந்துள்ளது.

ஞானபீட பரிசு பெற்ற வி.எஸ். காண்டேகரின் (குஜராத்தி) "யயாதி', மலையாளத்தில் பி.கே. பாலகிருஷ்ணனின் "இனி நான் தூங்கட்டும்', வி.டி. நந்தகுமாரின் "எனது கர்ணன்', ரேவதியின் "சூர்ய காயத்ரி' ஆகிய புதினங்கள் இந்த வகையைச் சார்ந்தவையாக அமைகின்றன.

பி.கே. பாலகிருஷ்ணனின் புதினம் திரௌபதியை மையமாக வைத்துப் படைக்கப் பட்டது. நந்தகுமார் கர்ணனையும், ரேவதி குந்தியையும் முதன்மைப் பாத்திரங்களாக வைத்துப் படைத்தார்கள். ஆனால், எம்.டி. வாசுதேவன் நாயரோ பாண்டவர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் வீமனை மையமாக வைத்து "இரண்டாம் இடம்' எனும் புதினத்தைப் படைத்துள்ளார்.

vasudevanayarவியாசர் எழுதிய மகாபாரதத்தின் அமைப்பில் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்த்தாமல், வியாசர் தொடாமல் விட்டுவிட்ட சில இடங்களில் சிறிது சுதந்திரம் எடுத்து எம்.டி. இந்தப் புதினத்தைப் படைத்துள்ளார். பின்னால் வருபவர்களுக்காக வியாசர் விட்டுச் சென்ற மௌன இடைவெளிகளில் எம்.டி. தனது கற்பனையைப் பயன்படுத்தியுள்ளார். அந்தக் கற்பனைகளின் மூலம் பொருள் பொதிந்த மௌனங்களை எம்.டி. படைப்பாக மாற்றியுள்ளார். அதில் கதகளிக்காரர்களும் புராண கதாகாலட்சேபக்காரர்களும் வீமனுக்கு அளித்திருந்த புராண பாத்திரத் தன்மையை மாற்றி மனித குணங்களைக் காண முயல்கிறார்.

மகாபாரத வீமன் மனிதன்தான். அவனுக்குப் பருமனான உடம்பு மட்டுமல்ல. அதற்குள்ளே ஒரு மனதும் உண்டு. மனிதனைப் போன்றே பலங்களும் பலவீனங்களும் உள்ள ஒரு ஆதி உருவம்தான் வீமன். ஆனால் எல்லோரையும் அச்சமூட்டுகிற வீமனின் மனம் எப்போதும் சோக நிலையில் இருந்தது. தன்னுடைய சக்தியின் உதவியால் பயனடைந்தவர்கள்கூட அடுத்த நிமிடமே தன்னைப் புறக் கணிப்பதும் ஏளனம் செய்வதும் வீமனைச் சோகத்தில் ஆழ்த்தியது. சாப்பாட்டை விரும்புகிறவனாக வீமன் இருந்ததால் அவனது தாய் அவனை "விருகோதரன்' (சாப்பாட்டு ராமன்) என்று அழைத்தாள். அம்மாவின் அழைப்பில் பாசம் இருந்தது. ஆனால் பிறகு அது ஏளனமாக மாறியது. அண்ணன் யுதீட்டிரனோ "மடையா' என அழைத்தான்.

திரௌபதி ஒருபோதும் வீமனை நேசிக்க வில்லை. அவளுடனான இல்லற உறவும் திருப்திகரமாக இல்லை. வெறுப்படைந்த வீமனுக்கு அவளுக்காகத் தான் தயார் செய்த குசப்புல் விரித்த தூக்குக் கட்டில் கொலையுண்ட நிசாதனின் சவம் போன்று கிடப்பதாகத் தோன்றியது. திரௌபதி ஒரு கானல் நீர் போன்று அகன்றுபோகிறாள்.

வீமனின் வெற்றிக் கதைகளையோ வீரச் செயல்களையோ அவனது திறமைக்குத் தகுந்தவாறு யாரும் அங்கீகரிக்கவில்லை. புகழவில்லை. தாய், அண்ணன், மனைவி என எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டான். தான் தனிமைப்படுத்தப்படுவதாக நினைத்து வீமனின் மனம் குமுறியது. அண்ணனுக்கு மடையனாக இருக்கலாம். கௌரவர்களுக்கு விருகோதரனாய் இருக்கலாம். ஆனால் வீமன் மிக்க பலமுடையவனாக வளரத்தான் செய்தான். மற்றவர்களின் புறக்கணிப்பும் ஏளனமும் வீமனைத் தன்னம்பிக்கை உடையனாக்கியது; வீரனாக்கியது.

வாழ்க்கையின் இலட்சியம் துரியோதனக் கொலை. ஆயுதக் கூடத்தில் வைத்தே ஆரம்பித்தது துரியோதனனுடனான பகை. மற்போரில், சூதில், திரௌபதியின் சபதத்தில், குருஷேத்திரத்தில் என்று வளர்ந்து கங்கைக் கரையில் நடந்த கதாயுதப் போரில் தொடை பிளந்து முடிவுற்றது அந்தப் பகை. தன்னுடைய கடைசிப் பகைவனும் மாண்டான். சபதங்களெல்லாம் நிறைவேற்றிய சத்ரியன் நான் என்று வீமன் ஆறுதல் அடைந்தான்.

அரிய ஆற்றலுடைய வீமன், காட்டிலும் ஊரிலும் பிறகு குருஷேத்திரத்திலும் அடைந்த வெற்றிக்கு ஆதாரமான சக்தி தன்னுடையது மட்டுமல்ல. "எனது கர்ஜனைக்குப் பின்னால் யாரோ இருந்தார்கள். எனது கைகள் தளர்ந்தபோது ஏதோ சக்தி என்னைப் பின் நின்று இயக்கியது' என்றான். தன் வெற்றிகளில் அவன் ஆணவம் கொள்ள வில்லை. மாறாகப் பணிவைக் காட்டினான். "சூறாவளிக் காற்றைச் சங்கிலி போட்டு, மேகங்களுக்கு மேலே வேட்டையாடும் தேவனே என் பிதாவே நான் நன்றி கூறுகிறேன். உன் காலடியாக நினைத்து இந்தப் பாறைகளில் தலை வணங்குகிறேன்' என்றான் வீமன்.

இந்த எளிமை பண்பாடுடையவனிடம் காணப்படுவதாகும். வெற்றியிலும் உயர்விலும் பணிவு காட்டுவது உயர்ந்தவர்களின் குணம். சுயநம்பிக்கையும் மன உறுதியும் அவனது வளர்ச்சிக்குப் படிக்கற்களாக அமைந்தன. அது ஒன்றும் தெய்வீக சக்தி அன்று என்பதைப் பக்குவமாக நிரூபிக்கிறார் புதின ஆசிரியர்.

போருக்குப் பிறகு வீமன் மன்னனாகட்டும் என்கின்றனர். வீமனின் கைகளால்தான் கௌரவர்கள் இறக்க நேரிட்டது. சத்திரிய சட்டத்தில் போரில் வெற்றி கொண்டவனுக்கே சிம்மாசனம். இது யுதீட்டிரனின் வாதம். இதனைக் கேட்டபோது வீமனுக்குச் சிரிக்கத் தோன்றியது. அத்தினாபுரத்தில் மன்னனாக நான் வாழ்வதா? எல்லோரும் வற்புறுத்தியபோது ஆலோசிக்க சிறிது நேரம் வேண்டும் எனக் கேட்டான். அதற்கிடையில் திரௌபதி வந்தாள். "வீமன் மன்னனானால் யுதீட்டிரனுடன் வனவாசம் சென்று விடுவேன்' என்றாள்.

"யுதீட்டிரன் மன்னனாகட்டும் நீ தகுதியுடையவனல்ல. தர்ம சாத்திரமும் ராஜ நீதியும் உனக்குத் தெரியாது. அதனால் நான் தயாரல்ல என நீ கூறவேண்டும்' என வீமனின் தாய் கூறுகிறாள். வீமனின் மனதில் போராட்டம். நான் மன்னனா? மடையன் ராஜா என அது வந்து நின்றது. அண்ணன் நகைப்புடன் சொன்ன வார்த்தை மனதில். ஒரு நிமிடம் மட்டும் மன்னனான வீமன் சிந்தனையில் ஆழ்ந்தான். சக்தி என்பது வரம்தான். ஆனால் பல நேரங்களில் அது சாபமாகவும் இருக்கிறது என்பதை வாழ்க்கை வீமனுக்கு உணர்த்தியது. வீமனின் பெரிய உடலில் உயர்ந்த உள்ளம் இருந்தது. ஆனால் என்றும் நிம்மதி இருக்கவில்லை என்பதை ஆசிரியர் காட்டுகிறார்.

வீமனை மையப்படுத்தி இந்தப் புதினம் படைக்கப்பட்டாலும் வியாசன் படைத்த சில கதாபாத்திரங்களைத் தனது திறமையால் சிறப்பாகக் காட்டியுள்ளார். எம்.டி. மனிதர்களின் கதையாக மகாபாரதத்தைப் பார்க்க முனைகிறார். சிதைந்து போகிற குடும்பங்களின் கதை சொல்வதில் கை தேர்ந்த எம்.டி. புதினத்தில் சிதைந்த ஒரு குடும்பத்தின் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மனிதனாக வீமனைக் காட்டுகிறார். அனைவரைவிட்டும் தனித்து அகன்று நிற்கிற வீமன் கிருஷ்ணனுடன் கொண்ட உறவும்கூட தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது.

போரில் வெற்றி பெற்றாலும் எதுவும் பெறாத வீமனின் கண்ணால் பார்க்கும்போது மகாபாரதம் ஒரு நவீன படைப்பாகிறது. கதாபாத்திரங்களின் கதை நிகழ்வில் எண்ணிக்கை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மகாபாரதத்தில் உணர்வின் நெரிசலில் ஒரு மனிதனின் தவிப்பைக் காட்டுகிறார். வீமனின் இருப்பைத் தேடுகிறார். புராண இதிகாசங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு தேடல். மகாபாரதத்தில் வியாசன் படைத்த இருத்தலியல் சிந்தனையை ஒரு திரைக்கதைபோல மாற்றுகிறார். மகாபாரதத்தில் ஊடுருவிச் சென்று அதில் மனித சாத்தியங்களின் தன்மைகளைக் காண்கிறார். அங்ஙனம் மரபான புதினங் களிலிருந்து மாறி ஒரு புதிய நோக்கில் உருமாற்றத்தை ஏற்படுத்துகிறார்.

புராண மரபுவழி வந்த இலக்கியங்களான செவ்வியலுக்குத் திரும்புதல் என்பது நவீன இலக்கியத்தில் ஒரு உத்தியாக உள்ளது.

ஜேம்ஸ் சோயின் எழுதிய யுலீசிஸ் எனும் படைப்பில் ஹோமரின் "ஓடிசி' எனும் படைப்பில் உள்ள கதையைப் பயன்படுத்தியதைப்போல இந்தப் புதினத்திலும் எம்.டி வாசுதேவன் நாயர் புராணப் பாத்திரத்தைப் புதிய பார்வையில் பார்க்கிறார். காவியங்கள் பயன்படுத்தும் மரபு மொழியைத் தவிர்த்து, அந்த உணர்வுகளை வெளிப்படுத்த பழக்கத்தில் உள்ள மொழியை அமைத்துள்ளார். காவியத்தின் வடிவத்தைக் கலைத்துவிட்டுப் புதினத்தில் பகையின் கதையை, பெண்ணைப் பங்கு வைப்பதின் சுயநலத்தை அதனால் ஏற்படுகிற கோபத்தைக் கொண்டு வந்துள்ளார்.

எல்லா இடங்களிலும் இரண்டாவது இடத்தில் இருக்கிற வீமன் மீது வாசகர்களுக்குப் பரிவு ஏற்படுகிறது. பார்வையாளனாக மட்டும் இருக்காமல் செயல் தளத்தில் இறங்கி ஓய்வில்லாமல் செயலாற்றும் வீரனாக வீமன் காட்டப்படுகிறார்.

மேற்கத்திய இலக்கிய வடிவமான புதினத்தில் நமது மரபுக் கதையின் அம்சங்களை எப்படி உட்கொள்ள முடியும் என்பதற்கான சோதனை முயற்சி இது. இதிகாசப் பாத்திரத்திற்கு இன்றைய மனித முகத்தைப் பொருத்திப் பார்க்கிறார் எம்.டி. "கும்பலின் தனிமையில்' என்பது எம்.டி. வாசுதேவன் நாயரின் அமெரிக்கப் பயணக் குறிப்பின் தலைப்பு. அதைப் போன்று அவரது கதாபாத்திரங்களும் கும்பலில் தனித்து நிற்கின்றன.

இதுபோன்ற ஒரு முழு முயற்சி தமிழில் இல்லையென்றே கூறலாம். புதுமைப்பித்தனின் "சாப விமோசனம்' புராணத்தை மீட்டுருவாக்கம் செய்கிற முதல் முயற்சியாக இருந்தது. பின்னர் எம்.வி. வெங்கட் ராமனின் "வியாசரின் பெண் பாத்திரங்கள் என்ற நூல் ஒரு கட்டுரை இலக்கியம் கூடிய தன்மைகளைக் கொண்ட ஒரு படைப்பு. பிறகு எண்பதுகளில் ஜெயகாந்தனின் "சுந்தர காண்டம்' என்ற புதினம் புராண பாத்திரத்தை நவீன கதாபாத்திரமாக உருமாற்றம் செய்து தந்த முயற்சியாகத் தமிழில் காணமுடிகின்றது.

இதையும் படியுங்கள்
Subscribe