என் பெயர் அவளிடம் மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது.
சமஸ்கிருதத்தில் ஒரு பெயரா?
""ஆமாம்.''
""நீங்கள் சமஸ்கிருதத்திலா பேசுகிறீர்கள்?''
""இல்லை.''
""பிறகு?''
""மலையாள மொழி சமஸ்கிருதத்துடன் மிகுந்த நெருக்கத்தைக் கொண்டிருக்கிறது.''
""எனினும்... தாமரையின் மன்னன் என்ற பெயர் இருக்கிறதா?''
""தாமரையின் மன்னன்...?'' எனக்கு கூச்சமாக இருந்தது. நான் கூறினேன்:
""நாங்கள் தாமரையை வழிபடுகிறோம்.''
அவள் சற்று வெட்கப்படுவதைப்போல இருந்தது. என்னவோ கூறுவதற்கு முயல்வதைப் பார்த்து, நான் வற்புறுத்தியபிறகு, அவள் தாமரை எப்படி வழிபடும் பொருளானது என்று கேட்டாள்.
""எனக்குத் தெரியாது.''
""ஒப்ரியன் என்ன கூறியிருக்கிறார்?''
""எனக்குத் தெரியாது.''
அவள் மேலும் வெட்கப்பட்டாள். நிர்வாணமான கழுத்திற்குப் பின்னாலிருந்தும் மெல்லிய பிரகாசம் முகத்திற்குப் பரவியது.
""தாமரையின் இதழ்கள் எதைக் குறிப்பிடுகின்றன?''
""எனக்குத் தெரியாது.''
""தாமரையின் மொட்டு எதைக் குறிப்பிடுகிறது?''
எனக்கு சோர்வு உண்டாக ஆரம்பித்திருந்தது. எங்களுக்கிடையே உள்ள உரையாடல் கிட்டத்தட்ட ஒரு நேர்காணலைப்போல தோன்ற ஆரம்பித்திருந்தது. சற்று களைப்புடன் நான் கூறினேன்: ""எனக்குத் தெரியாது.''
""நான் செல்கிறேன்.''
அவளுடைய கண்களில் ஒரு குறும்புச் சிரிப்பு தங்கி நின்றிருந்தது. அவள் போய்விட்டாள். என்னுடைய நான்கு மாத அமெரிக்க வாழ்க்கைக்கு மத்தியில் அன்றுதான் முதல்முறையாக ஒரு அமெரிக்கப்பெண் வெட்கப்பட்டு நான் பார்க்கிறேன். (வெட்கப்படக்கூடிய ஒரு அமெரிக்கப் பெண் எனக்கு ஒரு கனவாக இருந்தது. நான் லோலாவின்மீது ஆர்வம் கொண்டதற்கு அதுகூட காரணமாக இருந்திருக்கலாம் என்று இன்று எனக்குத் தோன்றுகிறது.)
டயரியின் தாள்...
இலக்கியம் கற்கும் லோலா மில்ஃபோர்டுடன் எனக்கு காதல் உண்டாகிவிட்டதென்று தோன்றுகிறது. அது எப்படியும் இருக்கட்டும்... லோலாவைப் போன்ற ஒரு பெண்ணை...
இந்த அளவுக்கு அழகான...
அன்பு நிறைந்த...
அறிவு கொண்ட... பேசுவதற்குத் தெரிந்த...
இன்று ஹோட்டலில் இருக்கும்போது, மேஜை விரிப்பிற்கு அடியில் என் காலில் நீ ஏன் மிதித்தாய்?
பிறகு... எதற்கு...
எது எப்படியும் இருக்கட்டும்... சமீபகாலமாக எதையும் வாசிப்பதில்லை. இந்தப் பெண் என்னைப் பைத்தியமாக்கிவிட்டாள். இப்போதுகூட எனக்கு அவளைச் சற்று பார்த்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. இப்போது... இந்த இரவுவேளையில்... இந்த இரவிலேயே...
ஆட்ரி ஹெப்பேனைப்போல கூந்தலை சிறிதாகக் கத்தரித்து, நெற்றியில் விழும்படி செய்திருந்தாள். நான் கேட்டேன்: ""உனக்குப் பிடித்த நடிகை ஆட்ரி ஹெப்பேனா?''
""இல்லை... ஷெர்லி மாக்லெய்ன்...''
ஷெர்லியின் கண்களை நான் நினைத்துப் பார்த்தேன். கள்ளங்கபடமற்ற தன்மைதான் அவற்றின் உயிர்.
நான் கூறினேன்: ""லோலா, உன் கண்கள் ஷெர்லியின் கண்களேதான்.''
""பாராட்டு...''
""இல்லை.''
""ஆமாம்.''
""இல்லை... இல்லை... நான் பார்த்தவர்களிலேயே பேரழகி... மிகுந்த கள்ளங்கபடமற்ற தன்மை உள்ளவள்.'' நான் கூறினேன்: ""அது நீதான்.'' அவள் உடனடியாக தலையைத் தாழ்த்திக் கொண்டாள். தொடர்ந்து திடீரென்று என் கையை இறுகப் பற்றினாள். அவளுடைய கண்களில் நீர் நிறைந்திருப்பதை நான் கவனித்தேன்.
""நான்...'' அவள் ஏதோ கூற முயற்சித்தாள்.
""சொல்...'' நான் கேட்டேன்: ""என்ன?''
அவள் எதுவுமே கூறாமல் என் கையைப் பிடித்து அழுத்தினாள்.
"லேக் ஆஃப் தி க்ளவுட்ஸ்' எங்களுக்கு முன்னால் இருட்டில் புதைந்து கிடந்தது. நீர்ப்பரப்பிற்கு மேலே பனிவிழ ஆரம்பித்திருந்தது. தூரத்தில் ஒரு மோட்டார் படகு போய்க்கொண்டிருப்பது மங்கலாகத் தெரிந்தது.
லோலா முணுமுணுத்தாள்: ""நான்... எனக்கு...''
அவளுடைய உதடுகள் மென்மையாக நடுங்கவும், என் கையைப் பிடித்திருந்த கை வியர்க்கவும் செய்தன.
என்ன
என் பெயர் அவளிடம் மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது.
சமஸ்கிருதத்தில் ஒரு பெயரா?
""ஆமாம்.''
""நீங்கள் சமஸ்கிருதத்திலா பேசுகிறீர்கள்?''
""இல்லை.''
""பிறகு?''
""மலையாள மொழி சமஸ்கிருதத்துடன் மிகுந்த நெருக்கத்தைக் கொண்டிருக்கிறது.''
""எனினும்... தாமரையின் மன்னன் என்ற பெயர் இருக்கிறதா?''
""தாமரையின் மன்னன்...?'' எனக்கு கூச்சமாக இருந்தது. நான் கூறினேன்:
""நாங்கள் தாமரையை வழிபடுகிறோம்.''
அவள் சற்று வெட்கப்படுவதைப்போல இருந்தது. என்னவோ கூறுவதற்கு முயல்வதைப் பார்த்து, நான் வற்புறுத்தியபிறகு, அவள் தாமரை எப்படி வழிபடும் பொருளானது என்று கேட்டாள்.
""எனக்குத் தெரியாது.''
""ஒப்ரியன் என்ன கூறியிருக்கிறார்?''
""எனக்குத் தெரியாது.''
அவள் மேலும் வெட்கப்பட்டாள். நிர்வாணமான கழுத்திற்குப் பின்னாலிருந்தும் மெல்லிய பிரகாசம் முகத்திற்குப் பரவியது.
""தாமரையின் இதழ்கள் எதைக் குறிப்பிடுகின்றன?''
""எனக்குத் தெரியாது.''
""தாமரையின் மொட்டு எதைக் குறிப்பிடுகிறது?''
எனக்கு சோர்வு உண்டாக ஆரம்பித்திருந்தது. எங்களுக்கிடையே உள்ள உரையாடல் கிட்டத்தட்ட ஒரு நேர்காணலைப்போல தோன்ற ஆரம்பித்திருந்தது. சற்று களைப்புடன் நான் கூறினேன்: ""எனக்குத் தெரியாது.''
""நான் செல்கிறேன்.''
அவளுடைய கண்களில் ஒரு குறும்புச் சிரிப்பு தங்கி நின்றிருந்தது. அவள் போய்விட்டாள். என்னுடைய நான்கு மாத அமெரிக்க வாழ்க்கைக்கு மத்தியில் அன்றுதான் முதல்முறையாக ஒரு அமெரிக்கப்பெண் வெட்கப்பட்டு நான் பார்க்கிறேன். (வெட்கப்படக்கூடிய ஒரு அமெரிக்கப் பெண் எனக்கு ஒரு கனவாக இருந்தது. நான் லோலாவின்மீது ஆர்வம் கொண்டதற்கு அதுகூட காரணமாக இருந்திருக்கலாம் என்று இன்று எனக்குத் தோன்றுகிறது.)
டயரியின் தாள்...
இலக்கியம் கற்கும் லோலா மில்ஃபோர்டுடன் எனக்கு காதல் உண்டாகிவிட்டதென்று தோன்றுகிறது. அது எப்படியும் இருக்கட்டும்... லோலாவைப் போன்ற ஒரு பெண்ணை...
இந்த அளவுக்கு அழகான...
அன்பு நிறைந்த...
அறிவு கொண்ட... பேசுவதற்குத் தெரிந்த...
இன்று ஹோட்டலில் இருக்கும்போது, மேஜை விரிப்பிற்கு அடியில் என் காலில் நீ ஏன் மிதித்தாய்?
பிறகு... எதற்கு...
எது எப்படியும் இருக்கட்டும்... சமீபகாலமாக எதையும் வாசிப்பதில்லை. இந்தப் பெண் என்னைப் பைத்தியமாக்கிவிட்டாள். இப்போதுகூட எனக்கு அவளைச் சற்று பார்த்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. இப்போது... இந்த இரவுவேளையில்... இந்த இரவிலேயே...
ஆட்ரி ஹெப்பேனைப்போல கூந்தலை சிறிதாகக் கத்தரித்து, நெற்றியில் விழும்படி செய்திருந்தாள். நான் கேட்டேன்: ""உனக்குப் பிடித்த நடிகை ஆட்ரி ஹெப்பேனா?''
""இல்லை... ஷெர்லி மாக்லெய்ன்...''
ஷெர்லியின் கண்களை நான் நினைத்துப் பார்த்தேன். கள்ளங்கபடமற்ற தன்மைதான் அவற்றின் உயிர்.
நான் கூறினேன்: ""லோலா, உன் கண்கள் ஷெர்லியின் கண்களேதான்.''
""பாராட்டு...''
""இல்லை.''
""ஆமாம்.''
""இல்லை... இல்லை... நான் பார்த்தவர்களிலேயே பேரழகி... மிகுந்த கள்ளங்கபடமற்ற தன்மை உள்ளவள்.'' நான் கூறினேன்: ""அது நீதான்.'' அவள் உடனடியாக தலையைத் தாழ்த்திக் கொண்டாள். தொடர்ந்து திடீரென்று என் கையை இறுகப் பற்றினாள். அவளுடைய கண்களில் நீர் நிறைந்திருப்பதை நான் கவனித்தேன்.
""நான்...'' அவள் ஏதோ கூற முயற்சித்தாள்.
""சொல்...'' நான் கேட்டேன்: ""என்ன?''
அவள் எதுவுமே கூறாமல் என் கையைப் பிடித்து அழுத்தினாள்.
"லேக் ஆஃப் தி க்ளவுட்ஸ்' எங்களுக்கு முன்னால் இருட்டில் புதைந்து கிடந்தது. நீர்ப்பரப்பிற்கு மேலே பனிவிழ ஆரம்பித்திருந்தது. தூரத்தில் ஒரு மோட்டார் படகு போய்க்கொண்டிருப்பது மங்கலாகத் தெரிந்தது.
லோலா முணுமுணுத்தாள்: ""நான்... எனக்கு...''
அவளுடைய உதடுகள் மென்மையாக நடுங்கவும், என் கையைப் பிடித்திருந்த கை வியர்க்கவும் செய்தன.
என்னவாக இருந்தாலும், அவள் அதை எந்தச் சமயத்திலும் கூறிமுடிக்கப்போவதில்லை என்ற விஷயம் எனக்குத் தெரியும். அவள் என்ன சொல்ல முயற்சிக்கிறாள் என்பதும் எனக்குத் தெரியும்.
மிச்சிகன்...
செயின்ட் க்ராய்க்ஸ் நதிக்கு மேலே நின்றவாறு, ஓஹியோவுக்குத் திரும்பிச் செல்வதற்கு முந்தைய இரவு வேளையில் நான் அவளை முத்தமிட்டேன்.
எங்களைச் சுற்றிலும் பேரமைதி குடிகொண்டிருந்தது. காரை நோக்கி நடக்கும்போது, அவள் என் இடுப்பைச் சுற்றிப் பிடித்து நிறுத்திக்கொண்டு முணுமுணுத்தாள்:
""நான் கன்னிப்பெண். அது ஞாபகத்தில் இருக்கட்டும்.''
லோலாவின் கழுத்தில் ஒரு கருப்புப் புள்ளி இருந்தது. அது அவளை கவலைப்படச் செய்தது.
அவளுடைய ஒரு பல்- மேல் வரிசையின் நடுப்பல்லிருந்து நான்காவதாக இருந்தது- செயற்கைப் பல்...
தென்மேற்கு அமெரிக்காவிலிருந்து வரக்கூடிய இளம்பெண்களுக்கு பொதுவாகவே அழகு சற்று அதிகமாக இருக்கும். நடவடிக்கைகளும்... லோலாவோ இரண்டு விஷயங்களிலும் அளவுக்கு அதிகமாக இருக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவளாக இருந்தாள். பிறந்த மண்ணான டெக்ஸாஸைப் பற்றிக்கூறும்போது, அவள் எப்போதும் கவிதைக்குள் வழுக்கி விழுந்துகொண்டிருந்தாள்.
"கார்ப்பஸ் க்ரிஸ்டி கடலுக்குள் குளிர்ந்த காற்று...
ஸான் அன்டேனியே நதியின் கடலில் விசாலமான பூங்கா...
வா... ஒருமுறை டெக்ஸாஸிற்கு வா...'
அவள் கவிதைகள் எழுதினாள். பிரசுரிக்கவில்லை.
""ஏன் பிரசுரிக்கவில்லை?'' நான் கேட்டேன். ""நான் ஒரு இரண்டாவது தரத்திலிருக்கும் எழுத்தாளராகி விடக்கூடாது என்ற காரணத்திற்காக...'' அவள் கூறினாள். அமெரிக்க இலக்கியத்தின்மீது அவளுக்கு மதிப்பிருந்தது. மார்க் ட்வெய்னைப் பற்றிக்கூறும்போது, அவள் வெறிபிடித்ததைப்போல இருப்பாள். உலகத்திலேயே மிகப்பெரிய புதினப் படைப்பாளி மார்க் ட்வெய்ன்தான் என்று அவள் நம்பினாள். ஒரு நாள் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அவள் என்னை அழைத்தாள்.
""அடுத்த ஞாயிற்றுக்கிழமை மிஸ்ஸவ்ரிக்குப் போகலாம்.''
""போகலாம்.''
மிஸ்ஸவ்ரி...
ஹானிபாலில் மார்க் ட்வெய்னின் மிகப்பெரிய சிலைக்குக் கீழே நாங்கள் நின்றோம். அவர் அழிவற்றதாக ஆக்கிய நதி முன்னால் ஓடிக்கொண்டிருந்தது.
லோலா அமெரிக்க இலக்கியத்தைப் பற்றி ஆவேசத்துடன் பேசினாள்.
கிறிஸ்துமஸ்!
லாஸ்வேகாஸைப் பார்ப்பதற்கு நான் கிறிஸ்துமஸ் விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தினேன். லோலாவும் என்னுடன் இருந்தாள். லோலா மிகவும் அதிகமான கவலையுடன் காணப்பட்டாள். அவளுக்கு லாஸ்வேகாஸைப் பார்ப்பதில் விருப்பமில்லை. நான் கேட்டேன்: ""என்ன காரணம்?'' தன் தந்தையைப் பற்றி அன்று முதல்முறையாக அவள் என்னிடம் கூறினாள்.
டெக்ஸாஸிலிருந்து வர்த்தகம் செய்வதற்காக ஓஹியோவுக்கு வந்துசேர்ந்து பணம் சம்பாதித்தார். ரீனோயிலும் லாஸ்வேகாஸிலும் ரவ்லர் விளையாடி, முழுப்பணத்தையும் இழந்து, இறுதியில் ஏழையானபிறகு ஒரு கொலைக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. ஜான் மில்ஃபோர்டைப் பற்றி நான் அன்றுதான் கேள்விப்படுகிறேன்.
அவருடைய மனைவி ஒரு விலைமாதுவாக இருந்தாள். இடையில் அவ்வப்போது திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் தோன்றிக் கொண்டிருந்த ஒரு விலை குறைவான விலைமாது. லோலாவுக்கு பருவ வயது வந்தபோது, லோலாவின் தந்தை அவளை அழைத்துக்கொண்டு ஓஹியோவிற்குச் சென்றார். பிறகு லோலா தன் தாயைப் பார்க்கவேயில்லை.
ரீனோ வளைவைக் கடந்தபோது, லோலா என்னுடைய தோளின்மீது சாய்ந்தாள்.
""என் அப்பா அழிந்தது இங்குதான்.'' அவள் தேம்பித் தேம்பி அழுதாள். அன்று லோலா அளவுக்கும் அதிகமாக மது அருந்தினான். அவளுடைய குழந்தைத்தனம் விலகாத கன்னமும் முகமும் மதுவின் வெப்பமேற்று சிவந்தன.
நெவாடா மாநிலத்தை அவள் குழைந்த நாக்கைக் கொண்டு திட்டினாள்.
""இந்தியாவில் இப்படியொரு நகரம் இருக்கிறதா?''
""இல்லை.'' நான் பெருமையுடன் கூறினேன்.
""அப்படியென்றால் நானும் இந்தியாவுக்கு வரவேண்டும்.''
அன்று சாயங்காலம் மதுவின் போதையிலிருந்து அவள் முழுமையாக விடுதலை பெற்றபோது, வெயில் வீழ்த்திய நிழல்களுக்கு மத்தியில் வாடகைக்கு எடுத்த இரண்டு பெண் குதிரைகளின்மீது அமர்ந்து பயணிக்கும்போது அவள் மீண்டும் கேட்டாள்.
""நானும் இந்தியாவுக்கு வரக்கூடாதா?''
நான் எதுவும் கூறவில்லை.
""நாம் திருமணம் செய்துகொள்வோமா?''
நான் கூறினேன்: ""நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். ஒரு கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்ய இந்துவுக்கு சுதந்திரம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.''
""அப்படியென்றால் எங்களுடைய மதத்திற்கு மாறிவிடக்கூடாதா?''
நான் மெதுவாகச் சிரித்தேன். ஒரு பெண்ணிற்காக மதம் மாறுவது, அடிமைத்தளத்திற்கு வழி ஏற்படுத்தித் தருவதாக இருக்குமென்ற முட்டாள்தனம் எனக்குத் தோன்றியது.
தாஹோய் ஏரியின் கரையை அடைந்ததும் நாங்கள் நின்றோம். திடீரென்று அவள் என்னிடம் கூறினாள். ""இல்லாவிட்டால்... இங்கேயே நாம் வசிக்கலாம்.'' நான் ஒரு மாதிரி ஆகிவிட்டேன். அதைப் பார்த்துவிட்டு அவள் கேட்டாள்: ""இங்கு நிரந்தரமாக வசிக்கவேண்டுமென்றால் அமெரிக்க குடியுரிமையைப் பெறவேண்டுமா?''
""எனக்குத் தெரியாது.''
""நான் இந்தியாவில் வந்து வசிப்பதற்கும் இந்திய குடியுரிமை தேவைப்படுமா?''
""எனக்குத் தெரியாது.''
என் அலட்சியம் அவளைக் கோபம்கொள்ளச் செய்தது. அவள் இரண்டு நாடுகளையும் திட்டினாள். இந்திய குடியுரிமையும் அமெரிக்க குடியுரிமையும்... இந்தியாவும் அமெரிக்காவும்... கிறிஸ்துவப் பெண்ணும் இந்து மதத்தைச் சேர்ந்த ஆணும்... இந்து மதமும் கிறிஸ்துவ மதமும்... அவள் ஒரு வெறி பிடித்தவளைப்போல காணப்பட்டாள் சிறிது நேரத்திற்கு...
அரிஸோனாவின் தலைநகரத்திலிருந்த ஒரு ஹோட்டலில் இருக்கும்போது, நான் அவளிடம் என்னுடைய சூழல்களை விளக்கினேன். ""என்னால் என்னுடைய லோலாவை எந்தச் சமயத்திலும் திருமணம் செய்துகொள்ள முடியாது. நீ அதற்காக ஏமாற்றமடையக்கூடாது.'' நான் கூறினேன்.
""இல்லை. நான் ஏமாற்றமடையவில்லை.''
அவள் கூறினாள். அவளுடைய குரல் பதட்டத்துடன் இருப்பதை நான் கவனித்தேன்.
நான் என்னுடைய சூழல்களை மேலும் தெளிவுபடுத்தினேன். ""என்னை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம்... என் நாட்டின் வறுமை... என் வீட்டின் வறுமை... (இந்த கல்வி உதவித்தொகை இல்லையென்றால், எனக்கு இங்கு எந்த இடத்திற்கும் வரக்கூட முடிந்திருக்காது). பிறகு... அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த உனக்கு எந்தக் காலத்திலும் அங்கு சந்தோஷமாக இருக்கமுடியாது. இங்கு இருப்பதைப் போன்ற பெரிய ஹோட்டல்கள் இல்லை. கடற்கரை இல்லை. வறுமை மட்டும்தான் இருக்கிறது. வறுமை மட்டும்தான்...''
அவளுக்குப் புரியவில்லை என்று தோன்றியது.
எங்களுக்கு முன்னால் கீழே ஃபீனிக்ஸ் நகரத்தின் லட்சக்கணக்கான பிரம்மாண்ட கட்டடங்கள் வரிசையாக நின்றிருந்தன. இசைக்குழு அவசரமாக ஒழுங்கில்லாமல் எதையோ பாடிக்கொண்டிருந்தது. அவள் என்னை வெறித்துப் பார்த்தாள்.
""வறுமையா?''
மர்லின் மன்றோ இறந்த நாளன்று அவள் என்னுடைய அறைக்கு வந்தாள். ""எங்களின் மிகப்பெரிய நட்சத்திரம் ஒரு முட்டாளாக இருந்திருக்கிறாள்.'' அவள் கவலைப்பட்டாள். ""எது எப்படியோ- இப்படிப்பட்ட கழுதைகள் இறப்பதுதான் நல்லது.'' அன்று தற்கொலையைப் பற்றியும், அவற்றுக்கான காரணங்களைப் பற்றியும் நாங்கள் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தோம். தற்கொலை செய்துகொள்பவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று அவள் நினைத்தாள்.
அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்... காரணம் எது வேண்டுமானாலும் இருக்கட்டும்...
இடையில் நான் கூறினேன்: ""அளவுக்கும் அதிகமாகக் கவலைப்படும்போது, ஒருவேளை நாம் அனைவரும்...''
அவள் உடனடியாக பேரமைதியில் மூழ்கினாள். ஒரு நிமிடம் கடந்தபிறகு, திடீரென்று கேட்டாள்: ""இனி திரும்பிச் செல்வதற்கு எவ்வளவு நாட்கள் இருக்கின்றன?''
""மூன்று மாதங்கள்.'' நான் கூறினேன். பிறகு பல நேரங்களிலும் அவள் அந்த சூழ்நிலையில் அப்படிக் கேட்டதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி நான் சிந்தித்திருக்கிறேன்.
புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு லோலா கூறினாள்: ""இந்த ஒரு வாரம் என்னுடையது. என் விருப்பப்படி நான் இதைச் செலவிடுவேன். நான் கூறுவதைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.'' நான் சம்மதித்தேன். ""எப்படி இந்த ஒரு வாரத்தைச் செலவிடுவது?'' நான் கேட்டதற்கு சற்று வெட்கத்துடன் அவள் கூறினாள்: ""இந்த ஒரு வாரம்தான் நம்முடைய தேன்நிலவு. தெற்கு கலிஃபோர்னியாவில்...''
அவள் அதை மிகவும் சாதாரணமாகக் கூறினாள். காரணம்- அவளிடம் அளவற்ற பணம் இருந்தது.
அவளுடைய மரணமடைந்துவிட்ட ஒரு அத்தை அவளுக்காக ஒரு நல்ல தொகையை வைத்துவிட்டுச் சென்றிருந்தாள்.
தெற்கு கலிஃபோர்னியா... புகழ்பெற்ற ஹாலிவுட்... ஆரஞ்சு மரங்கள் வரிசையாக நின்றுகொண்டிருக்கும் விசாலமான தெருக்கள்... புகழ்பெற்ற ரோஸ் பவுல் மைதானம்... வாஜோலாய் மலை உச்சிகளில் கடலுக்கு மேலே நீட்டியவாறு நின்றுகொண்டிருந்த வீடுகளில் ஒன்றில்... அவள் கூறியது உணமைதான். லோலா மில்ஃபோர்ட் அன்றுவரை ஒரு கன்னிப்பெண்ணாக இருந்தாள்.
என் தாய் முன்பே எழுதியிருந்தாள்: "நீ வந்தவுடன் திருமணம் நடக்க வேண்டுமென்று அவர்கள் கூறுகிறார்கள்.'
என்னுடன் சேர்ந்து விளையாடி வளர்ந்த என் எதிர்கால மணப்பெண் எழுதியிருந்தாள்: "சற்று பார்க்க வேண்டுமென்று வெறி.'
"Through that white night
we two sat on your window sill.
அந்த வெளுத்த இரவில்
உன் சாளரத்தின் படியில்...
...ஷிவாகோவின் கவிதை வரிகள்...
""உங்களுடைய குழந்தை என் வயிற்றில் இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள்.''
""அப்படியென்றால்...''
""நான் அவனைப் பெற்றெடுப்பேன். இல்லையா?''
""ம்... பிறகு?''
""நான் அவனை வளர்ப்பேன்.''
""வளர்ப்பாயா?''
""ம்... உங்களைப்போல அவன் வளர்ந்துவருவான். நீங்கள் இப்போது இருப்பதைப்போல ஆகும்போது... அப்போது எனக்கு வயது அதிகமாகியிருக்கும். அன்று நான் அவனைக் கொல்வேன்.''
எனக்கு சற்று கவலை உண்டானது. எனினும், நான் சிரித்துக்கொண்டே கேட்டேன்: ""அப்படியென்றால்... என்னை இப்போதே நீ கொல்லக் கூடாதா?''
""என்னால் அதைச்செய்ய முடியாது என்று தோன்றுகிறது.'' அவள் கூறினாள். தொடர்ந்து மண்ணில் முகத்தைப் பதிய வைத்துக்கொண்டு தேம்பித்தேம்பி அழுதாள்.
""ஒன்றும் வேண்டாம். இது எதுவுமே வேண்டாம்.''
கோடிக்கணக்கான ஆஸேலியா மலர்கள் மலர்ந்து நின்றுகொண்டிருக்கும் பள்ளத்தாக்கிலிருந்து ஒரு காற்று அடித்து மேலே வந்தது. அதில் பட்டு அவளுடைய தலைமுடி அலட்சியமாகப் பறந்து கொண்டிருந்தது. நான் மெதுவாக அவளுடைய தோளில் கையை வைத்தேன். அவள் நெளிந்து, எழுந்து கண்ணைக் கசக்கினாள்.
ஒரு நிமிடம் என்னையே வெறித்துப் பார்த்துவிட்டு, ஒரு புதிய ஆவேசத்துடன் என் விரல்களில் முத்தமிட்டவாறு அவள் கூறினாள்: ""மன்னித்துவிடுங்கள்.''
தெற்கு கலிஃபோர்னியா மணல் காடுகளின் நகரம். எப்போதும் ஒரு வெப்பக் காற்று வெட்டவெளியில் தங்கி நின்றுகொண்டேயிருக்கும்.
மிகவும் பிரம்மாண்டமாக முப்பது அடி உயரத்தில் ஜோஷ்வா மரங்கள் பெரிய கொத்துகளைத் தாங்கியவாறு நின்றிருந்தன. காற்று வீசும்போது, கிளைகள் அசைந்தன. தனியாகவும் கொத்தாகவும் மலர்கள் விழுந்து பரவின.
லோலாவை ஒரு பூங்கொத்தின் பின்னணியில் நான் கேமராவில் பதிய வைத்தேன். அவள் அழகாக சிரித்துக்கொண்டு நின்றிருந்தாள்.
புகைப்படம் எடுத்து முடித்ததும், யாரிடம் என்றில்லாமல் அவள் முணுமுணுத்தாள்:
""நானும் அந்த முட்டாள்தனத்தைச் செய்வேன் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.''
""என்ன?'' நான் கேட்டேன்.
""மர்லின் செய்த அந்த முட்டாள்தனம்...''
சான்ட்ரா பார்பரா மிஷனில் மணிகள் கவலையுடன் ஒலித்தன. சாயங்காலம் தாழ்ந்து பரவியது. மிகவும் புராதனமான தேவாலயத்தின் கதவு மிகவும் அமைதியாக மூடியது. தூரத்தில் எங்கோயிருந்து... வேறு ஏதோ தேவாலயத்தில் மணியடிக்கும் ஓசை பனிப்படலத்திற்கு மத்தியில் கடந்து வந்து சேர்ந்தது. இருட்டில் என்னுடைய மடியில் தலையைச் சாய்த்துப் படுத்தவாறு லோலா கேட்டாள்:
""என் வழி இதுதானே?''
நான் கூறினேன்: ""முட்டாள்தனமாக பேசாதே. என்னை சந்தோஷமாக அனுப்பி வைக்கவேண்டும்.''
அவள் எதுவும் கூறவில்லை. எனக்கு கவலை உண்டானது.
கடந்து சென்ற நாட்களில் ஸான்கேப்ரியேல் மிஷனிலும், கார்மல் பேயை நோக்கி முகத்தைத் திருப்பியவாறு நின்று கொண்டிருக்கும் செயின்ட் சால்ஸ் பொரோமியோவிலும் நான் பார்த்த ஏராளமான முகங்கள் என் மனதில் கடந்துவந்தன.
நிரந்தரமான மணமகன்கள்... மணமகள்கள்...
""நீ எந்தச் சமயத்திலும் அதைச் செய்யக்கூடாது.'' நான் கூறினேன்: ""அது ஒருவகையான கொடூரச் செயல்.''
இங்குமங்குமாக அமைதியாக அசைந்து கொண்டிருந்த கறுத்த நீளமான ஆடைகள் பள்ளத்தாக்கின் மங்கலான வெளிச்சத்தில் கரைந்து சேர்ந்தன. ஆரஞ்சு மரங்களுக்கு மேலே கோடைப் பனி மூடியது. நான் அவளுடைய கன்னத்திலிருந்த ஈரத்தைத் துடைத்துவிட்டேன். இறுதி நாள்...
லோலா மிகவும் அதிகமான உற்சாகத்துடன் இருப்பதைப்போல காட்டிக்கொண்டாள். ஆனால், அது ஒரு முகமூடி மட்டும்தான் என்ற விஷயம் எனக்குத் தெரியும். இரவில் மிகவும் இருட்டும்வரை நாங்கள் தெருக்களில் அலைந்து திரிந்தோம். இடையில் அவ்வப்போது தெரு விளக்குகளின் பிரகாசம் வந்து சேராத இருட்டில் அவள் திடீரென்று நின்று என்னை முத்தமிட்டாள். இரவுநேர கிளப்கள் மேலும் மேலும் சத்தம் நிறைந்தனவாகிக் கொண்டிருந்தன. நாங்கள் ஒருவரோடொருவர் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எந்த நிமிடத்திலும் லோலாவின் முகமூடி தகர்ந்துவிடும் என்றும், அவள் வெடித்து அழுவாள் என்றும் நான் பயப்பட்டேன்.
அது உண்டானது ஒரு திருப்பத்தில்... பிகினி மட்டுமே அணிந்திருந்த ஒரு பெண்ணை மூன்று இளைஞர்கள் சேர்ந்து இருட்டுக்குள் அழைத்துச் செல்வதை நாங்கள் பார்த்தோம்.
அந்தப் பெண் மிகவும் அதிகமாகக் குடித்திருந்தாள். தெளிவற்ற குரலில் அவள் யாரையோ திட்டிக்கொண்டிருந்தாள்.
இருட்டில் அவர்கள் மறைந்துவிட்டார்கள்.
சிறிது நேரம் கழித்து, முரட்டுக் குரலில் யாரோ பாடினார்கள்:
"Golden Memories and silver tears...'
லோலா கூறினாள்: ""போகலாம்.''
நாங்கள் மீண்டும் நடந்தோம். அவள் என்னவோ கூற முயற்சித்தாள். சிறிது நடந்தபிறகு அவள் கேட்டாள்.
""குடித்தும் விபச்சாரம் செய்தும் ஏதோ கவலையை மறப்பதற்கு அந்த முட்டாள் பெண் முயற்சிக் கிறாள். இல்லையா?'' அவளுடைய குரலில் கண்ணீரின் வெளிப்பாடு இருந்தது. நான் அவளைப் பிடித்து நிறுத்தினேன். அவளுடைய கண்களையே வெறித்துப் பார்த்தேன்.
அவை நிறைந்திருந்தன.
""திரும்பி நடப்போம்.'' நான் கூறினேன். ஹோட்டலை நோக்கி நடந்தோம். கதவு மூடியது. நாங்கள் இருவர் மட்டும் இருந்தோம்.
இரவு நீண்டநேரம் ஆகிவிட்டிருந்தது. புலர்காலைப்பொழுது நெருங்கி நெருங்கி வந்துகொண்டிருப்பதை எங்களால் பார்க்க முடிந்தது.
நான் கட்டிலில் அமர்ந்தேன். என் கால்பகுதியில்... வெறும் தரையில்... லோலா. இடையில் அவ்வப்போது என் கைகளில் அவள் மென்மையாக முத்தமிட்டாள். வேறுசில நேரங்களில் அவள் மிகவும் அமைதியாக என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் ஒரு அமெரிக்கப் பெண் என்பதை நம்புவதற்கு அந்த நிமிடங்களில் சிரமமாக இருந்தது.
காலையில் ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்தோம். மீண்டும் பார்ப்பதென்ற ஒன்று நடக்கப் போவதில்லை. நீ இறந்துவிட்டதாக நானும், நான் இறந்துவிட்டதாக நீயும் நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். முத்தமிட்ட உதடுகளுக்கு விடைதர வேண்டியதுதான்...