இடைக்கழி நாட்டில் இலக்கியச் சின்னம் - கோவி.லெனின்

/idhalgal/eniya-utayam/literary-symbol-middle-ages-cowielenin

நீலக்கடலும் வெண்மணல் பரப்பும் கண்களைக் கவரும் நெய்தல் நிலம் வழியே பயணிப்பது இனிமையான அனுபவத்தைத் தரும். தமிழ்நாட்டின் கடற்கரைப்பரப்பு ஏறத்தாழ 1000 கி.மீ. நீளம் கொண்டது. சென்னை முதல் குமரி வரையிலான இந்த நெய்தல் நிலப்பரப்பில், கிழக்கு கடற்கரைச் சாலை

யில் பொதுப்போக்குவரத்து அல்லது தனி வாகனத்தில் பயணிக்கும் பலரும் இளங் காற்று முகம் தழுவ, உறங்கியபடியே பயணிப் பது வழக்கம். பகல் நேரத்தில், கிழக்கு கடற் கரைச் சாலையில் பயணிக்கும் வாய்ப்பு அமைந் தவர்கள் கண் அயராமல் கவனித்தால், வரலாற்றுக் காலத்தில் பயணிப்பது போன்ற இனிமையைத் தரும்.

dd

சென்னை மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை போன்ற பிரபலமான-மக்கள் அதிகம் கூடுகின்ற கடற்கரைகளைக் கடந்த பிறகே, திருவான்மியூரிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலைப் பயணம் தொடங்கும். அதில், முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரையில் ஓர் அழகு. அதைக் கடந்து கல்பாக்கம்-புதுப்பட்டணம் சென்றால் மற்றொரு அழகு. பாலாறு கடலில் கலக்கும் வயலூர் தாண்டியதும் இன்னொரு வகை அழகு. அதில் இடைக்கழிநாடும் மரக்காணமும் பேரழகு. புதுச்சேரியை நெருங்

நீலக்கடலும் வெண்மணல் பரப்பும் கண்களைக் கவரும் நெய்தல் நிலம் வழியே பயணிப்பது இனிமையான அனுபவத்தைத் தரும். தமிழ்நாட்டின் கடற்கரைப்பரப்பு ஏறத்தாழ 1000 கி.மீ. நீளம் கொண்டது. சென்னை முதல் குமரி வரையிலான இந்த நெய்தல் நிலப்பரப்பில், கிழக்கு கடற்கரைச் சாலை

யில் பொதுப்போக்குவரத்து அல்லது தனி வாகனத்தில் பயணிக்கும் பலரும் இளங் காற்று முகம் தழுவ, உறங்கியபடியே பயணிப் பது வழக்கம். பகல் நேரத்தில், கிழக்கு கடற் கரைச் சாலையில் பயணிக்கும் வாய்ப்பு அமைந் தவர்கள் கண் அயராமல் கவனித்தால், வரலாற்றுக் காலத்தில் பயணிப்பது போன்ற இனிமையைத் தரும்.

dd

சென்னை மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை போன்ற பிரபலமான-மக்கள் அதிகம் கூடுகின்ற கடற்கரைகளைக் கடந்த பிறகே, திருவான்மியூரிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலைப் பயணம் தொடங்கும். அதில், முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரையில் ஓர் அழகு. அதைக் கடந்து கல்பாக்கம்-புதுப்பட்டணம் சென்றால் மற்றொரு அழகு. பாலாறு கடலில் கலக்கும் வயலூர் தாண்டியதும் இன்னொரு வகை அழகு. அதில் இடைக்கழிநாடும் மரக்காணமும் பேரழகு. புதுச்சேரியை நெருங்கும்போது போதையூட்டும் அழகு. குறுக்கிடும் கோட்டக்குப்பம் கடற்கரை கொள்ளை அழகு.

சுற்றுலா விடுதிகள், பொழுதுபோக்கு இல்லங்கள், கேளிக்கை மையங்கள் என இரவு நேர கிழக்கு கடற்கரைச் சாலைக்கு மேற்கத்திய பாணி முகம் உண்டு. ஆனால், பகலில் பயணித்தால்தான் பழந்தமிழர் நில அமைப்புகள் பற்றிய உண்மை முகத்தை நேரில் காணலாம்.

பனையூர், மணமை, கூனிமேடு என கிழக்கு கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள ஊர்களின் பெயர்களும் அதற்கானப் பின்னணியும் ஆய்வுப் பூர்வமான அழகு கொண்டவை. அதிலும், இடைக் கழிநாடு என்ற பெயர் என்னை ரொம்பவும் ஈர்த்து விட்டது. சென்னைக்கு வந்த புதிதில் ‘இடைக்கழி நாட்டு இளநீர்’ என்ற கவிதைப் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதிருந்தே அந்தப் பெயரில் ஒரு மயக்கம் ஏற்பட்டது.

கிழக்கு கடற்கரைச் சலையில் முதலியார்குப்பம் கழிமுகப்பகுதிக்கும் வெண்ணாங்குப்பட்டு கழிமுகப்பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிதான் இடைக்கழிநாடு.

நிலத்தின் வழியே ஓடும் நீர் கடலோடு கலக்கும் பகுதி கழிமுகம் என்பதால் உப்புத் தன்மைக் கொண்ட தாக இருக்கும். ஆனால், அங்கு காய்க்கும் இளநீர் மிகவும் இனிப்பாக இருக்கும். சாலையின் இருபுறமும் கிராம மக்கள் குலைகுலையாக இளநீரைத் தொங்கவிட்டு வியாபாரம் செய்வார்கள். உப்புத் தன்மை கொண்ட பகுதியில் எப்படி இத்தனை இனிப்பு என்று கேட்டால், இடைக்கழிநாட்டுல தண்ணியும் எளநீருதான்” என்பார்கள்.

கடற்கரையை ஒட்டிய நெய்தல் நிலத்துடன், அதன் தொடர்ச்சியாக மருதமும் முல்லையும் செழித்திருப்பதை இடைக்கழிநாட்டில் காணலாம். 24 கிராமங்கள் கொண்ட இடைக்கழிநாட்டில் நெல் வயல்கள் உண்டு. மா, பலா மரங்கள் நிறைந்த தோப்புகள் உண்டு. கடற்கரை நோக்கி செல்லச் செல்ல பனை மரங்கள் அதிகமாக இருக்கும்.

இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகம் கடப்பாக்கம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. அங்கிருந்து மரக்காணம் நோக்கிச் செல்லும்போது இடது புறத்தில், ‘சிறுபாணாற்றுப்படை நூலைப் படைத்த சங்கப்புலவர்-இடைக்கழிநாடு நல்லூர் நந்தத்தனார் நினைவுத் தூண்’ என்ற பெயர்ப்பலகை பளிச்சிடும்.

ll

பழந்தமிழர் வாழ்வியலில் பாணர்கள் எனும் இசைக்கலைஞர்கள், வழிப்போக்கர்களாக பல இடங் களுக்கு சென்றிருப்பதை இலக்கியங்கள் குறிப்பிடு கின்றன. காதல் வயப்பட்ட தலைவன்-தலைவிக் கிடையிலான ஊடல்களைத் தீர்த்து வைக்கும் தூதர்களாகவும் பாணர்கள் இருந்துள்ளனர். அரசர்களின் அன்புக்குரியவர்கள். சீறியாழ் (7 நரம்புகளைக் கொண்ட சிறு யாழ்) இசைப்பவர்கள் சிறுபாணர்கள். பேரியாழ் (21 நரம்புகளைக் கொண்ட பெரிய யாழ்) இசைப்பவர்கள் பெரும்பாணர்கள்.

சிறுபாணாற்றுப்படையும், பெரும்பாணாற்றுப் படையும் பாணர் வாழ்வையும் தமிழ் நிலத்தின் சிறப்பையும் கூறும் இலக்கியங்கள். சிறுபாணாற்றுப் படையில் ஓய்மாநாட்டு (திண்டிவனம்) அரசன் நல்லியக்கோடனின் புகழை, ஒரு பாணர் இன்னொரு பாணருக்குச் சொல்வது போலப் பாடியுள்ளார் புலவர் நந்தத்தனார்.

அவரது நினைவைப் போற்றும் வகையில் சிறிய அளவில் சிலை அமைக்கப்பட்டு, 1958ல் காங்கிரஸ் ஆட்சியில் அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவத் சலம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (அதில் திருவள்ளுவர் ஆண்டு குறித்து தமிழ் எண்களில் பதிவிட்டுள்ளனர். காலக்கணக்கு சற்று மாறுபடுகிறது).

அதே இடத்தில், புலி- வில்லி மீன் என மூவேந்தர் இலச்சினைகளுடன் ‘ஞாயிறு போற்றுதும்’ என்பதற் கேற்ப சூரியனும் உள்ள நினைவுச்சின்னம் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டுள்ளது. செல்வி.ஜெய லலிதா ஆட்சிக்காலத்தில் அரசு தலைமைக் கொறடா வாக இருந்தவரும், பின்னர் அமைச்சரானவருமான அன்றைய காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கா.ப.பட்டாபிராமனால் இந்த நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக தமிழ்க் கவிஞர் நாள் கொண்டாடப்பட்ட கல்வெட்டும் பதிக்கப்பட் டுள்ளது. நல்லூர் நந்தத்தனார் சிலை அமைக்கப் பட்டிருந்த மாடத்தில், மண்ணும் சருகுகளும் நிறைந் திருந்தன. பயண வழியில் இளைப்பாறுதலாகவும், தமிழ்ப் புலவருக்கான சிறு தொண்டாகவும் ஒரு துணியினால் அவற்றைத் தூய்மைப்படுத்தி மனநிறைவு கொண்டேன். என்னுடன் பயணித்த மகள் தமிழ்நிலா, இளங்கலை வரலாறு பயின்று வருவதால் அவரிடம், இலக்கியம் காட்டும் தமிழர் வரலாற்றுச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டேன்.

சாலையை ஒட்டி, சோலை போன்ற மரநிழல் படர்ந்த அந்த இடத்தில், நந்தத்தனாரின் சிலை, நினைவுச் சின்னம் ஆகியவற்றுடன் பழந்தமிழ்க் காட்சிகளைப் பேசும்போது, காலச்சக்கரத்தில் பயணிப்பது போல இருந்தது. வாழ்க்கைப் பயணத்தில் ஓர் இனிய இலக்கியத் தருணத்தைப் படைத்தது கிழக்கு கடற்கரைச்சாலை.

uday010422
இதையும் படியுங்கள்
Subscribe