உலகிலேயே சாலை விபத்துகளின் எண்ணிக் கையும், சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கை இந்தியாவில்தான் மிக அதிகம். பிப்ரவரி 8, 2018-ஆம் நாள் நடுவண் அரசின் நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிட்டுள்ள 2015 -16-ஆம் ஆண்டு புள்ளிவிவரங் களின் படி நம் நாட்டில் 23 கோடி வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் எத்தனை கோடி வாகனங்கள் இன்று சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன என்ற விவரம் இல்லை. தோராய மாக, 15 கோடி வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கலாம்.
ஆனால் அமெரிக்காவில் சென்ற ஓர் ஆண்டில் மட்டும் 26.8 கோடி வாகனங்கள் பதிவுசெய்யப் பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் ஆயிரம் பேருக்கு 910 வாகனங்களும், இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 140 வாகனங்களும் இருக்கின்றன.
2017 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சாலை விபத்துக் களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 46,810. 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த மொத்த சாலை விபத்துகள் 4,80,562. இவற்றில் 1,50,785 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அதாவது ஒவ்வொரு நாளும் இந்தியச் சாலைகளில் 1,317 விபத்துகள் நடக்கின்றன. 413 பேர் இறக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு நிமிடத்துக்கு ஒரு விபத்து நடக்கிறது.
நோய்களால் இறப்பவர்களைவிட சாலை விபத்துகளால் இறப்பவர் களால், குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. சாலை விபத்து களில் இறப்பவர்கள் பொதுவாக குடும்பத்தின் தலைவர்களாக இருக்கக் கூடிய, பொருளீட்டும் முக்கிய நபர்களாக இருக்கிறார்கள். அவர்களை இழப்பதன் வாயிலாக அவர்களின் குடும்பங்கள் தன் வருவாயையும், எதிர்காலத்தையும் இழந்துவிடுகின்றன. சாலை விபத்துகளில் இறக்கிற ஒவ்வொரு நபருக்கும், நான்கு நபர்கள் சாலை விபத்துகளினால் உடல் ஊனமுற்று மீண்டும் பணி செய்யமுடியாத அளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்தியப் பொருளாதாரத்தின் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்று சாலை விபத்துகள்.
சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தி, பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டியது அரசின் மிக முக்கிய கடமை ஆகும். சாலைப் பாதுகாப்பு வார விழாவில் பேசிய சென்னை மாநகரக் காவல் ஆணையர் தலைக் கவசம் அணிவதன் வாயிலாகவும், வாகனங்கள் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் வாயிலாகவும் விபத்துகளை பெருமளவில் குறைக்கலாம் என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
சாலை விபத்துக்களுக்கு மனிதத் தவறுகளே காரணம் என்பதும் ஓட்டுநர்களுடைய தவறுகளை சரிசெய்வதன் மூலம் சாலைவிபத்துக்களை முற்றிலும் தவிர்க்கலாம் என்பதும் அரசின் கருத்தாக இருக்கிறது.
இந்திய அரசின் நெடுஞ்சாலைத்துறையின் அறிக்கையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, மிக வேகமாகச் செல்வது, சாலை விதிகளை மீறுவது, அலட்சியமாக இயக்குவது போன்ற ஓட்டுனர்களின் தவறுகளால் 84% விபத்துகள் ஏற்படுவதாகவும், மற்ற விபத்துகள் வண்டியில் ஏற்படும் பழுது அல்லது பிற காரணங்களால் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகிறது.
இந்த ஆராய்ச்சி முடிவுகளும், கண்ணோட்டமும் இந்தியாவில் பொதுவாக எல்லா பிரச்சனைகளையும் ஆராய்கின்ற கோணத்தில் இருந்து ஆய்வதனால் ஏற்படுகின்ற கோளாறு. இந்தியாவில் அனைத்து பிரச்னைகளும் மனிதத

இந்த ஆராய்ச்சி முடிவுகளும், கண்ணோட்டமும் இந்தியாவில் பொதுவாக எல்லா பிரச்சனைகளையும் ஆராய்கின்ற கோணத்தில் இருந்து ஆய்வதனால் ஏற்படுகின்ற கோளாறு. இந்தியாவில் அனைத்து பிரச்னைகளும் மனிதத் தவறு களால் ஏற்படுவதாகவும், மனிதர் களை ஒழுங்குபடுத்துவதன் வாயிலாக எல்லாவற்றையும் சரிசெய்துவிடலாம் என்கிற கருத்தும் மேலோங்கி இருக்கிறது.
சாலை விபத்துகளுக்கான முதன்மையான காரணங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
சாலையின் அமைப்பு முறைகளில் உள்ள தவறுகள் சாலையில் உள்ள பழுதுகள் ஓட்டுநர்கள் செய்கிற தவறுகள் வாகனத்தில் ஏற்படும் பழுதுகள் சாலையைப் பயன்படுத்தும் ஓட்டுநர் அல்லாத மற்றவர்கள் மற்றும் சாலையைக் கடக்கும் விலங்குகள் பிற காரணங்கள் முதலில் மனிதத் தவறுகளால் ஏற்படும் விபத்துகளை பார்க்கலாம்.
இந்தியாவில் 84% சாலை விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவிக்கிறது. மனிதத் தவறுகளால் விபத்துகள் ஏற்படுவது என்பது, இந்திய மக்கள் அடிப்படையில் அறிவு குறைந்தவர்கள் அல்லது விதிகளை மதிக்கும் பண்பு இல்லாதவர்கள், இவர்களை திருத்தவேண்டும் என்று பொருள்படுகிறது.
இதே இந்திய ஓட்டுநர் சவூதி அரேபியாவிற்குச் சென்று அங்கே ஓட்டுநராகப் பணிபுரியும்போது, விபத்துகள் ஏற்படாத வண்ணம், சிறந்த ஓட்டுநர் என்று நம்பக்கூடிய, பாராட்டக்கூடிய ஒருவராக மாறிவிடுகிறார். அதேபோல இங்கே பயின்றுவிட்டு இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் செல்கிற மருத்துவர்களும், பொறியாளர்களும் அங்கே வாகனம் ஓட்டும்போது சட்டத்திற்கு உட்பட்டவர்களாக மாறிவிடுகிறார்கள். அப்படியென்றால் இந்தியாவில் ஓட்டுனர்கள் விதிகளுக்கு உட்பட்டு வண்டிகளை இயக்காததற்குக் காரணம், அவர்கள் விதிகளை மதிக்காத பண்புகளை தங்களுடைய மரபணு விலேயே கொண்டிருக்கிறார்கள் என்பது அல்ல.
ஒரு மனிதனை விதிகளை மதிக்கச் செய்வதற்கு முதலில் அவன் அவற்றை தெளிவாக அறியச்செய்ய வேண்டும். அவன் விதிகளுக்கு உட்பட்டு வாகனத்தைச் செலுத்துகிறான் என்பதை உறுதி செய்த பின்பு ஓட்டுநர் உரிமம் வழங்கவேண்டும். இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு செய்யப்படும் தேர்வு முறை மிக எளியதாகவும், அவனுடைய உண்மையான திறனை உறுதி செய்வதாகவும் இல்லை. இலஞ்சம், ஊழல் மலிந்த நிறுவனங் களாக சாலைப் போக்குவரத்து அலுவலகங்கள் இருக்கின்றன. ஓர் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு நேரில் செல்லாமலேயே அதை வாங்கமுடியும் என்ற நிலையெல்லாம்கூட முன்பு இருந்தது. இப்பொழுது மின்னணு மயமாக்கிய பிறகு அவர்கள் நேரிலே செல்வது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஓட்டுநர் உரிமம் பெறுபவர் முதலில் எழுத்துத் தேர்வு எழுதித் தேர்ச்சிபெறவேண்டும். பின்னர் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரையில் போக்குவரத்து மிகுந்த சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் உரிமம் வழங்கும் தேர்வருடன் அமர்ந்து வாகனத்தை இயக்கிக் காண்பிக்கவேண்டும். ஓட்டுநருடைய ஒவ்வொரு நடத்தையையும் உரிமம் வழங்குபவர் கவனித்து, உறுதிசெய்த பின்னரே உரிமம் வழங்கப்படுகிறது.
வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகளுக்கு முதன்மையான காரணமாக இருப்பது மது.
எனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும். பல மாநிலங்களில் அரசுகள் மது விற்பதை தமது முதன்மை வருவாய்த் திட்டமாக வைத்திருப்பதால், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடை செய்ய முழுமையான முனைப்பைக் காட்டுவதில்லை.
சான்றாக, அரசு மதுக் கடைகளில் மது அருந்திவிட்டு உடனடியாக இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதை தமிழகத்தில் அதிகமாகப் பார்க்கிறோம். மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதைத் தடுப்பதில் அரசுக்கு முழு முனைப்பு இருக்குமேயானால் மதுக் கடைகளின் இரண்டு புறத்திலும் 100 மீட்டர் தொலைவில் வாகனப் பரிசோதனை செய்து, மது அருந்திவிட்டு ஓட்டுவதை கடுமையாகத் தண்டிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அருகில் அல்லது சுங்கச்சாவடியில் பணம் பெறும் அந்த இடத்திலேயேகூட வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா? என்பதை அறியச் செய்ய கருவிகள் பொருத்தி, அப்படிச் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, தவிர்க்கக்கூடிய காரணங்களால் ஏற்படுகிற தவறுகள். மற்றொன்று, தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படுகின்ற தவறுகள் சான்றாக, ஒருவர் கைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டிச்செல்லும் போது ஏற்படுகின்ற விபத்து அவரது கவனக் குறைவால் ஏற்படுகின்ற விபத்து. அதற்கு முழுப் பொறுப்பை அந்த ஓட்டுநர் ஏற்க வேண்டும். அதே சமயம், எதிரில் வரும் வண்டி தெரியாத, குறுகலான சாலைத் திருப்பத்தில், அங்கே ஏற்கனவே நிறுத்தப்பட்டிருக்கும் பழுதான வண்டியின் மீது ஒருவர் மோதி ஏற்படுத்தும் விபத்து தவிர்க்கமுடியாத விபத்தாகிறது.
பொதுவாக தவிர்க்க முடியாத தவறுகளை ஓட்டுநர் செய்வதற்கான காரணம் சாலையின் அமைப்புதான்.
இந்தியச் சாலைகள் மிக மிக பாதுகாப்பற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. சாலை அமைப்பது என்பது நவீன உலகின் மிகப் பெரிய அறிவியல். சாலைகளை அமைக்கும்போது சாலையின் அகலம், வளைவுகள், அதனுடைய சாய்வு போன்றவை கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக சாலைக் குறியீடுகள் திட்டமிட்டு அமைக்கப்பட வேண்டும். சான்றாக, 100 கி.மீ வேகத்தில் வருகிற ஒரு வாகன ஓட்டிக்கு ஓர் ஊருக்குச் செல்வதற்கான திருப்பம் இருக்கிறது என்றால், அந்த திருப்பம் 300 மீட்டருக்கு முன்பாகவே அவர் வருகிற வேகத்தில், கண்ணால் தெளிவாகப் பார்த்து, மனதில் வேகமாகப் பதியும் அளவிற்கு குறிப்பிட்ட அளவில், அவன் கண் பார்வை வட்டத்திற்குள் அமையும்படி இருக்கவேண்டும். ஓட்டுநர் அந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்து, மனதில் பதிய வைத்து, வண்டியை நிறுத்துவதோ அல்லது திருப்புவதோ என்ற அந்தச் செயலை செய்வதற்கு சில விநாடிகள் தேவைப்படும். அந்த விநாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வருகிற வண்டி நிதானப்படுத்தப்பட்டு, திரும்புவதற்குள்ளாக ஒரு குறிப்பிட்ட தூரத்தைக் கடந்துவிடும். இதனைப் புரிந்துகொண்டு அறிவிப்புப் பலகையை அந்த திருப்பத்திற்கு குறிப்பிட்ட தொலைவிற்கு முன்பாகவே அமைக்க வேண்டும். முதலில் ஒரு அறிவிப்புப் பலகையை வைத்த பின்னர் 100 மீட்டர் தள்ளி மீண்டும் ஒன்று அமைக்க வேண்டும். இப்படிச் செய்தால் வேகமாக வரும்போது கவனிக்காமல் இருந்தால் இரண்டாவது முறை உறுதிப்படுத்த இது தேவைப்படும். மூன்றாவது அறிவிப்புப் பலகை அந்த திருப்பத்தின் அருகில் வைக்கப்பட வேண்டும் இந்தியச் சாலைகளில் உள்ள சாலைக் குறியீடுகள் இப்படிப்பட்ட அறிவியலின் அடிப்படையில் அமைக்கப்படாமல், வண்டியை நிறுத்திவிட்டு படித்தால்தான் விளங்கும் என்கிற அளவிலேயே இருக்கின்றன. இதற்குக் காரணம் இன்னும் சாலை அமைப்பதில் உள்ள நவீன அறிவியல் தொழில் நுட்பங்களை இந்திய சாலை ஆணையம் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான்.
ஐரோப்பிய நாடுகளிலும், மேற்கத்திய நாடுகளிலும், மற்ற வளர்ந்த நாடுகளிலும் நெடுஞ்சாலைகள் மிக உயர்ந்த தரத்தில் அமைக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைகளில், எந்த இடத்திலும் அந்த சாலைகளின் குறுக்காக பிற வண்டிகள் செல்ல முடியாது. சான்றாக, சாலையின் இடதுபக்கம் செல்கின்ற ஒரு வாகனம் வலது பக்கம் திரும்ப வேண்டுமென்றால் சாலையின் வலதுபுறம் எதிரே வரும் வண்டிகளின் குறுக்கே சென்று திரும்பும் வகையில் அமைக்கப்படுவதில்லை. மாறாக, அந்த வாகனம் சாலையின் இடதுபுறமாகவே விலகி, ஒரு மேம்பாலத்தின் வாயிலாகவோ அல்லது அடிப்பாலத்தின் வாயிலாகவோ தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து மறுபுறம் செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, சாலை ஓரங்களில் கடைகள் அமைக்கமுடியாத வண்ணம் முழுமையான வேலிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. சாலை ஓரம் கடைகள் அமைக்கப்படுவதால் சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு, அந்தக் கடைகளுக்கும், உணவு விடுதிகளுக்கும் செல்வார்கள். அப்படிச் செல்வதினால் அங்கே விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு மிக மிக அதிகமாகி விடுகிறது.
உலகில் வேறெங்கும் நெடுஞ்சாலைகளில் வண்டியை நிறுத்தச் செய்யும் சிக்னல்கள் கிடையாது.
உலகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. இந்தியாவில் அப்படிப்பட்ட ஒரு நிலையைக் கொண்டுவருவது கடினம். ஏனென்றால் மிக அதிக அளவில் இந்திய மக்கள் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
உலகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் தங்களுக்கான 'லேன்'களில் சரியான முறைகளில், ஒரே சீரான வேகத்தில் செல்வது பயிற்றுவிக்கப்பட்டு, உறுதி செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் லேன் ஒழுங்குமுறை பயிற்றுவிக்கப்படாத காரணத்தால் வேகமாகச் செல்லும் வாகனங்கள் இடது பக்கமாகவும், மெதுவாகச் செல்கின்ற வாகனங்கள் வலது பக்கமாகவும் போகிற நிலையைக் காண முடிகிறது. இதற்கான காரணம், வாகன ஓட்டியின் தவறு அல்ல. மாறாக, ஓட்டுநர்களுக்கு நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கான அறிவையும், திட்டத்தையும் பயிற்றுவிக்காததே. பல போக்குவரத்துக் காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும்கூட சாலை விதிகள் முழுமையாகத் தெரியாது.
பெரும்பாலான இந்தியச் சாலைகள் பல இடங்களில் குண்டும் குழியுமாக பராமரிப்பின்றி இருக்கின்றன. சில இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளும் அப்படித்தான் இருக்கின்றன. குண்டும் குழியுமாக ஒரு சாலை இருக்கும்போது வாகன ஓட்டி சாலையின் இடது புறம் அல்லது தனக்கு ஒதுக்கப்பட்ட, தான் செல்ல வேண்டிய லேனை விட்டு வேறு லேனுக்கு வண்டியைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அது விபத்துக்குக் காரணமாகிறது.
இந்தியாவில் ஆடுகளும், மாடுகளும், நாய்களும், பிற விலங்குகளும் மிக எளிதாக சாலைகளுக்கு வந்துவிடுகின்றன. இதுவும் விபத்துகளுக்கான காரணங்களில் முக்கியமான ஒன்று.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சைக்கிள், மூன்று சக்கர சைக்கிள் அல்லது ஷேர் ஆட்டோ போன்ற மெதுவாகச் செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட வேண்டும். அப்போதுதான் நெடுஞ்சாலைகளில் செல்கின்ற அனைத்து வாகனங் களும் ஒரே சீரான வேகத்தில் நீரோட்டமாகச் செல்ல முடியும்.
சாலை விபத்துக்கான காரணங்களை இவ்வாறாக இன்னும் பட்டியலிட முடியும். மிக முக்கியமான காரணமான இருக்கும் அமைப்பில் உள்ள குறைகளை முற்றிலும் மறைத்து அல்லது கவனிக்காமல் விட்டு, ஓட்டுநர்களை மட்டுமே காரணமாகச் சொல்வது தவறான கண்ணோட்டம். இந்தக் கண்ணோட்டம், சாலை விபத்துக்களைக் குறைப் பதற்கான உண்மையான நடவடிக்கைகளை எடுக்கமுடியாத வண்ணம் தடுத்தும் விடுகிறது.
ஒருவேளை ஓட்டுநர் தவறு செய்தாலும் அந்தத் தவறுக்கான பொறுப்பும் அரசுக்குத் தான். வாகனத்தை பாதுகாப்பான முறையில் இயக்க ஓட்டுநருக்கு பயிற்சி தருவதும், அவருடைய திறமையை முழுமையாக சோதனை செய்த பிறகு உரிமம் வழங்குவதும், உரிமம் வழங்கிய பிறகு அவர் வாகனத்தை தவறு செய்யாமல் இயக்குகிறார் என்பதை உறுதிசெய்யும் வண்ணம் அவரைக் கண்காணிப்பதும், தவறு செய்தால் தண்டித்து, ஒழுங்கு செய்வதும், அவர் தவறு செய்யாத வண்ணம் சாலையினை வடிவமைப்பதும் அரசின் கடமைகள். சாலைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, தவறு செய்வோரைக் கண்டறிந்து, அவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்துக் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
ஓட்டுநரின் தவறு என்பது தனி மனிதத் தவறு கிடையாது. அதுவும் அரசின் தவறுதான் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும் இந்தியச் சாலைகள் உலகத்தரம் வாய்ந்தவை என்ற பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, உண்மையிலேயே உலகமெங்கும் சாலைகள் எப்படி அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டு, பயனாளிகளின் மன ஓட்டத்தையொட்டி சாலைக் குறியீடுகளும், அறிவிப்புப் பலகைகளும் அமைக்கப்படுகிறதோ அப்படி நம் நாட்டிலும் வடிவமைக்கப்பட வேண்டும், பாதசாரிகளும், விலங்குகளும், இயந்திரமில்லாத சைக்கிள் போன்ற வாகனங்களும் சாலையின் குறுக்கே கடப்பது தடுக்கப்பட வேண்டும் சாலைப் பாதுகாப்பு என்பது ஒரு வாழ்வியல் முறை. நல்ல சாலைகள் ஒரு நாட்டு வளர்ச்சியின் அடையாளம். உலகமயமாக்கலுக்குப் பிறகு கூடுதல் பொருளாதார வளர்ச்சியை அடைந்த இந்தியா தன் அடிப்படைக் கட்டுமானங்களை மேம்படுத்திக் கொள்ளவில்லை. என்பது வருத்தமான உண்மை. சாலைகள் நாட்டின் இரத்தக் குழாய்கள் என்று மறைந்த பிரதமர் நேரு வர்ணித்தார். அந்த இரத்தக் குழாய்கள் இருந்தால் மட்டும்தான் நாடு முழுவதும் வளர்ச்சிக்கான சத்துகள் போய்ச் சேரும் என்ற பொருளில் அவர் இப்படிச் சொன்னார்.
இன்று சாலைகள் வரி செலுத்துபவருடைய பணத்தை ஊழல் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கொண்டு சேர்க்கும் குழாய்களாக மாறிவிட்டன.
சாலைகளை வடிவமைப்பதில் நவீன அறிவியல், கட்டுமானத் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பான சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
குடும்பத்தின் ஆணி வேராக இருந்து பொருளீட்ட பயணம் செய்யும் கோடிக்கணக்கான குடும்பத் தலைவர்கள், தலைவிகளின் தினசரி சாலைப் பயணங் களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசுகளின் இன்றியமையாத கடமையாக இருக்கவேண்டும்.