வாழ்வும் தொண்டும்! - தமிழவேள் கரந்தை வள்ளல் த.வே.உமாமகேசுவரனார்

/idhalgal/eniya-utayam/life-and-charity-tamilvel-karanthai-vallall-t-ve-umamakesuvarana

மிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப் பெறும் தஞ்சாவூரை அடுத்த கருந்திட்டைக்குடியில் வை.வேம்புப்பிள்ளை. காமாட்சியம்மை என்னும் இணையருக்குத் தலைமகனாக உமாமகேசுவரனார் 07.05.1883இல் பிறந்தார். இவருடைய தமக்கையார் பெயர் தர்மசம்வர்த்தினி. உமாமகேசுவரனாருக்குப் பின் பிறந்தவர்கள் ராதாகிருட்டிணன், கோபாலசாமி. செண்பகவல்லி ஆகியோர். கருந்திட்டைக்குடி கரந்தை என்றும் அழைக்கப்படுவது வழக்கு. உரிய பருவத்தில் தொடக்கக் கல்வியை முடித்த உமாமகேசுவரனார் வல்லம். கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்த உயர் நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்றார். அன்னை யார் மறைந்த நிலையில் சிற்றன்னை பெரியநாயகத் தம்மையின் அரவணைப்பில் தஞ்சாவூர் தூயபேதுரு கல்லூரியில் பயின்று எம்.ஏ. படிப்பை முடித்தார்.

பின்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் எழுத்தராகப் பணியேற்றார். அங்கு இவருக்கும் துணை மாவட்ட ஆட்சியருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பணியிலிருந்து விலகினார்.

dd

சிற்றப்பா, சிற்றன்னை உதவியுடன் சென்னைக்குச் சென்று சட்டக்கல்லூரியில் பயின்று பி.எல். பட்டம் பெற்றார். தஞ்சையில் புகழ்பெற்று விளங்கிய வழக்குரைஞர் கே.சீனிவாசப்பிள்ளை என்பவரிடம் வழக்குரைஞராகப் பயிற்சி பெற்றார். உறவுமுறையில் அமைந்த உலகநாயகி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

இவரின் இல்லற வாழ்வின் பயனாய் பஞ்சாபகேசன்.

மாணிக்கவாசகம், சிங்காரவேலு எனும் மக்கள் மூவர் பிறந்தனர். சிங்காரவேலு பிறந்த நான்காவது மாதத்தில் வாழ்க்கைத் துணைவியார் உலகநாயகி திடுமென இயற்கை எய்தினார். தலைமகன் பஞ்சாப கேசனும் தனது பதினாறாவது வயதில் மறைந்தார். இந்நிலையில் மறுமணம் செய்துகொள்ளுமாறு பலர் வற்புறுத்தியும் கேளாமல் உமாமகேசுவரனார் பொதுத் தொண்டிலும், தமிழ்த் தொண்டிலும்

மிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப் பெறும் தஞ்சாவூரை அடுத்த கருந்திட்டைக்குடியில் வை.வேம்புப்பிள்ளை. காமாட்சியம்மை என்னும் இணையருக்குத் தலைமகனாக உமாமகேசுவரனார் 07.05.1883இல் பிறந்தார். இவருடைய தமக்கையார் பெயர் தர்மசம்வர்த்தினி. உமாமகேசுவரனாருக்குப் பின் பிறந்தவர்கள் ராதாகிருட்டிணன், கோபாலசாமி. செண்பகவல்லி ஆகியோர். கருந்திட்டைக்குடி கரந்தை என்றும் அழைக்கப்படுவது வழக்கு. உரிய பருவத்தில் தொடக்கக் கல்வியை முடித்த உமாமகேசுவரனார் வல்லம். கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்த உயர் நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்றார். அன்னை யார் மறைந்த நிலையில் சிற்றன்னை பெரியநாயகத் தம்மையின் அரவணைப்பில் தஞ்சாவூர் தூயபேதுரு கல்லூரியில் பயின்று எம்.ஏ. படிப்பை முடித்தார்.

பின்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் எழுத்தராகப் பணியேற்றார். அங்கு இவருக்கும் துணை மாவட்ட ஆட்சியருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பணியிலிருந்து விலகினார்.

dd

சிற்றப்பா, சிற்றன்னை உதவியுடன் சென்னைக்குச் சென்று சட்டக்கல்லூரியில் பயின்று பி.எல். பட்டம் பெற்றார். தஞ்சையில் புகழ்பெற்று விளங்கிய வழக்குரைஞர் கே.சீனிவாசப்பிள்ளை என்பவரிடம் வழக்குரைஞராகப் பயிற்சி பெற்றார். உறவுமுறையில் அமைந்த உலகநாயகி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

இவரின் இல்லற வாழ்வின் பயனாய் பஞ்சாபகேசன்.

மாணிக்கவாசகம், சிங்காரவேலு எனும் மக்கள் மூவர் பிறந்தனர். சிங்காரவேலு பிறந்த நான்காவது மாதத்தில் வாழ்க்கைத் துணைவியார் உலகநாயகி திடுமென இயற்கை எய்தினார். தலைமகன் பஞ்சாப கேசனும் தனது பதினாறாவது வயதில் மறைந்தார். இந்நிலையில் மறுமணம் செய்துகொள்ளுமாறு பலர் வற்புறுத்தியும் கேளாமல் உமாமகேசுவரனார் பொதுத் தொண்டிலும், தமிழ்த் தொண்டிலும் முழுக் கவனத்தையும் செலுத்தலானார்.

இவரின் நாவன்மை வழக்குரைஞர் தொழிலுக்குப் பெரிதும் பயன்பட்ட நிலையில், பல வழக்குகளில் வெற்றி பெற்றுப் பெரும்புகழ் பெற்றார். வரகலூர்க் கோவில் கருவறைக்குள் மக்கள் நுழைய வாதாடி வெற்றி பெற்றார். நீதிக்கட்சிக்கான ஆதரவு நிலை யிலும் இவர் புகழ் பெற்றார். 1920 ஆம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டக் கழகத் தலைவர் ஆனார். இந்நிலையில் பல சிற்றூர்களுக்குச் சாலை வசதிகளை அமைத்தும், காவிரி, குடமுருட்டி ஆறுகளில் பல இடங்களில் பாலங்களையும், பரிசல் துறைகளையும் அமைத்தும் கொடுத்தார்.

இவர் பொறுப்பேற்றபோது இருந்த தொடக் கப் பள்ளிகள் எண்ணிக்கை 40. மேலும் 130 தொடக் கப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார். தனிப் பட்ட முறையிலும் பல மாணவர்கட்குப் பொருளு தவி செய்தார். உமாமகேசுவரனார் தமிழிலும், ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்று விளங்கியவர். சிவதீக்கை பெற்ற பழுத்த சைவர். சமய வேறுபாடு, சாதி மாறுபாடு இன்றி அனைவரின் நன்மதிப்பையும் பெற்று விளங்கியவர்.

dd

வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை மாநகரில் 1901இல் நான்காம் தமிழ்ச்சங்கம் தோற்று வித்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தொடர்ந்து தஞ்சாவூரிலும் தமிழ்ச்சங்கம் புலவர் சாமிநாதப் பிள்ளை என்பவரின் முயற்சியால் தோற்றுவிக்கப் பட்டது. இச்சங்கத்துக்கு வித்தியா நிகேதனம் என்று முதலில் பெயர் சூட்டினர். இரகுபதி ராசாளியார் என்பவர் முதலில் பொறுப்பேற்றார். இவருடைய செயல்பாடுகள் பலருக்குப் பிடிக்கவில்லை. இவர்கள் கூடிக் கரந்தைத் தமிழ்ச்சங்கம் தோற்றுவித்தனர். உமாமகேசுவர னாரின் இளவல்இராதாகிருட்டிணப்பிள்ளையின் தலைமையில் 14.05.1911 அன்று கரந்தைத் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டது. இளவல் இராதாகிருட்டிணப்பிள்ளை செயற்குழு ஒன்றினை முறையாக அமைத்தார். இச் செயற்குழு கூடி ஒருமனதாக உமாமகேசுவரனாரைத் தலைவராகத் தேர்வு செய்தனர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் 'கலா நிலையம்' என்னும் பெயரில் நூலகம் ஒன்றும் நிறுவப்பட்டது. 'தமிழ்ப்பொழில்' என்னும் இலக்கிய இதழும் வெளியிடப் பெற்றது. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டிக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக 15.04.1938 இல் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் கரந்தைத் தமிழ்க் கல்லூரியைத் தொடங்கி வைத்தார். கரந்தைத் தமிழ்ச்சங்க நூலகத்திற்கு வள்ளல் பெத்தாச்சி செட்டியார் தாம் சேர்த்து வைத்திருந்த ஏராளமான அரிய நூல்களைக் கொடுத்து உதவினார்.

அரிதின் முயன்று தாம் சேர்த்து வைத்திருந்த நூல்களைக் கரந்தைத் தமிழ்க் கல்லூரி நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கியும். மாணவர்க்குச் சிறப்பான முறையில் பாடம் நடத்தியும். பெரும் தமிழறிஞர்களைத் தமிழ்க் கல்லூரிக்கு வரவழைத்துச் சொற்பொழிவுகளை ஆற்றச்செய்தும் தமிழ்த்தொண்டைப் பெருமளவில் செய்த பெருந்தகையாக உமாமகேசுவரனார் விளங்கினார்.

இக்கல்லூரிக்கு வருகை தந்த தந்தை பெரியாருக்குப் பெரிய அளவில் பாராட்டும் வரவேற்பும் வழங்கி மகிழ்ந்தார் வள்ளல் உமாமகேகரவனார். கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை. 'தமிழரசி குறவஞ்சி' எழுதிய வரதநஞ்சைய செ.வேங்கடராமச் செட்டியார், திருமுறைச்செல்வர் வெள்ளைவாரணனார், உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை ஆகியோர் பணியாற்றித் தமிழ்க் கல்விக்கு ஊற்றமாக விளங்கினர்.

ss

அந்நாளில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கும் கரந்தைத் தமிழக கல்லூரிக்கும் பெருந்தொகை கொடுத்த பெரும் வள்ளலாகத் திகழ்ந்தவர் த.வே.உமாமகேசுவரனார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாகத் தமிழ்மொழியின் தொன்மை, சீர்மை போற்றிச் செம்மொழித் தகுதி வழங்க வேண்டி ஆங்கிலேய அரசுக்குக் கரந்தைத் தமிழ்ச்சங்கம் தீர்மானம் இயற்றி அனுப்பி வரலாறு படைத்தது.

இத்தமிழ்க் கல்லூரி யில் பயின்று பெரும் புகழ் பெற்றவர்கள் பலர்.

அவருள் குறிப்பிடத்தக்கவர் கள் பேரா.ம.ரா.போ.குருசாமி, புலவர் தணிகை உலகநாதன் ஆகியோர். இக்கட்டுரையாசிரியரின் தந்தையார் பெரும் புலவர். அ.இராசகோபாலன் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் தமிழ்க் கல்வி பயின்ற பேறு பெற்றவர். இளமையில் பெற்றோரை இழந்த நிலையில் தம்மைத் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவிய பெருங்குணத்தர் த.வே.உமாமகேசுவரனார் என்று பலமுறை நினைவு கூர்ந்து நெஞ்சம் நெகிழ்ந்தவர் இவர். மேலும் இவர் உமாமகேசுவரனாருக்கும். தந்தை பெரியாருக்கும், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகட்கும் இருந்த நெருங்கிய நட்பின் ஆழத்தையும் சிறப்பையும் நேரில் கண்ட பேறுடையவர். தேசிகவிநாயகம் பிள்ளையின் தமிழ்ப்புலமையைப் பாராட்டிச் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பினர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் விழா எடுத்தனர். 24.12.1940 அன்று நடைபெற்ற இவ்விழாவில் தமிழவேள் உமாமகேசுவரனார் கவிமணி என்னும் பட்டத்தைத் தேசிகவிநாயகம் பிள்ளைக்கு வழங்கிச் சிறப்புச் செய்தார்.

உமாமகேசுவரனார் வழக்கறிஞர் தொழில் மூலம் தாம் ஈட்டிய செல்வத்தில் பெரும்பகுதியைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்துக்கும், கரந்தைத் தமிழ்க் கல்லூரியின் வளர்ச்சிக்கும் வழங்கியவர். 1930-களில் மாதந்தோறும் இருபத்தைந்து ரூபாய் அளித்து வந்தார், அக்காலத்தில் அத்தொகை பெருந்தொகையாகும். ஞானியாரடிகளார் தமது மணிவிழாவின் போது உமாமகேசுவர னாருக்குச் 'செந்தமிழ்ப் புரவலர்' என்னும் பட்டத்தை அளித்தார். அப்போதைய ஆங்கிலேய அரசு இவரது பொதுத்தொண்டை கருதி 'இராவ்சாகிப்' பட்டம் அளித்தது. கரந்தைத் தமிழ்ச்சங்க வெள்ளிவிழா 1938இல் நிகழ்ந்தபோது இவருக்குத் 'தமிழவேள்' என்னும் பட்டம் வழங்கப்பெற்றது.

உமாமகேசுவரனார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கிய வித்துவான் பட்டத்தைப் புலவர் என்று வழங்குமாறு வாதாடி வெற்றி பெற்றார். தஞ்சாவூரில் 6.10.1916 அன்று செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரி தொடங்கினார். 1938இல் முதன்முதலாகக் கூட்டுறவு உற்பத்திக் கழகம் என்னும் அமைப்பையும் தோற்றுவித் தார். த.வே.உமாமகேசுவர னார் தமது நண்பர் கணபதிப் பிள்ளை என்பாருடன் வடஇந்தியத் தலயாத்திரை மேற்கொண்டார். கங்கையில் குளித்துக் காசி விசுவநாதரை வழிபட்ட பின்னர் பிரயாகை செல்லும் வழியில் இவரின் உடல்நலம் குன்றியது.

அயோத்தி அருகில் பைசாபாத் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி 09.05.1941இல் இயற்கை எய்தினார். அவரது இறுதிக் கடன்கள் சரயு ஆற்றங்கரையில் நிகழ்ந்தது. அவரது மறைவு பொது வாழ்வுக்கும், தமிழ் மொழிக்கும். தமிழர்க்கும் பேரிழப்பானது.

இவரது தமிழ்த்தொண்டில் மனதைப் பறிகொடுத்தோர் எண்ணற்றோர். குறிப்பாகத் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி இவரது நினைவைப் போற்றி மத்திய அரசு மூலம் அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தார். தமது ஆட்சிக்காலத்தில் கலைஞர் தமிழவேள் வள்ளல் த.வே.உமாமகேசுவரனார் தோற்றுவித்த கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் தீர்மானத்தையும் வேண்டுகோளையும் நினைவில் கொண்டு தமிழ்மொழிக்குச் செம்மொழித் தகுதி பெற்று வரலாற்றில் புகழ் பெற்றார் என்பதும் நினைவு கூரத்தக்கது. தமிழவேள் வள்ளல் த.வே.உமா மகேசுவரனார் புகழ் குன்றிலிட்ட விளக்காக என்றும் நின்று நிலவும்.

uday010224
இதையும் படியுங்கள்
Subscribe