தமிழ் பரவட்டும்!

/idhalgal/eniya-utayam/let-tamil-spread

test

பேரண்ட பெருவெளியில் பிரளயமாம் பெருவெடிப்பு,

அண்டபெரு வெளியில் சிதறிய சூரிய தீப்பந்து...

சுழன்று மைமீன் என்றே.. தூமம் என்றே..

வான வெளி தீப்பற்றி கடல் கொண்டு..

புது ஊழி வாயு சுதங்கங்கள் புத்துயிரை பிரசவிக்க...

அண்ட துகள்களின் சிதறல்கள் கண்டமாய் முளைத்தனவே,

கீற்றுக்குள் கிளர்ந்திட்ட ஞால பூபாலம் ஏற்றி முளைத்திட்ட,

வய்யுலகம் வறண்டு சுழன்று, உயிர்விடும் மூலக்கூறுகளின் பல கூறுகள் இணைந்து வளர...

புவி முனையில் பூக்கும் பூவும்.. ஆழத்தில் அனன்று கொதிக்கும் எரிமலையும்..

புழுவுக்கும், பூச்சிக்குமாக.. புதியன எழுந்தது புது அறிவு மிருகம்... (அவனே மனிதன் என்றானான்)

திசைகள் எட்டிலும் தேடித் திரிந்து... எழுந்து நடந்து பின் ஆறறிவு கொண்டவ

test

பேரண்ட பெருவெளியில் பிரளயமாம் பெருவெடிப்பு,

அண்டபெரு வெளியில் சிதறிய சூரிய தீப்பந்து...

சுழன்று மைமீன் என்றே.. தூமம் என்றே..

வான வெளி தீப்பற்றி கடல் கொண்டு..

புது ஊழி வாயு சுதங்கங்கள் புத்துயிரை பிரசவிக்க...

அண்ட துகள்களின் சிதறல்கள் கண்டமாய் முளைத்தனவே,

கீற்றுக்குள் கிளர்ந்திட்ட ஞால பூபாலம் ஏற்றி முளைத்திட்ட,

வய்யுலகம் வறண்டு சுழன்று, உயிர்விடும் மூலக்கூறுகளின் பல கூறுகள் இணைந்து வளர...

புவி முனையில் பூக்கும் பூவும்.. ஆழத்தில் அனன்று கொதிக்கும் எரிமலையும்..

புழுவுக்கும், பூச்சிக்குமாக.. புதியன எழுந்தது புது அறிவு மிருகம்... (அவனே மனிதன் என்றானான்)

திசைகள் எட்டிலும் தேடித் திரிந்து... எழுந்து நடந்து பின் ஆறறிவு கொண்டவனாய் நம்பிக் கொண்டான்..

சோளக்கொல்லையில் சோறு வடித்து, ஞாலக் கொல்லையில் அறிவு வளர்ந்து...

வானுலகை வளைக்கவே அலைகிறான், கூடுபோகும் உயிர்கள் எதுவும் வீடு பெறாது என்பதை நம்ப மறுக்கிறான்...

எது பிழைக்கும்? எது தலைக்கும்? என்பதாகிய இயற்கை விதி.

இயன்றே எது நிலைக்கும் என்பது தான் வாழ்க்கை விதி... நிலையில்லா உலகில் நிலைக்கும் சக்தி எது?

மெய்மை விளங்கிக் காண சான்றே. நீரை, நெருப்பை எதிர்த்து கலைந்து வளர்ந்த தமிழே அதன் சான்று.

ஆம்... தமிழ்... தமிழ்... தமிழ்...

உயிர் முளைத்த காலம், உயிர் வளர்ந்த காலம் என்றாகிய தமிழ்..

நக்கீரனும், தொல்காப்பியனும் கண்ட தமிழ்...

வள்ளுவனும், கம்பனும் கொண்ட தமிழ், அப்பரும், சம்பந்தனும் வென்ற தமிழ்...

பாரதியும், பாரதிதாசனும் ஆய்ந்த தமிழ்..

பாடுவாருக்கும், ஆடுவார்க்கும், ஓதுவார்க்கும் உள்ள தமிழ் அன்னையாய் ஆகி நின்று...

அருங்குடையாகி இருக்கும் தமிழ்..

திடமாய் வளர்ந்த தேன்மொழி... மடமை போக்கும் முதுமொழி...

கேட்பார் இனிக்கும் கனிமொழி.கலைப்பார் கெடுப்பினும் தனித்து வளரும் தனிமொழி...

தமிழாவது, தமிழ் மொழியாய் மட்டுமல்ல தமிழ் ஆவது வழியுமாய்...

வாழ்க்கைக்கு வள்ளுவர் தமிழ் வழி... வளமாவது அகமும்,புறமும் கொண்ட வழி...

மெய்யினர்த்தும் திருமூலர் சொன்ன வழி.... பாடமாவது பெருங்காப்பிய வழி,

பெரும் துணையாவது நாலடியார் வழி....

ஆறு யுகங்கள் அரிய பெரும் புலவர்கள் ஆட்டிப்படைத்த அமுதமாய் விளங்கும் மொழி...

சேரனும்,மதுரை பாண்டிய நெடுமாறனும், தஞ்சையின் சோழ தமிழரசர்களும், கடையெழு வள்ளல்களும் பாதுகாத்த மொழி,

ஊற்றுக்கண், ஊறுசெய்.. உருக்குலையாத உலக மொழி, மதுரை மீனாட்சி பாடிய தமிழ்,

தில்லை கூத்தன் ஆடிய தமிழ்... ஞானசம்பந்தன் உறவாடிய தமிழ்,

உணர்வுக்கு ஈடாய் உயிருக்கு நேராய், ஓதி வளர்ந்த மொழி...

கற்றை கருவூலம் காட்சி தரும் கவி சுரங்கம்...

தமிழ் தொடாத உச்சம்... சிறிது மட்டுமே மிச்சம்...

மலைகள் இடிந்து மடுவாகினாலும் கடல்கள் கரைந்து காணாமல் போனாலும்.,

உயிர்க்கும் ஒரு மொழி... உயிர் கொடுக்கும் மொழி, ஆயுத எழுத்து மொழி,

மெய்வாய்த்த, மொழி., அன்னை போல் அருளும் மொழி,

ஆதியாய், அந்தமாய் அருளிடும் மொழியாய்,

நீதியாய், நியதியாய் வாய்த்த பெரும் தமிழே..

ஓதுவார் உய்த்திட உயிர் உறையும் மொழியே,

மாண்டிடும் மாந்தர்கள் எல்லாம் பெற்றிடும் பயனை..

கீதமாய் வேதமாய் கோடி, கோடி அதிசயத்தின் ஆழக்கடலாய்,

அதிசய ஊற்றாய் திருப்புகழாய்... வர்ணனை வெள்ளமாய் ஒளிரும் தமிழே,

பண்டிதப் புலவர்கள் பாடி வளர்த்த பைந்தமிழே...

பழமொழிப் பெட்டகமாய் நீடித்து நிலைத்த, தமிழ் மொழியினைப் போற்றி வளர்த்திடவே...

கபிலப் புலவன் காட்டிய தகமை, போற்றிய பெருமை,

விண் உள்ளவரை மண் உள்ள வரை.. அன்னை மொழியாய்,

அமுத மொழியாய்... மிளிரும் தமிழ்,

உலகின் அளவிலும் ஒன்றி வளரும் என்பது தின்னம்..

பெருகி வளரும் இளையோர் கூட்டம் பொறுப்பாகட்டும்.

உலகின் அத்தனை முடக்கிலும் தமிழாகட்டும் .. அதன் இனிமை கூடட்டும்...

-இரா. வெங்கடேஷ்

முனைவர் பட்ட ஆய்வாளர்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

Iniya Udhaiyam 01.06.2024
இதையும் படியுங்கள்
Subscribe